Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-12-2

ஒரு கேஸ் விஷயமாக காலையில் வெளியே சென்று விட்டு அங்கே அதிக நேரம் ஆனதால் வேகமாக தனது காரில் கோவிலுக்கு வந்து கொண்டு இருந்தான் திருக்குமரன்.

திடீரென தனது காரின் முன்பு வந்த பெண்ணை கண்டதுயும் திடுக்கிட்டவன் சடன்பிரேக் போட்டு காரை நிறுத்திவிட்டு கோவமாக கதவை திறந்து இறங்கி அவளை திட்ட வந்தவன் “திரு மாமா”என்ற அழைப்புடன் தன்னை கட்டிக்கொண்டவளை பார்த்து எதற்கும் ஆசையாத ஆணவன் மனமும் ஒரு நொடி திடுக்கிட்டது.

“பாருக் குட்டி”என்று இறுக்கமாய் அவளை

அணைத்து கொண்டவன் முழுதாய் ஒரு நிமிடம் கழித்து அவளின் அழுகை சத்தத்தில் தான் சுயநினைவுக்கு வந்து அவளின் உடை பார்த்தான். உடனே பலதும் யோசித்த தனது மனதை அடக்கி,“பாருக் குட்டி இங்க பாரு டா என்னாச்சி மா அழாம மாமாகிட்ட சொல்லுடா”என்றான் தன்னை அணைத்து இருந்த அவள் கைகளை மெதுவா பிரித்து



Advertisement

 அவளோ அவனை விடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டு, “மா…மா பய…மா இரு..க்கு மா…மா ரொம்..ப ப…ய…மா இ..ருக்கு….மா…..மா” என்று சொல்லிக் கொண்டு இன்னும் அழ தொடங்கினாள்.

 கஷ்டப்பட்டு அவளை தன்னிலிருந்து பிரித்த திரு அவளின் முகத்தை தனது இரு கைகளில் ஏந்தி, “இங்க பாருடா உன் திரு மாமா உன் கூட இருக்கேன் இப்ப சொல்லு என்ன ஆச்சு ஏன் இப்படி வந்து நிற்கிற” என்றான் அழுத்தமாக.

 அதில் கொஞ்சம் தெளிந்தவள், “ஆமால்ல என் திரு மாமா இருக்கும்போது எனக்கென பயம்” என்று சொல்லி தனது கண்களை துடைத்துக் கொண்டு, “ஒரு நிமிஷம் இரு மாமா இந்த லேடி கெட்டப்- பாள தான் எல்லாம்” என்று சொல்லி வேகமாக தனது உள்பாவாடை கயிறினை இழுத்தாள்.

Advertisement

 அவள் சொல்வதை புரியாமல் பார்த்து நின்றவன் அவளை செயலை பார்த்து, “ஏய் மெண்டல் என்னடி பண்ற” என்று பதறி போய் பின்னால் திரும்பி தனது கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

Advertisement

“மாமா ஓவரா கற்பனை பண்ணாத திரும்பி பாரு” என்க

“முடியாது போடி. உனக்கு என்னவோ ஆகிட்டு மட்டும் புரியுது ஆனா என்ன ஆயிற்றுனு தெரியவில்லை நான் எதுக்கும் இப்படியே நின்னு பேசுறேன்”

“அட மாமா திரும்பி பாரேன் கொஞ்சம்” என்க கொஞ்சம் பயத்துடன் மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

Advertisement

 

 திரும்பிப் பார்த்தவன் அவளின் கெட்டப் பார்த்து, “ஏய் என்னடி இது” என்றான் அதிர்ச்சியுடன்

“அட என்ன மாமா நீ எதுக்கு எடுத்தாலும் அதிர்ச்சி ஆகிட்டே இருக்க” என்றாள் அசால்டாக

“என்னடி நீ இப்படி அசால்ட்டா பேசுற. திடீர்னு பேய் மாதிரி தலைய விரிச்சு போட்டுட்டு சேலை இல்லாமல் வெறும் ஜாக்கெட் பாவாடையோட கார் முன்னாடி வந்து நிக்க அத பாத்து எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான். இதோ இப்ப கூட பாரு ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி என்னை கட்டிப்பிடிச்சி அழுதுட்டு இருந்த இப்ப பாரு ஸ்டைலா பேண்ட் டீசர்ட் – வோட நிக்க உனக்கு என்ன தாண்டி பிரச்சனை என்ன தான் நடந்துச்சு தயவு செஞ்சு சொல்லி தொலை” என்றான் கடுப்பாக

“அட ஏன் மாமா எப்ப பாரு கேள்வி கேட்டுட்டே இருக்க” என்று அழுத்துக் கொள்ள

“ஏய் மரியாதையா இப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறியா இல்லையா முதல்ல இந்த டிரஸ் எப்படி நீ மாத்துன அத சொல்லு”

“அது ஒன்னும் இல்ல மாமா வீட்ல அம்மா சாரி கட்டி விட்டாங்களா எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு ஒருவேளை இது அவுந்துட்டுனா என்ன பண்ண அதான் இந்த இன்ஸ்கர்ட் குள்ள ஜீன்ஸ் பேண்ட்-டும் ஜாக்கெட் குள்ள டீசட்டையும் மடிச்சு விட்டு இருந்தேன். அதுதான் இப்போ எனக்கு கை கொடுத்து இருக்கு” என்றாள் விளக்கமாக.

“சரி அது ஓகே இப்ப உன்னோட சேலை எங்க அத முதல்ல சொல்லு”

“இப்போம் உனக்கு நான் பதில் சொல்றத விட இப்ப ரெண்டு பேரும் வருவாங்க அவனோட வச்சு செய்றது தான் முக்கியம். அதனால வா அந்த இருட்டுக்குள் போய் நம்ம ரெண்டு பேரும் ஒழிஞ்சி நிப்போம்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த இருளில் சென்று மறைந்தார்கள்.

“போயும் போயும் இந்த பைத்தியத்தை லவ் பண்ணுன பாத்தியா உனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்டா திரு” என்று தனது விதியை நொந்து கொண்டு அவளின் பின்னே நின்றான்.

“மாமா நீ போலீசா இல்ல வேற யாருமா. குற்றவாளியை பிடிக்க மறஞ்சி நிக்கும்போது பேசாம இருக்கணும்னு கூட உனக்கு தெரியாதா” என்று அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் போது அவளை துரத்திக் கொண்டு வந்த இருவரும் ரோட்டிற்கு வந்து, “மச்சான் எங்கடா போன அவ சும்மா தல தலன்னு இருந்தாடா அவளை இன்னைக்கு பூரா வச்சி செய்யலாம்னு நெனச்சேன். எல்லாம் உன்னால தான் உன்னால ஒரு 50 கிலோ பொண்ண தூக்க முடியாதா டா” என்று தனது பக்கத்தில் நின்றவனை திட்டி கொண்டு அவளை அங்கும் இங்கும் தேடிக்கொண்டு இருந்தான்.

“சாரிடா மாப்ள அங்க மணலுக்குள்ளே மரத்தோடு வேர் இருந்திருக்கு கவனிக்காம கால வச்சுட்டேன்டா அதான் கீழ விழுந்துட்டேன். இப்ப என்ன அவ இங்க தான் எங்கையாவது மறைந்து நிற்பா அவளோட சேல நம்ம கைல தான் இருக்கு இல்ல கண்டிப்பா இங்கதான் எங்கேயாச்சும் நிப்பா நம்ம தேடி கண்டுபிடிப்போம் டா. நீ இந்த பக்கம் பாரு நான் அந்த பக்கம் பார்க்கேன்” என்று சொல்லி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று தேட

 அவர்கள் பேசியதை வைத்து என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்ட திரு தனது பக்கத்தில் நின்றவளின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

 தனது கையை அழுத்தமாக பிடித்து இருந்த திருவின் மனநிலையை புரிந்து கொண்ட பாரதி, “விடு மாமா அதான் ஒன்னு நடக்கல இல்ல. நீ பீல் பண்ணாத இப்ப அவங்க ரெண்டு பேர்த்தையும் நான் என்ன பண்றேன்னு மட்டும் பாரு” என்று சொல்லி அவன் கையை விலக்கிவிட்டு பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்துக்கொண்டு அவர்களை நெருங்கினாள்.

 

@@@@@@@@@@

 

“மச்சான் இங்க தான் வந்தா எங்கடா போனா ஆளையே காணும்”என அவளை எங்கு தேடியும் கிடைக்காததால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையோ என்ற கடுப்பில் கேட்டான்.

“பீல் பண்ணாத மச்சான் இங்கதான் எங்கேயாவது ஒளிஞ்சிருப்பா கண்டிப்பா அவள புடிச்சிரலாம்” என்று இருவரும் பேசிக் கொண்டு இருக்கும்போது அவர்களின் பின்னே வந்த பாரதி தனது கையில் இருந்த கட்டையால் ஓங்கி இருவரின் தலையில் அடுத்தடுத்து யோசிக்க விடாமல் அடித்தாள்.

 அவளிடம் இப்படி ஒரு அடியை எதிர்பார்க்காத திரு மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே அரைபோதையில் இருந்து இருவரும் இவள் தலையில் அடித்ததால் மயங்கி தரையில் விழ அப்போதும் அடிப்பதை நிறுத்தாமல் அவர்களை அடித்துக் கொண்டு இருந்தாள். அதை பார்த்த திரு அவளின் கையில் இருந்த கட்டையை புடிங்கி, “போதும்டி இதுக்கு மேல அடிச்சா ரெண்டு பேரும் செத்துருவாங்க” என்று சொல்லி யாருக்கோ போன் செய்ய அவன் போன் செய்த இரண்டு நிமிடத்தில் ஒரு வாகனம் வந்து இருவரையும் அள்ளிக் கொண்டு சென்றது.

 அவர்களை அவ்வளவு அடி அடித்தும் இன்னும் கோபம் குறையாமல் நின்ற பாரதியை பார்த்து, “என் பாரு குட்டிக்கு என்ன ஆச்சு இன்னும் ஏன் கோவமா இருக்கீங்க அதான் உங்களை லைட்டா சீண்டினவன சாகுற அளவுக்கு நீங்களே அடிச்சிட்டீங்களே இன்னும் உங்களுக்கு என்ன” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்து தனது தோளோடு அணைத்துக் கொள்ள

 அவளோ அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு, “பயமா இருக்கு மாமா இந்த நாய்களுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்துச்சி. சத்தியமா நீ மட்டும் இப்ப வராம இருந்தா நான் இவ்ளோ தைரியமா அவங்களை பேஸ் பண்ணி இருக்க மாட்டேன். நான் ஒன்னும் எல்லாத்துக்கும் பயந்து போற பொண்ணு கிடையாது எல்லாத்தையும் தைரியமா நின்னு பேஸ் பண்றவ தான் என்னாலயே இவங்கள சமாளிக்க முடியல இப்படி இருக்கிறப்போ ஓடியாடி விளையாடுற 10 வயசு 5 வயசு குழந்தைங்க ஏன் பிஞ்சி குழந்தைங்க எல்லாம் எப்படி இந்த மாதிரி போதையில வெறி பிடிச்சு அலையுற மிருகங்களை சமாளிக்க முடியும்” என்று அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அழ

 “குட்டிமா இங்க பாருடா ஏன் அழுவுற அழாத. நீ எப்படி எதுவும் அழக்கூடாதுனு சொல்லி தான் அவங்கள நான் ஒன்னும் செய்யாம உன்னோட கையால தண்டனை கொடுக்கும்போது வேடிக்கை மட்டும் பார்த்தேன். இங்க பாருடா இவங்க எல்லாம் நம்மளால திருத்த முடியாது இவங்க எல்லாம் போதையில தன்னோட சுய அறிவ எப்பவோ இழந்துட்டாங்க. அந்த நிமிஷத்துல கிடைக்கிற இன்பம் மட்டும் தானே ஒழிய உங்களோட உணர்வோ உணர்ச்சியோ எதுவும் அவங்களுக்கு தேவையில்லை. இவங்கள பொறுத்த வரைக்கும் இவங்களும் மிருகமும் ஒன்னு தான். அதனால ஒருவேளை உங்கள அவங்க ஏதாவது பண்ணாலும் ஒரு நாய் உங்களை கடிச்சா எப்படி ஊசி போட்டு எல்லாத்தையும் குணமாக்குவீங்களோ அதே மாதிரி போய்க்கிட்டே இருங்க. அதை நினைச்சு பீல் பண்றதோ இல்ல வீட்டுக்குள்ளே அடைஞ்சி கிடக்கிறது எதுவும் நீங்க பண்ண கூடாது. உங்களால முடிஞ்சா அந்த நாய்களை நீங்களே கொன்னுடுங்க. இவர்களை பார்த்து பயந்து நீங்க போக போக தான் இவங்க உங்களை ரொம்ப பயமுறுத்துவாங்க. அதே நீங்க திருப்பி அடிச்சா பயந்து கண்டிப்பா விலகிடுவாங்க”

“அது எப்படி மாமா விலகுவாங்க. டேய் நீ ஆம்பள உன்னை ஒரு பொண்ணு அடிச்சிட்டாளேன்னு அவன் கூட இருந்து அவன ஏத்திவிட கூடவே இருப்பாங்க. அவனே விலகிப் போகலாம் நினைச்சா கூட அவங்க விலக விடமாட்டாங்க. அதை இதை சொல்லி அவனை ஏத்திவிட்டு அந்த பொண்ண அவன் பழிவாங்குற வரைக்கும் அவங்க தூங்கவே மாட்டாங்க. கூடவே இருந்து ஏத்தி விடுற நாய்க்கு தெரியாது நம்மளால ஒரு பொண்ணோட வாழ்க்கை அவளோட குடும்பத்தோட மரியாதை எல்லாம் வீணா போக போகுதுன்னு. மொத்தத்தில் இந்த சமுதாயத்தில் பொண்ணா பிறந்தா எல்லா வித கஷ்டத்தையும் அனுபவிக்கணும் போல” என்றாள் விரக்தியாக.

“நீ சொல்றது ஒரு விதத்தில் கரெக்ட்டுதான் ஏதோ ஒரு இடத்துல ஏதோ ஒரு பொண்ணுக்கு இவர்களா ஒரு தப்பான விஷயம் நடக்குதுன்னா அது எதுக்கு இந்த மீடியா உலகம் ஃபுல்லா காட்டுதுன்னு எனக்கு புரியவே இல்லை. பாதிக்கப்பட்ட பொண்ணுக்கும் அவளோட குடும்பத்துக்கும் மட்டும் தெரியிற மாதிரி அந்த பொண்ணோட நிலைமைக்கு காரணமானவனுக்கு தண்டனை கொடுக்கிற மாதிரி ஒரு சட்டம் வரணும். இந்த பொண்ண பத்தியும் அவளுக்கு நடந்ததை பத்தியும் அவங்கள தப்பா பேசுறவங்க எல்லாரையும் குற்றவாளி கூட நிறுத்தி அவுங்களுக்கு எல்லாம் தண்டனை தரணும். அப்படினா தான் தேவை இல்லாம அடுத்தவன் பத்தி பேசுறவங்களுக்கு எல்லாம் ஒரு பாடமா இருக்கும். சில நேரம் சுத்தி இருக்கிறவங்க பேச்சினால சில கேஸ்ல உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கா முடியாம கூட போகும். இவங்க எல்லாம் பேசுறத கேட்கும் போது நம்ம நாட்டில் பேச்சுரிமை சட்டம் இருக்கக் கூடாதுன்னு தோண வைக்காங்க” என்று இருவரும் அணைப்பில் இருந்து கொண்டு பேசிக்கொண்டு இருக்க இவை அனைத்தையும் தொலைவில் இருந்து பார்த்த கமலாவும் வசுந்தராவும் அதிர்ச்சியுடன் தங்களை பார்த்துக் கொண்டனர்.

“அண்ணி எனக்கு என்னவோ நீங்க அவசரப்பட்டு போன் பண்ணிட்டீங்கன்னு தோணுது” என்றாள் கமலா.

“ஆமா அண்ணி இவ கூட நிற்கிறது இவனு தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா போன் பண்ணி இருக்கவே மாட்டேன். ஆனா பாருங்க இப்பவும் அந்த நாய்க்கு போன் பண்ணி அவங்கள வரவேண்டாம் சொல்ல முடியல இந்த போன் வேறு நம்ம அவசரம் புரியாம ஆப் ஆயிட்டு” என்றாள் நொந்து போய் வசுந்தரா.

“சரி விடுங்க அண்ணி விதிய நம்மளால மாத்த முடியுமா. இல்லை இனி நடக்கிறதா தான் நம்மளால தடுக்க முடியுமா. இனி எல்லாம் கடவுள் விட்ட வழி தான்” என்று சமாதானம் செய்தாள் கமலா.

“இல்ல அண்ணி இந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சுன்னா அவளை யாராலும் கையில பிடிக்க முடியாது. நான் இருக்கிற வரைக்கும் இதை இப்படி நடக்க விட மாட்டேன். என்னை மீறி எப்படி ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குது நானும் பார்க்கேன்” என்றாள் அழுத்தமாக வசுந்தரா.

“ஆமா அதுங்க ரெண்டும் சும்மா பேசிட்டு அப்பவே கூட்டத்துக்குள் போய் இருக்கும். சும்மா இருந்தவங்களை சொறிஞ்சு விட்ட மாதிரி எல்லாத்தையும் பண்ணிட்டு இனி கல்யாணம் நடக்காம பாத்துக்க போறாளாம். இந்த மெண்டல் வெச்சிட்டு என்னதான் பண்ணவோ” என்று மனதில் அவளை திட்டிக் கொண்டு நின்றாள் கமலா.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!