Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் தேடும் காதல் நீ

நான் தேடும் காதல் நீ…..15

நான் தேடும் காதல் நீ…..15

தனது அறையில் படுத்திருந்த தீர்த்தாவின் மனது இன்று நடந்திலேயே சுழன்று கொண்டிருந்தது.அமரன் தன் வீட்டிற்கு வந்ததே அதிசயம் என்றால் அவன் பேசிய வார்த்தைகள் அவளை இன்னும் மதியிழக்க செய்து கொண்டிருந்தது.

“தெரிஞ்சே ஏன் என்னை இடிக்கனும்….”என்று தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.அவளை போலவே அமரனும் காதல் நோயில் பாதிக்கப்பட்டுவிட்டான் என்று அவளுக்கு புரியவில்லை.அவளை பொறுத்தவரை அமரன் தன்னுடைய குடும்பம் அதன் கோட்பாடுகளுக்குள் தான் நிற்பான் அதனை உடைக்க என்றும் முயற்சி செய்யமாட்டான் என்று தான் நினைத்தாள்.

அதுவும் இருமுறை காதலை சொல்லி அவன் மறுத்து கூறிய போதும் நான் இப்படி தான் என் எதிர்காலம் ஏற்கனவே தீர்மானிக்கபட்ட ஒன்று அதனால் என்னை தொந்திரவு செய்யாதே என்று தானே கூறினான்.தீர்த்தாவிற்கும் அவன் இப்படி தான் கூறுவான் என்று தெரியும் இருந்தாலும் தன் மனதில் எழும் காதலை அவளாள் கட்டுப்படுத்த முடியவில்லை அதனால் தான் தன் மனதை அவனிடம் கூறியது.அவன் இரண்டாவது முறையும் மறுத்த பின் தன் மனதை அவனின் பின் அலையவிடாமல் தன்னை கட்டுப்படுத்த தொடங்கி அதில் வெற்றியும் கண்டுவிட்டாள்.



Advertisement

“க்கா…க்கா….”என்ற அழைப்பில் நிகழ்வுக்கு வந்த தீர்த்தா,எதிரில் நின்ற தங்கையை முறைத்துக் கொண்டே அவள் கொண்டு வந்த சாப்பாட்டை வாங்கி,

“எப்ப கிளம்புற….”என்று கேட்க,

“எனக்கு தெரியும் எப்ப போகனும்னு நீ சொல்லாத…..”என்று சிவன்யாவும் கோபமாக கடுகடுக்க,

Advertisement

“என்னடீ வாய் நீளுது….இதெல்லாம் அந்த குரங்கோட வேலை…..குரங்கு குரங்கு என் வீட்டுக்குள்ள வந்து எனக்கே பாடம் எடுக்குது……”என்றவளின் முகத்தில் அந்த குரங்கு என்று குறிப்பிட படும் நிமலனின் முகம் மின்னி மறைந்தது.

Advertisement

அமரன் வந்துவிட்டு சென்றவுடன்,

“முதல்ல போலீஸ் கம்ளைன்ட் கொடுக்கனும்….”என்று  நிமலன் கூற,

“அப்படி கொடுக்கனும்னா நான் உன் மேல தான் கொடுப்பேன்….ஏனா நீ தான் வீட்டுல அத்துமீறி நுழைஞ்சிருக்க…..முதல்ல வெளில போ….”என்று தீர்த்தாவும் சத்தம் போட்டாள்.

Advertisement

“நல்லதுக்கு காலம் இல்லை…உன்னை சொல்லியும் தப்பில்லை….”என்றவன் சிவன்யாவிற்கு அழைத்து விஷயத்தை தெரிவித்து அவளை வரும்படி பணிந்தவன் அவள் வந்த பிறகு தான் கிளம்பினான்.தீர்த்தா எவ்வளவு கூறியும் சிவன்யா தன் பேச்சை கேட்காமல் கிளம்பி வந்தது அவளுக்கு அத்தனை கோபத்தை கொடுக்க அதை இதோ காட்டிக் கொண்டிருக்கிறாள்.

“சும்மா எல்லாத்துக்கும் கோபப்படாம தூங்குக்கா…எனக்கும் தூக்கம் வருது….”என்ற சிவன்யா தீர்த்தாவின் அருகில் படுத்துவிட்டாள்.அவளிடம் வாதாடினாள் ஏதாவது திட்டிக் கொண்டு தான் இருக்க போகிறாள் அதற்கு அமைதியாக இருப்பது தான் நல்லது என்றவளின் மனதில் அமரனின் மீது ஒருபக்கம் கோபமும்,ஒரு பக்கம் அதிர்ப்தியும் ஏற்பட்டது.

இவர்களை குழப்பத்தில் தள்ளியவனோ தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.தீர்த்தாவிடம் பேசிவிட்டு வந்த அமரனின் முகத்தில் குழப்பம் நீங்கி தெளிவு பிறந்ததிருந்தது.அதனால் தான் இந்த நிம்மதியான உறக்கம்.தன் மனது எதை தேடுகிறது என்று நன்கு புரிந்துவிட்டதால் அதை எப்படி அடைய வேண்டும் என்பது மட்டும் தான் அவனின் மனதில் சற்று நேரம் முன்பு வரை ஓடிக் கொண்டிருந்தது ஆனால் அதற்கும் அவனிற்கு தீர்வு கிடைத்துவிட அதற்கான திட்டங்களை தீட்டிவிட்டியவன் மனது லேசாகவும் தான் உறக்கத்தை தழுவினான்.மனிதன் ஒரு திட்டம் தீட்டினால் கடவுள் அவனுக்கு முன் ஒரு திட்டத்தை தீட்டி இருப்பார் என்று பாவம் அவனிற்கு தெரிய வாய்ப்பில்லை.

செல்வத்தின் வீட்டில்,

“என்ன மாப்பிள்ளை நிமலன் கிட்ட பேசிட்டீங்களா….”என்று கேட்டு கொண்டிருந்தார் ராஜாங்கம்.

“இன்னும் இல்லை மாமா…பேசனும்….”என்றார் செல்வம்.அப்போது சரியாக அந்த அறையின் உள்ளே நுழைந்தார் சாருலதா.அவரை பார்த்தவுடன் மற்ற இருவரும் பேச்சை நிறுத்திவிட,

“என்ன நான் வந்தவுடனே பேச்சை நிறுத்திட்டீங்க….”என்ற கேட்டபடி அருகில் இருந்த இறுக்கையில் அவர் அமர,

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லமா…நாங்க தொழில் விஷயமா தான் பேசிக்கிட்டு இருந்தோம்….”என்று ராஜாங்கம் அவசரமாக பதலளிக்க சாருவின் புருவங்கள் இடுங்கியது.

“என்ன சீக்கிரம் வந்துட்ட….உன் கிளப்பல இன்னைக்கு யாரும் வரலையா….”என்று செல்வம் பேச்சை மாற்றினார்.அவருக்கு நன்கு தெரியும் மனைவி இதற்கு சம்மதிக்க போவதில்லை அதனால் கடைசியாக இந்த விஷயத்தை கூறிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டார்.சாருவிற்க்கு அவர்கள் ஏதோ தன்னிடம் மறைக்கிறார்கள் என்று புரிந்தது ஆனாலும் ஒரு மெத்தனம் என்னை மீறி என்ன நடந்துவிடும் இந்த வீட்டில் என்ற இறுமாப்பு.ஆனால் இந்த முறை அவரின் இறுமாப்பில் பெரிய அடி விழப்போகிறதும் இனி அவரின் சொல்லு மேடை ஏறாது என்பதும் அப்போது அவர் அறியவில்லை.

தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அப்போது தான் வீட்டிற்கு வந்தான் நிமலன்.உணவு மேஜையில் தந்தை அமர்ந்திருப்பதை பார்த்தவன்,

“ப்பா….எனக்காக வெயிட்டிங்கா….”என்று கேட்க,

“ஆமாப்பா….உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…..”என்று செல்வம் கூற,

“ரொம்ப முக்கியமான விஷயமாப்பா…..”என்று கேட்டவன் மணியை பார்த்தான்,

“ம்ம் ஆமாப்பா…ஏன் உனக்கு ஏதாவது வேலையிருக்கா….”என்று கேட்க,

“ஆமாம்….ஒரு முக்கிய வேலை இருக்கு….நாளைக்கு காலையில பேசலாமாப்பா….எனக்கும் ப்ரிஷ்ஷா இருக்கும்…..”என்று கூற,செல்வம் எழுந்து கொண்டார்,

“நீ சொல்லுறதும் சரிதான்ப்பா…..நாளைக்கு காலையில நானே வரேன் உன் ரூம்முக்கு….பேசுவோம்….”என்று கூற,தந்தையை நெருங்கியவன்,

“என்னப்பா மம்மிக்கு தெரியாத விஷயமா….”என்று நமுட்டு சிரிப்புடன் கேட்க,அவனின் முதுகை லேசாக அடித்தவர்,

“படவா….உன் அம்மைக்கிட்ட சொல்லாமலா….உன்கிட்ட பேசிட்டு தான் அவ கிட்ட பேசனும் அதான்….”என்று சிரித்துக் கொண்டு கூற,

“ஓஓ…ஓகே..ஓகே…டன்….நான் எழுந்து ப்ரஷப்ப ஆகிட்டு கூப்பிடுறேன்…”என்றுவிட்டு அவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.போகும் மகனை பார்த்த செல்வத்தின் மனதில் அலைபுரிதல் அதிகமானது யாரின் மனதும் நோகாமல் தான் நினைத்த விஷயம் நல்லமுறையில் நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக விடிந்தது.தனது காலை வேளைகளை முடித்துக் கொண்டு சாப்பாடு மேஜைக்கு வந்த அமரனை பார்த்த அகிலா,

“என்ன கண்ணா…வெளில போறியா….”என்று கேட்க,

“ஆமாம்மா….ஒரு முக்கிய வேலை கோவை வரைக்கும் போறேன்….”என்றான் சாப்பாட்டில் கவனம் வைத்தபடி.

“என்ன கண்ணா முக்கியமான வேலையா…எப்போதும் நைட்டே சொல்லிடுவ….”என்று அகிலா கேட்க,

“இல்லமா திடீர்னு தான் முடிவாச்சு….நம்ம கடைக்கு ஒரு லாரி வாங்கலாம்னு யோசிக்கிட்டு இருந்தேன்னு சொன்னேன்ல…நேத்து ஒருத்தர் கிட்ட பேசினேன்…அவரை பார்க்க தான் போறேன்….”என்று கூற,

“ஓஓ….சரிப்பா…பார்த்து கவனமா பேசு…வெளில ரேட் எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு போப்பா….”என்று அகிலா கூற,

“அதெல்லாம் கண்ணா கவனமா தான் செய்வான்…நீ கவலைபடாத….”என்றபடி வந்த கற்பகம்,

“இந்தா கண்ணா நீ கேட்ட முட்டை தோசை….”என்று அவனின் தட்டில் வைத்துவிட்டு சென்றார்.அமரனுக்கு அவரை கண்டவுடன் மனதை பிசைய தான் செய்தது ஆனாலும் தன் முடிவில் உறுதியாகிவிட்டபின் பின்வாங்குவது நல்லதல்ல அதோடு இதில் தன் எதிர்காலம் மட்டுமல்ல தாமரையின் எதிர்காலமும் அடங்கியுள்ளது அதனால் முயன்று தன்னை நிதானமாக்கிக் கொண்டான்.

ஆம் அமரன் முடிவு எடுத்துவிட்டான் இனி தன் வாழ்வு என்பது தீர்த்தாவுடன் தான் நேற்று அவளை காணாமல் அவன் மனது துடித்த துடிப்பு அவனே அறிவான்.அதுவும் அவளை மற்றொருவனுடன் காண சகிக்காமல் அவன் செய்தது.அது தவறு தான் என்ற போதிலும் மனது இலகவில்லை அவள் தன்னை நிராகிரிப்பதில் கண்மண் தெரியாத கோபம்.அவள் தன்னிடம் காதலை கூறி தான் நிராகரித்தது எல்லாம் வசதியாக மறந்து போனது அவனிற்கு.வேண்டும் என்ற போது வேண்டாம் என்று இவன் விலக இப்போது அவள் வேண்டாம் என்று விலகும் போது நீ தான் நீ மட்டும் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அவனின் மனது.உண்மையில் மனித மனம் குரங்கு தான் போல.

தனது விடுதியில் கல்லூரி கிளம்பிக் கொண்டிருந்த தாமரையின் முகம் இன்று வழக்கத்து மாறாக பதட்டத்துடன் இருந்தது.நொடிக்கொருமுறை அவள் தன் பேசியை பார்த்தபடி இருக்க அவள் எதிர்பார்த்த நபரிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

“ச்சு…இவங்களுக்கு நான் எப்போதும் முக்கியமில்லை…..”என்று கண்களில் கண்ணீர் உகுக்க தொடங்க,சரியாக அவளின் பேசியில் அவள் எதிர்பார்த்த அழைப்பு,அவள் எடுத்தவுடன்,

“ப்ச்…அழாதனு எத்தனை தடவை சொல்லுறது உனக்கு….நான் பேசுறேன்….நீ கவலைபடாத….”என்றவனின் குரலில் பெண்ணவளின் மனதிற்கு இம்முறை இதத்தை தரவில்லை.

“என்ன பேசப்போறிங்க….ஆங் என்னனு சொல்லுவீங்க நீங்க….எனக்கு ஏற்கனவே வீட்ல ஒருத்தரை பேசிட்டாங்க அதுவும் நான் பிறந்தப்பவே….அவரை தான் கட்டிக்கனும்னு என் அம்மா பிடிவதமா இருக்காங்க….அது என்னோட கடமை மாதிரி அவங்க என்கிட்ட சொல்லி சொல்லி அய்யோ….உங்களுக்கு இது புரியாதுங்க….இது புரியாது…மனசுல ஒருத்தனை சுமந்துகிட்டு என்னை வேறு ஒருத்தரோட….என்னால முடியாது….இன்னைக்கு எனக்கு நீங்க முடிவு சொல்லி தான் ஆகனும்….”என்று தாமரை முடிவாக கூற மறுபுறம் மௌனம் மட்டுமே கிட்டியது.

“பேசமாட்டீங்க….அப்படி தான…சரி இனி நான் பார்த்துக்குறேன்….”என்று கூற,அடுத்த நிமடம்,

“நான் வரேன்….நீ கவலைபடாத…நீ நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது….என்னை நம்புமா….”என்று மறுமுனையில் உள்ள நபர் கூற,

“உங்களை மட்டும் தான் நம்பிக்கிட்டு இருக்கேன்…..”என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டாள்.என்ன தான் தன் மனதில் உள்ளதை தாமரை பேசிவிட்டாலும் அவளின் மனது சமன்படவில்லை மீண்டும் நேற்று இரவு கற்பகம் பேசியதற்கு தான் சென்றது.

நேற்று இரவு எப்போதும் போல் தான் கற்பகம் பேசியில் அழைத்தார்.

“ஹலோ….எப்படிடீ இருக்க….நல்லா இருக்கியா….சாப்பிட்டியா…..”என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.கேட்டுக் கொண்டிருந்த தாமரை எதற்கும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும்,

“ஹலோ…..ஹலோ….ஏய் தாமரை இருக்கியா…”என்று கத்த,

“ம்ம்….இருக்கேன்மா….ஏன் கத்துற….”

“ஏன்டீ கொழுப்பெடுத்தவளே….இங்க நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்…நீ பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்…..”என்று கோபத்துடன் கேட்க,

“ம்ம்…..சொல்லுறதை கேட்டுக்கிட்டு இருக்கேன்னு அர்த்தம்….நீ முதல்ல எல்லா கேள்வியும் கேட்டு முடிக்கவும் பதில் சொல்லுவோம்னு இருந்தேன்….”

“என்ன….”

“ஆமா….இப்ப பதில் சொல்லுறேன் கேட்டுக்கோ…நான் நல்லாயிருக்கேன்…..நான் சாப்பிட்டேன்….”என்று ராகமாக கூற,

“கொழுப்புடீ உனக்கு….”

“கொஞ்சம் இருக்குமா…..பின்ன கற்பகத்தோட பொண்ணு இல்ல…..”என்ற தாமரையின் வார்த்தையில் கற்பகத்திற்கு புன்னகை பூத்தது.

“ம்க்கும் பேச்சை பாரு…..உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கூப்பிட்டேன்…..இன்னும் இரண்டு மாசத்துல கண்ணாவுக்கு கல்யாண யோகம் வருதுனு அகிலா சொன்னா….அதான் சின்னதா நிச்சியம் மட்டும் வச்சிடலாம்னு யோசிக்கிறோம்….அதனால அடுத்த வாரம் உனக்கு லீவ் இருக்குமா….”என்று கேட்க,மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த தாமரைக்கு மூளை மறத்த நிலை.

“தாமரை…தாமரை….”என்று கற்பகத்தின் கத்ததலில் நிகழ்வுக்கு வந்தவள்,

“ஆங்….என்னம்மா படிப்பு முடிக்கிற வரைக்கும் இதெல்லாம் வேண்டாம்னு சொன்ன….இப்ப….”என்று அடுத்த வார்த்தைகளை முடிக்காமல் மென்னு விழுங்க,

“அதான்டீ…கல்யாணம் படிப்பு முடிஞ்சு தான்….இது சும்மா சின்னதா நிச்சயம் மட்டும் தான்…அகிலா பேசிக்கிட்டு இருந்தா நான் தான் இப்படி பண்ணிக்கலாம்னு சொன்னேன்….அவளும் சரி தாமரைக்கிட்ட கேளுங்கனு சொன்னா….”என்று கூற,

“அத்தானுக்கு தெரியுமா….”என்று நம்ப முடியாமல் கேட்டாள் தாமரை.அவளுக்கு ஒரளவுக்கு நம்பிக்கை இருந்தது அமரன் இதற்கு சம்மதிக்க மாட்டான் என்று.

“தெரியாம…எல்லாம் அகிலா சொல்லிருப்பா….”என்று தாமரையின் கணிப்பை முற்றிலுமாக உடைத்துவிட்டார் கற்பகம்.

“அது…அது வந்துமா….நான் இன்னும் இரண்டு நாள் கழிச்சு சொல்லுறேன்…”என்று கூற,

“ஏன் என்ன வேலை இன்னைக்கே சொன்னா என்ன…”என்று மறுமுனையில் கற்பகத்தின் குரல் கண்டிப்பாக மாறத்துவங்க,இனி தாயிடம் பேசி பயனில்லை என்று புரிந்தது தாமரைக்கு,

“ம்மா….எனக்கு ஒரு கிளாஸ் டெஸ்ட் சொன்னாங்க…அது என்னைக்குனு கேட்டுட்டு நான் சொல்லுறேன்….அதுக்குள்ள சண்டைக்கு நிக்காத….எனக்கென்ன நான் லீவ் போட்டாலும் அத்தானுக்கு விஷயம் தெரிஞ்சிடும் அப்புறம் உனக்கு தான் பிரச்சனை பார்த்துக்கோ….”என்று எதை கூறினால் தாய் அமைதியாவார் என்று கூற அது சரியாக வேலை செய்தது.

“சரி சரி…பார்த்துட்டு சொல்லு….வைக்குறேன்….”என்று வைத்துவிட,இங்கு தாமரை தலையில் கை வைத்தவள் அடுத்த நொடி அழைத்துவிட்டாள் தன்னவனுக்கு அழைத்து அனைத்தையும் கூற அவனோ எப்போதும் போல் நான் உன் அம்மாவிடம் பேசுகிறேன் என்று கூற,

“எங்க அம்மா இதுக்கு ஒரு காலமும் சம்மதிக்க மாட்டாங்க…நீங்க பேசறது வேஸ்ட்….உங்களுக்கு நான் வேணும்மனா….நீங்க நான் சொல்லுற மாதிரி என்னை ரிஜிஸ்டர் மேரஜ் பண்ணிக்கிட்டு தான் பேசனும்….”என்று தீர்மானமாக கூறிவிட்டாள்.

செல்வத்தின் வீட்டில்,

காலை தன் மகன் தன்னை அழைப்பான் என்று காத்துக் கொண்டிருந்த செல்வத்திற்கு ஏமாற்றம் பிஞ்சியது அவன் அழைக்காமல் இருக்க ஒருகட்டத்தில் தானாகவே அவனின் அறைக்கு சென்றுவிட்டார் செல்வம்.நிமலனின் அறையை தட்ட,

“யாரு….”

“நான் தாப்பா….”

“ஆங்…அப்பா….ஒரு டூ மினிட்ஸ்….”என்று கூறிவிட்டு இரண்டு நிமடம் கழித்து கதவை திறந்தான் நிமலன்

“என்னப்பா….காலையிலேயே வந்திருக்கீங்க….”என்று கேட்க,செல்வத்துக்கு சற்று ஏமாற்றமாக போய்விட்டது.

“உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னே நிமலா மறந்துட்டியா….”என்று கேட்கவும் தான் நிமலனுக்கு நேற்று தந்தை கூறியது நியாபகத்திற்கு வர,

“அச்சோ சாரி….சாரிப்பா….நான் மறந்தே போயிட்டேன்….”என்றவனின் முகமே சற்று சோர்ந்து தான் காணப்பட்டது.

“என்னப்பா ஏதாவது பிரச்சனையா….”என்று செல்வம் கேட்க,

“இல்லப்பா….இது வேற நீங்க சொல்லுங்க….”என்றவனின் கைப்பேசி அழைக்கவும்,

“ஒரு நிமிஷம்ப்பா…”என்று அழைப்பை ஏற்று பால்கனியில் நின்று பேச,செல்வம் அமைதியாக அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அவனின் மேஜையில் ஒரு புகைப்படம் திருப்பி வைக்கப்பட்டிருக்க அதை எடுத்து பார்த்தவரின் முகம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது அது தீர்த்தாவின் சிறுவயது புகைப்படம்.

“நான் நினைச்சேன்….என் மகனை….”என்றவர் மகனிடம் ஒற்றை வார்த்தை கேட்டுவிடுவோம் என்று நினைத்து புகைப்படத்தை திரும்ப அதே நிலையில் வைத்துவிட்டார்.அந்த நேரம் சரியாக உள்ளே வந்த நிமலன்,

“என்னப்பா….என்ன விஷயம்….”என்று கேட்டபடி வர,

“ம்ம்…அதான் நான் பார்த்துட்டேனே….உன்னோட வருங்காலத்தை….எனக்கு ரொம்ப சந்தோஷம்ப்பா…..”என்று மேஜையின் மீது புகைப்படத்தின் மீது கண்ணைக்காட்டி அவர் கேட்க,நிமலனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தன் விருப்பத்தை எப்படி தந்தையிடம் கூறுவது என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு தன் தந்தையே பார்த்துவிட்டு கேட்கவும் அத்தனை சந்தோஷம்.

“அது நானே இது பத்தி எப்படி பேசலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்….நீங்களே பார்த்துட்டீங்க….”என்றவன் முகமும் வெட்க புன்னகை புரிய,

“இனி நான் பார்த்துக்குறேன்டா….நீ எதுக்கும் கவலை படாத….”என்று கூற,

“எனக்கு தெரியும்ப்பா….நீங்க இதை தான் சொல்லுவீங்கனு…”என்றவன் மேலும் பேசும் முன் மீண்டும் கைபேசி அழைக்க,

“சரி நீ பாரு….நான் அப்புறம் வரேன்…”என்று விட்டு மகனின் அறையில் இருந்து வெளியேறினார் செல்வம்.தந்தை வெளியேறியவுடன் அழைப்பை ஏற்ற நிமலன்,

“ஓய் லோட்டஸ்….ஒரு சந்தோஷமான விஷயம் வந்து சொல்லுறேன்….”என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு மேஜையின் மற்றொரு முனையில் இருந்த புகைப்படத்தை எடுக்க அதில் சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள் தாமரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!