Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 16

இதோ.. இதோ.. என் பல்லவி

அத்தியாயம் – 16



Advertisement

 ஆபிதாவின் காதில்  இருந்து வரும் இரத்தம் நின்று இரண்டு நாட்கள்  ஆனது, இன்னும் ஆபிதா பானு கண் முழிக்க  வில்லை, இன்னும் கோமாவில் தான் இருந்தாள்..

Advertisement

Advertisement

வாஜிதா  பானு  ஹாஸ்பெட்டலில்  ஒரு  அறை எடுத்து , ஆபிதா பானுவின்  பிள்ளைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வாஜிதா பானுவுக்கு பிரசவ நேரம் என்பதால்  காலையிலே இருந்தே  சிறு, சிறு வலி எடுக்க. ஆபிதா  கண்விழிக்க  மாட்டாளா  என்று  காத்திருந்தாள் வாஜிபானு.

Advertisement

வாஜிதா பானுவுக்கு சிறிது  நேரம் கழித்து இடுப்பு வலி   கூடுதலாக  வர “ஷேக்தாவுத்திடம்  பிரசவலி போல தெரியுது என்று சொல்ல”..

பதறிய  ஷேக்தாவுத் உடனே விக்ரமிடம் சென்று “வாஜிதாபானுவுக்கு  பிரசவ வலி வந்துருச்சு, நாங்க செக்கப் சொல்லும் ஹாஸ்பெட்டல் ஒரு அரை மணி தூரம் தான். நாங்க போறோம், நீங்க  ஆபிதாவை பாத்துக்கோங்க”  என்றார்.

“சரி” என்ற விக்ரம் “பிள்ளைகளை நான் பாத்துங்குறேன் என்றான்”..

  “இல்ல விக்ரம் எங்க அம்மா, என் சிஸ்டர் எல்லாம் இருக்காங்க,  எல்லாரும் சேர்ந்து பிள்ளைகளை பாத்துப்பாங்க நான் கூட்டிட்டு போறேன் என்றான்”…

 விக்ரம் ஆஷிக், மற்றும் சிவாக்குட்டியிடம் “இங்கே இருங்க நாம  வாஜிதா சித்திக்கு  குழந்தை பிறந்தவுடன் போகலாம்” என்றான்..

பிள்ளைகளோ “நாங்க இப்பவே சித்தி கூட போறோம்,  குட்டி பேபியை பார்க்க” என்க.

 “சரி”  என்ற விக்ரம் ஷேக்தாவுத்துடன் பிள்ளைகளை அனுப்பி வைத்தான்..

மஹாமுது  விக்ரமோடு இருப்பதாக சொல்ல, “வேண்டாம்  மாமா, வாஜிதா கூட போங்க, நான் இங்கே தான் இருக்கேன். ஆபிதா கண்முழிச்ச உடனே போன் பண்ணுறேன், அப்போ வாங்க, இப்போ போங்க என்று அனுப்பி வைத்தான்..

அனைவரும் கிளம்பி விட.. விக்ரம் மட்டும் பல்லவிக்கு என்று  இப்போது கொடுத்து இருந்த தனி அறையில் இருந்தான்..

பல்லவிக்கு டிரிப்ஸ் மட்டும் ஏறிக்கொண்டு இருந்தது..

நர்ஸ்  வந்து பல்லவியை செக் பண்ணி பார்த்து விட்டு.”கண்முழிச்ச இல்ல, உடல்  அசஞ்ச என்னை கூப்பிடுங்க சார்” என்று சென்று விட்டாள்.

 விக்ரம்  பல்லவியின் முகத்தையே   பார்த்து  இருந்தான்.. டாக்டர் இரவு வந்து பார்த்து விட்டு, “கவலை படாதீங்க விக்ரம்   சிலருக்கு இரண்டு நாள்ல முழிப்பு வரும், சிலருக்க  ஒரு வாரம் கூட ஆகலாம், நம்பிக்கையை விட்டுடாதீங்க ” என்று சொல்லி சென்றார்..

டாக்டர் சென்றவுடன்  விக்ரம் பல்லவியோடு பேச ஆரம்பித்தான். ” நீ எப்போ முழிச்சுக்குவ பல்லவி, என்னைக்கு தான், என்னை பார்ப்ப, நம்ம பிள்ளைகள் பாவம் இல்லையா, என்ன தனியா விட்டு நம்ம பிள்ளைகள் உன் தங்கச்சி வாஜிதா கூட போயிட்டாங்க தெரியுமா..

உன் தங்கச்சி வாஜிதாபானுவுக்கு   குழந்தை பிறக்க போகுது  பல்லவி, அந்த பேபிய நீ பாக்க வேணாமா முழிச்சுக்கோ பல்லவி” என்று   அவளிடம் பேசிக்கொண்டே  இருந்தான்.

ஷேக்தாவுத் விக்ரமுக்கு  போன் போட..

“சொல்லுங்க   ஷேக் ”  என்றான் விக்ரம்..

“வாஜிதாவுக்கு இரட்டை ஆண் பிள்ளைகள்  பிறந்து இருக்கு” என்று  சொல்ல..

“ரொம்ப சந்தோஷம் ஷேக்  வாழ்த்துக்கள், குட்டி பசங்க எப்படி இருக்காங்க. தன் பிள்ளைகள் என்ன பண்ணுறாங்க” என்று கேட்க..

 “குட்டீஸ் வாஜிதா ரூம்புல தூங்குறாங்க, ஆஷிக்கும் சிவாக்குட்டியும்  என் சிஸ்டர் வீட்டுல நல்ல விளையாடுறாங்க.  நீங்க ஆபிதா கண் முழிச்சவுடனே சொல்லுங்க” என்றான்…

  “கண்டிப்பா ஆபிதா கண்முழிச்சவுடன் சொல்லுறேன்”  என்று போனை வைத்தவன்..

 “ஏய்!  பல்லவி  உன் தங்கச்சிக்கு  இரண்டு பையன்கள் பிறந்துருக்கு  பல்லவி, ரொம்ப சந்தோசமா இருக்கு, நீ உன் தங்கச்சி பையன  பாக்க வேண்டாமா, சீக்கிரம்  கண்முழிமா என்று பேசிக்கொண்டு இருந்தான்…

விக்ரம்  இரவு உணவு சாப்பிட்டு வந்து, தூக்கம் வருவது  போல தெரிய, எப்போதும்   போல் பல்லவியிடம்  தூக்கம் வருது பல்லவி நான் தூங்கட்டுமா  என்று கேட்க..

பல்லவியின்  கை அசைய..

விக்ரம் பக்கத்தில்  வந்து பார்க்க,  பல்லவியின் கைவிரல்கள் அசைய..

விக்ரம் டாக்டரிடம்  சென்று “பல்லவியின்  விரல் அசையுது”  என்று சொல்ல..

டாக்டர் “பல்லவியா யாரு என்று கேட்க”..

“சாரி சார் ஆபிதாபானுவுக்கு  கை விரல் அசையுது” என்று சொல்ல..

” ஓகே, ஓகே வாங்க  போகலாம்” என்றவர். ஆபிதா இருக்கும் அறைக்கு சென்றார். ஆபிதாவின் ஹார்ட் பீட்டை செக் பண்ணியவர், அது சீராக சரியாக அதன் வேலையை செய்ய.. ஆபிதாவின் கைவிரல்களும், கால் விரல்களும் என்று ஒவ்வொன்றும் அசைய..

டாக்டர் பார்த்து விட்டு “கொஞ்சம், கொஞ்சமாக தான்  அவங்க உடல் கோமாவுல  இருந்து வெளியே வருது விக்ரம்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல  கண்முழிச்சுருவாங்க, நர்ஸ் இருப்பாங்க மிட் நைட்டு ஆச்சு நான்  கிளம்புறேன்”   என்று சொல்லி சென்றார்…

அவர் சொல்லியது போலவே கொஞ்ச நேரத்தில்  பல்லவியின்  கருவிழி அசைய மெல்ல கண்விழித்தாள்.

 விக்ரம் நர்ஸை அழைத்து வர..

பல்லவி மெல்ல கண் திறப்பதும், மூடுவதும் மாக  இருந்தாள்..

பல்லவியை  வந்து பார்த்த  நர்ஸ். அவளை  செக் பண்ணி விட்டு. ஒரு ஊசியை போட்டு விட்ட நர்ஸ் ”  “காது கேட்குதாமேம்” என்று ஆபிதாவிடம் பேச..

ஆபிதா காது கேட்பது போல் தலையாட்ட..

“ஓகே மேம் பைன் ”  என்றவள்.

“பாத்துக்கோங்க  சார் மிட் நைட்டு ஆச்சு. ஆபிதா மேமுக்கு ஏதாவதுன்னா என்னை கூப்பிடுங்க நான் அந்த ரூம்பில் தான் இருப்பேன்”  என்றவள். “ஆபிதா  மேம்  தாகம் முன்னு கேட்டா. ஒரு சின்ன மூடியில  பத்து எம்மல் தண்ணி மட்டும்  குடுங்க, வேற எதுவும் குடுக்க கூடாது. பாத்துக்கோங்க”  என்று நர்ஸ் சென்று விட..

விக்ரம்  பல்லவின்  பக்கத்திலே அமர்ந்து இருந்தான்.

பல்லவி கண் திறப்பதும், பின்பு மூடுவதுமாக  இருக்க.

பல்லவியின்  கை நன்றாக  அசைய..

விக்ரம் பல்லவியின்  கைகளை பிடித்துக்கொண்டு  அவளை பார்த்திருந்தவன். “பல்லவி”   என்றான்,.

அவள் கருவிழி மெல்ல அசைந்து  கண் திறக்க. அவள் கையில் முத்தமிட்டவன். ” என்னை பாருமா, பல்லவி என்னை பாரு ” என்றான்.

பல்லவி  நன்றாக கண் திறந்து விக்ரமை பார்க்க..

அவனோ  கண்ணீர்ரோடு , அவளை பார்த்தவன். “என்னை  தெரியுதா” என்றான்.

 ஆபிதா பானு மெல்ல  தலையாட்ட..

மெல்ல அவள் அருகில் வந்தவன். அவள் படுத்திருக்கும்  கட்டிலில்  மேல் ஏறி, அவளுடன் சேர்த்து  அவளை மெல்ல அணைத்த வாரு படுத்துக்கொண்டான்..

பல்லவின் தோளில் தன் முகத்தை வைத்தவன். அவன்  உடல் குழுங்குவதை ஆபிதா உணர்ந்தாள்.. அவனின்  சூடான கண்ணீர் அவளின் இதயத்தை நனைத்தது..

பல்லவி  மெல்ல பேச நினைக்க வார்த்தை வர வில்லை  ஆபிதாவுக்கு. உடல்  முழுக்க வலி எடுக்க. அவள் உடலை அசைக்க முடியவில்லை. கைகள் மட்டும் அசைய  மெல்ல அவள்  கைகளை அசைத்தவள். விக்ரமனின் தோள் மீது கை வைத்து அழுத்த..

விக்ரம் மெல்ல நிமிர்ந்து பல்லவியை  பார்த்தான்..

விக்ரம்  கண்ணீல்  கண்ணீர்..

அவளோ “அழ    வேண்டாம்”   என்று  மெதுவாக சொல்ல..

அவளின் முகத்தை பக்கத்தில் பார்த்தவன்.. அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டவன். செத்துட்டேன்டி, நீ கண் முழிக்குற வர செத்துட்டு  இருந்தேன்.

வந்துட்டியா  என் கிட்ட  திரும்பவும், வந்துட்டியா பல்லவி என்றவன். என்னை விடமாட்டேன் என்பது போல் அவளை அணைத்து படுத்திருந்தான்..

பிள்ளைகள் எங்கே என்று ஆபிதா கேட்க.. நான் பக்கத்துல இருக்கேன் என்னை பத்தி  ஒன்னும் கேட்கல என்றான்..

 அவளோ  மெல்ல  நிமிர்ந்து விக்ரமை  பார்க்க  சிரிக்க.

அவளின் இதழில்  மெல்ல ஒரு முத்தம் வைத்து எழுந்து அமர்ந்தவன். “இப்போ உனக்கு   ஒகே வா  பல்லவி  என்றான்.

அவள்  “நல்லா இருக்கேன் என்று தலையாட்டியவள், பிள்ளைகள் எங்கே என்று மறுபடியும் கேட்க..

“ஷேக்தாவுத்  அழைச்சுட்டு போயி இருக்காரு.. உன் தங்கச்சிக்கு  இரட்டை பையன் பிறந்துருக்கு” என்றான்..

“அப்படியா, ரொம்ம சந்தோஷம்”  என்றவள்.. “வாப்பா கிட்ட சொல்லுங்க  நான் கண்விழித்ததை” என்றாள்…

“இல்ல பல்லவி, இப்போ மிட் நைட். எல்லாரும் தூங்குவாங்க, காலையில  சொல்லலாம்” என்றான்..

“நீ ஹாஸ்பெட்டல் சேர்ந்ததுல  இருந்து  யாருமே  சரியா சாப்பிடல, தூங்கல  இன்னைக்காவது  உன்  வாப்பா  தூங்கட்டும் காலையில்  சொல்லிக்கலாம்” என்றான்..

“நீயும்  தூங்கு பேசாத” என்றான்..

“உங்ககிட்ட  ஒன்னு  கேட்கனும்” என்றாள் ஆபிதா பானு..

“சொல்லு  பல்லவி” என்றான்..

“தயவு  செஞ்சு  என்னை  பல்லவியின்னு  கூப்பிடாதீங்க  எனக்கு  நான் வேற  யாரோ  மாதிரி பீல் ஆகுது, நீங்க  பல்லவியின்னு  சொன்ன, எனக்கு நான் வேற  பொண்ணு மாதிரி  பீல் ஆகுது, அது மட்டும் இல்ல பல்லவியின்னு  பேர கேட்டாலே என் இதயம் வேகமா துடிக்குது. இனிமே என்னை  பானு, இல்ல ஆபிதானு கூப்பிடுங்க” என்றாள்.

ஐந்து நிமிடம் அமைதியாக  இருந்தவன்,. “சரி நான் பானுன்னு  கூப்பிடுறேன்”  என்றான்..

 அவளோ “எனக்கு இப்போ   எழுந்து  உட்காரனும்  இடுப்பு, உடம்பு எல்லாம் வலிக்குது” என்றாள்..

“பல்லவி இப்போ அது சாரி பானு. இப்போ தானே  கண்முழிச்ச, காலையில் உட்கார்ந்துக்கலாம், இப்போ அமைதியா  தூங்கு” என்றான்..

அவளோ சிறிது நேரம் விக்ரமை பார்த்து இருந்தவள். “தாகமா இருக்கு  தண்ணீ வேணும் விக்ரம் என்று வாயில்  அவனின் பேரு சொல்ல வர, பின்பு விக்ரம் என்று பேரை  சொல்லாமல், தண்ணீ வேணும்” என்றாள்..

விக்ரம்  ஒரு மூடியில்  கொஞ்சம்  தண்ணீர்  மட்டும் கொடுக்க..

“இது  என்ன?. இவ்வளவு  கம்மிய  தண்ணீ  தர்ரீங்க இன்னும் கொஞ்சம் அதிகமா தாங்க”என்றாள்..

“இல்ல  பானு நர்ஸ் என்கிட்ட  சொல்லிட்டு தான் போனாங்க. பேசன்டு  தண்ணீர்  கேட்ட 10  எம்மல் மட்டும் குடுங்க, தொண்டை நனஞ்சா போதும், அப்பறம் அரை மணி நேரம் கழிச்சு 20  எம்மல் தண்ணீ  குடிக்கலாம். நீ ரொம்ப நாளு சாப்பிடாம தண்ணீ குடிக்காம இருந்தீயா அது தான். தண்ணீ அதிகமா குடிச்சா வாமிட் வந்துரும் பானு கொஞ்சம், கொஞ்சமாக குடி. நான் தர்ரேன்”  என்றான்..

அவளுக்கு தண்ணீ  அதிகமாக  தாகம் எடுத்தது. தொண்டை  எல்லாம்  வரண்டு  போய். உதடு காஞ்சு  போய் இருக்க..

“தண்ணீ   அதிகமா தாங்க ”  என்றாள் பாவமாக..

“நான்  நர்ஸ் கிட்ட கேட்டு தர்ரேன் ”  என்றவன். நர்ஸ் இருக்கும் அறை நோக்கி சென்றவன் கதவை தட்டி செல்ல..

“என்ன சார்  மேடம் கண் முழிச்சுட்டாங்களா” என்று நர்ஸ்  கேட்டாள்..

“ஆமா சிஸ்டர் தண்ணீ  கேட்குறாங்க, கொஞ்சம் குடுத்தா, இன்னும் வேணுமுன்னு கேட்குறாங்க, குடுங்கலாமா”  என்றான்..

“நான்    வர்ரேன்  சார் ”  என்றவள்..

ஆபிதா இருக்கும் அறைக்கு வந்து, ஆபிதாவை  செக் பண்ணி பார்த்து விட்டு.

“எப்படி இருக்கு  மேடம் உடம்புக்கு ஏதாவது  தொந்தரவு  இருக்கா” என்று நர்ஸ் கேட்க..

“தண்ணீ  வேணும், ரெஸ்ட் ரூம் போகனும்”  என்றாள்..

“ஓகே  மேடம் ” என்றவள் “உங்களால எழுந்துக்க  முடியுமா”  என்றாள்..

“உம் என்ற  ஆபிதாபானு  எழுந்து  கொள்ள பார்க்க  அவளால்  அவள் உடம்பை  அசைக்க கூட முடியவில்லை, உடம்பு மரத்து  போனது  போல் தெரிய, அவளால் திரும்ப கூட முடியவில்லை..

அவள் கஷ்டபடுவதை பார்த்த விக்ரம். நர்ஸை பார்த்து “நீங்க  போங்க  மேடம்  நான் பாத்துக்கிறேன  என்றான்..

ஆபிதா நர்ஸை இருங்க  என்றாள்.

” நீங்க  போங்க ”   என்று நர்ஸை அனுப்பி விட்டான்..

“நமக்கு  ஒரு  பொண்ணு இருக்க பல்லவி, அது உனக்கு ஞாபகம் இருக்கா ”  என்றான்..

அவள்  ஏன்  அப்படி கேட்கிறார் என்பது போல்  பார்க்க.. “நம்மக் குள்ள என்ன ஒலிவு மறைவு பானு”

என்றான்.. நான் உன் ஹஸ்பென்ட் என்றவன்..

ஆபிதா பானுவை மெல்ல தூக்கி அமர வைத்தவன். அவள் தலை முடியை சரி பண்ணிவிட்டு. அவள் கைகளை அவளால்  தூக்க கூட முடியவில்லை. கையை தூக்க முயன்றவளை.

“இரு நான்  ஹெல்ப் பண்ண வர்ரேன்” என்றவன். ஆபிதாவின் கைகளை  மெல்ல  பிடித்து விட்டு, கைகளை மெல்ல அசைத்தவன்.

“உன்  காலை  தூக்கு என்றான்”.. அவளால் காலை  மெல்ல அசைக்க முடிந்தது,..

“இரு ”  என்றவன். ஆபிதாவின்  கால் பக்கம் சென்று அவளின் காலை பிடித்து விட்டு, மெல்ல காலை அசைந்து கொடுத்தவன்.

“இப்போ தூக்கு கையை, காலை” என்றான். அவளால் கை, கால்களை மெல்ல அசைக்க முடிந்தது..

“குட்” என்றவன். அவளை தோள் அணைத்து கொண்டவாறே ரெஸ்ட் ரூம் அழைத்து சென்று வந்தான்..

அவளை மெல்ல கட்டிலில்  அமர வைத்தவன், பானுவின் காலை கட்டிலில் மேல் தூக்கி வைத்து  “படுத்துக்கோ”  என்றான்…

 விக்ரமையே பார்த்து இருந்தவள், “நீங்க ஏன் என்னை தேடி வரல” என்றான்..

“எப்போ பல்லவி சாரி பானு. பல்லவியின்னு வாயில வருது மாத்திக்கிறேன், சொல்லு  எப்போ நான் வரல?..

“சிவாகாமி பாப்பா  வயித்துல இருக்கும்  போது, ஏன் என்னை தேடி வரல, நான் செத்துட்டேன்  நெனச்சீங்களா” என்றாள்..

“அது  அப்போ  என்றவன். இப்போ  சொல்ல முடியாதுமா, உனக்கு கொஞ்சம்  குணமாகட்டும், நாம நம்ம  வீட்டுக்கு போவோமுல்ல  அப்போ  அங்க  வச்சு நிதானமா பேசலாம்” என்றான்..

“நான்  உங்க வொய்பு தானே ” என்றாள்..

“அதில்  என்ன சந்தேகம்” என்றான்..

” இல்ல  உங்கள பாத்த  மனசு  பட, படவென துடிக்குது, என்னவோ  ஒரு நெருக்கமா  பீல் ஆகுது. இந்த மாதிரி வேற  யார் கிட்டையும் எனக்கு பீல் வந்தது இல்ல. அதுவும் உங்க பேற  கேட்ட ஏதோ ஞாபகம்   வர்ர மாதிரி இருக்கு, ஆனா உங்க ஞாபகம் ஒன்னுமே எனக்கு வரல”  என்றாள்..

அவள் தலை கோதி விட்டவன். அவள் நெத்தியில் முத்தமிட்டு, “உனக்கு  பழயது எல்லாம் கண்டிப்பா  ஞாபகம்   வரும் தூங்கு காலையில் பேசிக்கலாம்” என்றான்..

அவனின்  கையை பிடித்தவள் “தாங்ஸ்” என்று சொல்ல..

“எதுக்கு”? என்றான்..

“சிவாக்குட்டியை நீங்க  என்கிட்டையே  விட்டதுக்கு, நான் நீங்க உங்க வீட்டுக்கு பாப்பாவ தூக்கிட்டு  போயிருவீங்கன்னு நெனச்சேன், பட் நீங்க அப்படி  செய்யல” என்றாள்.

“உன் அழுகை சத்தம்  கேட்டு என்னால  ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியல பானு. நீ நம்ம  குழந்தைகள்  தான் இனி எனக்கு பெருசு” என்றான்..

 பானு அமைதியாக  கண்மூடி இருந்தாள். அவளின் கண்ணீல் இருந்து கண்ணீர் வர..

அதை துடைத்து விட்ட விக்ரம்.. “எதையும் நினைக்காத, செத்து பொழச்சு  வந்து  இருக்க. நான் எங்கேயும் போக மாட்டேன், உன் கண்முன்னாடியே  தானே  இருக்கேன்.. என்கிட்ட  என்ன  கேட்கனுமோ  கேளு  சரியா. முதல்ல  ஹாஸ்பெட்டல  இருந்து வீட்டுக்கு  வா. இப்போ  தூங்கு ”  என்றான்..

பல்லவியின் மனதில்  நாங்க ஏன் பிரிந்தோம். நான் ஏன் தற்கொலை பண்ணிங்க போனேன் என்ன நடந்திருக்கும் என்று நினைத்திருந்தாள்?….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!