Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 18 2

“இனிமே  என் முன்னாடி ஷேக்தாவுத்தை  மச்சான்னு  கூப்பிடாதே”  என்றான்…

“ஏன்  கூப்பிட்டா  என்ன?” என்று சிரித்துக்கொண்டே கேட்க..



Advertisement

” எனக்கு கோபம் வருது  பானு. அவர நீ மச்சான்னு கூப்பிட்டா. என்ன மட்டும் முறை வச்சு கூப்பிட மாட்ட. ஆனா அவர மட்டும் முறை வச்சு கூப்பிட்டா என்ன அர்த்தம் ”  என்றான்..

Advertisement

“சரி உங்கள எப்படி கூப்பிடனும் சொல்லுங்க  நான் அப்படியே கூப்பிடுறேன். மச்சான்னு கூப்பிடவா.  இல்லை  மாமான்னு கூப்பிட வா”  என்றாள்..

Advertisement

“இரண்டுமே  எனக்கு பிடிக்கல, வேற மாதிரி கூப்பிடு”…

Advertisement

” சரி வாங்க என்  பக்கத்தில்”  என்று அவனை தன் பக்கத்தில் அமர வைத்தவள்.. “நீங்க  எல்லாரும் மாதிரி கிடையாது என் ஹஸ்பண்ட் சம்திங் ஸ்பெஷல்  சோ ஸ்பெஷல்ல  உங்களுக்கு இரண்டு பேரு  என் மனசுல நெனச்சு  வச்சுயிருக்கேன்  கூப்பிடவா”  என்றாள்..

“எனக்கா பானு கூப்பிடு” என்றான்..

“உங்க  பேருல வருமே  ஒரு எழுத்து ஜித். விக்ரம் ஜித்  அதை சுருக்கி  எல்லாரும் இருக்கும் போது ஜீ யின்னு கூப்பிடுறேன்”  என்றாள்..

“அப்போ    யாரும் இல்லா தப்போ என்ன  எப்படி கூப்பிடுவா, சொல்லு பானு”  என்றான்..

“அது செல்லமா “ஹபீபி” யின்னு  கூப்பிடுவேன்”..

“அது என்ன ஹபீபி அப்படியின்னா என்ன அர்த்தம்”…

“ஹபீபியின்னா  என் அன்பே  என்று அர்த்தம்”  என்றாள்..

“பானு”என்றவன். “நான் உன் அன்பே வா” என்று  கேட்டு  அவளை அணைக்க வர..

“ஐயோ டோர்  திறந்துருக்கு”  என்றாள்..

 “அப்போ  டோர் முடியிருந்த பரவாயில்லை  பானு பேபி   என்று டோரை  லாக் பண்ணிவிட்டு   அவளின் அருகில் வர..

” வேண்டாம் ஹபீபி  பிள்ளைகள் வந்திருவாங்க”  என்றாள்..

“வந்தா  கதவை தட்டுவாங்க  நீ சொல்லு இன்னொரு வாட்டி, ஜீ யை விட இந்த ஹபீபி ரொம்ப கிக்கா இருக்கு சொல்லு ”  என்றான்..

“இது ஹாஸ்பெட்டல், நம்ம வீட்டுக்கு போய் கூப்பிடுறேன் ஜீ ”  என்றாள்..

“நோ பானு பேபி ஒரே ஒரு வாட்டி கூப்பிடேன் ”  என்றான்..

அவன் கண்களை பார்த்து கொண்டே  “என் ஹபீபி”என்றாள்..

“பானு” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்திருக்க..

“டாடி, மா. ஆபிமா  என்று  பிள்ளைகள் கதவை தட்டும் ஓசை கேட்க. பானுவிடம் இருந்து விலகியவன். “வந்துட்டாங்க பிள்ளைகள்”  என்று பானுவில் இதழில் வேகமாக ஒரு  முத்தம் வைத்து “லவ்  யூ டி பொண்டாட்டி” என்று  சொல்லி விட்டு  கதவை திறந்தான்…

 பானுவுக்கு அவனின் ஒவ்வொரு செயலிலும்  தன் மேல் அவன்  வைத்திருக்கும்  காதல் தெரிந்தது..

ஆஷிக் விக்ரமிடம் வந்து “டாடி தாத்தா எனக்கு கேம் விளையாட டேப் வாங்கி தந்தாங்க”  என்று காண்பிக்க.

“சூப்பர்டா  கண்ணா விளையாடு” என்றான்..

“அப்பா எனக்கு தாத்தா கேட் டெடி வாங்கி தந்தாரு  பாருக்க” என்று சிவாக்குட்டி தந்தையிடம் காண்பித்தாள்.

“நல்லா  இருக்குடா  சிவாக்குட்டி” என்றாள் பானு..

“சூர்யா  நீ என்ன வாங்குன” என்று விக்ரம் கேட்க..

 “நானா  டாடி   செஸ்போர்ட்  வாங்குனேன், நானும் தாத்தா விளையாடா போறோம்”  என்று பிள்ளைகள் அனைவரும் அவர்கள் ரூம் சென்றனர்..

சுந்தர் நான் பாத்துக்கிறேன் என்று பிள்ளைகளோடு சென்றார்..

டாக்டர் வந்து ஆபிதாவை செக் பண்ணி பார்த்து விட்டு..

“ஆபிதாவுக்கு   எல்லாம் நார்மலா இருக்கு விக்ரம்,  எந்த பிரச்சனையும்   இப்போ  இல்லா நீங்க நாளைக்கு  ஆபிதாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்றார்..

விக்ரம் ஆபிதாவை லண்டனுக்கு அழைத்து செல்வதாக சொல்ல..

“ஒரு  15 டேசாவது அவங்க கம்பிலிட்  ரெஸ்ட் எடுக்கனும் விக்ரம் அதற்கு அப்பறமா எங்க  வேனா கூட்டிட்டு போங்க” என்றார்..

“நான் தனி விமானத்தில் ஆபிதாவை அழைத்து செல்வதாக சொல்ல”..

 “அப்போ   ஓகே விக்ரம்  தாராளமா அழச்சுட்டு போகலாம்”  என்றார்..

மறுநாள் அழகாக  விடிந்தது பானுவுக்கு, அவளுக்கு எடுத்த அனைத்து  டெஸ்ட் ரிசல்டும்  வந்து இருக்க அதை பார்த்த டாக்டர். ஆபிதா பானு   இனி  தினமும் எந்தெந்த  மாத்திரை சாப்பிட வேண்டும் என்று எழுதி கொடுத்தவர். “நீங்க கிளம்பலாம்”  என்றார்..

விக்ரம் டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு அனைவரையும்   அழைத்துக்கொண்டு மஹாமுது இல்லம் வந்தான்..

இவர்களுக்காக மஹாமுது வீட்டின்  அனைவரும் காத்து இருந்தனர்.. மஹாமுது விக்ரமையும், சுந்தரையும்  பார்த்து வாங்க என்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்..

 முபாரக் தங்கை பார்த்து “எப்படி இருக்க ஆபீதா? என்றான்..

“நான் நல்ல இருக்கேண்ணா” என்றாள்..

ஆஷிக் சூர்யாவை அழைத்து  வீட்டை சுற்றி காண்பித்துக்

கொண்டிருந்தான்…

சிவாக்குட்டி சுந்தரின் மடியில் இருந்தாள்.. அவள் கேட்கும் அனைத்து கேள்வி கலங்காமல்  பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்…

முபாரக்கின்  மனைவி   நிஷா மஹாமுது இல்லம்  வந்திருந்தாள்…

அனைவருக்கும்  தேன் நீர் கொண்டு வந்து கொடுத்தவள். தன்னை முபாரக்கின் மனைவியை என்று அறிமுகம்  படுத்தி கொண்டான்..

ரூம்பில் வாஜிதா பானுவின்  குழந்தைகள் அழும் சத்தம் கேட்க.. ஆபிதா பானு தந்தையிடம்  “வாஜி வந்துட்டாளா பா” என்றாள்..

“ஆமா பானு  கொஞ்சம் முன்னாடி தான்  வந்தா”…

 உடனே எழுந்தவள்  தங்கை இருக்கும்  அறைக்கு சென்றாள்.

ஷேக்தாவுத்  ஆபிதாவை பார்த்து “வா ஆபிதா”  என்றார்..

ஆபிதா தங்கையை பார்க்க அவள் சோர்ந்து  போய் படுத்திருந்தாள்.. ஆபிதாவை பார்த்து  வாஜிதா  எழுந்து கொள்ள  பார்த்தவளை..”நீ படு  வாஜீ  நான் பிள்ளைகளை பார்த்துக்கொள்கிறேன்” என்றவள்..

பிள்ளைகளை ஆவலோடு பார்த்தால் இரண்டு பிள்ளைகளும்  வெண்னையில் செய்து வைத்த உருண்டை போல்  இருக்க.. “உன்ன  மாதிரியே இருக்காங்க, என் செல்ல குட்டிங்க”   என்றாள் ஆபீதா பானு..

“நீ எப்படி இருக்க பானு என்று வாஜிதா கேட்க”..

“நான்  நல்லா இருக்கேன் வாஜீ “என்றாள்..

ஆபீதா பானு ஒரு குழந்தையை தூக்கியவள்.. இன்னொரு  குழந்தையையும்  தன்னிடம் தருமாரு ஷேக்தாவுத்திடம்  கேட்க..

 ஷேக்தாவுத் குழந்தையை தூங்கி ஆபீதாவிட தந்தார்.

“நான்  அவங்க கிட்ட பிள்ளைகளை  காட்டிட்டு  வர்றேன்”  என்றவள்.. விக்ரம் வர.

ஆபீதா இரண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்த  விக்ரம்  எழுந்து குழந்தையை வாங்க  போக..

“நீங்க  இருங்க நான்  வர்றேன் ”  என்றவள்.. விக்ரமின் அருகில் சென்றவள்.  அவனின் பக்கத்தில் அமர்ந்து..

ஒரு குழந்தையை  விக்ரமிடம் தந்து.  இன்னொரு குழந்தையை அவள் மடியில் வைத்து கொண்டாள்..

“அழகா  இருக்காங்கல  பிள்ளைகள்” என்று விக்ரமிடம் பேச..

“உம்” என்றான் , ஆபீதாவை பார்த்து..

“நம்ம  சிவாக்குட்டியும் இப்படி தான் இருந்தாள்.. நல்லா  உருண்டையா, நீளமா, 4  கிலோக்கு மேல  இருந்தா  தெரியுமா”  என்றவள்..

விக்ரமிடம்  பேசிக்கொண்டே  குழந்தையை  கொஞ்சியவள். சுற்றி யார் இருக்கிறார்கள்  என்று  பார்க்க  வில்லை, அனைவரும் அவள் விக்ரமிடம் சென்று  குழந்தையை  கொடுத்து பேசிக்கொண்டு  இருப்பதை பார்த்து இருந்தனர்..

விக்ரமிடம்  இருந்த குழந்தை  சினுங்க.. “என்ன  செல்ல குட்டி, பெரியப்பாடா அழகூடாது”என்றவள்..

தன்னிடம்  இருந்த  குழந்தையிடத்தில்  “பெரியப்பா  பாரு  உன்னை  பார்க்க  வந்து  இருக்காங்க பாரு” என்றாள்..

விக்ரமுக்கு  பானு  தன்னிடம்  உரிமையோடு  வந்து  பேசிக்கொண்டு  இருப்பதை நினைத்து, சந்தோஷத்தில்  மிதந்து கொண்டு இருந்தான்..

ஆபீதா விக்ரமிடம்  இன்னும் நெருக்கி அமர்ந்து, விக்ரமிடம்  இருந்த குழந்தையை  கொஞ்ச..

விக்ரம்  ஆபீதாவிடம்  மெதுவாக “நாமலும்  இதே  மாதிரி  டிவின்ஸ்  குழந்தைகளை பெத்துக்கலாமா  பானு” என்றான்..

அவளோ முதலில் என்ன சொல்லுகிறார் என்று புரியாமல் முழித்தவள். பின்பு  அவன்  சொல்லியதின் அர்த்தம்   புரிய.. “நமக்கு  டிவின்ஸ்  எல்லாம் பிறக்காது, வேணுமுன்னா  அடுத்து  அடுத்து வேணா இரண்டு பிள்ளை பெத்துக்கலாம்” என்றாள்..

“பானு”!என்றான். அவள்  இப்படி பேசிய சந்தோஷத்தில்..

அவளோ எல்லாரும் இருக்காங்க  என்றாள்.

“ஆமாம்  எல்லாரும் இருக்காங்க. நீ தான் என்னை இடிச்சுகிட்டு  உட்கார்ந்து இருக்க” என்றான்..

“அச்சோ” என்றவள். அவனிடமிருந்து  சற்று தள்ளி  உட்கார்ந்தாள்..

விக்ரம் ஆபீதாவை பார்த்து  முகம் கொள்ளா சிரிப்போடு  இருக்க..

சுந்தர் மகனையும் மருமகளையும் பார்த்து சந்தோஷப்பட்டார்..

தன் மகன் குடும்பமாக  இருக்க வேண்டும்  என்று எத்தனை  நாள் ஆசைப்பட்டார்.. அது இப்போது நடந்து கொண்டு இருப்பதை பார்த்து கடவுளுக்கு நன்றி சொன்னார்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!