Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kottathile oru Thanimai pura

தனிமை புறா 2.1

தன்னை நினைத்தே கோபம் பெருகியது விக்கிற்கு.அவனின் கோபம் முழுவதும் ஈஷ்வரின் மீது திரும்பியது. அவரால் தான எல்லாமே??

போக இஷ்டமில்ளை என்றவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்ததால் தானே இவ்வளவு பிரச்சனையும், அவனையும் மீறி மனம் அன்று அலுவலகத்தில் நடந்தவற்றை அசைப் போட்டது.தேவாவும் ்அதை தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
நோ…ஓஓஓ…….!!! என்று அலறியவர்களை சிறிது கண்டுக் கொள்ளாது தனது சீட்டில் அவர்கள் கத்தி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்து இருந்தவர்,
ஓகே…, நாளைக்கு மறுநாள் நீண்க அங்க இருக்கணும், இப்ப போய் டிரிப்புக்கு தேவாயானத ஏற்பாடு பண்ணுங்க,
நீங்க அங்க போனதும் உங்கள பிக்கப் பண்ண வண்டி வந்துரும், நீங்க போகலாம் என்றவர் அவர்களை சட்டை செய்யாது தனது வேலைகளில் மூழ்கிட,
அவரின் செய்கையில் எரிச்சலடைந்த தேவா, ” ஜான் நாங்க போக மாட்டோம் வேற யாரையாச்சும் ஏற்பாடு பண்ணுங்க,??
அவளின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாது ஜான், “நீங்க போகலாம்னு நா அப்பவே சொல்லிட்டேன்”
முடியாது ஜான் தனது பிடியில் பிடிவதாமாக இருந்தாள் தேவா.
இது என்னோட ஆர்டர் இல்ல நம்ம எம்.டி யோட ஆர்டரும் கூட,
அஸ் ஷ (As a) டீம் லீடர் அண்ட் மேனேஜரா நான் சொல்லுறத நீங்க கேட்கலன்னா பராவாயில்ல பட் எம்.டி பேச்ச கேட்டு தான் ஆகணும்,
அதுக்காக நீங்க சொல்லுற எல்லாத்துக்கும் எங்களால தலையாட்ட முடியாது என தேவா எகிற,
ஏன்??? நிதனாமாக அப்பொழுது தான் உள் நுழைத்த எம் டி ஈஷ்வரிடம் இருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.
அவரின் குரலில் சடாரென்று திரும்பியவள், தன் விழிகளை கூர்மையாக்கி ஏன்னு?? உங்களுக்கு தெரியாதா??????
தனது தோள்களை அசட்டையாக குலுக்கி விட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தவர் “தெரியாது” நீயே சொல்லு
என்க,
அவரின் விழியில் தெரிந்த சவாலில் உண்மையை  சொல்ல முடியாத தனது நிலையை எண்ணி வெறுத்தவள்,
லாஸ்ட் டைம் இந்த மாதிரி கிராமத்துக்கு போய் நாண்க பட்ட அவஸ்தை போதும், ப்பராப்பரா (சரியான) இடம் பாத்து தத்தீங்களா நீங்க, நாங்க தங்குறதுக்கு,
அங்க சரியா சாப்பாடு இல்லை, பொண்ணுங்க எங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்.
உங்களுக்கு  ப்பிராபிட்(profit) வருதுங்கறதுக்காக எங்களால அவஸ்தை பட முடியாது என தன்னால் உண்மையை கூற இயலவில்லையே என எண்ணி தனது ஆதங்கத்தை தேவா இதில் கொட்டினாள்.
அவள் சொல்வதில் உண்மே இருப்பதானால் மற்ற இருவரும் பேசாது அமைதிக் காத்தனர்.
அதுவரை அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஈஷ்வர்,
லாஸ்ட் டைம் அப்புடி நடந்ததுக்கு கம்பெனி சார்ப்பா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டாச்சு இன்னும் அதையே புடிச்சு தொங்கிட்டு இருந்த அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது,இந்த மாதிரி பயப்படுறவங்க மீடியா வேலைக்கு வந்துருக்கவே கூடாது.
“இந்த தடவ அந்த மாதிரி கஷ்டம் எல்லாம் உங்களுக்கு வராது அதுக்கு நான் பொறுப்பு”.
அத நாங்க எப்புடி நம்புறது, அப்போதும் அடங்காமல் தேவா கேட்டாள்.
நீங்க வர தகவல அங்க இருக்குற பண்ணையார் வீட்டுக்கு சொல்லியாச்சு, நீங்க ஸ்டே பண்ணுறதுக்கான ஏற்பாடு.எல்லாம் அவங்க பாத்துப்பாங்க, ஷோ நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் இருக்காது, என்றவர் பேச்சு முடிந்தது என்பது போல் கிளம்பி விட,
அவரின் பின்னூடே சென்றவள், ஒரு நிமிஷம் நில்லுங்க சித்தப்பா??என்றவள் அவரை கூர்ந்துப் பார்க்க,
சொல்லு என்றவர் அவளின் பார்வைக்கு சளைக்காது பதில் பார்வை பார்க்க,
இப்ப எதுக்காக இந்த தீடீர் பயணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா சித்தப்பா??
ஈஷ்வர்…,  நம்ம சேனல் டீ.ஆர்.பிக்காக!!!!!!!
இத  நம்ப நான் ஒண்ணும் முட்டாள் இல்ல எம்.டி சார்!!!
சித்தப்பா சாராக மாறியதை குறித்துக் கொண்ட ஈஷ்வர்,
நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்,அதப் பத்தி எனக்கு கவலை இல்ல!!!!
[the_ad id=”6605″]
நீங்க எத மனசுல வச்சிக்கிட்டு இப்புடி எல்லாம் பண்ணுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்,
நீங்க நெனைக்கிறது என்னைக்குமே நடக்காது நடக்கவும் நான் விட மாட்டேன் அத கூடிய சீக்கிரமே நீங்க புரிஞ்சிப்பீங்க இல்லன்னா நான் புரிய வைப்பேன்,அந்த ஊருக்கு போய் இத நான் நிரூபிச்சுக் காட்டுறேன் என்றவள் திரும்பி உள்ளே சென்று விட,
அவள் தலை மறைந்த அடுத்த நொடி தனது அலைப்பேசியை எடுத்து அழைப்பு விடுத்தவர்,
மறுபுறம் எடுக்கப்பட்டதும்,
தேவான்ஷின்ற புயல் உங்கள தாக்க அசுர வேகத்துல அங்க வந்துட்டு இருக்கு பீ கேர்புல், அவள அங்க அனுப்புற ஏற்பாட நான் பண்ணிட்டேன் இனி எல்லாம் உங்க கையில தான் இருக்கு இது தான் உங்களுக்கு இருக்குற கடைசி வாய்ப்பு,
மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ சிறிய புன்னகையுடன் தனது செல்லை அணைந்தவர் தனது வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.
ஈஷ்வரிடம் சவால் விட்டு வந்துவிட்டாலும் தேவாவின் மனத்தில் கோபம் தீரவில்லை அதன் விளைவாக அங்கு வர முடியவே முடியாது என்பவளை சம்மதிக்க வைப்பதற்குள் பவ்யாவும் விக்கியும் ஒரு வழியாகிவிட்டனர்.
தம்பி…., இறங்குங்க வூடு வந்துருச்சு என்றவரின் குரலில் யோசனையை கலைந்தவன், பெண்களை பார்க்க
பவ்யா தேவாவின் தோள்களில் சாய்ந்து உறங்கியிருந்தாள்.
அழுததில் முகம் நன்கு சிவந்துப் போய் பார்க்கவே பாவமாக இருந்தாள்.
அவளை கண்டவனிற்கு குற்ற உணர்ச்சி ஏற்பட, அருகிலிருந்த தேவாவை பாவமாக பார்த்து வைக்க,
அவனைக் கண்டுக்கொள்ளாது பவ்யாவை எழுப்பியவள்,இறங்த ஆயுத்தமாகினாள்.அவர்களுக்கு முன் இறங்கிய விக்கி கால்களை நொண்டியப்படி பவ்யா இறங்குவதற்கு கை நீட்டினான்.
அவனை முறைத்துப் பார்த்தவள் கைகளை விலக்கப் பார்க்க, அவளின் கைகளை பிடித்துக் கொண்டவன்,
பீளீஸ் பவி! சாரி டி ஏதோ தெரியாமா கோபத்துல திட்டிட்டேன் பீளீஸ் பீளீஸ் சாரி டி என இறைஞ்ச,
அதற்கு மேல் தனது கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் அவனைப் பார்த்து சிரித்தவள்,
சரி சரி விடுடா! என்றவள் அவள் கைகளை பிட கொண்டு கீழிறங்கினாள்.
அடுத்த தேவாவிற்கு அவன் கைகளை நீட்ட, பவ்யா இயல்புக்கு திரும்பியதை உணர்ந்துக் கொண்டவள் பிகு செய்யாமல் அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.
தம்பி வாங்க! ஆத்தா உள்ளாரதான் இருக்காங்க என்று விட்டு முன்னே செல்ல,
விக்கியின் கால்களில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவனது உடமைகளை தேவா வாங்கிக் கொள்ள,
பவ்யாவிற்கு வலி சற்று குறைந்திருந்ததில் அவளது உடமைகளை அவள் எடுத்துக் கொங்டு அவரை பின் தொடர்ந்தனர் மூவரும்.
ஆத்தா…!! ஆத்தா…..!!! என்றவரின் குரலுக்கு உள்ளிருந்து வெளிவந்தார் லக்ஷ்மி.
என்ன விஷயம் நாச்சியப்பா??அத்தை பின்கட்டுல இருக்காங்க??
பட்டணத்துல இருந்து புள்ளைங்க வருவாங்க அவுங்கள போய் கூட்டிட்டு வரச் சொல்லி ஐயா விடியக்காலையே சொன்னாங்கம்மா அதானுங்க ஆத்தாவ பாத்துப்புட்டு விவரம் சொல்லிப்புட்டு போலம்னு வந்தேன்.
ஓஓஓ…. அபடியே சரி இரு நாச்சியப்பா அத்தை கூட்டிட்டு வரேன் என்றவர் உள்ளே செல்லும் முன்,
அந்த பிள்ளைங்க எங்க நாச்சியப்பா???
இதோ நா போய் கூட்டிட்டு வரேன் அம்மா என்றவர் சற்றே தள்ளி நின்று இவையனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களா அழைத்துக் கொண்டு வந்தார்.
தம்பி, இவுங்க தான் லக்ஷ்மியம்மா ஆத்தாவோட மூத்த மருமக என அவர்களுக்கு அறிமுகப் படுத்த,
அவரை பார்த்த நிமிடம் தேவாவின் கரங்கள் உயர்ந்து தானாக வணக்கம் என்க,
மற்ற இருவரும் இதனை பார்த்து விட்டு அவசரமாக வண்க்கம் வைத்தனர்.
[the_ad id=”6605″]
அவளை ஒரு நொடி கூர்மையாக அளவிட்டவர், ‘வணக்கம்! உள்ளார வாங்க உச்சி வெயில்ல வந்திருக்கீங்க என்றவரின் பார்வை எதோச்சையாக விக்கியின் பாதங்களில் விழ,
அச்சோ!! என்ன தம்பி கால்ல காயம் அதோட நின்னுகிட்டு இருக்கீங்க வாங்த இங்கன வந்து உங்காருங்க என்க,
அவர் காட்டிய இடத்தில் மூவரும் அமர,
“மயிலு, குடிக்க மோர் கொண்டு வா  என உள்நோக்கி குரல் கொடுத்தவர்,
” என்ன நாச்சியப்பா எப்புடி அடிப்பட்டுச்சு”???என்க,
அதுவந்தும்மா வர்ர வழில முள் கிழிச்சிருச்சு தம்பி கால வண்டிக்கு வெளில விட்டு உக்காந்திருங்காங்க நா கவனிக்கலம்மா என அவர் குற்றவுணர்ச்சியில் உரைக்க,
என்ன நாச்சியப்பா இவுகளுக்கு நம்ம ஊரப் பத்தி என்ன தெரியும் நீ தான் எச்சரிக்க பண்ணி கூப்புட்டு வந்திருக்கணும்??
மன்னிச்சுடுங்கம்மா இனி கவனமா இருக்கேன் ஆத்தா கிட்ட காட்டி மருந்து போட்டு விடுங்கம்மா நா போய் ஐயாகிட்ட வெவரத்த சொல்லி கூப்பிட்டாரேன்,
சரிய்யா, என்றவர் அவர்களிடம் திரும்பி  மோர் கொண்டு வருவாக அத குடிச்சிட்டு நீங்க களப்பாறுங்க,
நா போய் அத்தைய கூட்டிட்டு வாரேன்
நாச்சியப்பா…, மோர குடிச்சிட்டு அப்பறம் கிளம்பு என்றவர் உள்ளே விரைந்து விட்டார்.
அந்த வெயிலிற்கு மோர் சற்பே இதமாகவே இருந்தது, அவர்கள் மோரை குடித்து முடிக்கவும் உள்ளிருந்து பிச்சை வரவும் சரியாக இருந்தது.
[the_ad id=”6605″]
அத்த, இவுங்கதான் பட்டணத்துல இருந்து வந்திருகவங்க, அந்த தம்பி காலுல முள் கிழிச்சுவிட்டிருச்சு பாருங்க ஏதாவது மருந்து இருந்தா போட்டுவிடுங்க காயம் ஆறட்டும்.
தனது மூத்த மருமகள் சொன்னவற்றை கேட்டவரின் பார்வை எதிரே அமர்ந்திருந்தவர்களை அளவிட்டு கடைசியாக அவளிடம் வந்து நிலைத்தது.
பிச்சையின் பார்வை தீட்சாணியத்துடன்அவளை துளைத்தெடுக்க,
அதற்கு சற்றும் குறையாத அகங்காரத்துடன் தனது கோப விழிகளை பிச்சையின் விழிகளோடு மோதவிட்டாள் அவள் தேவான்ஷி.
அவளின் பார்வையை எதிர்க் கொண்டவரின் உதடுகள் புன்னகை பூக்க,
அவரின் புன்னகையை ஏளனப் புன்னகையாக எண்ணி கொண்டவள் சுட்டெரிக்கும் சூரியனாய் மாறி அவரை பொசுக்கியவளிம் விழிகள் அப்பட்டமாக வெறுப்பை உமிழ்ந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!