Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedநாம் கேட்ட காலங்கள்

நாம் கேட்ட காலங்கள் – 5(2)

பிரசன்னவர்தினியும் மகேந்திரனும் அடிக்கடி எதார்த்தமாக சந்திக்க நேர்ந்தது. அதெல்லாம் பிரசன்னா பிரயர்த்தனம் எடுத்த சந்திப்புகள் என்று மகேந்திரன் உணரும்போதும் காலம் கடந்தது. காதல் மிகுந்தது. அந்த காதல் இன்றும் அவனைப் பாடாய்ப்படுத்தியது. அதுதான் மகேந்திரனுக்குப் பிடிக்கவில்லை.

அயனும் வியனும் அழைத்தாலும் அந்த வாரம் அவர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னாளே தவிர, அங்கே செல்லவில்லை. 

அதுவரையில் மகனும் மருமகளுக்கும் பிரிவு என்று சின்ன மகன்கள் சொன்னதைப் பெரியவர்கள் பெரிதாக எடுக்கவில்லை. வைதேகி கவலையாக சொன்னபோதிலும், வித்யாதரன், 



Advertisement

“திலக் இன்னும் கோமாவுல இருந்து முழிக்கல. அவங்க வீட்ல ஒரு பிரச்சனை இருக்கப்போ நம்ம பிரசன்னாவை இங்க இருக்க சொல்ல முடியுமா?” என்று சமாதானம் செய்திருந்தார். அயன் அப்பாவிடம், 

“அண்ணா அண்ணி முன்ன மாதிரி இல்லைப்பா. அண்ணி நம்ம வீட்டுக்கு வரதே இல்லை” என்று கவனித்து சொன்னதை அவர்கள் கருத்தில் ஏற்கவில்லை.

Advertisement

Advertisement

இப்போது இளையவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்தும் அவள் வரவில்லை என்றதும் பெரிய மகனை அழைத்து என்ன பிரச்சனை என்று விசாரித்தனர். 

அவன் பதில் சொன்னால்தானே? 

Advertisement

“ஏண்டா பிரசன்னா வரல?” என்று வைதேகி மகனைக் கேட்க 

“ஏன் வரலை?” என்று அவரையே திரும்பக் கேட்டான். 

“என்னை டென்ஷன் பண்ணாத” என்று வைதேகி அதட்ட, 

“ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூப்பிட்டு வச்சு மொக்கப் போடாம வராதவளை ஏன்னு கேளுங்க. அப்புறம் ஏன் மாமியார்னு நீங்க இருக்கீங்க? எனக்கு வேலை இருக்கு” என்று அவன் சென்றுவிட, 

“என்னங்க இப்படி பேசுறான்?” என்று வைதேகி புலம்ப

“அவனுக்கும் மருமகளுக்கும் பிரச்சனை போல, உன்னை கேள்வி கேளுனு சொல்லாம சொல்லிட்டுப் போறான் வைதேகி” என்று வித்யாதரன் சிரித்தார். 

வைதேகி சிரிக்கும் கணவரை முறைத்தவர் மருமகளிடம் நாளை பேச வேண்டும் என்று நினைத்தார். அடுத்து அவருக்கு மருத்துவமனையில் வேலையிருந்தது. 

அடுத்த நாள் காலை மருமகளிடம் பேச வேண்டும் என்ற எண்ணமே மறக்கும் அளவு மலைபோல் அவருக்கு வேலைகள் குவிந்தன. எல்லாவற்றையும் முடித்து கணவரோடு கிளம்பலாம் என்று நினைத்து அவரது கேபினுக்கு வர, அங்கே மகன் இருந்தான். 

“என்னடா ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்க?” பரபரப்பாக மகனை நெருங்கினார் வைதேகி. அவரை அழைக்க வர சொன்னால் கூட காரில் காத்திருப்பானே தவிர, உள்ளே வரச் சொன்னால் ஒத்துக்கொள்ளாது என்பான். 

வைதேகி மகனின் பக்கம் செல்வதற்குள், கணவனின் வார்த்தைகள் அவரிடம் சென்றன. 

“ராஜாவுக்கு ஹை ஃபீவர்” என்றார். வைதேகி மகனைத் தொட்டுப் பார்க்க நெருப்பாக சுட்டது. கண்கள் சிவந்திருந்தன. 

“எத்தன நாளாடா காய்ச்சல்?” என்று வைதேகி குரல் உயர்த்த 

“நேத்துல இருந்து” என்றவன் குரல் கமறியிருந்தது. 

“வீட்ல இருந்த நீ ஏன் சொல்லல?” என்று வைதேகி அவன் நெற்றியில் கைவைத்தபடி திட்ட, 

“டாக்டர் சர். எனக்கு நாலு மாத்திரைக் கொடுத்து நாளைக்கு ஜூரம் சரியாகுற மாதிரி செய்ங்க.” என்றான் அப்பாவிடம். 

“டேய்! என்ன நக்கலா?” என்ற அம்மாவிடம் 

“அம்மா, எனக்கு டயர்டா இருக்கு. என்னைப் பேச வைக்காம டேப்லேட் கொடுங்க” என்றான். 

“இவனுக்கு இருக்க ஃபீவருக்கு இஞ்செக்ஷன் போடணும்” என்று வைதேகி கணவரிடம் சொல்ல, 

“அதை சொன்னா எங்க கேட்குறான். வலிக்கும்னு அதையே சொல்றான்” என்றார் வித்யாதரன். 

ஊசி என்றாலே மகேந்திரனுக்கு ஆகாது. வைதேகி ஊசி போடுவார் என்பதால் ஜூரம் வந்தால் கூட சொல்லாது சமாளிப்பான். 

“உனக்கு என்ன வயசாகுது? இன்னமும் ஊசிக்குப் பயப்படுற? நீயெல்லாம் என்னடா எம்.பி” என்று வைதேகி கேட்கவும்

“அரசியலுக்கும் ஊசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? எல்லாருக்கும் ஏதோ ஒன்னு பிடிக்காது, எனக்கு ஊசின்னா பிடிக்காது” என்றான். 

“பிடிக்காது இல்லடா ராஜா, பயம்னு சொல்லு” வித்யாதரன் சிரிக்க, வைதேகி கணவருக்குக் கண் காட்டிட அவர் மகனை இருப்பக்கமும் பிடித்துக்கொண்டார். 

“டேய்! டிரஸ்ஸை லூஸ் பண்ணு” என்று வைதேகி சொல்ல 

“அப்பா! எனக்கு ஊசி வேண்டாம். இல்லை…ப்ளீஸ். நீங்களாச்சும் போடுங்க. அம்மா வேண்டாம்” என்று அவன் கூச்சத்தோடு மறுக்க 

“என் பேஷண்ட்கே நர்ஸ்தான் போடுவாங்க. அப்பாவுக்குப் ப்ராக்டிஸ் கம்மி, அம்மா டக்குனு போட்டுடுவாங்க. வலிக்காது ராஜா” என்று மகனிடம் சொன்னார் வித்யாதரன். 

“இவனை செல்லம் கொடுத்துக் கெடுக்கிறதே நீங்களும் உங்கப்பாவும்தான்” என்று திட்டிய வைதேகி நிமிடத்திற்குள் ஊசிப் போட்டுவிட்டார். 

“அம்மா” என்று அவன் கத்த, 

“ஒழுங்கா எங்கேயும் ஊர் சுத்தாம எங்களோட வீடு வர” என்று மிரட்டிய வைதேகி மகனது காரை அவர்கள் ட்ரைவரை எடுத்து வர சொல்லி, அவர்கள் காரை கணவனை எடுக்க சொல்லி மகனோடு வீடு சென்றார். பேரன் ஓய்ந்த தோற்றத்தோடு வர தேசிகன் பதறினார். 

மகனை ஓய்வெடுக்கச் சொன்ன வைதேகி, அவனுக்கு மிளகு ரசம் வைத்தார். பின் மருமகளுக்கு அழைத்தவர் ராஜாவைப் போல அடாவடியாகவே பேசினார். 

“உனக்கு எப்ப வீட்டுக்கு வர ஐடியா பிரசன்னா?” என்று கேட்க 

“அத்தை” என்றவளுக்கு தங்கள் பிரச்சனையை சொல்வதா வேண்டாமா என்ற கேள்வி. 

கணவனின் முதல் சட்டமே என்ன பிரச்சனை என்றாலும் அது சுவர் தாண்டக் கூடாது. 

‘என்னோட என்ன சண்டை வேணும்னாலும் போடு. ஆனால் வெளியே தெரியக் கூடாது.’ என்பான். 

அவளின் அமைதியில் எரிச்சலான வைதேகி, 

“நீ இப்போ வீட்டுக்கு வர. இது என்னோட ஆர்டர். உங்கண்ணனுக்கு முடியலனு நீ போன, ஆனா எத்தன மாசம்? இப்போ என் பையனுக்கு முடியல” என்றதும் 

“மகிக்கு என்னாச்சுத்த?” என்று பதறினாள். 

“வந்து தெரிஞ்சுக்க” என்று சொல்லி வைத்தவர் பெருமூச்சுவிட்டார்.

“ஏன் இவ்வளவு ஹார்ஷா பேசுற?” என்ற கணவனிடம் 

“எனக்கு இப்படி ஃப்லோவா பேசினாதான் வரும். இல்லைனா அவ செல்லம் கொஞ்சிடுவா.” என்றார் வைதேகி பாவமாக. 

மகளில்லாத அவருக்கு மருமகள்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல். அவரின் மாமியார் மிகவும் நல்ல மாதிரி, அவரையே மாதிரியாகக் கொண்டு வைதேகியும் நடக்க நினைத்தார்.

மகனின் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பயமிருந்தாலும், பிரசன்னா வீட்டினரோடு இயல்பாகவே ஒட்டிக்கொண்டாள். ஏற்கனவே தேசிகனின் நண்பர் ரத்னவேலின் வீட்டினரோடு அவளுக்கும் நல்ல பழக்கம். அதனால் சில விழாக்கள், நிகழ்வுகளில் பார்த்திருந்தாலும் பழகியதில்லை. பழகிய பின் எப்படி தன் மகனுக்கும் பிரசன்னாவிற்கும் ஒத்துப்போகும் என்ற கவலை. 

எப்படி இந்த இரண்டு வெவ்வேறு மனிதருக்கும் காதல் என்ற கேள்வி அவரைக் குடைந்தாலும், காதல் கொண்டு மணந்ததால் மகனின் காதலை மறுக்கவில்லை. பிரசன்னவர்தினி அம்மாவிடம் சென்று, 

“அத்தை கூப்பிடுறாங்க மா, நான் அங்க போயிட்டு வரேன்” என்றாள். நர்மதாவுக்கும் மகிழ்ச்சியே. அவரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவள் ரஞ்சனை எதிர்கொண்டாள். 

“எங்க போற வர்தினி?” என்றவனிடம் 

“அத்தை வர சொன்னாங்கண்ணா” என்றாள். 

சில நொடி யோசித்தவன், “நான் ட்ராப் பண்ணவா?” என்று கேட்டான். அண்ணனை ஆச்சரியமாகப் பார்த்தவள், 

“வேண்டாம்ணா” என்று மறுத்து அவளே காரை எடுத்து சிவன்தாங்கல் சென்றாள்.

அன்பழகன் இல்லம். 

“திலக் விஷயத்துல எதாவது லீட் கிடைச்சதா?” அன்பழகன் மகன் உள்ளே நுழையும்போதே கேட்க, பவானி அதிருப்தியாகப் பார்த்தார். 

“அவன் உள்ள வந்து சாப்பிடட்டும். நேத்து நைட் கிளம்பிப் போனவன், இப்போதானேங்க வரான்” என்றார் ஆயாசமாக. 

ஜீவாவோ அப்பாவிடம் கோபம் காட்டாமல், “தேர்தல் முடிவு வரவரைக்கும் கேஸைப் பெருசா விசாரிக்காம இருந்திருக்காங்கப்பா. நான் இப்போ புதுசா விசாரிக்க ஆரம்பிச்சிருக்கேன். முதல்ல கட்சில இருந்து என் விசாரணையைத் தொடங்கியிருக்கேன்” என்றான். 

“அதுல ப்ரைம் சஸ்பெக்ட் திலக் சித்தப்பா பொண்ணு பிரசன்னாவோட ஹஸ்பண்ட் ராஜமகேந்திரன்” 

அதைக் கேட்கவும் தன் தங்கையின் கணவன் ஜெயசீலனை நினைத்தான். நாற்காலிக்கான போரில் நட்பென்ன? தப்பென்ன? வெற்றி ஒன்றே அங்கே குறிக்கோள். பதவி பாசமெல்லாம் பார்க்காது என்பதை வலிக்க வலிக்க அவன் அப்பா சக்கரபாணியும், தங்கை கணவனும் அன்பழகனுக்குச் சொல்லி சென்றிருந்தனர். 

“தேசிகன் ஐயா பேரனா?”

“ஆமாப்பா” என்றவனிடம் பவானி, 

“போய் முகம் கழுவிட்டு வா டா. சாப்பிட்டு சாவகாசமா பேசு” என்றார். உள்ளே சென்ற ஜீவாவுக்கு அப்பாவின் தவிப்பான முகமே கண்முன் நின்றது. தவறே செய்யாவிட்டாலும், தவறின் காரணம் அவரென்பதால் இத்தனை ஆண்டுகள் அவர் அனுபவிக்கும் ரணம் கொடியது. அதைத் தன்னால் எவ்வகையில் போக்க முடிந்தாலும், அதற்காக எத்தனை எத்தனங்கள் மேற்கொள்ளவும் அவன் அஞ்சவில்லை. 

அப்பா முகத்தில் ஒரு நிம்மதியான சிரிப்புக்கும் நிறைவுக்கும் அவன் குடும்பம் தவமிருக்கிறது. 

ஜீவா உண்டு முடித்து ஸ்டேஷன் சென்றவன் விசாரணையத் தொடங்கினான். திலக்கிற்கு விபத்தினை ஏற்படுத்திய லாரி ட்ரைவரை இன்னும் பிடிக்கவில்லை. நள்ளிரவு நேரம் நிகழ்ந்த விபத்து. லாரியின் எண்ணும் போலியானது. 

அதுவே இது விபத்தல்ல, திட்டமிட்ட சதி என்பதை உறுதியாக சொன்னது. ஆனால் அந்த நள்ளிரவு நேரம் திலக் ஏன் தனியாக செல்ல வேண்டும் என்ற கேள்வி ஜீவாவின் மனத்தில் உதித்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!