Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 25 2

“முன்னாடி  தான்மா இந்த  ஜென்மத்துல  தப்பு  பண்ண,  அடுத்த ஜென்மத்துல  தண்டனை கிடைக்கும். இப்போ அப்படி எல்லாம் கிடையாது,  ஒருதன்  தப்பு  பண்ணா  உடனே,உடனே கடவுள் திருப்பி கொடுக்குறாரு.

ஒன்னும் செய்யாத  நானே எவ்வளவு  துன்பம்  அனுபவிச்சுயிருப்பேன். தப்பு  பண்ணவனுக்கு  தட்டனை கண்டிப்பா கிடைக்கும் முன்னு ஒரு  ஒருத்தனும் உணர்ந்தா,  எல்லாரும் நல்லா இருக்கலாம்மா”  என்றவள்.

“நான் எவ்வளவு வேதனையோடு அன்னைக்கு திருச்சியில இருந்து விக்ரமுக்கு  கால் பண்ணேன் தெரியுமா..   கடைசியா ஒரு தடவை என் விக்ரம் கிட்ட பேசனுமுன்னு. அன்னைக்கு  போன் பண்ணேன்.அந்த ஞானதுரை தான்  போன் எடுத்து  எப்படி பேசுனான்னு தெரியுமா. அவன் பேசுனத கேட்டு என் நெஞ்சே  வெடிக்குற மாதிரி இருந்தது. அவ்வளவு வேதனை. நான் நம்புனேன் என் சித்தப்பா எனக்கு நல்லது நினைப்பாருன்னு நெனச்சேன் அவர் எனக்கு பண்ணுனத. அவர் வாயால சொல்ல, சொல்ல எனக்கு நெருப்பை அள்ளி போட்ட மாதிரி இருந்துச்சு,சிரிச்சு பேசியே என்   வாழ்க்கையை அழிக்க பார்த்தாரு. பணம், பணத்துமேல உள்ள  ஆசையில அவர் என் விக்ரமை என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தாரு. ஒருதன்ன  குத்தி கொல பண்ணியிரலாம்.  உடனே உயிர் போயிரும்.ஆனா உயிரோட இருக்கும் போதே  அவன்ன வாழ விடமா அவன் வாழ்க்கையை கெடுத்து  நிம்மதியை  கெடுத்து வாழவே முடியாத சூழ்நிலைக்கு தல்லுறது எவ்வளவு வேதனை தெரியுமா. அதை தான் எனக்கு அவர் குடுத்தார். என் வாழ்க்கை அழிச்சு. இரண்டு உயிர் போயி. என் விக்ரம்  ஹாஸ்பெட்டலுல பாதி உயிரா இருக்குறத கேள்வி பட்டு.  என் உயிர் எப்படி துடிச்சுருக்கும்.



Advertisement

நம்பிக்கை துரோகம் மட்டும் யாருக்கும் பண்ண கூடாதுமா.

அவன், அவன் செய்யுறது இப்போ அவனுக்கே திரும்புற காலம் இது…

Advertisement

Advertisement

நம்ம என்ன நல்லது செஞ்சாலும், தீமை செஞ்சாலும் நம்மளை ஒருத்தன் பாத்துட்டு இருக்கான். அவன் இந்து கடவுளோ, இல்லை இயேசுவோ, இல்லை அல்லாவோ, ஏதோ ஒரு சக்தி நம்மல சுத்தி இருக்கு. நம்ம நல்லதே தான் நினைக்கனும். அப்படி நெனச்ச தான். நல்லாதே நடக்குமுன்னு சொல்லி   தான் என்  பிள்ளைகளை  நான் வளப்பேன்”  என்றாள்..

 விக்ரம் மனைவியை பார்த்து “ரொம்ப தேறிட்ட போ”… என்றான்..

Advertisement

“உங்க பொண்டாட்டியா இருந்து இது  கூட பேசலான்ன எப்படி”  என்று சிரிக்க. அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

10  வருடம்  கழித்து….

அம்மா  நான் காலேஜ் போறேன் என்று ஆஷிக்கும், சூர்யாவும்  சொல்லி கிளம்ப..

சிவாக்குட்டி அவளின் ஹை ஸ்கூலுக்கு கிளம்பிகொண்டு இருந்தாள். பல்லவி  நான்காவது பிள்ளைக்கு  ஈஸ்வர் என்று பெயரிட்டிருந்தாள். மகனுக்கு பல்லவி என்றால் உயிர் பல்லவி என்ன சொன்னாலும்  செய்வான் குட்டி விக்ரம்.

சிவாவோ அப்படி  நேர்  எதிர் தந்தை சொல்வதை மட்டும் தான் கேட்பாள்.. பல்லவி ஏதாவது வேலை  சொன்னால் “உங்க சின்ன பிள்ளைகிட்ட சொல்லுங்க. மம்மி நான் செஞ்சாலும் கொற தான்  சொல்லுவீங்க”  என்று பல்லவியிடம் வம்பு பண்ணுவாள்..

அவர்களில்  வீட்டில் குட்டி சண்டை. நிறைய  சந்தோசம் என்று அழகாய் இருந்தது..

அனைவரும் அவர் அவர் கடமையை செய்ய கிளம்ப. ஈஸ்வர் பல்லவியின் முகத்தையே  பார்த்து இருந்தவன். “மம்மா  எனி ஹெல்த் இஷ்சு” என்றான்.

“நத்திங் ஈஸ்வர்  நீ ஸ்கூலுக்கு கிளம்பு”என்று சொல்ல..

“சரிமா” என்றவன்.

நேராக அவன் தந்தையிடம் சென்றவன். “டாடி மம்மா டூ டேச வெரி சேடா இருக்காங்க.. என்னன்னு பாருங்க. நீங்க இன்னைக்கு ஆபிஸ் போக வேண்டாம்”  என்று சொல்லி கிளம்பினான்..

விக்ரமுக்கு  இப்போது தான் ஞாபகம் வந்தது. இரண்டு நாளா என்னை பார்த்து முறைக்குறா. கேட்டா  திட்டுறா. என்ன இவளுக்கு பிரச்சனை என்று ஆபிஸ் கிளம்பாமல் அறையை விட்டு வெளியே வர..

சுந்தர் ஆபிஸ் போக கிளம்பி ரெடியாகி வர. மகன் சாதரண உடையில் வரவும். “என்ன விக்ரம் ஆபிஸ்சுக்கு வரலீயா என்று கேட்க..

“இல்லைப்பா   இன்னைக்கு ஒரு முக்கியமான  ஆளுகிட்ட பேசவேண்டியது இருக்கு. நீங்க கிளம்புங்க. நான் நாளைக்கு வர்றேன்”  என்றான்..

சுந்தர் சாப்பிட்டு கிளம்பவும். வெளிகதவை சாத்திவிட்டு வர..

விக்ரம் பல்லவியை  தேடி பார்க்க. பல்லவி கிச்சனில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள்..

விக்ரம் மனைவியை பின் இருந்து அணைத்துக்கொள்ள.. “விடுங்க என்னை” என்றாள் கோபமாக..

“என்னாச்சு பொண்டாட்டி என்ன கோபம்” என்றான்..

“விடுங்க எனக்கு வேலை இருக்கு”. “எனக்கும் தான் முக்கியம் மான  வேலை இருக்கு அத தான் பாத்துட்டு இருக்கேன்”..

 என்றான்.. விக்ரம்..

“போங்க”  என்றவளின் கண்கள் கலங்க.

 “ஏய் என்னாச்சு டி, ஏன் அழற,” என்றவனை தல்லி விட்டவள். அவர்களின் அறைக்கு சென்று ஏதையோ  தேட..

“என்னடி எனக்கு பதில் சொல்லாமல் எதை தேடுற” என்றான்.

பல்லவி அவள் தேடியது டப்பாவில் இருக்க. அதை எடுத்து விக்ரமிடம் தர..

 பல்லவி  தன்னிடம் ஏதோ தருகிறாள் என்று வாங்கி  பார்த்தவனின் கண்கள் விரிந்தன..

ப்ரக்கன்சி கிட்டில் இரண்டு சிவப்பு கோடுகள் இருக்க.. அதை பார்த்து துள்ளி குதித்தவன்.. “நான்  மறுபடியும் அப்பாவாக  போறேன்”  என்று  சந்தோஷத்தில்  கத்த..

பல்லவி “விக்ரம்”!  என்றாள் கோபமாக.

“இந்த மாதிரி நேரத்துல இப்படி கத்த கூடாது  பல்லவி பேபி” என்று அருகில் வர..

“பேபி, பேபியின்னு சொல்லியே  எனக்கு ஒரு பேபி குடுத்தாச்சு தள்ளி  போங்க” என்று அழுதவளை..

“ஏய் அரவேக்காடு  எதுக்கு இப்போ அழற. சந்தோசமா கொண்டாட வேண்டிய  நேரத்துல ஏன்டி  இப்படி அழுவுற”. என்றான்..

“உங்களுக்கு மூளை எதாவது இருக்கா, நம்ம பிள்ளைக காலேஜ் போறாங்க. இப்போ இப்படி சொன்னா எல்லாரும்  சிரிக்க  மாட்டாங்களா”  என்றவளை..

“யாரு சிரிப்பா?”.   “யாரும் சிரிக்க மாட்டாங்க”  என்றான்..

“எல்லாரும் தான் சிரிப்பாங்க, தோளுக்கு மேல பிள்ளைகள் இருக்காங்க, இப்போ போய், நம்ம பிள்ளை பெத்துகிட்ட”  என்று புலம்பியவளை..

“ஏய் ஏன்டி இப்படி பேசுற, உன் வயசு என்ன”?..

“39” என்றாள்..

“அவன்னவன் இப்பதான் கல்யாணமே  பண்ணுறான். இவ வேற”  என்றவன்..

“அத்தான் பிள்ளைகள் என்ன  நினைப்பாங்க”..

 அவளை பார்த்து சிரித்தவன்.. “அப்பா, அம்மா நம்ம தூங்குனதுக் கப்பறம் இந்த வேலை தான் செய்றாங்கன்னு” என்றவனை..

“சீ” என்றவள்  விக்ரமனை திட்டி ஒரு அடி போட்டவள்”ஒழுங்க  பேசுங்க” என்றாள்..

“இங்க கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை பல்லவி, இது நம்ம  இரண்டு பேரோட  விருப்பம், பிள்ளைகள் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, நான் அவங்க கிட்ட சொல்லுறேன் வா, நாம ஹாஸ்பெட்டல் போலாம்”  என்று  பல்லவியை சமாதானம் பண்ணி ஹாஸ்பெட்டல் அழைத்து சென்று வந்தான்..

பல்லவிக்கு பாரம் குறைந்தது போல் இருந்தது விக்ரம் பேசியது..

விக்ரம் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தவுடனே இன்னும் 8  மாதத்தில் நம்ம வீட்டுக்கு  ஒரு குட்டி பாப்பா  வரபோகுது என்று சொல்ல..

பிள்ளைகள் எல்லாரும் “ஏய்  சூப்பர் டாடி”என்று பல்லவியிடம் சென்று பல்லவியை அணைத்து கொண்டு வாழ்த்து சொல்ல..

பல்லவி தனக்கு வாழ்த்து  சொல்லும் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

விக்ரம் எப்படி என்று கண்களாலே கேட்க..

தூரத்தில் இருந்து கொண்டே பக்கத்தில் வர்ராதீங்க என்று சைகை காட்ட..

“நான்  வராமலா பிள்ளை பெக்க போற”  என்றான்..

பக்கத்தில்  இருந்த  பொருளை  விக்ரம்  மேல் தூங்கி எறிய.

பிள்ளைகள் இவர்கள் இருவரும்  தூக்கி போட்டு  சண்டை போடுவதை பார்த்து சிரித்தனர்.. ஈஸ்வர் மம்மா நானும் விளையாட வர்றேன் என்று  விக்ரம் மேல் தூக்கி போட்டு சிரிக்க.. அப்படி அவங்க அம்மா மாதிரியே வந்து இருக்கான்.. என்று மகன்  தூக்கி போடுவதை கேச் பிடித்தான் விக்ரம்.

8 மாதம், கழித்து பல்லவிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது..

முதலில்  பிறந்த குழந்தையை ஆஷிக்கும், சூர்யாவும் தான் பிள்ளையை வாங்கினார்கள்.. விக்ரம் ஒரு முக்கியமான மீட்டிங்குக்கு வெளியூர் சென்று இருந்தான்..

பல்லவிக்கு   திடிர் என்று இடுப்பு வலி வர. பிள்ளைகளே ஹாஸ்பெட்டலில்  சேர்த்திருந்தனர்..

பைரவியும், செல்லத்துரையும் வயது கூடி விட்டதால் இந்தியாவில் பெரிய மகளுடன்  இருந்தனர்..

விசயம்  கேள்விப்பட்டு விக்ரம் வேகமாக ஹாஸ்பெட்டல் வந்தான்..

ஆஷிக்  விக்ரமனின் மகளை கையில் வைத்திருந்தவன், “டாடி ஏஞ்சல்  பிறந்து இருக்கா” என்று கூறிக்கொண்டே  விக்ரமனின்  வீட்டு  இளவரசியை அவனிடம் தர..

விக்ரமுக்கு  சந்தோஷம்  தாங்க  முடியவில்லை. அவன் பெண் பிள்ளையை தான்  எதிர் பார்த்திருந்தான்.. அதே போல பெண் குழந்தை பிறந்து இருக்க..

ஒரு பொக்கிஷம் போல் அவனின் பிள்ளையை வாங்கி பார்க்க..

அச்சு  அசல்  குட்டி  பல்லவி  போல் இருந்தாள் அவர்களின் வீட்டு தேவதை..

“டாடி அம்மா  மாதிரி  பேபி இருக்குல”  என்றான் சூர்யா..

“ஆமாம்” என்றான்..

பல்லவியை ரூம்பிற்கு அழைத்து வர.

பிள்ளைகள் அனைவரும்  பல்லவியை  சூழ்ந்து கொண்டு “மம்மி  பாப்பா  சூப்பர்  உங்கள மாதிரியே”  என்று சொல்ல..

பல்லவி விக்ரமை பார்க்க, விக்ரம்மோ அவன் கையில்  இருந்த அவள் செல்ல  சீமாட்டியை கொஞ்சிக்கொண்டு இருந்தவன்.. பல்லவியின் முகம்  பாராமல்  இருந்தான்..

ஆஷிக்  பல்லவியை  பார்த்தவன். மம்மி டாடிகிட்ட பேசட்டும் என்று நினைத்தவன்..

“மம்மி  நாங்க எல்லாரும் கீழே  கேன்டின் போய் சாப்பிட்டு வர்ரோம்”  என்று கிளம்ப..

அவர்கள் கிளம்பியதும் கூட தெரியாமல்.. பிள்ளை காலில் முத்தமிட்டு கொண்டு இருந்தவனை.

“ஹலோ விக்ரம்  சார்  இங்கே  ஒருதர் இருக்காங்க. உங்களுக்கு அவங்களை  தெரியுதா”..

“இந்த நேரத்துல என் பொண்ணு மட்டும் தான்  என் கண்ணுக்கு  தெரியுறா  வேற  யாரும் தெரியல”  என்றவனின்  மேல் தலையனை வந்து விழுந்தது..

“ஏய் பாத்துடி  பிள்ளை மேல  பட்டுற போது”  என்றவன்.. பல்லவி அருகில் வர.

“யாரும்  என் பக்கத்தில்  வர  வேண்டாம்,”  என்றவளை..

குழந்தையை  தொட்டிலில் படுக்க வைத்தவன்..

 பல்லவின் அருகில் வந்து. அவளை மெல்ல தூக்கி உட்கார வைத்தவன். பல்லவியை இறுக அணைத்து கொண்டவன். “தாங்யூ டி”, பொண்டாட்டி என்றவன். பல்லவியின் இதழோடு இதழ் ஒட்டி எடுத்தவன். பல்லவியின் தலையில் முத்தமிட்டு அணைத்து கொண்டவன்.. “வெரி ஹாபி பல்லவி” என்றவன்..

குழந்தையை தூக்கி பல்லவியின்  கையில் பூ போல  அவள் மகளை  கொடுத்தவன், “பாரு  நம்ம  தேவதையை” என்றான்..

பல்லவிக்கு  பிள்ளையின் முகத்தை பார்த்து விட்டு  பேச்சு வர வில்லை.

அவள் போலவே  இருந்த  பிள்ளையை பார்த்து கண்கலங்கியவளை தோள்ளோடு அணைத்துக்கொண்டவன்..

“எப்படி  இருக்க பாரு நம்ம வீட்டு கட குட்டி”  என்றான்..

“அப்படியே  என்ன மாதிரி இருக்கா அத்தான்”  என்றாள்..

“தாங்யூ  பல்லவி”  என்றவன். உன்ன மாதிரியே எனக்கு ஒரு தேவதையை  பெத்து கொடுத்திருக்க.. இத விட  இந்த உலகத்துல சந்தோசம்  ஏது  பல்லவி. நம்ம ரெண்டு பேரோட உயிர்  எப்படி இருக்கு பாரு, இவ நம்ம  காதலுக்கு  கிடைத்த  இன்னொரு  பொக்கிஷம்” என்றான்..

பல்லவி  கணவன் பேச்சில் மயங்கி  தோள்  சாய்ந்து இருந்தாள்.

இருவரின் காதல் எல்லை இல்லாதது.. எத்தனை தடங்கல் இவர்கள்  வாழ்வில் வந்தாலும். அதை மீறி இவர்கள்  ஒருவரின், மேல்  ஒருவர்  மீது வைத்த தூய்மையான அன்பே இவர்களை சேர்த்து வைத்தது. இவர்கள் இப்படியே என்றைக்கும்  சந்தோஷமாக வாழ, வாழ்த்தி  விடை  பெறுவோம்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!