Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 2.1

இருவரும் அந்த அறைக்குள் வந்த நொடி வெற்றி நந்தனிடம், “நந்து.. இந்த விசயத்தை நா வெளியவே கேட்டிருக்கலாம். 

பட், இது எங்க ரெண்டு குடும்பத்துக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியமா இருக்கணுமின்னு தான்..!” என்றவனை புரியாத பார்வை பார்த்தவன், 

அவன் மூலமே விசயம் வெளிவரட்டும் என நினைத்து, “அதுக்கென்ன பரவாயில்லை விடு. என்ன விசயம் அத முதல்ல சொல்லு..?” என்று கேட்டிட, 

“உனக்கு என்னோட வெய்ஃப் கனிகாவ உன் ஹாஸ்பிட்டல் மூலமா தானே தெரியும்..?” என்றதும்,



Advertisement

“ஆமாடா. நா அங்க அடிக்கடி அவங்கள பார்த்திருக்கேன். அதுக்கு என்ன இப்போ..?” என்றான் புரியாத குழப்பத்தோடு.

“இல்ல நந்து. அது சம்மந்தமா தான்..” என ஆரம்பித்தவன், 

‘எப்படி ஆரம்பிப்பது..?’ எனத்தடுமாறி சிறு அமைதிக்கு பின், “அவளுக்கு க்யூர் பண்ணவே முடியாதுன்னு ரிப்போர்ட் சொல்லு தான். 

Advertisement

நானும் அங்க வந்து விசாரிச்சேன். இருந்தாலும் மனசு ஆறலடா. 

Advertisement

அதான் கேட்கறேன். அவள பாரினுக்கு ட்ரிட்மெண்ட் க்கு கூட்டிப்போனா சரி பண்ண முடியுமா..?” என வெற்றி சொன்னதை கேட்ட நந்தனுக்கோ தலைசுற்றல் தான் வந்தது.

“டேய் வெற்றி.. என்னடா உலறிட்டு இருக்கே இன்னைக்கு..? 

எப்பவும் ரொம்ப தெளிவா இருக்கற நீ ஏன் இப்படி இருக்கே..?

Advertisement

புரியற மாதிரி பேச மாட்டியா..? 

யாருக்கு..? என்ன ரிப்போர்ட்..? 

யாரோட ட்ரீட்மெண்ட் பத்தி கேக்கற..?” என வரிசையாய் கேள்விகளை அடுக்க,

“கனிகாவுக்கு தான்டா. அவளுக்கு ப்ளட் கேன்சர் லாஸ்ட் ஸ்டேஜ்..” என வருத்தத்தோடு சொன்னதும் அதிர்ந்த நந்தன், “வாட்..! என்ன உளர்ற..? 

ஷி ஈஸ் பர்பெக்ட்லி ஆல்ரெட். யார் சொன்னா இப்படின்னு..?” என கடுப்பாய் கேட்க,

“நந்து.. என்கிட்ட அவளோட ரிப்போர்ட் எல்லாம் கொடுத்தாங்க அவங்க வீட்டுல. 

நானே  நேர்ல உங்க ஹாஸ்பிடல் வந்து உன்ன மீட் பண்ணி இதுபத்தி கேட்க நினச்சேன். 

அந்த டைம் நீ தான் கேம்ப் போயிருந்தையே..” என வெற்றி நிறுத்த, 

“ஆமா.. நா போறப்போ உன்கிட்ட விசயத்தை சொல்லிட்டு தானே போனேன். இது வழக்கம் தானே.. நா திரும்பி வந்த பின்னாடி நீ வந்து பார்த்திருக்கலாமே..?” என நந்தன் கேட்டதற்கு,

“டேய் நந்து.. கனி யாரு ன்னு தெரிஞ்சு சந்தோஷப்படறதுக்குள்ள.. அவளுக்கு இப்படின்னு அம்மா சொன்னதும் எப்படிடா அந்த விசயத்தை பத்தி தெரிஞ்சுக்காம நீ வர்ற வரை அதை தள்ளி போட முடியும்.

அதனால நானே அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் காட்டி ஹாஸ்பிடல்ல தெளிவா விசாரிச்சேன். 

அங்கே தான் சொன்னாங்க, அது சரி செய்ய முடியாத நிலைமைய தாண்டிடுச்சுன்னு. 

அவளோட கடைசி ஆசைய நிறைவேத்த தான் இந்த கல்யாணமே நடந்துச்சு..” என்றதும்,

அவனின் கனிகா மீதான பாசமும், அன்பும் அந்த நண்பனுக்கு நன்றாகவே புரிந்தது.

‘எப்பா உனக்கு புருஞ்சா என்ன.. புரியாம போனா என்ன..? இவனுக்கு நானும் கத்தி கத்தி சொல்றேன்.. கேட்க மாட்டிங்கறான்..’ என வெற்றிவேலின் மனசாட்சி குதித்தது நந்தன் எப்படி அறிவான்.

“வெற்றி.. ஏதோ குழப்பம் நடந்திருக்கு. 

ப்ளட் கேண்சர் பேஷன்ட் எப்படிடா ப்ளட் டோனரா இருக்க முடியும்..?! 

அவங்க எங்க ஹாஸ்பிடலோட ரெகுலர் ப்ளட் டொனேட்டர்..” என்றதும், இப்போது அதிர்வது வெற்றிவேலின் முறையானது.

“அவங்க மூனு மாசத்திற்கு ஒரு முறை அங்க வந்து ப்ளட் கொடுக்கறது எனக்கு நல்லா தெரியும். 

அதுவுமில்லாம நாலு நாள் முன்னாடி தான்.. ஒரு எமர்ஜென்சிக்கு அவங்க ப்ளட் தேவைப்படுதுன்னு வந்து கொடுத்துட்டு போனாங்க. அங்கே நானும் இருந்தேன். 

அத வச்சு தான் சொல்றேன்.. அவங்க நல்ல ஆரோக்கியத்தோட தான் இருக்காங்க.

ஏதோ குளறுபடி நடந்திருக்கு.. நீ என்ன ரிப்போர்ட்ஸ் கொடுத்தே..? 

அங்கே யார் அப்படி மாத்தி சொன்னது..?” என்றதும் வெற்றிவேலின் முகத்தில் வந்த கோபத்தை உணர்ந்தவன், 

தன் நண்பன் திருமணத்தில் நாட்டம் இல்லாது இருந்ததும், அவனின் தாய் திருமணத்திற்கு கட்டாயபடுத்துவதும் நன்கு தெரிந்ததால்,

‘ஆஹா.. அம்மா இவன கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க ஏதோ ப்ளான் போட்டிருப்பாங்க போலவே.. அது தெரியாம நம்ம வேற உலறிட்டோமே..!’ என நினைத்தவன்,

வெற்றிவேலை சமாதானம் செய்யும் விதமாய்,

“வெற்றி, பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். உண்மையோ பொய்யோ உன் கல்யாணம் சிஸ்டர் கூட நடந்திடுச்சு.

இனி நீ நினச்சாலும் அதை மாத்த முடியாது. 

அவங்களும் ரொம்ப நல்ல பொண்ணுடா. உனக்கு ஏத்த ஜோடி. 

நல்ல ஹெல்ப்பிங் டென்டன்சி உள்ள பொண்ணு. உன் குணத்துக்கு தாக்கு பிடிக்க அவங்க தான் கரெக்ட்.

சோ, தேவையில்லாத குழப்பத்த விட்டு நல்லா வாழுற வழிய பாரு..” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனின் போன் அழைக்க,

அதை எடுத்தவன், அதில் அவன் ட்ரீட்மெண்ட் செய்த குழந்தையின் உடல்நிலையில் சிறிது சிக்கல் ஏற்பட்டதாய் தகவல் வர, 

அந்த விசயத்தை வெற்றிவேல் செழியனிடம் சொன்னவன், “வெற்றி நா இப்ப சீக்கிரமே போகனும். 

நா சொன்னது தான்.. இது உன் வாழ்க்கை.. இதுல தேவையில்லாம கோபத்தையோ ஆதங்கத்தையோ போட்டு குழப்பி நல்ல வாழ்க்கைய கெடுத்துக்காதே..

இப்போ என்னால சிஸ்டரை மீட் பண்ண முடியாது. 

அவங்ககிட்ட சொல்லிடு. கண்டிப்பா இன்னொரு நாள் வீட்டுக்கே வந்து அவங்கள பார்க்கறேன்..

நீயும் அவங்களும் சந்தோஷமா வாழறத பார்க்கனும்.. கன்கிராட்ஸ்..” என அவசரமாய் வாழ்த்தி விடைபெற்று, 

தான் கொண்டு வந்த கிஃப்ட்டை வெற்றியிடம் மட்டும் அளித்துவிட்டு சென்றிருந்தான் விரைந்து.

அறையை விட்டு வெளியே வேகமாய் விரைந்தாலும் மனமெங்கும், ‘எப்படி அப்படி ஒரு ரிப்போர்ட்.. தான் இருக்கும் மருத்துவமனையில் கொடுத்திருக்க முடியும்..?

அப்படி செய்யும் இடமல்லவே அது. மிகவும் நேர்மையான முறையில் நடக்கும் மருத்துவமனையாயிற்றே..!’ என்ற குழப்பம் அவனின் மனதில் எழாமல் இல்லை.

நந்தன் சொல்லி சென்ற உண்மையால் சில நிமிடங்கள் செயலற்று நின்ற வெற்றிவேலுக்கு கோபம் எல்லையை கடக்கும் நிலையில் இருந்தது.

இத்தனை உறவுகள் கூடியிருக்கும் இடத்தில், ‘தன்னை ஏமாற்றியவர்கள் மீதான கோபத்தை, மற்றவர் முன் காட்டிட கூடாதே..!’ என்பதை மனதில் கொண்டவன், 

வெளியே இயல்பாய் இருப்பதாய் காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் எரிமலையாய் தகித்துக்கொண்டிருந்தான். 

அந்த தணலில் சிக்கி சிதைய போவது முதலில் யாரோ..?!

‘அடியேய்.. என்னம்மா ஆக்ட் கொடுத்த நீ. வா உன்ன வச்சு செய்யல, நா வெற்றிவேல் செழியன் IPS இல்லடீ. 

எத்தனையோ கிரிமினல அசால்ட்டா ஹேண்டில் பண்ண என்னையவே, நீ ஏமாத்திட்ட இல்ல..! 

எவ்வளவு தைரியம்.. இனி தான்டீ இருக்கு உனக்கு..!’ என நினைத்தவன், 

அதற்கு மேலும் பொருக்க முடியாது வேகமாய் மணமகள் அறைக்கு சென்றான், கனிகாவை உண்டு, இல்லை.. என ஆக்கும் எண்ணத்தோடு.

அங்கு சந்திரா, “கனிம்மா..! இந்தாடா இந்த காபிய குடுச்சிட்டு ஃப்ரஷ்ஷாகு. 

நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது. நம்ம வீட்டுக்கு போலாம். 

அங்கே போய் கூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பியாம்..” என கொஞ்சி கொண்டிருக்க, 

அவரின் மடியில் தலை சாய்த்திருந்தவள், “சரி அத்தம்மா..!” என எழுந்து, 

அவர் தந்த காபியை நல்ல பிள்ளை போல அருந்துவதை பார்த்தவனுக்கு, அதை பிடுங்கி அவள் தலையில் கொட்டும் எண்ணம் வர, கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி நின்றான்.

“அத்தம்மா, காபி ரொம்ப சூடா இருக்கு..” என மூக்கை சுறுக்கி கொஞ்சும் பாவனையில் கனிகா சொல்ல,

“நீ எழுந்திருக்க லேட் ஆனா ஆறிடுமுன்னு தான் கொஞ்சம் சூடாவே கொண்டு வந்தேன்டா..” என விளக்கம் கொடுத்தவரை கண்டு, அதுவரை இழுத்து பிடித்த பொறுமை மொத்தமும் காலியாக, “அம்மா..!”  என பல்லை கடித்தபடி சத்தமாய் வெற்றிவேல் அழைக்க, 

அதுவரை மருமகளை கொஞ்சுவதில் மகன் வந்ததை கூட கவனிக்காமல் இருந்தவர், அவன் அழைப்பில் திரும்பி பார்த்து, 

“என்ன கண்ணா..! என்ன வேணும்..? 

கனி காபி குடுச்சிட்டு ரெடியாகிடுவா. நீயும் கொஞ்சம் ஃப்ரஷ்ஷாகிட்டு வந்தா நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்..” என சொல்லிக்கொண்டே செல்ல,

“அம்மா.. கனிய விட்டுட்டு கொஞ்சம் நீங்க வெளிய போறீங்களா..?” என கேட்ட நொடி,

 “அடேய், ஏன்டா இப்படி அவசரப்படறே.? 

அதெல்லாம் நேரம் காலம் பார்த்து நாங்களே அனுப்புவோம். 

கல்யாணமே வேணாமுன்னு பிடிவாதம் பிடிச்சது என்ன..? இப்ப நேரம் காலம் பாக்காம வந்து நிக்கற கோலமென்ன..?

பட்டப்பகல்ல போய்.. இது நம்ம வீடு கூட இல்ல. 

சொந்தகாரங்க காதுல மட்டும் இந்த விசயம் விழுந்தா, மானமே போயிடும்..!” என படபடத்து சொன்னதை கேட்டவன் முதலில் புரியாமல் பார்த்து, 

பின் புரிந்ததும், “அம்மா..! ஏம்மா இப்படி..?” என பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டவன், 

“நா அதுக்கு..” என வந்த காரணத்தை சொல்ல வர,

“டேய் அவசரகுடுக்கே.. வாய மூடப்போறீயா இல்லையா..?

யாராச்சும் கேட்டா என்ன புள்ள வளத்திருக்கேன்னு மானத்த வாங்கிடுவாங்க. 

என்னவானாலும் நம்ம வீட்டுக்கு போய் சடங்கு நேரத்துக்கு தான் அனுப்ப முடியும்.

அதுவரை கொஞ்சம் அடங்கி இரு. போ, போய் வீட்டுக்கு போக ரெடியாகு. மத்தது எல்லாம்.. அப்புறம்… தான்..” என சந்திரா கடுப்பாக சொல்ல, 

தன்னை புரிய வைக்க இயலாத கோபத்திலும் தாயின் பேச்சில் உள்ள அர்த்ததிலும், தன் நெற்றியில் அறைந்து கொண்டு வெளியே சென்றவன் காதில், 

“கனிம்மா..! பார்ரா அவனோட அவசரத்த. என் ராசாத்தி நீ வந்த நேரம்..! 

இப்ப தான் நிம்மதியா இருக்கு. 

எப்படியோ எண்ணி பத்தாவது மாசம், உன்ன மாதிரி அம்சமா ஒரு பேரனையோ.. பேத்தியையோ.. பெத்து என் கையில கொடுத்திட்டா போதும்..” என சொல்வதும்,

“போங்க அத்தம்மா..!” என்ற கனியின் சிணுங்கள் வார்த்தையும் விழ,

‘அய்யோ.. நா அதுக்கு வரல. சண்டைகட்ட தான் வந்தேன்.. என போய் சொல்லலாமா..?’ என நினைத்தவன், 

மீண்டும் அங்கு போனால் தன் தாய் அதையும் சேர்த்து, எதாவது.. ஏடாகூடமாய் சொல்லி வைத்தாலும் ஆச்சர்யமில்லை என நினைத்து,

‘ஏய் புலுகினி.. வாடீ.. எப்படியும் என் வீட்டுக்கு வந்து தானே தீருவே. 

அங்கே தனியா சிக்காமயா போவ..? அப்ப இருக்கு..’ என முடிவு செய்த கையோடு வீட்டிற்கு செல்ல தயாராக சென்றான்.

இருவரும் மண்டபத்திலிருந்து கிளம்பிய கணம் முதல் தன்னிடமிருந்து விலகியே இருந்தவனை யோசனையோடே பார்த்திருந்தாள் கனிகா.

காலையில் அவன் முகத்தில் இருந்த நிறைவோ.. அமைதியோ இல்லாது, 

காலையிலிருந்து  தன்னிடம் அவ்வளவு அக்கறை காட்டியவனின் இந்த ஒதுக்கம்.. கனிகாவிற்கு சந்தேகத்தை கொடுத்தாலும், 

‘ஆசையாய் வந்தவனை தன்னை நெருங்க விடாததால் வந்த கோபமோ..?’ என்ற எண்ணம் ஒரு வித கூச்சத்தை தந்ததோடு,

அவனின் இப்படியான வேகம் கண்டு பயமும் எழுந்தது பெண்ணவளுக்கு..

“எம்மாடி அந்த சீனே இல்ல..” என்று விதி கத்தியது எங்கே அவளுக்கு கேட்டது.

அதனால் எப்போதும் போல, ‘எவ்வளவோ… பார்த்திட்டோம். இத பார்க்கமாட்டோமா..?

நம்ம மாமா தானே.. அதெல்லாம் சமாளிக்கலாம்..’ என அசால்டாக சென்றவளுக்கு தெரியவில்லை அவனின் கோபத்தின் காரணமும்.. அதன் அளவும். 

அதையும் சமாளிப்பாளா வெற்றியின் கனி..!!!

ஊடல் தொடங்கிடுமோ..?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!