Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 14 2

” மச்சி!!!!!!…,”  அன்று காலேஜ் முடித்த பின் இத்தனை வருடங்கள் கடந்து இன்று தான் மாறனை சந்திக்கிறான் என்பதை அவன் போட்ட சந்தோச கூச்சல் சப்தமே சத்தம் காட்டாமல் அவன் சந்தோசத்தை எடுத்துரைத்தது. இறுக்கி அணைத்து இரு சுற்று சுற்றிய பின் தான் அவன் கீழே இறக்கியே விட்டான். அதற்குள் ராஜா முகம் வாடிவிட்டது. முகத்தை சுருக்கி வாயை கோணி காட்ட உர்ரென அவர்களை பார்த்தான்.

” ப்ரோ!!!…, இனிமே என் பிரண்டு தான் எனக்கும் மட்டும் தான்னு நீயே உரிமை கொண்டாடி நிற்க முடியாது. எனக்கும் அவன்கிட்ட இனி முழு உரிமை இருக்கு. ஆளுக்கு பாதி, பாதி …, ஓகேயா…  ”  என அழிச்சாட்டியம் செய்ய



Advertisement

” சிவா!!!! நீ எப்படா வந்த.., உனக்கு யாரு சொன்னாங்க,, யாரும் என்கிட்டே சொல்லவே இல்லை. எப்படிடா இருக்க .., ” என இளா பேச ஆரம்பிக்க, தமயந்தியோ சொல்லாதே என சைகை செய்தார். ராஜாவிடமும் எதுவும் சொல்ல வேண்டும் என முன்பே சொன்னதால் அவனும் வாயே திறக்கவில்லை.

Advertisement

” இங்கேயே நின்னு பேசிக்கிட்டே இருந்தா உள்ளே போக வேண்டாமா.. வாங்க உள்ளே போகலாம். ” தமயந்தி பேச்சை மாற்றி உள்ளே அழைத்து சென்றார்.

Advertisement

வரவேற்பறையில் ஒரு கும்பலே காத்து கொண்டு இருந்தது இவனை அழைத்து செல்ல. இருபக்க சொந்தமும் வந்து நிற்க கூட்டத்தில் பலரும் ஆவலாய் இவனை காண மெல்லிய வெட்கம் வந்தது. இளாவின் பெரியம்மா ஜானகி மூத்தவராய் வந்து மகனை உச்சி முகர, தோளோடு நண்பர்கள் அணைத்து கொண்டு நடுநாயமாய் வீற்றிருந்த சேரில் சென்று அமர்ந்தான். சிறிது நேரம் நண்பர்கள் பேச்சில் சுற்றம் மறந்தனர்.

Advertisement

” ரோஜா எங்கேடா .,?  ” அவளை காணாமல் ராஜாவிடம் மாறா கேட்க.

” நிச்சயம் முடிக்காம அவங்க அப்பா அனுப்பமாட்டேனு சொல்லிட்டாரு. சாயந்திரம் தான் வருவா. ” சொல்லும் போதே குரலோடு முகமும் வாடி விட்டது.

” அவங்ககிட்ட அடுத்து அவன் பேசவே இல்லையாம்  .., இஞ்சி தின்ன மங்கி மாறி மூஞ்சி இருக்கு ரெண்டு நாளா . ” சிவாவின் கிண்டலில்.

” ஏன்டா சொல்ல மாட்ட, அன்னைக்கும் அவங்க அப்பா சம்மதம் சொல்லாம ஒன்னும் பேசாம போயிட்டா, சரி ஓகே சொல்லிட்டாங்கனு ஜாலியா பேசலாம்னு நினைச்சா இவன் நிச்சய வேலை. துரைக்கு நிச்சயம் பண்ணி முடிச்சா தான் என் நிச்சயம்னு கையோடு பேசி அந்த வேலை வேற. கையும் ஓடாம,  காலும் ஓடாம, தலைக்கு மேல வேலை இழுத்துட்டு போகுது. என் ஜோவை பார்க்க கூட முடியல..,ரெண்டு நாள் ஆச்சு. இவனுக்கும் என் தங்கச்சிக்கும் நிச்சயம் முடிஞ்சா தான்,  எனக்கும் இவன் தங்கச்சிக்கும்  நிச்சயம் பண்ணுவாங்கலாம். கால கொடுமைடா   ” அவன் வருத்தத்தில் சிவாவோ வெடித்து சிரிக்க,

” பரதேசி, பரதேசி, எங்க பீலிங் புரியுதா உனக்கு, என் ஆளு வரலைன்னு மீ பீலிங், அவன் யாரு ஆளுன்னே தெரியாம பீலிங் ஆப் நாவலா இருக்கான். பக்கி நீ சிரிக்குற? “

” இதுக்கு தான் மிங்கிள் ஆகாம சிங்கிள் பசங்கள சுத்தனும்னு சொல்றது. மீ ஹாப்பி அண்ணாச்சி “

” அடங்குடா…! எங்க ரெண்டு பேர் கல்யாணம் முடியட்டும். நானே  ஒரு பொண்ணு பார்த்து மொதல்ல உனக்கு கட்டி வைக்குறேன். “

” யாரு நீ? போடா… உனக்கே மச்சான் தான் மாமா வேலை பார்த்தானாம். இதுல இவரு எனக்கு பார்க்குறாராம். “

” உனக்கும் நிச்சயமா .., சொல்லவே இல்லை. ” இளாவின் ஆச்சரிய குரலில்

” அன்னைக்கு ஏதாவது பேச வந்ததை கேட்டியா பன்னி!!!” முறைத்து கொண்டு இருந்தவனோ சிவா முறைத்து பார்க்கவும்..

” இங்கேரு நான் அவனை அப்படி தான் கூப்பிடுவேன்.., உன்னால ஒன்னும் சொல்ல முடியாது., அவன் என் ஆளு.” ராஜாவின் பேச்சில் மாறா சிவாவை பார்த்து சிரிக்க.

” இதை உன் மட்டும் ஆளு கேட்டுச்சு அல்லு விடும் ப்ரோ., ஒழுங்கா மாறிடு., இல்லை மொத்து வாங்கி தான் மாறுவ. ஏற்கனவே அவங்க வரல,

” எருமை!!!! எருமை!!!!” அடங்குடா…. ” இவர்களின் ரகளையில் இளா முகத்தில் சற்றே இறுக்கம் குறைய.

” எஸ்கியூஸ் மீ, சாரி போர் தே டிஸ்டர்ப்பென்ஸ், நாங்க மாப்பிள்ளை வீடு, கொஞ்சம் முறுக்கு காட்டனும், அப்படிக்கா தள்ளிக்கிறீங்களா? ” முரளி பேச்சில் சிவாவோ.

” வாங்கண்ணா,  வந்து எங்க ஜோதியில் ஐக்கியம் ஆகிகோங்க… “

” அடேய்! அவனை கொஞ்ச நேரமாச்சும் மாப்பிள்ளைனு பீல் பண்ண விடுங்கடா… போய் பொண்ணை கூட்டிட்டு வர வேலையை பாருங்கடா… அதையாவது ஒழுங்கா பாரு…. ” என விரட்டி விட.

” வுடு ஜூட், இந்தா போறேன்…. “

” அவர்களை ஏன் போக சொல்கிறார்? ” என முரளியிடம் கேட்க நினைக்க அதற்குள் முந்தி கொண்டு முரளியே பேச ஆரம்பித்தான். அவனை பேச விடவே இல்லை.

” உனக்கு மட்டும் ஆப்ஷன் கூட இல்ல மச்சான், பிடிக்கலைன்னாலும் பிடிக்கலைனு கூட சொல்ல முடியாது. பிடிச்சிருக்குனு தான் சொல்லனும். ”  அதற்கும் ஒன்றும் கூறாமல் மென்னகை புரிய, அதை பார்த்தவனோ .

” ஏன் மச்சான், நயாகரா பால்ஸ் கிட்ட நயன்தாரா கூட டூயட் பாட போற மாதிரி கம்முனு இருக்கியே… உனக்கு டென்ஷனே இல்லையா. என்னால முடியல “

” அப்போ இருந்தது,  இப்போ இல்லை. அங்க அம்மாவை பாருங்க.. “

” அவங்க தான் கிரிக்கெட் ஸ்டேடியம்ல போட்ட லைட் மாதிரி பளிச்சுனு இருக்காங்களே.., அதுக்கென்ன ?.,”

” அவங்க முகத்தை பார்த்தாலே  எனக்கு பிடிச்சதை தான் அவங்க செய்வாங்கனு நம்பிக்கை எனக்கு தோணுது., பார்ப்போமே., ” என்றவன் அதன்பின் தான் அங்குள்ளோரை சுத்தியும் பார்க்க ஆரம்பித்தான்.

தன் பெரியம்மா வீடு, அத்தைகள் வீட்டு உறவுகள், முரளி வீட்டு சொந்தங்கள், ராஜா, சிவா பெற்றோர்., என பலரும் அறிந்த முகங்களே இருந்தன. புதிதாக சிலரே அங்கு அமர்ந்து இருந்தனர். அவன் பார்வையில்  சினேகமாக சிரிக்க இவனும் முன்புறுவல்  பூத்தான். பின் பொதுவாய் கேள்விகள் சபையில் கேட்க ஆரம்பிக்க பதில் சொல்லி கொண்டு இருந்தான்.

” அண்ணி., பொண்ணை கூட்டி வாங்க., ” என சப்தமாய் ஜானகி சொல்ல, இவனுள்ளும் ஒரு மெல்லிய பதட்டம் தோன்றியது.

” அவள் யாரோ  !!! ஆனால் இனி தன்னில் பாதி அவள் அல்லவா !!! அவன் உயிரை ஊடுருவும் மெல்லுணர்வு அவனை வசமிழக்க செய்ய மெல்ல தன் கண்களில் அவளை ஸ்பரிசித்தான். திகைப்பில் விரிந்த விழிகளில் அவள் உருவம் விழுக,  அவனும் விழுந்து விட்டான். மனம் பூவாய் விரிய, இமையோ அழகாய் அதன் மனம் வீசியது அவன் காந்த விழிகளில்.  சட்டென தாயை காண அவரோ இமை மூடி, புரிதலாய் சிரித்தார்.

அன்னநடை போட்டு படியிறங்கி மங்கையவள் வந்து கொண்டிருந்தாள். மயில் தோகை கலரில் ப்ளூ பார்டர் வைத்த சேலையில், பொன்னகைகள் அணிந்து புன்னகையோடு மங்கையவள் வந்து நின்றாள். எங்கிருந்தோ ஓடி வந்த வாண்டுகள் இரண்டும் ” அத்தை!!!!! ” என கொஞ்சி பேசி  அவளிரு புறம் கரம் பற்றி, மாமனின் மனம் வெல்ல பிறந்தவளை அவன் அருகே அழைத்து வந்தனர். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தலைவனின் தலைவியாய் அவள் பெயர் இருக்க இதோ இன்று அவனை தேடி வந்து விட்டாள்.

அவன் எதிரில் பெண்கள் குழுவோடு நடுவில் சென்று நின்று வணக்கம் சொல்லி அவள் அமர்ந்து கொண்டாள். இடையிடையே அவளது சிறு சிரிப்பும், நளின பார்வையும், பேசும் போது மொட்டாய் குவியும் இதழ்களும் அவனை வஞ்சனை இல்லாமலே வஞ்சித்தது.  பாவையின் பார்வையோ அவனை பாராமல் வெட்கம் பூசி கொண்டு லயத்தின் சுபத்தை தொலைத்திருக்க, மாறனின் இளமையும் அவளை தீண்டாது,  தீண்டும் விழியால் தீண்டி கொண்டிருந்தது.

பெரியவர்கள் பேசி முடித்து நிச்சய  தாம்பூலம் மாற்றி கொண்ட பின் அவன் அருகே சென்று அமர சொல்லினர். சொன்னதை செய்யும் கிளி பிள்ளையாய் அவளும் தட்டாமல் அமர, தடம் புரளும் மனதை என்ன செய்திட என தோன்றாது இவனும் விழித்திட்டான்.

” மோதிரம் மாத்திக்க சொல்லுங்க, நேரம் போய்கிட்டே இருக்கு..,” பெரியவரின் குரலில் எழுந்து நிற்க இரு நந்திகள் குறுக்கே வந்து நின்றன.

” மொத என் தங்கச்சியை உனக்கு பிடிச்சிருக்கா இல்லைனா சொல்லு, அப்போ தான் கையை கொடுப்போம். ” ராஜா, சிவா இருவரும் இரு புறம் நின்று மெல்லிய குரலில் கேட்க .

” கையை விடுங்கடா, விளையாடுற நேரமா இது.”

” சொல்லு மச்சான்.., உன் விருப்பம் என்னனு தெரியனும்  “

” எனக்கு பிடிச்சதால் தான் அம்மா வந்து பேசி முடிச்சிருக்காங்க. “

இருவரும் முழிக்க, ” எல்லாம் அப்புறம் சொல்றேன், நீ நகர்ந்து வாடா .., ” மெதுவே சொன்னவன் அவள் புறம் திரும்பி கண் பார்த்து

 ” லயா .., உனக்கு சம்மதம் தானே., பிடிச்சிருக்கா ” விழியோடு விழி பார்த்து காதல் மொழி பேச.

“ம்ம்ம் ..,எனக்கும் பிடிச்சருக்கு மாறா .., ” என்றாள் மெதுவே. அதன் பின் தான் மோதிரம் இருவரும் மாற்றி கொண்டனர். இன்னும் அவனுக்கு அவள் இவர்களின் தங்கை என்ற உண்மை தெரியாது. முழு பேரும் தெரியாது, பேதை பற்றியும் தெரியாது. தெரியும் போது அவன் நிலை என்னவாக இருக்குமோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!