Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyindri Vaazhveno

Neeyindri Vaazhvaeno 31 1

 

பகுதி – 31

ரிஷி நேகாவை வைத்துப் படம் எடுப்பது. குடும்பத்தில் மட்டும் அல்ல பட உலகிலும் சர்ச்சையை உருவாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் பத்திரிக்கைகளின் கவனத்தையும் கவர்ந்தது.

ஏற்கனவே ரிஷி சாதனாவை பற்றி முன்பு எழுதி அடிவாங்கிய பாத்திரிக்கை, இந்த விஷயத்தை மேலும் துருவியதில்… சாதனா சில மாதங்களாக அவள் பிறந்த வீட்டில் இருப்பது தெரிய வர…. ரிஷியும் சாதனாவும் நிரந்தமாகப் பிரிந்து விட்டனர். அதனால தான் ரிஷி சென்று மீண்டும் நேகாவோடு சேர்ந்து கொண்டான் எனத் தங்கள் பத்திரிகையில் எழுதினர். அதைப் பார்த்து மற்ற பத்திரிக்கைகளும் எழுதியது.



Advertisement

எழுதி விட்டு அவர்களுக்கே ரிஷி, வெற்றியை நினைத்துப் பயம் தான். முன்பு போல் அடிக்க வந்துவிட்டால்…. அதோடு ஆட்சியில் இருக்கும் மந்திரிகள் வீட்டு விவகாரம் ஆயிற்றே.

ஆனால் எதுவாக இருந்தாலும் ரிஷியிடம் இருந்தே வரட்டும் என வெற்றி அமைதி காத்தான். அதோடு சாதனா தன் கணவனை நம்பும் போது… வெற்றியாலும் எதுவும் செய்யமுடியவில்லை.

ரிஷியும் அந்தச் செய்திக்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை….அது வெற்றியின் கோபத்தை மேலும் தூண்டியது. அவன் அந்தக் கோபத்தையும் ப்ரீதாவிடமே காட்டினான். அவள் செல்லில் அழைத்த போது… எடுத்து பேசவில்லை.

Advertisement

ரிஷியின் நண்பன் அஷோக் சாதனாவை செல்லில் அழைத்துப் பேசினான்.

Advertisement

“என்ன சாதனா நான் அவ்வளவு சொல்லியும், ரிஷியை படம் எடுக்க விட்டுடீங்க. அதுவும் நேகாவை வைச்சே…. ” எனக் கேட்டதற்கு, வெற்றியிடம் என்ன பதில் சொன்னாளோ… அதையே அஷோக்கிடமும் சாதனா சொல்ல….

“ரிஷிகிட்ட உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் நேகா எந்த அளவுக்கும் போவா…அவ இந்தச் சந்தர்ப்பத்தை விடவே மாட்டா….” என அவன் சொன்ன போது… நேகாவை நினைத்து சாதனாவிற்கு மே கொஞ்சம் அச்சம் பிறந்தது.

‘ரிஷியை என்னிடம் திரும்பி வரவைக்க என்னால் முடியும்.’ எனத் திமிராக அவளிடமே சொன்னவள் தானே…. ஆனால் மறுநொடியே, அவள் அந்த முயற்ச்சியை ரிஷியிடம் தானே செய்ய வேண்டும். அவன் அதற்கு இடம் கொடுத்தால் தானே… எனத் தன் கணவனின் மீது நம்பிக்கையும் எழுந்தது.

Advertisement

 

 

 

[the_ad id=”6605″]

 

 

இதற்கு நடுவில் ரிஷி சாதனாவை செல்லில் அழைத்துப் பேசிக்கொண்டு தான் இருந்தான். முன்பு மாதிரி அதிக நேரம் பேசவில்லை என்றாலும், சிறிது நேரமாவது அழைத்துப் பேசிவிடுவான்.

அப்படிப் பேசும் போது… அவனும் தான் படம் எடுப்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை…. சாதனாவும் கேட்கவில்லை….

அஷோக் சொன்னது போல்… நேகாவும் ரிஷியோடு மீண்டும் இணையும் வாய்ப்பை விடுவதாக இல்லை. அவன் தந்தையால் தான் தனக்குப் படம் இல்லாமல் போனது பற்றி நியாயம் கேட்கவே சென்றாள். அப்போது அவளுமே ரிஷியே தன்னை வைத்துப் படம் எடுப்பான் என்று நினைக்கவில்லை.

அதோடு பத்திரிகையில் வந்த செய்தியை வைத்து பார்க்கும் போது… ரிஷிக்கும் சாதனாவிற்கு ம் நடுவில் எதோ பிரச்சனை என்று நினைத்தவள், தகுந்த சந்தர்பத்திற்காகக் காத்திருந்தாள்.

சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டு இருந்தது. படத்தின் கதாநாயகி என்ற முறையில் அதற்கு நேகாவும் வந்திருந்தாள்.

கதை, இயக்குனர் எல்லாம் முடிவான பிறகு மற்றவர்கள் ரிஷியிடம் விடைபெற்று கிளம்ப… நேகாவிடம் கண் ஜாடை காட்டிவிட்டு அவளின் அம்மாவும் வெளியே செல்ல… அதைக் கவனித்தும் கவனிக்காதது போலவே ரிஷி இருந்தான்.

அவள் அம்மா கதவை மூடி விட்டுச் சென்றதும், மெதுவாக எழுந்த நேகா, ஒயிலாக நடந்து சென்று… ரிஷி அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து, அவன் தோளை சுற்றிக் கையைக்கொண்டு வந்து அணைக்க முயன்ற நொடி “இப்ப நீ ஒழுங்கு மரியாதையா எழுந்து உன் இடத்துக்குப் போகலைன்னா…. நான் என் படத்துக்கு வேற கதாநாயகி போட வேண்டியது வரும்.” என ரிஷி மிரட்டலாக அறிவிக்க… நேகாவின் முகம் அவமானத்தால் கருத்துச் சிறுத்தது.

அவள் எழுந்து சென்று முன்பு அமர்ந்திருந்த இருக்கையில் அமரும் வரை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த ரிஷி “முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கோ… உன்னோட பழைய உறவை புதுபிக்க, நான் இந்தப் படம் எடுக்கலை…”

“என்னால உனக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்துக்குப் பரிகாரமா உன்னை வச்சுப் படம் எடுக்கிறேன். அவ்வளவு தான். அதுவும் உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான். இதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டியது உன்னோட திறமை. அதைத் தாண்டி வேற எதையும் என்கிட்டே எதிர்பார்க்காத….”

“உங்களுக்கும் எனக்கும் இடையில் வேற எதுவுமே இல்லையா ரிஷி…. உங்களால என்னை முழுசா மறக்க முடியுமா… சும்மா பொய் சொல்லாதீங்க.” நேகா நம்பாமல் பேச….

“நீ என்னைப் பார்க்க வர்றவரை எனக்கு உன்னோட நினைவு கூட இல்லை.” ரிஷி அலட்ச்சியமாக பதில் கொடுக்க…

நேகா “அவ்வளவு தானா ரிஷி உங்களோட காதல்.” என்றாள் உருக்கமாக.

“என்னது காதலா… அந்த வாரத்தையைக் கேவலப்படுத்தாத… உன்கிட்ட காதலை சொல்லி தொலைஞ்சதுனால தான். அது எதோ கெட்ட வார்த்தை போல் ஆகிடுச்சு. மனசு முழுக்கச் சாதனா மேல காதல் இருந்தாலும், அந்த வார்த்தையை என்னால அவகிட்ட சொல்ல முடியலை…”

ரிஷி சொன்னதைக் கேட்ட நேகாவிற்குக் கொதித்துக்கொண்டு வந்தது.

“நான் கேவலம். ஆனா அவ மட்டும் அவ்வளவு உசத்தியா…”

“நான் உன்னைக் கேவலப்படுத்தனும்னு நினைக்கவேயில்லை… நீ தான கேட்கிற அப்ப வாங்கிக்கோ….” என்றவன்,

“உன்னோட முழு வரலாறும் என்கிட்ட இருக்கு. பழசை விடு… பெரிய கனவுக் கன்னியா ஆகிடலாம்னு மும்பை போய்… என்னைப் போல அங்க ஒரு இளிச்சவாயனை நீ தேட…. ஆனா உன்னை விட ஒரு தில்லாலங்கடி கிட்ட மாட்டி, சின்னாபின்னமாகி நீ திரும்ப வந்த வரை எல்லாம் தெரியும்.”

 

 

[the_ad id=”6605″]

 

 

ரிஷிப்பேச பேச நேகா முகம் கருத்தாள். அதைக் கவனித்த ரிஷி “உன்னை ஹர்ட் பன்னனும்கிறது என்னோட நோக்கம் இல்லை. உனக்கும் எனக்கும் இடையில இருந்தது லவ் இல்லை. அது ஒரு கமிட்மென்ட். நீ அழகா இருந்ததுனால நான் வந்தேன். நான் பணக்காரனா இருந்ததுனால நீ வந்த….. இதுல நாம எப்ப லவ் பீல் பண்ணோம்?” இது நேகா சொன்னது தான். அதையே ரிஷி சொன்ன போது அவளுக்கு மிகவும் வலித்தது.

“நீ என்னை வேண்டாம்னு போனதும், நான் ஒன்னும் உடைஞ்சு போகலை… நல்லாத்தான் இருந்தேன்.”

“ஆனா சாதனா இல்லாம என்னால ஒருநாள் நாள், ஏன் ஒரு நிமிஷம் கூட நினைக்க முடியாது. அவளை நான் திட்டி இருக்கேன், வெறுத்து பேசி இருக்கேன். அப்படி இருந்தும் அவ கஷ்ட்டபட்டா என்னால தாங்க முடியலை… அவளை விட எனக்கு அது அதிகமா வலிக்குது. அதுதான் உண்மையான லவ்.”

“எங்க குழந்தை அபார்ஷன் ஆன போது…. ‘நான் நேகாவோட வாழ்க்கையைப் பரிச்சிட்டேன். அந்தச் சாபம் தான் இப்படி ஆகிடுச்சோன்னு…’ சாதனா சொல்லி வருத்தபட்டா…. உண்மையிலேயே அந்த ஒரு காரணம் தான், நான் உனக்கு இப்ப உதவி பண்ண.”

 

“இல்லைனா… நீ பேராசைபட்டு போன… உனக்கு நஷ்ட்டம் வந்தா… அதுக்கு நான் பொறுப்பான்னு தான் இருந்திருப்பேன்.”

ரிஷி சொன்னதைக் கேட்டு நேகா வாய்யடைத்து போனாள்.
என் மனைவிக்காகத்தான் உனக்கு உதவியே செய்கிறேன் என்பவனிடம் வேறு என்ன பேச முடியும். ஆனாலும் அப்படியே விட்டு செல்ல மனமில்லை…

“எனக்குச் சாதனா மாதிரி வாழ்க்கைல எல்லாம் ஈஸியா கிடைக்கலை… நான் ஒவ்வொன்னுக்கும் போராடி இருக்கேன். அவளை மாதிரி எனக்கும் அமைஞ்சு இருந்தா… நானும் உங்களை இழந்திருக்க மாட்டேன்.”

“நீ சாதனாவை பத்தி தெரியாம பேசுற… எதோ நேத்து வந்தவ உன் வாழ்க்கையைத் தட்டி பறிச்சிட்ட மாதிரியே நீ நினைக்கிற…. அது உண்மை இல்லை. உனக்கு ரொம்ப முன்னாடியே என்னை விரும்பினவ அவ…”

“எங்க கல்யாணம் ஆனப் பிறகும் கூட அவ அதை என்கிட்டே சொல்லலை… நானா தான் கண்டு பிடிச்சிருக்கேன். அவ என்கிட்டே காதலை சொன்னது இல்லை… ஆனா அந்தக் காதலை உணர் வச்சிருக்கா….”

“எல்லா விதத்துலேயும் அவ என்னை விட உயர்ந்தவ… அது தான ரிஷி நீங்க சொல்ல வரீங்க.”

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“நீ உயர்ந்தவளா அவ உயர்ந்தவளான்னு இங்க போட்டி நடக்கலை… என்னால என் மனைவிக்கு ஒருநாளும் துரோகம் செய்ய முடியாது. என்னை ஒருநாளும் அந்த எண்ணத்தில் அணுக முயற்சி பண்ணாத. அதைத் தான் சொல்ல வரேன்.” என்றவன், யாரையோ போன்னில் அழைத்தான்.

சிறிது நேரத்தில் இருவர் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தனர். அவர்களின் பின்னே நேகாவின் அம்மாவும் ஒன்றும் தெரியாதது போல் உள்ளே நுழைந்தார்.

“மணி இனி எல்லாம் உங்க பொறுப்பு. எந்த ஆர்டிஸ்ட்டும் என்கிட்டே எதுக்கும் வரக் கூடாது. அப்படி வந்தா நான் உங்களைத் தான் திட்டுவேன். எனக்கு இது மட்டும் வேலை இல்லை ஆயிரம் வேலைகள் இருக்கு.” என்றவன், எழுந்து அவனின் இயல்பான வேக நடையுடன் வெளியே சென்று விட்டான்.

இனி அவனிடம் தன்னுடைய எந்த முயற்சியும் பலிக்காது. அதையும் மீறி முயற்சி செய்தால்… கொடுத்த பட வாய்ப்பையும் பிடிங்கிக் கொள்வான் என நேகாவிற்கு நன்றாகவே புரிந்தது. இதையும் இழந்தால்… அவள் அம்மா அவளைப் பேசியே கொன்று விடுவார்.

மறுநாள் சாதனாவும், வெற்றியும் சென்னை கிளம்பினர். ரிஷியின் படக் கம்பெனி துவக்க விழா. அதற்கு அவன்தான் இருவரையும் அழைத்து இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!