Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 17

ஜெய்  ஸ்ரீ ராம்

EPI -17

 

சக்திக்கு சுத்தி வளைத்து எல்லாம் பேச தெரியாது, “பிரவீன்  சார் உங்களுக்கும் எனக்கும் எந்த ப்ராப்ளமும் இல்ல,  பட் நீங்க என் கூட பேசுறது இல்லை. ஏன்னு தெரிஞ்சிக்கலாமா, ”



Advertisement

இவன் கேள்வியில் சற்று தடுமாறியவர் “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. “என்று மழுப்ப,

“எதுவா இருந்தாலும்சொல்லுங்க,  என் மேல தப்பு ஏதாவது இருந்தா சரி பண்ணிக்கிறேன்.பீ  பிராங்க் ப்ளீஸ். ”

” ஓகே சார் நீங்க ரொம்ப போர்ஸ்  பண்றதால சொல்றேன். ஃபைனல் இயர் மதுஸ்ரீ கூட  நீங்க பழகுறது எனக்கு பிடிக்கலை. என்று முடிக்க,

Advertisement

என் பொண்டாட்டி கூட நான் பழகுகிறேன். இவனுக்கு என்ன என்று நினைத்தவன் “சாரி கம் அகைன். ”

Advertisement

” சார் எத்தனை தடவை கேட்டாலும் நான் அதையே தான் சொல்வே ன். நீங்க மதுவுடன் க்ளோசா பழகுறது ரொம்ப தப்பு சார், அந்த பொண்ணுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு இல்லையா”,

“நீங்க ஏன் சார் அதை தப்பா நினைக்கறிங்க,  அவங்கள நான் லவ் கூட பண்ணலாம் இல்லையா, ”

கட கட வென சிரித்தவர்” குட் ஜோக் சார், உங்களுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சு  .   உங்க  மனைவி இந்த காலேஜ்ல  ஒன் ஆப் த ஷேர் ஹோல்டர் எனக்கு தெரியும்.என் கண்ணு முன்னாடி தான் உங்க வைப்ப தப்பா பார்த்தான்னு  சுரேஷ் அடி வாங்குனான்.

Advertisement

 

” நீங்க இப்போ அந்த மது  பொண்ணு கூட பழகருத்துக்கு பேரு காதல் இல்லை சார். அதுக்கு பேரு வேற,  ஏன்!!! சார் இந்த காலேஜ்ல வொர்க் பண்றவங்கல இருந்து டைரக்டர்ஸ் வரைக்கும்  இப்படி சின்ன பொண்ணுங்க வாழ்க்கையை கெடுக்குறீங்க,

உங்களக்குனு  கடவுள் ஒரு வாழ்க்கை  கொடுத்து இருக்கான். அத வச்சு சந்தோசமா வாழலாம் இல்லையா,  பணம் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாமா, அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடுறது தப்பு, என்று ஆவேசமாக குரல் உயர்த்தி கத்தி விட்டார்.

ஆனால் மது பொண்ணு சில வானர சேட்டை பண்ணும்.  தவிர…….. ரொம்ப நல்ல பொண்ணு சார். பாவம் அந்த மனோ  வாராவாரம் சனிக்கிழமை  கரெக்டா வந்துடுவான். மது மேல எவ்ளோ பாசம். ஆனா உங்க கூட பழகினத்துக்கு அப்புறம் அந்த பையன் இந்த காலேஜ் பக்கம் கூட வர்றது இல்லை.

இப்படி அநியாயமா ரெண்டு பேரோட வாழ்கைய கெடுக்க பாக்கறீங்களே!!!

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவர் பேசியதை எல்லாம் பொறுமையாய் கேட்டவன். “ம்ம்ம்ம் சரி “என்று அவர் கையில் தண்ணீர் பாட்டிலை திணித்து அருந்த சொன்னான்.

“எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு என்று உங்களுக்கு  தெரியும். அது தெரிஞ்ச நீங்க என் மனைவி யாருனும் தெரிஞ்சு இருக்கணும். மது, மனோ மேல இவ்வளவு அக்கறை வச்சிருக்க நீங்க, என்கிட்டே முன்னாடி சொல்லி இருக்கலாம் இல்லையா,

மதுவை பத்தி தப்பா பேசாதீங்க, அத நான் அனுமதிக்க மாட்டேன், அதோட நாங்க யாருக்கும்  நம்பிக்கை துரோகம் பண்ணவும் இல்லை. ஏன்னா!! மனோ என்னோட தம்பி, மது என்னோட வைப்”  என்று முடிக்க,

பிரவீன் வாயடைத்து போய் நின்றுவிட்டார். “என்……. ன எ….ன்ன சொல்றீங்க சார் மது…….உங்க  வைப்பா, “திரும்ப ஒருமுறை ஆம் என்று தலையசைக்க, “ஆனால் எப்படி சார்”

பாட்டியின் கடைசி ஆசைப்படி திருமணம் ஆனதை கூறி,  பின்னர் சண்டையை கூறாமல் அக்ரிமெண்ட் ஜாப்  இருந்ததால் அமெரிக்கா சென்றதாகவும் அங்கே அக்ரிமெண்ட் முடிந்ததும் ஊர் திரும்பி விட்டதாக கூற,

“சாரி சார் உங்கள மத்தவங்க மாதிரி நெனச்சிட்டேன்”வெகுவாக வருந்தினார் ,

“ஓகே சார் அதை விடுங்க,  டைரக்டர்ஸ் பற்றி சொன்னீர்கள் இல்லையா,  நீங்க பொண்ணுங்களை வார்னிங் பண்ணி இருக்கலாம். இல்லன்னா, இப்படி இவங்க நடந்துக்குற விஷயத்த  மேனேஜ்மென்ட்  கிட்ட சொல்லி  இருக்கலாம்” ,

” அது எல்லாம் எப்படி சார் நான் சொல்ல  முடியும். சுரேஷ்  மட்டும்தான்னா பரவால்ல,  இந்த காலேஜ்  டினே இதுல இருக்கும்போது நான் சாதாரண ஸ்டாப் என்ன பண்ண முடியும்.

“வாட் தினகரனா, சக்திக்கு சதீஷ் மேல் சந்தேகம் இருந்தது ஆனால் தினகரன் இதில் சம்மந்தபட்டிருப்பான்  என நினைக்க வில்லை. “ஆர் யூ சூயர், தினகரன் ஆல்சோ இன்வோல்வ் ”

 

ஆம்  என்று அழுத்தமாய்  தலையசைத்தவர். “அப்படி இருந்தாலும் ஒரு டைம் ட்ரை பண்ணேன்  சார்.

 

நம்ம காலேஜ்ல    ஸ்லீவ்லெஸ்,  ஷார்ட்ஸ்  எல்லாம் போட அனுமதி  கிடையாது. நர்மதான்ற பொண்ணு முன்னாடி வரைக்கும்   சாயம் போன நாலு  சுடிய திரும்பி திரும்பி போட்டுட்டு வருவா,

 

இப்போ  ஸ்லீவ்லெஸ், ஷார்ட்ஸ்னு  ஏதோ பாரின் ரிட்டன் மாதிரி  டிரஸ் பன்றா, அவளுக்கு அம்மா மட்டும் தான். இவ படிச்சி முடிச்சு வீட்டை, தம்பி, தங்கச்சிய பத்துப்பானு அவங்க அம்மா வெயில்ல தோட்ட வேலை செஞ்சி படிக்க வைக்கிறாங்க,

இது பைனல் இயர் டெய்லி வீட்டுக்கு வந்துட்டு போனா  டைம்க்கு  கிளாஸ் அட்டென்ட் பண்ண முடியாது ஹாஸ்டல்ல தங்கிக்ரேணு பொய் சொல்லிட்டு,

நம்ம தினகரன் சார்   கூட லிவிங் ரிலேசன்சிப்ல  இருக்கா சார், இது தெரிஞ்சி நான் அவளை தனியா கூப்பிட்டு அவங்க கூட வெளியில் அப்படி  தங்கறது  தப்புன்னு அட்வைஸ் பண்ணேன்.

அதுக்கு அவ சொன்னா,  “அது என்னோட சொந்த விஷயம் அதில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் யாரோட சொத்தையும் கொள்ளையடிக்கவும் இல்ல, நான் ஏழையாக பிறந்தது என் தப்பு இல்ல,  எனக்கு மத்த பொண்ணுங்க மாதிரி நல்லா டிரஸ் பண்ணனும்,  சாப்பிடனும், நினைத்ததெல்லாம் வாங்கி அனுபவிக்கனும்னு ஆசை இருக்கு.

எனக்கு தெரிஞ்ச வழில  நான் போறேன். அதுல தேவையில்லாமல் தலையிடாதிங்க அப்புறம் சேதாரம் உங்களுக்கு தான்னு”  சொல்லிட்டு போது சார்.

“இவ  ஒருத்தியே இப்டினா மத்தவங்கள பத்தி சொல்லனுமா, தனிமை பெத்தவங்க கூட இல்லாத அசட்டு தைரியம். அவங்களுக்கு எல்லாம் ஒழுக்கம்னு ஒரு விஷயம் இருக்கிறது மறந்து போச்சு போல, இதுல யார சொல்லி நோக,”

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“நம்ம கரஸ் தினகரன் சார் அவரோட அப்பா இருக்கிற வரைக்கும் நல்லா தான் இருந்தார். அவர் இறந்து போனதும் தான், நம்ம இன்னொரு டைரக்டர் சதீஸ் சார் கூட சேர்ந்து  இப்டி மாறிட்டார்.

ரெண்டு பேரோட  wife குடும்பம் ரொம்ப பெரிய இடம் சார் அவங்கள பகைச்சி கிட்டு இந்த ஊருல வாழ முடியாது. இந்த செமஸ்டர் முடிஞ்ச உடனே நான் வேற காலேஜ் மாறலாம்னு  இருக்கேன்.”

” ஏன் பிரவீன் எல்லா பொண்ணுங்களும் விருப்பப்பட்டு இதை செய்வாங்கன்னு நினைக்கிறீங்களா, ஏதோ ஒன்னு ரெண்டு தப்பி செய்யலாம் மத்தவங்க ஏதோ ஒரு கட்டாயத்தில் தான் இப்படி நடந்து இருக்காங்கன்னு தோணுது.

அதை முதல்ல கண்டு பிடிக்கணும்.எனக்கு அதுவரைக்கும் கொஞ்சம் ஹெல்ப்பா இருப்பீங்களா, எந்த பிரச்சனைக்கும் ஆரம்பம் ஒன்று இருக்கும் போது  முடிவும்  இருக்கும் இல்லையா, அதை தான் நான் தேட போகிறேன்.”

“என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க நிச்சயமா, எனக்கும் அக்கா, தங்கச்சி இருக்காங்க சார். ஆனால் இப்போ அந்த சுரேஷ்ஷ இப்டி அடிச்சுடிங்களே !!! நாளைக்கு போலீஸ் கேஸ் ஆக சான்ஸ் இருக்கு சார் . அப்படி இல்லைனா  டைரக்டர்ஸ் கமிட்டில விசாரணை கண்டிப்பா இருக்கும் சார்.

அதுவும் கேம்பஸ்ல வச்சே அடிச்சிருக்கிங்க, இதுல இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்னு யோசிங்க சார்”.

” பத்து  நாள் சஸ்பெண்ட் பண்ணுவாங்களா, எனக்கு அது ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் இந்த வேலைய. மட்டும் நம்பி இல்லை. இந்த பொண்ணுங்க பிரச்சனைக்கு சீக்கிரம் முடிவு கட்டணும். அது தான் இப்போ ரொம்ப அவசரம்”.

இவர்களின் உரையாடலின்  போதே  சக்தியின் போன் சிணுங்கியது மது தான் பத்து முறை அழைத்து விட்டாள்.  ஓகே பிரவீன் டைம் ஆச்சு கெளம்புங்க பாய் என்று கை குடுக்க, அவரும் கை கொடுத்து விட்டு சென்றார்.

அடுத்த நொடியே அழைப்பை ஏற்றவன்  “ஒரு டைம் எடுக்கலனா திரும்ப கூப்டுவாங்கனு தெரியாது. எதுக்குடீ  ஓயாம கூப்டுட்டு இருக்க “என்று அவளிடம் பாய்ந்தான்.

ஏற்காடு சென்று வந்த பின் தன்னிடம் கனிவாக நடந்து கொண்ட கணவன் இப்போது பழைய அய்யனாராக மாறி காட்சியளித்தான்.

“ஒன்னும் இல்லை “என்று  கத்தியவள் வெடுக்கெண்று வைத்து விட்டாள். “இவ ஒருத்தி எப்போ பாரு மனுஷன் டென்ஷன் தெரியாம குழந்தை மாதிரி பன்னிட்டு இருப்பா “என்று வீட்டை நோக்கி வண்டியை கிளப்பினான்.

“டேய் டைம் 9.30 ஆச்சு நீ பாட்டுக்கு வெளில இருக்க, பாவம் உன் பொண்டாட்டி இந்நேரம் பசிச்சு இருக்கும்” என்று அவன் மனச்சாட்சி திட்ட “ம்ம்ம்ம் சரி சரிசீக்கிரம் போறேன், நீ ரிலாக்ஸ் ஆகு” என்று அதை அடக்கினான் ,

அவன்  ஊரில் நுழைய  வேண்டி  மெயின் ரோட்டில் இருந்து வண்டியை   திருப்ப, அங்கே ரத்தினம் மெடிக்கல் ஷாப்பில் இருந்து வந்து கொண்டிருந்தார். பார்த்தும் பேசாமல் போனால் மரியாதையா இருக்காது என நினைத்து வண்டியை நிறுத்தி அவரோடு பேசியவன். “என்ன மாமா யாருக்கு என்ன ப்ரோப்லம் மாத்திரை வாங்கிட்டு போறீங்க, ”

“நம்ம காவ்யாக்கு தான்பா காலேஜ்ல இருந்து வந்ததுல இருந்து உடம்பு அனலா  கொதிக்குது”. என்ன  அவ இன்னைக்கு காலேஜ் வரலையே!!!

என நினைத்தவன்  மனதில் ஏதோ எச்சரிக்கை  தோன்றியது….. “காவ்யா இன்ணைக்கு காலேஜ்க்கு வந்தாளா மாமா, ”

“ஆமாம் பா வந்து இருந்தா,ஈவினிங் அவளோட ப்ரோபஸ்ஸர்  சதீஸ் கிட்ட  தான்  உடம்பு சரில்லனு கால்  பண்ணி இன்போர்ம் பன்னிட்டு வந்தா, ஏன் என்னாச்சு, ”

“ஒன்னும் இல்ல மாமா நான் அவளை பாக்கல அதான் கேட்டேன், வரேன்”என்று தலையசைத்து கிளம்பி விட்டான். இதயம் வேகமாக துடிக்கும்  சத்தம் அவனுக்கே கேட்டது.

காவ்யாவிடம் இருந்து இதை அவன் எதிர்பார்க்கவில்லை. கடந்த இரண்டு நாட்கள் அவள் விடுமுறை எடுத்திருக்கிறாள்.வீட்டிலும் இல்லை, சதீஷ் பேர் அடிப்படுகிறது.

அவளுக்கு அவன் hod கிடையாது. அவனிடம் ஏன் இன்போர்ம் பண்ணனும். எங்கோ வெளியில் சென்று இருக்கிறாள். எங்கே யாரோடு, அதிர்ந்து பேச கூட தெரியாத பெண் இவ்வாறு எல்லாம் செய்வாளா,

மனோவின் சிரித்த முகம் கண்முன்னே தோன்றியது. வெளியில் சொல்லவில்லை  என்றாலும் அவனுக்கு காவ்யா மேல் காதல் இருக்கிறது. காதல் கொண்ட  மனம் இதை தாங்குமா,

என்ன குறை  அவளுக்கு  யாரோ  சில பெண்கள்.வளர்ப்பு சரியில்லை  என்று நினைத்தால் என் குடும்ப பெண்ணா இப்படி. மனம் உலைகளமாக  கொதித்தது.

 

எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை.  வீடு அமைதியாக இருந்தது. அனைவரும் மனோ வீட்டில் இருந்தார்கள் போலும், உடை மாற்றி வர, முகத்தை தூக்கி வைத்து கொண்டு மது டைனிங் டேபிளில்  அமர்ந்து இருந்தாள்.

அவன் அவளை கண்டு கொள்ளாமல் உணவை பரிமாறி கொண்டு அமர்ந்து  அவளுக்கு ஊட்டி விட்டான். மது ஒரு சில நொடி மௌனமாய்  கோபமாக இருப்பது  போல் காட்டி கொண்டவள். சக்தியை ஏறிட்டு பார்க்க அவன் ஏதோ யோசனையோடு இருப்பது தெரிந்தது.

என்ன பிரச்சனை தெரியலயே!வர வர முகமே சரில்ல, அவனை சகஜமாக்கும் பொருட்டு” சின்ன மாமா வீட்டு மாடு கண்ணு போட்டு இருக்கு மாமா, கேர்ள் பேபி தான் என்ன பேரு வைக்கலாம் ”

சக்தி அவளை கண்டு கொள்ளவே இல்லை. அவளுக்கு ஊட்டி விடுவதில் மட்டும் கவனம் இருந்தது. அவன் ஒரு பருக்கை கூட வாயில் வைக்க வில்லை.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

தட்டில்  இருந்து எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டு “என்ன மாம்ஸ் வர வர என்ன கண்டுக்கவே மாட்டேங்கற” என்று  வழக்கமான குறும்புடன்  கண்ணடித்து கேட்க,

யாரோ !!! ஒரு சில பெண்களின் மேல் இருந்த கோபத்தில்,  என்ன பேசுகிறோம் என்று உணரும் முன்பே !!!

“ஏன்!!  எப்போ பாரு உன்ன கொஞ்சி கிட்டே  இருக்கணுமா,  மனுஷனுக்கு வேற வேலை இல்லையா, உங்களுக்கு  எல்லாம் என்னடி வயசாகுது. படிக்கிறது தவிர வேற எல்லாம் பண்றிங்க , “என்று எரிந்து விழுந்து அவ்விடம் விட்டு சென்று  விட்டான்.

 

மது ஏதும் பேசாமல் கண்களில் கண்ணீரோடு விக்கித்து நின்று விட்டால். தன்மேல் என்ன தவறு. இவன் என் புருஷன் தானே !

அப்போ நான் இவன்கிட்ட இப்படி பேசக்கூடாதா, நான் கெட்ட பொண்ணா,  என்று தனக்குத்தானே கேட்டவள். சுய பச்சாதாபத்தில் உணவு கூட உண்ணாமல் அறையில் முடங்கி விட்டாள் . அவன் இரவு அறைக்கு வந்தானா,  வரவில்லையா என்று மதுவிற்கு தெரியவில்லை.

அவள் கண் விழிக்கும் போதே!!!! குளித்து முடித்து கல்லூரி கிளம்பியவன். அவள் முகம் கூட பாராமல் நிலை கண்ணாடியை பார்த்து “எனக்கு வேலை இருக்கு நீ பஸ்ல வந்துரு “என்று கிளம்பி விட்டான்.

இவனுக்கு எப்போ பாரு இதே வேலையா போச்சு. நான் மட்டும் இவன் சொல்ற மாதிரி எல்லாம் கேக்கணும், என்ன ஒரு மனுஷியா கூட மதிக்க மாட்றாங்க என்று உள்ளுக்குள்  மருகியவள்.

நாம என்ன தப்பு செஞ்சோம்.நைட் நம்ம மட்டும் தான் இருந்தோம். உங்களுக்குனு யார சொன்னாங்க என்று தீவிரயோசனையில் இறங்கினாள்

 

மொழி தொடரும்……… .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!