Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன் -10

உனக்கென இருப்பேன் -10

எதோ குழப்பம் கொஞ்சம் புரிவது போல் இருந்தது …கொஞ்சம் புரியாமலும் இருந்தது .

எதிலும் மனம் ஒட்டவில்லை . சிந்தை யாவும் இந்த கவிதையே வியாபித்திருந்தது 

இதை எப்படி அஸ்வினிடம் கேட்பது ? அஸ்வின் கவிதையை வேறு யாராவது கூட தன்  நோட்டில் வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் யோசித்துக் கொண்டிருந்தாள்.



Advertisement

“………………”

கீர்த்திக்கு அஸ்வின் பற்றி அதிகம்  தெரியாது . வினோத் அண்ணனின் அறிவு திறமை பற்றி பெருமையாய் கூறுவதுண்டு . அவ்வளவு தான் தெரியும் .

அவனிடம் இன்று நாசூக்காய் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் .

Advertisement

மதிய உணவிற்கு களைத்து போய் வந்தவனிடம் எதுவும் கேட்கத்  தோன்றவில்லை  .

Advertisement

சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு முகம் கழுவி வந்தவன் குழந்தையுடன் விளையாட தொடங்கி விட்டான் .

அஸ்வினை நன்றாக அடையாளம் பிடித்துக் கொண்ட தியானு இப்போதெல்லாம் அவனை பார்த்தாலே வில்லாய் வளைகிறான் . தூக்க சொல்லி கீச்சிடுகிறான் .

விளையாண்டது போதும் சாப்பிடுங்க !

Advertisement

இப்படி அடிச்சு பிடிச்சு வெய்யிலில் வரணுமா ? இந்த அலைச்சலுக்கு லன்ச் கொண்டு போயிடலாமே ….?முனு முனுத்தாள்.

ஏன் நான் வந்து போறதில் உனக்கென்ன கஷ்டம் ?  அவன் விழியுயர்த்தினான் .

அய்யா சாமி நீங்க எத்தனை முறை வேணா வந்து போங்க எனக்கென்ன வந்துச்சு ? சிணுங்கலாய் முறைத்து கழுத்தை ஒரு வெட்டு வெட்டினாள் 

என் பிள்ளை சிரிப்புக்காகவே நான் வந்து போவேன் குழந்தைக்கு வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டி சிரித்தான்.

மனைவி கழுத்தை வெட்டி போக….பார்த்து …பார்த்து கழுத்து சுலுக்கிக்க போகுது ! உதட்டை பிதுக்கினான் .

ரொம்ப தான் ….தாழ்வாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு போனாள் .

சராசரி கணவன் மனைவி வாழ்வில் இருக்கும் அன்னியோன்யம் மெல்ல தன்  வாழ்விலும் வந்து கொண்டிருப்பதை வெகுவாய் ரசித்தான் அஸ்வின். கீர்த்திக்கு தான் அது புலப்படவில்லை போலும்.

“………………..”

இரவு சற்று தாமதமாய் தான் வந்தான் .

இரவு உணவை  முடித்துக் கொண்டு சற்று நேரம் டிவி பார்த்துவிட்டு அறைக்குள் வந்தான் .ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் கீர்த்தி  .

என்ன கீர்த்தி தூக்கம் வரலையா ?  பாயில் அமர்ந்தவன் அவள் புறமாய் திரும்பி காலை கட்டிக்கொண்டு மடியில் தலையணையை வைத்துக் கொண்டான்.

பகலில் கொஞ்ச நேரம் தியானுவோட தூங்கிடறேன் அதுதான் இப்போ தூக்கம் வரலை என்றாள் .

ஏதாவது புக்ஸ் படி !  

உங்களுக்கு என்ன மாதிரி புக்ஸ் பிடிக்கும் ?

சரித்திர நாவல்கள் , கவிதை ,அறிவியல் கதைகள் இப்படி இருக்கும் என்னோட லிஸ்ட் என்றான் சுவாரஸ்யமாய் . இதுபோல் அவர்கள் பேசுவது புதிது .

கவிதை எழுதுவீங்களா ?

அவள் கேள்வியில் ஏதோ மறைபொருள் இருப்பதை உணர்ந்தான் .

ம்ம்ம்ம்ம்ம் ….எப்போவாவது கிறுக்குவேன் ! கிறுக்கல் கவிதை ஆகுமா ? அழகாய் சிரித்தான் .

“நீங்க லவ் பண்ண  பொண்ணுக்கு மேரேஜ் ஆகிடுச்சா” ? எதிர்பார்ப்புடன் கேட்டாள் .

ம்ம்ம்ம் என்றான் பெருமூச்சுடன் ! இப்போ அதை பத்தி பேசி என்ன ஆகப்போகுது ? தூங்கு என்றான் சாதாரணமாய் .

நீங்க எங்கே படிச்சீங்க ?

காலேஜில் தான் !

அவன் மொக்கையில் காண்டாகி முறைத்தவள் சத்தியமா சிரிப்பு வரலை என்றாள் .

அதுக்கு ரசனை வேணும் மேடம் என்றான் குறும்பு சிரிப்புடன் .

அவள் இன்னும் முறைக்க ….

ஓகே கூல் ….இப்போ ரன்ன தெரியணும் உனக்கு ? அவள் விழி உருளும் அழகில் சொக்கிப் போனான் .

ஒண்ணுமில்ல ….அதற்குமேல் கேட்க அவளுக்கு தைரியம்  இல்லை . போலீஸ் கஸ்டடியில் அக்யூஸ்ட் விசாரணை மாதிரி தோன்றியது .

அவளுடன் சற்று விளையாடி பார்க்க ஆசைப்பட்டான் .

கீர்த்தி …”என்னோட எக்ஸ் செம்ம அழகு !” பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகி அவ …! அவள் முகத்தை கூர்ந்து நோக்கி ரசித்தான் . உண்மையை தானே சொல்கிறோம் என்ற நிமிர்வு அவனுக்கு .

சட்டென வாடியது அவள் வதனம் . தன் முகவாட்டத்தை அவனிடம் காட்ட விரும்பாதவளாய் ஸாரி என்றபடி போர்வையை இழுத்து போத்திக் கொண்டாள் .

அஸ்வினுக்கு சிரிப்பு தான் வந்தது . மேடமும் முகம் வாடி போச்சு போல …. கர்வமாய் சிரித்துக் கொண்டான்.

ஒரு கணவனாய் தன்னை நினைக்கத் தொடங்கிவிட்டாள் என்ற கர்வம் அவனுக்கு  .

“……………….”

மஞ்சுமா நாளைக்கு ஃப்ரியா இருந்தா கடைக்கு போய் வரலாமா ? அஸ்வின் கேட்டான் .

என்ன அஸ்வின் வாங்கணும் ?

கீர்த்திக்கு தாலி செயின் வாங்கணும் ?

மூணாவது மாசம் பிரித்து போடலாமே ….என்றார் .

இல்லை மஞ்சுமா புதன் கிழமை முகூர்த்த நாள் தான்…. அஸ்வின் இழுவையாய் சொல்ல …கீர்த்தி புரிந்து கொண்டாள் .

கையில் குழந்தையோடு புது மஞ்சள்கயிறு அணிந்திருப்பது அவளுக்கு சங்கோஜமாய் இருந்தது . தெருவில் கீரை வாங்க, பூ வாங்க வரும்போது எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள் என்று சங்கடம்  கொண்டு நைட்டிக்குள் மஞ்சள் கயிறை மறைத்து ஷால் போட்டுக் கொண்டு வெளியில் போவாள். 

எப்போது பார்த்தான் ,எப்படி உணர்ந்து கொண்டான் ? அவளுக்கு பிரம்மிப்பாய் இருந்தது. 

அவள் உணர்வு புரிந்து கொண்டதால் தான் இவ்வளவு அவசரம்  காட்டுகிறான் .

யாரடா நீ ? இப்படி திகட்ட திகட்ட அன்பை அள்ளி வழங்குகிறாயே….  எங்களுக்காகவே இந்த பிறவி எடுத்தாயோ ! கண்ணுக்குள் வைத்து காத்து நிற்கிறாயே …இந்த நன்றி கடனை எப்படி தீர்ப்பேன் ? நெக்குறுகி நின்றாள்.

“……………….”

திருப்பாப்புலியூரில் உள்ள சுப வள்ளிவிலாஸ் நகை  கடைக்கு அழைத்து சென்றான் .  

உனக்கு பிடித்த மாதிரி பாரு என்றான் மனைவியிடம் .

மூன்று பவுனில் மெல்லிதாய் ஒரு செயின் எடுத்து காட்டினாள் ..

நல்லா  இல்லை என்பதாய் உதடு பிதுக்கினான் .

அஞ்சு பவுனில் மஞ்சுளா ஒரு செயின் எடுத்து காட்டினார் . இது கெட்டியாவும் இருக்கு பார்வையாவும் இருக்கு சீக்கிரம் அறுந்து போகாது என்றார் .

அஸ்வினுக்கும் அந்த செயின் பிடித்திருந்தது. இதுக்கு பில் போடவா? என்றான் .

ம்ம்ம்ம் என்றாள் .

மற்ற உரு எல்லாம் வாங்கணும் என்றார் மஞ்சுளா .

எனக்கு தெரியாதும்மா நீங்க பாருங்க என்றான் .

மாங்கல்யத்துடன் கோர்க்க குண்டு , காசு , பவழம் என்று வாங்கி கொடுத்தார் . அழகிய சுருள் மெட்டி ஆசைப்பட்டு வாங்கி கொடுத்தான் அஸ்வின் .

கீர்த்தி தியானுக்குட்டிக்கு கொலுசு வாங்கிடுவோமா என்று குழந்தைக்கும் ஆசையாய் கொலுசு வாங்கி அங்கேயே  போட்டு அழகு பார்த்தான் .

புதன் கிழமை காலையிலே அக்கம் பக்கத்து சுமங்கலிகளை அழைத்து தாலி பிரித்து போட்டார்கள் . அக்கம் பக்கத்தாருக்கு அஸ்வின் கீர்த்தி திருமண விபரம் தெரியும் என்பதால் அங்கு யாரும் புறம் பேசி அவர்கள் மனதை காயப்படுத்தவில்லை. தாம்பூலம் பெற்றுக்  கொண்டு வாழ்த்தி சென்றனர் .

“………………”

என் புள்ள ரெண்டு வாரமா வரல … என்னை மறந்துட்டான் ! சரோஜினி பித்து பிடித்தார் போல் அழுது புலம்பினார்.

வெள்ளிக்கு கிழமை இரவு எந்நேரம் ஆனாலும் வீட்டிற்கு வந்து விடுவான். சனிக் கிழமை எண்ணெய் குளியல் , ஞாயிற்றுக் கிழமை அம்மா செய்யும் அசைவம் அதை மிஸ் பண்ண மாட்டான் . 

இதோ இரண்டு வாரம் ஆகிறது சொந்த வீட்டுக்கு வந்து ,பெற்றவர்களை பார்த்து ….

எதுக்கு அழுது புலம்புற ? இந்தா  இருக்க கடலூருக்கு நேரா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடு ! என்றார் பொன்னுசாமி .

மனைவியானவர் தீயாய் முறைக்க …சரி நீ போன் போடு அவன் வந்து நின்னுடப்போறான் என்றார் .

அவன் எப்படி வருவான் பாருங்க ? துரை வந்தா பொண்டாட்டி பிள்ளையோட தானே வருவார் ….கசந்த முறுவல் பூத்தார் .

அம்மா நடந்ததை எதையும் மாத்த முடியாது. அண்ணி ரொம்ப நல்ல டைப் ! அவங்களை மனப்பூர்வமா ஏத்துக்கோம்மா …. ஊர் என்ன பேசும்னு யோசித்து யோசித்து அண்ணனை விலக்கி வைக்காதம்மா. அக்ஷயா கெஞ்சினாள் .

அடி தொடப்பக்கட்டையால…. என்னை என்ன கேனப்பய மவன்னு முடிவு பண்ணிட்டியா ? சரோஜினி எகிறலில் வாயை கப்சிப்பென்று மூடிக் கொண்டாள் அக்ஷயா .

அப்பா அடுத்த வாரம் எனக்கு  செமஸ்டர் லீவ் வருது . எனக்கு அண்ணனை பார்க்கணும் போல இருக்கு …போயிட்டு வரவா ? கெஞ்சும் விழியோடு அனுமதி கேட்டாள் .

மனைவியின்  புறம் திரும்பிய பொன்னுசாமி மகளை பார்த்து ஓர விழியால் சம்மதம் சொன்னார் .

சரோஜினி ஏதாவது நொட்டை சொல்லுவார் என்று எதிர்பார்த்திருக்க அவர் அமைதியாய் அமர்ந்திருந்தார் .

அக்ஷயாவுக்கு அவ்வளவு சந்தோஷம்!

பொன்னுசாமிக்கு புரிந்து போனது “பெத்த மனம் பித்து” .

“…………………..”

அன்று ஞாயிற்றுக்  கிழமை…  கீர்த்தி நான் சலூனுக்கு  போய் ஹேர் கேட் பண்ணிட்டு  வந்துடறேன். சிம்பிளா ஏதாவது சமைச்சுக்கோ . மனைவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான் 

இட்லிக்கு அரிசி ஊரப்போட  அளந்து கொண்டிருந்தாள்  கீர்த்தி .

சார்ஜரில் இருந்த மொபைல் அழைத்தது .

ஹ்ம்ம் …மொபைலை விட்டுட்டு போயிட்டாரா ? சாருக்கு மெமரி பவர் அதிகம் தான் . தனக்குள் பேசிக் கொண்டே மொபைலை ஆன் செய்து காதில் வைத்தாள் .

டேய் மாப்ள …நான் ராகவ் பேசறேன் . நெக்ஸ்ட் வீக் இந்தியா வரேன் உனக்கு கனடாவில் இருந்து ஏதாவது வாங்கிட்டு வரணுமா ?  எதிர்முனை பேசிக்கொண்டே போக ….

ஹலோ நான் அஸ்வின் மிஸஸ் கீர்த்தனா பேசறேன் என்றாள் .

வாவ் …இந்த தடியன் ஒருவழியா ஆசைப்பட்ட மாதிரியே உங்களையே  மேரேஜ் பண்ணிட்டானா ? சொல்லவே இல்லை . கங்கிராட்ஸ்ங்க எனக்கு  இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ?

ஒருவழியா அஸ்வின் லவ் சக்ஸஸ் ஆகிடுச்சு ! தேங்க் காட் …ராகவ் பேசிக் கொண்டே போக …பூமியே சுற்றியது அவளுக்கு .

……………தொடரும் …………..

 

 

 

 

 

   

 

  

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!