Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

பாகம்-12

பேருந்து சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அங்கு ஒரு கம்பியின் மேல் தலை சாய்த்து ஜன்னலின் வழியாக வெளியே பார்வையை வைத்திருந்தாள் வேலினி.

அவள் பார்வை மட்டும் தான் வெளியே இருந்தது. ஆனால் அவள் வேடிக்கை எதுவும் பார்க்கவில்லை. கண்கள் ஒளி இழந்து சோகத்தை ஏந்தி இருக்க, அவள் மனமுழுக்க விடை இல்லாத கேள்விகள் மட்டுமே நிறைந்திருந்தது.

பேருந்தில் கூட்டம் என்பது இல்லாமல் வெறும் பத்து நபர்கள் மட்டும் அங்கிருந்தனர். அதுவும் வேலினி அமர்ந்திருந்த இருக்கையின் முன்னும் பின்னும் இருந்த இருக்கைகளில் அனைத்தும் காலியாக தான் இருந்தது.



Advertisement

ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்று மீண்டும் பயணிக்க தொடங்க, சரி அடுத்த சில வினாடிகளில் அவள் அருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து யாரென்று திரும்பி பார்த்தாள்.

அவன் தான் சிவகுரு. இவனின்றி வேறு யாராக இருக்கப் போகிறது என்று எண்ணிக்கொண்டு மீண்டும் வெளியே பார்க்க தொடங்கி விட்டாள் வேலினி. இவனும் நடத்துனரிடம் பணத்தைக் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்ட பின்பே அவள் புறம் திரும்பினான்.

“எதுக்கு இவ்ளோ கோபம்?” என்றதும் பட்டென்று அவனைத் திரும்பி பார்க்க,

Advertisement

“புரியுது நான்தான் காரணம். இந்த கோபத்திற்குரியவன் நான் தான் எனக்கே புரியுது” என்று சற்று தூய தமிழை கலந்து விளைடயாட்டாக கூறினான்.

Advertisement

“இது கோபத்துக்கு மட்டுமா நீ உரியவன்?” என்று அவள் கோபமாக கேட்டாள். அதாவது அவளின் குழப்பம், சோகம் அனைத்துக்கும் அவன் தான் உரியவன் என்று எண்ணத்தில் அவள் கூற,

ஆனால் அவனோ, “ஆமா. நான் அதுற்கு மட்டும் உரியவன் இல்லை தான். உன் அனைத்துக்கும் உரியவன் நான் தான். அதாவது உன் தாலிக்கு, உன் குங்குமத்துக்கு, உனக்கே உரியவன் நான்” என்று கூறியதைக் கேட்க இவளுக்கு கோபம் தான் வந்தது.

ஆனால் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அமைதியாக கண்களை மூடி தூங்குவது போல் சாய்ந்து கொண்டாள் குருவின் மணவாட்டி வேலினி.

Advertisement

ஆம் வேலினிக்கும் சிவகுருவுக்கும் திருமணம் முடிந்து விட்டது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் சிவகுரு தான் வேலினியை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடும் வேலினியின் சம்மதம் இல்லாமலும். வேலினிக்கு தன் குடும்பத்தினரை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்க்க முடியாமல் போனது. சிவகுரு இடம் தடுத்து பார்க்க சொல்ல அவன் தான் அவளை ஒற்றை காலில் நின்று திருமணமே செய்து கொண்டான்.

இவர்களுக்கு திருமணம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் எதுவும் இருவருக்குள்ளும் சரியாகவில்லை. காதல் கணவனாக அவளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறான் அந்த சிவகுரு.

அவன் தான் சொல்வதைக் கேட்காமல் செய்துவிட்ட காரியத்திற்காக, அவன் மேல் எப்போதும் கோபத்தில் தான் இருப்பாள் வேலினி‌. அதனால் தினமும் ஏதாவது ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டு அவனிடம் சண்டை பிடிப்பாள். சில சமயம் பேசாமல் மௌனியாக இருப்பாள். ஆனால் இன்று அவர்களுக்குள் நடப்பது ஒரு உரிமையான செல்ல சண்டை.

முதல் முறை இவனுடைய கனவு கம்பெனிக்கு வந்த போது இவனிடம் கோபமாக இருப்பதாக கூறினாள், சிறிது நேரத்தில் சமாதானமானவள், மீண்டும் கோபம் என்றாள்.

இப்படி அவள் அவனிடம் மட்டும் காட்டும் அந்த முகம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்றே அவளுக்கு வேதாள குட்டி என்று பெயர் வைத்திருந்தான். இன்று வரை அவள் அவனுடைய வேதாள குட்டியாக இருக்கிறாள்.

அதுவும் அவன் மனைவியான பிறகு முழு உரிமையோடு வேலினி என்பதையே மறந்து விட்டு வேதாள குட்டி என்று தான் அழைப்பது. ஆனால் எப்போதும் அவள் பின் வேதாளம் போல் சுற்றுவது அவன் தான்.

வெளியிலாவது சற்று விலகி நின்று அவளோடும் சுற்றிக் கொண்டிருப்பான். வீட்டுக்குள் சென்று விட்டான் என்றால் அவன் முதுகு மேல் ஏறி ஏறக் கொள்ளாத குறையாக அவளின் முதுகுக்கு பின்னால் அணைத்துவாரே சுற்றி கொண்டிருப்பான்.

இவளும் முதல் முறை எத்தனையோ சொல்லிப் பார்த்தும் அடித்துப் பார்த்தும் ஏன் கோபப்பட்டு என்னென்னமோ செய்து பார்த்தும் அவன் மாறாமல் அவன் செய்வதையே செய்து கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கும் அது பழக்கமாகி விட்டிருந்தது.

இப்பதெல்லாம் அணைப்போடு நிறுத்திக் கொள்வதில்லை. கன்னத்தில் இரண்டு மூன்று முறை முத்தங்கள் கூட கொடுத்து விட்டான். அன்றைக்கெல்லாம் அவளிடம் ஒரு வழி ஆகிவிட்டிருப்பான். அதனால் கொஞ்ச நாட்களுக்கு அடக்கி வாசிப்பவன் மீண்டும், ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு அவளுக்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்து விடுவான். அவ்வளவுதான் அவள் காளியாகவே மாறிவிடுவாள்.

இருக்கையில் சாய்ந்து கொண்ட மனைவியை அமைதியாக இருக்க விடாமல் அவள் இடது கையில் போட்டு இருந்த ஒற்றை வளையலை பிடித்து ஆட்டி விளையாடிக் கொண்டிருக்க, பட்டென்று அவன் கையை தட்டிவிட்டாள்.

உடனே அவன் அவள் மடியில் இருந்த முந்தானையை எடுத்து சுருட்டி மடக்கி விளையாட அவளுக்கு பொறுமையை போய்விட்டது. பட்டென்று கண்களைத் திறந்து அவனிடம், “உனக்கு என்னதான் வேணும்?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்.

அவன், “எனக்கு ரொம்ப போர் அடிக்குது. வீட்டுக்கு போற வரைக்கும் என்ன பண்றது?” என்றான் அப்பாவியாய். “ஈயர் ஃபோன் இருக்கில்ல? காதுல மாட்டிட்டு பாட்டு கேளு” என்றாள். “நீயும் என் கூட கேக்குறியா?” என்றதும் இவளுக்கு கோபம் தான் வந்தது.

இருந்தும் அடக்கி கொண்டு அமைதியாக இருந்தாள். அவன் தன் காது பொறியின் ஒரு பகுதியை அவளிடம் கொடுக்க, அதை காதில் மாட்டிக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். இவனோ வாய்ப்பு எப்போதுடா கிடைக்கும் என்று இருப்பவன் சும்மா இருப்பானா? காதில் இசைத்த பாடல்கள் எல்லாம் அதிகமாக காதல் ரசத்தை சொட்ட ஆரம்பித்தது.

தன்னை வெறுப்பேற்றி பார்க்கும் முயற்சியில் தான் இத்தனையும் செய்கிறான் என்று அவள் அமைதியாகவே இருக்க, இடையில் ஒலித்த அந்த பாடல் அவளை பழைய நினைவுகளுக்கு மீட்டுச் சென்றது.

உன்னை விட என்ற பாடல் அவள் காதுகளில் இசை மீட்டிக் கொண்டிருக்க, குறிப்பாக “உன் கூட நான் கூடி இருந்திட” என்று தோன்றும் வரிகள் அவளை கடந்த காலத்திற்கு இட்டுச் சென்றது.

ஆறு வருட காலத்தை மொத்தமாக தொலைத்து விட்டு தவித்து தன் உயிரையும் பறிகொடுத்திருந்தவள் மீண்டும் உயிர் பெற்றாள். அப்படி உயிர் பெற்ற தனக்கு கிடைத்த இந்த வாழ்வை விட்டு விடக்கூடாது என்று என்று ஓட ஆரம்பித்தாள்.

முக்கியமாக தன் குடும்பத்திற்காக அவளுக்கு இந்த வாய்ப்பு தேவைப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாள்‌. நான்கு வருடத்திற்கு பிறகு, தான் படிப்பை முடிக்கும்போது தன் குடும்பம் தன் வருமானத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலை வரும்.

ஆனால் இம்முறை அப்படி ஒரு நிலையை குடும்பத்திற்கு கொடுக்காமல் அவர்களை தன்னிச்சையாக செயல்பட வைக்க வேண்டும் என்று எண்ணினாள்.

அதன் முதல் வேலையாக தந்தைக்கு கடை அமைத்துக் கொடுத்தவள், அடுத்ததாக தாய்க்கு உணவகம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தாள். அத்தனை ஒன்றும் எளிதில் அவள் தாய் அதற்கு ஒற்றுக்கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட அவள் திட்டமிட ஆரம்பித்து ஆறு ஏழு மாதங்களுக்குப் பிறகுதான் உணவகத்தைப் பற்றிய முழு விஷயத்தையும் அறிந்து, அதை ஆரம்பிக்க முடிந்தது. அதற்கும் தாயிடமிருந்து அவளுக்கு ஒப்புதல் கிடைக்கவே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் எட்டியது.

அதுவும் கடைசி ஒரு வாரம் சரியாக உணவு உண்ணாமல் இருந்து தன் உடல் நிலையை கெடுத்துக் கொண்டே பின் தான் தாயிடம் இருந்து சம்மதம் பெற்றிருந்தாள். அரைமணிதாக ஆரம்பித்த அந்த உணவகம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பெரிதாக எந்த வருமானத்தையும் இட்டு தரவில்லை.

அனைவரும் வந்து அமரும்படி இல்லை என்றாலும் உணவை வீட்டிக்கு எடுத்துச் செல்லும் உணவகம் ஆக மட்டுமே அது அமைந்திருந்தது. ஆனால் வேலினி கல்லூரி முடிக்கும் தருவாயில் பக்கத்துக் கடையையும் வாங்கி, அதிலும் அதன் நடுவில் இருந்த சுவற்றை இடித்து மொத்தமாக அனைவரும் அமர்ந்து உண்ணவதற்கான பெரிய உணவகமாக அதனை மாற்றி அங்கு பணி செய்வதற்கு என்று சில பணியாளர்களை நியமித்திருந்தனர். அதன் வளர்ச்சி அந்த அளவில் இருந்தது.

கூடவே தந்தையின் தொழிலும் பெரியதாக வளர்ந்திருந்தது. வருமானம் நன்றாக வர ஆரம்பித்த காலத்தில் அந்த கடையை மொத்தமாக, அதே தெருவில் இருக்கும் இன்னொரு இடத்திற்கு மாற்றி அமைத்தாள்.

அனைத்தும் அவர்களின் சொந்த இடமாக வாங்கிய பின் தான். அங்கு இன்னும் நான்கு தையல் இயந்திரங்களை வாங்கி போட்டு, புது விதமான குர்தாக்களை தயாரித்து பெரிய நிறுவனங்களுக்கு அவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் ஒரு சிறு தொழில் நிறுவனமாக மாற்று இருந்தார்கள் குடும்பத்தினர்.

அந்த நிறுவனத்தில் பிரத்தியேகமாக வரவேற்கப்பட்ட குர்தா என்றால் அது கைகளால் எம்பிராய்டரி செய்யப்படும் குர்தாக்கள் தான். அந்த பணியை வீட்டிலிருந்து வேலை செய்யும் பெண்களுக்கு கொடுத்து அவர்களிடமிருந்து கையில் எம்ராய்டரி செய்த சிறப்பு குர்தாக்களை உருவாக்கி விற்பனை செய்தனர்.

மறுபுறம் வேலினி தான் நினைத்தது போல குழலினிக்கு என்று பொறியியல் கல்லூரியில் சேர்க்க தேவையான பணத்தை தயார் செய்திருந்தாள். ஆனால் குழலினி வீட்டினரின் கடும் உழைப்பை கண்டு, தானும் கடுமைய்க உழைத்தாள்.
அதன் பயனாக அரசாங்க கல்லூரியிலேயே படிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தாள். அதனால் பாதி பணம் கூட செலவாகவில்லை. இருந்தும் அந்த பணத்தை அப்படியே வைத்திருந்தாள் வேலினி. நான்கு வருடத்திற்கும் அவள் தேவைக்கு அது இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டாள்.

அதே சமயம், வேலினி நான்கு வருடம் படித்து முடித்த பிறகு வேலை எதையும் தேர்ந்தெடுக்காமல் உயர்கல்வியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள். வீட்டினருக்கு அவள் முடிவுகள் மேல் நம்பிக்கை வந்திருந்தது.

அவளே தன்னை பார்த்துக் கொள்வாள். அவளை இந்த விசயத்தில் அவள் போக்கில் விட்டு விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டனர். அடுத்த இரண்டு வருடம் உயர்கல்வி முடித்த மூன்று மாதங்கள் ஆசிரியருக்கான சிறப்பு வகுப்புகள் சென்று தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.

பல நேர்காணல்களில் தோல்வியை மட்டும் கண்ட வேலினி, தான் ஆசிரியர் பணிக்கான, முதல் நேர்காணலில் வெற்றி பெற்று ஒரு பெரிய கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிய தொடங்கினாள்.

வேலினி ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்த போது, அவள் பெற்றோர்கள் குறுக்கே நிற்காமல் அவளின் ஆசைக்கு வழிவகுத்து விட்டனர். அதற்கு முக்கிய காரணம் அவள் தன் குடும்பத்திற்காக உழைத்து சிறு தொழிலையே ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்ல.

அவளின் சமூக சிந்தனையும் ஒரு காரணம் தான். வேலினி ஒரு பெரும் செயலை செய்து கொண்டிருந்தாள். கல்லூரியில் முகாமைக்க முதல் கல்லை எடுத்து வைத்தவள் வேலினி தான். அதனால் வேலினி மேல் தேவேந்திரனுக்கும் சிவானந்தனுக்கும் ஒரு நன்மதிப்பு எப்போதும் இருந்தது.

அதுமட்டுமின்றி தாங்கள் செய்த இந்த முகம் போல் நிறைய பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்று, முகாம் நடத்தி புற்றுநோய் பரிசோதனை செய்ய தயாராகினர்.

ஆனால் அந்த முகாம்கள் நடப்பதற்கு முன்பாகம் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டனர். அந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் மன நிலை புரிந்து அவர்களுக்கு ஏற்றது போல் பேசுவதற்கும், புற்றுநோயின் தீவிரத்தை உணர்ந்த ஒரு சிறந்த ஆள் வேண்டும் என்று யோசிக்க அவர்களுக்கு வேலினி மட்டுமே சரி என்று பட்டது.

அதனால் அவளையே அணுகினர். முதலில் மிகவும் தயங்கியவளுக்கு குருவே நம்பிக்கையூட்டினான். ஜானவியையும் அழைத்துக் கொண்டுதான் வருவேன் என்று அவள் கூறிவிட அவர்களும் தாராளமாக வரலாம் என்று அவளையும் ஏற்றுக் கொண்டனர்.

இருவரும் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தங்களின் அனுபவங்களையும் பேசினர். புற்றுநோயினால் வரும் துன்பங்கள் பற்றி மருத்துவர் மூலம் அறிந்ததையும், அதற்கு முன்பாகவே அவர்களாக அறிந்து கொண்டதையும் கூறி நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அந்த பள்ளிகளுக்குள் முகாம்கள் நடத்துவதற்கும் கூடவே தன்னார்வலர்களாக செயல்படவும் ஆரம்பித்தனர்.

அதனை அவள் ஆசிரியரான பின்பும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள். இப்போது அவள் பணிபுரியும் கல்லூரிக்கு கூட மாணவியாக இருந்த காலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வந்திருக்கிறாள்.

அதுவும் அவளுடைய தகுதிகளில் ஒன்றாக கூடிப்போனது. அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்க, அவளின் பெற்றோர்களுக்கு அவளை எண்ணி எப்போதும் பெருமை இருந்தது. அவள் செயல் எப்போதும் சரியாக இருக்கும் என்று எண்ணமும் வந்து இருந்தது.

வருவாள்…..

மகாஆனந்த்…✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!