Skip to content
Post Views: 2,080
அத்தியாயம் 9
வெற்றிவேல் செழியன் சென்றதும் கனிகாவிடம் சந்திரா விசாரணையை துவங்க எண்ணி அவளை பார்க்க அவரின் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவள், ‘யோவ் மாமா, வசமா வச்சு செய்யறேன்னு சொன்னது இது தானா..? நான் கூட நீங்க தான் எதாச்சும் என்னை செய்வீங்க அதை சமாளிச்சிடலாமுன்னு கூலா இருந்தேன்.
இப்படி இந்த குரூப் கிட்ட சிக்க வச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டீங்களே..!
நல்லா வருவ ராசா.. மகனே, இரு நைட் வச்சுக்கறேன்..உங்கள..’ என மனதில் வெற்றியை போதுமான வரை வருத்தவள்,
வெளியே அப்பாவியாய், “அத்தம்மா, மாமா எப்பவும் இப்படி சாப்பிடாம தான் வேலைக்கு போவாங்களா..? இட்ஸ் டூ பேட்.
சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய முடியுமின்னு தெரியாத மக்கு பையனையா பெத்து வச்சிருக்கீங்க..?
இன்னைக்கு மாமா வரட்டும் நா போடுற போடுல.. அவரு இனி டைனிங் ஹால்லையே குடியிருப்பாங்க..” எனச்சொன்னவள்,
Advertisement
தொடர்ந்து, “ஓகே அத்தம்மா, மாமா தான் சாப்பிடாம போயாச்சே. இனி அத பேசி என்னவாக போகுது.
நா போய் நம்ம எல்லாருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன். நாம சாப்பிடலாம்..” என அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்றவளை,
“கனிம்மா நில்லு. அவன் வந்ததும் நீ கேட்டு.. அவன் டைனிங் ஹால்ல குடியிருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்.
முதல்ல அவன் உன் கூட ரூம்ல ஒழுங்கா குடியிருக்கானா..?
Advertisement
அதாவது நா என்ன கேட்கறேன்னா..” என, ‘அதை எப்படி வெளிப்படையாய் கேட்க..’ என தயங்கி சந்திரா நிறுத்த,
அவர் கேட்க வருவதன் அர்த்தம் புரிந்த கனிகா, “என்ன அத்தம்மா இப்படி கேட்டுட்டீங்க.. அதெல்லாம் நாங்க சந்தோஷமா..” என ஆரம்பித்தவளை முடிக்கவிடாது,
Advertisement
“உண்மைய மட்டும் சொல்லு கனி..!” என சந்திரா சொன்ன விதத்திலேயே, ‘பொய் சொல்லாதே..!’ என்ற தோணி நிறைந்திருந்தது.
அவரை மேலும் பொய் சொல்லி சமாளிப்பதை விட உண்மையை சொல்லிவிடுவது நல்லது என நினைத்த கனிகா,
“ஹூம்..” என்ற பெருமூச்சை வெளிவிட்டு, “அத்தம்மா.. மாமாக்கு நம்ம சொன்ன பொய் தெரிஞ்சிடுச்சு..” என்றதுமே,
ஓரளவு அனுமானித்தது தான் என்ற போதும், அது உறுதியான அதிர்வில் இருந்த சந்திராவினுள்,
‘எப்படி தெரிஞ்சிருக்கும்..? எப்போ தெரிஞ்சிருக்கும்..?” என்ற கேள்வி எழ,
Advertisement
பிரகாஷ் செந்தமிழுக்கோ, ‘இனி மகளின் வாழ்க்கை என்னவாகுமோ..?’ என்ற பயமே பிரதானமாய் இருந்தது.
“கனி.. நீ தான் அவன்கிட்ட உண்மைய சொன்னையா..?” என சந்திரா தன்னுள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேட முயன்று கேட்க,
மறுப்பாய் தலை அசைத்த கனிகா, “நா சொல்லறதுக்கு முன்னாடியே விசயம் அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு போல அத்தம்மா.
மாமா நைட் நா உள்ள போனதுமே உனக்கு ப்ளட் கேன்சர் ன்னு சொன்னது பொய்யான்னு கேட்டாங்க..
நானும் ஆமா பொய் தான்னு சொல்லிட்டேன்..” என சொல்லிட,
“போச்சு, போச்சு.. நா அப்பவே தலப்பாடா அடுச்சுக்கிட்டேன்.
அதுலையும் நேத்து காலைல இருந்த மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்கு வரும் போது இல்லன்னு நா சொன்னப்ப என்ன சொன்னே நீ..?
இப்ப பாரு சொன்ன பொய் எங்கே போய் நிக்குதுன்னு.. இது உன்னோட வாழ்க்கை பிரச்சினை.. இதுல இப்படியான விபரீத விளையாட்டு வேணாமுன்னு சொன்னேனே கேட்டையா நீ..!
இப்படி உன் தலையில நீயே மண் அள்ளி போட்டுட்டுகிட்டையே..” என செந்தமிழ் ஆதங்கத்தில் புலம்ப,
“அம்மா.. என் தலையில விழுந்த மண்ணை நீ வேணுமின்னா அலசிவிடு.. சரியா..?” என கடுப்பாக சொன்னவள்,
“அத்தம்மா, அப்பா அம்மா உங்க எல்லாருக்கும் தான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல கனி விரும்ப மாட்டா.. ஓகே..” என்றவள்,
“வெற்றி மாமாக்கு என் மேல பாசம், நேசம், அன்பு எல்லாமே இருக்கு.
அதே மாதிரி அவருக்கு நான் என் உயிரை பத்தி சொன்ன விசயத்தால கோபமும் இருக்கு.
ரெண்டுமே இப்போ சம அளவா இருக்கறதால கொஞ்சம் தடுமாறிட்டு இருக்காரூ.
என்மேல இருக்கற அந்த கோபம் போய்.. அந்த இடத்துல லவ் மட்டுமே நிறையும் போது இது எல்லாமே சரியாகிடும்.
என்னோட கெஸ் சரின்னா அம்மா சொன்ன மாதிரி.. நேத்து நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே மாமாக்கு உண்மை தெரிஞ்சிக்கணும்.
அதை வச்சு உங்க யாராவது கிட்ட மாமா எதாவது கேட்டாங்களா..? இல்லல்ல.
அப்போ அவங்க எக்காரணம் கொண்டும் உங்க எல்லாரோட மனசும் நோகற மாதிரி நடக்க மாட்டாங்க.
அவரோட கோபம் எத்தன நாளைக்கு என்கிட்ட செல்லுமுன்னு நானும் பார்க்க தானே போறேன்.
நா பண்ண போற சேட்டையில தானா என்னோட வழிக்கு வர தான் போறார் பாருங்க..” என பெரியவர்களின் மனதை திடப்படுத்த வேண்டி சொன்னதோடு,
‘வெற்றி இப்படி தன்னை மட்டும் மாட்டி விட்டு சென்றதற்கு எப்படி படுத்தி எடுக்கலாம்..?’ என்ற சிந்தனையில் கனிகா இறங்கியிருந்தாள்.
கனிகா சொன்னது போல உண்மை அறிந்தும், தங்கள் முன் வெளிப்படுத்தாமல் நாசுக்காக நடந்து கொள்ளும் வெற்றி, நிச்சயம் அவளை விட்டு விட மாட்டான்.. என்பது மட்டும் பெரியவர்களுக்கு தெளிவாக, அனைவருக்கும் அதுவே இப்போதைக்கு போதுமானதாய் இருந்தது.
இனியாவது நடப்பது எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும்.. என்ற வேண்டுதலை மட்டுமே அவர்களால் அப்போதைக்கு வைக்க முடிந்தது.
****
வேகமாக வீட்டை விட்டு வெளியேறிய வெற்றிவேல் செழியனுக்கோ கண்களின் உறுத்தல் குறையாததோடு,
வெயிலின் தாக்கத்தால் கண்ணில் மேலும் கண்ணீரை வர வைக்க.. தனது கூலரை அணிந்தவன், தனது நண்பன் நந்தன் பணிபுரியும் மருத்துவமனைக்கு தனது வாகனத்தை செலுத்தினான்.
“எல்லாம் இந்த அராத்தால வந்தது. நா ஒரு லூசு. போலீஸா விசாரிக்காம அவளுக்கு இப்படியாங்கற தவிப்புல இங்கே சொன்னத அப்படியே நம்புனேன் பாரு.. என்னை சொல்லனும்.
இந்த உண்மை எல்லாம் தெரியாம எவ்வளவோ ப்ளான் போட்டு இருந்தேன்.
அவளோட எப்படியெல்லாம் டைம் ஸ்பென்ட் பண்ணனும். அவள் என்னோட வாழுற கடைசி நிமிஷம் வரைக்கும் எப்படி சந்தோஷமா வச்சுக்கணுமின்னு.. நினச்சிருந்தேன்.
எல்லாமே நாடகமுன்னு சொல்லி என்னை இப்படி ஏமாத்தி புலம்ப வச்சிட்டாளே..” என்ற ஆதங்கத்தால் வந்த புலம்பலோடு வாகனத்தை மருத்துவமனை வாசலில் நிறுத்தி விட்டு தனது நண்பன் நந்தனுக்கு அழைத்தான்.
மறுமுனையில் எடுத்த நந்தனோ, “ஹாய் மச்சான்.. புதுமாப்பிள்ளைக்கு காலைலயே எங்க நியாபகம் எல்லாம் வந்திருக்கு..!
என்னடா விசயம்..? எதாவது டவுட்டா..? க்ளியர் பண்ணிக்கனுமா..? ஐம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ்.. மச்சா..” என கிண்டலாய் பேச,
“ஊகூம்.. டவுட் எல்லாம் இல்லடா மச்சா.. என் பொண்டாட்டிக்கு டெலிவரிக்கு புக் பண்ணலாமின்னு தான்..” என கடுப்பில் வெற்றி சொல்ல,
“வெற்றி..! நீ எல்லாத்துலையும் செம பாஸ்ட் தான். உன்னோட மூவ்ஸ் அதிரடியா இருக்குமுன்னு நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும் தான்.
அதுக்காக இப்படியாடா..? நா இதை எதிர்பார்க்கவே இல்லடா..!” என அதிர்ந்து போய் பேசுபவனை நினைத்து பல்லை கடித்த வெற்றி,
“டேய்.. அடங்கு. எங்கடா இருக்க இப்போ..? அத சொல்லி தொல முதல்ல..” என கேட்டவனுக்கு,
“ஹாஸ்பிட்டல்ல தான் மச்சா இருக்கேன். ஒரு எமர்ஜென்சி கேஸுக்காக நேரமே வந்தேன்.
இப்ப தான் வேலை முடுஞ்சுது. வீட்டுக்கு கிளம்ப போறேன். எதுக்கு கேட்கற..?” என பதில் சொன்ன நந்தனிடம்,
“சரி நீ உன்னோட கன்சல்ட்டிங் ரூம்ல வெயிட் பண்ணு வர்றேன்..” என சொல்லி விட்டு கட் செய்த போனை தனது பேன்ட் பாக்கெட்டில் போட்டவன் நேராக நந்தனை தேடி சென்றான்.
தன் அறைக்குள் யூனிஃபார்ம் அணிந்து வந்தவனை கேள்வியாய் நோக்கியபடியே,
“வாடா மச்சா.. என்னடா காலங்காத்தால இப்படி வந்திருக்கே..?
நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது. இப்போ இந்த நேரத்துக்கே இப்படி வந்து நிற்கறே..!
எதாவது முக்கியமான என்கொய்ரியா..?” என அவனின் உடையை பார்த்து விட்டு சந்தேகத்தோடு கேட்க,
“இல்லடா.. எனக்கு தான்.. டாக்டர கன்ஷல்ட் பண்ணிட்டு போகணும்டா..” என சொல்லி, அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரந்தான் வெற்றிவேல்.
அவன் அணிந்திருந்த கூலர் கண்களை மறைத்திருக்க அவனின் பிரச்சனை இன்னதென்று புரியாத நந்தனோ,
“டேய் மச்சா.. நேத்து நைட் எதாவது பிராப்ளமாடா..? அதான் காலைலயே, ‘அதுக்கான..’ டாக்டரை பார்க்க வந்தியா..?
இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே செக் பண்ணிக்கறதில்ல..” என உணர்ச்சிவசப்பட்டு பேசியவனின் பேச்சில்,
‘நைட் எங்களுக்குள்ள பிரச்சனைன்னு இவன் எப்படி கெஸ் பண்ணான்..?
ஓ.. இவன் தானே விசயத்தை என்கிட்ட போட்டு கொடுத்தான். அதனால கெஸ் பண்ணியிருப்பான் போல..
அப்ப எதுக்கு அதுக்கான.. டாக்டர்ன்னு அழுத்தி..’ என புரியாது சில நொடி யோசித்த வெற்றிக்கு நந்தன் சொன்ன விசயம் புரிந்த நொடி,
“பரதேசி…! உன்னையெல்லாம்..” என எழுந்து அவனின் கழுத்தை பிடிக்க வர,
அவன் பிடியிருந்து விலகவென நந்தன் முயல, இருவரும் செய்த அதிரடி செயலால்.. அடுத்த நிமிடம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் என்ற நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்தனர்.
அப்போதும் அடங்காத நந்தனோ, “டேய்.. எரும.. விடுடா என்னை. உனக்கு சந்ததி வர வைக்க வேண்டி ஒரு அக்கறையில பேசினா.. என்னோட சங்க உடைக்க பார்க்கறையே.. இது நியாயமா..?” என பேசியபடி வெற்றியை தள்ளிவிட,
“நந்தா.. நானே கொலை காண்டுல வந்திருக்கேன். நீ வேற இப்படி பேசி வெறுப்பேத்திட்டு..” என சொல்லி அவனை விட்டு விலகி தரையிலேயே அமர்ந்தான் வெற்றிவேல் செழியன்.
அவனுக்கு எதிரே ஒரு கையை கன்னத்திற்கு முட்டி கொடுத்து ஏகாந்த சயன கொள்ளும் ரங்கநாதரை போல படுத்த நந்தன், “என்ன மச்சான் உன் பிரச்சனை..? தெளிவா சொல்லு கேட்போம்..” என கதை கேட்கும் எஃபெக்ட்டில் கேட்டு வைக்க,
அவனை முறைத்த படியே, “எல்லாம் அந்த அராத்தால தான். சரியான ராங்கி.. லடாயீ..” என வெற்றி முனுமுனுக்க,
புருவம் சுருங்க யோசனையோடு, “யாரடா சொல்லற நீ..?” என்ற நந்தனுக்கு,
“எல்லாம் நா கட்டிக்கிட்டவள தான் சொல்லிட்டு இருக்கேன். பொண்ணாடா அவ.. சரியான ரவுடி..” என கடுப்பில் பதிலுரைத்தான் வெற்றி.
அவன் சொன்ன விதத்தில் எழுந்த மெல்லிய புன்னகையோடு, “அடி ரொம்ப பலமோ.. மச்சா..?” என சம்மந்தமில்லாமல் கேட்ட நந்தன், தொடர்ந்து,
“விடு மச்சா.. பொண்டாட்டின்னு வந்தாலே அவங்க அடுச்சு விளையாடற ஃபுட்பாலா ஆகிட வேண்டியது கணவர்களின் தலையெழுத்து.
இதுல நீ மட்டும் விதி விலக்கா..?
போலீஸா இருந்தாலும் பொண்டாட்டிங்களுக்கு ஷோகேஸ் பொம்மை தான்..
அவங்க கொடுக்கற கீ க்கு ஏற்ப ஆடித்தான் ஆகனும்.. இட்ஸ் ஆல் ஃபேட்.. யார் நினைச்சாலும் மாத்தவே முடியாது.. ” என சொன்னதில்,
வெற்றிக்கும் லேசாக சிரிப்பு வர, “மச்சா.. அவ ஃபுட்பால் போல அடிக்கலடா. அவ வெறும் பால வச்சே பழிவாங்கிட்டா..” என்றவன், தொடர்ந்து காலை நடந்ததை மறைக்காது சொல்ல,
ஒருக்களித்து படுத்திருந்த நிலையை மாற்றி மல்லாந்து படுத்த நந்தன், “ஹா.. ஹா..” என வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
“ஏன்டா.. அவ புளுச்சு போன பால ஊத்தி என் கண்ணுல பிரச்சனையாகிடுச்சுன்னு சொல்றேன்.
அதுக்கு பதறி போய் என்ன எதுன்னு பார்க்காம.. இப்படி லூசு மாதிரி சிரிக்கறே..?
நீயெல்லாம் ஒரு ப்ரண்டுன்னு உன்னைய தேடி வந்தேன் பாரு.. என்னைய சொல்லனும்..” என வெற்றிவேல் கடுப்போடு நந்தனை முறைக்க,
“இதில்ல மச்சா.. நீ சிஸ்டருக்கு வொஸ்ட் டே விஷ் பண்ணா, பதிலுக்கு அவங்க உனக்கு குட் டே சொன்னாங்க தானே..?
இப்போ நல்லா யோசி.. யாருக்கு எது நடந்திருக்கு..” என தத்துவம் பேசியவனை பார்த்த வெற்றி,
“டேய் நந்தன் முடியலடா.. உன்னோட தத்துவம் ங்கற பேர்ல நீ போடற மொக்க.
அதை கேட்கவா இப்படி வந்து உட்கார்ந்திருக்கேன்.
ஏற்கனவே கண்ணு உறுத்தல் தாங்க முடியாம இருக்கு.. இதுல நீ வேற..
தயவு செஞ்சு உங்க ஹாஸ்பிடல்ல இருக்கற ஐ ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போ.
இல்ல ஆள விடு.. வேற ஹாஸ்பிடல் போய் நானே பார்த்துக்கறேன்..” என படி எழுந்திட,
“கோவப்படாத மச்சா.. இரு டாக்டர் வந்துட்டாரான்னு கேட்கறேன்..” என்றவன் எழுந்து ரிஷப்ஷனில் விசாரித்து வெற்றியை அதற்கான மருத்துவரிடம் அழைத்து வந்தான்.
error: Content is protected !!