Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 4

அத்தியாயம் 4

அந்த மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் கூடி இருக்கும் அனைவர் முகமும் உற்சாகமாக இருந்தது. 



Advertisement

அருண், முருகம்மை ஆச்சி , சிவப்பிரகாசம், பார்வதி, விஸ்வம் குடும்பம், அமுதா குடும்பம், ராஜவேல் செந்தில்நாதன் குடும்பங்கள், எல்லோரும் இருந்தார்கள்.

பிரசவத்திற்கு மருத்துவர் கூறிய நாளுக்கு இன்னும் ஒரு வாரம் இருந்த நிலையில், சாலாவிற்கு வலி வந்துவிட்டது. அருணும் முருகம்மை ஆச்சியும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். செய்தி அறிந்து அனைவரும் வந்துவிட்டனர்.

Advertisement

Advertisement

அமுதா, விஸ்வம் இருவரும் அக்காவிற்கு குழந்தை பிறக்கும் போது உடன் இருக்க வேண்டும் என்று முன்பே வந்துவிட்டனர். ஆனால், சாலா அருணுடன் தங்கள் வீட்டில் தான் இருந்தார். எல்லா சூல்நிலையிலும் தனக்கு துணையாக இருந்த கணவருடனே இருக்க விரும்பினார். 

அன்று பௌர்ணமி, வைகாசி விசாகம். எல்லோரும் முருகனை வேண்டிக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார்கள். ‘வீல்’ என்ற குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அனைவர் முகத்திலும் ஆசுவாசம்.

Advertisement

ஒரு செவிலியர் வெளிய வந்து, ‘சுக பிரசவம், தாயும் சேயும் நலம்’ என்று கூறிவிட்டு உள்ள சென்றுவிட்டாள்.

“என்ன குழந்தைனு சொல்லலையே?” என்றார் பார்வதி முருகம்மையிடம்.

ஐந்து நிமிடங்கள் சென்று, வெள்ளை துண்டில் சுற்றி குழந்தையை கொண்டு வந்தார் மருத்துவர். முருகம்மை ஆச்சி தான் முதலில் வாங்கினார்.

இரண்டு கண்கள் போதவில்லை குழந்தையின் அழகை பார்ப்பதற்கு. சுருள் சுருளாக முடி… வெள்ளை நிறம் என்று கூற முடியாது.. மஞ்சள் கலந்த சிவப்பு நிறம்.. கொலு கொலு என்று இருந்தது குழந்தை. அய்யா முருகா என்று முருகம்மை ஆச்சி உணர்ச்சி மிகுதியால் கூறினார்.

முருகன் பெயரை கேட்ட உடனே கண்களை விரித்து பார்த்தது குழந்தை. தெய்வ செயலாக இருந்தது.

“ பெண் குழந்தை அம்மா “ என்றார் மருத்துவர். அனைவரும் முந்தி அடித்துக்கொண்டு எட்டி எட்டி குழந்தையை பார்க்க  முயற்சி செத்தனர்.

“எல்லோரும் வரிசையில நில்லுங்க பா “ என்றாள் தெய்வானை. அனைவரும் அவளை திரும்பி பார்க்கவும், “இப்படி முட்டி மோதி பிள்ளையை பார்க்க முடியாது. எல்லோரும் தூக்கினா பிள்ளைக்கு மேல் வலிக்கும். அதனால வரிசையில் நில்லுங்க. அத்தை வந்து காட்டுவாங்க” என்றாள்.

வகுப்பு மாணவர்கள் போல உடனே அனைவரும் வரிசையில் நின்றனர்.

முருகம்மை ஆச்சி மருத்துவரை பார்த்து, ரொம்ப நன்றி டாக்டர் என்றார். 

அருண், “சாலா எப்படி இருக்கா?” என்று  கேட்டார்.

“ரொம்ப நல்ல இருக்கா அருண். இவ்வளவு மனதைரியத்துடன் பிரசவத்தை எதிர்கொண்ட யாரையும் என் அனுபவத்துல நான் பார்த்ததே இல்லை. முருகா  சரணம் அப்படின்னு ஒரு தடவை தான் சொன்னா  சாலா. அப்புறம், அழுகவோ, கத்தவோ இல்லை. எனக்கே முருகன் மேலே பக்தி வந்திடுச்சுனா பாருங்க, என்று கூறி, பாருங்க உங்க மகளை.. பார்த்துட்டு நர்ஸ் கிட்ட கொடுத்துடுங்க. ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு சாலாவை பார்க்கலாம்” என்று கூறி  சென்றுவிட்டார் மருத்துவர்.

இந்தா  அய்யா, பிள்ளையை வாங்கிக்க என்று தன்  பேத்தியை மகன் கையில் வாகாக கொடுத்தார் முருகம்மை ஆச்சி.

அருணின் கண்களில் இரு துளி கண்ணீர் வந்து விழுந்தது. தவமிருந்து முருகன் கொடுத்த வரமல்லவா?

மூன்று தலைமுறைகள் கழித்து அவர்கள் குடும்பத்தில் பிறந்திருக்கும் முதல் பெண் குழந்தை.

பிறகு முருகம்மை ஆச்சி எல்லோருக்கும்  வரிசையாக குழந்தையை காட்டினார். 

யாராலும் குழந்தையிடம் இருந்து கண்களை விலக்கவே முடியவில்லை. எத்தனை குழந்தைகளை பார்த்திருந்தாலும் இப்படி தேஜஸுடன் ஒரு குழந்தையை யாருமே பார்த்ததில்லை.

கடைசியாக பார்வதியின் கையில் கொடுத்தார் முருகம்மை. சிவப்பிரகாசம் தான்  மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தார். தன் செல்ல மகளின் வாழ்வில் ஒளியேற்ற வந்த தெய்வ குழந்தையை கண்ணீர் மல்க பார்த்தார்.

“வேலன் மகளே! “ என்று தான் குழந்தையை அழைத்தார் முதன் முதலில்.

சாலாவிடம் அருண் தான் குழந்தையை காண்பித்தார். பெண் குழந்தை என்றார் மென்மையான குரலில்.

இருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்கள். வார்த்தைகள் இன்றி அந்த நிமிடங்களை அனுபவித்தனர். புரிதல் இருக்கும் இடத்தில வார்த்தைகள் தேவைப்படுவதில்லை எப்பொழுதும் .

“முருகம்மை” என்று அப்பத்தாவின் பெயரை வைத்தார்கள். பள்ளியில் கொடுப்பதற்கு, “விசாகா” என்று பெயர் வைத்தனர்.

பிறந்தன்றில் இருந்தே அனைவராலும் கொண்டாடப்பட்டாள் முருகம்மை என்ற விசாகா. ஆயா, அய்யா, அப்பத்தா, சித்தி, சித்தப்பா மாமா மாமி என்று மாற்றி மாற்றி யார் கையிலாவது தான் இருக்கும் குழந்தை. எவ்வளவு கூறினாலும் யாரும் கீழே விட மாட்டார்கள். 

எட்டு  மாதங்கள் சென்றது. அன்று தை பூச திருநாள். மொட்டை அடித்து சந்தனம் பூசி, குட்டி பட்டு பாவடை அணிந்து ஒய்யாரமாக தன் அப்பத்தாவின் கையில் இருந்தாள் விசாகா.

அய்யா, என் வேண்டுதலை நிறைவேத்திட்ட  அய்யா.. என்று குழந்தையை தொட்டிலில் போட்டார் முருகம்மை ஆச்சி நெகிழ்ச்சியாக. தொட்டிலுக்கு முன்னும் பின்னும் செந்திலும் ராஜாவும் ஓடினார்கள். உடன் வள்ளியும் தெய்வாவும் சென்றார்கள். தங்கள் குழந்தைக்கு கூட உடன் செல்லாதவர்களுக்கு விசாகாவை தனியே விட மனமில்லை. செந்திலின் பிள்ளைகள் வெற்றி, வீரா ராஜாவின் மகன் கதிர் மூவரும் இவர்களுடன் தங்கைக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே ஓடினார்கள். ராஜாவின் இரண்டரை வயது சுப்புவை  மட்டும் அருண் தூக்கிக்கொண்டு இவர்களுக்கு பின்னால் சாலாவுடன் சென்றார்.

அடுத்த நாள் காலையில் தான் தத்து கொடுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். யாரும் எது சரி? எது தவறு? என்று கூறவில்லை. சாலாவின் விருப்பப்படி அணைத்து ஏற்பாடும் செய்யப்பட்டது.

—————————

காலையில் கோவிலுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தனர் அனைவரும்.

“இந்த காலத்தில இப்படி யாராவது இருப்பாங்களா?” என்றாள்  வள்ளி தெய்வாவிடம்.

அவளுக்கு மனது பொறுமிக்கொண்டே இருந்தது.

 

“தங்கபிள்ளையை எதுக்கு தத்து கொடுக்கணும்?” தங்கையிடம் புலம்பினாள் வள்ளி.

“ஏன் வள்ளி அப்படி சொல்ற. விசாகா பிறந்ததே அந்த முருகனால் தானே? நீயே இப்படி பேசலாமா? உடன் இருந்து நாம எல்லாத்தையும் பார்த்துகிட்டு தானே இருக்கோம்.?” தெய்வாவும் பொறுமையாக பதில் கூறினாள் தமக்கைக்கு 

“இப்ப தத்து கொடுத்து என்ன ஆகப்போகுது?  முருகன் வந்தா கேக்க போறான்? நம்ம பிள்ளையாவே வளரட்டுமே?”

“வள்ளி..  இதுல என்ன இருக்கு? எதுக்கு உனக்கு இவ்வளவு ஆதங்கம்?”

“இல்ல தெய்வா.. எனக்கு சாலாச்சி நிலைமையை யோசிச்சு தான் கவலை. அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்ல. இத்தனை வருஷம் அப்புறம் பிறந்த பிள்ளையை தத்து கொடுக்க?”

இவர்கள் பேசுவது  சாலாவின் காதில்  விழுந்தது.

“எனக்கு எந்த வருத்தமும் இல்லை வள்ளி . இது எனக்கும் முருகனுக்கும் ஆன ஒப்பந்தம். தத்து வாங்கணும் என்பது எங்க விதின்னு சொன்னது ஜாதகம். அப்ப, ‘பிள்ளை வரம் கிடைச்சா உங்கிட்ட கொடுத்துட்டு அப்புறம் உங்கிட்ட இருந்தே வாங்கிக்கிறேன்னு’ முருகனுக்கு வாக்கு கொடுத்திருக்கேன். வேலன்  கொடுத்த வரத்தை, சோதிச்சு பார்க்கிறது நியாயமில்லை. அவனுக்கு கொடுத்த வாக்கை மீறுவது தர்மமில்லை. விசாகா வேலன் மகளா நம்மக்கிட்ட வளரட்டுமே. உரிய  நேரம் வரும்பொழுது வேலன் எனக்கு தத்து கொடுத்திடுவான் “ என்றார் சாலா உணர்ச்சிவசமாக. அனைவரும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.

“இல்ல ஆச்சி, உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு தான் யோசிச்சேன்”

“உன் மனசு புரியுது வள்ளி… அந்த குமரனின் மகளை வளர்க்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். எனக்கு மனதுக்கு வருத்தம் எப்படி இருக்கும்? பொங்கும் பாலை போல மகிழ்ச்சியால் தளும்பி இருக்கு என் மனசு, எல்லோரும் சந்தோசமா வாங்க கோவிலுக்கு புறுப்படுவோம். வேலன் கிட்ட முழு மனசா விசாகாவை கொடுப்போம் ”, என்று அனைவரையும் கோவிலுக்கு அழைத்து சென்றார் விசாலாட்சி.

குடும்பமாக எல்லோரும் மலையகோவிலுக்கு வந்தார்கள். கீழ் கோவிலில் சாமி தரிசனம் முடித்து எல்லோரும் மேல் கோவிலுக்கு வந்தார்கள்.

 

ராஜ அலங்காரத்தில் வீற்றிருந்தார் அந்த தண்டாயுத பாணி. முன்னரே பூசாரியிடம் தெரிவித்திருந்ததால் ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக செய்திருந்தார்.

முறைப்படி சாலாவும் அருணும் முருகம்மை என்ற விசாகாவை முருகனுக்கு தத்து கொடுத்தார்கள். அந்த வேலவனின் மகளாக தத்து கொடுக்கப்பட்டாள் விசாகா.

எல்லா சடங்குகளும் முடிந்து  சன்னிதானத்திற்கு முன்புறம்  எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

அருணின் தம்பி குடும்பங்கள்,சாலாவின் அம்மா, தம்பி, தங்கை குடும்பங்கள், முருகம்மை ஆச்சி, பிள்ளைகள் என்று அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்

வரம் வேண்டு வருவோர்க்கு

அருள்வாண்டி ஆண்டி

வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்ட

பழனி மலையாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பழனி மலையாண்டி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி

வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

பழனி மலையாண்டி பழனி மலையாண்டி

சாலாவின் அப்பா சிவப்பிரகாசம் தன்  கணீர் குரலில் பாடினார். பின் அனைவரும் நிறைந்த  மனதுடன் பூசைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!