Skip to content
Post Views: 406
4
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து
நிம்மதி ஆச்சு
என் மனம் தானா
பாடிடலாச்சு
Advertisement
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னால
எப்போது உன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால
நாட்கள் வேகமாக செல்வது போல தான் தோன்றியது. அவளது பரீட்சை எல்லாம் முடிந்து ஏற்கனவே பகுதி நேர வேலையாக வேலை பார்த்து கொண்டிருந்த மருத்துவமனையில் இருந்து அப்போது தான் வீடு திரும்பி இருந்தாள்.
குளித்து முடித்து ஹாலில் வந்து அமர்ந்தவளிடம் பாட்டி தான், “இதோட படிப்பு முடிந்துவிட்டதே, வேற எதுவும் படிக்க போறீயா”,என்று சிரித்தபடி கேட்டார்.
Advertisement
அவளோ “எக்ஸாம் முடிஞ்சிருச்சு பாட்டி, இன்னும் ஒன் இயர் ட்ரைனிங் இருக்கு, ட்ரைனிங் முடிச்சா தான் படிப்பு முழுசா முடிஞ்சதா அர்த்தம்., அதுனால இன்னும் ஒரு வருஷம் அமைதியா இருக்கணும்., ட்ரைனிங் முடிச்சா தான் படிப்பு முடிச்சதா அர்த்தம்., பாட்டி என்றாள்.
Advertisement
பாட்டியோ, “இப்ப வேலைக்கு போற, ட்ரெய்னிங் எப்படி போவ”, என்று கேட்டார்.
“பாட்டி, இது எப்பவும் போற பார்ட் டைம் ஜாப் தான். சோ இப்ப கொஞ்ச நாளைக்கு போவேன்., போனா தான் எனக்கு ப்ராக்டிஸ் ஆகும்., அதுக்கு அப்புறம் மொத்தமா ஒரு ஹாஸ்பிடல் போயி நம்ம ட்ரெயினிங்க்கு நிற்கும் போது நாம கரெக்டா இருக்கனும்.,
கவர்மெண்ட் ஹாஸ்பிடல் ல தான் டிரைனிங் இருக்கும், அங்க வொர்க் ஜாஸ்தி இருக்கும், எல்லாத்தையும் சரியா கற்றுக்கொள்ள வேண்டும்., இப்பவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து பார்க்க ஆரம்பிச்சா தான், அவங்க ட்ரெய்னிங்க்கு எந்த ஊர் போடுறாங்களோ அந்த ஊருக்கு போகும் போது அங்க உள்ள ஹாஸ்பிடல்ஸ்ல நம்ம ஒர்க் பண்ண சரியா இருக்கும்”, என்று சொன்னாள்.
Advertisement
பாட்டியோ, “அது சரி பாரு பாரு” என்று சொல்லிக்கொண்டே அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவர்,
“ஆமா இது என்ன அதிசயமா இன்னைக்கு சுடிதார்ல வந்து உக்காந்துட்ட”, என்று கேட்டார்.
“ஹாஸ்பிடல் ல இருந்து வந்தேனா, குளிச்ச உடனே நைட் டிரஸ் போட பிடிக்கல, சோ சுடிதார் மாத்திட்டு வந்துட்டேன்., எங்கேயாவது அப்படியே ரவுண்ட்ஸ் போயிட்டு வரலாமா பாட்டி”, என்று கேட்டாள்.
“ஏன் இப்பதானே ஹாஸ்பிடல் இருந்து வந்த, மறுபடியும் எங்கேயாவது சுத்த போனுமா உனக்கு”, என்று கேட்டார்.
“சுத்துறதுன்னு இல்ல பாட்டி, வீட்டிலேயே சாப்பிட்டு போர் அடிக்கு இல்ல, நைட் டின்னர் வெளியே போலாமா”, என்று கேட்கவும்,
அருகில் இருந்த தாத்தா தான், “நீ பிளான் பண்ணிட்டு தான் டிரஸ் மாத்திட்டு வந்து இருக்க இல்ல”, என்று கேட்டார்.
“அப்படித்தான் போங்களேன், இப்போ இன்னும் டேட்ஸ் கம்மியா இருக்கு, ஏற்கனவே இங்க மேரேஜ் வொர்க் ல பிஸியா போயிட்டு இருக்கு”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,
தாத்தா தான், “ஆமா நீ கல்யாண வேலைன்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது, எங்க உங்க அப்பாவையும், உங்க அண்ணனையும் காணோம்”, என்று கேட்டார்.
“நானும் இப்ப தான் தாத்தா யோசிச்சேன், ரெண்டு பேரும் எங்க”, என்று கேட்டாள்.
அவள் அம்மாவோ
“சென்னையில் உள்ள தெரிந்தவர்களுக்கு பத்திரிகை கொடுப்பதற்காக இருவரும் போனாங்க”, என்று சொன்னார்.
“அப்ப டின்னருக்கு வெளியே போக முடியாதா”, என்று சொல்லும் போதே,
அவள் அம்மா தான், “நான் இட்லி ஊத்துறேன், சாப்பிடு”, என்று சொல்ல.,
“அம்மா தினம் அதே இட்லி தானா”, என்று கேட்டாள்.
“ஹோட்டல் போனாலும் அதே இட்லி தான் இருக்கும்”, என்று சொல்ல,
“ஜஸ்ட் ஜாலியா நம்ம பேமிலி மட்டும் போயிட்டு வரலாமே, அப்புறம் அண்ணன் கல்யாணம் முடிஞ்சப்புறம் அண்ணி வந்துருவாங்க., அவங்க கூட நம்ம பேமிலி தான், ஆனால் அதுக்கப்புறம் அண்ணனை ஓவரா உரிமை கொண்டாட முடியாது, அது நீங்களா இருந்தாலும் சரி, நானா இருந்தாலும் சரி, பாட்டியா இருந்தாலும் சரி,
சோ, அதுக்கு முன்னாடி நம்ம இன்னைக்கு அண்ணனை ட்ரீட் வைக்க சொல்லுவோம்., அண்ணன் செலவில் சாப்பிட்டு வருவோம்”, என்று சொன்னாள்.
“யார் செலவு பண்ணாலும், அது நம்ம வீட்டு காசு தானே”, என்றார்.
“அது எப்படியோ, இன்னைக்கு டின்னருக்கு போறோம், நீங்க இமீடியட்டா அண்ணனுக்கு போன் போடுங்க, அப்பாக்கு போன் போடுங்க, எப்ப வருவாங்கன்னு கேளுங்க., இந்த பிளான சொல்லுங்க”, என்று சொல்லவும்.,
“ஏதோ ஒரு முடிவுல தான் சுத்துற, சுத்து சுத்து”, என்று பாட்டி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
தாத்தா தான் யோசனையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தவர்., “ஏன்மா ட்ரைனிங்கு வேற ஊர் போடுவாங்க., வேற ஹாஸ்பிடல் போகணும்னு சொன்னீயே, அப்படி போட்டா எந்த ஊருக்குமா போடுவாங்க., ஹாஸ்டல் இருக்குமா, இல்ல ஹாஸ்பிடல்ல கோட்ர்ஸ் கொடுப்பாங்களா?”, என்று அவரது கவலையை தெரிவிக்க
அவளும், “தாத்தா குவாட்டர்ஸ் எல்லாம் கொடுக்க மாட்டாங்க, நாம தான் ஹாஸ்டல் பாத்துக்கணும், ஆனா எனக்கு ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம் தாத்தா, என்னை பொருத்தவரைக்கும் பக்கத்துல எந்த ஊர் போடுறாங்களோ, அந்த ஊர்ல நல்ல இடமா பார்த்து குட்டியா ஒரு வீடு பார்த்துடுவோம்., அப்படி வீடு மாதிரி பார்த்தோம்னா எனக்கு வசதியா இருக்கும்.,
சாப்பாடு நானே செஞ்சு சாப்பிட்டுக்குவேன்”., என்று சொன்னாள்.
பாட்டியோ, “யாரு நீ சமைச்சு சாப்பிடுவ, இங்க உங்க அம்மா காபி போட்டு கைல கொண்டு வந்து கொடுக்கனும், சாப்பாடு உனக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செஞ்சு வைக்கிறா”, என்று சொல்லவும்,
“பாட்டி இப்படி எல்லாம் சொல்லக்கூடாது., எனக்கு பிடித்ததை எனக்கு சமைக்க தெரியும்., நான் ஒன்னும் சமைக்க தெரியாதவ கிடையாது., என்ன பிஜி போனதுக்கப்புறம் எனக்கு டைம் இல்ல யூஜி படிக்கும் போது கிடைச்ச அந்த கேப்ல நான் சமைக்க தானே செஞ்சேன்., பார்ட் டைம் வொர்க் பார்த்தாலும் நான் சமைச்சேனா இல்லையா, அத சொல்லுங்க”, என்று சொல்லவும்,
தாத்தா தான், “செய்வமா ஆனா தனியா உன்னை எப்படி விட”, என்று சொன்னார்.
“முதல்ல நமக்கு எந்த ஊர் கிடைக்குதுன்னு பாத்துட்டு அதுக்கப்புறம் தனியா இருக்கிறதா., இல்ல உங்களையும் பாட்டியும் நான் தள்ளிட்டு போறதா ன்னு எல்லாம் முடிவு பண்ணுவோம்”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.
பாட்டியோ அவள் அம்மாவை பார்க்க., அவள் அம்மாவும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.,
“என்னம்மா” என்று அவர் பார்வையை உணர்ந்து கேட்டாள்.
“என்னடி இப்படி சொல்ற, தனியா போய் இருந்து சமைச்சு சாப்பிடுவங்குற., ஹாஸ்டல்ல இருந்தா கூட எதுவும் நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும் ன்னு நான் நம்புவேன்., நீ தனியா போய் சமைச்சு, ம்ஹூம் நீ சமைப்பியா சாப்பிடுவியா வந்த டயட்ல தூங்கிடுவியான்னு நான் யோசிக்க வேண்டியது இருக்குல்ல., அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்”, என்றார்.
“அம்மா எந்த காலத்துல இருக்கீங்க, ஸ்விகி ஸொமேட்டோ எல்லாம் இப்ப எல்லா ஊர்லயும் இருக்கு., எந்த ஊருக்கு போனாலும் எனக்கு செய்ய முடியலன்னா ஆர்டர் போட்டு சாப்பிட்டுக்குறேன் போதுமா., பட்டினியெல்லாம் கிடைக்க மாட்டேன், போட்டோ எடுத்து உங்களுக்கு வாட்ஸ் அப்ல அனுப்புறேன் ஓகேவா., இப்ப திருப்தியா”, என்று கேட்கவும்.,
“நம்பலாமாடி உன்ன”, என்று கேட்டார்.
“நம்புங்கம்மா நம்பிக்கை தான் வாழ்க்கை”, என்று சொல்லவும்,
“நல்ல வாய் மட்டும் அடி, இரு உங்க அப்பாக்கு போன் பண்ணுறேன்”, என்று சொல்லவும்,
“எதுக்கு”, என்றாள்.
“நீ தானே டின்னருக்கு வெளியே போகணும்னு சொன்ன”, என்றார்.
“சூப்பர் மா, போன் பண்ணுங்க எல்லாரும் கிளம்ப ஆரம்பிங்”,க என்று வீட்டில் உள்ளவர்களை அதிகாரம் செய்து கொண்டிருந்தவளுக்கோ மனதிற்குள் சிறு எண்ணம் தோன்றி கொண்டு தான் இருந்தது.,
‘ஐயோ, ஆமா இல்ல எந்த ஊர் கிடைக்கும் தெரியலையே, சரி பார்ப்போம் ஏதாவது தெரிஞ்சவங்க இருக்கிற ஊர் என்றால், அப்படியே போய்க்கலாம்., இல்லன்னா பாட்டி தாத்தாவை கையோட கூட்டிட்டு போய்விடுவோம்’, என்று மட்டும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அன்றைய இரவு உணவை அவள் சொன்னது போலவே வெளியில் சென்று அனைவரும் முடித்துவிட்டு வரும் போது ஆளாளுக்கு கல்யாண வேலைகளை பற்றி பேசிக்கொண்டே வந்தனர்.
இவளோ யோசனையில் வருவதை பார்த்த அண்ணன் தான், “விடு, ட்ரைனிங் எங்க போட்டாலும் பாத்துக்கலாம் அம்மா சொன்னாங்க., அதான் யோசிக்கிறியா”, என்றான்.
“அதுக்கு இன்னும் டைம் இருக்கு, கல்யாணம் முடிஞ்சு த்ரீ வீக்ஸ்ல கிளம்ப வேண்டியது இருக்கும், பார்ப்போம்”,என்றாள் யோசனையோடு,
“நீ ஏன் யோசிக்கிற, எந்த ஊர் போட்டாலும் பாத்துக்கலாம்”, என்று சொல்லவும்,
“எனக்கு யோசிக்கிறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல., இன்னும் டைம் இருக்கு எனக்கு, இங்க ட்ரைனிங் பக்காவா எடுத்துட்டேனா, அங்க போற ஹாஸ்பிடல்ல நல்ல பெர்ஃபார்மன்ஸ் கரெக்டா இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளலாம்., இப்ப வரைக்கும் தனியா டெலிவரி ஹாண்டில் பண்ணல., ஒன்னு சீப் டாக்டர் அல்லது என்னோட சீனியர் டாக்டர் யாராவது கூட இருக்கிற மாதிரி தான் இருக்காங்க, தனியா டெலிவரி ஹாண்டில் பண்ற அளவுக்கு இந்த ஒன் அண்ட் ஆப் மந்த்ல நான் மாறனும்., அப்படின்னா தான் அங்க போய் என்னால கரெக்டா பண்ண முடியும், ஏன்னா கவர்மெண்ட் ஹாஸ்பிடல், அன்ட் பி ஹெச் அப்படிங்கிறது எல்லாம் ஒரு சின்ன தப்புனாலும் பெரிய இஷ்யூ ஆயிரும்., அது ஒன்னு தான் பயம்”, என்று சொன்னாள்.
“இப்போ உள்ள காலத்துல தனியா அனுப்பவே பயமா இருக்குடி”, என்ற அம்மா சொல்ல.,
“மா அது எல்லாம் பயப்படாதீங்க., நான் அதெல்லாம் சேபா இருப்பேன், எனக்கு என்னோட வொர்க் பர்ஃபெக்ட்டா இருக்கணும் அவ்வளவுதான்., அதுதான் யோசனையே”, என்று சொன்னவள்,
“நாளையிலிருந்து எக்ஸ்ட்ரா நான் ஒன் ஆர் டூ ஹவர் எக்ஸ்ட்ரா டூட்டி கேட்டு வாங்குவேன்”, என்று சொல்லவும்.
“சரி சரி பாத்துக்கோ, உன் ஹெல்த்தையும் பாத்துக்கோ”, என்று சொல்ல,
“அதெல்லாம் பாத்துக்குவேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதுபோலவே மறுநாள் ஹாஸ்பிடல் சென்றவள் அவளுடைய சீனியர் டாக்டரிடம் சென்று, “எக்ஸ்ட்ரா டைம் ஒர்க் தர முடியுமா”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
“எக்ஸ்ட்ரா டைமுக்கு எல்லாம் உனக்கு பே பண்ண மாட்டாங்க., ஓடி மாதிரி கொடுக்க மாட்டாங்க”, என்று சொல்லவும்,
“இல்ல மேம் அதெல்லாம் வேண்டாம், என்னோட ப்ராப்பர் டைமிங் மட்டும் சேலரி வாங்கிக்கிறேன்., எக்ஸ்ட்ரா டைம் நான் வாலன்டியரா வந்து பார்க்கிறது”, என்றாள்.
மற்ற சீனியர்களிடம் பெர்மிஷன் வாங்கிய பிறகே “சரி வ”, என்றனர்.
அதுபோலவே அன்றிலிருந்து அவள் கூடுதலாக, ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் என்று இருந்து பார்ப்பது வழக்கமாக இருந்தது.
அப்போது தான் ஒரு நாள் அவள் தோழி, “என்னடி ஹார்ட் லப் டப் ன்னு அடிச்சிட்டா, கண்ணில் படபடன்னு அடிச்சுருச்சா, பட்டாம்பூச்சி பறந்துச்சா., இந்த மாதிரி எதுவும் ஆகுதா”, என்று கேட்டாள்.
“இல்லையே ஏன்”, என்றாள்.
“இல்ல புதுசா நிறைய டாக்டர்ஸ் ஜாயின் பண்ணி இருக்காங்களே., தலைவி வேற எக்ஸ்ட்ரா டைமிங் எடுத்து இங்க உட்கார்ந்திருக்கியே அதுதான் கேட்டேன்”, என்று சொல்லவும்.,
“ஐயே அதெல்லாம் ஒன்னும் வரல”, என்று சொன்னாள்.
அவள் தோழி தான் சிரித்துக்கொண்டே, “ஆனாலும் நீ இருக்க பாரு, இப்படி சொல்லியே எல்லாத்தையும் கழிச்சிட்டு இருக்கியே, ஏன்? உனக்கு யாரையும் பாக்கணும்னு கூட தோணலையா”, என்று கேட்டாள்.
error: Content is protected !!