Skip to content
Post Views: 1,781
꧁☆☬ லயம் – 15 ☬☆꧂
இருவரும் மோதிரம் மாற்றி முடிக்க, ராஜாவோ மாறன் கழுத்தில் செயினை அணிவிக்க, சிவா பிரேஸ்லெட் அணிவித்தான். ” இப்போ எதுக்குடா..,” என்பதாய் பார்க்க. ” எங்க தங்கச்சி மாப்பிள்ளைக்கு மச்சான்களா, நாங்க தானே மாப்பிளை முறை செய்யனும்..,” எனும் போது கூட அவனுக்கு புரியவில்லை.
Advertisement
ரோஜா தன் தங்கை என்பது போல லயா அவர்கள் தங்கை என்றே எண்ணினான். மாலா வந்து பெண்ணுக்கு ஆரம் அணிவிக்க அடுத்து ஆசிர்வாதம் வாங்க ஆரம்பித்தனர்.
தமயந்தி, மாணிக்கம் வந்து ஆசிர்வாதம் செய்ய, ” உன்னோட லயா, சுப இலக்கியா, என் மருமக பேர் அவளை மாதிரி அழகா இருக்கா ..,” தமயந்தி சிரித்து கொண்டே கேட்க.
Advertisement
Advertisement
” தமீமா!!!… இன்னைக்கு பின்னிட்டிங்க.., லவ் யூ மா!!! ” அவன் குரலில் உற்சாகம் கரை புரண்டு ஓட, அவர் தோளோடு அணைத்து கொண்டு நிற்கும் மகனை பார்த்தவருக்கும் பூரிப்பே.
ராஜாவின் பெற்றோர் நடேசன் தம்பதியர் வர ” என் மாமா, அத்தை, என் பிரென்ட் ராஜாவோட அப்பா, அம்மா, .., ” முறையாய் அறிமுகப்படுத்தி காலில் விழ அவளோ சிரித்தபடி நிமிர, அவனை கட்டி அணைத்து கொண்டு
Advertisement
” ஐ ஆம் சோ ஹாப்பி, எங்க வீட்டு மாப்பிள்ளை ஆகிட்ட செல்லம் நீ, கங்கிராட்ஸ் .., நான் தான் உன்னுடைய பெரிய மாமனார் ” என்றார். தங்களின் வீட்டின் ஒரே செல்ல பெண்ணை தான் பார்த்து வளர்ந்த நல்லவன் கையில் பிடித்து கொடுத்ததில் அவர்க்கோ பெரு மகிழ்ச்சி.
இவனோ அதிர்ந்து அவர் பேச்சில் அவளை பார்க்க. ” என் பெரியப்பா .., பெரியம்மா..,” என்றாள் மெதுவே., ” வாட்!!!!!!!……. அப்போ சிவா ? ” விரிந்த பார்வையிலோ அதிர்ச்சி இன்னும் பன்மடங்காய் பெருகியது.
ராஜாவின் சொந்தம் என்று தான் காலேஜ் படிக்கும் போது சிவாவும் பழக்கமானான். வேலை விஷயமாக பெங்களூர் செல்லும் போது அவனை சந்தித்து மீண்டும் அவர்களின் நட்பை புதுப்பித்து இருந்தனர்.
” என் கூட பிறந்த ஒரே அண்ணன், ராஜா பெரியப்பா பையன் .., ” அவள் வாய் மொழி கேட்டவனோ அதிர்ந்தான். ” இவனுங்க கூட என்கிட்டே ஒன்னும் சொல்லலையே..,இன்னைக்கு இன்னும் எத்தனை ஷாக் குடுப்பிங்கடா., ” என தேட கையில் சிக்கினால் தானே.,
தங்கை நிச்சயத்தில் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்க, மற்றவர்களோடு புகைப்படம் எடுத்து முடியும் வரை அமைதியாய் இருந்தான். அடுத்து வந்தவனை இழுத்து கொண்டு ஓரம் நகர்த்தி, மௌனமாய் முறைத்து பார்த்த பார்வையில் ” என் ஒய்ப் உங்க தங்கச்சி இல்லையா., உங்க தங்கச்சி தான் என் ஒய்ப்பா .., ” என்ற கேள்வி தொக்கி நின்றது.
” யூ ஆர் ஆல்வேஸ் மை மச்சான் .., எவனும் நம்மளை பிரிக்க முடியாது ” என்றனர் தோளை இறுக்கி அணைத்து இருபுறமும் நின்று.
” பரதேசி.., ஏன்டா முன்னாடியே சொல்லிருந்தா டென்ஷன் இல்லாம ஜாலியா இருந்திருப்பேன். ஏன்டா மறைச்சிங்க..,” மகிழ்வோடு சற்றே கடுப்பும் வந்தது.
“நாயே, சொல்ல வந்ததை கூட கேக்கல.., பேசவே விடாம கடுப்புல சுத்திட்டு என்னை ஏன்டா திட்டுற …, ” ராஜா சொல்ல,
” நீ தான் உங்கம்மா கிழிச்ச கோட்டை தாண்டமாட்டேன், பொண்ணை கூட பார்க்காம கண்ணை மூடிட்டு தாலி கட்டுவேன்னு சொன்னியாம். நிச்சயம் பண்ண சொன்னியாம், பொண்ணு யாருன்னு அவனுக்கு சொல்லாதே, சர்ப்பிரைஸ்னு அத்தை சொன்னாங்கடா. என்னை என்ன பண்ண சொல்ற? ” சிவாவும் சொல்ல,
அவர்களிடம் அவனால் உண்மையை கூற முடியவில்லை. யாரென தெரியாத அவளை விடுத்து வேறொரு பெண்ணை ஏற்று கொள்ள மனம் முரண்டியது, அதனால் யாரோடும் பேசவில்லை என எப்படி சொல்லமுடியும்.
பின் அவளை பற்றி அனைத்தையும் கூற கேட்டவன் மனதிலோ சில்லென்று பெய்த மழையின் குளிர்ச்சி. வானவில் போல அவன் வாழ்வில் தோன்றிய அவள் மூலம் இன்னும் இறுகிய நட்பை எண்ணி. தன் நண்பர்கள் தன் நெருக்கிய உறவாய் மாறியதை எண்ணி மகிழ்ந்தவனுக்கோ தொண்டை குழி ஏறி இறங்கியது அவர்களை பார்க்கையில்.
தனிமை கொடுமையை அனுபவித்தவனுக்கு தானே தெரியும் உறவின் அருமை. ஆகாயத்தை தொட்டு விட்டு வந்த உணர்வில் உழன்றான். நெருங்கிய சொந்தங்கள் நட்பாக பழகினால் இன்பம். நட்பே நெருங்கிய சொந்தமாக கிட்டினால் பேரின்பம் அல்லவா. இனி என்றும் பிரிவென்ற சொல்லில்லையே. ராஜா அன்று கூறியதுபோல இமை நிரந்தரமாய் மூடும் வரை இணைந்தே இருக்கலாமே.
அதிலும் சுபா தான் அவனின் பேக்டரி மேனேஜர், ரோஜா அடிக்கடி கூறும் அவளின் நெருங்கிய தோழி என்பதில் சிரிப்பு கூட வந்தது. தன் முன்னே இருந்துள்ளாள், ஆனால் எங்கோ தேடினேனே? என தன் மீதே கோபம் வந்தது. எப்படியோ தான் விரும்பிய பெண்ணை தேடி பிடித்து அன்னை திருமணம் நிச்சயம் செய்தது எண்ணி மகிழ்வாய் இருந்தது.
கேலி கிண்டல்களோடு, மதிய உணவு நேரமும் முடிய அனைவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
” டேய் !!!!, யாரும் சொல்லாமலே அவளை லயான்னு கூப்பிட்ட., ஒழுங்கா சொல்லு, எப்படி தெரியும் உனக்கு? ” ராஜா கேள்வியில் அவளை ட்ராபிக் நடுவே பார்த்த கதை சொன்னான். பஸ்ஸில் சந்தித்த நிகழ்வையும் கூறி அப்படிப்பட்ட பெண் மனைவியாக வர வேண்டும் என கூறியதையும் கூறினான்.
” மச்சான் , அந்த கையை வெட்டி கையில கொடுப்பேன்னு சொன்ன பொண்ணு நம்ம சுபாவா ? ” முரளி கேட்க.
” கட்டிங் இன்ஜார்ஜ்கிட்ட கடுப்புல திட்டிட்டு இருந்தப்போ தான் என்னை பார்த்திங்களா ? ” சுபா கேட்க.
இருவருக்கும் பொதுவாய் தலை அசைத்தான். ” என் தங்கச்சி பச்சை மண்ணு., அவளை போய் கோபக்காரின்னு சொல்லிட்டியே மச்சான்..,அடுக்குமா ? “
” பில்டப் பண்ணது நீங்க .., நானில்லை., ” மாறன் சொல்ல அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
” அத்தை, நீங்க எப்படி இவ தான் அந்த பொண்ணுன்னு கண்டுபிடிச்சீங்க..,?”
” கல்யாண வீட்டில் பார்த்தப்போ கீழே விழுந்த குழந்தையை தூக்கி குட்டி கிருஷ்ணு கொஞ்சிட்டு இருந்தா, லயான்னு பேர் சொல்லி ஒரு பொண்ணு கூட்டிட்டு போனா, யாருன்னு விசாரிச்சு பார்த்தா உங்க தங்கச்சி, அடுத்து எதையும் யோசிக்க தோணல., உங்க கூட இருந்தா இவன் எப்பவும் சந்தோசமா இருப்பான்., எனக்கு அதைவிட பெருசா எதுவும் தேவை இல்லைடா.” தமயந்தி பூரிப்பாய் சொல்லி முடித்தார்.
” என் ஆஃபீசில் கூட அவளை ஒரு தடவை கூட நீ பார்க்கலையாடா,..? ரோஜா கூட அடிக்கடி சுபா பத்தி பேசுவாளே.., “
” என் மச்சான் ரொம்பஆஆஆஅ சின்சியர், வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு ஓடி வந்துருப்பான்., ” முரளி கிண்டல் அடிக்க.
” கண்ணு முன்னாடியே பொண்ணை வச்சிட்டு, அவளையும் பார்க்காமல், அனுப்பின போட்டோவையும் பார்க்காமல் நல்லவனா இருக்கிற மச்சானுக்கு சிலை வைக்கணும்., வச்சா அதை கூட பார்ப்பானான்னு தெரியல., ” சிவாவும் அவர்களோடு கோதாவில் இறங்கி விட்டான்.
” அடப்பாவி, மொத நாளே அவளை பார்த்துருக்க, அன்னைக்கே பிட்டை போட்டு பேசி இருந்தேன்னா இந்நேரம் வளைகாப்பு முடிச்சிருக்கலாம்., ” முரளி தான் அப்போதும் ஆற்றமாட்டாமல் புலம்பி கொண்டு இருந்தான்.
கண் முன்னே நின்றாலும் யாருக்கு, எப்போது எங்கே மணம் முடிந்து, மனம் இணையும் என யார் அறிவார்? அவன் அவனாக மாறும் வரை அவள் கண்ணில் மட்டும் காட்டியவர், அனைத்தும் முடிந்ததும் கை பிடிக்க வைத்து விட்டாரே. இனி நாளும் சந்தோசமாய், சங்கீதமாய் வாழலாமே.
இரவில் ரோஜா ராஜாவின் நிச்சயம் தொடங்க, தொழில்முறை நண்பர்கள் பலரையும் அழைத்து இருந்தான். வந்தவர்களோ இரு ஜோடியை பற்றியும் கேட்டு மலைத்தனர். அதுவரை யாருக்கும் மேனேஜர் சுபா அவனின் தங்கை என்று தெரியாதே. மச்சான் ஆடிட்டர், மனையாள் அக்கௌன்ட் மேனேஜர் அனைவரும் ஒரு குடையின் கீழ் வர அவர்கள் பார்வையிலும் ஆச்சரியமே.
சிவாவும் பெங்களூர் வேலையை மாற்றி கொண்டு சென்னை வருவதாக சொல்ல இன்னும் சந்தோசமே. உறவுகள் சூழ்ந்திருக்க ராஜாவால் ரோஜாவிடம் பேச முடியவில்லை. கிடைத்த சில நிமிட நேரத்தில் தான் பேச முடிந்தது.
” ஜோ.., நிச்சயம் கூட முடிச்சிச்சு. இன்னும் எனக்கு எந்த பதிலும் சொல்ல மாட்டுற.?”
” நம்ம வாயை திறந்து சொன்னா தான் நம்ம காதல் நமக்கு புரியுமா…? சொல்லாம தெரியாதா…? ரோஜா இல்லாம ராஜா இல்லை. ராஜா இல்லாம ரோஜா இல்லை அப்படின்னு மத்தவங்க வாயால பாராட்டுற மாதிரி வாழ்ந்து காட்டுவோம்., டீல் ஓகேயா., “
” டபுள் டன்னு. என் ஜோ குட்டி சொல்லி கேக்காம இருப்பேனா .., “
” ஜோவா.., ஓ .., ஜாவை ஜோவாக்கிட்டீங்களா ? .., அதுக்கு நானும் ரா., ரா.., சரசுக்கு ரா .., ரா.., னு எல்லாம் பாட முடியாது. எனக்கு ராஜ் தான்.” அவள் பேச்சில் சிரிப்பு மூண்டாலும் அடக்கி கொண்டு நின்றான் இடம் கருதி வேறொன்றும் சொல்லாது.
நீண்ட நாட்களுக்கு பின்னான சந்திப்பில் பேச்சுக்கள், ரகளை, விசில் சத்தம் காதை பிளக்க டான்ஸ், ஆட்டம், பாட்டம் என பட்டாம் பூச்சிகளின் அழகில் அனைவரும் லயித்திருக்க ஒருவன் மனம் மட்டும் தன்னவளை தனியே சந்திக்க துடித்து கொண்டிருந்தது.
மாறனின் விழிகள் பேசும் பாஷை நட்புக்கு தெரியாதா?
” டேய்ங்க மச்சான்! நீ மேல ரூம்ல போய் வெயிட் பண்ணு, இப்போ வரேன். ” அவனுக்கு மட்டும் கேட்குமாறு முனுமுனுத்து விட்டு,
” சிவா மச்சானுக்கு ரெஸ்ட் வேணுமாம். மேல கூட்டி போ ” என கூறி கொண்டிருக்க சாப்பிட வர சொல்லி அழைக்க வந்து விட்டனர். பின் எங்கே பேச ?
சாப்பிட அமரும் போது இலையில் வைத்த வடையை பார்த்ததும் ” ஆமா, நீங்க காலேஜ்ல வடையேழு வள்ளலாமே. இப்போ எப்படி?” ரோஜா மெல்ல குனிந்து ராஜாவிடம் முனுமுனுக்க.
” எது வள்ளலா…. ? நானா….” ஆச்சர்யமாக கேட்க.
” டெய்லி எல்லாருக்கும் வடை வாங்கி கொடுப்பீங்களாம், அதான்…. ” என்று கண் சிமிட்ட.
” இப்போவே கண்ணை கட்டுதே. உன்னை எப்படி வச்சிக்க போறேன்னு தெரியல…”
” யோவ்… என்ன சொன்ன…. வச்சிக்க போறியா…? ” கையில் நறுக்கென்று கிள்ள.
error: Content is protected !!