Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 4.1

“அடியேய்.. சாப்பிடறத கொஞ்சம் பார்த்து சாப்பிட மாட்டியா..? ஏழு கழுத வயசு ஆகுது. ஆனா கொஞ்சம் கூட கூறு இல்ல..” என்ற திட்டியபடி தண்ணீரை கொண்டு வந்து தந்த தமிழை பார்த்து,

“ம்மா.. நீ சமச்சத பார்த்தா.. எப்படிம்மா சாப்பிட முடியும்..? 

கண்ண மூடிட்டு உள்ள தள்ளினாலே பாதிக்கும் மேல உள்ள போக மாட்டிங்குது. 

இதுல அதை பார்த்துட்டாலும்..” என நக்கலடிக்க,



Advertisement

கடுப்பான செந்தமிழ், “இந்த வாய் இருக்கே.. இது தாண்டி உனக்கு பெரிய குறை.

நாளைக்கு நீ கல்யாணம் பண்ணி போற வீட்டுல எவன்கிட்ட வாயிலயே  இப்படி பேசறதுக்கு வாங்க போறையோ..?” என தலையில் அடித்துக்கொண்டு சொல்ல,

Advertisement

“கல்யாணத்த பண்ணிட்டு போற வீட்டுல வேற யாரு.. என் புருஷன்கிட்ட மட்டும் தான் வாயில வாங்க முடியும் ம்மா. 

Advertisement

அங்கிருக்கற மத்தவங்ககிட்ட அப்படி வாங்கினா அது ரொம்ப தப்பும்மா..” என ஒற்றை கண்சிமிட்டி சொன்னவளின் செய்கையில் அவள் சொன்னதன் அர்த்தம் புரிய,

“கனி, என்ன பேச்சு இது..? இப்படியெல்லாம் நீ பேசினா உன்ன தப்பான பொண்ணுன்னு சொல்லிடுவாங்கடீ..” என ஆதங்கத்தோடு சொன்ன செந்தமிழை எழுந்து வந்து பின்னிருந்து அணைத்து தோளில் தன் தாடையை பதித்த கனிகா,

“அம்மா.. இப்போ இருக்கற சமுதாயத்துல பொண்ணுங்க பேசினா வாயாடி.. பேசாட்டி ஊமச்சி..

Advertisement

வெளிப்படையா பேசினா வெவகாரமானவ.. ஒளிச்சுமறச்சு பேசினா வில்லங்கமானவ..

இப்படி எந்த மாதிரி இருந்தாலும்  எதாவது ஒரு பேர் வரத்தான் செய்யும்.

சோ.. அதெல்லாம் நம்ம மனசுக்குள்ள ஏத்திக்காம.. நாம நம்மளா வாழனும்.

அந்த லைஃப் தான் நிம்மதியா இருக்கும். 

அதவிட்டுட்டு இதை பேசினா தப்பாகிடுமோ..? அதை பேசினா நம்மள தப்பா நினைப்பாங்களோ..? ன்னு யோசனையோடவே பேசினா கடைசில நாம எத பேச போனோமின்னு மறந்திடும்..” என நீண்ட விளக்கத்தை தந்தவளிடம்,

“என்னமோ போ.. நாங்க அந்த காலத்துல ஒரு வார்த்தை பேச ஓராயிரம் தடவ யோசிக்கனும்.

சொந்த அப்பா முன்னாடி கூட நேருக்கு நேரா நின்னு பேச முடியாது. 

எதுவானாலும்.. எவ்வளவு அவசரமா சொல்ல வேண்டிய விசயமா இருந்தாலும்.. அது அம்மா மூலமா தான் சொல்லணும். 

இப்போ இருக்கற புள்ளைங்க எல்லாரும் அது மாதிரியா இருக்கீங்க..? 

உங்க கருத்தை எல்லா இடத்துலையும் தைரியமா சொல்றீங்க.. கொஞ்சம் கூட பயமோ தயக்கமோ கிடையாது..” என்றதும்,

“உண்மை தான் அம்மா. ஆனா நாங்க இப்படி இருக்க காரணம் நீங்க தான். அதாவது உங்கள மாதிரியான பெத்தவங்க தான்.

அவங்க அனுபவித்த கஷ்டங்களை தன்னோட குழந்தை அனுபவிக்க கூடாது.. 

எதுவானாலும் உரிமையா எங்ககிட்ட நேரடியா சொல்லுங்கன்னு நீங்க உங்க வாழ்க்கை அனுபவம் கத்து கொடுத்த பாடத்தோட விளைவு தான் எங்களோட இந்த சுதந்திரம்..” என்ற கனியின் வார்த்தை முடியும் நேரம், 

பலமாய் கை தட்டும் ஓசை வாசல் புறமிருந்து கேட்க, சத்தம் வந்த திசையை பார்த்த கனிகா, “டாடி..!”  என ஓடி சென்று கட்டிக்கொண்டாள்.

தன்னிடம் இன்னும் குழந்தையாய் துள்ளிக்கொண்டு ஓடி வந்து அணைக்கும் அன்பு மகளின் தலையை ஆதுரமாய் வருடிய பிரகாஷ், 

தன் மனைவியை பார்த்து, “பார்த்தியா தமிழ்.. என்னோட பொண்ணை. எவ்வளவு தெளிவா சரியா சொன்னா பாரு..” என பெருமையாய் சொல்லிட,

“க்கும்.. நீங்க தான் மெச்சிக்கணும் உங்க பொண்ண.

அவ எப்ப பாரு செஞ்சு வைக்கற வேலைக்கு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு போய் வர்றதே வேலையா இருக்கு உங்களுக்கு. 

இதுல அவ பேச்சை கேட்டு அதுல பெருமை வேற..” என தனது தோளில் தாடையை இடித்தபடி சொல்லிய செந்தமிழிடம்,

“நிச்சயமா எனக்கு பெருமை தான் தமிழ்.

அவ என்ன மத்த பசங்க மாதிரி எதாவது செஞ்சிட்டா இருக்கா..?

ஒரு உயிரை காப்பாத்த வேண்டியோ இல்ல வேற ஏதாவது எமர்ஜென்சிக்காகவோ அவ அவசரமா போகும் போது ட்ராப்பிக் ரூல்ஸ் எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு..?

அதனால சில நேரம் ட்ராபிக் போலீஸ்ல மாட்டிக்கறா. அதுக்காக பைன் கட்ட கோர்ட்டுக்கோ போலீஸ் ஸ்டோஷனோ போறேன். 

அவ செய்யறது சேவைடீ. அதை நம்ம தான் புருஞ்சு நடந்துக்கணும். 

அவளோட அம்மா நீயே இப்படி புரியாம அவள பேசினா எப்படி..?” என கேட்ட பிரகாஷிடம்,

“எனக்கு நல்லா புரியுதுங்க. ஆனா நாளைக்கு கல்யாணம் ஆகி அவ வாழப்போற வீட்டுலையும் இவ செய்யற இந்த மாதிரியான வேலைய பொறுத்துப்பாங்களா..? 

இப்போ நீங்க அவளுக்காக சப்போர்ட் பண்ணற மாதிரி அங்கே யாராவது செய்வாங்களா..?

இவ எதாவது ஏடாகூடமா பேசினாலோ, செஞ்சாலோ பொறுத்து போற மாதிரி மனுஷங்களா இவளுக்கு வரன் அமஞ்சா பரவாயில்ல.

அப்படி இல்லாம இவளோட செயல்களுக்கு முட்டுக்கட்டை போடற குடும்பமா அவங்க இருந்தா யாருக்குங்க கஷ்டம். 

கனியால அவளோட இந்த குணத்தை மாத்திக்க முடியாது. ஏன்னா அது நம்மளால காப்பாத்த முடியாம போனவனோட வலியால உண்டானது.  

அப்போ அதை புருஞ்சுக்கறவங்க கிடைக்கலன்னா நம்ம பொண்ணோட வாழ்க்கை தானே பாதிக்கும்..” என சராசரி தாயாய் தனது மனக்குறையை சொன்ன போதும், 

தாங்கள் இழந்த தன் மூத்த மகனின் இழப்பை எண்ணி கண்கள் கலங்கிட,

“ம்மா.. என்னம்மா நீ. இப்ப நீ அழுதா மட்டும் அண்ணா திரும்ப நம்ம கிட்ட வந்திடுவாங்களா..? 

அவர மாதிரி அவசரத்துக்கு ரத்தம் கிடைக்காம நம்ம இழந்து தவிக்கற மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு.. எனக்கு சொல்லி சொல்லி வளர்த்துட்டு, இப்போ நீங்க எதை எதையோ யோசிச்சு கலங்கினா சரியா..?

உனக்கு ஒண்ணு தெரியுமா ம்மா.. நீ நினைக்கற மாதிரி நா செய்யற சேட்டையெல்லாம் பொறுத்துட்டு.. என்னோட சேவை மனப்பான்மைக்கு முழுசா ஒத்துழைப்பு கொடுத்து உங்கள மாதிரியே பார்த்துக்க ஒரு ஆள் இருக்கு..” என கனிகா கண்கள் மின்ன சொன்னதும்,

மகளின் வாழ்க்கையை எண்ணி குழம்பிய மனதிற்கு பெரும் ஆறுதல் கிடைத்த நிம்மதியோடு,

“யார சொல்ற கனி..?” எனக்கேட்க,

“நம்ம சந்திரா அத்தம்மா தான்..” என புன்னகையோடு கனிகா சொன்னதும்.

“என்னடா சொல்றே..? சந்திராவ நீ பார்த்தியா..?” என பிரகாஷூம் ஆர்வத்தோடு கேட்க,

“ப்பா நா அத்தம்மாவ பார்த்தேன். பட் பார்க்கல…” என்று சொல்ல,

“என்னடீ குழப்பற.. புரியற மாதிரி பேசித்தொல..” என தமிழ் கடிந்து கொள்ள,

“அதாவது நா அவங்கள போய் பார்த்தேன். அவங்க யாருன்னு எனக்கு பார்த்ததுமே அடையாளம் தெரிஞ்சிடுச்சு.

ஆனா அவங்க என்னை பார்த்தாலும் இப்போ இருக்கற நா யாருன்னு தெரியாதுங்கறதால பார்க்கல…” என சொன்னவளிடம்,

“நீ எங்கே போய் சந்திராவ பார்த்தே..? எப்போ பார்த்தே..?

எதுக்காக அவங்கள பார்க்க போனே..?”  என தொடர்ந்து கேள்வியை அடுக்கிய செந்தமிழ், கனிகா சொன்ன பதிலில் அதிர்ந்து நின்றார் எனில்.. பிரகாஷ் யோசனையோடு நின்றார்.

தாயின் கேள்விகள் அனைத்தையும் புறம் தள்ளியவள் அவரின் இறுதி கேள்விக்கு மட்டும்,

“அதுவா ம்மா.. அவங்க பையனை கரெக்ட் பண்ண போனப்போ பார்த்தேன்..” என சொன்னால் அதிராமல் என்ன செய்வார்..?

“என்ன..! என்னடீ சொல்ற..? ஏங்க, என்னங்க இவ இப்படி சொல்றா..?.

எல்லாமே நீங்க கொடுக்கற செல்லம் தான். இப்படியெல்லாம் அவள பேசச்சொல்லுது..” என விடாமல் பொறிந்த செந்தமிழை கை காட்டி தடுத்த பிரகாஷ்,

“அம்மாடி கனி.. என்ன சொல்ற நீ அவரோட பையனுக்காகவா..? ஏன்..?” என மகளின் முகத்தை கூர்ந்த படி கேட்க,

“ஆமா ப்பா. அவரோட பையனுக்காக தான் அவங்கள பார்க்க போனேன்.

அங்கே போனதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியும் அவங்க நம்ம சந்திரா அத்தம்மான்னு..

நா லவ் பண்ணறது அவரோட பையன் வெற்றிவேல் செழியன்னு தெரிஞ்சதும் என்னோட வேலை ஈசியா முடியுமின்னு ஜாலியா வந்திட்டேன்..” என்றவள், 

வெற்றிவேல் செழியனை நேரில் முதல் முறை சந்தித்த தருணத்தை சொல்ல துவங்கினாள் தனது பெற்றோரிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!