Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 26

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 26

 மித்ரன் தான் பாதுகாப்பாக கூட்டி வந்து ஆட்டோ ஏற்றி விட்டான். அவர்கள் வீட்டு நிலவரம் தெரியும் என்பதால் உடன் செல்ல வில்லை. பிரவீனா எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து அவனிடமிருந்து விடை பெற்றாள். ஆனால், அவள் மனதில் மித்ரன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தான்.

பிரவீனா வீடு மிக அமைதியாக இருந்தது யாரும் எதுவும் சொல்லவில்லை. இவளும் யாரையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நேரடியான வாக்குவாதத்திற்கு பின் அவரவர் வேலை என்று மட்டுமே இருந்தார்கள்.

பிரவீனா வெளியில் சொல்லாவிட்டாலும் அவள் மனதில் உடன் பிறந்தவர்களை குறித்து பெரிய வருத்தம் இருந்தது. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் கூட இதுவரை பிரவீனாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றி ஒரு வார்த்தை பிரேம், பிரீத்தி இருவரும் கேட்டுக் கொள்ளவில்லை. அது அவர்களுக்கு தேவையில்லை என்று நினைத்தார்களோ இல்லை எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் அனுசரித்து செல்லும் தாய் தந்தை பேசியது வருத்தத்தை கொடுத்ததோ எதுவோ ஒன்று தந்தை வெளிப்படையாக பிரவீனாவுக்கு மற்றுமொரு வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போறோம் என்ற பின்னும் கூட ஒரு வார்த்தை அவள் வாழ்க்கையை குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை.



Advertisement

பிரவீனாவுக்கு தற்போது எல்லாம் நிறைய குழப்பமும் பயமும் இருந்தது. தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் தன் மகனின் நிலை என்ன? ஆதிரனுக்கு மித்ரனோடு உறவு நன்றாகத்தான் இருக்கிறது. மித்ரன், ஆதிரனை தன் மகனாகத்தான் பார்ப்பான். அதில் எந்த சந்தேகமும் இல்லை பிரவீனாவுக்கு… ஆனால், தன் மகனுக்காக மட்டும் மித்ரன் உடனான ஒரு வாழ்வை ஏற்றுக் கொண்டால் காதல் சொல்லி காத்திருந்தவனுக்கு என்ன பயன்?…

மித்ரனும் முன்பெல்லாம் பிரவீனாவுக்கு தெரியாமல் தான் ஆதிரனோடு பழகி வந்தான். அவளுக்கு தெரிந்த பின் இப்பொழுதெல்லாம் தைரியமாகவே ஆதிரனை வெளியில் கூட்டிக்கொண்டு சுற்றுகிறான். பிரவீனா இரு வேறு மன நிலையில் இருக்க என்ன முடிவெடுப்பது என்று தெரியாத குழப்பம் மகனை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் மேல் பாசமும் பரிதாபமும் அதிகமாக வருகிறது. அவன் என்ன பாவம் செய்தான். அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைவதை தான் கெடுக்கிறோமோ என்ற உணர்வு கூட வந்தது. முன் மாதிரி மகனை அதட்டி அடிப்பது கூட இல்லை.

மித்ரன் தன் நிலையிலிருந்து மாறவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பிரவீனா மனதைத்தான் மாற்றிக் கொண்டிருந்தான். மகேஸ்வரி பேரனிடம் மித்ரனை டாடி என்று சொல்லிக் கொடுக்க, பதறிப் போனாள் பிரவீனா.

Advertisement

“அம்மா!.. என்ன சொல்ற?”

Advertisement

“பின்ன அவ்ளோ பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறான். அது தப்பு தானே.. வேற என்ன சொல்றது, மாமான்னா சொல்லிக் கொடுக்க முடியும்” என்றார் தாய்.

அவளுக்கு பதில் கொடுக்க தெரியவில்லை. மித்திரனோடு பழக அனுமதித்தாள். ஆதிரனுக்கு, மித்ரன் அவ்வளவு நெருக்கம்… இப்பொழுதெல்லாம் மித்திரன் குறித்து பிரவீனா யோசிக்க ஆரம்பித்து விட்டால்தான்.. ஆனால், மகேஸ்வரி போல பட்டென்று மாற முடியவில்லை. ஆனால், மாறித்தான் ஆகணும் என்று கட்டளையிட்டு விட்டார் மகேஸ்வரி.

“இங்க பாரு பிரவீ.. இன்னைக்கு உனக்காக நிக்கிறோம்னா.. நாளைக்கு எப்படின்னு தெரியாது. இன்னைக்கே உன்கூட பிறந்தவர்களை பார்த்துக்கோ… மித்ரன் தம்பி ரொம்ப நல்லவரு. வரதட்சனை கொடுத்து உனக்கு மாப்பிள்ளை பார்த்துமே கூட, வர்ற எல்லாரும் ஆதிரனை இருக்க கூடாதுன்னு தான் சொன்னாங்க. ஆனா, மித்திரனுக்கு ஆதிரன் மேல உள்ள பாசம் உன்னை வச்சு கூட கிடையாது. வேற யாரையும் ஆதிரனால அப்பாவா ஏத்துக்க முடியாது. ஸ்கூலுக்கு போறத தவிர மத்த நேரம் எல்லாம் அந்த தம்பி கூட தான் இருக்கான் உன் மகன்.. வேற எப்படி சொல்லிக் கொடுக்கிறதாம். உன் மகனுக்காகவாச்சும் நீ மனசு மாறத்தான் வேணும் பிரவீ” கண்டிப்பாக சொல்லிவிட்டார் மகேஸ்வரி.

Advertisement

 அவருக்கு இவ்வளவு நல்ல சம்பந்தத்தை விட மனசே இல்லை மித்ரன் ஓரளவு வசதியானவன் என்றே தெரியும் பெரிய பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் தன் மகள், பேரன் மேல் அவ்வளவு பாசம். தங்கள் காலத்துக்கு பின்னால் மகளை யார் பார்ப்பது. மித்திரனோடு பிரவீனா வாழ்க்கை நன்றாக அமையும்.

பிரவீனா அமைதியாக இருக்க, “இங்க பாரு பிரவீனா. பெத்தவளா இருந்தாலும் ஒன்னு சொல்றேன். இன்னைக்கு உனக்கு இருக்கிற வைராக்கியம் காலம் போகப் போக மறஞ்சு போகும். அன்னைக்கு நமக்கு யாருமே இல்லையே தனியா நிற்கிறோம் என்று நினைப்பு இருக்கும். கடவுள் அன்னைக்கு என்ன விதிவிட்டு இருப்கோ, நாங்க கூட உன் கூட இருக்க முடியுமோ என்னமோ!… யார் இருந்தாலும் இல்லாட்டியும் கட்டின புருசன் மாதிரி ஒரு உறவு எங்கேயும் வராது பிரவீனா. தனியா நின்னு வாழ்க்கையை எதிர்கொள்கிற வயசு உனக்கு கிடையாது” என்றவர், மகள் முகம் பார்க்க… அப்போதும் பிரவீனா அமைதியாக தான் இருந்தாள்.

 “ஏதோ ஒரு  இடத்துல கணவனோடு அன்பு, ஆதரவு, அரவணைப்பு ஒரு பொண்ணுக்கு தேவைப்படும்.. இன்னைக்கு உன் மனசு தேடாமல் இருக்கலாம். அஞ்சு பத்து வருசம் கழிச்சு கூட நமக்கு ஒரு துணையை மனசு தேடும். இந்த வயசிலும், என் பிள்ளைங்க நீங்க எல்லாம் வளர்ந்து நிக்கிறீங்க தான்.. ஆனால், நான் இன்னைக்கும் என்னோட துணையா நினைக்கிறது உங்க அப்பாவை தான். நீயா யோசிச்சு பாரு சில விஷயங்கள் உனக்கு புரியும்” என்று நகர்ந்து விட்டார்.

பிரவீனாவுக்கு புரியாமல் என்ன.. ஆனால், பயம், பெரிய பயம். தன்னால் வேற ஒரு வாழ்க்கை வாழ முடியுமா? மித்ரனை தன் கணவனாக நினைத்து புதிய வாழ்க்கையை தொடங்க முடியுமா? பயம் மனதில் அசைக்க முடியாமல் நின்றது.

அன்று விடுமுறை தினமாக இருக்க மித்ரனோடு தான் ஆதிரன் வெளியே சென்று இருந்தான். ஏதோ யோசித்த பிரவீனா, மித்ரனை தேடி சென்றாள். அது ஒரு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு திடல். மகனின் சத்தமான சிரிப்பை கேட்டவாறு அவன் முகத்தையே பார்த்து நின்றாள் பிரவீனா.

அவளை கண்ட மித்ரன் அவள் அருகில் வந்து “என்ன பிரவீ?” என்று கேட்க.

“உங்களுக்கு ஏன் என் மேல அவ்வளவு காதல் மித்ரன். அப்படி ஒன்னும் நான் உங்ககிட்ட நல்லவிதமா பழகலையே? உங்களுடைய எதிர்பார்ப்புக்கு தக்கவும் நான் கிடையாது. நான் ஒரு விதவை, ஒரு பிள்ளைக்கு அம்மா, ஒரு கட்டுப்பெட்டியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவ… இன்னுமும் என்னுடைய கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கிறவ.. எந்த இடத்திலும் நான் உங்களுக்கு செட் ஆக மாட்டேன். அப்புறம் எப்படி?”

இதுவரை பிரவீனா இப்படி எல்லாம் யோசிச்சது கிடையாது. இப்பொழுது தான் மித்ரன் குறித்து நினைக்க ஆரம்பித்து இருந்தாள்.

லேசாக சிரித்தவன், “இதற்கான விட எனக்கே தெரியாது பிரவீ.. ஆரம்பத்துல நானும் உன்கிட்ட முட்டிக்கிட்டு தான் நின்னேன். அப்புறம் கொஞ்சம் கவனித்து பார்த்தேன் நல்ல பொண்ணுன்ற ஒரு நினைப்பு. அப்புறம் இளங்கோ பத்தி தெரியவும்.. அது என்ன ரொம்ப பாதிச்சிருச்சு. நீ ரொம்ப கரெக்டா இருப்ப, ரொம்ப நியாயமா பேசுவ.. உனக்கா இப்படின்னு மனசுல பெரிய அழுத்தம். அதுவும் உன்னோட ஒரு வருச வாழ்க்கையை வைத்து மட்டுமே உன் காலத்தை எப்படி கழிக்க முடியும்ன்னு ஒரு யோசனை. எப்படி உன்னால துணிஞ்சு இப்படி ஒரு முடிவு எடுக்க முடிஞ்சதுன்ற ஆச்சரியம்!… எனக்கு சரியா சொல்ல தெரியல. ஏதேதோ வந்து உன் மேல காதல் ஆயிருச்சு”

“மித்ரன் நீங்க என்னோட பழகி.. உங்களை என் அண்ணனாகவோ, பிரண்டாவோ, வெல்விஷராவோ நட்பாவோ, அப்பா ஸ்தானத்திலையோ ஏத்துக்க சொன்னீங்கன்னா நான் யோசிச்சு இருக்கவே மாட்டேன். ஆனா, நீங்க புருசனா ஏத்துக்க சொல்லி நிக்கிறீங்க.. அது எனக்கு பெரிய தடுமாற்றமாக இருக்கு மித்ரன். நீங்க நல்லவன்னு தெரிஞ்சாலும்… எனக்கு என்னவோ தடுக்குது. தப்பு செய்ற ஃபீல் ஆகுது” மனதை மறைக்காமல் தன் நிலையை சொன்னாள் பிரவீனா.

“என்ன உன் கணவனா ஏத்துக்கிறதுல்ல என்ன சங்கடம் பிரவீனா” நேரடியாக கேட்டான் மித்ரன்.

கொஞ்சம் தயங்கினாலும் உடைத்து விட்டாள் பிரவீனா “மித்ரன் கணவன் மனைவின்ற உறவு உள்ளம் சார்ந்து இருந்தாலும், உடல் சார்ந்து இருக்கு இல்லையா?”

“அதனால என்ன பிரவீனா எல்லா கணவன் மனைவிக்குள்ளேயும் இருக்கிற புனிதமான உறவு தானே. நீயும் அப்படித்தானே நினைக்கிற?”

“உண்மைதான் புருஷன் பொண்டாட்டின்னா எல்லாம் தான். ஆனால், அது சாதாரணமா கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு மித்திரன். நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.. என் வாழ்க்கையில ஒருத்தர் முழுசா இருந்திருக்காரு. அதை மறந்து வேற ஒருத்தரை மன ரீதியா, உடல் ரீதியா என்னால ஏத்துக்க முடியுமா? எனக்கே தெரியல” பிரவீனா எதையும் மறைக்கவில்லை ஓரளவுக்கு மித்ரன் தன் வாழ்க்கையில் வந்து விடுவான் என்று தெளிவாக இருந்தாள். அதனால் இதெல்லாம் பேசித்தான் ஆக வேண்டும்.

“பிரவீனா, நீ ஏன் இவ்வளவு பயப்படுற? இளங்கோவோட உன் வாழ்க்கைன்றது அவர் உன் கணவனான பின்னாடி தானே.. நான் இன்னும் உன் கணவன் ஆகல. அதனாலதான் உனக்கு இவ்வளவு குழப்பமும் பயமும். நீ எனக்கு சொன்னது தான், இங்க தாலி என்பது ரொம்ப பெரிய விஷயம். அந்த உறவை மதிக்கிறவங்களுக்கு கல்யாணத்துக்கு பின்னாடி வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும். இன்னைக்கு உன் வழிக்கு நான் வந்து நிற்கிறேன். நிச்சயம் அது உன்னால தான். எனக்கு கல்யாணத்தின் மீது நம்பிக்கை இருக்கு, மனைவி மீது நம்பிக்கை இருக்கு, தாம்பத்திய வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு வந்திருக்கு.. நான் காத்திருக்கேன் என்னோட குடும்பத்தை சுமக்கிறதுக்கு” என்ற அவனையே ஆச்சரியமாக பார்த்தாள் பிரவீனா.

“ஒருவேளை கல்யாணத்துக்கு பின்னாடியும் என்னால உங்களை ஏத்துக்க முடியாம போனா? அது ரொம்ப சுயநலமாகி போகும் மித்ரன். நீங்க நிச்சயம் ஆதிரனை நல்லா பாத்துப்பீங்க. ஆனா, அதுக்காக உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா அது உங்களை ஏமாத்துற மாதிரி இல்லையா?”

 மித்ரனுக்கு அப்படி ஒரு சிரிப்பு “தேங்க்ஸ் பிரவீனா. ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றதும் அவள் புரியாமல் பார்க்க,

 “எனக்காக இவ்வளவு யோசிக்கிற… கண்ணை மூடிட்டு நீ வேணாம்னு சொல்லிட்டு இருந்த.. இன்னைக்கு என்னோட உன் வாழ்க்கை எப்படி இருக்கும்ன்ற அளவுக்கு யோசிக்கிறியே. அதுவே பெரிய விஷயம். நீ எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் நம்முடைய கலாச்சாரம், அதோடு தொடர்புடைய தாம்பத்திய வாழ்க்கை. தாலி கொடி கொடுக்கிற சொந்தம். அது நிச்சயம் நமக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்”

“மித்ரன் நீங்களா பேசுறது” அவளையும் மீறி அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் கொள்கை தான் ஊரறியுமே!…

“என்னோட கடந்த கால வாழ்க்கை உனக்கு உறுத்தலா இருக்கா பிரவீனா?” வெளிப்படையாக கேட்டு விட்டான்.

“அப்படி பார்த்தா நான் என்ன ஒழுங்கு” என்று பிரவீனா சொல்ல வரும்போது அவளை தடுத்து நிறுத்தியவன்,

“இப்படி ஒரு தாட்ல மத்தவங்க யோசிக்கலாம். ஆனா, நீ யோசிக்காத… எங்கள் வீட்டிலும் சரி, உங்க வீட்டிலும் சரி இப்படித்தான் யோசிக்கிறாங்க. நீ கல்யாணம் ஆனா பொண்ணு, ஆல்ரெடி நான் உருப்படாத பையன். ரெண்டு பேரும் சேரட்டுமேன்னு… ஆனா நமக்கான வாழ்க்கை என்பது காம்ப்ரமைஸ் பண்ணி போகக்கூடாது. ஒரு புரிதலோடு தான் போகணும்” என்றவன்,

தன் முழங்காலை காட்டினான். அதில் ஒரு பழைய காயம் தழும்பாக இருந்தது.

“என்னோட சின்ன வயசுல எனக்கு அடிபட்டது. இன்னும் ஞாபகம் இருக்கு. என்னோட எந்த வயசுல அடிபட்டுச்சுன்னு எனக்கு தெரியுமே தவிர அந்த வலி இன்னைக்கு நான் உணர முடியாது. அப்படித்தான் இளங்கோவோட உன் வாழ்க்கை. அதை முழுசா மறந்துட்டு உன் மனசு முழுக்க நான் மட்டுமே நிறைஞ்சி இருக்கணும்னு நான் சொல்ல மாட்டேன். ஆதிரனை வலியோடு தான் நீ பெத்து இருப்ப… இன்னைக்கு உன்னால அந்த வலியை நினைச்சு தான் பார்க்க முடியுமே தவிர, உணர முடியாது. இளங்கோவோட உன் வாழ்க்கையும் அப்படித்தான். ஒரு நினைவுகளா மட்டும் தான் உனக்கு இருக்குமே தவிர, உணர்வுகளா இளங்கோ என்னைக்கு உனக்கு இருக்க முடியாது பிரவீனா”

பிரவீனா கண்களில் கண்ணீர் நிரம்பியது. அவள் கைகளை லேசாக பிடித்தவன்,

“முன்னாடி எல்லாம் புருஷன் செத்தா அவனை எரிக்கும் போது அந்த தீயில் பொண்டாட்டியும் விழுந்திடணுமாம். இன்னைக்கு யோசிக்கும் போது அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விஷயம். இந்த காலத்துல யாராவது அப்படி செய்வாங்களா? அது சட்டப்படி குற்றமும் கூட… அப்படித்தான் நீ கடைபிடிக்கிற உன்னோட கலாச்சாரத்தை கொள்கையை நான் மதிக்கிறேன். ஆனா, அதே நேரத்துல ஒரு படிச்ச பொண்ணா அதுல இருக்குற மூடநம்பிக்கையை விட்டு நீ வெளியே வா. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க போறதால ஆதிரனும், இந்த ஊர் உலகமும் யாரும் தப்பு சொல்ல மாட்டாங்க. ஏன்னா, அது தப்பு கிடையாது. நீ உன் கடந்த காலத்தை யோசிக்கும் பொழுது இளங்கோ வெறும் நினைவு மட்டும் தான். அது உன்னுடைய நிகழ்காலமாகவோ எதிர்காலமாகவோ இருக்காது” பேசிப் பேசியே அவளை சரி கட்டிக் கொண்டிருந்தான் மித்ரன்.

என்னதான் படித்து வேலைக்கு போகும் பெண்ணாக பிரவீனா இருந்தாலும், மீண்டும் ஒரு திருமணத்தை துணிந்து செய்ய அவள் மிகவும் பயந்தாள். தனக்கு இந்த வாழ்க்கை சரியாக அமையுமா? மகன் என்ன நினைப்பான்? ஊர் என்ன பேசும்? தன்னால் மற்றும் ஒருவனோடு நல்லபடியாக வாழ முடியுமா? உணர்வுகளோடு உடலையும் பரிமாறிக் கொள்ள முடியுமா? ஏதேதோ யோசனை அலக்கழிக்க ஆரம்பித்தது. மித்ரன் நல்லவன் தான் என்று நினைத்தாலும் துணிந்து நிற்க தைரியம் இல்லை.

உண்மையில் மித்ரன் மிகப் பொறுமையாக அவள் மனதை மாற்றி, அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். இளங்கோவோடு உன் வாழ்க்கை முடியவில்லை. இளங்கோ வாழ்க்கை தான் முடிந்து விட்டது. உனக்கான வாழ்க்கை நீண்டு இருக்கிறது என்று அவளுக்கு உணர்த்தி கொண்டு இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் கூட்டை விட்டு வெளிவர உதவி கொண்டிருந்தான்.

சாரதா சென்னை வந்தார். மகள் வீட்டில் தான் தங்கியிருந்தார். மகனை பார்க்க ஆசை இருந்தும், இதுவரை ஒரு நாள் கூட மகன் வீட்டுக்கு சென்றதில்லை. அவன் அழைத்ததும் இல்லை. இந்த ரெண்டு வருடமாக தான் மித்ரன் தனியாக இருக்கிறான்.

“என்னங்க எனக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு போகணும்” என்றார் சாரதா.

 “எந்த பொண்ணு வீட்டுக்கு” தெரிந்தும் தெரியாதது போல கேட்டார் சத்தியமூர்த்தி. ஏனென்றால் சென்னை வந்ததே அந்தப் பெண்ணை பார்க்க தானே!..

“அதான் உங்க மருமகளை” முகத்தை தூக்கிக் கொண்டு சொன்னாலும் மனைவி ஏற்றுக் கொண்டாள் என்பதே சத்தியமூர்த்திக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கும் வருத்தம் தான், ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை மகன் தேர்ந்தெடுத்தது… அதற்காக என்ன செய்ய? நமக்கு பிடிக்கவில்லையா தள்ளி நின்று சந்தோஷமாக இரு.. அவ்வளவுதான். நம் பெத்த பிள்ளை நன்றாக இருக்க வேண்டும். வேறு என்னத்துக்கு இந்த வாழ்க்கை?…

“அந்தப் பொண்ணு இன்னும் நம்ம பையனுக்கு சரின்னு சொல்லலையாம். கொஞ்சம் தயங்குது போல”

“அவளுக்கு என்ன தயக்கம் அதுதான் என் மகனை வளைச்சு பிடிச்சுட்டாளே!”

“சாரதா நாமளும் ரெண்டு பெண் பிள்ளை வச்சிருக்கோம் இன்னொரு பொண்ண பத்தி தப்பா பேசாத” கண்டிப்பாக சொன்னார் கணவர்.

“உன் மகன் தான் அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கான் இன்னொரு கல்யாணத்துக்கு அந்த பொண்ணு யோசிக்குது. மகன் வாழ்க்கையை நினைக்கும் போல. அது சரி தானே… உன்னை மாதிரி ஆட்கள் ஊர்ல எவ்வளவு பேர் இருப்பாங்க. அவங்கள பார்த்து பயப்படத் தான் வேணும்” என்றார்.

“ஏன் என் பையனுக்கு என்ன குறைச்சல் அவளுக்கு என் மகன் வேண்டாமா? அப்படி என்ன என் மகன் குறைந்து போய்ட்டான்” அவருக்கு தன்மகனை வேண்டாம் என்றது ஒரு பக்கம் ஆதங்கமும் இருந்தது. ஓரளவுக்கு மனைவி மனநிலையை புரிய விட்டுப் பிடிப்போம் என்று அமைதி காத்தார் சத்தியமூர்த்தி.

தன் மருமகன் புவனேந்திரனையும் அழைத்துக் கொண்டு பிரவீனா வீடு செல்ல தயாராகினர். மித்ரன் அவன் முடிவில் உறுதியாக இருக்க, பெற்றவர்களாக கடமையை செய்ய முன்வந்தார்கள்.

மகேஸ்வரி இங்கும் அங்கும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார். பிரவீனா இரவு போட்ட நைட்டியிலேயே அமர்ந்திருந்தாள். அவளுக்கு தெரியும் மித்திரன் வீட்டில் இருந்து பார்க்க வருகிறார்கள் என்று… சாதாரணமாக இருக்க முடியவில்லை. இதயம் ஹை டெசிபில் அடித்துக் கொண்டது. காலையிலே ஆதிரன் மித்திரனோடு சென்று விட்டான்.

“என்ன அத்தை யாரும் விருந்தாளி வராங்களா? சமையல் தடபுடலா நடக்குது” என்றாள் ஆர்த்தி.

“ஆமா, என் தங்கச்சி வாரா” என்றதோடு முடித்துக் கொண்டார். மகேஸ்வரி இப்பொழுது ரொம்ப கவனமாக இருக்கிறார். பிரவீனாவை அவள் கணவன் வீட்டுக்கு அனுப்பும் வரை வாயை திறக்க கூடாது என்று…

தேவதாஸ் முன்பே சொல்லிவிட்டார், “இங்க பாரு மகேஷ். உன் மகன் பாசத்தை தள்ளிவை.. நமக்கு இப்ப பிரவீனா தான் முக்கியம். மித்ரன் மாப்பிள்ளை ஆர்த்திக்கு சொந்தக்காரங்க. உன் மருமக ஒன்னுக்கு ரெண்டா ஏதாவது சொல்லி இழுத்து விட்டுடாம.. மாப்பிள்ளை கையில நம்ம மகளை புடிச்சு கொடுக்குற வரைக்கும் வாய திறக்காத” என்ற பின் மகேஸ்வரி ஏன் வாயை திறக்கப் போகிறார்.

எப்படியாவது மித்ரன் தனக்கு மாப்பிள்ளையாக வந்து விட வேண்டும் என்று சாமி கும்பிட்டுட்டு இருக்கிறார்.

“அத்தை நான் அம்மா வீட்டுக்கு போறேன்” என்றதும்

“தனியாக போகாத ஆர்த்தி. பிரேம கூட்டிட்டு போ.. வரும்போது நீ தனியா வராத, அவனையும் உங்க வீட்ல இருக்க வச்சு சேர்ந்தே வா… மாசமா இருக்கும்போது தனியா வரக்கூடாது இல்ல” என்றதும் ஆர்த்திக்கு ஒரே சந்தோஷம். தன் மீது உள்ள கோவம் எல்லாம் போய்விட்டது போல என்று நினைத்துக் கொண்டாள்.

“மகேஷ் சமையல் மட்டும் நீ பாரு.. ஸ்வீட் காரம் எல்லாம் தரமானதா நான் வாங்கிட்டு வரேன்” என்றார் தேவதாஸ்.

பிரவீனா என்ன மனநிலை என்று தெரியாமலே அமர்ந்திருந்தாள். தன்னைத்தான் பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தும் நைட்டியில் இருப்பது தவறாக தோன்றியது. அதற்காக அலங்காரம் பண்ணிக்கொண்டு நிற்கவும் மனதில்லை. என்னவோ சரியா, தவறா என்று மனப்போராட்டம்.

இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவார்கள் என்று மித்திர மெசேஜ் போட, அதற்கு மேல் தாமதிக்காமல் மாந்தளிர் வண்ண காட்டன் சேலையில் தயாரானால் பிரவீனா. அதைப் பார்த்து பெற்றவர்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோசம்.

சத்தியமூர்த்தி குடும்பம் வந்துவிட்டது. மகள் சுமித்ராவும் உடன் வந்தாள். சாரதா மிக ஆளுமையாக தெரிந்தார். கணவன் மனைவி இருவரும் வாசல் வரை சென்று வரவேற்று அழைத்து வந்தார்கள். ஹாலில் பேச்சு சத்தம் கேட்கும் போது பிரவீனாவுக்கு பயம் நெஞ்சை கவ்வியது.

 தன்னைப் பற்றி அவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள். மித்ரன் எப்படி வாழ்ந்தாலும் அவன் கல்யாணம் ஆகாதவன். கல்யாணம் ஆகாத, நல்ல வேலையில் இருக்கும் ஆண் மகனை.. ஒற்றைப் பிள்ளையோடு கணவனை இழந்த பெண் வளைத்து போட்டாள் என்று நினைப்பார்களோ!… வெளியே தெரிந்தால் ஊர் என்ன பேசும்? தன் தம்பி, தங்கை என்ன நினைப்பார்கள். ஆர்த்தியே போதுமே?

“பிரவீனா வெளிய வா” என்று தாய் சொன்னதும் ஒரு நடுக்கத்தோடு தான் வெளியே வந்தாள்.

 “இதுதான் என் பெரிய மக பிரவீனா. ஐடில வேலை பாக்குது” சாதாரணமாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள் பெண் பார்க்க வந்தோம் என்று அவர்களும் வெளிப்படுத்தவில்லை இவர்களும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

பொதுவான பேச்சுக்களை தான் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். எந்த இடத்திலும் மித்ரன், பிரவீனா திருமணம் குறித்து பேசவில்லை. சுமித்ரா அவளை தன்னருகே அமர்த்தி ஆதிரன் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அதன்பின் கொஞ்சம் வெளி வந்தாள் பிரவீனா. சாரதா எடைபோடும் பார்வையோடு மருமகளை அளவிட்டார். உண்மையை சொல்ல வேண்டுமானால் மனதில் ஒரு திருப்தி. பிரவீனா அப்படியே குடும்பப்பாங்கான பெண்ணாக இருந்தாள். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி பூர்த்தி செய்யும் அளவுக்கு இருந்தாள். ஏனெனில் மித்ரனை முந்தைய வாழ்க்கையும், அவனின் கேர்ள் பிரண்ட்ஸும் இவர்கள் அறிந்ததே… அதில் முற்றிலும் மாறான ஒரு தேர்வாக இருந்தது பிரவீனா தான். அதுவரை சாரதாவுக்கு திருப்தி. ஆதிரன் மட்டும் தான் இடித்தான்.

“உங்களுக்காக தான் சாப்பாடு ரெடி பண்ணி இருக்கோம். வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தார் தேவதாஸ். இது ஒரு குறிப்பு.

சத்தியமூர்த்தி தயங்கவில்லை. குடும்பத்தோடு சாப்பிட அமர்ந்தார். அவ்வளவுதான் தேவதாஸ் தம்பதிகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. கைநனைத்தால் கல்யாணம் உறுதி செய்த மாதிரி தான். தனிப்பட்டு பேசிக் கொள்ளவில்லையே தவிர இவர்களுக்கு தான் கல்யாணம் என்பது உறுதி செய்து கொண்டார்கள்.

 பிரவீனாவை தான் உடனிருந்து பரிமாற வைத்தார் மகேஸ்வரி.

“சமையல் எல்லாம் பிரவீனா தான். நான் சும்மா கூட தான் நின்னேன்”

“உன் கை பக்குவம் ரொம்ப நல்லா இருக்கு பிரவீனா” என்றாள் சுமித்ரா.

 உண்டு முடித்த பின், சாரதா கண்காட்ட… சுமித்ரா தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நகை டப்பாவை எடுத்தாள். எல்லோரும் என்னவென்று பார்க்க, அதில் இரண்டு வைர வளையல்கள் இருந்தது. நல்ல கெட்டியாக, கனமாக கொடி டிசைன் வைத்து இருந்தது.

சுமித்ரா தான் பிரவீனா கைகளைப் பிடித்து வளையலை போட்டு விட்டாள். ஒரு மாதிரி என்ன மனநிலை என்று சொல்லத் தெரியாமல் நின்றிருந்தாள் பிரவீனா.

சுமித்ராவுக்கு பூ, புடவை பழத்தோடு வரத்தான் ஆசை. ஆனால், அது பிரவீனாவே பெரிய அளவில் சங்கடப்படுத்தும் என்பதால் உறுதி செய்வதற்காக அவள் கையில் இரண்டு வளையல்களை போட்டு விட்டாள்.

 பிடிக்கவில்லை என்றாலும் கூட மகனுக்கு கல்யாணம் பேசியது சாரதாவுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. தன் மகனுக்கு கல்யாணம் என்பது மனதில் அவ்வளவு நிறைவு. மகன் முப்பத்தி ஐந்தை தாண்ட போகிறான் அல்லவா…

எல்லோரும் விடைபெறும் போது தான் மித்ரன் மகனை தூக்கிக் கொண்டு வந்தான். தன் மகன் கையில் பிள்ளையை பார்த்ததும் சாரதா முகம் மாறி போனது. பெரிதாக எந்த அலங்காரமும் இல்லாமல் பிரவீனா எப்பவும் போல தான் இருந்தாள். சுமித்ரா போட்ட ரெண்டு வளையல் மட்டுமே எக்ஸ்ட்ரா. ஆனால், கல்யாணம் பேசியதாலோ என்னவோ பிரவீனா அழகாக தெரிந்தாள் மற்றவர் கண்களுக்கு. அதை வஞ்சனை இல்லாமல் ரசித்தான் மித்ரன்.

 சத்தியமூர்த்தி “இன்னும் பத்து நாள் நாங்க இங்கதான் இருப்போம். நீங்க நல்ல நாள் பார்த்து எங்க வீட்டுக்கு வரணும்” என்று முறையாக மாப்பிள்ளை வீடு பார்க்க அழைப்பு விடுத்தார்.

வேற என்ன வேண்டும். நல்ல நாள் பார்த்து போன் செய்வதாக சொன்னார் தேவதாஸ். பிரவீனாவுக்கு தான் எல்லாம் அவசர கதியில் நடப்பது போல் இருக்க, மிக பயமாக இருந்தது. மித்திரனையும் அவன் கையில் இருந்த தன் மகனையும் பார்க்கும் பொழுது எதையுமே தடுக்க தோன்றவில்லை. தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்தால் தான் என்ன என்று நினைக்கத் தோன்றியது.

அன்று இரவு மகேஸ்வரி, தன் மகளையும் பேரனையும் நிற்க வைத்து, உப்பு, வத்தல் வைத்து சுத்தி போட்டார்.

“அம்மா என்ன இது?” பிரவீனா தான் சங்கடப்பட்டாள்.

 “உனக்கு தெரியாது இதெல்லாம் பாக்கணும்” என்ற தன் மாமியாரை அதிர்ச்சியாக பார்த்தாள் ஆர்த்தி.

 “அப்படி என்ன நடந்து போச்சு. இப்பதானே கல்யாணம் பேச்சு எடுத்துருக்காங்க. ஒரு பிள்ளையோட இருக்கிற பொண்ணு யார் கல்யாணம் செய்துபார்? பாப்போம் அப்படி எந்த ஊர் மகராசன கூட்டிட்டு வாராங்கன்னு”

பிரவீனாவுக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை. மகனைப் பார்த்தவள்,

“அத்து இன்னைக்கு எங்க போனீங்க?”

“மித்துவோட வீட்டுக்கு?” மகேஸ்வரி சொல்லிக் கொடுத்தாலும் இன்னும் ஆதிரனுக்கு டாடி சொல்ல வரவில்லை.

“உனக்கு அந்த வீடு பிடிச்சிருக்காடா. நீ, நான் அப்புறம் மித்து எல்லோரும் அங்க இருப்போமா?” மகனின் சம்மதம் கேட்டு நின்றாள்.

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மித்து கூட சொன்னாங்க இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ரெண்டு பேரும் அங்க வந்து விடுவோமாம். அங்க எனக்குன்னு டாய் ரூம் கூட இருக்கு தெரியுமா? அதுதான் என் வீடாம். ஆர்த்தி அத்தை கிட்ட சொல்லணும். எனக்கு வீடு இருக்குன்னு… அவங்க என்னை தாத்தா பாட்டி வீட்ல இருக்கேன்னு சொன்னாங்கம்மா.. அது என் வீடு.. அப்படித்தான் மித்து சொன்னாங்க. அந்த வீட்டை எல்லாருக்கும் காட்டணும். நாம எப்ப அங்க போவோம்?” மகன் சந்தோஷமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

“மித்து மூணு கார் வச்சிருக்காங்க. அந்த காரும் என்னோட தான். அங்க போனதும் நான் டெய்லி ஸ்கூலுக்கு கார்ல தான் போவேன்” ஒரே சந்தோஷம் சின்னவனுக்கு…

 மகனின் சந்தோஷத்தை பார்த்து மட்டுமே வாழ்க்கை தன்னை சரியான பாதையில் இழுத்து செல்கிறதோ என்று நினைத்தாள்…

 இப்பொழுதெல்லாம் மித்ரன் அடிக்கடி பிரவீனாவுக்கு போன் செய்கிறான். என்னவும் ஆஃபீஸ் விஷயமும் என்று எடுப்பவள்… சின்ன சின்ன நல்ல விசாரிப்புகளோடு முடித்துக் கொள்வான். அவளுக்கு தன்னை உணர்த்திக் கொண்டே இருக்கிறான்.

அந்த வாரத்தில் ஒரு நாள் தேவதாஸ், மகேஸ்வரி மட்டும் மித்ரன் வீட்டுக்கு சென்று வந்தார்கள். அது ஒரு லக்ஷரி அப்பார்ட்மெண்ட். மூன்று பெட்ரூம்கள் இரண்டு பால்கனி வசதியாக அமைக்கப்பட்டது. மித்ரனிடம் விலை உயர்ந்த மூன்று கார்களும் இருந்தது. ஓரளவுக்கு மித்திரன் வசதியானவன் என்றே கணித்திருந்தார்கள். ஆனால் சத்தியமூர்த்தி வந்த பின்பே அவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்று புரிந்தது.

தேவதாஸ் நெகிழ்ந்து போனார். எவ்வளவு பெரிய சம்பந்தம். அதுவும் மகளோடு பேரனையும் ஏற்று கொள்கிறார்கள். இது சாதாரண விஷயம் அல்ல. நிச்சயம் பெருந்தன்மையானவர்கள். அதுவும் மித்ரன் அவனை சொல்ல வார்த்தைகளே இல்லை.

மகேஸ்வரிக்கு தான் சந்தோஷம் பிடிபடவில்லை. மகள் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து அவ்வளவு பெருமை. இப்பொழுதெல்லாம் மகள் உடைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் மகேஸ்வரி.

 ஆனால், பிரவீனா தான் இன்னும் தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தால் சில நேரம் சரியாக தோன்றும். சில நேரம் தப்பு செய்கிறோமோ என்ற பயமும் வந்து விடும். அன்று ஆர்த்தியை பார்க்க அவள் அம்மா வந்திருந்தார்,

“அண்ணி, கேள்விப்பட்டேன். நம்ம பிரவீனாவுக்கு மாப்பிள்ளை பாக்கறீங்களாமே”

“ஆமா எவ்வளவு நாளைக்கு நாங்களே பார்க்க முடியும். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும் தானே” பொதுவாக சொன்னார் மகேஸ்வரி.

“உண்மைதான் அண்ணி. புருஷன் உறவு வேணாம்னு தனியா நிக்கிற வயசா அவளுக்கு… பிரவீனா தனியாத்தான் நிப்பேன்னு சொல்லும்போது அவளை என்னமோ நெனச்சேன். ஆனா, உண்மைதான் அவளுக்கு கொஞ்சம் வயசு தானே. இந்த வயசுல புருஷன் இல்லாம எல்லாம் இருக்க முடியாது. அவ என்ன சாமியாரா ஒத்தையில இருக்க… அவ வயசுக்கு அவளால இருக்க முடியாது” என்று அவர் சொன்னதும், பிரவீனா முகம் மாறத் தொடங்கினாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!