Skip to content
Post Views: 3,968
நான் தேடும் காதல் நீ….14
தனது தனிப்பட்ட அறைக்கு சதாசிவத்தை அழைத்து வந்தார் செல்வம்.எங்கே தாங்கள் பேசுவதை மகன் கேட்க நேரிட்டால் பிரச்சனையாகுமோ என்னும் அச்சம் தான்.எப்படியும் இதை தெரிவித்து தான் ஆக வேண்டும் ஆனால் அதற்கு தகுந்த நேர காலம் பார்த்து தான் பேச வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாக இருந்தார்.
“என்ன சொல்ல போற நீ…..நீ என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்….கண்டிப்பா தீர்த்தாவும் இதை விரும்ப மாட்டா….”என்ற சதாசிவத்தின் முகத்தில் அத்தனை கடுமை.என்னை நம்பி வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எந்த தீங்கும் வராமல் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தது அவரின் நியமான நெஞ்சம் .
“நான் சொல்லுறதை முதல்ல கேளு….அப்புறம் நீ பதில் பேசு சிவா….நான் என்ன நினைக்கிறேன்னு கேட்காமலேயே நீயா ஒரு முடிவுக்கு வந்தா நல்லாயில்லை….”என்று செல்வமும் கோபமாக கூற,
Advertisement
“ஓ…சாருக்கு கோபம் வேற வருதோ….பொய் சொல்லி எங்களை கூட்டு வந்துட்டு….உன்னை சொல்லி குத்தமில்லை என் மேல தான் தப்பு உன்னை பத்தி தெரிஞ்சும் நான் கூட்டுட்டு வந்தேன் பாரு….அந்த பொண்ணு அவ்வளவு யோசனை பண்ணுச்சு…..என் பொண்ணு போல தான் தீர்த்தாவும் எனக்கு….அதுக்கு இந்த விஷயம் தெரிய வந்தா என்ன நினைக்கும் என்னை பத்தி…..”என்றவருக்கு தொண்டை அடைத்த உணர்வு.
“டேய் சிவா….உணர்ச்சி வசப்படாதடா… நீ நினைக்கிற மாதிரி நினைக்கலைடா…எனக்கும் அவங்க பொண்ணு தான் அதனால தான் இனியாவது என் பொறுப்பை தட்டி கழிக்காம சரியா செய்யனும்னு பார்க்குறேன்…..”என்ற செல்வத்தின் குரலே உடைந்துவிட்டது.
“எப்படிடா முடியும்….உன்னை நம்பவே என்னால முடியலை….இதுல உன் பொண்டாட்டி…ம்ஹம் இதெல்லாம் சரி வராது செல்வம்….அந்த பொண்ணுங்களை விட்டுடு….”
Advertisement
“எல்லாம் சரிவரும் சிவா….நீ என்னை பார்க்காத நிமலனை மட்டும் பாரு….அவன் தீர்த்தா,சிவன்யாவை நல்லா பார்த்துக்குவான்….அவன் என்னை போல இல்லை ரொம்ப நல்லவன்…மனசு சுத்தம் என் பிள்ளைனு அப்படின்றதுக்குகாக சொல்லலை நீயே அவனை பத்தி வெளில விசாரி உனக்கு தெரியும்….”என்ற செல்வத்தின் வார்த்தைகளில் உண்மை இருந்தது தான் நிமலனை பற்றி அவருக்குமே தெரியும் தொழிலில் திறமையானவன்,சுய ஒழுக்கத்துடன் இருப்பவன் என்று இப்படி அவனை பற்றி சிறு பட்டியலே வாசிக்கலாம்.தீர்த்தாவிற்கு நிமலன் பொருத்தமான ஆண்மகன் தான் ஆனால் அவனின் குடும்பம் என்று வரும் போது அது தான் இடித்தது.அவனின் குடும்பத்தார் மீது சிறிதளவு கூட நம்பிக்கை என்பது இல்லை.அதனாலே தான் சிவம் வேண்டாம் என்று மறுக்கிறார்.
Advertisement
“சிவா எதை நினைச்சு இப்படி பயப்படுறனு எனக்கு தெரியும்….நிமலனுக்கு கல்யாணம் ஆனவுடனே அவனை தனியா தான் குடித்தனம் வைக்க போறேன்….அதனால தீர்த்தாவுக்கு எந்த பிரச்சனையும் வராது…நீ நிமலனை நம்பி பொண்ணை கொடுக்கலாம்டா….கொஞ்சம் யோச்சி பாரு உனக்கே புரியும்….”என்றவர் அமைதியாகிவிட்டார் இனி அவன் யோசிக்கட்டும் என்று விட்டுவிட்டார்.அவருக்குள் ஒரு நம்பிக்கை நிச்சயம் சதாசிவம் இதற்கு சம்மதிப்பான் என்று அதற்கு காரணம் நிமலன்.அது சிவத்தின் அமைதியில் புரிந்தது.
“என்னால இப்ப எதுவும் சொல்ல முடியாது….நான் யோசிக்கனும்…அதுவும் நீ சொல்லுற மாதிரி நிமலனுக்காக மட்டும் தான்….”என்று சிவம் கூற,அவரை அணைத்துக் கொண்ட செல்வம்,
“எனக்கு தெரியும்டா நீ இதுக்கு சம்மதிச்சுடுவனு….நீ நல்லா யோசி….”
Advertisement
“ஆ…அதுவரை தீர்த்தாக்கிட்ட இது சம்மந்தமா யாரும் பேசக்கூடாது…உன் மாமனார் முதற்கொண்டு….எனக்கு உங்க யார் மேலேயும் நம்பிக்கையில்லை….”என்று கூற,விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்த செல்வம்,
“வேண்டாம் எங்களை நம்ப வேண்டாம்…ஆனா நிமலனை நம்பு….அவன் ரொம்ப நல்லவன்….”என்று கூற,
“இப்பவும் கேட்குறேன்….அவன் உன் பிள்ளைதானா….”என்று சதாசிவம் கேட்க,செல்வத்தின் சிரிப்பு இன்னும் விரிந்தது.
“என் பிள்ளை தான்டா எனக்கே தப்பை உணர்த்தினான்….சின்ன வயசுல நிமலனுக்கு காய்ச்சல் கண்டு ஹாஸ்பிட்டல்ல சேர்க்கும் படி ஆகிடுச்சு…அப்ப எனக்கு ஒரு முக்கிய வேலைனு நான் லதாவை பார்த்துக்க சொல்லிட்டு போயிட்டேன்….சின்ன காய்ச்சல் தான சரியாகிடும் அதோட பெரிய ஹாஸ்பிட்டல்ல தான சேர்த்திருக்கோம் அவங்க எல்லாம் பார்த்துப்பாங்கனு மெத்தனம்….ஆனா அடுத்த ஒரு மணிநேரத்துல பிள்ளை மூச்சு திணறுறான் கூட யாருமே இல்லை உடனே வாங்கனு அந்த ஹாஸ்பிட்டல் டீன் என்னை கூப்பிடவும் நான் பயந்து போய் ஓடுனா….பிள்ளை அனாதை மாதிரி கிடக்குறான்…என் மனசெல்லாம் கொதிச்சு போச்சு…நான் சாருவுக்கு போன் போட்டேன் அவ எடுக்கவேயில்லை…..என் பிள்ளை வாழ்வுக்கும்,சாவுக்கும் போராடிக்கிட்டு இருக்கான்….நான் மட்டும் தான் தனிச்சு நின்னேன் எனக்கு தோள் கொடுக்க கூட ஆள் இல்லை….ஒருகட்டத்துல அவன் படுற வேதனை பார்த்துட்டு நான் பண்ண பாவத்துக்கு என்னை எடுத்துக்க கடவுளே ஆனா என் பிள்ளையை மட்டும் எனக்கு கொடுத்துடுனு கடவுள்கிட்ட சரண் அடைஞ்சுட்டேன்….. காசு காசுனு ஓடன என்னை காசு மட்டும் முக்கிய இல்லை தாங்கி பிடிக்கிற உறுவுகள் தான் முக்கியம்னு உணரவச்சான்…..உனக்கு கடைசி வாய்ப்பு தரேன்னு கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் போல நிமலன் பிழைச்சு வாந்தான்…..அதுக்கு அப்புறம் எத்தனை வேலை இருந்தாலும் என் பிள்ளைனு வரும் போது அவனுக்கு தான் முக்கியம் கொடுக்க ஆரம்பிச்சேன்….என்னோட தவறையும் உணர தொடங்குனேன்…..அதனால நிமலன் கிட்ட அடிக்கடி சொல்லுவேன் எப்போதும் நேர்மையோடதான் இருக்கனும்….யாரையும் ஏமாத்த கூடாதுனு சொல்லி சொல்லி வள்ர்த்தேன்…..”என்ற செல்வம் சற்று நேரம் மௌனமாக தன் நெஞ்சை நீவிக் கொண்டார் பின்,
“நான் சொன்னா நீ நம்புவியா எனக்கு தெரியலை நான் வைதேகியை அவ சாகுறதுக்கு ஒருவாரம் முன்னாடி பார்த்தேன் அவகிட்ட மன்னிப்பு கேட்டு அவளை என்கூட கூப்பிட்டேன் ஆனா அவ என்னை நம்பலை….எனக்கு புரிஞ்சுது அவ இனி என்னை நம்ப மாட்டானு…ஆனாலும் எப்படியாவது அவளையும் பிள்ளைகளையும் விடக்கூடாதுனு தான் அப்பாவை பார்க்க போனேன் ஆனா அப்பாவும் என்னை பார்க்கலை….எப்படியும் விடக்கூடாதுனு இருந்த போது தான் வைதேகி தவறிட்டா….எல்லாம் முடிஞ்ச மாதிரி இருந்துச்சு….எதுவும் செய்யமுடியலையேனு என்னை நானே தாக்கிட்டேன்….அதை பார்த்த நிமலன் ஏன்பா இப்படி பண்ணுறீங்கனு கேட்ட போது எல்லாத்தையும் சொன்னேன்….நான் பண்ண எல்லா தப்பையும் அவன் ஒருத்தன் கிட்ட மட்டும் சொன்னேன்….அந்த வயசுல அவனுக்கு நான் சொன்னது புரியலை ஆனா ஏதோ தன் அப்பா தப்பு பண்ணிட்டாரு மட்டும் புரிஞ்சிக்கிட்டான்…..அவன் படிச்சு தொழிலை கையில எடுத்தவுடனே கொஞ்ச நாள் கழிச்சு அவனாவே ஒருநாள் வந்து என்கிட்ட,
“இப்ப புரியுதுப்பா ஏன் என்கிட்ட நீங்க அடிக்கடி யாரையும் ஏமாத்தாம இருக்கனும் சொல்லிக் கொடுத்தீங்கனு….ஏனா நீங்க எல்லாரையும் ஏமாத்தி தான் வாழ்க்கை நடத்தியிருக்கீங்க….நீங்க பண்ணது தப்பு கிடையாது மிகப்பெரிய பாவம் இதுக்கு மன்னிப்பு கிடையாது….உங்களால நானும் இப்ப அந்த பாவத்துல ஒரு பங்காகிட்டேன்….எனக்கே உங்களை பிடிக்காம பண்ணிட்டீங்க…சொல்லிட்டு போயிட்டான்.நான் பெத்த பிள்ளைக்கிட்டேயும் தோத்து போய் நின்னேன்…”
“சிவா….நான் செஞ்ச பாவத்துக்கு எனக்கு மன்னிப்பு கிடையாது தான் ஆனா என் பிள்ளை எந்த தப்பும் பண்ணலைடா அவன் நல்லா இருக்கனும்….”
“பார்த்தியா…உன் புத்திய காமிச்சிட்ட…இது தான் நீ…இப்பவும் உனக்கு உன் பிள்ளை நல்லா இருக்கனும் தான் யோசிக்கிற தீர்த்தாவை பத்தி நினைக்கலை….”என்ற சிவம் வேகமாக வெளியேற நினைக்க,
“இல்லடா இல்ல நான் தீர்த்தாவை கட்டாய படுத்தமாட்டேன்….எனக்குள்ள ஒரு ஆசை அவ்வளவு தான் இது நடந்தா நல்லாயிருக்கும்னு மனசுக்கு தோணுது….அதுக்கு ஒரு காரணமும் இருக்கு….இன்னைக்கு நிமலனை பார்த்தியா…..எப்படி சிரிச்சிக்கிட்டு இருக்கான் இப்படியெல்லாம் நான் என் பிள்ளையை பார்த்ததே இல்லை அதனால தான் ஒரு தடவை கேட்டு பார்க்கலாம்னு முடிவு எடுத்தேன்…அதுக்குள்ள மாமா முந்திக்கிட்டார்…ஆனா நான் கண்டிப்பா என் பிள்ளைகளுக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் இந்த கல்யாணத்தை செய்வேன்….”என்ற செல்வத்தின் பதிலில் சதாசிவம்,
“இதுக்கு என்ன பதில் சொல்லுறதுனு எனக்கு தெரியலை….இது தீர்த்தாவோட வாழ்க்கை அவ தான் முடிவு எடுக்கனும் நான் இல்லை…..”
“நானும் அவசரப்பட போறது இல்லைடா….நான் முதல்ல என் பையன் கிட்ட கேட்டு சொல்லுறேன்…. அதுக்கு அப்புறம் நீ தீர்த்தா கிட்ட பேசி பாரு….அவளோட சம்மதம் இருந்தா மேற் கொண்டு பேசலாம் இல்லை விட்டுடலாம்…ஒருவேளை தீர்த்தா இதுக்கு சம்மதிக்கலைனா அவளுக்கு நான் வேற மாப்பிள்ளை பார்த்து நல்லபடியா கல்யாணம் செஞ்சு வைப்பேன் அதை யாரும் தடுக்க முடியாது….”என்று செல்வம் கூற சதாசிவம்,
“பார்க்கலாம்…என்ன நடக்குதுனு….”என்றுவிட்டு வெளியில் வர தீர்த்தாவும்,சிவன்யாவும கிளம்பி நின்றனர்.அவர்களை நிமலன் நான் தான் அழைத்து செல்வேன் என்று விடப்படியாக நிற்க தீர்த்தா மறுத்துக் கொண்டிருந்தாள்.சதாசிவம் தான் அவனுடன் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்.சிவன்யாவை கலைலூரியில் விட்டுவிட்டு தீர்த்தாவை வீட்டிற்கு விட்டு செல்ல வந்த இடத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருந்தது.
தன் கடைக்குள் வந்தவிட்ட தீர்த்தாவிற்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை இதுவரை தெரியாத வலி இப்போது தன் வலது காலில் தெரிந்தது.வலது காலில் விரல்களின் மீது வண்டியின் தடம் நன்கு பதிந்திருந்தது.மெல்ல விரல்களால் அதனை நீவிட வலி உயிர் போனது அவளிற்கு.
“தீர்த்தா….”என்றபடி உள்ளே வந்த நிமலன் அப்போது தான் அவள் கால் காயத்தை பார்த்து பதட்டத்துடன்,
“ஏய் என்னாச்சு….கால்ல அடிப்பட்டிருக்கு…”என்று அவளின் காலை தொட வர வேகமாக இழுத்துக் கொண்டவள்,
“ஒண்ணுமில்ல சின்ன அடி தான்…நான் பார்த்துக்குறேன்….நீ கிளம்பு….”என்று கூற,
“நீ முதல்ல கிளம்பு ஹாஸ்பிட்டலுக்கு வா….”என்று அவளின் கை பற்றி இழுக்க,
“எனக்கு என்னை பார்த்துக்க தெரியும் நீ கிளம்பு இல்லை இருக்குற எரிச்சல்ல எதையாவது எடுத்து அடிச்சிடுவேன்….போயிடு….”என்று அமரனின் மீதிருந்த கோபத்தை இவனிடம் காட்ட,
“இடியட் இடியட் எப்படி இடிச்சிருக்கான்…அவனை சும்மா விடக்கூடாது என்ன செய்யுறேன் பாரு….”என்ற நிமலனை முறைத்த தீர்த்தா,
“அவனை பத்தி ஏதாவது பேசுன கொன்னுடுவேன் உன்னை முதல்ல வெளில போடா….நீ யாருடா அவனை பத்தி பேச….”
“ஏய் நானும் பொறுமை இருக்கேன்….என்ன ஓவரா பேசுற….அவன் உன்னை இடிச்சிட்டு போயிருக்கான்….அவனை திட்டுனா உனக்கு கோபம் வருதா…இரு உன்னை வந்து வச்சிக்குறேன்…..”என்றுவிட்டு நிமலன் சென்றுவிட,
“லூசு….ஏதாவது ஏடாகூடமா செஞ்சு அவன்கிட்ட அடி வாங்கம போகாது போல….”என்றவள் மெல்ல எழுந்து தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அமரனின் வண்டி இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தது ஒருகட்டத்தில் வண்டியின் பெட்ரோல் தீ்ந்தும்விட,
“ச்சை….எல்லாம் இவளால வரது…..என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டா….”என்று ஒற்றை காலால் தரையில் தட்டியவன் வண்டியை ஓரம் கட்டி சுற்றி முற்றி பார்த்தான் அது சென்னையின் புறநகர் பகுதி என்பதால் கண்கெட்டும்வரை எதுவும் இல்லை.
“இது சரிவராது….”என்று கூறிக் கொண்டே கதிருக்கு அழைத்து விபரத்தை கூற,
“ஏன்டா நல்லவனே நீ எதுக்கு அவ்வளவு தூரம் போன….”என்ற கதிரின் காதில் வண்ண மயமான வார்த்தைகள் வந்து விழவும்,
“இதோ அனுப்பிட்டேன் மச்சான்…”என்று கூறி போனை வைத்தவன் மனதில்,
“யெப்பா நல்லவேளை பக்கத்துல இல்ல….இருந்திருந்தேன் அவ்வளவு தான்….”என்று கூறிக் கொண்டு அமரன் கேட்ட படி கடை பணியாளிடம் பெட்ரோல் வாங்கி கொடுத்தனுப்பினான்.
கதிரிடம் பேசிவிட்டு வைத்தவுடன் அமரனின் கைபேசிக்கு தீர்த்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது.முதலில் கோபத்தில் ஏற்க வேண்டாம் என்று தவிர்த்தவன் அவள் தொடர்ந்து அழைக்கவும்,
“ப்ச் இவளோட ஒரே ரோதனையா போச்சு….”என்று திட்டிக் கொண்டே காதில் வைக்க,
“ஹலோ….”என்றவள் பேசும் முன்,
“ஏய் கார மொளகா….எங்க இருக்க….”என்றபடி தீர்த்தாவை தேடி மீண்டும் வந்தான் நிமலன்,
“அய்யோ இவன் இன்னுமா போகலை….உயிரை வாங்குறான்….”என்ற தீர்த்தா அமரனிடம்,
“அப்புறமா பேசுறேன்….”என்று கூறியவள் பேசியை அணைக்க மறந்து அப்படியே வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.அவள் தன்னிடம் பேசாமல் நிமலனிடம் பேச சென்றதில் கோபம் இன்னும் தலைக்கேறியது அமரனுக்கு,
“புது சொந்தம் வந்துவுடனே என்னை மறந்துட்டல்ல….இதுல என்னை பார்வையில மிரட்டுறா நான் உனக்கு அவ்வளவு தானானு….நீ மண்டிக்கு வா கொன்னுடுறேன்….”என்றவன் காதில்,
“ஆஆஆ….வலிக்குது குரங்கே….”என்ற தீர்த்தாவின் குரல் கேட்கவும் தான் அவள் பேசியை அணைக்காமல் வைத்திருப்பது புரிய திடீர் என்று அவளின் அலறல் சத்தத்தில் இங்கு அமரனுக்கு பதட்டம் ஏறியது,
“தீர்த்தா…தீர்த்தா….என்ன ஆச்சு…”என்று இவன் கத்த அவளோ தன் வீட்டில் அத்து மீறி நுழைந்த நிமலனை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள்.
“நீ எதுக்குடா உள்ள வந்த….முதல்ல வெளில போ…கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே….”என்று அவள் ஏக வசனத்தில் திட்ட அவனோ எதையும் காதில் வாங்கியது போல் தெரியவில்லை,
“உள்ள வாங்க டாக்டர்….”என்று தன்னுடன் வந்த மருத்துவரை உள்ளே அழைத்து வந்தவன் தீர்த்தாவை காட்டி,
“இவளுக்கு தான் கால்ல அடி பட்டிருக்கு…என்னனு பாருங்க…”என்றவிட்டு தீர்த்தாவை பிடித்து ஒரு இறுக்கையில் அமர வைக்க,அவளோ
“விடுடா…விடு…உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொன்னா…”என்று கத்த அத்தனையும் அமரனின் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது.அவள் பேசியை எங்கோ வைத்துவிட்டாள் என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.அவளுக்கு என்ன ஆனது என்பதிலேயே மனது அடித்துக் கொள்ள சரியாக அந்த நேரம் அவனின் கடையில் வேலை செய்பவன் வர வேகமாக தன் வண்டியில் பெட்ரோலை நிரப்பிவிட்டு மண்டியை நோக்கி புறப்பட்டுவிட்டான்.
அமரன் மண்டியை அடைந்ததும் நேராக தீர்த்தாவின் வீட்டிற்கு வர,அங்கு அவளின் காலை பிடித்தபடி அமர்ந்திருந்தான் நிமலன்.
“என் காலை விடு முதல்ல நீ…..எனக்கு ஒண்ணுமில்ல நீ கிளம்பு…”என்று கத்திக் கொண்டிருக்க,
“என்ன ஒண்ணுமில்ல டாக்டர் என்ன சொன்னாங்க கேட்ட தான இன்னும் கொஞ்சம் வேகமாக ஏத்தியிருந்தா எலும்பு நொறுங்கியிருக்கும்….”என்று நிமலனும் கோபத்தில் கத்த,
“எனக்கு எதுவும் ஆகாது….நீ கிளம்பு….”
“முடியாது….என்னடீ பண்ணுவ….”என்ற நிமலனுக்கு அத்தனை கோபம் தீர்த்தா அவள் தன்னை தவிர்ப்பதில்,இருவரும் வழக்காடி கொண்டிருந்த நேரத்தில் தான் அமரன்,
“தீர்த்தா….”என்ற அழுத்தமான குரலுடன் உள்ளே நுழைந்தான்.
“ஏய் நீ தான இடிச்சது….உனக்கு அறிவில்லை மேன்…”என்று நிமலன் அமரனை பார்த்தவுடன் நெருங்க,அவனோ அமைதியாக இவனை கடந்து தீர்த்தாவை நெருங்கினான்.தீர்த்தாவிற்கு தான் காண்பது கனவா,நிஜமா என்று தோன்றியது.
நாச்சியப்பனின் இறப்பிற்கு பிறகு அமரன் கடைக்கு கூட வரமாட்டான்.இரு பெண்கள் தனியாக இருக்கிறார்கள் எதும் பேசும் பொருள் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பான்.ஆனால் இன்று தன் வீட்டினுள் உரிமையுடன் நுழைய விழிவிரித்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சு….”என்றவன் அவளின் பாதத்தின் அருகில் அமர்ந்து ஆராய,
“இடிச்சிட்டு நல்லவன் போல வந்து பார்க்குற….”என்று நிமலன் கோபமாக கேட்க,நிமலனை முறைத்தவள் அமரனிடம்,
“ஒண்ணுமில்ல சின்ன அடி….விடு தெரியாம தான நடந்துச்சு….”என்று கூற நிமிர்ந்து அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு,
“இல்ல தெரிஞ்சே தான் இடிச்சேன்….உடம்பை பார்த்துக்க….”என்று அவளுக்கு மட்டும் குரலில் கூறிவிட்டு சென்றுவிட்டான்.
error: Content is protected !!