Skip to content
Post Views: 3,456
நான் தேடும் காதல் நீ…..12
அந்த பிரம்மாண்டமான வரவேற்பறையின் உள் நுழைந்ததுமே முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தீர்த்தாவையும்,சிவன்யாவையும் வரவேற்றார் செல்வம்.தீர்த்தாவிற்கு இங்கு வரவே பிடிக்கவில்லை ஆனால் சதாசிவத்தின் சொல்லுக்காக அவருடன் வந்திருந்தாள்.சிவன்யாவோ தீர்த்தாவின் கைகளை இறுக பற்றிய படி தான் இருந்தாள்.அவளின் உள் மனது ஏதோ சரியில்லை என்பது போல உணர்த்திக் கொண்டே இருந்தது.
“க்கா…சீக்கிரம் பார்த்துட்டு போகலாம் க்கா….”என்று மிக மெல்லிய குரலில் சிவன்யா கூற,
“ம்ம் போயிடலாம் மேடம்…முதல்ல வீட்டுக்குள்ள வாங்க….”என்று ஆர்பாட்டமான குரல் அவர்களின் பின்னிருந்து கேட்கவும் சிவன்யா பயந்து திரும்பினாள்.
Advertisement
“ப்பா….உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு….உன்னை பார்க்க வந்தா நான் யாருனு தெரியாதுனு சொல்லுவியா நீ…..”என்று நிமலன் சிவன்யாவின் தலையில் தட்ட வர அதனை தடுத்த தீர்த்தா,
“என்ன நீ இவளை பார்க்க போனியா….சிவா இவன் உன்னை பார்க்க வந்தானா….ஏன் என் கிட்ட சொல்லலை….”என்று தீர்த்தா அங்கேயே ஒரு சண்டையை ஆரம்பிக்க,
“ஓய் காரமொளகா….உடனே அவகிட்ட எகிறாத….வா வந்து உட்காரு…..”என்று தீர்த்தா உணரும் முன் அவளின் கையை பற்றி இழுத்து வந்து சோபாவில் அமர வைத்தான். இதனை எதிர்பாராதவள் சோபாவில் தொப்பென்று அமர அவளின் பக்கத்தில் சிவன்யாவும் அமர்ந்தாள்.
Advertisement
“சிவாம்மா எப்படிடா இருக்க….நீ அப்படியே வைதேகி தான்டா….”என்று செல்வம் பூரித்து தான் போனார் சிவாவை குழந்தையில் பார்த்தது அதன் பின் பார்க்கவில்லை இப்போது தான் பார்க்கிறார்.தீர்த்தா நிரஞ்சன் மற்றும் வைதேகியின் கலப்பாக இருப்பாள் ஆனால் சிவன்யா முழுவதும் வைதேகியின் அச்சு என்றே கூறிவிடலாம்.
Advertisement
“உங்க வீட்டு பெரிய மனுஷர் எங்க இருக்காங்கனு சொன்னீங்கனா பார்த்துட்டு கிளம்பிடுவோம்….”என்று தீர்த்தா கத்தரித்தார் போல பேசினாள் அவளுக்கு ஏனோ செல்வத்தின் அதிக படியான அக்கறை பேச்சு இரண்டும் பிடிக்கவில்லை.
“ப்பா ரொம்ப புகழாதீங்க அவளுக்கு பிடிக்கலை போல….”என்ற நிமலனின் வார்த்தையில் செல்வத்தின் முகம் தொங்கிவிட அவர் சதாசிவத்துடன் பொதுவாக பேச தொடங்கினார்.நிமலன் தீர்த்தாவிடம் திரும்பி,
“தாத்தாவை குளிக்க வச்சிட்டு இருக்காங்க…கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு….”என்றவன் பணியாளை கூப்பிட்டு அனைவருக்கும் பழச்சாறு எடுத்து வரும்படி பணிந்தான்.சிவன்யா மிரட்சியுடன் தான் அமர்ந்திருக்க,
Advertisement
“ப்ரீயா இரு சிவா உன்னை யாரும் இங்க ஒண்ணும் செஞ்சிட மாட்டாங்க….அதோட உன் அக்கா ஒரு ஆளே போதும் உனக்கு நீ எதுக்கு பயப்படுற….”என்று தீர்த்தாவை பார்த்துக் கொண்டு நிமலன் கூற,
“அவ ஒண்ணும் பயப்படுல….நீ தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்காத….”என்று கத்தரித்தது போல தீர்த்தா பேச,நிமலன் வாயை மூடிக் கொண்டான்.ஆனால் சிவாவை பார்த்த நிமலனுக்கு சற்று பாவமாக இருந்தது சொந்த மாமாவின் வீட்டுற்கு வந்திருக்கிறாள் என்பது போலவே இல்லை ஏதோ ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து தப்பித்து ஓட அமர்ந்திருப்பவள் போல் தான் அமர்ந்திருந்தாள்.அதுவே நிமலனை மிகவும் நிதானம் இழக்க செய்தது தாங்கள் அத்தனை கொடுமை செய்துவிட்டோமா என்று கேள்விக்கு ஆம் என்ற பதிலே கிடைக்க அதனால் தன் தந்தையின் உரிமை பேச்சை ஆரம்பித்திலேயே நிறுத்திவிட்டான்.
“சார் பெரிய சார் ரெடியாகிட்டாங்க….”என்று பணியாளின் குரலில் எழுந்த நிமலன்,தீர்த்தாவிடம்,
“டூ மினிட்ஸ்….”என்றுவிட்டு செல்ல,
“வந்ததுலேந்து இதை தான் சொல்லுறான்….எவ்வளவு நேரம்….”என்று முணக,
“சும்மா இருக்காக்கா….நானே பயந்து போயிருக்கேன்….”
“உனக்கு எத்தனை தடவைடீ சொல்லுறது எதுக்கெடுத்தாலும் பயந்து சாகதனு….”என்று அவளின் தலையில் ஒரு கொட்டை வைக்க,
“ஓய் கார மொளகா அவளே பயந்த கோழி மாதிரி நடுங்கி கிட்டு இருக்கா அவளை ஏன் அடிக்கிற….”என்றபடி வந்த நிமலன்,தீர்த்தா ஏதோ பேச வரும் முன்,
“என்கிட்ட சண்டை போடுறது அப்புறம் இருக்கட்டும் தாத்தாவை பார்க்க போகலாம் வா…..”என்றவன் சதாசிவத்திடம் திரும்பி,
“நீங்களும் வாங்க அங்கிள்…”என்று கூப்பிட்டான்.
“வரேன்பா….முதல்ல தீர்த்தா பார்த்துட்டு வரட்டும்….அப்புறம் நான் போய் பார்க்குறேன்….”என்று கூற,
“அப்படி ஒண்ணும் நாங்க பெருசா பேச போறது இல்லை அங்கிள்…என்னை பொறுத்தவரை நீங்க சொன்ன மாதிரி வயசானவரை பார்க்க வந்திருக்கேன் அவ்வளவு தான்….நீங்களும் வாங்க….”என்று பேசிக் கொண்டே தீர்த்தா எழ,சதாசிவத்தால் அனைவரின் முன்பும் எதுவும் கூற முடியவில்லை.நிமலனுக்கு சற்று கோபம் கூட வந்தது என்ன இருந்தாலும் தங்கள் இருவருக்கும் அவர் தாத்தா தான் அது மாறாது இப்படி அவரை தரைகுறைவாக பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை அது அவனின் முகத்தில் தெரிய,
“அவரு உனக்கு மட்டும் தான் தாத்தாவா இருந்தாரு எங்களுக்கு இல்லை அதனால எங்க கிட்டேந்து நீ வேற எதையும் எதிர் பார்க்காத….”என்று தீர்த்தா அவனின் பார்வை உணர்ந்து கூற,
“எதுக்கு எடுத்தாலும் இப்படி வாதம் செஞ்சா தான் உனக்கு பொழுது போகுமா…..ப்பா எப்படி தான் இவ உன் கூட இருக்காளோ….”என்று நிமலன் சிவன்யாவை பார்த்து கூற,
“எங்க அக்காவை பத்தி தப்பா பேசாதீங்க…..”என்று மூக்குவிடைக்க சிவா கூற,
“பார்ரா….அமைதி படை பேசுறத….”என்றவன் தீர்த்தா பேச்சை ஆரம்பிக்கும் முன்பே,
“ஆங்…நாம சண்டை அப்புறம் வச்சிக்குலாம்…..இப்ப தாத்தாவை பார்த்துட்டு வரலாம்….”என்று கூறிவிட்டு முன்னே நடக்க செல்வத்தின் மனம் தான் சற்று நிலையில்லாமல் தவித்தது தான் நினைப்பது நடக்காது என்று நினைத்திருக்க இதோ மகனின் முகத்தில் தெரிந்த சிரிப்பும் தீர்த்தாவிடம் அவன் எடுத்துக் கொள்ளும் உரிமையும் அவரை ஒருமுறை கேட்டு பார்த்துவிடலாம் என்று நினைக்க வைத்துவிட்டது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இங்கு அமரனின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது தீர்த்தாவிடம் அன்று கோபத்துடன் பேசியது மனதை கொன்று கொண்டு இருந்தது.நிச்சயம் அழுதிருப்பாள் என்று தெரியும் ஆனாலும் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை.உறவுக்கும்,மனதுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்க தொடங்கிவிட்டான்.ஆம் இப்போதெல்லாம் கற்பகத்தை பார்க்கும் போதெல்லாம் தன் போல் ஒரு குற்ற உணர்வு எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.அதுவும் இன்று தீர்த்தா சதாசிவத்துடன் செல்லும் போது தன்னை பார்த்த பார்வை என்னுடன் நண்பனாகவாது நீ இருக்க வேண்டும் என்ற மறைபொருளை உணர்த்த அமரன் மொத்தமாக உடைந்து தான் போனான்.
தங்க் இருவரிடமும் இருந்தது நட்பு மட்டும் அல்ல அதையும் கடந்த ஒன்று என்று அவன் உணர்ந்த நொடி அது.அவளின் கண்களில் அதீத கலக்கம் இருந்தது போல் தெரிந்தது அமரனுக்கு அதுவே அவனை இன்னும் நிலை கொள்ளாமல் அலைக்கழிக்க இதோ மண்டியில் அமர முடியாமல் தன் ஆஸ்தான இடமான தன் அறையில் சாளரத்தின் திண்டில் அமர்ந்து வானத்தை வெறிக்க தொடங்கிவிட்டான்.
தனது அறையில் இருந்த சாளரத்தின் வழியை வானத்தை வெறித்துக் கொண்டிருந்த அமரனின் முகத்தில் யோசனை ரேகைகள் தான்.முதலில் தீர்த்தாவின் காதலை பெரிதாக எடுத்துக் கொள்வில்லை இதெல்லாம் ஏதோ மனதில் எழும் மாயை என்று கருதி விலகினான்.ஆனால் தீர்த்தா விடாமல் அவனை துரத்த ஒரு மனது அவளின் பார்வையை வெறுத்தாலும் மற்றொரு மனது அவளின் பார்வை ரசித்திருக்கிறதோடு அதை எதிர்பார்த்தும் இருக்கிறது என்ற உண்மை அவளின் விலகலில் புரிந்து கொண்டான்.
தன் மனதின் தேடல் அவளாக இருப்பதில் நடுக்கம் தான் பிறந்தது அவனிற்கு. தனக்கென்று ஒருவள் இருக்க தன் மனம் மற்றொருவளின் மீது படிவதா என்று தன்னை குறித்தே சற்றே கோபமும்,வெறுப்பும் மண்டியது.இது என்ன சிறுபிள்ளை தனமாக தன் மனது ஒன்றை தேடுகிறது இது நல்லதில்லை என்று மூளை எடுத்துரைத்தாலும் கேட்க மறுக்கும் மனதை எப்படி தன் வழிக்கு கொண்டுவர என்று புரியாமல் தடுமாறி தான் போனான்.
தடுமாறியதால் தவிக்கிறேன்…..
தடுமாறியும் அதை தேடியே தவிக்கிறேன்……
error: Content is protected !!