Skip to content
Post Views: 4,561
நிறம் பாராத காதல்
அத்தியாயம்24(1)
Advertisement
ரணதீரனின் வீட்டு வாசலில் நின்றபடி வைதேகி அவனை அறைந்ததற்கான காரணம் என்னவென்று யாருக்கும் புரியாமல் இருக்க, “என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?” என்று கோபமாகக் கேட்டாள் வைதேகி.
“இப்போ ஏன் நீ இங்க வந்த?” என்று ரணதீரன் கேட்க,” நான் ஏன் வந்தேன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று அவன் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டாள் வைதேகி.
Advertisement
Advertisement
“எனக்கு எதுவும் தெரியாது, தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை” என்றான் ரணதீரன்.
“ஓ! அந்த அளவுக்கு நான் உங்களுக்கு வேண்டாதவளா ஆயிட்டேனா தீரா…நல்லது, ஆனா நீங்க எப்படி விக்ரமுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தாதான் பொருத்தமா இருக்கும்னு சொன்னிங்க?”என்று கேட்டாள்.
Advertisement
“ஏய்…நீ என்ன என் பையனை வேணாம்னு சொல்லிட்டு இவன்கிட்ட வந்து பேசிகிட்டு இருக்க” என்றப்படி ஆண்டாள் இவர்களை நெருங்கி வந்தார்.
“நீங்கப் பெரிய மனுஷி தானே! ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கும்போது நடுவுல பேசக்கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா? கொஞ்சம் ஓரமா நில்லுங்க”என்ற வைதேகியை பார்த்துக் கீதா சூழ்நிலையை மறந்து சத்தமாக
சிரித்தார்.
“வைதேகி… என்ன ஆச்சு உனக்கு! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைக் கொண்டு பெரியவுங்களை அழைச்சுக்கிட்டு உன்னைப் பொண்ணு கேட்க வந்தால்! நீ எங்களை இப்படிதான் அவமானப்படுத்துவியா?” என்றப்படி விக்ரம் வைதேகியை நெருங்கி வந்தான்.
“நீங்க இன்னைக்கு என் தாத்தா பாட்டியை மட்டுமா அழைச்சிட்டு வந்தீங்க! போன முறை அந்த ரங்காராவையும் தானே அழைச்சிட்டு வந்தீங்க! உங்க கிட்ட பேச எனக்குப் பிடிக்கல.
தயவு செய்து நீங்க இங்க இருந்து கிளம்புங்க” என்று வைதேகி சொன்னதும்,”அதான் வைதேகியே சொல்லிட்டாளே கிளம்புங்க” என்று வாசலைக் காட்டினான் மாறன்.
“தீரா…நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க! எனக்கும் விக்ரமுக்கும் தான் பொருத்தம்ன்னு நீங்க எப்படி சொல்லலாம்?” என்று மீண்டும் வைதேகி கோபத்துடன் கேட்டாள்.
“ஏய்… ராணா சொன்ன மாதிரி என் பையனுக்கும் உனக்கும் தான் பொருத்தமாக இருக்கும். இங்க பாரு என் பையனின் நிறமும் அழகும் தான் உன்னோடு ஒத்துப் போகுது”
என்று தன் மகனைப் பெருமையாக
பேசினார் ஆண்டாள்.
“ஓ! நிறமும் அழகும் ஒத்துப்போனால் போதுமா! மனசு ஒத்து
போக வேண்டாமா!?” என்ற வைதேகியின் விழிகள் தன் எதிரே நின்றிருந்த ரணதீரன் மீது கோபமாகப் பதிந்தது.
“சித்ரா…உனக்கு விக்ரமை பிடிக்கலையா?” என்று வைதேகியின் தாத்தா கேட்டதும்,
“நான் தான் சொன்னேனே தாத்தா, எனக்கு வேற ஒருவரை பிடித்து இருக்கு”என்றாள் வைதேகி.
“வேற யார பிடிச்சிருக்குன்னு சொல்லு? நான் அவங்களையே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று வைதேகியின் பாட்டி கேட்டார்.
“அதுக்கு அவசியம் இல்லை பாட்டி. எனக்குப் பிடித்தவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால என் வாழ்க்கையில் இனி எனக்குக் கல்யாணமே தேவையில்லை” என்ற வைதேகியின் வார்த்தையைக் கேட்டு ரணதீரனை தொடர்ந்து அங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“இப்போ ஏன் நீ பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க! அதான் பெரியவுங்க உன் அழகுக்கும் நிறத்துக்கும் ஏற்ற மாப்பிள்ளையை அழைச்சிட்டு வந்து இருக்காங்களே! அவனையே கல்யாணம் பண்ணிக்கோ” என்று ரணதீரன் பேசி முடிப்பதற்குள் அவன் சட்டை காலரை வைதேகி இறுக்கிப்பிடித்தவளின் செயலைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
“உங்களுக்கு அறிவு இருக்கா தீரா!? உங்களைக் காதலிக்கிற நான்! எப்படி உங்க தம்பியைக் கல்யாணம் பண்ணிபேன்னு யோசிக்க மாட்டீங்களா?” என்று வைதேகி கேட்க, அப்பொழுதுதான் வைதேகியின் மனதில் இருப்பது ரணதீரன் தான் என்று அனைவரும் உணர்ந்தார்கள்.
அனைவரின் முன்னிலையிலும் வைதேகி தன் காதலை வெளிப்படுத்திய தருணம் வேதநாயகியும் கீதாவும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்திருக்க,”என்னது! போயும் போயும் இந்தக் கருப்பனை நீ காதலிக்கிறாயா?” என்ற ஆண்டாளின் கேள்வியில் விக்ரமனின் இதழ் ஓரத்தில் கிண்டலான சிரிப்பு தோன்றியது.
“இங்க பாருங்க! உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. இனி ஒரு முறை என் தீராவை பற்றியோ, அவருடைய நிறத்தைப் பற்றியோ கேலி பண்ற மாதிரி உங்க வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்தா கூட உங்களுக்கு மரியாதை கெட்டுடும்”
என்ற வைதேகியின் வார்த்தையில் வேதநாயகியின் கண்கள் ஈரமானது.
“ஏய்… நான் உண்மையைத் தானே சொன்னேன். என் பையனுடைய அழகுக்கும் நிறத்துக்கும் முன்னாடி ராணா உனக்கு அப்படி என்ன பெரிய அழகானாகத் தெரிகிறான்?” என்ற ஆண்டாளின் பேச்சில் தலைகனம் மட்டுமே இருந்தது.
ஆண்டாளின் குத்தல் பேச்சைத் தாங்க முடியாமல்,”இங்க பாருங்க சித்தி! இன்னொரு முறை என் தம்பியைப் பத்தி ஏதாவது பேசினீங்க அப்புறம் நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன்” என்று சண்டைக்கு வந்தாள் மாயா.
“அண்ணி… நீங்க இருங்க, இவங்ககிட்ட நான் பேசிக்கிறேன்” என்ற வைதேகி ஆண்டாளை பார்த்து,”உங்களுக்கு உங்க பையன் அழகுன்னா அத உங்களோட வச்சுக்கோங்க. அதுக்காகத் தீராவை பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. தயவு செய்து முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க” என்றாள்.
“வைதேகி என்ன ஆச்சு உனக்கு? இங்க பாரு! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”என்ற விக்ரமின் கண்கள் ரணதீரன் மீது கோவமாகப் படிந்தது.
“ப்ச்…நீங்க ஆசைப்பட்டா போதுமா விக்ரம். நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டது ரணதீரனை தான். அதனால நீங்க உங்க நிறத்துக்கும் அழகுக்கும் வேற ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க” என்ற வைதேகியின் கண்கள் ரணதீரனை தான் கோபத்துடன் உள்வாங்கி இருந்தது.
“டேய்… இன்னும் எதுக்குடா நம்ம இங்க நிக்கணும். எனக்கென்னமோ இவ பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்துப் பார்த்து, இவளே பைத்தியமா ஆகிட்டான்னு தோணுது. அதனால தான் இவ இந்தக் கருப்பனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறாள். இவ எப்படியோ ஒளிஞ்சி போகட்டும்.நீ வா உன் அழகுக்கும் நிறத்துக்கும் ஏற்றக் கோடீஸ்வர பொண்ணை,நான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்ற ஆண்டாள் தன் மகன் விக்ரமை கையோடு இழுத்துச் சென்றார்.
“போங்க…அப்படியே போய் நல்ல வெள்ளைக்காரியா பார்த்து உங்க பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க” என்ற கீதா, “ஏன் எல்லோரும் வாசல்லயே நிக்கிறீங்க, உள்ள வாங்க. அடுத்த முகூர்த்தத்திலேயே ரணதீரனுக்கும் வைதேகிக்கும் கல்யாணத்தை பேசி முடித்திடலாம்” என்றார்.
“உங்க குடும்பத்துக்கு என் பேத்தியை மருமகளாக அனுப்பி வைக்க எங்களுக்கும் பரிபூரண சம்மதம்தான். சீக்கிரமா நல்ல நாள் பார்த்து இவங்க கல்யாணத்தை சீரும் சிறப்புமா நடத்திடலாம்” என்று வைதேகியின் தாத்தா எல்லையில்லா மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
“அம்மாடி வைதேகி…உண்மையாவே நீ ரணதீரனை விரும்புறியா?” என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தபடி வேதநாயகி கேட்க, “ஆமா அம்மா! நேத்து நைட்டே வைதேகி தன் காதலை ராணா கிட்ட சொல்லிட்டாள்” என்றாள் மாயா.
“ஐயோ! நேத்துன்னு பார்த்து நான் சீக்கிரம் தூங்கி இந்தச் சீனை மிஸ் பண்ணிட்டேனே!
வைதேகி… எனக்காக இன்னொரு முறை ப்ரொபோஸ் பண்ணுவியா?”என்று கீதா கேட்க,”அத்த கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா” என்று அந்த இடமே அதிரும் வண்ணமாகக் கத்தினான் ரணதீரன்.
“என்ன தம்பி! ஏன் இப்படி கோபப்படுற?” என்று மாயா கேட்டதும், “அக்கா… எனக்கு யாரையும் கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல. அதுவும் இந்த வைதேகியை எனக்கு…எனக்குப் பிடிக்கல” என்று முகத்தில் அறைந்ததைப் போலச் சொன்னவன், வேகமாகத் தன் பங்களாவிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
ரணதீரனின் செயலில் அனைவரின் முகமும் மாறிப்போக,”என்னம்மா! உன்னை அந்தப் பையனுக்குப் பிடிக்கலையா?” என்று வைதேகி தாத்தா கவலையாகக் கேட்டார்.
“அவருக்கு என்னைப் பிடிக்கும்.
ஆனால் அவரு அதை ஒத்துக்க மாட்டாரு. நான் கூடிய சீக்கிரம் அவரை ஒத்துக்க வைக்கிறேன். நீங்கக் கவலைப்படாதீங்க. இப்போ நீங்க கிளம்புங்க” என்று வைதேகி நம்பிக்கையாக சொன்னாள்.
” பாட்டி… அவங்களுக்குள்ள அவங்க பேசி முடிவு எடுக்கட்டும். வாங்க நம்ம கிளம்பலாம்” என்ற பவானி வைதேகியின் தாத்தா பாட்டியுடன் அங்கிருந்து
வெளியேறினார்.
“மாப்பிள்ளை…வைதேகி நம்ம வீட்டுக்கு மருமகளா வரச் சம்மதம் சொன்னதுக்கு பிறகும் எதுக்காக இந்த ராணா இப்படி பண்ணனும்?” என்று வேதநாயகி வேதனையோடு கேட்டார்.
“அத்தை…உங்க பையன் என்னைக் காதலிக்கிறாரு.அது எனக்கு நல்லாவே தெரியும்.அவருடைய பேச்சிலும் அரவணைப்பிலும் என்மீது அவருக்கு இருக்கிற காதலை உணர்ந்த பிறகு தான் நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா அவரிடம் சொன்னேன்” என்ற வைதேகியை அன்புடன் கட்டிக் கொண்டார் வேதநாயகி.
வைதேகியின் மாற்றத்தைக் கண்டு மாறன் மகிழ்ந்து இருக்க,”ஏன் டா மவனே!வைதேகியே அவளோட காதலை சொன்னபிறகும், ஏன் இந்த ரணதீரன் முறுக்கிட்டு போறான் ” என்ற கீதாவின் மனதில் தோன்றிய அதே கேள்வி தான் வேதநாயகியின் மனதிலும் எழுந்தது.
“அம்மா…தீராவைப் பற்றி இனி நீங்கக் கவலைப்படாதீங்க. அவரை நான் பார்த்துப்பேன்” என்ற வைதேகி,
ரணதீரன் இருக்கும் பங்களாவின் வாசல் கதவை வேகமாகத் தட்டினாள்.
“ஐயய்யோ…வைதேகி என்னமா பண்ற?”என்று மாறன் பதறியதும்,”அண்ணா…இவங்க எல்லாரையும் நீங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. இன்னைக்கு நான் தீரன் பங்ளாவை பார்க்கப் போறேன்” என்று வைதேகி சொல்ல, “ஆனா அவன் இந்தப் பங்களாக்குள்ள யாரையும் சேர்க்க மாட்டானே!” என்றாள் மாயா.
“அண்ணி…அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன்” என்ற வைதேகி மீண்டும் வேகமாகக் கதவைத் தட்டியதும், ரணதீரன் கோபமாக வாசல் கதவைத் திறந்தவன், “என்ன தாண்டி உனக்கு வேண்டும்?” என்று கரஜித்தான்.
“நீங்க தான் வேண்டும். கல்யாணம் பண்ணிக்கலாமா மச்சான்?” என்ற வைதேகி, அவன் அனுமதியின்றி வேகமாக ரணதீரனின் பங்களாக்குள் நுழைந்து கதவை அடைத்தாள்.
“மாமா…இந்தப் பொண்ணு எல்லா நேரமும் சாப்ட் இல்ல மாமா…
இவள் கொஞ்சம் டெரர் தான் போல!” என்று மாயா சொன்னதும்,
“எப்படியோ அவங்க சண்டையை அவங்களுக்குள்ள பேசித் தீர்த்துக்கட்டும். நீ வா நம்ம உள்ள போகலாம்” என்ற மாறன், அனைவரையும் வேதநாயகியின் பங்களாவிற்குள் அழைத்துச் சென்றான்.
வைதேகி உரிமையாக ரணதீரனின் பங்களாவிற்குள் சென்றவள் ஹாலில் உள்ள நாற்காயில் அமர்ந்தப்படி அந்தப் பங்களாவை நோட்டாமிட்டாள்.
“வாவ்! பங்களா ரொம்ப சூப்பரா இருக்கு தீரா.ஆமா! இங்க உங்க பிரெண்ட்ஸ் இருக்காங்கன்னு சொன்னிங்களே! எங்கே அவங்க?”என்று வைதேகி கேட்க,
” நீயேன் அதெல்லாம் கேட்கற!” என்ற ரணதீரனின் மீசையை உரிமையுடன் முறுக்கியவள்,
“நீங்கத் தானே உங்க நண்பர்களை அறிமுகப்படுத்தி வைப்பேன்னு சொன்னிங்க. எங்க அவங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள் வைதேகி.
வைதேகியின் உரிமையான பேச்சும், அவளின் தொடுதலையும் மனதளவில் ரணதீரன் ரசித்து இருக்க,”என்ன ராணா… வைதேகி எங்களையா பார்க்க வந்திருக்காங்க?” என்ற குரல் ரணதீரனின் காதில் மட்டும் விழுந்தது.
சட்டென்று அவன் காதில் கேட்ட குரலைக் கவனித்தவன், “நீ கொஞ்ச நேரம் வாய மூடுரியா” என்ற ரணதீரனின் பார்வை அவன் அறையின் மீது பதிந்திருந்தது.
சம்மந்தமே இல்லாமல் பேசும் ரணதீரனை பார்த்து,”அந்த ரூம்ல யாரு இருக்காங்க?” என்று வைதேகி கேட்க, “அங்க யாரும் இல்லை. நீ முதல்ல வெளியே போ” என்றவன் வைதேகியின் கரங்களைப் பற்றி வாசல்வரை அழைத்துச் சென்றான்.
“டேய் டேய் என்னடா பண்ற…அந்தப் பொண்ணு எங்களைப் பார்க்கத் தான் வந்துருக்கு. அந்தப் பொண்ண உள்ள அழைச்சிட்டு வா” என்ற குரல் மீண்டும் ரணதீரனின் காதில் மட்டும் விழுவதை உணர்ந்தவன். “நான் உங்கள வாயை மூடச் சொன்னேன்” என்று மீண்டும் அவன் அறையைப் பார்த்துக் கத்தினான்.
“என்ன தீரா! நீங்க யாருக் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க. ஓ! அந்த ரூம்ல தான் உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா?” என்ற வைதேகி வேகமாக அவன் அனுமதியின்றி ரணதீரனின் அறைக்குள் நுழைய, mஅந்த அறை முழுவதுமே ரணதீரனின் உருவம் கொண்ட
ஓவியங்கள் இருந்தது.
“வாவ்! உங்க பெயிண்டிங்ஸ் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு தீரா” என்ற வைதேகி அங்கிருந்த ஓவியங்களை எல்லாம் உற்று கவனித்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன ராணா! வைதேகி உன் கிட்ட நேத்து காதலை சொன்னதோடு இல்லாமல் இன்னைக்கு வீட்டுக்கே வந்துட்டாளே!அப்போ அடுத்து உங்க கல்யாணம் தானா!?” என்று மீண்டும் இன்னொரு குரல் ரணதீரனின் காதல் கேட்க,
“டேய்….நீ இப்ப வாயை மூடுறியா இல்ல உன்னைத் தார்த்தாரா கிழிச்சு குப்பையில் போடட்டா” என்ற ரணதீரன் ஒரு ஓவியத்தைப் பார்த்துக் கோவமாகக் கத்தினான்.
“தீரா…நீங்க யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்று மீண்டும் வைதேகி கேட்டாள்.
“இதோ இவனுங்க கிட்ட தான். இவனுங்க பைத்தியம் மாதிரி நானும் நீயும் கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. நான் எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்!? உன் அழகுக்கும் உன் நிறதுக்கும் முன்னாடி நானெல்லாம் உன் பக்கத்துல நின்னாலே அசிங்கமா தான் இருக்கும்” என்றவனின் வார்த்தையில் வலிகள் மட்டுமே நிறைந்து இருந்தது.
“ப்ச்…இவனுங்களுக்கு அதெல்லாம் சொன்னா புரியாது. நீ இவனுங்க பேசுறதெல்லாம் காதுல வாங்காத.
முதல்ல நீ இங்கே இருந்து கிளம்பு” என்ற ரணதீரனின் செய்கையில் வைதேகிக்கு அவனின் மனநிலை அப்பட்டமாகப் புரிந்தது.
“ஏன் தீரா! அப்போ நீங்க உங்க நண்பர்கள் என்று சொன்னது இவங்களை தானா?” என்ற வைதேகி அந்த அறையில் உள்ள ஓவியங்களைச் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டாள்.
“ஆமா…இவங்க மட்டும் தான் என் நண்பர்கள்” என்ற ரணதீரனின் வார்த்தையை வைத்தே அவனின் மனநிலையை ஆராய்ந்த வைதேகிக்கு இந்த நொடி ரணதீரனின் பிரச்சனை என்னவென்று மருத்துவ ரீதியில் தெளிவாக அறிந்து கொண்டாள்.
தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் ரணதீரனை காட்சிப் பொருளாகப் பார்த்து அவனை அவமானப்படுத்தி மகிழ்ந்தவர்களுக்கு நடுவே தனக்கான நண்பர்களை ஓவியத்தின் மூலம் அவனாகவே உருவாக்கிக் கொண்ட ரணதீரனின் மனநிலையை தெளிவாகப் புரிந்து கொண்ட வைதேகி, முள்ளை முள்ளால் எடுப்பது போல அவன் வழிக்கே சென்று அவனைச் சரி செய்ய வேண்டும் என்று எண்ணியவள் அங்கே இருக்கும் ஒரு ஓவியத்தின் அருகே சென்று நின்று கொண்டாள்.
“வைதேகி…நீ வீட்டுக்குப் போ. இங்கே இருக்காதே” என்று ரணதீரன் சொல்ல,
“இருங்க தீரா…நான் இவங்க கிட்ட பேசிட்டு வரேன்” என்றாள்.
சில நொடிகள் கண்ணிமைக்காமல் அந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,
“ஓ… உங்க எல்லோர்க்கும் என்னைப் பிடிச்சி இருக்கா? நானும் தீரனும் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழணும்னு நீங்கயெல்லாம் ஆசைப்படுறிங்களா!?” என்றவளின் வார்த்தையைக் கேட்டு,
“யார்கிட்ட பேசற நீ!?” என்று கேட்டான் ரணதீரன்.
“வேற யாருகிட்ட! எல்லாம் உங்க நண்பர்களுகிட்ட தான்” என்றவள் ரணதீரனின் கன்னங்களை ஆசையுடன் கிள்ளி, “இவங்க ஆசை படியே சீக்கிரம் நம்ம கல்யாணம் பண்ணிப்போம் தீரா…”என்ற வைதேகியின் அரவணைப்பில் தன்னை மறந்து நின்றிருந்தான் ரணதீரன்.
“ராணா…முதல்ல இவளைக் கழுத்த புடிச்சு வெளியே தள்ளு, இவளோட நிறத்தையும் அழகையும் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு” என்று மீண்டும் ரணதீரனின் காதில் மட்டும் கேட்க்கும் குரலில் அவன் சட்டென்று முகம் மாறியவனின் விழிகள் அந்த அறையில் உள்ள 18 வயதில் இருந்த ரணதீரனின் உருவம் கொண்ட ஓவியத்தின் மீது பதிந்தது.
ரணதீரனின் அறையில் பல்வேறு ஓவியங்கள் இருக்க, அனைத்துமே கருப்பு நிறத்தில் மட்டுமே வரையப்பட்டவையாக இருந்தது. ஆனால் அந்த ஓவியங்களில் பத்து மட்டும் சுவரில் மாட்டப்பட்டிருந்தன.
அந்தப் பத்து ஓவியங்களும் ரணதீரனின் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு, அவன் பதினெட்டு வயதிலிருந்து இருபத்தெட்டு வயதுவரை ஒவ்வொரு ஆண்டும் அவனில் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்தவையாக அமைந்திருந்தன.
அவை அவனுடைய வயதையும், உருவ வளர்ச்சியையும் நேர்த்தியான ஓவிய கலைமூலமாக வெளிப்படுத்தப்பட்டு இருந்தது.
அங்குள்ள எல்லா ஓவியங்களையும் வைதேகி நுனுக்கமாகக் கவனித்து இருக்க,
ரணதீரன் ஒரே ஒரு ஓவியத்தைத் திடீரென வெரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் கூர்மையிலிருந்தே, ரணதீரனின் உள்ளத்தில் அந்த ஓவியம் ஏதோ ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது என மனநல மருத்துவரான வைதேகி உணர்ந்தாள்.
ரணதீரன் பார்வை விழுந்த இடத்தை நோக்கி நடந்து சென்ற வைதேகி அந்த ஓவியத்தைக் கையில் எடுக்க, “அதைத் தொடாதே…கீழ வை! அவன் சரியான கோபக்காரன்” என்ற ரணதீரன் வைதேகியின் கையில் இருந்த ஓவியத்தைப் பறித்து மீண்டும் சுவற்றில் மாட்டினான்.
“என்ன! இவர் ரொம்ப கோபப்படுவாரா!? அப்படி என்ன கோபம் இவருக்கு?” என்று வைதேகி பொறுமையாக ரணதீரனிடம் பேச்சுக் கொடுக்க, “ராணா… இவளை வெளியே அனுப்பு” என்ற குரல் மீண்டும் ரணதீரனின் காதில் மட்டும் விழுந்தது.
“ஏன் அவளை வெளிய அனுப்ப சொல்லுற?
ராணா… நீ வைதேகியை கல்யாணம் பண்ணிக்கோ.”என்று மீண்டும்
இன்னொரு குரல் கேட்க்கும் தீசையை நோக்கி நடந்த ரணதீரனின் பார்வை வேறொரு ஓவியத்தின் மீது பதிந்து,
“உனக்கு வைதேகியை பிடிச்சிருக்கா?”என்று அந்த ஓவியத்தைப் பார்த்து கேட்டான் ரணதீரன்.
“ஆமா ஆமா… எங்களுக்கெல்லாம் வைதேகியை ரொம்ப பிடிச்சிருக்கு. நீ அவங்களை கல்யாணம் பண்ணிக்கோ” என்று அணைத்து ஓவியங்களும் ரணதீரனை பார்த்துப் பேசுவதைப் போலக் கற்பனை செய்து கொண்டவன், “அப்போ உங்க எல்லாருக்கும் வைதேகியை பிடிச்சிருக்கா” என்று சிரித்த முகத்துடன் கேட்டான்.
சுவற்றில் மாட்டி இருக்கும் பத்து ஓவியங்களுடனும் மாறி மாறிப் பேசும் ரணதீரனை பார்த்த வைதேகிக்கு நிஜம் எது நிழல் எது என்று அவனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“ஏன் ராணா…இந்தப் பத்து பேரும் தான் உங்க நண்பர்களா!?” என்று வைதேகி கேட்டதும், “ஆமா…இவங்க தான் என்னோட உயிர் தோழர்கள்”என்று புன்னகை மாறாமல் சொன்னான்.
“இவங்களோட பெயர் என்ன?” என்று வைதேகி கேக்க, “எல்லோருக்குமே என்னோட பெயர் தான்” என்றவன் ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் கையில் எடுத்து,
“இவன் பெயர் மட்டும் தீமா” என்று தீரன் சொன்னதும், “தீமானா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் வைதேகி.
“தீமா என்றால் கோவக்காரன். இவன் சரியான கோவக்காரன்” இவன் வயசு பதினெட்டு தான்” என்று அந்த ஓவியத்தைப் பார்த்துப் பேசும் ரணதீரனின் இந்த நிலைமைக்குக் காரணமே அந்த ஓவியம் தான் என்று அக்கணம் புரிந்துக்கொண்டாள் வைதேகி.
“ராணா… இவளை வெளிய போகச் சொல்லு” என்று மீண்டும் அந்தக் குரல் இவன் காதில் மட்டும் கேட்க, “இரு தீமா சொல்றேன். வைதேகி… நீ அம்மா வீட்டுக்குப் போ. நம்ம நாளைக்கு பேசிக்கலாம்” என்று ரணதீரன் சொன்னான்.
“மாட்டேன் தீரா… நான் இன்னைக்கு உங்கக்கூட தான் இருக்க போறேன்” என்றவள்,அவன் கட்டிலில் வாட்டமாக அமர்ந்து கொண்டாள்.
வைதேகியின் பிடிவாதத்தை பார்த்து அங்குள்ள ஓவியங்கள் எல்லாம் சிரிப்பதை போல ரணதீரனின் காதில் மட்டும் சிரிப்பு ஒலி கேட்டதும், அவனும் அவளை பார்த்து தன்னை மறந்து சிரித்தான்.
error: Content is protected !!