Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyindri Vaazhveno

Neeyindri Vaazhvzaeno 32 1

பகுதி – 32

வீட்டிற்கு வந்த ரிஷிக்கும் சாதனாவிற்கு ம் இடையில் பேச்சே இல்லை… போன்னிலேயே நிறைய நிறையப் பேசி விட்டதால்…. நேராக ரொமான்சில் இறங்கி விட்டனர்.

வீட்டில் வேலை ஆட்கள் கூட இல்லை…. வாயில் காப்பவனைத் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி இருந்தான்.

இரவு முடியாமல் நீண்டு கொண்டே சென்றது. வெகு நாட்கள் கழித்துக் கிடைத்த இனிமையான அனுபவத்தை இருவருமே முடிக்க நினைக்கவில்லை என்பது தான் உண்மை.



Advertisement

இதற்கு மேல் உடம்பில் சுத்தமாகத் தெம்பு இல்லையென்றதும், தான் இருவரும் உறங்க ஆரம்பித்தனர். மறுநாள் முன் மதிய பொழுதில் தான் சாதனாவிற்கு  விழிப்பு வந்தது. அது கூட அவளாக எழவில்லை. வயிற்றைக் கிள்ளிய பசியின் காரணமாகவே எழுந்தாள்.

அவள் எழுந்ததும் ரிஷியையும் எழுப்பி விட்டாள். அவன் எழுந்ததும் மீண்டும் அவளை ஆவலாக அணுக….

“ஐயோ ! நான் இப்ப எதாவது சாப்பிடலைன்னா மயக்கம் போட்டுடுவேன். பரவாயில்லையா….” சாதனா பாவமாகக் கேட்க…. ரிஷி அவளைப் பார்த்துப் பொய்யாக முறைத்தபடி எழுந்து சென்றான்.

Advertisement

இருவரும் வேகமாகப் பல் துலக்கி முகம் கழுவி கீழே வந்தனர். ரிஷி வீட்டில் இருந்த பிரட் பழங்களை எடுத்து வந்து கொடுத்தவன், இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு வர….

Advertisement

“இதெல்லாம் சாப்பிட்டா… எனக்கு வயிறே நிறையாதே….” என்றாள் சாதனா.

ரிஷி செல்லை எடுத்து தன் அம்மாவை அழைத்தான். “அம்மா எனக்கும் சாதனாவிற்கு ம் மதிய சாப்பாடு கொடுத்து விடுங்க. சீக்கிரம் அனுப்புங்க. உங்க மருமகளுக்கு ரொம்பப் பசிக்குதாம். வெளிய கேட்ல செக்யூரிட்டி இருப்பாரு அவர்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க.” என்றதும், ஜோதி அந்தப் பக்கம் சிரித்துக்கொண்டார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

இருப்பதை வைத்துக் கொஞ்சம் உண்டவர்கள், உணவு வருவதற்குள் குளித்து விட்டு வருவோம் என்று மேலே சென்றனர். ரிஷி குளியல் அறையிலும் வைத்து ரகளைச் செய்ய….. இருவரும் குளித்து முடித்து விட்டு வருவதற்கே வெகு நேரம் ஆகி விட்டது.

Advertisement

அதற்குள் வீட்டில் இருந்து உணவும் வந்திருந்தது. வயிறு நிறையச் சாப்பிட்டதும், இருவரும் நன்றாக ஒரு தூக்கம் போட்டு எழுந்தனர்.

மாலை ரிஷியை விரட்டி கிளம்ப வைத்து, சாதனா அவனோடு தன் மாமியார் வீட்டுக்கு சென்றாள்.

“இப்ப கண்டிப்பா அங்க போகனுமா…”

“மதுரையில போய் நாம ரெண்டு பேர் மட்டும் தான இருக்கப் போறோம். ஒழுங்கா வாங்க பாவம் அத்தை நாமை பார்க்கனும்னு நினைப்பாங்க.”

ஜோதிக்கு அவர்கள் இருவரையும் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி. மகன், மருமகளோடும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். வெற்றியும் ப்ரீதாவும் ஷாப்பிங் சென்று இருந்தனர்.

இரவு எட்டு மணி ஆனதில் இருந்தே போவோமோ என ரிஷி நச்சரிக்க… அதைக் கவனித்த ஜோதி இருவரையும் சாப்பிட வைத்தவர், மறுநாள் மதியமும் உணவு அனுப்புவதாகச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

வீட்டிற்குச் சென்று அறைக்குள் நுழைந்த நொடி, ரிஷி சாதனாவை ஆவலாகத் தழுவி இருந்தான்.

சாதனா “என்ன அவசரம் உங்களுக்கு?” என்றதை அவன் காதிலேயே வாங்க வில்லை. நள்ளிரவுக்கும் மேல் இருவரும் சற்று ஓய்வு எடுத்தனர். அப்போதும் சாதனாவை விலகவிடாமல் அவளை அணைத்தபடியே ரிஷி படுத்திருந்தான்.

சிறிது நேரம் சென்று அவன் கண்திறந்து பார்க்க…. சாதனா அவனையே பார்த்துக்கொண்டு படுத்திருப்பதைக் கண்டு, “ஹே உனக்கு டயர்டா இல்லையா…” என அவன் கேட்டதற்கு, சாதனா இல்லையென்று தலையாட்ட…

“அப்ப ஸ்விமிங் போவோமா…” என ரிஷி கேட்டதும், “சூப்பர் ஐடியா….” எனச் சாதனா வேகமாக எழுந்து கொண்டாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

“போன தடவை வாங்கின ஸ்விமிங் டிரஸ் இங்க தான இருக்கும்.” என அவள் அங்கிருந்த அலமாரியை திறந்து தேட…. “இடதுபக்கம் இருக்கு பாரு…” என ரிஷி சொல்ல… சாதனாவும் வேகமாக எடுத்தவள், அந்த உடையைப் பிரித்துப் பார்த்து விட்டு “இது நான் வாங்கினது இல்லை…” என முகம் சுளிக்க….

அவளை ஆர்வமுடன் கவனித்துக்கொண்டிருந்த ரிஷி “இது நான் உனக்கு வாங்கினது. நீ வாங்கினது ஸ்விமிங் டிரஸ் இல்லை… அது சுடிதாரோட இன்னொரு வெர்ஷன். இது தான் ஸ்விமிங் டிரஸ்.” என அவன் அழுத்தி சொல்ல… சாதனா அவனை முறைத்தாள்.

அந்த உடை கவர்ச்சியாக இருக்க…. “நான் இதைப் போட மாட்டேன்.” என்றாள்.

“போடாத…. நான்தான் ஏற்கனவே சொன்னேனே…. டிரஸ் போடலாம்… இல்லை போடாமலும்…” என ரிஷி கண்சிமிட்ட….

“உங்களை…” எனப் பல்லை கடித்தவள், “சரி வந்து தொலைங்க…” என அவன் வாங்கி வந்த ஆடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
இருவரும் மாடிக்கு சென்று உடை மாற்றி விட்டு அங்கிருந்த ஷவரில் நின்று ஒருமுறை குளிக்க…. தாபம் தாங்காமல் ரிஷி சாதனவை அணைக்க வர …

“ரிஷி…. என்ன பண்றீங்க?” என சாதனா அவனைத் தள்ளி விட….

“உன்னோட ஹைட்டுக்கு. இந்த டிரஸ்ல செமையா இருக்க டி…” என்றான்.

“இப்ப நாம ஸ்விமிங் பண்றோமா இல்லையா….” சாதனா கராராக கேட்க….

“பண்ணலாம்… அது பண்ணா இது பண்ணக்கூடாதுன்னு இருக்கா என்ன?” எனக் கேட்டவன், அவன் சொன்னது போலவே.. நீச்சல் குளத்தைக் காதல் மேடையாக்கி அதில் தன் மனைவியோடு செல்ல சீண்டல்களில் ஈடுபட்டான்.

இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை…. இந்த நாள் இருவருக்கும் வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத இனிய நினைவாக இருக்கும்.

மீண்டும் ஒருமுறை குளித்து விட்டு வந்த போது… இரவு முடிந்து விடியலின் தொடக்கத்தில் இருந்தது. இருவருக்குமே பசிக்க…. பாலும் பிரட்டும் சாப்பிட்டு விட்டு படுத்தனர்.

படுத்தது தான் தெரியும், திரும்ப எழுந்திருக்க மதியம் ஆகிவிட்டது. நான்கு மணிக்குப் படக் கம்பெனி துவக்க விழா… நேரத்தை பார்த்து விட்டு அடித்துப் பிடித்து எழுந்த ரிஷி சாதனாவையும் எழுப்பி விட்டான்.

இருவரும் விடியற்காலையில் தானே குளித்து விட்டு படுத்தனர். அதனால் முகம் மட்டும் கழுவிட்டு நேராகச் சென்று சாப்பிட அமர்ந்தனர். ஜோதி இன்று இன்னும் நிறைய உணவு வகைகள் அனுப்பி இருந்தார்.

சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து ஓய்வாக அமர்ந்து கொண்டனர்.

“சாதனா நான் முன்னாடி கிளம்பி போறேன். நீ சரியா நாலு மணிக்கு அங்க இருக்கிற மாதிரி வா….”

“நான் மட்டும் தனியாவா… நானும் உங்களோட வரேன் ரிஷி.”

“நீங்க தான் மேடம் திறந்து வைக்கப் போறது. நீ முன்னாடியே வந்தா நல்லா இருக்குமா…. அந்த டைமுக்கு கெத்தா வா…”

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“போங்க ரிஷி, எனக்குப் பிடிக்கவேயில்லை…” எனச் சாதனா சொன்னதும், தான் படம் எடுப்பது பிடிக்கவில்லையோ என நினைத்து ரிஷிக்கு ஒரு நிமிடம் திக்கென்று ஆகி விட்டது.

“அத்தையைத் திறக்க சொல்ல வேண்டியது தான… என்னைப் போய் நீங்க ஏன் மாட்டி விடுறீங்க.” என்று அவள் சொன்னதும் தான், நிம்மதியாக உணர்ந்தான்.

“நான் படம் பார்த்தா கூடப் பரவாயில்லை…. பாட்டு மட்டும் தான் கேட்பேன்.” என அவன் மேலும் சலிக்க…. அவளைப் பார்த்து ரிஷி சிரித்தான்.

அவள் சொல்வது உண்மை தான். சினிமா பார்க்க அழைத்துக்கொண்டு சென்றால்… படம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்க் கெல்லாம் அவன் மீது நன்றாகச் சாய்ந்து உறங்கி இருப்பாள். அதே பிடித்த பாடல் வந்தால்… விழித்துக் கொண்டு பார்ப்பாள்.

இப்போது கூட அவள் நேகாவை பற்றி எதுவும் கேட்காதது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அவனுக்கு அவளிடம் சில விஷயங்களை விளக்கி விட வேண்டியது இருந்தது. அதனால் அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“சாதனா, நான் படம் எடுக்கக் காசு மட்டும் தான் போடறேன். மத்தபடி நான் ஷூட்டிங் நடக்கிற எடத்துக்குப் போறதோ… இல்லை அதுல நடிக்கிறவங்க கூடவோ… எந்த நேரடி பேச்சு வார்த்தையும் வச்சுக்க மாட்டேன். அதுக்குன்னு ஒரு டீம் போட்டிருக்கேன் அவங்க பார்த்துப்பாங்க. உனக்கு ஒகேவா…”

ரிஷி எப்படிச் சாதனாவிற்கு ப் புரியவைத்து விட வேண்டும் என நினைத்தானோ… அதே போல் அவளும் சில விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பினாள்.

“நீங்க படம் எடுக்கிறது பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை… ஆனா நேகா ஏன்னு தான் புரியலை?”

சாதனா இப்படிச் சொன்னதும் ரிஷி அவளைக் கூர்மையாகப் பார்க்க…. அதைக் கவனித்த சாதனா “என் மேல கோபமா..” என்றாள்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

“இல்லை… நீ எதையும் கேட்காம மனசுல வச்சு புழுங்கி, அது ஒரு நாள் பெரிய பிரச்சனையா வெடிக்கிறதை விட… எதுனாலும் என்னை நேரடியா கேட்டுட்டு… நமக்குள்ள சண்டை வந்தாலும் பரவாயில்லை…. சண்டை போட்டாலும் அதை அப்பப்ப முடிச்சுக்கணும், சரியா…. இப்ப நீ கேட்டதுக்குப் பதில்.”

“நீ தானேடி அன்னைக்குப் புலம்பின… நேகாவோட சாபம் தான் இப்படி ஆச்சுன்னு…..”

“ஆமாம், ஆனா அது ஒன்னு மட்டும் காரணம்னு எனக்குத் தோணலை….”

“உண்மை தான். அது மட்டும் காரணம் இல்லை.” என்றவன் ராஜ்மோகன் செய்ததையும் சொன்னான்.

“நான் சென்னைக்கு வந்ததும், நேகா இதை என்கிட்டே சொல்லி புலம்பினா… ஹிந்தி படத்தை நம்பி, இங்க இருக்கிற தமிழ் படத் தயாரிப்பாளர்களையும் பகைச்சுகிட்டா…”

“அதோட ஏற்கனவே நீ வேற சொன்னியா… இவ என்னைக்கா இருந்தாலும், அவளுக்குப் படம் இல்லாம போனதுக்கு, நாம தான் காரணம்னு, நம்ம ரெண்டு பேரையும் மனசுக்குள்ள வச்சு கறுவிட்டே இருப்பா… அதுதான் பணம் போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு… அவளை வச்சுப் படம் எடுக்கிறேன்.”

“ஆனா அவகிட்ட கண்டிப்பா சொல்லி இருக்கேன். ஒரு படம் மட்டும் தான் உன்னை வச்சு எடுப்பேன்னு. இன்னொன்னு இது  என்னோட தவறுக்கும் பரிகாரம்.”

“தவறு…” என்று எதைச் சொல்கிறான் எனச் சாதனா யோசிக்கும் போதே “அவகிட்ட அவசரப்பட்டுக் காதலை சொன்னது என்னோட தவறும் தான….” என ரிஷி உணர்ந்து சொல்ல… சாதனா அவன் கையைப் பிடித்து மென்மையாக அழுத்தினாள்.

“விட்டுங்க ரிஷி, நாம இதைப் பத்தி இனி எப்பவும் பேச வேண்டாம்.”

“இனி எப்பவும் இதை நினைச்சு நீ வருந்துற மாதிரி நானும் நடந்துக்க மாட்டேன்.” என ரிஷி உறுதி கொடுக்க… சாதனா அவன் மார்பில் சந்தோஷமாக சாய்ந்து கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!