Skip to content
Post Views: 3,252
அத்தியாயம் 12
வள்ளி வள்ளி என வந்தான்
வெற்றி வேலன்தான் ஓ..ஓ
Advertisement
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்
Advertisement
விசாகாவும் கதிரும் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள்.
Advertisement
இரண்டு நாட்களாக இதே இரண்டு வரிகளை பாடி வெற்றியை கடுப்பேற்றி கொண்டிருக்கிறார்கள்.
Advertisement
“டேய், கிண்டலடிக்க பாடினாலும் ஒரு நியாயம் வேண்டாமா? வேற பாட்டாச்சும் மாத்துங்களேன்” என்றான் சுப்பு இப்பொழுது.
“நல்ல கேளுடா சுப்பு.. ஓவரா போறாங்க “ என்றான் வெற்றி துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்.
அப்பொழுது வெற்றியின் கைபேசி “வள்ளி வள்ளி என வந்தான்… வடிவேலன் தான்..” என பாடியது. அது தான் வெற்றியின் ரிங் டோன் தன் வருங்கால மனைவியின் பிரத்தியேக அழைப்பிற்கு.
அசடு வழிந்துகொண்டே வேகமாக கைபேசியை எடுத்துக்கொண்டு தனதறைக்குள் புகுந்துவிட்டான் வெற்றி.
வெற்றிவேல் அமெரிக்காவில் முதுகலை பட்டம் முடித்து, அங்கேயே ஆறுமாதங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறான். இப்பொழுது திருமணத்திற்காக தாய் நாடு வந்துள்ளான். அவனுக்கு வீட்டில் பார்த்த பெண் தான் வள்ளிமயில்.
திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. திருமணம் முடிந்தவுடன் மனைவியுடன் அமெரிக்கா செல்வதாக ஏற்பாடு. வீட்டின் தலைமகன் தூர தேசம் செல்வதில் அனைவருக்கும் சிறு மனசுணக்கம் உண்டுதான். ஆனால், அவனது விருப்பம் அது எனும்போது யாரும் தடை கூறவில்லை.
பெரியவர்கள் ஆறு பேரும் பத்திரிகை வைத்து அழைப்பதற்கும் இதர திருமண வேலைகளை பார்ப்பதற்கும் என ஊருக்கு சென்றிருந்தார்கள்.
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அனைவரும் ஓய்வாக பேசிக்கொண்டிருந்தார்கள். விசாகா பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதி ரிசல்ட்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.
சாலா வீட்டில் சமையல் வேலை செய்பவர் ஊர் கோவில் திருவிழா என்று அணைத்து வேலைகாரர்களும் மூன்று நாள் விடுமுறை என்று சென்றுவிட்டார்கள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அன்னம், கைநிறைய பைகளுடன் உள்ளே நுழைந்தார்.
“முருகு, இந்தா பிடி…”
“நீங்க ஏன் அன்னும்மா எல்லாத்தையும் தனியா தூக்கிட்டு வரீங்க.. எங்க மிஸ்டர்.கருப்பன், அவரை அனுப்ப வேண்டியது தானே “ பேசிக்கொண்டே அவர் கையில் இருந்து பைகளை வாங்கிகொண்டாள்.
“அவன்தாண்டா இடியாப்பம் பிழியிறான்.. கடைசி ஈடு பிழிய கொடுத்துட்டு வந்தேன், இடியாப்பம் பாயா கொண்டு வந்திருக்கேன்.. வாங்க சீக்கிரம் எல்லாரும்” என்று டைனிங் டேபிள் நோக்கி சென்றார்.
அடுத்த வினாடியே மின்னலாக அமர்ந்திருந்ததார்கள் அனைவரும். கையில் கைபேசியுடன் வெற்றியும் ஆஜர்.
“சோறு கிடைக்கிற இடம் சொர்க்கம்” என்றான் கதிர்.
“நீங்களும் சாப்பிடுங்க அன்னும்மா” என்றான் பாலு.
“நீங்க வச்சு சாப்பிடுங்க.. இன்னும் வேணும்னா யாரவது ஒருத்தர் வந்து வாங்கிக்கோங்க டா.. அங்க மாமாவும் தம்பியும் சாப்பிடனும். நான் வரேன்” என்று சென்றுவிட்டார்.
“அன்னுமா மதியம் நாங்களே பார்த்துகிறோம், நீங்க அங்கேயும் இங்கேயும் ஒடிட்டே இருக்காதீங்க” என்றான் சுப்பு.
திரும்பி இவர்களை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார் அன்னம்.
அன்னும்மா கைமணம் யாருக்கும் வராது என்று பாராட்டிக்கொண்டே ஐந்து நிமிடங்களில் பாத்திரங்களை காலி செய்துவிட்டார்கள். யார் திரும்ப சென்று வாங்கி வருவது என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
“எல்லாம் எருமை மாடு மாதிரி இருக்கீங்களே.. வந்து வாங்கிட்டு போக முடியாதா” என்று வந்தான் முத்து கருப்பன். இப்பொழுது ஹவுஸ் சர்ஜ்னாக இருக்கிறான்.
“காலையிலே நான் வெஜ்.. யாரு கேக்கறா சொல்ற பேச்சை?” என்று கூறிக்கொண்டே, கொண்டுவந்ததை அவனே அனைவர் தட்டுகளிலும் அழகாக எடுத்து வைத்தான். பிறகு அளவாக பாயாவையும் ஊற்றினான்.
“கோவமா பேசினாலும் பாசக்கரண்டா இந்த டாக்டர்” என்றான் கதிர் சுப்புவிடம்.
விசாகவிற்கும் முத்துகருப்பனுக்கும் இப்பொழுது ஏழாம் பொருத்தம். எல்லாரையும் அவன் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறான் என்று விசாகவிற்கு அவன் மேலே ஒரு காண்டு. அதுவும் அவன் அம்மா கரு புராணத்தை தானே தினமும் பாடிக்கொண்டிருக்கிறார். அதனால் சற்றே பொறாமையும் கூட.
சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க எல்லோரும் என்றான்.
“எங்கே?” கோரஸ் குரல்.
“இன்னிக்கு எங்க ஹாஸ்பிட்டல ஐ கேம்ப். நேத்தே சொன்னேன் இல்ல.. வாலண்டீர் வேணும்னு.. நீ கூட ரொம்ப நல்ல விஷயம் என்று சொன்னியே கதிர், அதுக்கு தான்”
“ஒரு நாள்… ஒரு நாள் லீவு விடக்கூடாதே..” என்று சலித்து கொண்டான் சுப்பு.
அனைவரையும் கிளப்பி உடன் அழைத்துக்கொண்டே சென்றான்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பாலுவை மட்டும் அன்னும்மாவிடம் விட்டு சென்றார்கள்… தன் ஆஸ்தான குரு முத்து கருப்பன் போல மருத்துவர் ஆக துடிக்கும் அறிவுக்கொழுந்து. அவன் படிப்பதற்கு பாடங்களை கொடுத்து விட்டே புறப்பட்டான்.
அனைவரும் இன்னொவாவில் புறப்பட்டனர். வெற்றி கைபேசியில் பேசிக்கொண்டே தான் வந்தான்.
“ஏன்டா சுப்பு, இவன் பேசுறது பக்கத்துல இருக்க நமக்கே கேக்கலையே? அண்ணியாருக்கு கேக்குமா?” என்று அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டான் கதிர்.
“அதான் டா தெரியலை… கல்யாணம்னா இவ்வளவு கஷ்டமா இருக்குமா டா?” என்றான் சுப்பு.
“ஏன் அண்ணா அப்படி கேக்கறீங்க? என்ன கஷ்டம்?” என்று உரையாடலில் தானும் சேர்ந்து கொண்டாள் விசாகா.
“இல்ல ரெண்டு மணி நேரமா, குசுகுசுன்னு சத்தமே வராம பேசறது கஷ்டம் இல்லையா? என்னத்தடா அப்படி மெதுவா பேசறது?” என்றான் சுப்பு.
“நம்ம எல்லாம் மெதுவா பேசறது கஷ்டம் தான்.. “ என்றாள் விசாகாவும்.
“ரொம்ப முக்கியம், அடுத்து என்ன படிக்கிறதுன்னு யோசிச்சா உருப்படலாம்” என்றான் முத்துகருப்பன்.
“இங்க பாருங்க… நான் என்ன படிக்கிறதுன்னு நான் யோசிச்சுக்குவேன். எங்களுக்கும் மூலை இருக்கு. நாங்க என்ன சாப்பிடணும்? என்ன படிக்கணும்? எல்லாம் நீங்க எதுக்கு யோசிக்கிறீங்க?” என்றாள் காட்டமாக.
‘விசா’ என்று வெற்றி ஒரு அதட்டல் இட்டான். கைபேசியில் இருந்தாலும் இவர்கள் சம்பாஷனையில் ஒரு காது வைத்திருந்த வெற்றி தங்கையை அதட்டவும், அதற்கும் முத்து கருப்பனை முறைத்துவிட்டு உம்மென்று வந்தாள் விசாகா. அவளையும் மருத்துவம் படிக்கச் சொல்லி கூறிக்கொண்டிருக்கிறான் முத்து கருப்பன்.
வீரா, டெல்லியில் பிரபல ஆடிட்டரிடம் இரண்டு ஆண்டுகளாக பிராக்டிஸ் செய்கிறான். சென்னையிலே பணிபுரியவிருந்த அவனை முத்து கருப்பன் தான் அனுபவம் வேண்டும், அங்கே சென்றால் எக்ஸ்போசர் இருக்கும் என்று டெல்லி செல்ல கூறினான். இன்னும் ஓராண்டு அங்கேயே வேலை செய்து பின் சென்னையில் தனியாக ப்ராக்டிஸ் செய்யலாம் என்று முத்து கருப்பனின் ஆலோசனை படி செய்ய இருக்கிறான். தன் வீரா அண்ணனை விட இரண்டு ஆண்டுகள் சிறியவனாக இருந்துகொண்டு , இவன் ஆலோசனை கூறுவது விசாகாவிற்கு பிடித்தம் இல்லை.
கதிர் இப்பொழுது யூ.பி.ஸ்.சி எக்ஸாமிற்கு தயார் செய்து கொண்டிருக்கிறான். அதுவும் முத்து கருப்பனின் யோசனை தான்.
சுப்பு, படிப்பில் கொஞ்சம் சுமார். கணக்கு மட்டும் நன்றாக வரும். முத்து கருப்பனின் ஆலோசனை படி பி.எஸ்.சி கணிதம் படிக்கிறான். எப்படியாச்சும் பொறியியல் படிச்சிடு என்று அனைவரும் கூறுகையில், கணிதம் படிக்க சொன்ன முத்துவின் யோசனை அவனுக்கு பிடிக்கவே அதை எடுத்துக்கொண்டான். கடைசி ஆண்டில் இப்பொழுது இருக்கிறான். பிடித்து படித்ததால் அவனே வகுப்பில் முதல் மாணவன். அது அவனுக்கு தன்னம்பிக்கை நிறைய கொடுத்தது. அடுத்து எம்.எஸ்.சி. கணிதம் படிக்க விண்ணப்பித்துள்ளான்.
இப்பொழுது பாலுவும் இவன் சொல்வதை கேட்கவும், நான் கண்டிப்பாக இவன் சொல்வதை கேக்க மாட்டேன் என்று முடிவு செய்துள்ளாள் விசாகா.
“ஆமா வீரா அண்ணா எப்ப வராங்க?” என்றான் முத்து.
“ஆடிட்டரு அடுத்த வாரம் கடைசியா தான் வருவாராம்” என்றான் கதிர்.
அன்றைய காம்ப்பில் இவர்களுக்கு நல்ல வேலை. மதியம் வெளியே சென்று நல்ல ஹோட்டலில் உண்ணலாம் என்று நினைத்த எண்ணத்தில் ஒரு லாரி மண் விழுந்தது. அன்னம் அனைவருக்கும் உணவு கொடுத்தனுப்பி இருந்தார்.
புளியோதரையும் தேங்காய் துவையிலும்.
“காலையில அன்னும்மா சிரிப்புக்கு இது தான் அர்த்தம் போல டா” என்றான் கதிர் பரிதாபமாக.
“டேய் அண்ணாஸ்.. மிஸ்டர் கருப்பன் டார்ச்சர் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. ஒரு வேலை நல்ல சாப்பாடு சாப்பிட்டா அடுத்த வேலைக்கு நம்மள வச்சு செஞ்சிடுறாரு” என்றாள் விசாகா எரிச்சலாக.
“ஆமா விசா.. இதுக்கு நாம ஏதாச்சும் செய்யனும்” என்றான் சுப்பு.
“பேசாம சாப்பிடுங்க.. திரும்ப வந்து டைம் ஆச்சு, சாப்பிட்டது போதும்னு கூட்டிட்டு போயிடுவான்” என்றான் வெற்றி நண்பனை அறிந்தவனாக.
“நினைத்ததை முடிக்கிற திமிர். என் கிட்ட உங்க பருப்பு வேகாது மிஸ்டர் கருப்பன், நான் அந்த வேலன் மகளாக்கும்” என்று மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டு, புளியோதரையை உண்டாள் விசாகா.
————-
error: Content is protected !!