உனக்கென இருப்பேன்-16
உனக்கென இருப்பேன்-16
நிஜமாவா ? ஆர்வமுடன் அச்சுவின் முகம் பார்த்தாள் கீர்த்தி .
நான்காண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைவு கூற தொடங்கினாள் அக்ஷ்யா .
Advertisement
“………………………”
அஸ்வின் நீ ஆசைப்பட்ட மாதிரி M.com முடிச்சுட்ட மேற்கொண்டு என்ன பண்ண போற ? திருச்சி பிஷப் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு ஹாஸ்டலி காலி செய்து வந்த மகனிடம் வினவினார் பொன்னுசாமி .
எனக்கு பிசினஸ் பண்ணனும்னு ஐடியா இருக்குப்பா .
Advertisement
பிஸினஸா ? முகம் மாறிவிட்டது பொன்னுசாமிக்கு .
Advertisement
என்னப்பா ரொமப் யோசிக்கிறீங்க?
பிசினஸ் பண்றது லேசான விஷயம் இல்லை அஸ்வின் .
தெரியும் பா ! படிச்சுட்டு சேஃபா ஒரு ஜாப்பில் போய் உட்கார்ந்து ஒன்னாந்தேதி எப்போ வரும்னு காத்திருந்து சம்பளம் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லைப்பா ….
Advertisement
அஸ்வின் பிசினஸ் ரொம்ப ரிஸ்க் . நம்ம பரம்பரையில் எல்லாரும் கவர்மெண்ட் ஜாப் பார்க்கிறவங்க. பிஸ்னஸ் பத்தின அரிச்சுவடியே தெரியாது .
அதனால் தான் நான் பிசினஸ் பண்ணணும்ன்னு ஆசைப்படறேன் என்றான் .
நிறைய பேர் சாப்ஃட்வேர் லைனில் தான் வேலை பார்க்கிறாங்க நாங்க ஹார்ட்வெரில் இறங்கலாம்னு இருக்கோம் .
இருக்கோம்னா ?
என்னோட பிரண்ட்ஸ் ஆறு பேர் சேர்ந்து பண்ற ஐடியாப்பா !
அஸ்வின் எதை செய்தாலும் யோசித்து செய்ப்பா என்றார் பொன்னுசாமி .
கொஞ்ச நாள் வேலைக்கு போய் எக்ஸ்பீரியன்ஸ் வளர்த்துக்கிட்டு தான் பிசினசில் இறங்குவேன் என்றான்.
சொன்னது போலவே திருச்சியில் ஒரு பிரபல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டான் .
கணினிக்கு உதிரி பாகம் விற்பனை செய்யும் டீலர்ஷிப்பை நடத்தும் பெரிய கம்பெனி அது.
அஸ்வின் ஆறு மாதம் அங்கு வேலை பார்த்தான் . பர்ச்சேசிங் , மார்க்கெட்டிங் ,சேல்ஸ் என்று ஓரளவு கற்றுக் கொண்டான் .
இளங்கன்று பயம் அறியாது அல்லவா ….தந்தையிடம் தொல்லை பண்ணி ஐந்து லட்சம் வாங்கினான்.
ஆறுபேர் கொண்ட நண்பர்கள் குழு தலா ஐந்து லட்சம் வீதம் முதலீடு செய்து திருச்சியில் சிறியதாய் தொழிலை தொடங்கினாரக்ள் .
பர்ச்சேஸ் பண்ணிய பொருட்களை சேல்ஸ் பண்ணும் டெக்னிக் அவர்களுக்கு தெரியவில்லை . டார்கெட் வைத்து சேல்ஸ் பண்ண வேண்டும் என்ற அளவிற்கு பிசினஸ் தெரியவில்லை .
அஸ்வின் ஒருவன் மட்டும் தன்னால் முடிந்த அளவிற்கு விழுந்து புரண்டு பார்த்தான் . தனி ஒருவனால் தூக்கி நிறுத்த முடியவில்லை .
விளைவு போட்ட பணம் கோவிந்தா …..சரோஜினி மகனை கடுமையாக பேசத் தொடங்கிவிட்டார்.
உனக்கு அஞ்சு லட்சம் சும்மாவா ? பணம் தெருவிலா கிடக்கு …இல்ல மரத்துல தான் காய்க்குதா ? திட்டி தீர்த்தார் .
விடு சரோ ….இது ஓரு அனுபவம் அவனுக்கு ,மகனுக்கு வக்காலத்து வாங்கினார் பொன்னுசாமி .
எது அனுபவமா ? இவன் இருக்கிற சொத்தை எல்லாம் வித்து ஊதிடுவான் பாருங்க !
அந்த அஞ்சு லட்சம் இருந்திருந்தா அச்சு படிப்பு செலவுக்கு ஆகியிருக்கும். பொம்பளை பிள்ளை வச்சிருக்கோம் நகையாவது வாங்கியிருக்கலாம் . சரோஜினி ஆடிய ஆட்டத்தில் அப்செட் ஆகிவிட்டான் அஸ்வின்.
அம்மா …அண்ணா பாவம் . பணம் போனா போயிட்டு போகுது . அண்ணனை எதுவும் திட்டாதேம்மா. நான் இப்போ தானே +2 படிக்கிறேன் . நன் காலேஜ் போறதுக்குள்ள அண்ணன் சம்பாதிக்க ஆரம்பிச்சுடும் . அண்ணனுக்கு சப்போர்ட்டாய் நின்றாள் அக்ஷயா.
கிழிச்சான் உங்கண்ணன். சரோஜினி பொருமி தள்ளினார் .
கடுப்பான அஸ்வின் ம் மா ….எப்பாடு பட்டாவது எண்ணி ரெண்டு வருஷத்துக்குள்ள இந்த அஞ்சு லட்சத்தை அடைக்கிறேன் போதுமா ? சவால் விடுத்தான்.
“…………………”
பிசினஸை மூட்டை கட்டி வைத்துவிட்டு தீவிரமாக படித்து வங்கி தேர்வு எழுதினான் . அவன் துரதிர்ஷ்டம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை . சொற்ப மதிப்பெண் வித்தியாசத்தில் கோட்டைவிட்டான்.
படித்த இளைஞன் தெண்ட சோறாய் இருப்பது மிகப்பெரிய வலி.அதை அனுபவித்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.
அப்பா நான் திருச்சியில் ஆகாஷ் கோச்சிங் சென்டரில் சேர்ந்து TNPSC எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ண போறேன் என்றான்.
சரியாக உண்ணாமலும் உறங்காமலும் பொலிவிழந்த மகன் முகம் கண்டு நெஞ்சை அழுத்தியது பொன்னுசாமிக்கு.
எவ்வளவுப்பா கட்டணும் ? பொன்னுசாமி அனுசரனையாய் கேட்டார்.
வேண்டாம்பா நான் பார்த்துக்கறேன் . முன்னாடி வேலை பார்த்த கம்பெனியில் பார்ட் டைம் ஜாப் கேட்டிருக்கேன் . நான் சமாளிச்சுப்பேன் என்றான் ஒருவித முடிவுடன் .
கைசெலவிற்கு கூட பணம் வாங்கி கொள்ளாமல் வீம்பாய் கிளம்பும் அண்ணனுக்கு தன் சேமிப்பில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாள் அக்ஷ்யா .
வேண்டாம் என்று மறுத்த அண்ணன் கையில் வலுக்கட்டாயமாக திணித்தாள் .
அவன் சங்கடமாக பார்த்தான் .
அண்ணா எனக்கு நம்பிக்கை இருக்கு ,நீ எவ்வளவு பெரிய ஜாபுக்கு போகப் போற பாரு ! மனதார நம்பிக்கையான வார்த்தைகளை கூறினாள் .
“………………………”
கடலூர் திருச்சி அரசு விரைவுப் பேருந்து …திட்டக்குடி பேருந்து நிலையத்தில் ஏறினான் அஸ்வின் .
காலை நேரம் பீக் அவர் அல்லவா ? பயங்கர கூட்டம் .அலுவலகம் செல்பவர்களும் ,பள்ளி கல்லூரி செல்பவர்களும் …பேருந்து பிதுங்கி வழிந்தது .
சோர்ந்த மனதுடன் ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க தொடங்கினான் அஸ்வின் .
கூட்டமாய் ஏழெட்டு மாணவிகள் அடித்துபிடித்து ஏறினார்கள்.
ஹலோ இதை கொஞ்சம் வச்சிக்கோங்க ப்ளீஸ் ! தன் கையில் இருந்த பேக்கையும் இரண்டு பெரிய நோட்டுகளையும் ,ஒரு தலையணை அளவிலான புத்தகத்தையும் அஸ்வின் மடி மீது வைத்தாள் ஒரு பிங்க் வண்ண சிட்டு .
கீர்த்தி ரெண்டு நாளா ஏன்டி காலேஜ்க்கு வரல ….? ஒரு நீல வண்ண மொட்டு அந்த சிட்டிடம் வினவியது .
உனக்கு விஷயமே தெரியாதா ஷாலு ? அவளோட காட்பரீஸ்து செத்து போச்சு என்றாள் ஒரு மஞ்சள் வண்ண மொட்டு . அச்சச்சோ என்று உச்சு கொட்டியது அந்த மொட்டுக்கள் எல்லாம் சேர்ந்து .
ஹே திஸ் இஸ் டூ மச் ….ஒரு நாய் செத்ததுக்கு போய் ….கூட்டத்தில் ஒருத்தி சிரிக்க தொடங்கினாள் .
ரேணு …எதுக்கு இப்படி கேவலமா சிரிக்கிற ? நாயும் உயிர் தானே …? கண் கலங்க முறைத்தாள் அவர்களால் கீர்த்தி என அழைக்கப்பட்டவள் .
கீர்த்தி கூல் யா …கூல் …உன் பெட்ஸ் பத்தி அவளுக்கு தெரியாது ரிலாக்ஸ் மச்சி என்றாள் இன்னொருத்தி .
காட்பரீஸ் இல்லாம எங்க வீடே வீடா இல்லை ஷாலு . நான் ரொம்ப மிஸ் பண்றேன்டி. குட்டியா வாங்கிட்டு வந்தோம் . மூணு வருஷமா எவ்வளவு செல்லமா வளர்த்தோம் தெரியுமா ? டெய்லி நான் காலேஜ் கிளம்பும்போது என்னை வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பும், ஈவினிங் நான் வர வரைக்கும் எனக்காக காத்திருக்கும் .காட்பரீஸ் இல்லாம சாப்பிட பிடிக்கல , படிக்க பிடிக்கல கஷ்டமா இருக்குடி ….உடைந்து போனாள் அந்த பெண்.
அவர்களது சம்பாஷணைகள் கேட்டு மெல்ல அந்த கீர்த்தி யாரென்று நிமிர்ந்து பார்த்தான் .
குழந்தை போல இருந்தாள். மாசு மருவற்ற வட்ட முகம். தேஜஸான கண்கள்…. பளிச்சென்ற தோற்றமே கண்களுக்கு இதமாக இருந்தது. அவள் முக அழகை விட அக அழகே அவனை கவர்ந்திழுத்தது.
தன் மடியில் இருந்த அவள் நோட்டை அலாதி ஆவலுடன் பிரித்து பார்த்தான். S கீர்த்தனா Dpharm என்று இருந்தது. தனலட்சுமி சீனுவாசன் கல்லூரி மாணவி .
பெரம்பலூர் வரவே ஒரு பெரிய கூட்டமே திபு திபுவென்று இறங்கியது .
அஸ்வினிடம் இருந்து தன் உடைமைகளை பெற்றுக் கொண்டவள் தேங்க்ஸ் என்றாள்.
அவள் இறங்கி போனதும் அவன் மனம் வெறுமையாய் உணர்ந்தது.
திருச்சி வரை அவள் நினைவுடனே அவன் பயணம் தொடர்ந்தது .
“…………………”
நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கொண்டவன் மறுநாளே வேலையில் சேர்ந்து விட்டான்.
காலை ஒன்பது முதல் நான்கு மணி வரை வேலை . மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது வரை TNPSC பயிற்சி வகுப்பு.
மிகவும் சிரமப்பட்டுவிட்டான் இரண்டையும் மேனேஜ் பண்ண …வேலை ,பயிற்சி வகுப்பு ,இரவில் கண்விழித்து படிப்பு என்று பிஸியாகவே அவன் நாட்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது .
ஹோட்டலில் சாப்பிட்டு நாக்கு செத்து போனது போன்ற பீல் அவனுக்கு. துவைக்கப்படாத ஒரு வாரத்து துணி வேறு பயமுறுத்தியது. உடனடியாய் வார இறுதிக்கு காத்திருந்து ஊருக்கு கிளம்பிவிட்டான் .
“……………………..”
மகனை கண்டதுமே வித விதமாய் சமைத்து தள்ளிவிட்டார் சரோஜினி.
வயிறார உண்டு , தங்கையுடன் பேசி அரட்டை அடித்து , நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி ….புத்துணர்வுடன் அன்றைய நாள் சென்றது .
இரவு படுக்கையில் விழும்போது தான் நினைவிற்கு வந்தது நாளைஅந்த பெண்ணை பார்க்க முடியுமா? அவள் வருவாளா ?
அவ்வளவு உற்சாகமாய் கிளம்பினான். அவள் அந்த பேருந்தில் வருவாளா? உறுதியாக தெரியாது என்ற போதும் ஒரு நப்பாசை . அவள் வருவாள் என்ற உள்ளுணர்வின் நம்பிக்கை.
திட்டக்குடி பேருந்து நிலையம் ….. முன்டி அடித்து டிரைவர் சீட்டின் பின்புறம் உள்ள சீட்டில் தத்தி தாவி இடம் பிடித்து அமர்ந்துவிட்டான். ஏதோ பாராளுமன்ற தேர்தலில் MP சீட்டில் வெற்றி பெற்றது போன்ற உவகை அவனுக்கு .
இதயம் எகிறி துடித்தது . அவன் பார்வை படிக்கட்டை வெறித்தது. பின் பக்கம் ஏறிவிடுவாளோ? கொஞ்சம் பயமாய் இருந்தது. நாலா புறமும் வலைவீசியது அவன் கண்கள்.
இதோ ஏமாற்றம் அளிக்காமல் அவள் வியர்வை பூக்க பேக்கை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஏறிவிட்டாள்.
தலைக்கு குளித்து இருப்பாள் போலும் ….முடி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் அலை பாய்ந்தது.
எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள் தேவதை பெண். விபூதி ,சந்தனம் வைத்து பாந்தமாய் கண்களை நிறைத்தாள் கருத்திலும் பதிந்தாள்.
படபடப்பாய் அவளையே பார்த்திருந்தான். அவள் கூட்டத்தில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் .இன்று பேக்கை பக்கத்துக்கு சீட் பாட்டியிடம் கொடுத்து விட்டாள்.
சோகமாக பார்த்துக் கொண்டே வந்தான்.
என்ன கீர்த்தி டல்லா இருக்க ? தோழி ஒருத்தி கேட்டாள். இன்னைக்கு என்ன விரதம்? ரேணு கிண்டல் அடித்தாள்.
இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தி என்றாள் கீர்த்தி.
ஒரு விரதம் பாக்கி இல்லாம எல்லா விரதமும் இருக்கடி நீ! எப்படி தான் பசி தாங்கறியோ? சளித்துக் கொண்டாள் ஒரு தோழி.
அவர்கள் உரையாடலை கேட்டு சிரித்துக் கொண்டான்.
சின்ன பொண்ணா இருந்தாலும் பக்தி பழமா இருக்ககாளே? ஆச்சரியப்பட்டான்.
ஒரு நாளைக்கு சமையல் லேட் என்றாலே தட்டை போட்டு உடைக்கும் தங்கையின் நினைவு வரவே சிரித்துக் கொண்டான்.
பெரம்பலூரில் அவள் இறங்கும் போது….தேவதை பெண்ணே போகாதே என்று கத்த வேண்டும் போல் இருந்தது. சிரமப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
ஒரு சிறு பெண் பின்னால் தன் மனம் செல்வதை கண்டு அவனால் புலம்ப தான் முடிந்தது ,கட்டுப்படுத்த முடியவில்லை.
அவன் பெண் பிள்ளைகளை சிநேக பாவத்துடன் கடந்து செல்லத் தெரியாதவன் இல்லை . இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தவன் தான்.
ஆயினும் அவளிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி …தெய்வகடாக்ஷம் ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது.
“……………………..”
வாரா வாரம் தவறாமல் ஊருக்கு வந்து நிற்கும் அண்ணனை கேள்வியால் குடைந்தாள் அச்சு.
என்ன உன் கதை? ஆளே ஒரு தினுசா இருக்க ?
ஒன்னும் இல்லையே ….உடனடியாய் அவன் மறுக்க …அவன் பதட்டத்தில் எதோ இருப்பதாக உணர்ந்து கண்டாள் அருமை தங்கை.
ம்கூம் ….அயர்ன் பண்ணின ஷர்ட்டையே நாலு முறை அயர்ன் பண்ற! பவுடர் கூட போடாத நீ பெர்பியூம்லாம் போடற? தலையை வாரி வாரி கலைக்கிற…. சம்திங் ராங் நெற்றிப் பொட்டில் தட்டிக் கொண்டாள் அச்சு.
ஐயோ இவ இவ்வளவு அறிவா இருக்காளே…உண்மையில் பயந்து தான் போனான் அஸ்வின்.
“……………………”
அண்ணா எனக்கு டை காட் ரூட் LCR வரைந்து தரியா? பாட்டனி ரெக்கார்டை கொண்டு வந்த அச்சு…அண்ணா என் ரெக்கார்டை பார்த்து எல்லாரும் அசந்து போகணும் ! பேசிக் கொண்டே அருகில் வந்த அக்ஷயாவை கண்டவுடன் அவசரமாய் தன கையில் இருந்த நோட்டை மூடினான்.
என்ன….திருட்டுத்தனம் பண்ற ?
கிழிஞ்சுது போ …இவகிட்ட கையும் களவுமா மாட்டிகிட்டோம் போல… பேந்த பேந்த விழித்தான்.
வா அச்சு ! என்ன கேட்ட ? தடுமாறினான்.
நான் கேட்டது இருக்கட்டும் ….என்னை கண்டதும் நீ என்ன மறைச்சு வைத்த?
ஒண்ணுமில்லையே …..அவன் குரலே சரியில்லை.
அவன் கையில் இருந்த நோட்டை வெடுக்கென்று பிடுங்கினாள்.
ஏய் அச்சு மரியாதையா அந்த நோட்டை கொடுத்துடு ! விரட்ட தொடங்கினான்.
ஐயோ அண்ணா அம்மா வராங்க….அவள் பேச்சில் ஒரு நிமிடம் அவன் உறைந்து நிற்க ….அக்ஷ்யா நோட்டை தூக்கி கொண்டு வெளியில் ஓடியே போனாள்.
மொட்டை மாடிக்கு ஓடியவள் நோட்டை பிரித்து பார்த்தாள்.
அஸ்வின் கீர்த்தி கீர்த்தி அஸ்வின் என்று வித விதமாய் எழுதி கிறுக்கி தள்ளியிருந்தான்.
ஸ்ரீ ராமஜெயம் கணக்காய் பல நூறு முறை எழுதி இருந்தது தான் ஹைலைட்.
ஏய் மரியாதையா என் நோட்டை கொடு! நங்கென்று அவள் தலையில் கொட்டினான்.
நான் எல்லாம் பார்த்தாச்சு ! இந்தா உன் நோட்டை நீயே வச்சுக்கோ ! அவன் கையில் திணித்துவிட்டு ஓடினாள்.
அச்சு …அவள் பின்னாடியே ஓடினான். அம்மா அப்பாவிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு.
