Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 9 1

꧁☆☬  லயம் – 9 ☬☆꧂

அந்த வெள்ளி கிழமையும் அழகாய் புலர்ந்து விட்டது. இறுதி நாளை நோக்கி செல்வதால் பெண்கள் அனைவரும் செட் சாரி பட்டு புடவை எடுத்ததாய் சொல்லி, புது பட்டும், அதற்கேற்ப நகையும், அலங்காரமும் செய்து கொண்டு சத்யா பெற்றோரை ஏமாற்றி விட்டு கல்லூரிக்கு வந்தாள். சுகுமார் நேரே ரிஜிஸ்டர் ஆபீஸ் வருவதாகவும், சத்யாவை கூட்டி கொண்டு வருமாறும் சொல்லியதாய் சத்யா இளாவிடம் சொல்ல, அதையும் நம்பி அனைவர் முன்பும் அவளை வண்டியில் ஏற்றி கொண்டு இளா தான் சென்றான்.



Advertisement

” சீக்கிரம் போ., யாருக்கும் தெரியாம போகணும்., பேசிட்டு நிற்காதே ” சதயாவின்  பேச்சை கேட்டு  அவனை கல்லூரி வாசலில் பார்த்ததும் ராஜா பேச முற்பட, அவனையும் தட்டி கழித்து விருட்டென பறந்து விட்டான்.

Advertisement

ராஜாவிற்கோ அவன் செயலில் கோபம் கொந்தளிக்க கல்லூரி கூட செல்லாமல் வெளியே சென்று விட்டான். அவனுக்கு இன்டர்ன்ஷிப் வெளியூரில் நடப்பதால் இரு மாதங்களுக்கும் மேலாக அவன் இங்கில்லை. அவனும் இல்லாது போக விதியின் விளையாட்டில் இளா வசமாக சிக்கி கொண்டான். அலைகளை சமாளிக்கும் மீன்களுக்கு வலைகளை சமாளிக்க தெரியாதே. தானே சென்று மாட்டி கொண்டு அவஸ்தை படும். உயிரை விடும். அப்படித்தான் நட்பு என்னும் பேரலையில் நீந்தி கொண்டிருந்தவன் சுகுமாரன் சத்யா காதல் வலையில் சிக்கி  கொண்டு தன்னையே காவு கொடுத்து விட்டான்.

Advertisement

மணப்பெண் கோலத்தில் சத்யாவோடு அங்கும் இளா மட்டும் தான் நின்றான். சுகுமார் இன்னும் வரவில்லை. போனும் எடுக்கவே இல்லை. அவன் வருவதற்குள் மாலை, தாலி வாங்கி வர சொல்லி சத்யா வெளியே அனுப்ப, அவனும் நம்பி சென்று விட்டான்.

Advertisement

இளா சென்ற பத்து நிமிடத்தில் சுகுமார் அரக்க பறக்க ஓடி வந்தான். மரத்திற்கு பின்னே சென்று மறைவாய் நின்று கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தான். ” ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கிறேன் கேக்குறியா., சத்யா சொன்னா கேளு, இப்போ பொய் சொல்லி உடனே கல்யாணம் பண்ணனும்னு என்ன அவசியம், டிகிரி வாங்கிட்டு வேலை தேடுவோம். கொஞ்ச வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம். ப்ளீஸ் நான் சொல்றத புரிஞ்சுக்கோ. ” அவன் கதறுவதை அவள் காது கொடுத்து கேட்கவே இல்லை.

இவள் கூறியதற்கு மறுத்து தான், ஒரு வாரமாய் அவளை தவிர்க்கும் பொருட்டு அவன் கல்லூரிக்கும் வரவில்லை. போனையும் ஆப் செய்து விட்டான். அவளோ அதையும் திரித்து குழந்தை காரணமாக தான் பயந்து அவன் வீட்டில் இருப்பதாய் சொல்லி விட்டாள். லேண்ட் லைன் நம்பரில் கால் செய்து ” இப்போ நீ வந்தே ஆகனும், நான் எல்லாம் ரெடி பண்ணிட்டேன், ஒழுங்கா வர்றியா இல்லையா ” என மிரட்டியதால் தான் வந்து அவன் ஓடி வந்தது.

” எனக்கு இன்னைக்கு கல்யாணம் நடந்தே ஆகனும் ” ஒற்றை வார்த்தையை திரும்ப திரும்ப அழுத்தி சொல்லி கொண்டே இருக்க, இவனுக்கோ பொறுமை பறந்து விட்டது. அலுத்து போய் ” ஏய், இங்கே பாரு, கல்யாணம் பண்ணிட்டு போனா எங்க வீட்டுல உள்ளே கூட விட மாட்டாங்க. சொத்து பத்து எதுவும் இல்லைனு மொத்தமா பத்தி விட்ருவாங்க. அவங்கள பத்தி உனக்கு தெரியாது, என்னால் உன்னை இப்போ கல்யாணம் பண்ண முடியாது. ” உறுதியாய் சொன்னான்.

சுகுமாரிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்கவே அவன் பெரும் பணக்காரன் என்று எண்ணியே காதலுக்கு இவள் சரியென்றது. என்று இவனிடம் பணமில்லை, அனைத்தும் இளா தான் கொடுக்கிறான் என்று தெரிந்ததோ அன்றே முடிவெடுத்து விட்டாள் இளாவினை தான் திருமணம் செய்வதென்று.

பொய்யாய் கருவினை சுமக்கிறேன் என்று சொல்லி, அனைவர் முன்பும் இளாவினை நம்ப வைத்து, அவனை கத்தி முனையில் நிற்க வைத்து தாலி கட்டி கொள்ள தான் இந்த சுயநலபிசாசு காய் நகர்த்தியது. சுகுமார் ஏமாற்றி விட்டான் நீ தான் வாழ்வு கொடுக்கணும் என்றோ, இல்லை எதையும் சொல்லி அவனை நிர்பந்தப்படுத்தி கட்டாய கல்யாணம் செய்வது தான் அவள் நோக்கம்.

இளாவின் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் இத்தனை நாடகமும்.  இதை அறியாது சுகுமார் கதறி கொண்டிருக்க ” வாட், கல்யாணம் பண்ண மாட்டியா, எங்கே வந்து நீ சொல்லிட்டு இருக்குற, என்னை ஏமாத்த பார்க்குறியா, நீ எனக்கு வேண்டாம்டா…, போ! ” அவன் சட்டையை பிடித்து தள்ளி விட்டு அழுது கொண்டே, காதல் தோல்வியில் ஏமாற்றத்தில், வெளியே ஓடி விட்டதாக அவனையும் நம்ப வைத்தாள்.

அவள் வெளியே சென்றவுடன் சுகுமாரனும் விட்டது தொல்லை என வீட்டிற்கு கிளம்பி விட்டான். அவன் சென்ற பின்னே மீண்டும் உள் வந்து நின்றவள் அங்கிருந்தபடியே இளாவிற்கு அழுது கொண்டே அழைத்தாள்.

” மா..மாறா சீக்கிரம் வா, என்னை கைவிட்டுடாதே, உன்னை தான் நம்பி இருக்கேன், நீ வரலைன்னா நா…நான் செத்துருவேன்  ” அருகே நிற்பவர் அனைவர் காதிலும் விழுகுமாறு கத்தி சொல்லி, அவர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பி விட்டாள்.

தங்களோடு பயிலும் நண்பர்கள் சிலரையும் இளா அழைத்திருக்க அப்போது தான் அவர்களும் உள்ளே வந்திருந்தனர். “மாறா எங்கே ?” என்ற அவர்களின் கேள்விக்கு ” இப்போ வந்திடுவார். டேய் எங்க கல்யாணம் இன்னைக்கு கண்டிப்பா நடக்கனும், இல்லின்னா எனக்கு சாகுறத தவிர வேற வழியே இல்லை. நீங்க விட்டு போயிராதிங்க., ” என்று அவர்களிடமும் வாக்கு வாங்கி விட்டாள்.

மாறா என்ற பெயரை கேட்டவுடன் அங்கு நின்றிருந்த பெண்மணி உன்னிப்பாய் அவளை கவனிக்க ஆரம்பித்தார்.

” அவன் எத்தனை பேருக்கு ஹெல்ப் பண்ணுவான். அவனுக்கு நாங்க பண்ண மாட்டோமா? இன்னைக்கு உங்க மேரேஜ் கன்பார்ம் ” சாத்தானுக்கு அவர்களும் தூபம் போட்டு கொண்டிருந்தனர்.

வீட்டுக்கு தெரியாமல் வந்து மேரேஜ் செய்யும் ஜோடி என அங்குள்ளோருக்கு வெட்ட வெளிச்சம் ஆக முனுமுனுவென தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

” இவங்கள பெத்தவங்க என்ன பாவம் பண்ணாங்களோ? அவங்களுக்கு தெரியாம ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்குதுங்க ” ஒருவர் அங்கலாய்க்க,

” வயித்துல வந்திருக்கும். அதான் அவன் வரலன்னு அழுதுட்டு நிக்குறா போல “

“இருக்கும், இருக்கும், கை விட்டுறாதே, செத்துருவேன்ன்னு சொல்றாளே. “

“இப்படி புள்ளைய பெத்ததுக்கு நாண்டுகிட்டு சாகலாம். “

” ஆத்தாக்காரி பெத்து போட்டுட்டு ஊரை சுத்திட்டு திரியிறது, இதுங்க தெனவெடுத்து அலையுதுங்க ” சுற்றி இருந்தோர் அனைவரிடமும் சத்யா, மாறா தான் பேசு பொருளாய் இருந்தனர்.

எழுத்தில் வடிக்க முடியா வார்த்தைகளும் காதில் விழ தமயந்திக்கு எப்போதடா அங்கிருந்து கிளம்புவோம் என்று இருந்தது.

டிரஸ்ட் ஒன்றின் வேலைக்காக, தன் சக நட்புகளோடு  ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திருக்க காத்திருக்கும் பொழுதில் சுற்றி நடப்பவை கண்ணில் பட நெஞ்சம் கொதித்தது. பெற்றவர்களை ஏமாற்றி அப்படியென்ன சுயநல முடிவு, இதனால் அந்த குடும்பம் எத்தகைய பாடுபடும்? அடித்து சொல்ல தன் பிள்ளையா? அவரின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.

மெனோபாஸ் பீரியட்சின் ஆரம்ப நிலையில் உள்ளதால் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு கோபம் அடிக்கடி வர, டென்ஷனை குறைக்க யோகா செய்து வருகிறார். திருமணம் முடித்த ஒரு மாதத்தில் மகள் ரெட்டை கருவை சுமக்க முன்னிலும் கவனம் அவள் புறம் திரும்பி விட்டது. இவர் உடல் நிலையை கவனிக்க கூட நேரமின்றி சுற்றி கொண்டிருக்கிறார்.

இப்போதோ பேரன்கள் இரவு தூக்கத்தை மொத்தமாய் களவாடி கொள்ள எந்நேரமும் வேலை செய்து ஓய்ந்து அலுத்து போய் உள்ளார். தூரத்து உறவுமுறை அத்தை ஒருவரை மகளுக்கு துணைக்கு வைத்து விட்டு தான் அர்ஜென்ட் ஒர்க் என்று அவ்வப்போது வெளி வருவதும். வீட்டில் இருந்தே தன் பணியை இவர் செய்ய முழு நேரமும் மூச்சு விட மட்டும் தான் முடிக்கிறது. ஆற அமர மகனிடம் பேச கூட நேரம் கிடைப்பதில்லை. இதில் இங்கே வந்தால் இந்த தொல்லையா என வெறுப்போடு பார்த்திருந்தார்.

“மாறா வந்துட்டான்” என்ற நண்பனின் கத்தலில் அனைவரும் அவனையே திரும்பி பார்க்க ராயல் என்பீல்டு பைக்கிலிருந்து கையில் மாலையோடு ஜம்மென்று மாறா இறங்கினான்.

” பையனும் அம்சமா தான் இருக்கான்…”  என்ற பேச்சில் அவனை கடுப்பாய் பார்க்க திரும்ப அவரின் சீமந்த புத்திரன் தான் வந்து கொண்டிருந்தான். எரிமலை குழம்புகள் அவர் மேல் மொத்தமாய் கொட்டியது போல துடித்து எழுந்தார். கால்கள் தள்ளாட, அனிச்சையாய் கரங்கள் நெஞ்சில் கை வைத்தது. எதுவும் உதவி செய்ய வந்திருப்பானோ என யோசனையை மனம் தத்தேடுக்க கொஞ்சம் இளகினார்.

அவனை கண்டதும் சத்யா ஓடி சென்று கைகளை பிடித்து கொண்டு தோளில் அழுது கொண்டே சாய, அங்குள்ளோர் அனைவருக்கும் சொல்லாமலே புரிந்தது அவன் தான் அவளவன் என்று.

புத்தியில்லா மாறாவிற்கு மட்டும் அவள் பயத்தில் அஞ்சி வந்து தஞ்சமடைவதாய் தோன்ற, அவள் கரத்தை பிடித்தவன், தோளில் இருந்து அவளை விலக்கி, ” ரிலாக்ஸ், ரொம்ப பயந்துட்டியா, அவன் இன்னும் வரலையா? ” மீண்டும் சுகுமாரனுக்கு அழைப்பு விடுக்க சுவிட்ச் ஆப் என்ற பதில் வந்தது. சத்யாவிற்கு பயந்து அவன் அணைத்து வைத்திருக்க, இவன் புருவங்களோ சுருங்கியது.

“ஏன் ஆப் பண்ணிருக்கான், உன்ட எப்போ பேசுனான்? ” என்றவனை பார்த்தவளோ

” நம்ம கல்யாணத்துக்கு அவனுக்காக ஏன் வெயிட் பண்ணனும்? நீங்க வாங்க ” என உரிமையாய் அழைக்க, அவளின் பேச்சில் ஓரடி பின்னே நகர்ந்து நின்றான் அதிர்ச்சியில்.

“மாறா ! மாப்பிள்ளையே லேட்டா வரலாமா ? சீக்கிரம் வாடா., ” நண்பர்கள் குழாம்  வேறு அழைக்க அவளை அதிர்ச்சியாய் பார்த்தான்.

” ஏய் சத்யா !, அவங்க என்ன என்னை மாப்பிள்ளைனு சொல்ராங்க , நீ நம்ம கல்யாணம்னு சொல்ற., உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.”

” நம்ம லவ் பண்ணோம்., இப்போ கல்யாணம் பண்ண வந்திருக்கோம்  ., நீ தான் என் லவர், இதுல என்ன பைத்தியக்காரத்தனம் ? ” புரியாமல் கேள்வி கேட்பதை போல் சத்யா பேச .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!