Skip to content
Post Views: 753
“தாத்தா போதும் வீடியோ எடுத்தது வாங்க போய் சாப்பிடலாம்” என்றான் சுபாஷ் காலையிலிருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் வேதாச்சலத்தை பார்த்து
“என்ன யங் மேன் நீ நல்லா பாரு நான் என்ன வீடியோவா எடுத்துட்டு இருக்கேன். இன்ஸ்டா லைவ் போயிட்டு இருக்கு. பாரு என்னோட ஃபேன்ஸ் எல்லாம் எவ்வளவு கமெண்ட் பண்ணி இருக்காங்கன்னு. அவங்களுக்கு நான் என்னோட பேரன் கல்யாணத்தை லைவ்ல காட்டிட்டு இருக்கேன் லைவ்ல. இன்னும் அரை மணி நேரம் ஆகும் இந்த லைவ் முடிய. அதுக்கு பிறகு தான் சாப்பிட போக முடியும்” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போது
“ வேதாபாய் யார் இந்த ஹேண்ட்ஸம்😉” என்று கமெண்ட் வர
“ ஏய் சோபா டார்லிங் இதுதான் என்னோட நியூ ஜூனியர்”
Advertisement
உடனே, “ என்ன வேதா பாய் சொல்றீங்க அப்போ என்னோட எஸ்.கே😔” என்றாள் ஒருத்தி
“ரேணு டார்லிங் நோ கிரேமா. உன் எஸ்.கே வும் என்னோட ஜூனியர் தான்”
“ போங்க வேதா டார்லிங் இப்படித்தான் என்னோட திருவையும் சொன்னீங்க. இப்போ அவருக்கு மேரேஜ் பண்ணி வச்சிட்டீங்க 😭😭”
Advertisement
“ஆமா நீங்க மோசம் வேதா டார்லிங். எங்க திருவுக்காக நாங்க இத்தனை பேர் காத்திருக்கும் போது நீங்க இப்படி அவருக்கு திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கலாமா”
Advertisement
“ ஆமா வேதா மோசம்”
“😭😭😭”
“😭😭😭”
Advertisement
என்று தொடர்ந்து மெசேஜ் வர என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த வேதா அப்போது அங்கே ஏதோ வேலை செய்வதற்காக வந்த கார்த்திகை பிடித்து, “ஐயோ பட்டூஸ் நீங்க இப்படி அழுறத என்னால் பார்க்க முடியாது. அந்த திரு போனா என்ன இதோ உங்களுக்காகவே என்னோட ஜூனியர் கார்த்திக் இருக்கான். இவன் அப்படியே விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் மாதிரி உங்களுக்கு கையில வச்சு தாங்குவான் லேடிஸ். என்ன சொல்றீங்க எப்படி இருக்கான் என்னோட ஜூனியர்” என்றார் கார்த்திக்கை காட்டி வேதாச்சலம்
கார்த்திக் நல்ல நிறமாக வாட்டசாட்டமாக கௌதம் கார்த்திக் போன்று இருப்பான். அவனைப் பார்த்ததும் ஜொள்ளுவிட்ட பெண்கள்,
“ ஹாய் கார்த்திக்”
“ கார்த்திக் ஐ லவ் யூ டா ❤️❤️”
“ கார்த்திக் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா😍🥰”
“ நீங்க கௌதம் கார்த்திக் மாதிரி இருக்கீங்க ஐ லைக் யு❤️😘😘” என்று தொடர்ந்து கமெண்ட்கள் வர
முதலில் தாத்தா இழுத்ததும் புரியாமல் வந்து நின்ற கார்த்திக் அதில் வந்த கமெண்ட்களை பார்த்து, “ஐயோ சீனியர் என்ன பண்றீங்க” என்று பதறி போய் லைவ்வை கட் பண்ணி விட்டு தனது முகத்தினை முடி ஓடியவனை பிடித்த வேதாச்சலம், “ டேய் இங்க பாருடா உன் மூஞ்சிக்கு எல்லாம் லவ் செட்டே ஆகாது. அதனால சீனியர் நான் சொல்றதை கேளு இங்கே இருக்குறதுல்ல ஏதாவது ஒரு பொண்ண தேர்ந்தெடு. அடுத்த முகூர்த்தத்துல உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் டா” என்றார்
“ஐயோ தாத்தா என்ன காரியம் பண்ற நீ. உன் வயசுக்கு ஒரு மரியாதை வேண்டாமா சீனியர்னா என்ன எங்களோட ரெண்டு வயசு பெரியவன்னு நெனச்சியா தாத்தா. அதுவும் இல்லாம உன் பாலோவர்ஸ் எல்லாம் 30+ வயசு மேல உள்ள ஆன்ட்டிங்க தான். இந்த ஆண்டிகளுக்கு உள்ள என் தேவதைய நீ தேடுறியா. எல்லாம் இன்ஸ்டால பில்டர் போட்டு சுத்துங்க இதுல எனக்கு பொண்ணு தேடுறியா. ஒழுங்கு மரியாதையா நீ அப்பா அம்மா எல்லா பேரும் போய் பொண்ணு பார்த்து எனக்கு கட்டி வையுங்க சரியா. அத விட்டுட்டு இன்ஸ்ட்டா பாலோவர்ஸ் ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்த உன்னோட வயசு உன் பாலோவ்ஸ் எல்லாத்துக்கும் சொல்லிடுவேன் பாத்துக்க” என்று வேதாச்சலத்தை மிரட்டி விட்டு சென்றான் கார்த்திக்.
“டேய் ஜூனியர் நான் சொல்றத கேளுடா. சீனியர் எப்பவும் உன்னோடு நல்லதுக்கு தான் சொல்லுவேன்” என்று அவர் அவனை பார்த்து கத்திக் கொண்டிருக்க
இத்தனையும் அமைதியாக சிரிப்புடன் பார்த்து நின்ற சுபாஷ், “தாத்தா இதெல்லாம் தேவையா வாங்க நம்ம போய் சாப்பிடுவோம்”என்று தாத்தாவை சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றான்
@@@@@@@@@@@@@
“வாங்க மாமா, வாங்க அத்தை இப்பதான் உங்க ரெண்டு பேருக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சிடுச்சா” என்றான் சரண் லேட்டாக வந்திருக்கும் தனது வருங்கால மாமாவின் குடும்பத்தை பார்த்து
“ என்ன மாப்ள உனக்கு தெரியாதா இன்னைக்கு காலையில தான் நாங்க சென்னையில இருந்து ஊருக்கு வந்தோம். உனக்கே தெரியும் உங்க அத்தையோட மெடிக்கல் எமர்ஜென்சிக்காக தான் நாங்க சென்னைக்கு போனோம். எனக்கு என்ன தெரியும் இப்படி ஒரே மாசத்துல நீங்க கல்யாணத்தை வைப்பீங்கன்னு. அதான் வர முடியல மாப்பிள்ள எதுவும் நினைச்சுக்காத சரியா” என்றார் முத்துவேல் அவனை அணைத்து கொண்டு
“நான் என்ன நினைக்க போறேன் போங்க உள்ள ஒருத்தன் அங்க நிக்கான் பாருங்க அவன் கிட்ட போய் இதே பதிலை சொல்லுங்க அவன் நல்லா திருப்பி உங்களுக்கு கொடுப்பான் வாங்கிட்டு வாங்க”
“ என்ன மருமகனே இன்னும் கோபம் போகலையா. அத்தைக்கு இந்த மூட்டு வலி பிரச்சனைக்காக தானே நாங்க சென்னைக்கு போயிருந்தோம். அத்தைக்காக இதை மன்னிக்க மாட்டியா மருமகனே” என்றார் பாசமாக தங்கம்
“ அத்தை உங்களுக்கு மூட்டு வலி ட்ரீட்மென்ட் ஓகே மாமா உங்கள பாத்துட்டு அங்க இருந்தாங்க. இந்த மேடத்துக்கு என்னவாம். இவங்க ஊர்ல தான இருந்தாங்க” என்றான் கோபமாக சாராவை பார்த்து அவன் பார்வைக்கு எந்தவித பதில் பார்வையும் கொடுக்காமல் திமிருடன் நின்ற சாரா, “அம்மா நீங்க பேசிட்டு வாங்க நான் உள்ள போய் திரு மாமாவ பார்க்கேன்” என்று சொல்லி இவனை மதிக்காமல் உள்ளே சென்றாள்.
“ பாருங்க அத்தை ஒரு மனுஷன் நாயா நின்னு கத்திட்டு இருக்கேன் அவனுக்கு எந்த பதிலும் கொடுக்காம எப்படி திமிரா உள்ள போறான்னு” என்று பொறுமினான்.
“நாய்க்கு எப்படி மாப்பிள்ளை பதில் கொடுக்க முடியும்” என்று நேர காலம் தெரியாமல் கலாய்த்த தனது மாமனைப் பார்த்து முறைக்க
“ உங்களுக்குஅறிவே இல்லையா எங்க எப்படி பேசணும் எதுவும் தெரியாதா. என்ன மனசன் நீங்க உங்கள வச்சுட்டு எப்படித்தான் நானும் காலத்தை தள்ளுனனோ எனக்கு தெரியல” என்று தனது கணவரை திட்டிய தங்கம்
“ விடுங்க மருமகனே அவளுக்கு மரியாதை தெரியல. சரி வாங்க நம்ம உள்ள போய் மாப்பிள்ளையும் பொண்ணும் பாப்போம்” என்று சொல்லி உள்ளே சென்றார் தங்கம்.
“ ஆமா மாப்பிள்ளை என் பொண்ணுக்கு மரியாதை தெரியாது உங்க அத்தைக்கு ரொம்ப அழகா மரியாதை தெரியும்” என்றார் முத்துவேல்.
“எப்படி மாமா இதுங்க ரெண்டையும் சமாளிக்க. ஆனா ஒன்னு மாமா உனக்கு எல்லாம் கோவில் கட்டி கும்பிடலாம்”
“உனக்காவது இந்த மாமனோட அருமை தெரியுதே மாப்பிள்ளை. சரி வா உள்ள போய் உன்னோட உடன்பிறப்ப பார்க்கலாம்” என்று சரணை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் முத்துவேல்.
@@@@@@@@@@@@@
விநாயகம், புஷ்பா,இந்திரா மூவரும் திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கே வந்தவர் இந்திராவை தனியே அழைத்து சென்று,
“அம்மாடி இந்திரா எப்படியோ உன் பொண்ணோட கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்ட. நீயே அவ்ளோ கஷ்டத்துல இருக்க இதுல எப்படி இவ்ளோ சீர் செய்ய முடிஞ்சது. உங்க அப்பா வீட்டிலிருந்து வர வேண்டிய உன் பங்கு சொத்து வந்துட்டா என்ன” என்று அக்கறையாக கேட்பது போல எதுவும் விஷயம் தேறுமா என்று அவள் வாயை நோண்டினார் இந்திரா அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை.
“அதெல்லாம் ஒன்னும் தரல சின்னம்மா. என் பொண்ணுக்கு ஏற்கனவே அவளோட அப்பா சேர்த்து வச்சுட்டு தான் போனாரு. அது கூட கொஞ்சம் வெளியே கடன் வாங்கி செஞ்சிருக்கேன் சின்னம்மா” என்றாள் வெகுளியாக இந்திரா.
“உன் புருஷன் கிட்ட இவ்வளவு செய்ற அளவுக்கு காசு இருந்துச்சா என்ன. நான் கேள்விப்பட்டவர உன் குடும்பம் சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்குன்னு தானே சொன்னாங்க. உண்மைய சொல்லு உன் கிட்ட எது இவ்வளவு பணம். உன் அப்பா வீட்டுல கொடுத்தாங்களா இல்ல மாப்பிள்ள வீட்ல இருந்து கொடுத்தாங்களா. ஆமா கேக்கணும் நெனச்சேன் கல்யாணத்துக்கு முன்னாடியே உன் பொண்ணு இந்த மாப்பிள்ளை பையனோட ஒரு ராத்திரி ஒண்ணா இருந்தாளாமே அப்படியா. ஒருவேளை குழந்தை ஏதாவது உண்டாகிட்டா என்ன. அதை மறைக்க தான் இவ்வளவு வேகமா கல்யாணம் பண்றீங்களா” என்றார் வயதுக்கு தகுந்த பேச்சி இல்லாமல்
“என்ன சின்னம்மா இப்படி எல்லாம் சொல்றீங்க என் பொண்ணு அப்படி எல்லாம் பண்றவ இல்ல” என்றார் கலங்கிய குரலுடன் இந்திரா.
“ என்னம்மா நீ இல்லாத கேட்டுட்டேன் இதுக்கு போய் இப்படி அழுற. அவ்ளோ பெரிய குடும்பத்துல உள்ளவங்க ஒன்னு இல்லாத உன் பொண்ண எப்படி கல்யாணம் பண்ணுவாங்க. அதான் பையனுக்கு லவ் கிவ் ஏதாச்சும் இருக்கான்னு கேட்டேன் அதுக்கு ஏன் நீ இப்படி அழுது வடிகிற” என்றார் இன்னும் அடங்காமல்
அப்போது அங்கே சரணுடன் வந்த வேதாச்சலம், “அடடா சகுந்தலா நீயா. என்னம்மா போன மாசம் உன் பேத்தி ஏதோ ஒரு பையனை கூட்டிட்டு ஓடிப் போயிட்டாளாமே அப்படியா” என்றார் அவளைப் பார்த்து
“ ஐயோ அண்ணா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நாங்க தான் பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தோம்” என்றாள் பவ்யமாக மாட்டிக்கொண்ட பாவனையுடன்
“அப்படியா ஆனா எனக்கு வேற நியூஸ் வந்துச்சே ” என்று அவர் இழுக்கவும், “அதான் தாத்தா இவங்க பேத்தி ஹோட்டல்ல ஒரே ரூம்ல ஒண்ணா அந்தப் பையன் கூட இருக்கும்போது நம்ம திரு அண்ணன் கிட்ட தான் மாட்டிக்கிட்டாங்க. அண்ணன் தான் பிராத்தல் கேஸ்ல உள்ள போக இருந்த இவங்க பேத்திய காப்பாத்தி ரெண்டு பேரும் குடும்பத்தையும் வர வச்சி பேசி இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க” என்று முடித்தான் சரண்.
“அப்படியாம்மா” என்று தாத்தா சகுந்தலாவை பார்த்து கேட்க
அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தாள் சகுந்தலா.
“ முதல்ல உன் வீட்டுல உள்ள குப்பைய சுத்தம் பண்ணு அதுக்கு பிறகு ஊரில் உள்ள குப்பைய எல்லாம் சுத்த பண்ணலாம் சரியா. போமா போ கல்யாண வீட்டுக்கு வந்தமா சாப்டமா மொய்ய வச்சமா பிள்ளைங்களை ஆசிர்வாதம் பண்ணமானு இருக்கணும். அதை விட்டுட்டு தேவையில்லாத பேச்சு இங்க பேசக்கூடாது சரியா. போமா போய் மாப்பிள்ளை பொண்ணோட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துட்டு வீட்டுக்கு போற வழிய பாரு” என்று அவளை அனுப்பிவிட்டு கலங்கி நின்ற இந்திராவை பார்த்து
“ கல்யாண வீடுனா இப்படி ஏதாவது நமக்கு பேச கிடைக்குமான்னு சிலதுங்க அலையும் அதெல்லாம் கேட்டு மனசுக்கு கெடுத்துக்க கூடாது சரியா. இது உன் பொண்ணோட கல்யாணம் மா. முகத்தை தொடைச்சிட்டு போய் சந்தோசமா எல்லாத்தையும் பண்ணு போமா” என்று சொல்லிச் சென்றார் வேதாச்சலம் தாத்தா.
“ அத்த இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க. நீங்க சாப்டீங்களா? வாங்க பஸ்ட் வந்து உட்காருங்க. நான் போய் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்று அவளை அமர வைத்துவிட்டு சாப்பாடு எடுத்துச் சென்றான் சரண்.
இந்திராவின் மனதினுள், “நம்ம கல்யாணம் தான் இத்தனை வருஷம் ஆகியும் எல்லாரும் மனசுலயும் ஒரு பேச்சு பொருளா இருக்குன்னா. உன்னோட வாழ்க்கையும் இப்படியா ஆகணும். கடவுளே எப்பதான் என்ன நிம்மதியா இருக்க விடுவ. எந்த கஷ்டமானாலும் எனக்கு தா என் பிள்ளைகளுக்கு எந்தவித கஷ்டமும் கொடுக்காத கடவுளே” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார் இந்திரா. ஆனால் அவளின் கஷ்டமும் அவள் பிள்ளைகளை வாட்டும் என்பதை மட்டும் மறந்து விட்டாள்…
error: Content is protected !!