Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 15.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 15

உன் கண்கள் சிந்தும்

காதலை மட்டுமல்ல

உன் உதடுகள் சிந்தும்



Advertisement

வார்த்தைகளைக் கூட

சேகரிப்பேன் நான்!!!

 

Advertisement

“சொல்றேன், எல்லாத்தையும் சொல்றேன். அன்னைக்கு நான் எங்க பாட்டியை பாக்க போகவே இல்லை. அன்னைக்கு நான் காணாம போனதுக்கு இவன் தான் காரணம்”, என்றாள் தேன்மொழி.

Advertisement

 

“தேனு நீ என்ன சொல்ற?”, என்று கேட்டார்கள் மதியழகனும் தர்மதுரையும்.

 

Advertisement

“உன்னையும் இவன் கடத்துனானா மா?”,என்று கேட்டார் ஒரு பெரியவர்.

 

“இல்லை, நானா தான் அவனை பாக்க போனேன்”

 

“ஏம்மா, எதுக்கு இப்படி குழப்பிக்கிட்டு இருக்க? உன்னோட அப்பா பெரியப்பா உன் மாமனார் எல்லாருமே இந்த ஊர்ல பெரிய மனுசங்க. அவங்களே தீர்ப்பு சொல்ல வேண்டிய இடத்தில் இருக்குறவங்க. இன்னைக்கு இந்த பொண்ணால ஒதுங்கி இருக்காங்க. நீ சொன்னா தான் எங்களுக்கு உண்மை என்னன்னு தெரியும்?”

 

“நான் எல்லாத்தையும் சொல்லிறேன். எனக்கு கதிர் அத்தானை தான் சின்ன வயசில் இருந்து பிடிக்கும்”, என்று அவள் சொன்னதும் கதிர் அவளை திகைத்து போய் பார்த்தான். பின் “எங்க கல்யாண வாழ்க்கையை யாரும் எதுவும் சொல்லிரக் கூடாதுன்னு நினைச்சு இப்படி சொல்றா?”, என்று எண்ணி அவள் பேச்சைக் கவனித்தான்.

 

“எங்க வீட்ல இவனை நிச்சயம் செஞ்சது எனக்கு பிடிக்கலை. அப்ப இவனைப் பத்தி எனக்கு தெரியவும் செய்யாது. எங்க வீட்ல இவனை பிடிக்கல, கல்யாணம் வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன். யாரும் கேக்கல. அப்ப தான் ஒரு நாள் கீதா என்கிட்ட வந்து ராஜேந்திரனுக்கும் என்னை பிடிக்கலைன்னு சொன்னா. கல்யாணத்தை நிறுத்த பிளான் செய்ய என்னை பண்ணைக்கு வர சொன்னான்னும் சொன்னா. அவ கிட்ட வேணும்னா கேளுங்க”

 

“ஏம்மா கீதா, உங்க அக்கா சொல்றது உண்மையா மா?”

 

“ஆமா, இவன் தான் உங்க அக்காவை வர சொல்லு. கல்யாணத்தை நிப்பாட்ட அவ கிட்ட பேசணும்னு சொன்னான். ஆனா அவன் பிளான் எனக்கும் தெரியாது”, என்று அழுது கொண்டே சொன்னாள் கீதா.

 

“தேன்மொழி, நீ மேல சொல்லு மா”

 

“அன்னைக்கு எங்க பண்ணைக்கு போனப்ப, நான் நினைச்ச மாதிரி நல்லா தான் பேசிட்டு இருந்தான். திடீர்னு என்னை அடிச்சு மோட்டார் ரூம்ல கட்டி போட்டுட்டான். அதுவும் ஒரு குடிகார நாயை என் கூட இருக்க வச்சிட்டு போய்ட்டான். அடுத்த நாள் இப்ப கீதா வை நினைக்கிற மாதிரி என்னையும் எல்லாரும் நினைக்கணும்னு இப்படி செஞ்சான். ஆனா அந்த நேரத்துல அத்தான் வந்து என்னைக் காப்பாத்தி பாட்டிக் கிட்ட கூட்டிட்டு போனாங்க. அப்ப தான் என் காலுல சுளுக்கு விழுந்துச்சு”

 

எல்லாரும் பதறிப் போனார்கள். “தேனு நீ சொன்னதெல்லாம் உண்மையா மா?”, என்று கேட்டார் தர்ம துரை. “ஆமா பெரியப்பா, இது தான் நடந்தது”

 

“இதை எதுக்கு நீ முன்னாடியே சொல்லலை தேனு?”, என்று கேட்டான் கண்ணன்.

 

“அண்ணே, என்னை ஏதாவது எல்லாரும் சொல்லுவாங்கன்னு கதிர் அத்தான் மறைச்சிட்டாங்க. எனக்கு சொல்ல சந்தர்ப்பம் அமையலை. எனக்கு இவன் கூட நடக்க இருந்த கல்யாணம் நின்னா போதும்னு நினைச்சிட்டேன்”

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“என்ன சோலையப்பா இதெல்லாம்? இதெல்லாம் உனக்கு தெரிஞ்சு நடக்குதா? உன் மகன் செய்கையை பாத்தியா?”

 

“அதெல்லாம் ஒண்ணும் இருக்காதுங்க. தேன்மொழி பொய் சொல்றா. என் மகன் இப்படி எல்லாம் செய்ய மாட்டான்”, என்றார் சோலையப்பன்.

 

“பொய் சொல்லாதீங்க. நான் சொன்னது தான் நிஜம். எங்க பெரியப்பா அப்பாவுக்கு கிடைக்கும் மரியாதை இவனோட அப்பனுக்கு கிடைக்கலைன்னு தான் இப்படி செஞ்சான். அவங்களை எல்லாம் என் காலுல விழ வைப்பேன்னு சொன்னான்”,என்றாள் தேன்மொழி.

 

“ஏப்பா, கதிர் உன் பொண்டாட்டி சொல்றது எல்லாம் உண்மையா?”

 

“ஆமா, இதுக்கு என் நண்பர்களும் சாட்சி. அது மட்டும் இல்லை. முத்து தான் அந்த சேதுவை அடிச்சி இழுத்துட்டு போனான். எல்லாரும் தேன்மொழியை எதுவும் சொல்லக் கூடாதுன்னு தான் நான் எல்லாத்தையும் மறைச்சேன். கீதா மேல எந்த தப்பும் இருக்காது. அப்படி தானே கீதா?”,என்று கேட்டான் கதிர்.

 

“ஆமா கதிர் அத்தான். நேத்து அப்பாவை தோட்டத்துல பாத்துட்டு வரும் போது இவன் தான் என்னை கடத்துனான். எங்களுக்குள்ள எதுவுமே நடக்கலை. ஆனா என்னை யாருமே நம்பலை”, என்று அழுது கொண்டே சொன்னாள்.

 

ரேகாவும் துரைராசுவும் தர்மசங்கடமாக மகளைப் பார்த்தார்கள். அவள் அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை.

 

“திட்டம் போட்டு தான் இந்த ராஜேந்திரன் செஞ்சிருக்கான். அவனை போலீஸ்ல தான் பிடிச்சி கொடுக்கணும். ஆனா நம்ம ஊருக்குள்ள போலீஸ் எல்லாம் வர வேண்டாம். சோலையப்பன் குடும்பத்தையே ஊரை விட்டு தள்ளி வைக்கிறோம். இனி அவன் குடும்பத்துக் கூட யாருக்காவது தொடர்பு இருந்தா அவங்களையும் தள்ளி தான் வைக்கணும். ஏம்மா ரேகா உன் அம்மா குடும்பத்துக் கூட நீ பேசுவியா”, என்று கேட்டதும் “அவ அப்படி பேசினா, அன்னையோட அவ கழுத்துல கிடக்குற தாலியை அத்து அனுப்பிருவேன்”, என்று அவளுக்கு பதிலாக பதில் சொன்னார் துரைராசு.

 

ராஜேந்திரன் குடும்பம் அங்கிருந்து சென்றது. மரியாதையை விலை கொடுத்து வாங்க நினைக்கும் அவர்களுக்கு இது தேவை தான் என்று ஊரே பேசியது.

 

“இவ்வளவு நடந்த அப்புறம் என் மகளை யாரு கட்டிக்குவா? எதுவும் நடக்கலைன்னாலும் ஊருல உள்ள நாக்கு ஆயிரம் பேசுமே”, என்று அழுதாள் ரேகா.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“அந்த அத்தை சொல்றது சரி தான். கண்டிப்பா உண்மையை எல்லாருக்கும் விளக்கினாலும் ஊருல சில பேர் தப்பா தான் பேசுவீங்க. அதனால தான் நான் தேனை பத்தி வெளிய சொல்லலை”, என்றான் கதிர்.

 

“ஆமா கதிர் இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். நரம்பில்லாத நாக்கு என்ன வேணும்னாலும் பேசும். அந்த பேச்சு இந்த பிள்ளையோட உயிரை குலைச்சிற கூடாது. ஏப்பா துரைராசு நம்மளுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் இந்த பிள்ளைக்காக கேக்குறேன். கீதாவை என் ரெண்டாவது மகனுக்கு இப்பவே கட்டிக் கொடுக்குறியா?”, என்று கேட்டார் மதியழகன்.

 

அடுத்த நொடி அவர் காலில் ரேகாவும், துரைராசுவும் விழுந்தார்கள். தினேஷோ வானத்தில் பறப்பது போல உணர்ந்தான். பழம் நழுவி பாலில் விழாமல் அவன் வாயில் விழுந்தது போல இருந்தது.

 

தன்னுடைய அப்பாவை இறுக்கி அனைத்து உம்மா கொடுக்க தோன்றியது அவனுக்கு. அதை உணர்ந்த செல்வா “கொஞ்ச நேரம் நல்ல பிள்ளையா இருண்ணா. அப்ப தான் உன் காதல் நிறைவேறும். உணர்ச்சி வசப் பட்டு காரியத்தைக் கெடுத்துராத”, என்றான்.

 

அவன் சொன்னதைக் கேட்டு அசடு வழிந்தாலும்

“இவனுக்கு எப்படி தெரியும்? இந்த தேனு இவன் கிட்ட சொல்லிட்டாளா?”, என்று எண்ணியவன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டான்.

 

“அப்படி வச்சிக்கோ அண்ணா, இப்ப தான் பாவ பட்ட பையன் மாதிரி இருக்குற”

 

“உனக்கு எப்படி டா தெரியும்? இந்த தேனு உளறிட்டாளா?”

 

“அதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும் டா அண்ணா, நீ கல்யாண மண்டபத்துல ஊத்து ஊத்துன்னு ஊத்துன ஜொள்ளை வீடியோல பாத்தேன்”

 

“ஹி ஹி”

 

“உனக்குள்ள ஒரு காதல் மன்னனா? நம்ப முடியலை டா. எப்படியோ உன் காதல் இவ்வளவு சீக்கிரம் சக்சஸ் ஆகும்னு நினைக்கல. அங்க கவனி”, என்று செல்வா சொன்னதும் அவர்கள் பேசுவதை கவனித்தான் தினேஷ்.

 

“அப்புறம் என்ன மாமா? சித்தப்பாவுக்கு சம்மதம் தான். இப்பவே தினேஷ் கீதா கல்யாணத்தை செஞ்சி வச்சிறலாம். அவ படிப்பு முடியுர வரைக்கும் அவ வீட்லே இருந்துட்டு அப்புறம் நம்ம வீட்டுக்கு வரட்டும்”, என்று தீர்வு சொன்னாள் தேன்மொழி.

 

“ஐயோ கலக்குற தேனு. அண்ணின்னா அண்ணி தான். எல்லா ஜென்மத்துலயும் என் கதிர் அண்ணனுக்கு நீ தான் பொண்டாட்டியா வரணும்”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான் தினேஷ்.

 

“கதிர் நீ என்னப்பா சொல்ற?”, என்று கேட்டார். “எனக்கும் அது தான் சரின்னு தோணுதுப்பா”, என்று அவன் சொன்னதும் வேணியைப் பார்த்தார் மதியழகன்.

 

“என்னோட ரெண்டாவது மருமகள் கீதா தான்”, என்று சொன்ன வேணி அவளை தோளோடு தோளாக அணைத்துக் கொண்டாள்.

 

“எதுக்கும் நம்ம தினேஷ் கிட்டயும் ஒரு வார்த்தை கேக்கணும் அண்ணே”, என்று சொன்ன சகுந்தலா “தினேஷ் உனக்கு சம்மதமாப்பா?”,என்று கேட்டாள்.

 

“எனக்கு சம்மதம் அத்தை”, என்று சிறு வெட்கத்துடன் சொன்னான் தினேஷ்.

 

“டேய் அண்ணா நீ வெக்க படும் போது அவ்வளவு அழகா இருக்க டா. அண்ணா லட்டு திங்க ஆசையா?”, என்று அவன் காதில் முணுமுணுத்தான் செல்வா.

 

“எதுக்கும் பையன் கிட்ட நல்ல கேட்டுக்கோங்கப்பா. நாளைக்கு எதுவும் சுடுசொல் அந்த பிள்ளை மேல விழுந்துற கூடாதே”, என்று கூட்டத்தில் உள்ளவர் குரல் கொடுக்கவே “எவன்யா அது? அந்த பிள்ளையை தப்பா பேசுன உடனே பாஞ்சிட்டு வந்தான் யா என் மகன். அவன் தானே அவளை முதலில் விசாரிக்க சொன்னது. கீதாவுக்கு ஏத்த ஜோடி அவன் தான்”, என்று மற்றொரு ஆள் சொன்னார்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அப்போது யாரும் அறியாமல் ஓரக் கண் கொண்டு தினேஷைப் பார்த்தாள் கீதா. தர்மதுரை ராஜதுரை அனைவரும் புன்னகையுடன் தலை அசைக்கவே “இது உன் தாத்தா என் கழுத்துல கட்டின தாலி, இதை என் பேத்தி கழுத்துல கட்டு பேராண்டி. உங்க தாத்தா ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும்”, என்று சொல்லி தன் முந்தானையில் முடிந்திருந்த தாலியை தினேஷ் கையில் கொடுத்தாள் சண்முகம்மாள்.

 

ஊர் மக்கள் கூடியிருக்க சொந்த பந்தங்கள் நிறைந்திருக்க சூரியன் சாட்சியாக கீதா கழுத்தில் தாலியைக் கட்டினான் தினேஷ். தலை குனிந்து அவன் தாலியை ஏற்றவளுக்கு உடல் முதல் உள்ளம் வரை சிலிர்த்தது. ஆனால் அவனை மறந்தும் நிமிர்ந்து பார்க்க வில்லை.

 

“சரி ரேகா, என் மருமகளை பத்திரமா பாத்துக்கோ. பிள்ளை நைட்டு முழுக்க தூங்கிருக்க மாட்டா. அழுதுட்டே இருந்துருப்பா போல. வீட்டுக்கு கூட்டிட்டு போ”, என்றாள் வேணி.

 

“சரி அண்ணி”, என்று சொல்லி கீதா கையை பற்றினாள் ரேகா. அடுத்த நொடி அவள் கையை வெடுக்கென்று தட்டி  விட்ட கீதா அடுத்த நிமிடம் போய் நின்றது மதியழகன் முன்பு தான்.

 

அனைவரும் குழப்பமாக அவளைப் பார்க்க “மாமா, நான் உங்க வீட்டு மருமகள் தானே? என்னை உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிருங்க. அத்தை சொல்லுங்க அத்தை. நான் என் வீட்டுக்கு போக மாட்டேன்”, என்று அழுது கொண்டே சொன்னாள் கீதா.

 

அதில் ஏற்கனவே மலர்ந்திருந்த தினேஷ் முகம் மேலும் மலர்ந்தது.

 

“அண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா?”, என்று கேட்டான் செல்வா. ”ஸ், கொஞ்ச நேரம் சும்மா இரு குஞ்சுசுசு‌”, என்று அவனை வெறுப்பேற்றவே அதை அழுத்தி சொன்னான் தினேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!