Skip to content
Post Views: 739
“காத்திருப்பும் ஒரு
சுகம் தான்
காதலுக்காக இல்லை
எங்க அம்மா வைக்கும்
Advertisement
கறி குழம்புக்காக”
என்று சமையல் அடுப்பில் கொதிக்கும் மட்டன் குழம்பினை வாசம் பிடித்த சரணை பார்த்து முறைத்தார் புஷ்பராணி.
“என்னாச்சு பிளவர் குயின் ஏன் என்ன முறைக்க”
Advertisement
“ஏன்னு உனக்கு தெரியாதாடா”
Advertisement
“பிலீவ் மீ மை ஃபிளவர் குயின் சத்தியமா தெரியலமா எதுக்கு என்ன இப்ப முறைக்க”
“சின்ன குழந்தை பாரு உனக்கு ஒன்னும் தெரியாது ஏன் டா கோயிலுக்கு போயிட்டு வந்து தான் கறி குழம்பு சாப்பிடணும்னு உனக்கு தெரியாதா” என்றார் கோபமாக.
“தெரியும் இருந்தாலும் கறி குழம்பு என்னை இழுக்குது மம்மி. ஏன் கறி குழம்பு சாப்பிட்டு கோவிலுக்கு போனா என்ன தப்பு”
Advertisement
“ஏண்டா கோயில்ல உணவு பிரிக்காம நம்ம கறி குழம்பு சாப்பிடக்கூடாதுன்னு உனக்கு தெரியாதாடா”
“அப்ப ஏன் மம்மி இப்பவே நீ குழம்பு வச்ச. குழம்பு சாப்பிடக்கூடாது ஆனா நீ மட்டும் அதை தொட்டு கழுவி குழம்பு மட்டும் வைக்கலாமா அப்ப வா நீயும் கோயிலுக்கு போகாத நம்ம ரெண்டு பேரும் வீட்ல உட்கார்ந்து இந்த கறிய எப்படி சாப்பிடலாம்னு ஆராய்ச்சி பண்ணலாமா” என அவரின் முகத்திற்கு முன் தனது இரு கைகளையும் மாயாஜாலம் செய்வது போல் கைகளை ஆட்டி கட்டை குரலில் சொன்னான்.
“போடா வேலையில்லாதவனே மரியாதையா கிளம்பிடு இல்ல கொன்னே புடுவேன். ஆள பாரு கோவிலுக்கு வராம எஸ் ஆக என்ன எல்லாம் பேசுறான் மரியாதையா வந்து சேருடா. அப்படியே அந்த பசங்கள கூட்டிட்டு வாடா ” என்று அவனை திட்டிக் கொண்டு தனது மாமனாரின் அறையை நோக்கி சென்றார்.
“வரவர இந்த வீட்ல யாருமே நம்ம சொல்ற பேச்சை மதிக்க மடக்காங்க. சரி நம்ம நட்புக்குள் என்ன செய்துன்னு பார்ப்போம்” என்று தனது சகாக்கள் உள்ள அறையில் நோக்கி சென்றான்.
“புஷ்பா எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சா நம்ம கோயிலுக்கு போலாமா” என்று தனது சட்டை பட்டனை மாட்டிக் கொண்டு மாடிப்படி இறங்கி வந்து தனது மனைவியை கூப்பிட்டார் விநாயகம்.
வயதான காரணத்தால் உடல் அசதியால் படுத்திருந்த தனது மாமாவின் அறைக்கு சென்று அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்த புஷ்பா, “எல்லா ரெடியா இருக்குங்க உங்க சின்ன மகன் தான் வரமாட்டான்னு வம்பு பண்ணிட்டு இருக்கான் என்னன்னு கேளுங்க”என்று சின்ன மகனை கணவனிடம் மாட்டி விட்டார் புஷ்பா.
“அவனுக்கு அப்பாக்கு இப்படி ஆனது கஷ்டமா இருக்கும். அவர் வராம அவன் மட்டும் எப்படி வருவான் அதான் உன்கிட்ட இல்லாதது எல்லாம் காலையில் இருந்து பண்ணிக்கிட்டு இருக்கானா இருக்கும்” என்றார் சின்ன மகனின் நோக்கத்தை புரிந்து கொண்டு
“அதுக்காக அவன் வராம எப்படிங்க நம்ம மட்டும் போக முடியும். ஏற்கனவே மாமாவால அவ்வளவு தூரம் வர முடியாதுன்னு சொல்லி உடல் அசதியில படுத்து கிடக்காங்க. அதோட உங்க பெரிய மகன் அம்மனுக்கு மாங்கல்ய தானம் பண்றதுக்கு நகை வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு இப்ப ஒரு கேஸ் விஷயமா வெளியே போய் இருக்கேன் வர டைம் ஆகும் அதனால நேரா கோவிலுக்கு வந்துடுறேன்னு சொல்றான். இப்ப இவனும் வராம இருக்க இப்படி வம்பு பண்ணிக்கிட்டு இருக்கான். இதுல இந்த பசங்க மூணு பேரும் நைட்டு நம்ம ஃபேக்டரில ஏதோ பிரச்சனைன்னு போயிட்டு வந்து தூங்கிட்டு இருக்காங்க. இந்த வீட்ல இத்தனை பேர் இருந்தும் நம்ம ரெண்டு பேரும் மட்டும் போனா எப்படிங்க” என்றார் சுணக்கமாக.
“என்ன புஷ்பா நீ கோவிலுக்கு சந்தோசமா போக வேண்டாமா இப்படி முகத்தை வச்சுக்காதம்மா”
“பின்ன என்னங்க நம்ம பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு மாங்கல்ய தானம் பண்ண போறோம் இருந்தும் நம்ம வீட்ல ஒருத்தர் கூட வரலைன்னா எப்படிங்க” என்றார் கண் கலங்க
“என்னம்மா நீ இப்படி கண்ணு கலங்குற. உனக்கு என்ன இப்ப எல்லாரும் உன் கூட வரணும் அவ்வளவுதான. என்னோட கண்ணம்மா ஓட கண்ணு கலங்க இந்த மாமா விடுவேனா. இப்ப பாரு அஞ்சு நிமிஷத்துல எல்லா தடி பசங்களும் உன் முன்னாடி வந்து நிற்பாங்க பாரு” என்று தனது வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு ஐவரும் இருக்கும் அறையை நோக்கி சென்றார்.
நால்வரும் இருக்கும் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தவர் சற்று நின்று ஏதோ யோசித்து தனது தந்தை அறையை நோக்கி சென்று அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் தனது தந்தையை உற்று நோக்கியவர் அவரின் அருகில் சென்று குனிந்து காதில் ஏதோ கூறினார்.
அவர் சொன்னதை கேட்டதும் அதுவரை அசதியும் தூங்கிக் கொண்டிருந்த தாத்தா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து, “டேய் உண்மையாவா சொல்ற” என்றார் வேகமாக
“ஆமாப்பா உண்மையா தான் சொல்றேன் இப்ப வந்திங்கனா உங்களுக்கு காட்டுவேன் இல்லன்னா அவ்வளவுதான்” என்றார்.
“சரி.. சரி.. எனக்கு அசதியா தான் இருக்கு இருந்தாலும் என் பேரனோட வருங்கால மனைவியை பார்க்கிறதுக்காக வேண்டி வரேன்” என்று பிகு செய்து கொண்டு எழுந்தவர், “ சரிடா ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு ரெடி ஆயிட்டு வரேன்” என்றார் 10 வயது குறைந்தது போல சுறுசுறுப்புடன் வேதாச்சலம்.
“நீங்க ரெடியான மட்டும் போதாது பக்கத்து அறையில இருக்கிற அந்த நாலு தாண்டவராயங்களும் வரணும் அது உங்க பொறுப்பு தான்” என்று சொல்லி அவரின் அறையில் இருந்து வெளியேறினார் விநாயகம்.
அவர்களை அழைத்து வருவதற்காக வேகமாக உள்ளே சென்ற தனது கணவர் யாரும் இல்லாமல் வருவதைப் பார்த்த புஷ்பா, “என்னாச்சுங்க யாரும் வரலையா சரி வாங்க டைம் ஆகுது நம்மளாவது கிளம்புவோம்” என்றார் பூஜைக்கு வேண்டிய பொருட்களை கையில் ஏந்தி கொண்டு
“என்னம்மா இப்படி சொல்லிட்ட நீ உன் புருஷன் மேல வச்சிருக்க நம்பிக்கை அவ்வளவுதானா”
“என்னங்க இப்படி சொல்றீங்க.இதுல எங்க இருந்து நம்பிக்கை வந்துச்சி. அவங்களுக்கு கோவிலுக்கு வர விருப்பம் இல்ல அவ்வளவு தான அதுக்கு ஏன் நீங்க உங்க மேல நம்பிக்கை வைக்கல அதெல்லாம் சொல்றீங்க. வாங்க நம்ம மட்டும் போலாம்” என்று அவர் கையை பிடித்துக் கொண்டு வாசலுக்கு அழைக்க
“என்னம்மா புஷ்பா நீங்க மட்டும் போதுமா நாங்க யாரும் வர வேண்டாமா” என்ற தனது மாமனாரின் குரலை கேட்டு திரும்பிய புஷ்பா அங்கே நின்றவர்களை பார்த்து கண் கலங்க சிரித்தார்.
“என்னம்மா நாங்க வரலாம் தானே” என்ற வேதாச்சலத்திற்கு
“என்ன மாமா நீங்க வராம நாங்க மட்டும் எப்படி போக முடியும். இப்பதான் மனசுக்கு நெறஞ்ச மாதிரி இருக்குது” என்ற புஷ்பா ஒரே மாதிரி வெள்ளை நிற பட்டு வேஷ்டியும், மெருன் கலர் சட்டையும் அணிந்து வந்து நின்ற சரண், பாலா, கார்த்திக், சுரேஷ் என நால்வரும் புன்னகையுடன் நிற்க அவர்களின் அருகே வந்த புஷ்பா நால்வருக்கும் தனது கையால் திருஷ்டி கழித்தார்.
“என் செல்லங்களா நாலு பேரும் அழகா இருக்கிறீங்க. உங்கள பார்க்கும் போது கோவிலுக்கு போற மாதிரி எனக்கு தோணல. ஏதோ கல்யாண வீட்டுக்கு போற மாதிரி இருக்குதுடா” என்று சொல்லி நால்வரையும் தனது கைகளால் அனைத்து கொண்டார்.
“ஃப்ளவர் குயின் இதெல்லாம் ஓவரு. இந்த மூணு குரங்கும் நல்லா இருக்கா இல்ல இந்த எஸ் கே நல்லா இருக்கானா” என்றால் தனது கால் சட்டை கலரை உயர்த்திக் கொண்டு சரண்.
“டேய் என் தங்கங்கள பார்த்து குரங்கு சொல்றியா” என்று அவனின் காதை திருக வந்த புஷ்பா, “ஏதோ இன்னைக்கு பாக்க கொஞ்சம் அழகா இருக்க அதனால விடுறேன்” என்று செல்ல மிரட்டலுடன் அவனை விட்டார் புஷ்பா.
“பிளவர் இட் நாட் ஃபர்” என்று சிணுங்கினான் சரண்.
“போடா உனக்கு பொறாமை அம்மா எங்கள அழகா இருக்குன்னு சொன்னதும்” என்றான் பாலா.
“ஆமாடா சரி வாங்கடா இப்படியே எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம்” என்று தனது போனை எடுத்து அனைவரையும் நிற்க வைத்து செல்பி எடுத்தான் கார்த்திக்.
“டேய் கொண்டா” என்று அவன் எடுத்த போட்டோவை வாங்கி பார்த்த சரண், “சீனியர் நீங்கதான் இந்த போட்டோல செம்மையா இருக்கீங்க” என்று வேதா தாத்தாவை பார்த்து சொன்னவன், “ மிஸ்டர் திருப்பூர் குமரன் மட்டும் இருந்திருக்கலாம்” என்றான் ஃபோட்டோவை பார்த்துக் கொண்டு
“டேய் உனக்கு தெரியாதா ஹீரோவ எல்லாம் அவ்ளோ சீக்கிரம் காட்ட மாட்டாங்க” என்றான் சுரேஷ்.
“அப்படி சொல்லுடா ரேஷ் என் பேராண்டி அப்படியே சிங்கம் மாதிரி இருப்பான் டா” என்று சொன்ன வேதாச்சலம், “சரி சரி எடுத்த போட்டோவை எனக்கு அனுப்பி விடு ஜூனியர் நான் என் இன்ஸ்டா ல்ல அப்லோட் பண்ணனும். என்னோட பாலோவர்ஸ் எல்லாம் வெயிட்டிங்” என்றார் சரணை பார்த்து
“நான் அனுப்ப மாட்டேன் போய் உன் சிங்கத்துக்கிட்ட கேளு. கண்ணு முன்னாடி நிக்கிறவனை பாராட்ட மாட்டாரு இவருக்கு நாங்க போட்டோ அனுப்பனுமா போட்டோ” என்றான் கடுப்புடன் சரண்
“ஜூனியர் நம்ம அப்படியா பழகி இருக்கோம் உன் சீனியர நீ இப்படி சொல்லலாமா” என்று அவனை அணைத்து வேதாச்சலம் கொஞ்ச
“இப்பதான் தெரியுதா சீனியர் உங்க கண்ணுக்கு நான் உங்களோட ஜூனியர்னு” என்று அவன் அவரின் அணைப்பில் இருந்து மிஞ்ச
“டேய் போதும்டா. கோவிலுக்கு போக டைம் ஆச்சி. புஷ்பா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா வா போகலாம். வாங்கப்பா. டேய் வாங்கடா” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு காரில் கோவிலை நோக்கி சென்றார் விநாயகம்.
error: Content is protected !!