Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 24 1

தாழம்பூ வாசம்  நீ…..

24

அடுத்த ஒரு வாரத்தில் மார்கழி மாதம் வருவதால்.. காவ்யாவின்..  திருமண தொடக்க வேலைகளை பார்க்க தொடங்கினர். எனவே இன்று உப்பு சர்க்கரை வாங்க, சுற்றம் சொந்தத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தது மூர்த்தியின் வீடு.

காலையிலேயே செல்லுவதால்… ஆண்கள் எல்லாம் பொதுவாக பேசியபடி இருந்தனர். லிங்கா, இளா எல்லாம் கீழே சின்ன சின்ன வேலைகள் செய்தபடி வருபவர்களை கவனித்த படியும் இருந்தனர், ஒவ்வொருவராக.. வந்தனர். 



Advertisement

காமாட்சியின்,  அக்கா தங்கைகள்.. மூர்த்தியின் பங்காளிகள்… மற்றும் சம்பந்தி வீடு அவ்வளவுதான் அழைப்பு. எனவே அளவான ஆட்கள்.. எல்லாம் பெரியவர்களாக வந்திருந்தனர். பொறுமையாக வர்களிடம் பேச்சு சென்று கொண்டிருந்தது காமாட்சிக்கு.. 

லதா பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தாள். காமாட்சிக்கு வந்தவர்களுடன் பேசவே நேரம் சரியாக இருந்தது.. தீபக் அழகாக அப்பாவுடன் நின்று கொண்டான்.

காவ்யாவும், சக்தியும்… இப்போதுதான் ரெடியாகி கொண்டிருந்தனர். அம்மு சக்தியிடம் இருந்தாள்… சக்திக்கு இந்த பரபரப்பு எல்லாம் புதிதாக இருந்தது.. கூடவே ஆசையாகவும் இருந்தது.. இத்தனைநாள் சின்ன பெண் என்ற நிலை மாறி.. தனக்கும் ஒரு பொறுப்பு என மனம் உணர, ஆசையாக எல்லாம் செய்து கொண்டிருந்தாள், கள்ளமில்லா பெண்.

Advertisement

ஆனால், கணவன் மனைவி உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.. அவர்களுக்குள். அன்று அவள் வாயே திறக்காமல் இருக்கவும் ஏதும் அதன்பின் கேட்கவில்லை லிங்கா. 

Advertisement

அவள் என்ன நினைக்கிறாள் என புரியாத போது நெருங்கும் வழியும் தெரியவில்லை.. அவனுக்கு. பாவம், கண்ணால் பார்த்து படிக்கும் கலையும் தெரியவில்லை அந்த தந்திரனுக்கு. 

எனவே ‘அவளை ரசனையாக பார்ப்பது தான் உன் தலை எழுத்து ராஜா…’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டான். இதில் வைரமுத்து வேறு நினைவு வந்தார்… ‘பத்தடி தூரத்தில் அமிர்தம் இருந்தும்… பட்டினி கிடந்து பழகுவாய்…’ என அவரின் அந்த வரி மட்டும் நினைவு சரியாக வரும். கூடவே பெருமூச்சு வரும்.

ஆனால், முன்போல் தன் பெருமையும் சொல்லுவதில்லை அவன்.. ஏனோ வருவதில்லை.. இப்போது அவளை பற்றி அறியத்தான் ஆவல் வந்தது.. 

Advertisement

முன்பெல்லாம் அவள் அருகில் வந்தாள்… அவளின் கைகளை சட்டு சட்டென பிடித்து.. பேசும்… கலையும் கைவிட்டு போனது அவனுக்கு. ஏனோ தள்ளி நின்று கொண்டான்.. 

அத்தோடு.. இப்போதுதான்.. அதுவும், தாமுவிடம் பேசிய பிறகுதான் தெரிந்ததே.. ‘அவளுக்கு என்னை பிடிக்கும்’ என. எனவே உரிமையாய் பார் அருகில் வருகிறேன் என்பதாக தள்ளி இருந்து கொண்டான் கணவன். 

ஆனால் அதெல்லாம் எத்தனை நாட்கள் என தெரியவில்லை. அவனின் அதிரடிக்கும்… அவளின் பொறுமைக்கும் இன்னும் எத்தனை நாட்கள் லிங்கா கட்டுப்பட்டு நிற்பான் என்பது அவனுக்குதான் வெளிச்சம்.

ம்…. அவளின் அழகு நாளுக்கு நாள் கூடுவதாக கணவனுக்கு எண்ணம்… ம்.. அவ்வளவு அவளை ரசித்திருந்தான். அதுவும் இரவு உடையில்.. மெலிதான அந்த காட்டன் நைட் பேன்ட் டாப்பில்… அவளின் பெண்மை வளைந்து நெளிந்து அவனை இம்சிக்கும்… கொஞ்சம் கொஞ்சம்.. எல்லை மீறலாமே எனத்தான் தோன்றும் அவனுக்கு.. ஆனாலும்… கைகட்டி அமர்ந்திருந்தான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

ஆனால் அதெல்லாம் அவளுக்கு புரியவில்லை. அன்றைய அவனின் விளக்கம் எல்லாம் அவள் மூளையில் ஏறிற்றுதான். ஆனால், மனதில் என்னமோ குறை.. என்னமோ குறையென அவள் மனம் உழன்றாலும் மூளை சரியாக சொல்லும்.. ‘எப்படி என்ன விரும்பி கேட்டார்… கண்ணில் அதற்கான சாயலே இல்லையே… ஒருவேளை.. இ..இதுவும்… அவரின் ஒரு முகமோ… நாளை வேறு ஏதாவது முகம் இருக்குமோ… ம்மா…’ என தன்னை அறியாமலே ஒரு பயம்… எனக்கு நிலைக்காதோ… அந்த மாதிரி… எ.. எனக்கும்… உரிமையான அன்பு கிடைக்காதோ..’ என ஒரு பயம்… என எல்லாம் சேர்ந்து சக்தி குழப்பத்தில்தான் இன்னமும் இருக்கிறாள்.  

ஹாஸ்டலில் வளர்ந்தவள்… நட்புகள் சொல்லும் கதைகள்.. அவர்களின் வாழ்க்கை முறையையும் தன் வாழ்க்கை முறையையும் எப்போதும் கம்பேர் செய்தபடியே இருந்தவளுக்கு… தன் கணவனும் அப்படி ஏதேனும் நடந்து கொள்வானோ என தோன்ற தொடங்கி இருந்தது. 

காரணம் கணவன் இந்த ஒருவாரமாக அவளிடம் எப்போதும் போல கதைகள் பேசுவதை நிறுத்தி இருந்தான். எனவே அது.. அவன் தன்னை உணர்த்த தவறியதில் சக்திக்கு கொஞ்சம் கொஞ்சம் அவன் தள்ளி நிற்பது போல் தோன்றியது. எல்லாம் சேர்ந்து ஒரு பயம்… சக்திக்கு. 

இதை தனிமையில் நினைத்தால்.. அவளால் உறங்க முடியாமல் போகும்.. எனவே, அவன் இல்லா நேரங்களில், அவள் தங்களின் அறைக்கு வருவதே இல்லை. 

அதனால் அவள் யோசிக்கவேயில்லை அவனை பற்றி.. சிறிது அவள் தனிமையில் இருந்திருந்தால்… லிங்கா என்பவன்… அடங்க தெரிந்த குழந்தை என புரிந்திருக்கும். 

சக்தி… அவனை பிடிக்கும் என்ற நிலைக்கு மேல், செல்ல பயம் வர… என்ன செய்வது.. ‘இந்த வாரம் தான், ஊருக்கு போறோமில்ல… யோசிக்கலாம்’ என நினைத்திருந்தாள்.

இப்போது…. பாவம் சக்திக்கு அந்த புது பட்டு புடவையின் மடிப்பு எடுக்க வரவில்லை, கை வலித்தது. 

அம்மு அழகாக போனில் எதோ பாட்டு ஓட பார்த்துக் கொண்டிருந்தாள். 

லதாக்கு போனில் அழைத்தாள்… சக்தி “அக்கா, கை வலிக்குது க்கா.. கொஞ்சம் மடிப்பு எடுத்து கொண்டுங்க க்கா” என்றாள்.

லதாக்கு வேலை ஓயவில்லை… “வேற புடவை கட்டு டா…” என்றாள்.

ஒருவழியாக ஒரு எல்லோ நிற நுண்ணிய வேலைபாடு… மெல்லிய பட்டு இழை கொண்டு நெய்த ஒரு புடவையை கட்டிக் கொண்டு.. ஒரு கை நிறைய கண்ணாடி வளையலை அடுக்கி கொண்டு.. மற்றொரு கையில் ஒரு வாட்ச் மட்டும் அணிந்து, வந்தாள்.. அம்முவுடன் சக்தி.

அவள் மாடி படி இறங்க.. இறங்க… லிங்காக்கு அந்த சத்தம் தன் மனைவியின் வருகையை… சொல்லியது. ஹாலில் அமர முடியவில்லை அவனால், அவளின் அலங்காரம் அவனை இழுத்தது. ஏதோ மஞ்சள் ரோஜா போல அவ்வளவு அழகாக தெரிந்தாள்… முகத்தில் அந்த பிம்புள் மறைந்து.. சின்ன சின்ன தழும்புடன்… அழகாக அவளின் முகம், பிங்க் வண்ணத்தில் மின்ன… திடமான கணவன் காதலனாய் மாறிவிட்டான்.

சக்தி வந்து லதாவுடன் சேர்ந்து கொண்டாள்.. இப்போது வீடு பழகி இருந்தது அவளுக்கு… எனவே சுதந்திரமாக சுற்றினாள்.

சமையலுக்கு ஆட்களை ஏற்பாடு செய்திருந்தனர்… வந்தவர்கள் எல்லோரும் நடுத்தர வயது தம்பதி.. சிறு நிகழ்வுதானே என பெரியவர்கள் தான் வந்திருந்தனர். எனவே லதாவும் காமாட்சியும்தான் சுற்றினர், பேச செய்ய என. 

காவ்யாவின் அறைக்கு சென்றாள் சக்தி அவளிடம் பேசி விட்டு வந்து மீண்டும் ஏதோ பூஜை சாமான் எடுத்து வைக்க என சக்தி இயல்பாய் அந்த வீட்டில் நடமாட… லிங்கா தவித்து போனான். 

ஏனோ இத்தனை நாள் அவனை தாக்காத.. அவளின் இந்த இயல்பு இன்று அவனை ஒரு நிலையில் இருக்க விடாமல் தடுமாற செய்தது… அமைதியாக அவள் மேல் ஒரு கண் வைத்து அமர்ந்து கொண்டான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

முதலில் ஆண்கள் உண்ண அமர.. லதா, பரிமாறினாள். கூடவே சக்தியும் நின்று கொண்டாள். அந்த மஞ்சள் வளையல் அசைய அசைய.. லிங்கா அங்கு… இசைந்து கொண்டிருந்தான் அவள்பால். உண்டு முடித்து எழுந்தனர்.

அம்மு மீண்டும் சக்தியிடம் அமர்ந்திருந்தாள்… கீழே விட்டதில்.. எதையோ எடுத்து வாயில் போடவும்.. சக்தி மீண்டும், அம்முவை தூக்கி கொண்டிருந்தாள். 

இப்போது லிங்கா தன் மனைவியிடம் வந்தான்.. உண்டு முடித்து கை கழுவி… “கொடு டி…” என்றான் மொட்டையாக.

சக்தி “அம்மு போடா….” என்றாள்.

லிங்கா அம்முவை வாங்கும் சாக்கில்… அவளின் இடுப்பில் வருடினான்… துள்ளி குதித்தாள் சக்தி… சுற்றும் முற்றும் பார்த்தபடி. லிங்கா சட்டென ஒன்றுமே நடவாது போல குழந்தையை வாங்கிக் கொண்டு “என் பொண்டாட்டி அழகா இருக்கா… அதான்…” என்றான் கண்ணடித்து.

சக்தி ஸ்தம்பித்து நின்றாள். 

இப்போது பெண்கள் எல்லாம் ‘நாமே போட்டு உண்டு கொள்ளலாம்’ என சொல்லி அமர்ந்தனர். சக்தியும் வந்து அமர்ந்தாள். எல்லோரும் உண்டு முடித்து… அமர்ந்தனர். 

சக்தி, காவ்யா உடன்தான் இருந்தாள். லிங்காக்கு அவளை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை ‘லிங்கா… நீ மோசம் டா’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு.. கண்ணை அவளிடமிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

ஒருவழியாக எல்லோரும் கிளம்பினர். டவுனிற்கு சென்று… கடைகளில் உப்பு சர்க்கரை வாங்கிக் கொண்டு அப்படியே காவ்யாக்கு ஒரு புடவை எடுத்து வந்தனர்.

சக்தி எங்கும் லிங்காவின் அருகில் வந்து நிற்கவில்லை.. இப்போதுதான் திருமணம் ஆனது என சொன்னால் கூட நம்பமுடியாது அப்படி.. காவ்யாவுடனே சுற்றினாள் சக்தி. 

லிங்காக்குதான் சற்று குறை இதில். ஆனால், இது இப்படிதான் என தெரியும் அவனுக்கு.. ஆனாலும் அவளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

பின் வீட்டிற்கு வந்து எல்லோருக்கும்… தாம்பூலம் கொடுத்து மதிய உணவு கொடுத்து… உறவுகளை அனுப்பி வைத்து என அந்த நிகழ்வு இனிதாக முடிந்தது.

லிங்கா மதியமே அலுவலகம் சென்றான் நிற்கவில்லை. மாலை சீக்கிரமே வந்தான்.. சக்தி இப்போது உடை மாற்றி இருந்தாள்.. கவனித்துக் கொண்டான். மேலே சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தான். 

சக்தி டீ.. கொடுக்க.. அவளின் முகம் பார்த்து “ஏன் டி, புடவைய மாத்திட்ட” என்றான். அவன் பேசலாம்.. நான் எப்படி பதில் சொல்லுவது என தெரியாமல் லேசாக சிரித்தபடி வந்துவிட்டாள்.

எல்லாம் சிறப்பாக செய்து கொண்டிருந்தார் லிங்காவின்.. மாமனார்.

நாளை பார்ட்டி என்ற நிலையில். மூர்த்தி, இரவு உண்டு முடித்து… ஹாலில் அமர்ந்தார் பசங்களிடம் பேச வேண்டும் என அமர்ந்திருந்தார்.

இருவரும் வந்தனர்.. மூர்த்தி “லிங்கா… பார்த்து… ஏதாவது ரகளை ஆகிட போது… பொறுப்பா முடிச்சிடு… எங்கேயும் ரூம் அது இதுன்னு… இழுத்து விடாத… எல்லாம் அந்த இடத்திலேயே முடித்திடு…“ என்றார்.

லிங்கா எல்லாவற்றுக்கும் ஆடு திருடியவன் போல்… மண்டையை உருட்டினான். இளா சிரித்தபடி அமர்ந்திருந்தான் ஏதும் தெரியாதவனாக. 

மூர்த்தி “என்ன டா… முழிக்கிற…” என்றார்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

லிங்கா தன் அப்பாவிற்கு தெரியாமல் ஏதும் செய்ய கூடாது என மாறி இருக்கிறானே எனவே எல்லாவற்றையும் ஒப்புவித்தான்.. ஆம், பார்ட்டி பெரிது… இது தாமுவும் சேர்ந்து தருகிறார்… சாரங்கன் வருகிறார்… ஊரில் உள்ள முக்கிய புள்ளி எல்லாம் அழைத்து கிட்டத் தட்ட அடுத்த ஆறு மாதங்களில் வர போகிற தேர்தலுக்கு ஒத்திகை பார்ட்டி இது… என எல்லாவற்றையும் சொன்னான் தனையன்.

மூர்த்தி “எல்லோரையும் கையில் வச்சிக்க… கமிஷனர் கிட்ட ஒரு வார்த்தை திரும்பவும் சொல்லிடு… லோக்கல் செக்யூரிட்டிக்கு சொல்லிடு… உன்னை நம்பி தாமு இறங்கறான். பார்த்து பதமா நடந்துக்க… நம்ம வீட்டு விஷயம் வெளியே வரக் கூடாது. இளா, நீ போ…. கூடவே இரு…. ஜாக்கிரதை” என்றார். 

மூர்த்தியால், தந்தையாக இதை எல்லாம் இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை… பிள்ளைகள் சொல்லும் போது, மரியாதையாக, தானே ஒதுங்கிக் கொண்டார்… தேவையான அறிவுரைகள் மட்டும் தந்து. இன்றைய சூழ்நிலையில் தேவைகள் அதிகமாக.. அதிகமாக.. ஆடம்பரமும் தேவையாக மாறி விட்டது போல என நினைத்துக் கொள்வார்.

தந்தை அந்த பக்கம் போனதும்… இளா சிரித்தான்.

லிங்கா “ஏன் சிரிக்கிற…” என்றான்.

அண்ணன் “டேய்… உன் மாமனார் படும்பாட பார்த்தா.. இன்னும் எத்தனை பொண்ணு இருந்தாலும் உனக்குத்தான் கொடுப்பார் போல.. என்ன டா சொக்கு பொடி போட்ட அந்த மனுஷனுக்கு…. அப்படியே பம்பரமா சுத்துறாரு….” என்றான் கிண்டலாக.

லிங்கா சிரித்தான் “நம்ம பர்பாமன்ஸ் அப்படி டா… பொறாமை பிடிச்சவனே… போ.. போ… பார்ட்டிக்கு, அண்ணிக்கிட்ட பர்மிஷன் வாங்கு…” என்றவன்.. மேலே தனதறைக்கு வந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!