உனக்கென இருப்பேன்-18
உனக்கென இருப்பேன் -18
எனக்கு இன்னும் ஒட்டு போடும் வயசே வரலை ….அது தெரியுமா? அவள் பதிலுக்கு கேட்க குபீரென்று சிரித்து விட்டான்.
Advertisement
அது வரும்போது வரட்டும் . உன் படிப்பு முடியும் பொது முடியட்டும் .அதுவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பேசி புரிஞ்சுப்போம் . ஓகே தானே ? குறும்பாய் கண்சிமிட்டினான்.
வினோத் நல்ல் அழகு .பளீரென்று நிறம் ….நெடு நெடு உயரம். அத்லெட் பாடி ஃபிட் .அவனை எத்தனை பெண்கள் பின் தொடர்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியும் .
Advertisement
Advertisement
அவன் பார்வை ஏனோ கீர்த்தி மீது தான் விழுந்தது. இப்போது அவனே தலைகுப்புற விழுந்து விட்டான் .
அவளுக்கு அவனை மறுக்க காரணம் இல்லை . வயதிற்கே உண்டான குறுகுறுப்பு அவளுக்கு .
Advertisement
“…………………………”
லன்ச் அவரில் வீட்டில் இருந்து கொண்டு வந்த டிபன் பாக்ஸை எடுக்க பைக்குள் கையை விட்டான் அஸ்வின், உள்ளே கையை விடும்போது நீண்ட கயிறு ஒன்று கையில் சிக்கியது . என்னடா இது பாம்போ? வெடுக்கென கையை உதறினான். வெளியே வந்து ஒரு ID கார்டு விழுந்தது .
என்னடா இது ? வியப்பாய் பார்த்தான் . ID யாருடையது ?
ஆஹான் கீர்த்தியோடதா? வியப்பு மேலிட பார்த்தான். அனேகமாக அவள் காலேஜ் பேக்கில் இருந்து நழுவி விழுந்திருக்க கூடும்.
என்ன மச்சி யாரோட ID கார்டுடா? பிடுங்கி பார்த்தான் ராகவ்.
ஹே மச்சி செம்ம பிகர் டா ! அவன் விழி அகலாது பார்த்தான்.
மச்சி அவ உன் தங்கச்சிடா ! அஸ்வின் சிரிக்காமல் சொன்னான் .
யூ மீன் …..டேய் ….அவன் தலையில் தட்டினான் ராகவ்.
என்னடா நடக்குது? தினா முறைத்தான்.
மகனே !நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கிறது …இனி நடப்பதும் நன்றாகவே நடக்கும். குறும்பாக சிரித்தான் ராகவ் .
எட்டி மிதிச்சிடுவேன் ஓடிடு ! அஸ்வின் விரட்ட ராகவ் ஓடிவிட்டான் .
மரியாதையா உண்மையை சொல்லிடு ….இல்லைனா சரோ ஆன்டிக்கு கால் பண்ணி போட்டு கொடுத்துடுவேன் தினா மிரட்டினான் .
த்தூ ….எருமை நீ எல்லாம் கடைசிவரை முரட்டு சிங்கிள் தான்டி! கையில் போட்டோ வச்சிட்டு லலா லாலான்னு பாடிட்டு இருக்கானே உனக்கு புரியல ? ராகவ் கிண்டலடிக்க அஸ்வின் சிவந்து விட்டான்.
அஸ்வின் நிஜமாடா ? தினா நம்பாமல் பார்த்தான்.
எருமை …நான் தான் சொல்றேனில்லை . ராகவிற்கு கோபம் வந்துவிட்டது .
இன்னும் நம்பாமல் பார்த்து நின்றான் தினகரன்.
சொல்லி தொல்லையேண்டா என் வென்று ராகவ் கடுப்பாகி விட்டான்.
ம்ம்ம்ம் என்று வெட்கத்துடன் தலையசைத்த அஸ்வின் கீர்த்தியை பற்றியும் தன காதல் பற்றியும் சொல்லி முடித்தான்.
நீ ரொம்ப நல்லவன்டா, உன் நல்ல மனசுக்கு உன் லவ் சக்ஸஸ் ஆகும் . மனதார வாழ்த்தினார்கள் நண்பர்கள்.
“………………..”
வாவ் அண்ணா சான்ஸே இல்லை ! நம்ம பரம்பரையிலே ம்கூம் …நம் சொந்தபந்தம் கண்ட வகையில் கூட இப்படி ஒரு அழகான பொண்ணு இல்லை. அச்சு பார்த்து பார்த்து ரசித்தாள் .
ஹா ஹா ஹா ….அஸ்வின் வாய்விட்டு சிரித்தான்.
என்னண்ணா இப்படி சிரிக்கிற ?
இல்லை அச்சு ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை பார்த்து அழகுன்னு ஒத்துக்கவே மாட்டாங்க . ஆனா இந்த அஷ்வின் தங்கச்சிக்கு பரந்த மனசு ….மீண்டும் சிரித்தான்.
அண்ணா இந்த ID கார்டை நீயே வச்சுக்கோயேன் !
ம்கூம் ….ரொம்ப தப்பு . நேத்தெல்லாம் அந்த பொண்ணு ID தேடி நொந்து போயிருக்கும். மேபி ஃபைன் கூட கட்டியிருக்கும்.
அவகிட்ட இதை சேர்த்துடனும்….உறுதிப்பட கூறினான்.
“…………………………..”
நாளை சைக்கிளிக் டெஸ்ட்படிக்கலாம் என்று பயோ கெமிஸ்ட்ரி நோட்டை பிரித்தாள் கீர்த்தி . நான்காய் மடிக்கப்பட்ட காகிதம் விழுந்தது .
என்ன இது ? புரியாமல் பார்த்தாள்.
டாமிட் ….எவனோ என் நோட்டில் எழுதி வைத்திருக்கான் . கடுப்பாகி போனவள் கசக்கி சுருட்டினாள் .
கசக்கிய பின்னும் அந்த அழகிய கையெழுத்தில் ஈர்க்கப்பட்டவள் மீண்டு ஒரு முறை படித்துவிட்டு நல்லா தான் இருக்கு என்று மெச்சிக் கொண்டே கசக்கி எறிந்தாள்.
“…………………………”
ID கார்டை தேடி தேடி அலுத்து போனாள் . நேற்று நூறு ரூபாய் பைன் கட்டியிருந்தாளே…
எங்கே தவற விட்டிருப்பேன் ?யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது அவளுக்கு.
வேறு வழியில்லை நாளைக்கு ஆபிசில் பணம் செலுத்தி ஒரு டூப்ளிகேட் ID வாங்க வேண்டியது தான் .
படித்து விட்டு நோட்டை மூடி வைத்தவளுக்கு வினோத் நினைவு வந்து போனது.
எவ்வளவு நாகரிகமாக நடந்து கொள்கிறான் ! நாசூக்காய் காதலை சொன்னான் ,தள்ளிநின்று கண்ணியமாய் பேசுகிறான். பெருமைபட்டுக்கொண்டாள்.
“………………………”
நேற்று நம் கவிதையை படித்திருப்பாளா ? கசக்கி எறிந்திருப்பாளா?
கண்டிப்பாக படித்து கிழித்து எறிந்திருப்பாள். கன்னாபின்னாவென்று திட்டியிருப்பாள்.
இனி யாரிடமும் பேக்கை கொடுக்க கூடாது என்று எண்ணிக் கொண்டவள் அவ்வளவு கூட்டத்திலும் தோளோடு மாட்டிக் கொண்டாள் .
அஸ்வினுக்கு புரிந்து போனது . கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
“…………………………”
பேருந்தை விட்டு இறங்கியதும் கீர்த்தி உன்னோட ID எங்கேடி ?
எங்கோ மிஸ் ஆகிடுச்சு ரேணு !
இதோ பாருடி ….ஒருத்தர் கொடுத்தார் .நேத்து நீ மிஸ் பண்ணிட்டு போயிட்டியாம்.
தேங்க் காட் …இல்லைனா அந்த சிடுமூஞ்சி பிரின்சிகிட்ட வாங்கி கட்டியிருப்பேன் .
“………………………”
தமிழக அரசு க்ரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதற்காகவே காத்திருந்த அஸ்வின் தீயாய் படிக்க தொடங்கிவிட்டான்.
இப்போது வாரா வாரம் வீட்டுக்கு போய் வர அவனுக்கு நேரம் இல்லை .
கீர்த்தியை பார்க்க மனம் ஏங்கும். இப்போது அவளை பார்ப்பதை விட வாழ்நாள் முழுதும் அவளை பார்த்துக் கொள்ள வேலை வேண்டும் என்று மனதை தேற்றிக்கொள்வான்.
அவளை நினைத்து அவளுக்காகவே ஊண் உறக்கம் தொலைத்து படிப்பதில் அப்படி ஒரு சுகம் அவனுக்கு .
“………………………..”
கோயில் திருவிழா என்று வந்திருந்த அஸ்வின் வினோத்தை கோயிலில் பார்த்தான் .
என்ன அஸ்வின் தீவிரமா படிக்கிற போல ….? என்றான் வினோத்
ஆமாடா வினோ . கவர்மெண்ட் ஜாப் தேடிகிட்டு செட்டில் ஆகிடனும் என்றான்.
உனக்கு பைனல் இயர் ஆச்சே ….அடுத்து என்ன பண்ண போற ?
ஏதாவது ஹாஸ்ப்பிட்டலில் தான் வேலை தேடிக்கணும் . கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவுடனே சொந்தமா ஒரு கிளினிக் மாதிரி வைக்கணும்.
ஆமா காலேஜில் ஏதோ பொண்ணுக்கு ரூட் விடறியாமே ? வினோத்தின் தோளில் கைபோட்டு இறுக்கியபடி கேட்டான்.
உனக்கு யாரு சொன்னது ?
சங்கரலிங்கம் பெரியப்பா பொண்ணு மஹா சொன்னுச்சு!
ம்ம்ம்ம்ம் என்று வெட்கப்பட்டு சிரித்தான் வினோத்.
பொண்ணு யாருடா ?
நம்ம ஊரு இல்லை . நாகர்கோயில் பொண்ணு .ரொம்ப நல்ல பொண்ணு . என்ன ஒரு சிக்கல்னா அவங்க நம்ம ஆளுங்க இல்லை என்றான்.
அப்பாக்கு பேங்க் ஜாப் அது தான் திட்டக்குடி பிராஞ்சுக்கு டிரான்ஸ்பரில் வந்திருக்காங்க.
அவங்க பொண்ணு கொடுக்க சான்ஸ் இல்லை அஸ்வின் ஆனா எனக்கு விடுற ஐடியா இல்லை.
டேய் இப்போ எதுக்கு எமோஷன் ஆகற? பார்த்துக்கலாம் விடு! தம்பியின் தோள் தட்டினான் .
நான் ஏன் பீல் பண்ண போறேன் ? என் அண்ணன் நீ எதுக்கு இருக்க ? வீடு புகுந்து தூக்கிட மாட்ட ? உரிமையாய் தோள் சாய்ந்த தம்பியை அணைத்துக் கொண்டான் அஸ்வின்.
என் தம்பிக்கு எவன் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிடுவான் ? அதையும் பார்த்திடுவோம் …சட்டையை மடித்து விட்டு தோள் தட்டினான் அஸ்வின். விதி தன் விளையாட்டை தொடங்கியதை அவன் அறியவில்லையே பாவம் !
தம்பியின் காதல் கதையை கேட்டுக் கொண்ட அஸ்வின் தன் காதல் பற்றி மூச்சு விடவில்லை.
சொல்லி இருந்திருக்கலாம் . ஆனால் அவன் அதை விரும்பவில்லை . சொல்ல இது சரியான நேரமில்லை என்ற எண்ணம் தான் காரணம்.
வினோத்தும் தான் காதலிக்கும் பெண் பற்றி வேறெந்த தகவலும் சொல்லவில்லை . அங்கு தான் விதி சதி செய்துவிட்டது.
“…………………….”
தேர்வு மும்மரத்தில் அஸ்வின் மூழ்கிப்போனான் .ஆனால் கீர்த்தியை மறந்து விட்டான் என்று அர்த்தம் இல்லை . அவனோடு தானே அவள் நினைவுகள் வாழ்கிறது.
இப்போதெல்லாம் கீர்த்தியின் நினைவு இதயத்துடிப்பு ,சுவாசம் போல் அவனுடன் கலந்து விட்டது.
அவள் எப்படியும் தன் காதலை ஏற்பாள் அல்லது ஏற்றுக் கொள்ள வைக்க முடியும் என்று உறுதியாக நம்பினான்.
அவளை பெண் கேட்டு செல்லும் போது தான் தகுதியுடைய ஆண் மகனாய் இருக்க வேண்டும் என்பதில் தான் அவன் கவனம் குவிந்திருக்கிறது.
“………………………..”
வினோத் கீர்த்தியுடன் நெருக்கமாக காதல் வளர்க்கவில்லை . அவள் இப்போது தான் செகண்ட் இயர் படிக்கிறாள், தனக்கும் இன்னும் கல்யாண வயது வரவில்லை என்ற எண்ணம் அவனுக்கு.
இருவரும் நன்றாக பேசிக் கொள்வார்கள்,படிப்பு,குடும்பம்,லட்சியம் ,குடும்பம் இப்படி ….
அக்கா சௌந்தரியா திருமணம் முடிந்த பிறகே தன் காதலை வீட்டில் சொல்ல முடியும் என்ற நெருக்கடி வேறு அவனுக்கு.
வினோத் இப்படி விலகி பழகுவதே கீர்த்திக்கு பிடித்திருந்தது.
“…………………….”
மகன் தீவிரமாய் அரசு பணிக்கு முயற்சி செய்வது பொன்னுசாமிக்கு மிகுந்த மகிழ்ச்சியே….
என் பிள்ளை என்னைப்போல் வாத்தியாரா வந்திருந்தா இன்னும் சந்தோஷப் பட்டிருப்பேன் என்றார்.
அப்பா அண்ணன் டீச்சிங் லைனில் வரலைன்னா என்ன? நான் நிறைய படித்து ப்ரொபஸர் ஆகிடுவேன்ப்பா என்ற அக்ஷயாவை கண்டு தந்தைக்கு பெருமையே ….
“…………………..”
மிக சிறப்பாய் தேர்வெழுதி முடிவிற்கு காத்திருந்தான் அஸ்வின்.
நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.
கீர்த்தியுடனான வாழ்வை தொடங்கும் போது சொல்லிக் கொள்ள நிறைய கதைகள் இருக்கும் என்று எண்ணி எண்ணி கிளர்ந்து போனான்.
அவளை ஒன்பது மாதமாக ரகசியமாய் ரசிப்பதை எண்ணி பார்க்கவே வெட்கமாய் இருந்தது.
“……………………….”
வினோத்தின் அக்கா சௌந்தர்யாவிற்கு திருமணம் முடிவாகி இருந்தது . திருமண வேலைகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வினோத் கீர்த்திக்கு அழைப்பு விடுத்தான்.
சின்னக்கா மேரேஜ் முடியப்போகுது…. அடுத்து நமக்கு தான் .
அடுத்துன்னா ? அவள் சற்று மிரட்சியுடன் கேட்டாள்.
அடுத்துன்னா அடுத்த மாதமே இல்லை …உன்னோட படிப்பு முடிந்து தான்.
நான் அடுத்து Mpharm படிக்க போறேன்,இன்னும் நாலு வருஷம் போகட்டும் என்றாள்.
சான்ஸே இல்லை .அவ்வளவு நாளெல்லாம் தள்ளி போட முடியாது.
உன்னை மேரேஜ்க்கு அப்புறம் நான் படிக்க வைக்கிறேன் போதுமா? வாக்குறுதி அளித்தான்.
உன்னோட மாமனார்,மாமியார் ,நாத்தனாரை எல்லாம் பார்க்குற ஆசை இல்லையா உனக்கு ?அவளை சீண்டி விட்டான் .
எனக்கு ஒரு வாழைநாறும் ,தேங்காய்நாறும் பார்க்க வேண்டாம் . எங்க வீட்டுல தெரிஞ்சா அவ்வளவு தான்.
பாருடா …சுண்டெலி என்ன பேச்சு பேசுது ! வினோத் சிரித்துவிட்டான்.
ஹலோ யாரை பார்த்து சுண்டெலின்னு சொல்றீங்க ? வரிந்து கட்டினான்.
அப்போ பெருச்சாளின்னு சொல்லவா? அவன் வாய்விட்டு நகைத்து விட்டான்.
யூ…தன் கையில் இருந்த நோட்டால் அவன் தலையில் இரண்டு போட்டாள்.
ஏய் என்னடி அடிக்கற ? பிச்சுப்புடுவேன் …..சிரித்துக் கொண்டே முறைத்தான்.
நீ சௌந்தர்யா அக்கா மேரேஜ்க்கு வந்தா உன்னை அஸ்வினுக்கு இன்ட்ரோ பண்ண்ணலாம்னு இருந்தேன்.
யாரு உங்க கஸினா?
ம்ம்ம்ம்ம் ….
எந்நேரமும் அவர் புராணம் தான் பாடறீங்களே ….
ஆமா …எங்க மொத்த பேமிலிக்குமே அவரன் ஸ்பெஷல். அறிவாளி அஸ்வின்னு சொல்லலாம் . பெரியவங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்லை . பட் நாங்க எப்போதும் க்ளோஸ் . என்னை விட நாலு வயசு பெரியவன் ஆனா நான் அண்ணான்னு கூப்பிடறதில்லை . என்னோட பிரண்ட்.
நம்ம லவ் அவனுக்கு தெரியும் . நம்ம மேரேஜில் என்ன பிராப்ளம் வந்தாலும் அவன் பார்த்துப்பான்.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள் இசைவாய் .
