Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 24 2

 

இன்று சீக்கிரமாக வந்தாள் சக்தி, தங்களின் அறைக்கு.

சக்தி உள்ளே வர… எப்போதும் அவள் வந்தவுடன் லிங்கா வெளியே செல்லுவான். இன்றும் அப்படி நடக்க.. இவளும் உடை மாற்றி கதவை திறந்தாள்.

அங்கே காணோம் லிங்காவை… பத்து நிமிடம் காத்திருந்து பார்த்தாள்.. காணோம் எனவும்.. மொட்டை மாடிக்கு சென்றாள்.. அங்கேதான் லிங்கா உலாவிக் கொண்டிருந்தான்.



Advertisement

இவளும் வந்து நின்றாள்.. லிங்காக்கு இவ்வளவு அமைதியாக எல்லாம் இருந்ததே இல்லை அவன்.. ஆனாலும் அவளை கண்டுக்காமல்.. அமைதியாக நடந்தான்.

சக்திக்கு, முதலில் அவள் பேசியதில்லை எப்போதும் கணவன்தான் பேசுவான். எனவே இன்று திணறினாள், எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. 

ம்… நாளை காலையில் சக்தி ஊருக்கு செல்ல வேண்டும், வீட்டில் எல்லோரிடமும் சொல்லியாகிற்று.. தன் கணவனிடம் மட்டும்தான் பாக்கி.. அதான் வந்து நின்றாள்.

Advertisement

சக்தி திணறி… தடுமாறி… “என்னங்க…” என்றாள்.

Advertisement

லிங்கா அப்படியே சோம்பல் முறித்தபடியே “ம்…” என்றான்.

“நான் நாளைக்கு காலையில காலேஜ் போறேன்… அங்க ஊட்டிக்கு.” என்றாள் திடமான குரலில்.

லிங்காக்கு அதிர்ச்சிதான்.. தூக்கிய கைகள் அறை நொடி அப்படியே நின்றது.. சுதாரித்து “ஓ… “ என்றான்.

Advertisement

தயக்கமெல்லாம் இல்லை லிங்காக்கு “என்ன இப்போ சொல்ற… கிளம்பிட்டு சொல்லி இருக்கலாமே” என்றான் எப்போதும் போல அவனின் சீண்டல் மொழி முன்னால் வந்தது.

சக்தி “நீங்க ஏதும் என்கிட்டே கேட்கல.. அதான் நானும் சொல்லல” என்றாள். லிங்காக்கு அவள் சொல்லுவது சரிதான் என தோன்றியது. ஆனாலும் ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை.

“என்ன கேட்கனும்… இதெல்லாம் நீதான் சொல்லனும்… ஸ்கூல் படிக்கிற புள்ளைய கல்யாண செய்துகிட்டு… நான் பட்ர பாடு இருக்கே” என்றான் இறுதி சொற்களை வேண்டுமென்றே சத்தமாக முனகியபடி.

சக்திக்கு இதற்கு என்ன பதில் சொல்லுவது என தெரியவில்லை… “இடியட்…” என தன்னையும் மீறி சொல்லியவள் கீழே சென்றாள்.

லிங்கா “ஹேய்… என்ன என்ன சொன்ன” என கேட்டுக் கொண்டிருந்தான். 

சக்தி கீழே இறங்கிவிட்டாள்.. படபடவென கீழே இறங்கினான்.. சக்தி போனை எடுத்து அப்போதுதான் அமர்ந்தாள்.. 

லிங்கா போனை பிடுங்கி தூர வைத்தான் “என்ன சொன்ன… இடியட்டா…. யாரு, நானா…” என குனிந்து அவளிடம் கேட்க… அவனின் திடீர் கோவத்தில் அரண்டு போனாள்..

லிங்காக்கு அந்த பயந்த முகம் இன்னும் கோவத்தை கொடுக்க… “என்ன டி என்னை பார்த்தா.. காட்டுமிராண்டி மாதிரியா இருக்கு… எப்போ பார்த்தாலும் வெறிக்க வெறிக்க பார்க்கற… அவ்ளோ கொடுமைக்காரனா நானு… 

கல்யாணம் ஆகி நானும் இவ்வளவு பொறுமையா இருக்கேன்.. நான் இடியட்டாம்… என்னிக்காவது என் கிட்ட வந்திருக்கியா நீ…  அப்படி பார்க்காத டி… என்ன செய்துடுவேன் உன்னை” என்றான் அவளின் பார்வையின் தாக்கத்தில்… 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

என்றுமே அந்த பார்வையில்.. அவன் தள்ளியே நிற்பான்… இன்று ஏனோ ஆதங்கம்.. வர.. அவளின் கை பிடித்து எழுப்பினான்… அருகே சுண்டி இழுக்க… நடுங்கியபடியே அவன் மேல் சாய்ந்தாள்… “இப்படி செய்துடுவேன்னு பயமா… “ என சொல்லி அவளின் முகத்தை அருகே இழுத்து வன்மையாக எல்லா இடத்திலும் முத்தமிட… 

சக்திக்கு இன்னும் இன்னும் பயம் வந்தது அவனின் செய்கையில்.. அவனின் திடமான தேகம்.. இன்று மிரட்டியது.. அவனின் கோப முகம்… எதை எதையோ கற்பனை செய்ய வைத்து… பட்டென அவனின் கையை உதற… 

லிங்கா, இப்போது அவளின் கையை விடுத்து இடுப்பை பிடிக்க… சக்தி சுதாரித்து.. ஒரு தவறு செய்தாள்… “பளார் “ என கன்னத்தில் ஒன்று விட்டாள்.  

அவ்வளவுதான்.. இது வரை எதற்கும் ஏங்கியிராத லிங்கா… இவளின் தாக்காத்தில் தன்னை இழந்தான்… வாயே திறக்கவில்லை, அவளை வாரி எடுத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தான்… 

இன்னும் அவளின் பயம்.. அந்த முகத்தில் அதிகமாக தெரிய லிங்கா தன்னை இழந்தான். படபடவென அவளின் உடை கிழிக்க பட்டது… கணவனால். ஒரு கணவனின் ஆதங்கம் சொல்லியது அந்த சத்தம்.. அப்போதுதான் மனைவிக்கு ஒன்று புரிந்தது… அவனின் தோழியல்ல நான்.. அவனின் மனைவி.. என்னுடைய எல்லாம் அவனை பாதிக்கும் என புரிந்தது.. காலையிலிருந்து கணவன் தன்னை ஆசையாக பார்த்து புரிந்தது.

சக்தி திடமானாள் “லிங்கா… லிங்கா….” என மெல்ல அழைத்தாள் அவன் அவளை பேசவிடாமல் செய்து கொண்டிருந்தான்.

சக்தி “லிங்கேஷ்வர்…” என கத்த.. கத்த…

லிங்கா இன்னும் இன்னும் அவளை சாய்த்தான்… சக்தி அவனை தள்ள தள்ள லிங்கா திமிறினான்.. சக்தி “என்ன பண்றீங்க லிங்கா… நான் உங்க வைப்… இ…இப்படி… லிங்கா.. லிங்கா…” என அழ தொடங்கினாள்.

லிங்கா ஓய்ந்து போய் அவள் மேலேயே சாய்ந்து கொண்டான் அமைதியாக. 

சக்திக்கு ஏதேதோ கேவல் நிற்கவில்லை… கணவன் மனைவி இருவரும் சொல்ல முடியா மனவலியில் இருந்தனர். 

யாராவது முதலில்.. “ம்..” என்றால் கூட போதும் அடுத்தவர் பற்றிக் கொள்வர் வார்த்தைகளை. ஆனால், இருவரும் அமைதியாக எதையோ மனதில் அசை போட்டபடி இருந்தனர்.

நொடிகள் நிமிடங்களாக. இப்போதுதான் லிங்கா நிமிர்ந்து மனையாளை பார்த்தான்… தன்னுடைய இயலாமையை அவளின் உடை கிழிசலில் உணர்ந்தான்.

எழுந்து விளக்கை அனைத்தான்.. இப்போது மெல்ல மனையாளின் அருகே வந்து அவளை தன்மேல் போட்டுக் கொண்டான்… அப்படியே கண் மூடி படுத்துக் கொண்டான்.

அழகான நேரத்தை இப்படி… ஆரம்பிப்பாயா… என அவனை, அவனே கேட்டுக் கொண்டான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

சக்தி இன்னும் கேவிய படியே இருந்தாள்.. அவளை ஆறுதல் படுத்தவில்லை.. அப்படியே அவளின் முதுகை நீவியபடியே தன்னுடன் சேர்த்துக் கொண்டான் அவ்வளவுதான். பேசவில்லை லிங்கா.

மெல்ல மெல்ல அழுது முடித்து சக்தி அவனிடமிருந்து விலக நினைக்க… லிங்கா “ஏன் சக்தி… என்னை எதுக்கு அவாயிட் பண்ற… என்னை பிடிச்சுதானே கல்யாணம் செய்துகிட்ட…” என்றான். 

சக்தி மெல்லிய முனங்கலாக “ம்.. “ என்றாள்.

லிங்கா அவளை கீழே விட்டு… அவளின் முகம் பார்க்கும் படி.. படுத்தவாறு… “உனக்கு என் மேல சந்தேகமா…” என்றான்.

சக்தி தலையாட்டினாள் இல்லை என்பதாக.. தோட்டத்தில் ஒளிர்ந்த விளக்கின் ஒளியில்.. அவளின் தலை உருட்டல் தெரிந்தாலும்.. லிங்கா “சொல்லு… சந்தேகமா” என்றான்.

சக்தி “இல்லை.. ஆனா, பயமா இருக்கு” என்றாள்

“ம்.. பயமா எதுக்கு” என்றான் இப்போது முகம் இளகி இருந்தது..கணவனுக்கு. அந்த பதில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது அவனை.. பயம் எனபது ஏதேனும்.. சிறுபெண் பயமாக இருக்கும் என நினைத்தான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

சக்தியும் கொஞ்சம் இளகி இருப்பதாக உணர்ந்தான் கணவன். எனவே அவளின் இதழில் லேசாக மீசை உரச முத்தம் ஒன்றை வைத்தான்.

அவளின் உடல் சிலிர்த்தது… அதை உணர்ந்த கணவன் மீண்டும் ஒரு முத்தம் வைக்க… அவனுடன் ஒன்றினால் சக்தி. லிங்காக்கு அண்ட் லேசான உரசல்.. ஆனந்தமாக இருந்தது… “சொல்லு.. டி” என்றான் மீண்டும் கேள்வியாக.

சக்தி “ம்… அது.. என் ப்ரெண்டுக்கு…” என தொடங்கி ஏதோ சொன்னாள்… அந்த தோழியின் கதையை சொன்னாள்… இன்னும் கதைகள் சொன்னாள். 

லிங்கா இப்போது பொறுமையாக கேட்டுக் கொண்டான். எல்லாம் கேட்டு முடித்து… “ஆக, எல்லோரும் அப்படியே இருப்பாங்க… சரி நானும் அப்படிதான்… என்ன பண்ண போற” என்றான் இலகுவாக.

மனையாளின் உடல் இறுகியது… இப்போது நிமிர்ந்து படுத்துக் கொண்டான் ஓரிரு நிமிடம் ஒரு அமைதி.

லிங்கா பெருமூச்சு விட்டு “இதெல்லாம் வார்த்தையில் வரது இல்ல சக்தி… புது உறவு.. புது மனுஷங்க.. புது சொந்தம் எல்லாம் பயமாத்தான் இருக்கும்.  நான் கூடவே வருவேன்… கண்டதையும் மனசில் போட கூடாது. “ என்றவன் அவளை தன்னை பார்ப்பது போல திருப்பிக் கொண்டான் “சொல்லு எப்படி சொல்லனும்ன்னு சொல்லு… அப்படியே சொல்றேன்… ஐ லவ் யூ ன்னு சொல்லனுமா… இல்ல, நான் உன்னை கடைசி வரை காப்பாத்துவேன்னு தமிழ் படம் போல சொல்லனுமா… எப்படி சொல்லனும், எனக்கு சொல்ல தெரியலை… உனக்கு புரிய வைக்க தெரியலை…” என்றான் தோற்றுவிட்ட குரலில்.

சக்தி “இல்ல இல்லங்க… சாரி..” என்றாள்.

லிங்கா கூலாகினான்… இரண்டொரு நிமிடம் அமைதியாகினான். இப்போது சக்தி அவனின் கைகளுடன் தன் விரல்களை பினைத்துக் கொண்டாள்.. மெல்ல அவன்புறம் சாய்ந்து படுத்தாள்.

லிங்காக்கு மனம் சமன்பட்டது.. மனையாளின் இந்த செய்கையில். சக்தியை இன்னும் தனக்குள் இழுத்துக் கொண்டான்.. ரகசிய குரலில் “இப்படி எல்லாம் யாரும் கொடுமை படுத்தமாட்டங்க..” என்றான்.

சக்தி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.. புரியாமல் புருவம் உயர்த்தி “என்ன” என்றாள்.

தன் விரல் கொண்டு அவளின் தூக்கிய புருவத்தை அளந்தவன் “இந்த மாதிரி நீ இருந்தும்… நான், சும்மா பேசிகிட்டு இருக்கேனில்ல… அத சொன்னேன்” என்றான் அதே ரகசிய குரலில்.

பட்டென சக்தி தன் கரங்களால் அவனின் கண்ணை மூடினாள்… லிங்கா “ம் கூம்… இப்போ பாரு..” என்றவன் அவள் மேல் மொத்தமாக சரிந்தான்… கை தன்போல் விலகியது… 

லிங்கா “சக்தி..” என்றான் யாசகனான குரலில்..

சக்தி “ம்…” என்றாள் சம்மதமான குரலில்.

காட்டு தீயாக மாறினான் கணவன்… மெல்ல மெல்ல அவளையும் இழுத்துக் கொண்டான் தனக்குள். ஆழ்ந்து.. பொறுமையாக அவளுள் நுழைந்தான்.. கற்பனை.. கனவு என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஜ்வாலையாக பற்றிக் கொண்டனர் இருவரும். கோர்த்த கரம் பிரியாமல்… அவள் மனம் நோகாமல்.. அவளை தனக்காக செய்து கொண்டு.. அவளுக்குமாக தன்னை கொடுத்து… மெல்லிய சுடராக இன்னும் பிராகசித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

“தீ தீ தித்திக்கும்….

தீண்ட தீண்ட சிவக்கும்….

தேன் தேன் கொதிக்கும் தேன்…

தேகம் எங்கும் மிதக்கும்….

ஜோதியில் சேர வா… 

இன்னும் என்ன தயக்கம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!