Skip to content
Post Views: 915
விழிகள் 6
ஆரஅமர தன்னறையிலிருந்து சோம்பல் முறித்து வந்த விஜயலட்சிமி, ஹாலில் அனைவரும் டீ குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு,
Advertisement
“ம்மா மேகலாவ எனக்கு டீ எடுத்துட்டு வர சொல்லுங்களேன்” என அன்னையிடம் சொல்ல,
சுந்தரம்பாள் ஒரு பார்வை மட்டும்தான் அவளை பார்த்தார். அதில் தெரிந்த உஷ்ணத்தை கண்ட விஜயலட்சுமி வேற எதுவும் பேசாது தானாக சமையலறைக்குள் சென்று தனக்கு டீ போட ஆரம்பித்தாள்..
Advertisement
Advertisement
அப்போது அங்கு வந்த கஜலட்சுமியை பார்த்து, “அக்கா என்ன ஆச்சு அம்மாவுக்கு? ஏன் காலைலயே இப்படி கோவமா இருக்கிறாங்க” என கேட்டாள்.
வேலை செய்யும் ஆட்களை ஒரு பார்வை பார்த்த கஜலட்சுமி விஜயாவின் காதின் அருகே சென்று “மலர, அம்மா ஆறுமணிக்குள்ள எழுந்துச்சு கோலம் போட்டு பால் காய்ச்ச சொன்னாங்க, ஆனா அவளுக்கு உடம்பு முடியலன்னு தனா சொல்லிட்டான். மணி ஏழாக போகுது இன்னும் அவ கீழயும் வரல அதான் அம்மா கோபமா இருக்காங்க” என கஜலட்சுமி சொல்ல, விஜயாவின் முகமும் கோபத்திற்கு மாறியது..
Advertisement
“ஓஹோ மகாராணி வந்த மறுநாளே அவுக பகுமானத்தை காண்பிக்கிறாங்களோ, அவளுக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணியிருப்பா, கல்யாணத்துக்கு முன்னாடி பூனை மாதிரி இருந்துகிட்டு இப்போ அவ வேலைய காமிக்குறாளா, இத இப்படியே விட்டா சரிவராது ஆரம்பத்துலயே ஒட்ட நறுக்கணும். இல்ல நம்ம தலைக்கு மேல ஏறி உக்காந்து ஆட ஆரம்பிச்சுடுவா” என விஜயாவும் கோபமாக சொல்லிவிட்டு, அன்னையின் துணைக்கு, மாடியையே பார்த்தவாரு அமர்ந்து கொண்டாள்.
இப்படி இருக்கும் வேளையில் தான் முகம் முழுக்க சிரிப்புடன் அல்லிமலர் கீழே வந்தது.
“என்ன தாய்க்கிழவி இப்படி பார்வையாலே நம்மள பொசுக்குது” என உள்ளுக்குள் நக்கலாக எண்ணியவாரு அல்லிமலர் ஹாலுக்கு வர, அனைவரும் அவளை சிரிப்புடன் பார்த்து வரவேற்றனர்..
“என்ன புது பொண்ணே மணி இப்போ தானே ஏழரை ஆகுது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குனாதான் என்ன?” என அங்கிருந்த ஒரு அம்மா கேட்டார்..
“ஹக்கும் அந்த அறிவு உங்களுக்கு இருக்கு. இங்க உள்ளதுங்களுக்கு இருக்கா,” என மாமியார் நாத்தனார் பார்வையிலேயே அவர்கள் கோபம் ஏன் என புரிந்து உள்ளுக்குள் நக்கல் அடித்தாள்.
ஆனால் வெளியில் “எப்போவும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுத்துருச்சுவேன் பெரிம்மா, இன்னைக்குத்தான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு, சாரி அத்தை இனி சீக்கிரம் எழுந்துடுறேன்” என தயக்கமும் பயமுமாக சுந்தராம்பாளிடம் சொல்லி தலை குனிய, அவர் முகம் சாதாரணமாக மாறியது..
“அதுனால என்ன மலரு, இங்க வா என் பக்கத்துல உக்காரு,” என அவளை அருகில் அமரவைத்து, நெற்றியில் கை வைத்து சோதித்து பார்த்தார் உடல் சூடாகத்தான் இருந்தது.
அதோடு கண்களின் சிவப்பும், அவளின் முகசோர்வும் வேறொரு கதையும் சொல்ல சுந்தராம்பாள் முகம் நிம்மதியானது..
“தனா சொன்னான் உனக்கு ஜொரம் அடிக்குதுனு, இப்போ பரவாயில்லையா” என தான்யாவும் அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.
“ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் சூடாத்தான் இருக்கு, நான் டீ கொண்டு வரேன் அத குடிச்சுட்டு டேப்லெட் போட்டுக்கோ, குலதெய்வம் கோயிலுக்கு வேற போகணும், பீவர் அதிகம் ஆகிடுச்சுன்னா உன்னால பொங்கல் வைக்க முடியுமோ என்னவோ” என தான்யா சொல்லிவிட்டு அன்னையை பார்க்க
“ம்ம்ம் ஆமா, மாத்திரைய போட்டு கொஞ்ச நேரம் கீழ உள்ள ரூம்லயே படுத்துக்க. காலை சாப்பாடு முடிஞ்சதும் குலதெய்வ கோயிலுக்கு கிளம்பனும். ஒன்பது ஒன்பதரை போல கிளம்பனும் எல்லாரும் சீக்கிரம் தயாராகுங்க” என சுந்தராம்பாள் சொல்லிவிட்டு செல்ல, தான்யா மலரை கையோடு கீழே உள்ள அறைக்கு கூட்டி சென்றுவிட்டாள்..
அன்னை மனம் சமாதானமானாலும் விஜயாவின் மனம் அமைதியடைய மறுத்தது.. மலர் தனியாக சிக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தாள்..
டீயுடன் மாத்திரையை முழுங்கிய அல்லிமலர், “ஷப்பா இந்த தூக்கத்துக்காக என்னெல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு” என மனதிற்குள் புலம்பியவாரு கட்டிலில் படுத்து மறுபடியும் தூங்கி விட்டாள்..
****************************
அல்லியின் கதகதப்பில் சுகமாக துயில் கொண்டிருந்த தனஞ்ஜெயனுக்கு, அவள் விட்டு விலகிய சில நிமிடங்களிலேயே அவனின் உறக்கமும் களைய ஆரம்பித்தது..
அவள் சென்ற இரு நிமிடத்திலேயே விழிகளை நன்றாக திறந்தவன், அல்லி அறையில் இல்லை என்பதை உணர்ந்து அவனும் வேகமாக குளித்து கீழே சென்றான்.
“அச்சோ அல்லி தனியா கீழ போயிட்டாளே. அம்மா அக்கா எல்லாம் லேட்டா வந்ததுக்கு ஏதும் சொல்லியிருப்பாங்களா. அவளுக்கு வேற உடம்பு முடியாம இருந்துச்சே” என பலதையும் நினைத்து வேகமாக கீழே வந்தவன், அங்கு யாருமில்லாததைக் கண்டு விழிகளை சுழற்றினான்..
அப்போது அங்கு வந்த சுந்தராம்பாள் “தனா வாய்யா எழுந்திருச்சுட்டியா” என அன்பாக அழைக்க, அவனும் தாயை பார்த்து சிரித்தான்.
“ஏன்யா இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்ச இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்ல” என மகனிடம் சொன்னவர்,
“அடியே மேகலா நல்லா சுக்கு ஏலக்காய் தட்டி போட்டு டீ எடுத்துட்டு வா” என சமையலறை நோக்கி குரல் கொடுக்க, இரு நிமிடத்திலேயே தனஞ்ஜெயனுக்கான ஸ்பெஷல் டீ வந்தது..
அவன் அமைதியாக அதனை வாங்கி பருகினாலும் விழிகளோ தன்னவள் எங்கேனும் தென்படுகிறாளா என சுழன்று கொண்டிருந்தது..
“டீ குடிச்சுட்டு கடைசி மாப்பிள அறையில போயி கொஞ்ச நேரம் படுத்துருய்யா, அம்மா காலை சாப்பாடு செஞ்சதும் கூப்புடுறேன்” என சொன்னவர், அங்கு அமர்ந்திருந்த கடைசி மாப்பிள்ளையிடம் அவனை அழைத்துப் போகும்மாறு சொன்னார்.
“மாமா அல்லி எங்க இருக்கா? கீழ வந்துட்டா தானே” என மறுபடியும் வீட்டினை அலசியவாரு கேட்டான்.
“தங்கச்சி கீழ தான் மாப்ள இருக்கா, ரூம்ல படுக்க சொல்லி இருக்காங்க”
“அவளுக்கு இன்னும் உடம்பு சரியாகலையா மாமா, இதுகூட தெரியாம தூங்கிட்டு இருந்துருக்கேன். அவ பயந்த சுபாவம் வேற லேட்டா வந்ததுக்கு அம்மா ஏதும் திட்டுனாங்களா. மாத்திரை ஏதும் போட்டாளா?” என மூச்சுவிடாது கேட்க, கார்த்திக் தன் மாப்பிளையை பார்த்து கொண்டே நின்றான்..
“மாமா ஏதாவது பேசுங்க, அல்லி எங்க இருக்கா”
“அடேய் என்ன எங்கடா நீ பேசவிட்ட, ஒரு கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஓராயிரம் கேள்வி அடுத்தடுத்து கேட்டுட்டுயிருக்க,” என திட்டியவன்
“தங்கச்சிக்கு உடம்பு பரவாயில்ல கொஞ்சமாதான் ஜொரம் இருக்கு. மாத்திரை போட்டு இருக்கா. கீழ உள்ள ரூம்ல படுக்க வச்சிருக்காங்க. குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு பொங்க வைக்கிற வரைக்கும் உனக்கும் அவளுக்கும் தனிமை கிடையாது. அதனால புது மாப்பிள்ளை நல்ல பிள்ளையா இங்கே படுத்துக்குவானா” என அவன் தாடையை பிடித்து சொல்ல, தனஞ்ஜெயன் முகம் சோர்ந்து போனது..
“இப்பவே பாக்க முடியாத மாமா” என பாவமாக தனஞ்ஜெயன் கேட்க, கார்த்திக்கோ அவனுக்கு மேல் பாவமாய் பார்த்து மறுப்பாய் தலையசைத்தான்..
நேரில் பார்க்க முடியாவிட்டால் என்ன, போனில் அழைக்கலாம் என தனஞ்ஜெயன் அல்லிக்கு போன் செய்ய, அவளோ போன் சத்தத்தை கூட உணராது தூக்கத்தில் இருந்தாள்..
இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்கவில்லை என்றதும், “அச்சோ பாவம் நல்லா தூங்குறா போல, மாத்திரை வேற போட்ருக்கா. சரி அப்பொறம் பேசிக்கலாம்” என தனஞ்ஜெயனும் சிறிது நேரம் படுத்து எழுந்தான்..
எட்டறை மணி போல் மறுபடியும் அல்லியின் போனிற்கு அழைத்து மணிமாறனே அவளை எழுப்பினான்..
அல்லிக்கு இன்னும் தூக்க கலக்கம் போகவில்லை. அதனால் முகத்தை நன்றாக அடித்து கழுவிவிட்டு வெளியே வந்தாள்..
அப்போது அவளுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த தனஞ்ஜெயன், முதலில் அவளின் நலம் அறிய பார்த்தவனின் பார்வை போக போக மோகபார்வையாக மாறி அவளையே உச்சி முதல் பாதம் வரை பருக ஆரம்பித்தது..
முகத்தை நன்றாக தேய்த்து கழுவியதாளோ என்னமோ அவளின் இரு கன்னமும் சிவந்து, பளிச்சென மின்னிகொண்டிருந்தது. அவளின் முன்பக்க சிகைகள் நனைந்து, அதெலிருந்து நீர் வடிய. அதனையே எச்சில் முழுங்கி ஆசையாக பார்த்து கொண்டிருந்தான்..
தனஞ்ஜெயன்
அல்லியும் தன்னை துளைக்கும் பார்வையின் குறுகுறுப்பில் மெல்ல அவன் பக்கம் திரும்பினாள்..
விழிகள் நான்கும் கலந்து கதை பேச ஆரம்பித்தது.. தனஞ்ஜெயன் அவளை தன்னிடம் வருமாறு கண்ணசைக்க, அவளும் பார்வையாலே மறுத்து கொண்டிருந்தாள்..
ப்ளீஸ் என அவன் கண்ணை சுருக்கி கெஞ்ச, இதழ் சுருக்கி அதனை முறியடித்து அவனை மேலும் தன்னிடத்தில் வீழ்த்தினாள்..
இவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களால் பேசிக் கொண்டிருக்க, சுந்தராம்பாள் அதனை கலைத்தார்..
“எழுந்துருச்சிட்டியா மலரு, போய் சீக்கிரம் நல்ல பட்டுபுடவை கட்டிக்கிட்டு, நகை எல்லாம் போட்டு தயாராகு குலதெய்வ கோயிலுக்கு போகணும்” என அவளை விரட்டினார்..
அந்த இரு நொடி பார்வை பரிமாற்றங்களுக்கு பிறகு தனஞ்ஜெயன் அல்லி இருவருக்கும் தனிமை கிடைக்கவில்லை…
***********************************
தஞ்சாவூரில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் இருக்கும் அவர்களின் சொந்த ஊரான மகிழங்கோட்டையில் குலதெய்வ வழிபாட்டிற்காக அனைவரும் வந்திருந்தனர்..
அவர்கள் வரவிற்காக பூசாரி கோவில் வாசலிலேயே காத்திருந்தார்.. இங்கும் அவர்களுக்கு சொந்த வீடுள்ளது. ஆனால் அடுத்தடுத்து விருந்து விசேஷங்கள் இருக்கிறது என்பதால் நேரடியாக கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து விட்டு செல்லலாம் என முடிவுடன் வந்திருந்தார்கள்..
“வாங்கம்மா வாங்கய்யா எல்லாரும் எப்படி இருக்கீங்க கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா” என கோவில் பூசாரி விசாரித்தார்.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சது பூசாரி, இவங்க தான் எங்க மருமக” என அல்லிமலரை அறிமுகப்படுத்த, அவள் கரம் குவித்தாள்.
“ரொம்ப சந்தோசம்ங்கயா வாங்க நல்ல நேரம் போறதுக்குள்ள பொங்கல் வச்சுடலாம்” என கோவிலின் உள்ளே சென்றார்கள்..
சுந்தராம்பாள், “மலரு நீதாம்மா பொங்க வைக்கணும்” என சொன்னவர்,
“உனக்கு பொங்கல் வைக்க தெரியுமா?” என சந்தேகமாக கேட்டார்..
“யாரை பாத்து என்ன கேள்வி கேட்ட தாய்க்கிழவி” என உள்ளுக்குள் கேலியாக நினைத்த அல்லி,
வெளியே, “ஏதோ கொஞ்சம் தெரியும் அத்தை” என்று மட்டும் சொல்லி பொங்கல் வைக்க தயாராக, தான்யா அவளுக்கு உதவி செய்தாள்..
தனஞ்ஜெயனும் அவள் அருகில் நின்று கொண்டான்.. அவனுக்கும் தன்னவளுக்காக ஏதேனும் உதவி செய்ய ஆசையாக இருந்தது. ஆனால் அம்மா ஏதாவது சொல்வாரோ என நினைத்து அமதியாக நின்றிருந்தான்…
ஒருவழியாக பொங்கல் வைத்து முடித்து, படையல் போட்டு சாமி கும்பிட்டுவிட்டு, மதிய உணவு நேரத்திற்கு வீட்டை அடைந்து விட்டனர்..
அனைவரும் அல்லி வைத்த பொங்கலை பாராட்டி தள்ளியிருந்தார்கள்.. சுந்தராம்பாளிர்க்கும் அவளின் கைபக்குவம் பிடித்திருந்தது. தனஞ்ஜெயன் தன்னவளை பெருமையாக பார்த்தான்..
அல்லிக்கு சமையல் செய்வதில் நாட்டம் அதிகம். அதனால் சமையலை விரும்பி கற்றுக்கொண்டள். ஆனால் மற்ற வேலைகள் செய்ய உடம்பு வளையாது..
“சுந்தராம்பா பொண்ணும் மாப்பிளையும் எப்போ மறுவீடு போறாங்க.” என அவர் அக்கா முறை உள்ளவர் கேட்டார்.
“அங்கன மதுரையில தான் சம்பந்தி உறவுமுறை எல்லாம் இருக்காங்களாம். அங்க பூர்விக வீடும் இருக்காம். அதான் வரவேற்புக்கு வரும்போதே மறுவீடு மத்த சம்பிரதாயம் எல்லாம் வச்சுக்கலாம்னு சம்பந்தி வீட்டுல சொல்லிட்டாங்க.” என்றவர்
“மத்ததெல்லாம் அப்பொறம் பேசிக்கலாம் எல்லாரும் கொஞ்ச நேரம் போய் ஓய்வெடுங்க” என சுந்தராம்பாள் சொல்லிவிட்டு செல்ல, அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டார்கள்..
மறுநாள் திருமணத்திற்கான கறிவிருந்து. அது முடிந்தவுடன் சொந்த பந்தம் அனைவரும் கிளம்புகிறார்கள்..
பிறகு அடுத்தடுத்த லட்சுமிகளின் விருந்தும் முடித்துவிட்டு, குடும்பத்தினர் அனைவரும் புதுமணமக்களோடு ரிஷப்ஷன் செல்கிறார்கள்..
கற்பகம் ராமநாதன் இருவரும் விருந்து முடிந்து மதுரை கிளம்புகின்றனர்..
***************************
அல்லி எப்பொழுது அறைக்கு வருவாள் என ஆவலாக காத்திருந்த தனஞ்ஜெயன், அவள் அறையில் நுழைந்த அடுத்த கணம் அவள் பாதம் தரையில் பதியாது, அவளை தூக்கிக் கொண்டான்..
“காலைலயிருந்து என்னோட அல்லி பூ என்கிட்ட வரவேயில்ல” என அவள் கழுத்தினுள் முகம் புதைக்க பெண்ணவள் மேனி கூசி சிலிர்த்தது..
“அல்லி மலர் வாசமில்லாததுன்னு சொல்றாங்க. ஆனா என்னோட கரத்தில் தவழும் அல்லியோட வாசம் மல்லிவாசம் மாதிரி என்னை மயக்குதே, அது எப்படி?” என மயக்கும் குரலில் கேள்வி கேட்டு, அவனே பதிலை அவளுக்குள் தேடி கொண்டிருந்தான்..
ஆழ்ந்த முத்தச் சத்தங்கள், மெல்லிய வளையல் மற்றும் கொழுசொலி சத்தங்கள்தான் சிறிது நேரத்திற்கு, அவ்வறையை நிறைத்து கொண்டிருந்தது..
“ப்ச் அத்தான் போதும் விடுங்க” என மேலும் படர முயன்றவனை அல்லிமலர் தடுக்க, தனஞ்ஜெயன் அவளின் அத்தானில் மீண்டும் மயங்கி போனான்..
“தள்ளிப்போன்னு சொல்லிட்டு அத்தான்னு சொன்னா என்ன அர்த்தம் அல்லிம்மா, எனக்கு வேற என்னென்னமோ தோணுதே” என மோககுரலில் சொன்னான்.
“ம்ம்ம் உங்களுக்கு தானே, எல்லாம் தோணும் தோணும்” என செல்லமாக நொடிக்க, தனஞ்ஜெயன் அவள் கழுத்தில் கடித்தான்..
“ஸ்ஸ் ஆஆ..” என தன் கழுத்தை வருடியவள், சட்டென அவனின் கன்னத்தை அழுத்தி கடித்தாள்.
“பழிக்கு பழி வாங்குறீங்களா அல்லிக்குட்டி,”
“ஆமாண்டா என் பட்டுக்குட்டி” என இருவரும் மாறி மாறி கொஞ்சிக் கொண்டே உறங்கி போயினர்..
மணி ஐந்தை தொடும்போது எழுந்த தனஞ்ஜெயன் அல்லியையும் கையோடு எழுப்பி விட்டான்.
“அல்லிமா மணி அஞ்சாயிடுச்சுடா. எழுந்திரி முகத்தை கழுவிட்டு கீழ போய் அம்மாக்கிட்ட இரு” என அவளை எழுப்ப, அரைத் தூக்கத்தில் இருந்ததால் அல்லியும் எழுந்தாள்..
“யோவ் அத்தான் ஏன்யா இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடேன்” என அவள் தூக்கத்தில் புலம்ப தனஞ்ஜெயன் திருதிருவென விழித்தான்..
“அல்லி என்னடா, கிளம்பு இல்லன்னா அம்மா திட்டுவாங்க நான் உன் நல்லதுக்கு தானே சொல்றேன்” என சற்று அதிகமாக அல்லியின் கரத்தை உலுக்க.
“அடிங், இனி அல்லி மல்லின்னு கிட்டவாடா மூஞ்சை சல்லி சல்லியா உடைச்சு விடுறேன், வந்துட்டான் ஆத்தா திட்டுவாங்க ஆயா திட்டுவாங்கனு” என சட்டென கத்திவிட்டு அல்லி குளியறைக்குள் நுழைய தனஞ்ஜெயன் பேயறைந்தது போல் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்..
error: Content is protected !!