Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-15-1

“கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது

எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே

அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே..”

 

என்ற பாடல் வரிகள் ஸ்பீக்கரில் ஒலிக்க திரு மற்றும் பாரதி இருவரும் மேடையில் மணமாலையோடு நடுவில் இருக்க சரண், பாலா, சுரேஷ், கார்த்திக் நால்வரும் அவர்களை சுற்றி நின்று ஆடிக் கொண்டிக்க அதனை வேதா தாத்தா தனது மொபைலில் வீடியோ எடுக்க அவருக்கு சுபாஷ் உதவி செய்து கொண்டிருந்தான்.

 திடீரென பாரதி முன்னே வந்த சரண் அவள் முன் முட்டி போட்டு,

 



Advertisement

“எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு யாருமில்லை முன்னாலே

அண்ணி ஒரு சொல் சொன்னால் அடங்கிடுவேன் அன்பாலே

இறைவனுக்கு நன்றி சொல்வோம் இவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்”

 என்று அவளைப் பார்த்துக் கொண்டு பாடி ஆட அதில் வெட்கம் கொண்ட பாரதி திருவின் பின்னே மறந்து கொண்டாள்.

 “டேய் போதும் டா உங்க அலப்பற. அங்க பந்தி நடக்குறத போய் பார்க்காம இங்கு நின்னு எங்களை ஏன்டா வம்பு பண்ணிக்கிட்டு இருக்கீங்க”

என்ன அண்ணா நீ பொண்ணுகளுக்கு ஒரு நியாயம் பசங்களுக்கு ஒரு நியாயமா. இதுவே நாங்க பொண்ணுங்களா  இருந்திருந்தா மேடையில உங்க கூட நின்னு இருப்போம். நாங்க பசங்க என்கிறதால தான எங்கள விரட்டுற” என்றான் கார்த்திக் 

Advertisement

“ஆமா அண்ணா. நீ ரொம்ப மோசம் பாரபட்சம் பார்க்க” என்றான் பாலா

Advertisement

 “டேய் நான் அப்படி சொல்லல டா” என்று திணறினான் திரு.

“ என்ன ண்ணா இப்படி சொல்லிட்ட. இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம்  வாழ்க்கையில ஒரு தடவை தான் கிடைக்கும். இந்த நாளை எப்படி னா எங்களால விட முடியும். உன் கல்யாணத்துல இப்படி எல்லாம் பண்ணனும். உன்னை இப்படி வச்சு செய்யணும்னு எத்தனை நாளா ஆசை தெரியுமா அண்ணா. டேய் டிஜே அண்ணிக்கு மட்டும் பாட்டு போட்டதால அண்ணனுக்கு கோபம் வந்துட்டு டா அண்ணனுக்கும் சேர்த்து பாட்டை போடு” என்று கத்தினான் சரண்.

 

Advertisement

“அப்போ எப்படி இருந்தா நீ

இப்போ இப்புடி ஆகிட்ட

ரொம்ப மாசு காட்டுனவன்

இப்போ ஃபியூஸு போயிட்ட”

என்று சரண் திருவை கலாய்த்து பாட

 

“ மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு

இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு

மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு

இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு”

என பாடி திருவை சுற்றி நால்வரும் ஆட

 

“சுத்துனேன் டா

சீன் போட்டு சோக்கா சோக்கா

இப்போ ஆகி புட்டான்

காஸு போன கோக்கா கோக்கா”

என்று திருவை கலாய்த்து பாடினான் கார்த்திக்.

 

“ டிராகன் ஆக சுத்துணியே

பையர்ஆ பையர்ஆ

ஆயிட்டே கீஞ்சு போன

பஞ்சர் ஆன டையர்ஆ டையர்ஆ

எப்ப புளிக்கிற பால்

புளிச்சுபோனா தயிரா தயிரா”

என்று பாலாவும் ரமேஷும் சேர்ந்து பாட

 இவர்கள் செய்யும் அலும்பு தாங்க முடியாமல் கடுப்பாகி போன திரு தனது பக்கத்தில் நின்ற எஸ் ஐ வைத்திருந்த கன்னை எடுக்க அதனைப் பார்த்து நால்வரும் தெறித்து ஓடினர்.

 “ யாருகிட்ட கொஞ்சம் இடம் கொடுத்த ஓவரா தாண்டா பண்றீங்க. இனிமே வாங்கடா நீங்களா நானான்னு பாத்துருவோம்” என்றான் கடுப்பாகி போன திரு

 அதுவரை அவர்களின் செயல்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த பாரதியை பார்த்து அவன் முறைக்க

“ மாமா ஏன் மாமா டென்ஷன் ஆகுற அவங்களே பாவம் என்னைக்காவது தான் இப்படி பண்ண முடியும். அதான் கெடச்ச வரைக்கும் லாபம்ன்னு வச்சு செய்றாங்க” என்றாள் சிரிப்புடன்

“எல்லாம் உன்னால வந்தது டி. சிரிக்கவா செய்ற இன்னைக்கு நைட்டு உன்ன என்ன பண்றேன்னு பாரு” என்று அவளிடம் மெதுவாக முனுமுனுக்க

“ஆத்தி ரொம்ப ஓவரா பண்ணிட்டோமோ சும்மா இருந்த சிங்கத்தை வேற சீண்டிவிட்டுட்டோம் இன்றைக்கு நைட்டு நம்மள குருமா பண்ணாம விடவாது போலயே”என்று மனதில் புலம்பி கொண்டு வெளியே சிரித்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, “ மாமா நீ அதுக்கு எல்லாம் சரிபட்டவன் வரமாட்ட நீயே ஒரு பால் டப்பா போவியா” என்றாள் பயத்தை மறைத்துக் கொண்டு கெத்தாக

“யாரு நான் பால் டப்பாவா இன்னைக்கு நைட்டு உனக்கு இருக்குடி” என்று தனது மூச்சுக்காத்து அவள் காதில் படுவது போல முணுமுணுக்க

 அதற்கே அவளின்  முகம் சிவந்து உடல் சிலிர்த்து நடுங்கியது.

அவள் உடல் நடுங்கியதை கண்டுகொண்ட திரு மேலும் அவளை நெருங்கி வந்து, “பாரு குட்டி இப்படி எல்லாம் பண்ணாதடா. மாமாவால கண்ட்ரோல் பண்ண முடியல” என்று அவளை முத்தமிடுவது போல் குனிய   அதற்குள் மணமக்களைக் காண திருவின் உயர் அதிகாரி வர அவரைக் கண்டதும் மனைவியை மறந்து அவரிடம் பேசி மனைவிக்கும் அறிமுகப்படுத்தினான் திரு. அதற்குப் பின் இருவருக்கும்  பேசுவதற்கு நேரம் இல்லாமல் உறவினர் வந்து கொண்டு இருந்தனர்.

 

@@@@@@@@@@@

 

 திரு துப்பாக்கி எடுத்ததும் பதுங்கி ஓடிய போன நால்வரும் ஒரே இடத்தில் ஒளிந்திருக்க, “கொஞ்சம் ஓவரா தான் போயிட்டமோ” என்றான் கார்த்திக் மற்றவர்களை பார்த்து

“கொஞ்சம் ஓவர் தான் போல மச்சான். அண்ணனை பாத்தியா டா இன்னைக்கு மட்டும் தான் கலாய்க்க முடியும் பண்ணுனா இந்த அண்ணன் நம்பள மொத்தமா முடிச்சுடும் போல டா” என்றான் பயத்துடன் பாலா.

“ஆமா டா ஜஸ்ட் மிஸ் இல்லன்னா நம்ம உயிர் நமக்கு இல்லடா. அண்ணி வந்திருக்கும் நேரம் அண்ணன் கூலா இருக்குன்னு பார்த்தா ஏன்டா இப்படி ஹாட்டா இருக்கு” என்றான் ரமேஷ்

“ ஆமாண்டா மாப்பிள்ளை அண்ணன் ரொம்ப ஹாட்டா தான் இருக்கு” என்ற கார்த்திக் எதுவும் பேசாமல் யோசனையில் இருந்த சரணை பார்த்து, “ டேய் உனக்கு என்னடா ஆச்சு ஏன்டா இப்படி இருக்க” என்றான் சத்தமாக.

“அது ஒன்னும் இல்ல மச்சி. நம்ம எல்லாம் கரெக்டா பண்ணமா. ஒருவேளை அண்ணன் அண்ணி மம்முட்டியான் சாங் ஆடிட்டு வரலனு பீல் பண்ணி இருக்குமோ. அந்த கடுப்புல தான் நம்ம மேல கன்ன தூக்கி காட்டிட்டோ” என்றான் யோசனையாக சரண்.

“போடாங்க எப்படியெல்லாம் யோசிக்கிற டா நீ. அண்ணா அப்படி எல்லாம் நினைக்காதுடா” என்றான் பாலா

“போடாங்க அண்ணன் லவ் பண்ணாதுனு கூடாதா நான் நினைச்சேன். ஆனா பாத்தல எத்தனை வருஷம் லவ் பண்ணி இருக்குனு”

“ஆமா டா மச்சான் சொல்றது கரெக்ட் தான் இப்ப மம்முட்டியான் சாங் ட்ரெண்டிங்  இல்ல போய்கிட்டு இருக்கு கண்டிப்பா அண்ணனுக்கு ஒரு கனவு இருந்திருக்கும்ல. நம்மளோட வருங்கால மனைவி இப்படி நமக்காக டான்ஸ் ஆடிட்டு வரணும்னு. ச்சை எப்படிடா மறந்தோம் இத போய். ஏண்டா மச்சான் நீயாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா” என்றான் கார்த்திக் சரணிடம்

 “எல்லாம் புரியுது மச்சான் எதுக்கும் போய் நீ அண்ணன் கிட்ட கேட்டு வாயேன் இப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருந்துச்சான்னு என்ன சொல்ற” என்றான் ரமேஷ் கார்த்திக்கிடம்

 “என்னது அண்ணா கிட்டயா ஆள விடு சாமி விநாயகம் அப்பா என்ன பந்தி பாக்க கூப்பிட்டாங்க நான் போறேன் டா” என்று அவர்களிடம் தப்பி ஓடினான் கார்த்திக்.

“அவன் போறான் டா சின்ன பையன் அவனுக்கு தெரியல. நீ என்ன சொல்ற மாமா” என்று ரமேஷ் பாலாவை பார்த்து

“போடாங்க உன் போதைக்கு நான் ஊறுக்கா வா ஆள பாரு” என்று அவனை திட்டிக்கொண்டு, “டேய் மச்சான் நில்லுடா நானும் வரேன்” என்று கார்த்திக் பின்னாடி ஓடினான்.

“போங்கடா போடி பசங்களா. அப்புறம் மாப்பிள்ளை நீ என்ன சொல்ற” என்று சரணை திரும்பி பார்க்க அவன் அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த சாராவின் குடும்பத்தை பார்த்து அவர்களை நோக்கி சென்றான்.

“ரைட்டு இனி மாப்பிள்ளைக்கு கண்ணு தெரியாது சரி நம்மளும் போய் பந்தி பாப்போம்” என்று முழங்கிக் கொண்டு அவனும் அவர்கள் பின்னாடி சென்றான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!