Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன்-19

உனக்கென இருப்பேன் -19

 

 அஸ்வின் எதிப்பார்த்த அந்த நாளும் வந்தது . ஆம் டாப் ரேங்கில் பாஸ் பண்ணியிருந்தான்.

 



Advertisement

சரோஜினிக்கு பெருமை தாங்கவில்லை , மனுஷிக்கு தலை கால் புரியாத சந்தோஷம். எம்புள்ள பெரிய வேலைக்கு போறான் என்று ஊர் முழுக்க தண்டோரா போடாத குறை தான்.

 

பொன்னுசாமிக்குமே மிகுந்த சந்தோஷம் . தன் ரத்தம் சோடை போகவில்லை என்ற நிறைவு அவருக்கு.

Advertisement

வாத்தி பிள்ளை மக்கு என்று ஒரு சொலவடை உள்ளதே ….

Advertisement

 

வினோத் பெருமையாக அண்ணனுக்கு வாழ்த்து கூறினான் .

 

Advertisement

அண்ணன் மகன் குறித்து கிருஷ்ணசாமிக்குமே பெருமிதம் தான் .

 

அஸ்வினை பாரு ! எல்லாத்திலும் ஒரு தெளிவு ,என்ன படிக்கணும் .என்ன வேலை தேடிக்கணும் எல்லாவற்றிலும் அவன் முடிவு சரியாக தான் இருக்கும் .

 

என் புள்ளைய எதுக்கு குத்தி காட்டறீங்க ?அவன் படிப்பை விட எம்புள்ள படிப்பும் பெரிய படிப்பும் தான் . பிடி பிடி என்று பிடித்துக் கொண்டார் பத்மினி.

 

வேலை கிடைத்த மகிழ்ச்சியை விட நிம்மதி தான் அஸ்வினுக்கு . தன்   காதலில் பாதி கிணறு தாண்டி விட்ட உற்சாகம் அவனுக்கு.

 

அண்ண அடி தூள் ….! நினைச்ச மாதிரி வேலை தேடிகிட்ட அடுத்து ஆசைப்பட்ட மாலை தான் …ஆல் த பெஸ்ட் என்று இனிப்பு ஊட்டி வாழ்த்து கூறினாள் அச்சு .

 

“…………………………….”

 

நேர்முகத் தேர்வை எண்ணி அஸ்வினுக்கு பயம் இல்லை. அவன் ஆளுமை தன்மை குறித்து நிரம்ப அவனுக்கு நம்பிக்கை இருந்தது.

 

அஸ்வின் நட்பு வட்டத்தில் அஸ்வினும், தினகரனும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

 

சென்னையில் நேர்முகத் தேர்வு …. அஸ்வின் மிகுந்த நம்பிக்கையுடன் கிளம்பினான்.

 

ஒரே வருத்தம் “உன்னால் தான் பெண்ணே இந்த வெற்றி சாத்தியம் “ என்று கீர்த்தியிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே ……

 

அவனது வெற்றி அவன் காதலுக்கான முதல் படி என்பதில் அவனுக்கு அவ்வளவு ஆனந்தம்.

 

“……………………………………..”

 

 நேர்முக தேர்வில் வெற்றி பெற்று கிராம அபிவிருத்தி துறையில் பணி ஆணை பெற்று வந்தான்.

 

அவனுக்கு வருத்தம் என்னவெனில் கோவையில் ஓராண்டு பயிற்சி காலம் என்பது தான் .

 

வேலை கிடைத்த மகிழ்வை விட கீர்த்தியை அடிக்கடி பார்க்க முடியாதே என்ற கவலை தான் அவனுக்கு .

 

அண்ணா ….ஜஸ்ட் கீர்த்திக்கிட்ட ஒரு வார்த்தையாவது பேசு ப்ளீஸ் ! அக்ஷயா ஏறக்குறைய கெஞ்சினாள்.

 

இன்னும் கொஞ்சநாள் போகட்டும் அச்சு என்றான் ஆதுரமாய் தங்கையின் தலை கோதி.

 

அண்ணா நீ தேவையில்லாம யோசிக்கிறியோன்னு தோணுது . உன் பொறுமை எனக்கு சரியா படலை .ஏனோ அவளுக்கு ஒரு பதட்டம் .

 

அதெல்லாம் ஒன்னும் ஆகாது . அண்ணன் லவ் கண்டிப்பா சக்ஸஸ் ஆகும் என்று கட்டை விரல் உயர்த்தினான்.

 

கோவை செல்வதற்குள் ஒருமுறையாவது கீர்த்தியை பார்த்து விட துடித்தான்.

 

அவன் துரதிருஷ்டம் அவள் செமஸ்டர் விடுமுறையில் இருந்தாள்.

 

 திட்டக்குடி ஹஸ்தினாபுரத்தில் தான் வீடு என்று அறிந்து வைத்திருந்தான் . தெரு பெயர் ,வீட்டு எண் எல்லாமும் தெரியும் தான் அதற்காக வீடு வரை சென்றுவிட முடியுமா ? அது முறையா ?

 

தன்னால் அவளுக்கு ஒரு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் தன் முடிவில் அவன் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளவில்லை .

 

மூட்டை முடிச்சுகளோடு கீர்த்தீயின் நினைவையும் சுமந்து கொண்டு கோவை சென்றடைந்தான்.

 

இருபத்து நான்கு வயதில் அரசுப் பணியில் அமர்ந்துவிட்ட மகனை எண்ணி பூரித்து போனார் பொன்னுசாமி.

 

இன்னும் நிறைய வயது இருக்கிறது….பெரிய புரமோஷன் எல்லாம் கிடைக்கும் என்று அவருடன் பணிபுரியும் ஆசிரியரகள் எல்லோரும் பாராட்டினர்.

 

எம்புள்ளைக்கு எவ்வளவு பெரிய இடத்தில் பெண் எடுப்பேன் தெரியுமா ? எம்புள்ள வேலைக்கு நீ நான்னு போட்டி போட்டு பொண்ணு கொடுக்க வந்து நிற்பாங்க ! புளகாங்கிதம் அடைந்தார் சரோஜினி.

 

“…………………………….”

 

அஸ்வினுக்கு பயிற்சி காலம் என்பதால் விடுப்பு எடுக்க முடியவில்லை . இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து போனான். 

 

பிள்ளை தனியே சமைத்து சாப்பிட்டு இளைத்துவிட்டதாக சரோஜினி புலம்பினார் .

 

நீ வேணா உன் புள்ள கூட போய் இருந்து சமைத்து போடு என்றார் பொன்னுசாமி.

 

வேண்டாம் என்று மறுத்துவிட்டான் அஸ்வின். வயசு பெண் அச்சுவை  கவனிக்க அம்மா அருகில்  இருக்க வேண்டுமே ….

 

ஒருமுறை திருச்சி பேருந்தில் ஏறி அவளுக்காய் காத்திருந்தான் . அவன் ஏக்கம் அவளுக்கு எட்டவில்லை அல்லவா ….அன்று அவள் அதிகப்படியான வயிறு வலியில் விடுப்பு எடுத்து விட்டாள் . ஏமாற்றத்துடன் கிளம்பி கோவைக்கு சென்றான் .

 

நாட்கள் பறந்தோட கீர்த்தி மூன்றாம் ஆண்டு முடிக்கும் தருவாயில் இருந்தாள் .

 

வினோத் பாண்டிச்சேரியில் உள்ள ARS  மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணிபுரிகிறான்.

 

வினோத் கீர்த்தி காதல் நாளொரு மேனியம் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது . அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மொபைல் வழியே பேசிக் கொண்டனர்.

 

“………………………”

 

கீர்த்தியின் குடும்பம் ரொம்பவும் கட்டுபாடானது . அவள் அம்மா பகவதி ரொம்பவே கெடுபிடி . சாதி பெருமை பேசும் பழமைவாத குடும்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

 

வீட்டிற்கு தெரியாமல் கீர்த்தி காதல் வளர்த்தாலும் அவளை கண்கொத்தி பாம்பாக கண்காணித்தனர்.

 

அஸ்வின் பயிற்சி முடிந்து சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கே பணி ஆணை பெற்று வந்தான்.

 

அண்ணா உன் அளவுக்கு “இந்த உலகத்தில் பொறுமை பொறுத்தவரக்ள் யாருமில்லை” நீ பூமாதேவன் ! அச்சு கிண்டல் அடித்தாள்.

 

பொறுமைக்கு அழிவு இல்லை அச்சு …தங்கைக்கு பதில் சொன்னான். அழிவு வரும் என்று அவன் அறியவில்லையே .

 

அண்ணா “இதயம் பட முரளி மாதிரி நடந்துக்கற!” கொஞ்சமும் உப்பு சப்பில்லாத லவ் உன்னோடது .

 

வாயாடி கழுதை தங்கையை துரத்தி அடித்தான்.

 

நானெல்லாம் லவ் பண்ணினா தடாலடி அப்ரோச் தான் தெரியுமா ? சிரித்துக்  கொண்டே ஓடினாள்.

 

“……………………………”

 

சொல்லுங்க சித்தப்பா என்ன எனக்கு கால் பண்ணியிருக்கீங்க ? அஸ்வின் ஆச்சரியப்பட்டான் . இருக்காதா பின்னே ….கிருஷ்ணன் வாத்தியார் இதுவரை அவனுக்கு அழைத்தது இல்லையே ….

 

அஸ்வின் இந்த வினோத் பய போகுற போக்கு எனக்கு சரியா படலை….ஒரு தகப்பனாய் தவித்தார்.

 

என்னாச்சு சித்தப்பா?

 

ஏதோ பொண்ணு விவகாரம் போல தெரியுது ! ஒரு பொண்ணோட அண்ணன் வீட்டில் வந்து மிரட்டிட்டு போறான் .

 

என்ன சொல்றீங்க சித்தப்பா ?

அஸ்வினுக்கு விஷயம் புரிந்து போனது.

 

நீ கொஞ்சம் அந்தப் பயகிட்ட பேசுப்பா !

 

கண்டிப்பா சித்தப்பா ….நன் விசாரிக்கிறேன் ! நீங்க கவலை படாதீங்க ….அவருக்கு திடம் சொன்னான்.

 

அஸ்வின் வார விடுமுறையில் கடலூரில் இருந்து வீட்டுக்கு வந்து விடுவான் . அதே போல் வினோத்தும் பாண்டிச்சேரியில் இருந்து ஊருக்கு வந்துவிடுவான்.

 

அன்று அண்ணனும் தம்பியும் சந்தித்துக் கொண்டனர்.

 

என்னடா பிரச்சனை ? சித்தப்பா புலம்புறாரு .

 

எங்க லவ் மேட்டர் அவ வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு அஸ்வின் .

 

அப்புறம் ?

 

அப்புறம் என்ன நம்ம வீட்டுக்கு வந்து அவன் அண்ணன் மிரட்டிட்டு போயிருக்கான் ,இப்போ அவளுக்கு அவசரமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க . அவன் கண்கள் கலங்கியது.

 

வீட்டில் சொல்லிட்டியா ?

 

ம்ம்ம்ம்ம் ……வேற சாதி பொண்ணு நமக்கு வேண்டாம்னு அம்ம்மா பிடிவாதமா சொல்லிட்டாங்க . இது கல்யாணம் பண்ணுற  வயசில்லைனு அப்பா சொல்லிட்டார் 

 

“அவ இல்லைனா சத்தியமா நான் செத்துடுவேன் அஸ்வின்”  தமையன் தோள் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதான் வினோத் .

 

அடி  செருப்பால…. என்ன பேச்சு இது ராஸ்கல் ?

 

நீ அந்த பொண்ணு கூட பேசுனியா ?

 

இல்லை …அவளை காண்டாக்ட் பண்ணவே முடியலை . காலேஜ் விட்டு நிறுத்திட்டாங்க போல ….ஹவுஸ் அரெஸ்ட் ….விம்மினான் .

 

சரி ….நாளைக்கு நம்ம பசங்களை கூட்டிட்டு போய் நேரில் பார்த்து பேசுவோம் ! செத்துடுவேன் கித்துடுவேன்னு உளறிட்டு இருந்தா பல்லை உடைச்சுடுவேன் . தம்பிக்கு தேறுதல் சொல்லி அனுப்பி வைத்தான் .

 

“…………………………….”

 

இந்த ஏரியா தானா ?

 

ஆமா அஸ்வின் ! அஸ்தினாபுரம் .VPS மஹால் பேக் சைடு தான் அவ வீடு .

 

அஸ்வினுக்கு ஏனோ மனம் அதிவேகமாய் துடித்தது. மேற்கொண்டு செல்ல மனம் முரண்டியது . ஏதோ தவறு நடக்க போவதாக உள்ளுணர்வு எச்சரித்தது .

 

இந்த வீடு தான் ! வினோத் 27A என்ற கதவு எண்ணை தெம்பாய் சுட்டி  காட்ட ….அஸ்வினுக்கு வியர்க்க தொடங்கியது.

 

அஸ்வின் வினோத்தோடு அவரகள் நண்பர்கள் நால்வர் வந்திருந்தனர்.

 

யாரு வேணும் ?ஐம்பதை கடந்த மனிதர் கண்ணாடியை தூக்கிவிட்டபடி கேட்டார்.

 

நான் அஸ்வின் , இவன் என் தம்பி வினோத்.

 

வினோத் என்ற பெயரை கேட்டவுடன் உள்ளிருந்து வேகமாய் ஒருவன் ஓடிவந்தான் . வந்தவன் வினோத் காலரை பற்றி தூக்கினான் .

 

டேய் ….உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை தேடி என் வீட்டுக்கே வருவ?  ஓங்கி அறைந்திருந்தான் .

 

டேய் ….யாரு மேல கை வைக்கிற ?அஸ்வின் விட்டான் ஒரு அறை ….அந்த இளைஞன் நிலை குலைந்து விழுந்தான். தன் கண் முன்னே தன் தம்பியை அடித்தால் அவன் விட்டுவிடுவானா ?

 

ஸ்ரீ ….பதறி தூக்கினார் அந்த மனிதர்.

 

துள்ளி எழுந்தவன் அஸ்வினை அடிக்க பாய்ந்தான்.

 

ஸ்ரீ விடு !  அந்த மனிதர் அதட்டினார்.

 

அப்பா இவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வீட்டுக்கு வந்து கலாட்டா பண்ணுவானுங்க ? அவன் அடிபட்ட வேங்கையாய் சீறினான்.

 

டேய் நாங்க கலாட்டா பண்ண வரலை …பேச தானே வந்தோம் ? அடிதடியா மாத்தினது நீ தான். அஸ்வின் நியாயம் பேசினான்.

 

என்னடா பேசப்போறீங்க ? ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணு மனசை கெடுத்து வச்சிருக்கான் இந்த பொறுக்கி …மீண்டும் எகிறினான் அந்த ஸ்ரீ .

 

இதோ பாரு பொருக்கி கிறுக்கின்னு பேசினா நடக்குற கதையே வேற ….உன் தங்கச்சி சின்ன பொண்ணு இல்லை , இருபது வயசு ஆகுது ! என் தம்பி மட்டும் ஒன் சைடா லவ் பண்ணியிருந்தா நாங்க ஏன் உன் வீடு தேடி வரப்போறோம் ? உன் தங்கச்சியும் தான் இவனை லவ் பண்ணுறா … அஸ்வின் மத்யஸ்தம் பேசினான்.

 

என் பொண்ணு உலகம் தெரியாதவ….பகவதி கோபமாய் கத்தினார் .

 

உலகம் தெரியாத பொண்ணா ரெண்டு வருஷமா லவ் பண்ணுது ? அஸ்வின் கேலியாய் கேட்டான்.

 

வீடு புகுந்து கலாட்டா பண்றீங்களா ? போலீசுக்கு கால் பண்ணுவேன் என்றார் அந்த மனிதர்.

 

இங்க இவ்வளவு களேபரம் நடந்துட்டு இருக்கு ….எங்கடா அந்த பொண்ணு ? உடன் வந்த நண்பன் ஒருவன் கத்தினான்.

 

கீர்த்தி …கீர்த்தி …வெளியில் வா ! வினோத் சத்தமிட்டான் .

 

கீர்த்தி ? அஸ்வின் இதயம் லப் டப்பை தாறுமாறாக்கியது. இதயத்தின் படபடப்பு அவனை அச்சுறுத்தியது. நிதானிக்க முடியாத அளவிற்கு கையளவு இதயத்திற்குள் என்னென்னவோ செய்தது. நொடி நேரத்தில் மிகப் பெரிய பூகம்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

 

கடவுளே  வேண்டாம் ….நான் தாங்க மாட்டேன் ….இடைவிடாது அவன் மனம் இறைஞ்சியது. 

 

அவன் மனக்குதிரை நாலு கால் பாய்சலில் தாவி பாய்ந்துகொண்டிருந்தது .  

 

ஐயோ…என் இதயம் வெடித்து விடுமோ ! இறைவா நான் என்ன செய்வேன் ?திகிலுடன் உள்ளே பார்த்தான் …முகம் வெளிறி …பார்வை மங்கியது அவனுக்கு.அழுது வீங்கிய முகத்துடன் வெளியே வந்தாள் வினோத்தின் நிஜ காதலி அஸ்வினின் கனவு காதலி ஆம் அதே கீர்த்தியே தான்.

 

கண்ணுக்குள் பூச்சி பறந்து அவனை சுற்றி சுழற்றி கிறுகிறுக்க வைத்தது. 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!