Skip to content
Post Views: 2,195
அத்தியாயம் 8
கனிகா கையில் வைத்திருந்த கஞ்சியோடு மாடிக்கு செல்ல, அவளின் மனதின் படபடப்பு கூடினாலும், “ச்சே.. நம்ம பண்ணதுல பாவம் மாமா கண்ணு நிஜமாவே சிவந்து தான் போச்சு.
Advertisement
அதனால இந்த ஒரு தடவ மட்டும் மாமா எது சொன்னாலும் நல்ல புள்ளையா கேட்டுக்கனும்..” என தனக்கு தானே சொல்லி கொள்ள,
பாலுக்கு பயந்து அதுவரை மூலையில் பதுங்கியிருந்த மனசாட்சி, அவளின் இந்த பேச்சில் அதிர்ந்து, “கனி..! நிஜமாவா சொல்றே..? நீ அடக்க ஒடுக்கமா ஒருத்தர் சொல்றத கேட்க போறையா..?
Advertisement
Advertisement
இந்த மாதிரி ஷாக் எல்லாம் கொடுத்தா.. நீ செஞ்சு தர்ற பால விட பவர்புல்லா இருக்கறதால பட்டுன்னு போய் சேர்ந்திடுவேனோன்னு பயந்து வருது.
அப்புறம் ஊரே உன்ன பாத்து மனசாட்சி இல்லாதவன்னு சொல்லிடும்மா.
Advertisement
வேணாம் டா.. நீ, எப்பவும் போலவே இரு.. அதான் உனக்கும் நல்லது.. உனக்குள்ள இருக்கற எனக்கும் நல்லது..” என படபடப்பில் துவங்கி நக்கலில் முடிக்க,
“நானும் நல்ல புள்ளையா.. அடக்க ஒடுக்கமா இப்போ இருக்கணுமிங்கற மூடுல இருக்கறதால நீ தப்பிச்சே.
இல்ல.. நடக்கறதே வேறே..
அடச்சீ.. உள்ள போ.. எனக்கு போய் மாமாவ சமாளிக்கற வேல இருக்கு.
உன்னோட வெட்டி பேச்சு பேசவெல்லாம் என்னால இப்போ முடியாது..” என திட்டி அதை அடக்கியவள்,
மெல்ல அவர்களின் அறை கதவை திறந்து ஜாக்கிரதையாக எட்டி பார்த்தாள்.
காலை நடந்த நிகழ்வு கொடுத்த எச்சரிக்கை அது…
அந்த அறைக்குள் வெற்றிவேல் செழியன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாது இருக்க, “என்னடா இது.. ரூமுக்கு போகணுமுன்னு தானே மாமா மேல வந்தாரு.
ஒரு வேள கண்ணு பிரச்சனையில கண்ணை கசக்கிட்டே வேற ரூமுக்கு போயிட்டாரா..?
ஆள் இருக்கறதுக்கான எந்த அறிகுறியும் இல்லையே..? எங்கே போயிருப்பாரு..?” என்றவரே அறைக்கு உள்ளே வந்து கொண்டு வந்த கஞ்சி டம்ளரை அங்கிருந்த டீப்பாய் மீது வைத்த நொடி.. அவளின் இடையோடு சேர்த்து இறுக்கி பிடித்தது வெற்றிவேலின் முறுக்கேறிய கைகள்.
முதன் முறை உணரும் ஆணவனின் நெருங்கிய ஸ்பரிஷம் அவளை நடுக்கம் கொள்ள செய்ய.. ஓயாமல் பேசும் அவளின் வாய் பசைபோட்டது போல ஒட்டிக் கொண்டது.
பேசா மடந்தையாய் அவனின் கரத்தில் இருந்தவள் அடுத்து அவன் செய்த செயலில் சுத்தமாய் மூச்சுக்கு திணறும் நிலையில் நிற்கவேண்டியதானது.
ஆம்.. அவளின் இடையோடு பற்றி தூக்கியிருந்தவன் அவளை நிறுத்தியிருந்தான் தன்னோடு சேர்த்தணைத்த நிலையில் ஷவருக்கு அடியில்.
வெற்றிவேலின் அதிரடியில் திகைத்து விழிவிரித்தவள், மேலிருந்து தன் மீது கொட்டிய நீரின் விளைவால் கண்களை மூடிக்கொள்ள,
அவளின் இதழ்களோ அவள் மீது விழுந்த நீரினால் வந்த நடுக்கத்தாலோ.. அல்லது வெற்றியின் கரம் தனது வெற்றிடையில் பதிந்ததாலோ..
அந்த கரம் தந்த சூடு தனது மேனியில் ஏற்படுத்திய மாற்றத்தால் வந்த நடுக்கத்தாலோ.. என தெரியாது நடுங்கி கொண்டிருந்தது.
கனிகா தன்னை சுதாரித்து மெல்ல விழி திறந்து பார்க்க.. அவளின் பார்வைக்கு முதலில் பட்டது வெற்றிவேல் செழியன் மேல் சட்டை அணியாததால் தெரிந்த வலிமையான நெஞ்சமே.
அவனின் விரிந்த தோள்களும், அகன்ற மார்பும் அவனின் தேகபயிற்சியின் வலிமையை அழகாய் எடுத்து காட்ட,
பார்த்த கனிகாவிற்கோ மூச்சடைத்து போனதோடு முகமும் செவ்வானமாய் மாறி போனது.
அதே சிவந்த முகத்தோடு அவனை ஏறிட்டு முகம் பார்க்க தயக்கமும், பதட்டமும் தடுத்தாலும், அதையும் மீறி கூச்சத்தோடு நிமிர்ந்து அவனை காண,
அவளை சீண்டும் நோக்கத்தில் அவன் செய்ய துவங்கிய வேலையால் அவனின் உணர்வுகளும் தூண்டப்பட்ட நிலையை மொத்த தாபத்தையும் அவனின் விழியில் தேக்கி நின்றிருந்தான் அந்த காவலன்.
அவளின் முகத்திலிருந்து வழியும் நீர்.. அவளின் இதழை கடந்து, கழுத்து வழி செல்லும் பாதையை தொண்டை குழி மேலேறி இறங்க கிறக்கத்தோடு பார்த்தவனின் தாபப் பார்வையில், அவனிடமிருந்து விலகி செல்ல கனியின் பெண்மை ஆணையிட்ட நேரம்.. அவளை தன்னோடு அணைத்தபடி அள்ளி தூக்கியவன் அவளோடு வந்து மெத்தையில் சரிந்தான்.
அவனின் மொத்த எடையும் தாங்க இயலாது மூச்சடைத்து போனவளை மேலும் தவிக்க வைக்கவென அவனின் கரங்கள் அவளின் பெண்மையை மெல்ல சோதிக்க ஆரம்பித்தது.
வேட்கை நிறைந்த பார்வையோடு வெற்றியோ, அவளின் ஈரம் தோய்ந்த இதழ் நோக்கி தனது இதழ் பயணத்தை ஆரம்பித்தவன், அதோடு அவளின் பெயரையும் ஜபிக்க துவங்க கரண்ட் ஷாக் அடித்தது போல ஃப்ரீஷ் ஆன நிலையில் இருந்தாள் கனிகா.
அவனின் வேட்கை நிறைந்த பார்வையும், அவனின் கரங்கள் செய்த மாயத்தையும் தாண்டி, தன் காதில் ஓயாமல் ஒலித்த, “கனி..” என்ற ஜபம்.. அவளை மொத்தமாய் கிறங்க வைத்தது.
“கனி.. கனி..” என்ற வார்த்தை மட்டுமே காதில் ரீங்காரமாய் மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்த வேளை,
“கனி…!” என்ற படி அடுத்து அவளின் தோளில் கை வைக்க,
“சீ…! போ மாமா.. வேணா மாமா.. ப்ளீஸ்.. விடுங்களேன்..” என சிணுங்கிய கனியின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு விழ,
“ஏன்டா என்ன அடிச்சே..?” என்றபடி தலையை தேய்த்தவள்,
‘என்னடா இது..! தண்ணிக்கு கீழே அவ்வளவு நேரம் நின்னும் நம்ம தலை மட்டும் நனையவே இல்ல. அதிசயமா இருக்கு..’ என்று யோசனையோடு நிமிர்ந்து பார்க்க,
அவள் நின்றிருந்ததோ அந்த வீட்டின் மாடி படியின் துவக்கத்தில் கையில் ஏந்தியிருந்த கஞ்சி டம்ளரோடு..!!!
error: Content is protected !!