Skip to content
Post Views: 3,427
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் -21
Advertisement
விக்ரமும் பல்லவியும் நன்றாக தூங்கிவிட்டு எழ மதியம் ஆகியிருந்தது.
Advertisement
Advertisement
முதலில் எழுந்தது விக்ரம் தான். தன்னை அணைத்து க்கொண்டு தூங்கும் மனைவியை பார்த்தவன். அவளின் தலையில் முத்தமிட்டு “குட் ஹாப்டனுன்” என்றான். “என்ன ஹாப்டனுனா மதியம் ஆகிருச்ச”என்றவள் எழ பார்க்க “இரு பானு பிள்ளைகள் இன்னும் வரல என்னன்னு கேட்கிறேன்” என்றவன்.
Advertisement
சுந்தருக்கு போன் போட.
அழைப்பை ஏற்ற சுந்தர். “விக்ரம் நாங்க பிள்ளைகளோடு மீயூசியம் வந்து இருக்கோம். இதை பார்த்துட்டு, பக்கத்தில் சீ, சோவுக்கு போறோம் வர நைட்டாகும். நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கப்பா. நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வர்றோம்” என்றார்..
“ஓகே டாடி, தாங்யூ டாடி”என்றான் விக்ரம்..
“ஓகே விக்ரம்” என்று போனை வைத்தார் சுந்தர்..
சுந்தர் அவர்களுக்கு சிறிது தனிமை கொடுக்க வேண்டும் என்றே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தது..
விக்ரமுக்கு தந்தையை நினைத்து பெருமையாக இருந்தது. தங்களுக்காக தான். தந்தை இப்படி செய்கிறார் என்று நினைத்து. பானுவை பார்க்க. அவள் மறுபடியும் தூங்கி இருந்தாள்..
“ஏய் பொண்டாட்டி சாப்பிட்டு தூங்கு என்றவன். உணவை ஆர்டர் பண்ண. பானுவுக்கு மெல்ல விழிப்பு வர.
அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன். அவளின் காது மடலில் இதழ் கொண்டு உரச..
“ஹபீபி பிள்ளைகள் வந்திருவாங்க. நான் போயிட்டு குளிச்சுட்டு வர்றேன்” என்று எழ போனவளை..
தன் மேல் அவளை போட்டு கொண்டவன். பானுவின் இடுப்பில் வீணை வாசிக்க..
“ஜீ விடுங்க ஜீ” என்றவளை..
“பிள்ளைகள் நைட்டு தான் வருவாங்க ஜாலி” என்றவன். அவளை அவனோடு ஆளுமைக்கு கொண்டு வர…
“ஹபீபி, ஹபீபி போதும், விடிஞ்சுருச்சு என்று அவள் சொல்லிய சொல்லை காதில் வாங்காதவன். அவளை ஆளும் செய்கையில் இருக்க..
அவளோ தன்னை எவ்வளவு தேடி இருக்கிறான் என்று புரிய. அவன் செய்கைக்கு இசைந்து கொடுக்க.
இருவருக்கும் நிம்மதியான உணர்வு. அவளை விடவே மனம் இல்லாமல் பிரிந்தவனை.
பார்த்து சிரித்தவள்..
“என்னடி சிரிப்பு, இன்னும் ஒரு ரவுண்டு போவோமா” என்று கேட்டவனை..
“ஆள விடுங்க சாமி” என்றவள் போர்வையை எடுத்து தன்னை சுற்றி கொண்டவள். குளியல் அறைக்கு சென்று. “ஜீ எனக்கு “ட்ரெஸ் வேணும் ஜீ” என்றாள்..
பானுவுக்காக நைட்டே விக்ரம்
ஆன்லைனில் ஆர்டர் பண்ணி இருந்தான். நைட்டே ஆர்டர் போட்டேன் பானு ட்ரெஸ் வந்து இருக்கும். இரு எடுத்துட்டு வர்ரேன் பானு என்று வெளியில் சென்று கதவை திறக்க. அவன் ஆர்டர் பண்ணிய உடை, மெடிசன், ஊணவு என அனைத்தும் வந்து இருந்தது. அதை எடுத்து வந்தவன். உணவையும், மெடிசனையும் வெளியில் உள்ள டேபளில் வைத்தவன்.. உடையை மட்டும் எடுத்து கொண்டு அறைக்கு சென்றான்..
“பானு உனக்கு ட்ரெஸ் வந்து இருச்சு” என்று சொல்லிவிட்டு. அவளுக்காக ஒரு ப்ளுநிற பிராக்கை அவளிடம் தர..
அந்த உடையை பாத்ரூம் கதவை திறந்து வாங்கியவள் அதை பார்த்து..
“ஜீ என்ன ஜீ இது. கையில்லாமல் இருக்கு. இது மாதிரியெல்லாம் நான் போடுறது இல்ல ஜீ. வேற ட்ரெஸ் தாங்க” என்றாள்.. சரி என்று.
இன்னொன்றை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு. கட்டிலில் அமர்ந்து கொண்டு சிரித்தவனை. “ஜீ!!..” என்று கத்தியவள். துண்டை உடலில் கட்டிக்கொண்டு கோபமாக வந்தவளை. பார்த்து சிரித்தவன்.
“இந்த ட்ரெஸ் கூட நல்லா இருக்கு பானு” என்றான் அவள் துண்டை கட்டி இருப்பதை பார்த்து.
“இது என்ன ஜீ? வெறும் கயிறு மட்டும் தான் இருக்கு இதை எப்படி கழுத்துல கட்டுறது. வேற தாங்க என்று அவன் வாங்கி வந்த உடையை பார்க்க.
விக்ரம் வாங்கி வைத்துள்ள எல்லா ட்ரெஸ்சையும் பார்க்க. அனைத்து உடையும் கையில்லாமல். முட்டி வரை உள்ளதாகவே இருக்க. ஒன்று மட்டும் கைவைத்து இருக்க அதை எடுக்க போனவளை.
அவளுக்கு முன் விக்ரம் அந்த உடையை எடுத்து வைத்து கொண்டவன். “இதை தவிற வேற ட்ரெஸ் போடு நான் பாக்கனும்” என்றான்..
அவள் எந்த உடையை போடுவது என்று குழம்பி நிற்க..
“இத போடு என்று முதலில் கொடுத்த ப்ளு கலர். பிராக்கை எடுத்து கொடுத்தான்..
” என்ன ஜீ பிள்ளைகள் வந்திருவாங்க ஜீ. அந்த கையுள்ள ட்ரெஸ்சை கொடுங்க என்றாள்..
“இதை தவிற வேற போடு நான் உன்னை பாக்கனும்” என்றான்..
“ஜீ ரொம்ப ஓவரா பண்ணுறீங்க எனக்கு இந்த மாதிரி போட்டு பழக்கமில்ல” என்றாள்..
“இன்று ஒரு நாள் போடு. நான் உன்னை பாக்கனும். எப்போ பாத்தாலும் பெரிய பர்தாவை இல்ல புல்லா சுடி போடுறது. பார்க்க நல்லாவே இல்ல. நம்ம பிள்ளைகள் வர நைட்டாகும். அது வரைக்கும் இத போடுடி என் செல்லம் இல்ல” என்று கொஞ்சியவனின் சொல்லை தட்ட முடியாமல். அவன் குடுத்த ப்புளு கலர் பிராக்கை அணிந்து வர..
விக்ரம் அந்த அறையில் காணவில்லை.. வெளியில் இருந்து “பானு” என்று அழைக்க. தயங்கி, தயங்கி சென்றவளை பார்த்தவன்..
“சூப்பரா இருக்க பானு” என்றவன்.
அவளின் அருகில் சென்று கொஞ்சம் வைட்டு போட்டுட்ட. இதுவும் நல்லா தான் இருக்கு என்றவன். அவளின் இடுப்பை பிடித்து கிள்ள..
“ஆ! என்ன ஜீ வலிக்குது” என்றவளை.
“வா சாப்பிடலாம்” என்று இருவரும் சாப்பிட்டு முடிக்க..
விக்ரம் பானுவிடம் மாத்திரையை எடுத்து தந்தான்..
“இதை எப்போ எடுத்து வச்சீங்க” என்றாள்..
“ஆன் லைன்ல ஆர்டர் போட்டேன் காலையில தான் வந்துச்சு” என்றான்…
“கிளம்பு பானு ஒரு வாக் போலாம்” என்றான்..
“என்ன இந்த ட்ரெஸ்சிலயா நான் வெளியில் வரமாட்டேன் என்றவளை..
“வா பானு, ஒரு ஒன் ஹவர், ஒரு வாக். இங்கே பக்கத்துல ஒரு பார்க் இருக்கு கடையிருக்கு போயிட்டு வரலாம். நல்லா இருக்கும் வா பானு” என்றான்..
“இந்த உடையில் எப்படி” என்றவள், மேலே குளிருக்கு போடும் ஒரு சர்கினை எடுத்து போட்டு கொண்டவள். “இப்ப போலாம்” என்றவளை.
அவளை பார்த்து சிரித்தவன்.. “வீட்டுக்கு வந்தவுடன் இந்த சர்கின்னை கழட்டியிருனும்” என்றான்..
“நம்ம பிள்ளைகள் இல்லன்னு ஓவரா போறீங்க, அவங்க வர வரைக்கும் தான் உங்க பேச்சை நான் கேட்பேன்” என்றாள்..
“வாடி என் செல்லம் போலாம், வந்து மீதியை பார்த்துக்கலாம்”. என்று அவளை அணைத்தவாறே வெளியில் அழைத்து சென்றான்.. சிறிது நேரம் போட் பயணம். பின்பு பார்க், அங்கே உள்ள கடைகளுக்கு சென்று வர சாயங்காலம் மேல் ஆகியிருந்தது..
இருவரும் புதிதாக திருமணமான இளம் ஜோடி போல் சுற்றி வந்தனர்.. விக்ரம் பானுவை தன் கை வளைவிலே வைத்து இருந்தான்…
மிகவும் சோர்ந்து போயி இருந்தவளை. “என்னடா என்ன ரொம்ப டல்லா இருக்க. உன்ன ரொம்ப கஷ்டபடுத்துறேனா” என்றான்..
“இல்ல ஜீ, எதாவது குடிக்கணும் போல இருக்கு” என்றவளிடம் ஒரு பெரிய டம்பளர் சூஸ்சை வாங்கி நீட்ட. அதை குடித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.
“நீ தூங்கு பானு” என்றவன் வெளி அறைக்கு செல்ல.
“நீங்க” என்றாள்..
“நான் வந்தேன்னு வையி உன்ன தூங்க விடமாட்டேன் பரவாயில்லையா” என்று கேட்டு சிரித்தான்..
அவனின் தோளில் ஒரு அடி போட்டவள். வாங்க இரண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம்” என்று அவனை தூங்க வைத்து, இவளும் தூங்கி போனாள்..
இருவரும் கண் விழித்த சிறிது நேரத்தில் பிள்ளைகள். ஜெனி, சுந்தர் என்று அனைவரும் வந்து சேர..
அனைவரும் ஒன்றாக சேர்ந்து டின்னரை முடித்தவர்கள்.. தேம்ஸ் நதி கரை யோரம் நின்று வேடிக்கை பார்த்தார்கள்..
பிள்ளைகள் அங்கே காலியாக இருந்த இடத்தில் விளையாடிக்கொண்டு இருக்க.
விக்ரம் பானு இருவரும் சேர்ந்து ஒன்றாக கைகோர்த்து நின்று கொண்டு தேம்ஸ் நதி கரையின் ஓரத்தில் நின்று மக்கள் போட்டில் செல்வதை பார்த்திருந்தனர்…
ஜெனியும், சுந்தரும் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள. “டாடி” என்று சிவாக்குட்டி ஓடி வந்து விக்ரமனின் மேல் ஏறிக்கொள்ள.
சூர்யா சிவாவின் அருகில் வந்து. “வா சிவா விளையாடலாம்” என்று அழைக்க..
“போண்ணா நான் டாடி கூட பேச போறேன்” என்றவள்.. விக்ரமிடம்”இங்கே ஏன் தண்ணீயா இருக்கு. இதில் குளிக்கலாமா, இது பீச்சா? ” என்று ஆயிரம் கேள்விக்கு மகள் கேட்க..
விக்ரம் மகள் கேட்கும் கேள்விக்கு அசராமல் பதில் சொல்ல…
ஆபீதா பானு விக்ரமை பார்த்து “நீங்க எப்படி ஜீ அவ கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுறீங்க”..
“அவ குழந்தைடி இப்பதான் எல்லாத்தையும் பாக்குற. அதான் கேள்வி கேட்குற. நாம தான் சிவாவுக்கு சொல்லி தரனும்”..
“ஆமாம் ஜீ, நீங்க ஒரு பர்பெக்ட் அப்பா தான் ஒத்துக்கிறேன்.
“ஏன் பானு நான் பர்பெக்ட் புருஷனா நடந்துக்கிளயா? வேணா இன்னைக்கு, ஒரு ட்ரெயல் பண்ணி பாக்கலாமா” என்றவனை. முறைத்தவள் பிள்ளைகள் இருக்காங்க என்றாள்..
” நாம வேணா பிள்ளைகள் தூங்குனதுக்கு கப்பறமா ஒரு ட்ரெயல் பாக்கலாமா” என்று கேட்க..
“நான் பேசல போதுமா” என்றவள். ஆஷிக், சூர்யாவோடு சென்று அமர்ந்து கொண்டாள்..
இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு. அந்த வீட்டில் இருந்து. பக்கத்தில் உள்ள லண்டன் மேம்பாலதின் அருகில் உள்ள கடைகளை சுத்தி பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்..
அனைவரும் ஒன்றாகதான் தூங்குவார்கள், பிள்ளைகள் தூங்கியவுடன் விக்ரம் பானுவை அழைத்து கொண்டு அவன் அறைக்கு சென்று விடுவான்.. அவளை அணைத்துக்கொண்டு தூங்கும் போது வரும் தூங்கமே தனி என்று பானுவை அணைத்தபடியே தினமும் தூங்குவான்..
விக்ரமுக்கு திடீர் என்று
மலேசியாவில் இருந்து போன் வந்ததும். பாத்தீமா தாதிக்கு உடம்பு சரியில்லை, இறக்கும் தருவாயில் உள்ளார். என்று தகவல் வர.. விக்ரம் தனி விமானத்தில் அனைவரையும் அழைத்து கொண்டு சென்றான்.. பாத்தீமாவுக்கு இவர்கள் சென்று பார்த்த போது ருஹ் (உயிர் பிரியும்) தருவாயில் இருந்தார்.. பிள்ளைகள் அனைவரையும் பார்த்த பாத்தீமாவுக்கு சுயநினைவு இல்லை. பேச முடியாமல் கஷ்டபடும் பாத்தீமா தாதியை பார்த்து அனைவரும் கண்கலங்கி நிற்க.. பாத்தீமா தாதி மவுத் (இறந்தவர்) ஆகி இருந்தார்..
பாத்தீமா அல்லாவிடம் சென்றிருந்தார்..
இஸ்லாமிய முறைப்படி பாத்தீமா தாதிக்கு செய்ய வேண்டியதை சடங்கை செய்து. உடலை எடுத்து சென்றனர்..
மூன்று நாட்கள் அனைவரும் மஹாமுது வீட்டில் தான் இருந்தனர்.. விக்ரம் மனைவி பிள்ளைகளை ஒரு வாரம் கழித்து வாங்க என்று சொல்லி சென்றுவிட்டான்..
மஹாமுது வீட்டில் ஒரு மாதமாக மூன்று குடும்பம் இருந்தது. வாஜிதா பானு குடும்பம். முபாரக் குடும்பம், ஆபீதா பானு குடும்பமும் என்று ஒன்றாக சேர்ந்து இருந்தனர். விக்ரம் தினமும் பானுவிடம் போன் போட்டு “எப்போ கிளம்பற” என்பான்..
“வாஜீ இங்க இருக்க. பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்ல. வாங்சின் ஊசி போட்டு இருக்கு என்று தினமும் ஒரு காரணம் சொல்ல. நாட்கள் வேகமாக செல்ல. பாத்தீமா தாதி இறந்து. இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது.
நாளை அனைவரும் கிளம்புவதாக இருக்க.
முபாரக்கின் குடும்பம் முதலில் கிளம்பி இருந்தது. ஆபீதா மஹாமுதுவை லண்டனுக்கு வந்து கொஞ்ச நாள் இருக்கும் மாறு அழைக்க..
“இல்லை பானு நீங்க எல்லாம் கிளம்புங்க, எனக்கு கடையில் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வர்றேன்” என்றார்.
error: Content is protected !!