Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 21 2

அன்றைய தினம் இரவு நேரம்.
“வைதேகி…உள்ள வரலாமா?” என்ற கீதா வைதேகி இருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

“வாங்க அம்மா உட்காருங்க” என்ற வைதேகியின் அருகே சிறுமி மயிழினி அவளிடம் விளையாடிக் கொண்டிருக்க “குட்டி பாப்பா அத்தையை தொல்லை கொடுக்கக் கூடாது. அத்தைக்கு காலில் அடிபட்டு இருக்கு. அத்த ரெஸ்ட் எடுக்கட்டும். உன்னை அம்மா கூப்பிடுறாங்க ஓடு”
என்று கீதா சொல்ல,
“அத்த… நான் போயிட்டு வரேன்” என்ற சிறுமி தத்தக்கா புத்தக்கா என்று நடந்து தன் அன்னையைத் தேடி வெளியே ஓடினாள்.

“என்ன வைதேகி இப்போ கால் வலி எப்படி இருக்கு” என்று கீதா கேட்க, “இப்போ கொஞ்சம் வலி பரவாயில்ல அம்மா” என்றாள் வைதேகி.

“உன் கால்ல அடிபட்டு இருக்குன்னு ராணா மாப்பிள்ளை உனக்கு சாப்பாட்டை ரூமுக்கு எடுத்துட்டு போய்க் குடுக்கணும்னு கட்டளை
போட்டு இருக்காரு “என்று கீதா சொன்னதும் வைதேகிக்கு சங்கடமாக இருந்தது.



Advertisement

“அம்மா…எனக்குக் கால்ல அடிபட்டு இருக்கிறது என்னமோ உண்மைதான். அதனால நான் நடக்க முடியாத அளவுக்கு எல்லாம் இல்ல. இதோ இந்த வாக்கிங் ஸ்டிக் கூட நானே நடந்து வெளியே வந்து உங்க கூட எல்லாம் உட்கார்ந்து சாப்பிடுவேன்.
என்ற வைதேகியை வாக்கிங் ஸ்டிக்கின் உதவியோடு கீதா ஹாலுக்கு அழைத்து வந்தவர் சாப்பாட்டு மேசையின் அருகே அமர வைத்தார்.

“என்னமா வைதேகி நானே உன் ரூமுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரலாம்னு இருந்தேனே நீ ஏன் வெளியே வந்த?” என்று வேதநாயகியும் அக்கறையுடன் வைதேகியை விசாரிக்க, “பரவால்ல அத்த…நான் உங்க கூட எல்லாம் பேசிக்கிட்டு இங்கேயே உட்கார்ந்து சாப்பிடுறேன்” என்ற வைதேகியின் கண்கள் யாரையோ தேடிக்கொண்டு இருந்தது.

“என்ன வைதேகி யாரை தேடுற! அண்ணன் என்னையா தேடுற?” என்றபடி குழந்தையைக் தூக்கிக்கொண்டு மாறன் சாப்பாட்டு மேசையில் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்ததும், “இல்லை இல்லை வைதேகி என்னைத் தான் தேடுவாள்” என்றபடி மாயாவும் அவன் அருகே வந்து அமர்ந்தாள் .

Advertisement

மாயாவும் மாறனும் தன்னை சீண்டிப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் வைதேகியின் கண்கள் தேடியது என்னவோ ரணதீரனை தான்.
ஆனால் அவன் அங்கு இல்லை என்று தெரிந்ததும் அவள் முகம் வாடிபோன சமயம்…

Advertisement

“என்னாச்சு! உன் காலுல ஏன் கட்டு கட்டிருக்கு?” என்ற பொம்மியின் குரலில் வைதேகி திரும்பிப் பார்க்க, பொம்மியும் நீலவேணியும் வாசலிலிருந்து உள்ளே நுழைந்தார்கள்.

“வாங்க அக்கா… எனக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் அவ்வளவுதான். வாங்க சாப்பிடலாம், நீலு…எங்க உன் ஆளு வேலுவைக் காணோம்” என்று வைதேகி கேட்டதும்,”வேலுவும் ராணாவும் சென்னை வரைக்கும் போய் இருக்காங்க என்று மாறன் சொன்னான்.

மாறனின் பதிலைக் கேட்டு,”என்ன!?
தீரா சென்னை போயிருக்காரா? ஏன் என்கிட்ட சொல்லாம போனாரு? “என்று உரிமையோடு கேட்கும் பெண்ணவளை பார்த்துக் கூடியிருக்கும் அனைவரும் அவர்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

Advertisement

“என்னம்மா வைதேகி!என்ன சொன்ன? ராணா மச்சான் உன் கிட்ட ஏன் சொல்லாமல் போனாருன்னு கேட்கிறாயா?” என்று மாறன் கேட்க, “இல்ல அண்ணா…அப்படி கேட்கல, அது வந்து…”என்று திக்கித் திணறும் வைதேகியை பார்த்து மாயாவும் சிரித்துக்கொண்டாள்

“மாறா…ஏன் சும்மா அந்தப் பொண்ண சீண்டிக்கிட்ட இருக்க! அம்மாடி… கம்பெனி விஷயமா திடீர்னு ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியது இருந்துச்சு, அதனால தான் ராணா மாப்புள கம்பெனியில் இருந்தபடியே சென்னைக்கு போயிருக்காரு. எப்படியும் பத்து நாளுல வந்துட்டுவாரு” என்று கீதா சொல்ல,
“என்ன பத்து நாளா?” என்று சிறு கடுகடுப்புடன் கேட்டாள் வைதேகி.

வைதேகியை சீண்டிப் பார்க்கும் மாறன் மாயா மற்றும் கீதாவின் பேச்சைத் தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டே வேதநாயகியும் கண்டும் காணாமல் வைதேகியின் முகம் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

“வைதேகி இந்தாம்மா… இன்னும் ஒரு இட்லி வச்சிக்கோ” என்ற வேதநாயகி அவள் தட்டில் மேலும் உணவை வைக்க, “இல்ல அத்தை வேண்டாம். எனக்குச் சாப்பாடு போதும். நீங்க எல்லாம் சாப்பிடுங்க”என்ற வைதேகி சாப்பாட்டு தட்டைத் தடவிக் கொண்டு இருந்தாளே தவிர ஒரு வாய் சாப்பாடுக் கூட அவள் தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.

அனைவரும் இரவு உணவைச் சாப்பிட்டு முடிக்க, “உடம்பைப் பார்த்துக்கோ வைதேகி. மாத்திரை மருந்து போடு. நீலு வா நம்ப போகலாம்” என்ற பொம்மி நீலவேணியை அழைத்துக் கொண்டு அவளின் தோட்டத்து வீட்டிற்கு சென்றவரின் மாற்றத்தை அங்குள்ளவர்கள் கண்டு வியந்து தான் போனார்கள்.

“வைதேகி… உனக்குக் கால் சரியாகுற வரைக்கும் என் ரூமிலயே படுத்துக்கோ. நான் சம்மந்தி ரூம்ல போய்ப் படுத்துக்குறேன். உனக்கு ஏதாவது வேணும்னா நம்ம பேமிலி குரூப்ல போன் பண்ணு. நானும் உன் பக்கத்துல படுத்துப்பேன். ஆனா என்ன ஒன்னு நான் தூக்கத்துல குறட்டை விடுவேன். அப்புறம் உனக்குத் தூக்கம் கெட்டுப் போகும்” என்ற வேதநாயகியை பார்த்து வைதேகி சிரித்துக்கொண்டாள்.

“பரவால்ல அத்த… அதான் வாக்கிங் ஸ்டிக் இருக்கே, நான் சமாளிச்சுப்பேன்” என்ற வைதேகி அனைவருக்கும் இரவு வணக்கத்தைச் சொன்னபடி தன் அறைக்குள் சென்றவளுக்கு உறக்கம் தொலைந்து போனது.

நீண்ட நேரம் தன் படுக்கையில் திரும்பித் திரும்பிப் படுத்து பார்த்தவளுக்கு ஒரு துளி உறக்கம் கூட வராமல் போக, தன் கைபேசி வாயிலாக அவளது இமெயிலை திறந்து தான் சேகரித்து வைத்திருக்கும் தன் தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ அவள் பையில் இருந்த ரணதீரனின் சட்டையை எடுத்துத் தன் தலையணை கிழ் வைத்தபடி தன் அம்மா அப்பாவின் புகைப்படத்தையும் பார்த்தவாறு அயர்ந்து உறங்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை ஆறு மணிகெல்லாம் கண் விழித்த வைதேகி அவளாக எழுந்து குளித்து முடித்து வாக்கிங் ஸ்டிக்கின் உதவியோடு ஹாலுக்கு வந்தவளை,
“என்னம்மா அதுக்குள்ள எழுந்திட்டியா? சரி வந்து இப்படி உட்காரு நான் போய் உனக்கு டீ எடுத்துட்டு வரேன்” என்ற வேதநாயகி சமையலறைக்குள் நுழையும் தருணம்,”அம்மா எனக்கும் ஒரு டீ”என்ற ரணதீரனின் குரலில் சட்டென்று வைதேகி திரும்பிப் பார்க்க, சோர்வுடன் ரணதீரன் வாசலிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவனை பார்த்ததும் வைதேகியின் முகம் பிரகாசமாக மாறியது.

ஹாலில் அமர்ந்திருந்த வைதேகியை பார்த்து, “கால் வலி இப்போ எப்படி இருக்கு? நைட்டு நல்லா தூங்குனியா?”
என்று ரணதீரன் கேட்க,
“நீங்கசிஜி சென்னைக்கு போய் இருக்கிறதா சொன்னாங்க.வர ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க. அப்ப நீங்கச் சென்னைக்கு போகலையா?” என்று உரிமையோடு விசாரிக்கும் வைதேகியை கேள்வியோடு பார்த்தான் ரணதீரன்.

“அம்மாடி வைதேகி…ரணதீரன் சென்னைக்கு எல்லாம் போகல.நேத்து நைட்டு நிறைய பொம்மைகளை எக்ஸ்போர்ட் பண்ண வேண்டிய வேலை இருந்துச்சு.அதனால நைட் முழுக்க கம்பெனியில் தங்கிட்டு இப்பதான் வரான். மாறன் மாப்பிள்ளையும் மாயாவும் உன்னை வம்பு இழுப்பதற்கு தான் அப்படி பேசினாங்க. சரி ரெண்டு பேரும் உட்காருங்க நான் போய் டீ எடுத்துட்டு வரேன்” என்று வேதநாயகி சமையலறைக்குள் நுழைந்தார்.

வேதநாயகியின் தலை மறைந்ததும்
” நீங்க என்கிட்ட சொல்லாம சென்னைக்கு போயிட்டீங்கன்னு நான் உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன் தெரியுமா!”என்றாள் வைதேகி.

“ஓ…நான் உன்கிட்ட சொல்லாம போனா நீ கோபப்படுவியா!?”என்று ரணதீரன் கேட்க,
“ஆமா பின்னக் கோபப்படுவாங்க தான்” என்றாள் வைதேகி.

“ஏன் அப்படி? ” என்று அவன் கேட்டதும்,
“அதெல்லாம் அப்படித்தான்” என்றவள் உதட்டை வளைத்து தன் பார்வையை கோவமாக வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டாள்.

வைதேகியின் செய்கை சிறு பிள்ளைத்தனமாகத் தோன்றினாலும் ரணதீரனும் தன்னை மறந்து அவளை ரசிக்கத்தான் செய்தான்.

“சரி சரி நீ அப்புறம் கோச்சிக்கலாம். சொல்லு இப்போ கால் வலி எப்படி இருக்கு?” என்று ரணதீரன் கேட்க, “கொஞ்சம் வலி இருக்கு. ஆனா ஒரே இடத்தில உட்கார்ந்தா கால் மறுக்குது தீரா. அதனாலதான் உங்க கூடக் கம்பெனிக்கு வரலாமான்னு கேக்க நினைத்தேன்”  என்று வைதேகி சொன்னதும்,” உன்ன நான் வெளியே அழைச்சிட்டு போறதுதா யார் சொன்னாங்க? என்று கேட்டான் ரணதீரன்.

“யாரு சொல்லணும்? நான் தான் சொல்லணும். நான் உங்க கூட வரேன் என்னை அழைச்சிட்டு போங்க” என்று கட்டளையாக வைதேகி சொல்ல, “சரி சரி நான் டீக்குடிச்சிட்டு, குளிச்சிட்டு வந்து உன்ன கம்பெனிக்கு அழைத்துக்கொண்டு போறேன்” என்று ரணதீரன் சொன்னது போலவே அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து முடித்து மீண்டும் வேதநாயகி வீட்டிற்குள் வந்தவன் காலை உணவை முடித்தபடி வைதேகியை அழைத்துக் கொண்டு தன் கம்பெனிக்குச் செல்வதற்காக ஜீப்பில் ஏறி அமர்ந்தவன், வைதேகி அமர்ந்ததும் அவளுக்குச் சீட் பெல்ட்டையும் அணிவித்தான்..

“ராணா… எதுக்கும் ஜாக்கிரத…நேத்து வீட்டுக்கு வந்து மிரட்டன ஆளுங்க யாராவது மறுபடியும் பிரச்சனை பண்ண போறாங்க” என்று வேதநாயகி சொல்ல,
“அத்த…அதெல்லாம் கவலைப்படாதீங்க யாரும் வரமாட்டாங்க.அப்படியே வந்தாலும் என் மச்சான் கிட்ட யாரோட பப்பும் வேகாது” என்ற மாறனுக்கு எப்படியாவது வைதேகியும் ரணதீனனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பெரிதாகத் தெரிந்தது.

“ஆமா அத்த… தீரா என்னைப் பார்த்துப் பாரு நீங்கக் கவலைப்படாதீங்க. நானும் இனி யாராவது வந்தா அவங்களை அடிச்சு மண்டைய ஒடச்சிடுவேன். இதோ என்கிட்ட தான் வாக்கிங் ஸ்டிக் இருக்கே “என்று வைதேகி சொல்ல, “ஆமா ஆமா…உங்க மருமக ரொம்ப தைரியசாலி தான். அவங்க தைரியத்தை பத்தி எனக்கு நல்லா தெரியும்” என்ற ரணதீரன் சிரித்துக் கொண்டே அவன் ஜீப்பை கம்பெனியை நோக்கி விரட்டினான்.

இவர்கள் இருவரும் ஜோடியாகச் சென்றதை பார்த்து, “மாப்புள நீங்கச் சொன்னது உண்மைதான் போல! பேச்சு வாக்குல ராணா வைதேகியை என்னோட மருமகன்னு சொன்னதும் வைதேகி மறுப்பு பேசாமல் சிரிச்சுக்கிறாளே! அப்போ உண்மையாவே இவங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்கு தான் போல!” என்று வேதநாயகி சொன்னதும்,
“ஆமா அத்த…அந்தப் புரிதல் சீக்கிரமாக் காதலாக மாறும் போது நம்ம அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்”என்ற மாறனின் வார்த்தை நிஜமாக நிறைவேற வேண்டும் என்று வேதநாயகி மனதில் இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.

வைதேகியின் ஆசைப்படியே அவளை அழைத்துக்கொண்டு போன முறை வந்தது போல இல்லாமல்,ரணதீரனும் வைதேகியும் சிரித்து பேசியபடி கம்பெனிக்குள் நுழைந்தவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் அங்கே பணிபுரியும் பணியாளர்கள்.

ரணதீரனின் அலுவலக அறையில் அமர்ந்தபடி வைதேகி அவனிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தவள்,” நான் உங்கள ஒன்னு கேட்பேன், கோபப்படாம என்கிட்ட உண்மையைச் சொல்லுவிங்களா? ” என்று வைதேகி கேட்டதும், அவளை ஒரு கணம் உறுத்து பார்த்தவன், “என்ன!? போன முறை நீ வந்திருக்கும்போது இங்க ஒரு பொம்மைக் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துச்சே அதைப் பத்தி கேட்கக் போறியா? ” என்று கேட்ட ரணதீரனின் கண்கள் இரண்டும் செந்நிறமாக மாறியதை பார்த்து வைதேகிக்கு உள்ளுக்குள் நடுக்கம் எழுந்தது என்னமோ உண்மைதான்.

“அது… அது வந்து தீரா…” என்று வைதேகி தன் வார்த்தையை மென்னு விழுங்குவதை பார்த்தவன், “சரி… என்கூட எழுந்து வா” என்றப்படி வைதேகியை கைத்தாங்கலாகத் தன் கம்பெனியின் முதல் தளத்தில் உள்ள அப்புறப் படுத்தப்பட வேண்டிய பொம்மைகள் என்று எழுதி இருக்கும் அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் ரணதீரன்.

போன முறை வைதேகி வந்தபோது அவள் பார்த்த பொம்மை அங்கே இல்லாமல் போனதும், “தீரா…அந்தப் பொம்மை
எங்கே?” என்று வைதேகி ஆவலாக கேட்டாள்.

“அந்தக் கருப்பான பொம்மை இல்லைனா என்ன? அதான் வெள்ளையா கொலு பொம்மை மாதிரி நீ இருக்கியே போதாதா?” என்றவன் சட்டென்று வைதேகி இருக்கும் அறையிலிருந்து வெளியேறி கதவைப் பூட்டினான்.

“தீரா என்ன பண்றீங்க?” என்று பயத்துடன் வைதேகி கேக்க,”இனி நீ இந்த ரூம்ல தான் இருக்கனும்.” என்று ஜன்னல் அருகே நின்றுக்கொண்டு ரணதீரன் கோவத்துடன் சொன்னதும் வைதேகியின் கால்கள் பயத்தில் ஆட்டம் கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!