Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மீண்டும் ஒருமுறை -8

அடுத்த இரண்டு நாட்கள் வேலினி தொழில் பற்றிய சிந்தனை இன்றி அமைதியாகவே இருந்தாள். குரு இரண்டு நாட்களில் சொல்லும் பதிலில் அனைத்தையும் முடிவு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

இதற்கு இடையில் கல்லூரியில் ஞாயிறு புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருந்தது. ஆனால் வேலினி தந்தையையோ பாட்டியையோ அங்கு அழைத்துச் செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் இருவருக்கும் ஒருமுறை முழு பரிசோதனை செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

அதற்கு அவர்களை எப்படி அழைத்துச் செல்வது என்று யோசனை ஓடியது. கூடவே அதற்கு பணம் கட்ட வேண்டி இருக்கும். அந்த பணத்தையும் தயார் செய்ய வேண்டும். அதனால் உடனே அதனை செய்திட இயலவில்லை.

அன்று வேலினி கல்லூரி முடிந்து வீடு திரும்ப பேருந்தில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தருணிகா தன் வீடு இருக்கும் சாலை நோக்கி நடக்க, இவள் தனியே நடந்து வந்து கொண்டிருந்தாள். தந்தையின் கடை இருக்கும் தெருவுக்குள் நுழையும் போதே தூரத்தில் தங்கள் கடைக்கு எதிரே காலியாக இருந்த அந்த கடைக்கு முன்பாக கூட்டமாக இருப்பதை கண்டாள்.



Advertisement

“அச்சச்சோ வேற யாராவது வாடைக்கு வந்துட்டாங்களா?” என்று வேகமாக மனதிற்குள் எண்ணம் தோன்ற, அந்த வேகம் அவள் நடையிலும் தென்பட்டது.

தந்தை கடைக்கு விரைந்து வந்தவள், முதல் கேள்வியாக, அப்பா எதிர்த்த கடையில என்ன ஆச்சு? ஏன் இவ்வளோ கூட்டம்?” என்று கேட்க, தந்தை அவள் அவசரம் புரியாமல், “வாடா, பாப்பா, காலேஜ் முடிஞ்சிடுச்சா? எப்படி போச்சு இன்னைக்கு” என்று கேட்டார் சாவகாசமாக.

ஆனால் அவள் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், “என்னாச்சுப்பா இந்த கடையில என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு? என்று கேட்க,

Advertisement

“அதுவா.. கடைய நம்ம ஐயா வித்துட்டாரு போல இருக்கு” என்று கூறினார் அவர்‌.

Advertisement

வேலினிக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. “என்னது ஐயா வித்துட்டாரா? பழைய கடைய கூட விக்காம உங்களுக்கு லீசுக்கு தான விட்டுட்டு இருக்காரு. அவர் எப்படி புதுக்கடைய வித்தாரு? எனக்கு புரியவே இல்லையே.?”

“அவருக்கு ஏதோ மெயின் இடத்துல ஒரு கடை வாங்கணும்னு ஆசை போல. இந்த கடையை நல்ல விலைக்கு கேட்டு ஒருத்தர் வந்தாராம். அதான் இதை வித்துட்டு அங்க போய் வாங்க போறாரு” என்று கூறவும்

“நமக்கெல்லாம் சொல்லாம எப்படி செய்றாங்க? உங்ககிட்ட அத சொன்னாங்களா?”

Advertisement

“நம்மகிட்ட எதுக்குடா சொல்லணும் நம்மளே அவங்க கொடுத்த கடையில லீசுக்கு இருக்கோம். நம்ம லீசுக்கு இருந்த கடையை வித்தா கூட, நம்ம கேள்வி கேட்கலாம். இதுல நம்ம கேட்க என்ன இருக்கு?” என்று தந்தை இயல்பாக பதிலளிக்க, இவளுக்கு தான் என்ன செய்ய என்று தெரியவில்லை.

இத்தனை நாள் சும்மா இருந்த கடை இப்போது தான் ஒரு திட்டம் தீட்டிய, இரண்டு நாட்களில் இன்னொருவருக்கு சொந்தமாகிவிட்டதே என்று கோபமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

“சரி நான் கிளம்புறேன் பா”, என்று சோகமாக கூறிவிட்டு தலையை குனிந்தவாறு நடக்க ஆரம்பித்தவள், முன்பாக நிழலாட யார் என்று நிமிர்ந்து பார்த்தவள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

ஹாய் குரு, நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. என்ன இந்த பக்கம்?” என்று அவள் ஆச்சரியமாக தன்முன் நின்றவனை பார்த்து கேள்வி கேட்க, ஆறுமுகம் வேகமாக அவள் அருகில் வந்து, “யாரு பாப்பா இது?” என்று கேட்டார்.

எப்போதும் போல் இயல்பான ஒரு குரல் தான் அவரிடம், ஆனால் இவளுக்கு தான் சட்டென்று என்ன சொல்ல என்று தெரிந்திடவில்லை. ஒரு நிமிடம் திணறி போனாள்.

பின்னர் நிதானமாக, “அன்னைக்கு ஃபயர் ஆக்சிடென்ட்-ல எனக்கு உதவி செஞ்சார்ன்னு சொன்னேனே. அவர்தான் இது அதுமட்டுமில்ல அன்னைக்கு டிரஸ் கூட வாங்கி கொடுத்தேரு பா. உங்களுக்கு தான்‌ தெரியுமே? என்று கூறி முடிக்கும் முன்பேஆரம்பித்துவிட்டார் ஆறுமுகம்.

கிட்டத்தட்ட அரை மணி நேரமாக குருவிற்கு நன்றி சொல்லும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். குரு அவரை சமாளிக்க எத்தனை முயற்சி செய்தும் முடியாமல் போக, வேலினிக்கு அவனின் அந்த தவிப்பைக் கண்டு சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். பின்னர் அவள் தான் அவரை சமாளித்தாள்.

அவரை சமாளித்துவிட்டு குருவிடம் திரும்பியவள், “ஆமா என்ன இந்த பக்கம் திடீர்னு சர்ப்ரைஸ்”, என்று அவள் கேட்க, அவன் அதற்கு, “இங்க ஒரு சின்ன வேலை. அதான் வந்தேன்”, என்று கூறினான்.

தந்தை வேகமாக பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று ஒரு தேநீர் வாங்கி வந்து அவனிடம் கொடுக்க, அதை நன்றாக இருக்கிறது என்று கூறியவரே அருந்திய வன், இயல்பாக அவர் காட்டிய இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

மிக இயல்பாக பல வருடம் பழக்கமானவன போல் அவருடன் பேசிக் கொண்டிருக்க, அப்போது மின்சாரம் தடைப்பட்டு, அங்கிருந்து மூவருக்குமே வேர்த்து ஊத்த ஆரம்பித்தது. மூவரும் கடையின் வெளிப்பகுதிக்கு வந்து சற்று காற்றோட்டமாக நின்று பேச ஆரம்பித்தனர்.

“இந்த ஏரியால இப்படித்தான் அடிக்கடி கரண்ட் போகுமா அங்கிள்” என்று அவன் கேட்க, “இல்லப்பா இந்த ஏரியால எல்லாம் இப்படி கரண்ட் போகாது. இந்த கடைக்கு மட்டும் தான் அப்படி. இந்த கடையில வயர் கொஞ்சம் சரியில்ல”

“ஓ அப்படின்னா கரண்ட் பில் உங்களுக்கு ரொம்ப வருமே அங்கிள்”, என்று அவன் இயல்பாகவே கேட்க, ஆமாம் ப்பா. கரண்ட் பில் ரொம்ப தான் வருது. அடிக்கடி இதை ரிப்பேர் பண்றதுலயே பாதி வருமானமும் போயிடுது.

இதனால எந்த பிரயோஜனமும் எனக்கு இல்ல தான். ஆனா இந்த தொழில் தான் எனக்கு தெரியும். இங்கேயே செஞ்சு பழக்கம் ஆயிடுச்சு. இதை மாத்துனா வாடிக்கையா வர கொஞ்ச பெரும் இல்லாம போயிடுவாங்களே. என்ன பண்ண முடியும்? இருக்க தொழில்ல கொஞ்சமாவது காப்பாத்திக்கணும்ல?” என்று எப்போதும் மகள் முன்பு இப்படி சோர்வாக பேசிடாதவர், மூன்றாம் நபரான ஒருவர் வந்து ஏதோ கேள்வி கேட்க சட்டென்று தன் மனதில் இருப்பதை கூறிவிட்டார்.

அதைக் கேட்ட குருவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட, வேலனி எப்படி உணர்வாளோ என்று அவளை தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மன்மோ அவர் வார்த்தைகளை கேட்டு வெகுவாக உடைந்து போனது.

எப்படியோ சமாளித்துக்கொண்டு அமைதியாக நின்றிருக்க, குரு தான் இப்போது அவரிடம், “அங்கிள் எதித்த கடைய நான் தான் வாங்கி இருக்கேன். நீங்க வேணும்னா சொல்லுங்க. நான் உங்களுக்காக அந்த கடைய லீஸ்க்கு விடுறேன். இல்லை னா ரெண்ட்க்கு கூட தரேன் என்று சொல்லவும், “நீங்களா இந்த கடைய வாங்கிருக்கீங்களா? என்று வேகமாக வேலினி கேள்வி எழுப்பினாள்.

“ஆமா நான் தான் வாங்கி இருக்க வேலினி”, என்று அவன் அழுத்தமாக கூற இவளுக்கு ஒரே மகிழ்ச்சியாகிவிட்டது. உடனே தந்தையைப் பார்த்து, “ப்பா அவர் சொல்றது நல்லா ஐடியா ப்பா. நான் கூட இந்த கடைலையே எதாவது ஏற்பாடு பண்ணலாம்னு தான் நினைச்சேன். இப்போ தான் புதுசா ஒரு ஆஃபர் கிடைச்சிருக்கே, ட்ரை பண்ணலாம் ப்பா”, என்று அவள் அவரிடம் கெஞ்சி ஆரம்பித்தாள்.

“அது எல்லாம் வேணாம் பேசாம இரு. அப்பாக்கு தெரியும்” என்று அவளிடம் கூறவிட்டு, “இல்ல தம்பி அதுக்கெல்லாம் நீங்க நீங்க ஏதோ இதுல வருமானம் நல்லா பார்க்கணும்னு தான் அந்த கடையை வாங்கி இருக்கீங்க ன்னு கேள்விப்பட்டேன். எனக்கு லீசுக்கு விட்டால் நீங்க எதிர்பார்க்கிற வருமானம் எல்லாம் கிடைக்காது”

உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க அங்கிள். இது கொஞ்சம் கொஞ்சமா எங்க வீட்டுல சேர்த்து வச்சிருந்த பணம். இதுல கடை மாதிரி ஏதாவது வாங்கி போட்டு அதில் சின்னதா வருமானம் வந்தா கூட போதும், வீட்டிலேயே இது காசா இருக்க வேணாம்னு சொல்லி அம்மா தான் வாங்க சொன்னாங்க.

அதனாலதான் நான் இந்த காசுல இந்த கடைய வாங்கினேன். அம்மாக்கு இதுல இதுல எந்த சின்ன வியாபாரமா இருந்தாலும் சரி தான். அவங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நீங்க எவ்ளோ குடுத்தாலும் நான் வாங்கிபேன். தாராளமா நீங்க இதுல வியாபாரம் பண்ணுங்க” என்றவன், மீண்டும் அவர் பேச ஆரம்பிக்கும் முன்பே,

“அது மட்டும் இல்லாம, இங்க நீங்க தையல் தான் பண்ணனும் இல்ல. இங்க பக்கத்துல ஒரு ஸ்கூல் இருக்கு இல்ல. அதுக்கு ஏத்த மாதிரி இங்க நிறைய ஸ்டேஷனரிஸ் வச்சீங்கன்னா, நல்ல வியாபாரம் நடக்கும் அதையும் முயற்சி பண்ணி பாருங்க”, என்று அவன் இயல்பாகவே வேலினியின் திட்டத்தை தன் திட்டம் போல் கூறினான்‌.

அகவர் அவனை யோசனையாக பார்க்க, வேலினியும் அவரை பார்த்து நிற்க, “இல்லப்பா சரிப்பட்டு வராது என்று விட்டார் அவர் முடிவாக.

“ஆனால் அவன் விடாமல் எதுக்கும் நீங்க யோசிச்சு சொல்லுங்க. இப்போதைக்கு இந்த கடைய லீசுக்கு குடுக்கிற ஐடியா எனக்கு இல்ல. நீங்க எப்ப வேணும்னாலும் கேளுங்க. நான் கண்டிப்பா உங்களுக்கு தருவேன். சரி நான் கிளம்புறேன் அங்கிள். வேலினி பாய்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

வேலினியும் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள். வீட்டுக்கு வந்த பிறகுதான் தந்தையை சமாதானம் செய்து அந்த கடையை ஏற்க வைக்க முடியும். ஆனால் எதற்காக குரு இந்த கடையில் தந்தையும் தையல் கையையும் ஸ்டேஷனரையும் வைக்க சொல்கிறார். தான் இதில் தன் அன்னைக்கு ஹோட்டல் தானே வைக்க வேண்டும் என்று விரும்பினேன்”, என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அவரிடம் பேசலாம் என்று அலைபேசியை எடுத்தாள்.

அதன் பின் தான் அவளுக்கு இதுவரை குருவின் எண்ணை அவள் வாங்கவே இல்லை என்பது அவள் நினைவுக்கு வந்தது. ” எத்தனை தடவை பார்த்து இருக்கிறார் அவர் நம்பர் வாங்கணும் உனக்கு தோணுச்சா? பிரண்டு மாதிரி என்ன…? பிரின்ட் தான்” என்று தனக்கு தானே பேசியவள்,

“சரி மறுபடியும் பாக்கும் போது வாங்கலாம். முடிஞ்ச அளவுக்கு அப்பாவை இந்த கடையை மாற்ற வைக்கவாது கன்வின்ஸ் பண்ணனும். அம்மாவ வேற இதுக்கப்புறம் லோன் எடுக்க சொல்லி ஹோட்டல் வைக்க ஏற்பாடு பண்ணனும்.

கடவுளே முருகா எப்படியாவது என்னை காப்பாத்துப்பா.. நான் செஞ்சு முடிச்சிறனும் எல்லாத்தையும் என்று ஒருமுறை முருகனை வேண்டிக்கொண்டு தூக்கத்தில் அடைக்கலம் ஆனாள்.

மறுநாள் காலையில் வேகமாக ஜானவியை தேடி சென்றவள், முதல் நாள் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஒன்று ஒன்றாக கூறி முடிக்க, ஜானவி அவள் கூறி முடித்ததும், அந்த கடையை பற்றி எதுவும் கேள்வி கேட்காமல்,

“உனக்கு குரு அண்ணா, எதுக்காக இவ்வளவு விஷயம் பண்ணனும் நீ எப்பவாவது யோசிச்சியா வேலினி‌”, என்று கேட்டாள். அப்போதுதான் அவர் எதற்காக தனக்கு இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று வேலினிக்கே தோன்ற ஆரம்பித்தது.

வருவாள்….

மகா ஆனந்த்..✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!