Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 17.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  17

தாகம் தீர்க்கும்

ஊற்றாய் வந்தவளே

எனக்கு மட்டும்



Advertisement

கானல் நீரானது ஏனோ?!!!

 

காரை ஒரு பெரிய கடைக்கு முன்னே நிறுத்தினான் கதிர். “நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. நாங்க காரை பார்க் பண்ணிட்டு வரோம்”, என்று கதிர் சொன்னதும் கீதாவும் தேன்மொழியும் இறங்கிக் கொண்டார்கள்.

Advertisement

 

Advertisement

காரை நிறுத்தி விட்டு இறங்கியதும் “அண்ணா கீதாவுக்கு ஒரு போன் வாங்கிக் கொடுக்கணும்”,என்றான் தினேஷ்.

 

“வாங்கிரலாம் டா, கார்ட் உன்கிட்ட தரவா?”

Advertisement

 

“நீயே வச்சிரு அண்ணா, செல்வாவுக்கும் டிரெஸ் எடுத்துட்டு போகணும்”

 

“சரி வா. கீதாவுக்கு எண்ண வேணும்னு நீ கேளு டா. அவளுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்ல”, என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் கதிர்.

 

“உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க. நாங்க செல்வாவுக்கு எடுத்துட்டு எங்களுக்கும் எடுத்துட்டு வரோம்”, என்றான் கதிர். அதையே தினேஷ் கண்களால் கீதாவிடன் சொன்னான்.

 

அவர்களிடம் சொல்லி விட்டு அவர்கள் முதலில் சென்றது கீதாவுக்கு மொபைல் வாங்க தான். “டேய் சிம் வாங்க ப்ரூப் எல்லாம் கேப்பாங்க டா. ஜெராக்ஸ் எடுத்துட்டு வருவோமா?”, என்று கேட்டான் கதிர்.

 

“அதெல்லாம் நான் வச்சிருக்கேன்”, என்று எடுத்துக் கொடுத்ததும் “நீ ரொம்ப ஸ்பீட் டா தம்பி”, என்று சிரித்தான் கதிர்.

 

பின்னர் செல்வாவுக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு தேவையானதும் வாங்கி விட்டு அவர்கள் கீழே வரும் போது இவர்கள் தேவையானதை வாங்கி இருந்தார்கள். தேன்மொழியின் உதவியோடு தினேஷுக்கும் கிஃப்ட் வாங்கி இருந்தாள்கீதா. அதற்கு தேன்மொழியின் கிண்டலையும் புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

 

அங்கிருந்து எல்லாம் வாங்கி விட்டு பின் ஒரு சூப்பர் மார்க்கெட் முன்பு காரை நிறுத்திய கதிர் அவர்களை அழைத்துக் கொண்டு சோப் பேஸ்ட் எல்லாம் வாங்க சென்றான்.

 

அங்கே சென்றதும் வேணியை அழைத்து “வீட்டுக்கு ஏதாவது வாங்கணுமா?”,என்று கேட்டு அவள் சொன்னதையும் வாங்கிக் கொண்டு கிளம்பும் போது நன்கு இருட்டி இருந்தது.

 

மீண்டும் காரில் மௌனமே ஆட்சி செய்தது. அந்த அமைதியில் நன்கு உறங்கி விட்டாள் தேன்மொழி. அழகான காதல் பாடல்கள் காரில் ஓட இதமான காற்று வருட தன் கையில் இருந்த பையில் இருந்து ஒரு கிஃப்டை எடுத்து தினேஷ் கையில் வைத்த கீதா அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் “ஹேப்பி பர்த்டே”, என்றாள்.

 

காலையில் இருந்து அவன் இதை எதிர் பார்த்தான். ஒரு வாழ்த்து தன்னவள் வாயில் இருந்து வராதா என்று ஏங்கிப் போனான். அதையே அவள் சொன்னதும் முகமும் மனமும் மலர அவளை திரும்பி பார்த்தவன் அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான்.

 

அவன் புன்னகையில் அவள் முகமும் மலர்ந்தது. “ரொம்ப சீக்கிரமா சொல்லிட்ட. நான் நாளைக்கு சொல்லுவேன்னு நினைச்சேன்”, என்று புன்னகையுடன் அவன் சொன்னதும் அவனைப் பார்த்து போலியாக முறைத்தாள் கீதா.

 

அவளைப் பார்த்து சிரித்தவன் “இது உனக்கு. சிம் போட்டாச்சு. கொஞ்ச நேரத்தில் ஆக்டிவேட் ஆகிரும்”,என்று சொல்லி அவள் கையில் போனைக் கொடுத்தான். சந்தோஷமாக அதை வாங்கி உள்ளே வைத்தவள் “தேங்க்ஸ்”, என்றாள்.

 

அவளைப் பார்த்து சிரித்தவன் மீண்டும் அவள் கையைப் பற்றிக் கொண்டான். சிறு தயக்கத்துடன் அதை உருவ நினைக்க “பிளீஸ் இப்படியே இரேன்”, என்ற ஒரு வார்த்தை அவளை தேக்கியது.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“வீட்ல வச்சு என்னமோ சொல்ல வந்தீங்க?”, என்று கேட்டாள் கீதா.

 

“அது வந்து, நீ எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை”

 

“சும்மா கேளுங்க”

 

“என்னை உனக்கு பிடிச்சிருக்கா? சூழ்நிலை வேற மாதிரி ஆகி நம்ம கல்யாணம் நடந்துருக்கு. ஆனா கல்யாணம் கல்யாணம் தான். உனக்கு பிடிக்காமல்….”, என்று அவன் இழுக்கும் போது “நானே உங்க கிட்ட இதைப் பத்தி பேசணும்னு நினைச்சேன்”, என்றாள் கீதா.

 

“இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லிருவாளோ?”, என்று உள்ளுக்குள் தவித்தாலும் அவன் கைக்குள் இருக்கும் அவள் கை சற்று ஆறுதல் கொடுத்தது.

 

“யாருமே என்னை நம்பாதப்ப, என் வீட்ல உள்ளவங்க கூட என்னை நம்பாம இருந்தப்ப நீங்க நம்பினது என் மனசை ரொம்ப அசைச்சு பாத்துச்சு. அப்பவே உங்களை எனக்கு பிடிக்கவும் செஞ்சது. ஆனா கல்யாணம் நடக்கும்னு நானே எதிர் பாக்கல. உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கா?”, என்று அவள் கேட்டதும் நிம்மதியாக மூச்சு விட்டவன் “உன்னை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செஞ்சிருக்க மாட்டேன்”,என்றான்.

 

“என்ன சொல்றீங்க நீங்க?”

 

“ஆமா கீது…”

 

அவள் மனதுக்குள் சிறு சாரல் பெய்தது அவன் பேச்சைக் கேட்டு. அதுவும் அந்த செல்ல பெயர் அப்படியே அவளை சில்லிட செய்தது.

 

“அண்ணன் கல்யாணத்துலே உன்னை எனக்கு பிடிச்சது. ஆனா என்னை திரும்பி கூட பாக்காதப்ப எப்படி உன்னை நெருங்கன்னு தெரியலை”

 

“அப்ப என்னைப் பாக்கணும்னு தான் அன்னைக்கு சாப்பாடு கொண்டு வந்தீங்களா?”, என்று சிறு ஆர்வத்துடன் கேட்டாள்.

 

“ஆமா, தேனு கிட்ட உன் நம்பர் கேட்டப்ப நீ நல்ல நிலைமைக்கு வான்னு சொன்னா. அதான் ரைஸ் மில். உனக்காக தான் இந்த ஊரை விட்டு போக பிடிக்காம அந்த வேலையை முடிவு பண்ணுனேன்”, என்று அவன் சொன்னதும் அவனுடைய கையை சற்று அழுத்தினாள் கீதா.

 

“அன்னைக்கு நடந்ததுல உங்களுக்கு எதுவும் நெருடல் இல்லையே. அவன் என்னை கட்டி வச்சு…”

 

“எனக்கு தெரியும் மா. முதல்ல உன்னை அடைச்சு வச்சவன் கையை வெட்டணும்னு ஆசை வந்தது. ஆனா அன்னைக்கு அப்படி எல்லாம் நடக்கலைன்னா நீ என் கிட்ட இப்படி இருக்க மாட்டன்னு நினைக்கும் போது கடவுள் எழுதுற விதியை யாராலும் மாத்த முடியாதுன்னு தோணுது. நீ எனக்காக படைக்க பட்டவ கீது”

 

மெதுவாக அவள் கையை அவன் வருட அதில் நெளிந்தவள் கையை உருவிக் கொள்ள முயன்றாள். “நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் உன் கையை மட்டும் தான் பிடிக்க முடியும். அதையும் கெடுக்காத பிளீஸ்”, என்று அவன் சொன்னதும் வெட்கத்துடன் சிரித்தாள் கீதா. அவன் கைக்குள் அவள் கை இருக்க இருவரும் கண்களை மூடி அந்த ஏகாந்த பொழுதை அனுபவித்தார்கள்.

 

வீடு வந்ததும் கீதாவும், தினேஷும் இறங்கிக் கொள்ள தேன்மொழியோ தூங்கிய படியே இருந்தாள்.

 

அவளைப் பார்த்து சிரித்தவனுக்கு அப்போது தான் கண்ணில் பட்டது அவள் சேலை விலகி இருந்த இடம்.

 

“அப்பப்பா, கொல்லுறாளே.நானே நல்ல பையனா இருக்கணும்னு நினைக்கிறேன். இவ வேற அப்ப அப்ப இப்படி போஸ் கொடுத்து இம்சை பண்ணுறா”, என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன் அவளை அள்ளிக் கொள்ள சொன்ன மனதை அடக்கி அவளை எழுப்பினான்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“தேனு வீடு வந்துருச்சு, எந்திரி”, என்று அவன் எழுப்பியதும் எழுந்து கொண்டவள் அவனைப் பார்த்து அசடு வழிந்து விட்டு பின் இறங்கி சென்றாள்.

 

அவர்கள் இருவரும் உள்ளே வரும் போது அங்கே கீதாவும் தினேஷும் வாங்கியதை எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

 

“சித்தி சித்தப்பா எப்ப போனாங்க அத்தை?”, என்று கேட்டாள் தேன்மொழி.

 

“அவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பி போனாங்க. ஆனா பாவம் ஒரே மகளோட பிரிவு அவங்களை ரொம்ப பாதிச்சிருக்கு தேனு. கீதா அவங்களை மன்னிச்சிறேன் மா”, என்றாள் வேணி.

 

“இல்லைங்க அத்தை. அன்னைக்கு அக்கா மட்டும் இல்லைன்னா என் நிலைமையை யோசிச்சு பாருங்க. பெத்த பொண்ணை அவங்க நம்பிருக்கணும் அத்தை”, என்று சொல்லும் போதே கீதா கண்களில் கண்ணீர் வந்தது.

 

“அத்தை கொஞ்ச நாள்ல அவ கோபம் போயிரும். அவ பட்ட வலியில பாதி வலி நானும் அனுபவிச்சிருக்கேன். அதனால் அவளை அவ போக்குல விடுங்க”, என்றாள் தேன்மொழி.

 

“சரி தேனு. அப்புறம் அவங்க உன் நகையை எல்லாம் கொடுத்துட்டு போனாங்க கீதா. நானும் மாமாவும் வேண்டாம்னு தான் சொன்னோம். ஆனா இதை நீங்க வாங்கலைன்னா எங்க மகள் எங்களுக்கு இல்லைன்னு நீங்க சொல்ற மாதிரி இருக்கும்னு கண்ணீர் வடிச்சப்ப என்ன செய்றதுன்னு தெரியாம வாங்கி வச்சேன் மா”

 

“சரிங்க அத்தை, அது உங்க பீரோலே இருக்கட்டும்”

 

“சீர் செய்யட்டுமான்னு கேட்டாங்க. நாங்க தான் இப்ப வேண்டாம். உன் படிப்பு முடியட்டும்னு சொல்லிட்டோம்”

 

“சரிங்க அத்தை”

 

“டேய் கதிரு, இவனுக்கு எதுக்கு டா டிரெஸ் வாங்குநீங்க?”, என்று கேட்டாள் வேணி.

 

“அவனுக்கு தான் மா ரொம்ப தேவை படும்”, என்று சொல்லி செல்வாவின் தோளில் கை போட்டுக் கொண்டான் கதிர்.

 

“இவனுக்கு வாங்கிட்டு வருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா இவனுக்கு பணம் கொடுத்துருக்க மாட்டேனே?”, என்று எண்ணி செல்வாவை பார்த்தாள் வேணி.

 

தன் அம்மாவின் பார்வையை உணர்ந்தவன் “உண்டியல்ல போட்டது திருப்பி வராது மா, ஹி ஹி”,என்று அவள் காதில் முணுமுணுத்தான்.

 

கீதா தினேஷுக்கு ஒரு பர்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தாள். முதல் வேலையாக அறைக்குள் சென்றவன் பழைய பர்ஸில் இருந்த அனைத்தையும் எடுத்து புது பர்ஸில் வைத்தான்.

 

“உன் ஆள் வாங்கிக் கொடுத்ததா அண்ணா?”

 

“ஆமா டா தம்பி”

 

“ஆனாலும் நீ ரொம்ப மோசம் அண்ணா”

 

“ஏன் செல்வா அப்படி சொல்ற?”

 

“பின்ன நான் கொடுத்த கிஃப்டை நீ இன்னும் பிரிக்க கூட செய்யலை ஆனா உன் ஆள் கொடுத்ததை மட்டும் இவ்வளவு ஆசையா பிரிச்சு பாக்குற?”

 

“ஐயோ சாரி டா. நான் அப்படி நினைக்கல. அது வந்து”

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“சரி சரி, உன்னை மன்னிக்கிறேன். இப்பவாது பிரிச்சு பாரு. உனக்காக எத்தனை கடை ஏறி இறங்குனேன் தெரியுமா?”

 

“அப்படி என்ன டா வாங்கிருக்க. தேங்க்ஸ் டா தம்பி”, என்று சொல்லிக் கொண்டே அதை ஆவலாக பிரித்தவன் உள்ளே இருந்ததைப் பார்த்து அவனை அடிக்க துரத்தினான்.

 

அங்கே கலர் காலராக அவனுக்கு ஜட்டிகளை வாங்கி ஒரு அட்டை பெட்டியில் போட்டு வைத்திருந்தான்.

 

“இதையா டா வாங்கி தருவ?”, என்று விரட்டிக் கொண்டே கேட்டான் தினேஷ்.

 

“ஏன் இது நீ போடுவ தானே? உன் ஆளாவது உன் சட்டையை தொடுற மாதிரி தான் கிஃப்ட் வாங்கி கொடுத்துருக்கா. நான் பாத்தியா உன்னையே தொடுற மாதிரி வாங்கிக் கொடுத்துருக்கேன். எடுக்கும் சைஸ் சரியா இருக்கான்னு பாத்துக்கோ டா. உன் பர்ஸ்ட் நைட் அன்னைக்கு அந்த பஞ்சுமுட்டாய் கலரை தான் போடணும்”, என்று சொல்லிக் கொண்டே ஓடினான் செல்வா.

அறைக்கு சென்ற கதிரோ முகம் கழுவி விட்டு கட்டிலில் அமர்ந்தான். அவன் எண்ணம் முழுவதும் மாலையில் நடந்த நிகழ்வே வலம் வந்தது. தன் கைகளுக்குள் அவள் மயங்கி இருந்தது, அவளது அரை குறை ஆடை, இப்போது பார்த்த அவளுடைய அழகின் வனப்பு அவனை பாடாய் படுத்தியது மட்டும் உண்மை.

 

தன் கைகளுக்குள் இருந்த போது அவன் உணர்ந்த அவளுடைய வாசனை அவனுக்கு வேண்டும் போல இருந்தது. காரில் அவள் அருகே இருக்கும் போதும் அவளை தீண்ட வேண்டும் என்று தான் அவனுக்கு ஆசையாக இருந்தது. தினேஷ் கீதா இருந்ததால் அமைதியாக இருந்தான். அவளைப் தனியாக சந்தித்தால் என்ன செய்வோம் என்று தெரியாததால் தயக்கத்துடன் தான் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!