Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன்-27

உனக்கென  இருப்பேன் -27

 

ம்மா அடுத்த மாசம் தியானேஷ் குட்டியோட பிறந்தநாள் வருதும்மா . யாரும் இல்லாம எப்படி பிறந்தநாள் கொண்டாடறதுன்னு அண்ணன் சொல்லி வருத்தப்பட்டார் , வினோ அண்ணனை நினைத்து அண்ணி அழுதாங்கம்மா …. பிள்ளை அனாதையாகி நிற்குதுன்னு அழுது மாயறாங்க .

 



Advertisement

அவ்வளவு தான் சரோஜினி கிளீன்போல்ட் . என்னத்துக்கு அழுகுறா அந்த சீமையில் இல்லாத சித்ராங்கி ?ஏன் என் புள்ள இல்ல ? ராசா மாதிரி வளர்க்கப் போறான் ….வீம்பாய் பேசியவரின் விழியில் ஈரம் கசிந்தது.

 

அந்த தாய் மனம் தவியாய் தவித்தது .

Advertisement

 

Advertisement

“……………………”

 

 அழும் குழந்தையை மார்பில் போட்டு தட்டிக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தான் அஸ்வின் .

Advertisement

 

கிச்சனில் வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்தவள் பெட்ஷீட்டை எடுத்தாள் தரையில்  விரிக்க …..

 

கீர்த்தி இங்கே வா ! கண்ணால் அழைத்தான் .

 

என்ன என்பதாய் சங்கடத்துடன் கேட்டாள் .

 

பக்கத்தில் வா என்றான் .

 

படபடப்புடன் அருகில் வந்தவளின் கரம் பற்றி அணைத்துக் கொண்டான் .

 

நான் கீழ ….அவள் தடுமாறினாள் .

 

மூச் ….இங்கேயே படு ! அவளை அணைத்துக் கொண்டான் . ஒருபுறம் மனைவி மறுபுறம் குழந்தை …….அவ்வளவு நிம்மதியாக கண்மூடினான் . அவள் தான் நெளிந்துக் கொண்டிருந்தாள் அவன் அணைப்பிற்குள் ஒன்றிப்போக முடியாமல் .

 

பழகிக்கோ ….என்றான் கண் திறவாமல் .

 

கீர்த்தியின் ஆழ்மனம் அமைதி கொண்டது .கொடும்பாலையில் மரண அவஸ்தையில் அலைந்து கொண்டிருந்தவள் குளிர் சோலையில் தஞ்சம் புகுந்து இளைப்பாறிய நிம்மதி அவளுக்கு .

 

கீர்த்தி இந்த சந்தோசம் எனக்கு போதும் ! என் கீர்த்தி என்னோட இருக்கா ….

 

ம்ம்ம்ம்ம் என்றவள் அவன் மார்பில் கண்ணீருடன் ஒன்றிக் கொண்டாள் .

 

ஏய் லூசு …..கிசுகிசுப்பாய் அதட்டியவன் மென்மையாய் பொத்திக் கொண்டான் தன் உயிர் கூட்டில் .

 

உன் மனசை கொடு கீர்த்தி அது போதும் ! உன் உடம்பு வேண்டாம் என்றில்லை .அது சங்கடப்படாம இயல்பா நிகழும் போது  நிகழட்டும் .

என் மனைவி ,என் மகன் ,என் கூடு …..இதைவிட வேறென்ன இன்பம் வேணும் என்றவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் இன்னும்  பெருகும் விழிநீரோடு.

 

என்ன பாவம் செய்தோமோ இந்த வயதிலேயே கணவனை இழந்து நிர்கதியாய் நிற்கிறோமே என்று அவள் கதறாத நாளில்லை .ஏதோ புண்ணியம் செய்திருக்கிறாள் போலும் அதுதான் அஸ்வினிடம் வந்து சேர்ந்திருக்கிறாள் என்ற நிம்மதி அவளுக்கு .

 

“…………………..” 

 

 கீர்த்தி குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு போ ! செல்ல மகள் மைத்ரேயியை வாங்கிக் கொண்டான் அஸ்வின் .

 

ஓடி ஓடி நலங்கு வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி .  ஒரே நாத்தனாரின் திருமணம் அல்லவா ? அவள் எடுத்து செய்யாமல் …..

 

கீர்த்தி சாப்பிட்டு வேலையை பாரும்மா ….கனிவாய் மனைவியாய் அழைத்தான் .

 

வேலை இருக்குங்க! அப்புறம் சாப்பிட்டுகிறேன் . முகத்தை சுருக்கி கொஞ்சிவிட்டு போன மனைவியின் அழகில் சொக்கியவன் இன்னும் அவள் போன திக்கை தான் வெறித்துக் கொண்டிருந்தான் ..

 

ப்பா …பா சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது குட்டி தேவதை மைத்ரேயி .

 

என்னடா குட்டிம்மா அம்மா வேணுமா ? அவ இன்னும் நாலு நாளைக்கு நம்மளை கண்டுக்க மாட்டா…பெருமையாய் மகளை அணைத்து முத்தமிட்டான் .

 

என்ன ஆபிசர் லுக்கு ? தாம்பூலம் எடுக்க வந்தவள் கிசுகிசுப்பாய் அவன் காதில் கேட்டாள் .

 

இந்த மெரூன் புடவை கட்டாதேன்னு சொன்னேன் ….எச்சில் விழுங்கினான் .

 

ஏனாம் ? தோளை குலுக்கி புருவத்தை சுருக்கினாள்.

 

என்னை டெம்ட் பண்ற ! என் கண்ட்ரோல் மிஸ் ஆகுதுடி . என் பொண்ணு உன்னை தேடுறாளோ இல்லையோ என் கண்ணு உன்னையே தேடுது . சிணுங்கினான் .

 

தேடும்  தேடும் ….ரெண்டு அடி போட்டா தேடும் . செல்லமாய் அவன் தலையை கலைத்துவிட்டாள் .

 

என் பொண்ணு பிறந்ததும் ரொம்ப அழகாயிட்ட ….உன்னை விட்டு நகரவே முடியலடி ! அவசரம் முத்தம் ஒன்றை கன்னத்தில் பதித்தான் .

 

அடச்சீ ….விசேஷ வீட்டுல உட்கார்ந்துட்டு ….கன்னத்தை துடைத்துக் கொண்டு ஓடியேவிட்டாள் .

 

அம்மா எங்கேப்பா ? தந்தையிடம் ஓடிவந்தான் தியானேஷ் .

ஏற்கனவே மடிமீது மகள்  இருக்க இன்னொரு தொடையில் மகனை எற்றிக் கொண்டான். “மை குட்டி’ தளிர் கரம் கொண்டு தங்கையின் கன்னம் வருடினான் தியானு .

 

மைத்ரேயி பிறந்தாலும் அஸ்வினை பொறுத்தவரை தியானுக்கு பிறகு தான் அவள் .  அவ்வளவு செல்லம் கொஞ்சுவான் மகனை .

 

தியானு தாத்தாட்ட வாரீங்களா யானை சவாரி பண்ணலாம் ?பேரனை தூக்கிக் கொண்டார் பொன்னுசாமி .

 

யானை யானை அம்பாரி யானை ….வேட்டியை மடித்துக்கட்டி மண்டியிட்டு அவர் அமர ….குதூகலமாய் சவாரி ஏறிக் கொண்டான் தியானு.

 

காண்பவர்கள் ஒரு கணம் அதிசயித்து நின்றுவிட்டனர். அஸ்வின் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் தநத்தையின்  செயலை. அவசரமாய் அலைபேசியை தேடி போட்டோ எடுத்துக்கொண்டான் .

 

அண்ணி இங்கே வாங்களேன் …..கைபிடித்து இழுத்தாள் அச்சு .

 

அச்சு உனக்கு விளையாட இது தான் நேரமா ? வடைக்கு மாவு அரைக்கணும் பெரிய அத்தை கூப்பிடறாங்க ! 

 

அட இதை பார்த்துட்டு போங்க …இழுத்து போய் ஜன்னல் வழியே காட்டினாள் யானை சவாரியை .கீர்த்திக்கு கண்ணில் பெருவெள்ளம் .

 

அண்ணே இந்த ரசம் சாதத்தை பேரனுக்கு ஊட்டணுமாம் ! வெள்ளிக் கிண்ணத்தில் ரசம் சாதம் கொண்டு வந்து நீட்டினார் கிருஷ்ணசாமி .

 

ஏதே சாப்பாடு ஊட்டணுமா ? தம்பி இதெல்லாம் நமக்கு சரி வராது . நீ போய் சரோஜினியை வர சொல்லு ! இல்லைனா பத்மினியை வர சொல்லு என்றார் .

 

அவங்க எல்லாம் சமையல் வேலையில் பிஸிண்ணே ….சோறுகூட ஊட்டத் தெரியல நீங்கல்லாம் என்ன வாத்தின்னு என் பொண்டாட்டி சிலுத்துக்குவா ….வேட்டியை மடித்துக் கட்டிக்க கொண்டு பேரனுக்கு உணவு ஊட்ட போராடினார் கிருஷ்ணசாமி .

 

அண்ணே அப்படியே இருங்க ! நம்ம மூணு பேரும் பேரனோட செல்பி எடுத்துக்குவோம் என்றார் முத்துசாமி .

 

ஆம் !அண்ணன் தம்பி மூவரும் சேர்ந்து விட்டனர் . 

 

அட என்ன முத்து இந்த காலத்து பசங்க போல நீயும் செல்பி அது இதுன்னு….பொன்னுசாமிக்கு வெட்கமாய் போய்விட்டது .

 

காலத்துக்கு தகுந்த மாதிரி நாமளும் மாறனும் அண்ணே …இல்லைனா இந்த பெருசுகளுக்கு ஒன்னும் தெரியலைன்னு பேரப்பிள்ளைங்க  நம்மளை ஓரம் கட்டிடுவாங்கண்ணே ….முத்துசாமி சிரித்தார்.

 

அக்கா வடைக்கு இந்த பதம் போதுமா ? உப்பு போதுமா பாருங்க ! தேவகி உளுந்து  மாவை கையில் அள்ளி வந்து காட்டினார் பத்மினியிடம்.

 

தேவகி சாமிக்கு இலைபோட்டு படைக்கணும் உப்புசப்பு பார்க்க கூடாதும்மா என்றார் சரோஜினி  .

 

ஓரகத்திகள் மூப்பிவரும் ஒற்றுமையாய் சமையலில் ஈடுபட்டிருந்தனர் . அவர்களுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள் கீர்த்தி .

 

“………………..”

 

சிணுங்கிய மொபைலை சைலண்டில் போட்டுவிட்டு மெல்ல கழுவினாள் அச்சு .

 

ஏய் போனை அட்டன் பண்ண இவ்வளவு நேரமா ? மெய்யாகிலுமே காண்டாகி போனான் சரவணன் .

 

வீட்டுல எல்லா இடத்திலும் ஆளுங்க இருக்காங்க! எங்கே திரும்பினாலும் சித்தி ,சித்தப்பா ,அண்ணனுங்க ….ரகசியமாய் மணிரத்னம் ஹீரோயின் போல் பேசினாள் அச்சு.

 

கட்டிக்க போறவன்கிட்ட பேச உனக்கு இவ்வளவு தயக்கமா ?

 

ரெண்டு வருஷம் வெயிட் பண்ணினவர் இன்னும் நாலு நாளைக்கு வெயிட் பண்ண மாட்டீங்களோ ? உதடு கடித்தாள் மெல்லிய வெட்கத்தில் .

 

மாட்டேன் …..இந்த ரெண்டு வருஷமா என்பாடு எனக்குத் தான் தெரியும் !

 

தெரிந்து தானே லவ் பண்ணீங்க ?

 

தெரியாம பண்ணிட்டேன்டி  ! உல்லாசமாய் நகைத்தான்.

 

என்னது ?

 

இல்லம்மா நீ இவ்வளவு பதவிசான பொண்ணுன்னு தெரியாம லவ் பண்ணிட்டேன் ….சமாளிப்பாய் சிரித்தான் .

 

யோவ் உன் நக்கலை என்கிட்ட காட்டுற ? இன்னும் ரெண்டு வருஷம் இழுத்திருக்கணும் அப்போ தெரிந்திருக்கும் ! நொடித்துக் கொண்டாள் .

 

அடியேய் …..அநியாயம் பண்ற , அபாண்டமா பேசற ….எந்த லவ்வர்டி ரெண்டு வருஷம் காத்திருப்பான் ?

 

நானா காத்திருக்க சொன்னேன் ? அப்படி சடைத்துக் கொண்டாள் கெத்தாக ….

 

பேசுவடி பேசுவ ….எத்தனை பெரிய இடத்தில இருந்தெல்லாம் பெண் கொடுக்க கியூவில் நின்னாங்க தெரியுமா? என் கிரகம் இந்த வாயாடி மங்கம்மாகிட்ட மாட்டிக்கிட்டேன் .

 

ஹலோ ஹலோ …..இந்த வாயாடி மங்கம்ம்மா வேண்டாம்னு கழட்டிவிட்டு அந்த கியூவில் நின்ன கிளியோபாட்ரா யாரையாவது போய் ஓகே பண்ணிக்கோங்க !

 

வாய்  ….வாய் ….எவ்வளவு வாய் ! எப்படி சம்மாளிக்க போறேனோ தெரியல …..உண்மையில் புலம்புவது போல் புலம்பினான்.

 

ரெண்டு வருஷம் ஒருத்தன் தவமா தவம் கிடக்கானே ….எவ்வளவு லவ் இருந்தா இப்படி பொறுமையா  காத்துகிடப்பான்னு யோசிக்கணும் !

 

பொறுமையா ? ரெண்டு வருஷம் வெயிட் பண்னினது பொறுமையா ? என்க அண்ணன் லவ் ஸ்டோரி தெரியும் இல்ல ….? அது தான் காதல் ! அது தான் உண்மையான காத்திருப்பு !

 

அம்மா தாயே ….உங்க அண்ணன் காதலே அமர காவியமா இருக்கட்டும் ! சரித்திரத்தில்  இடம் பிடிக்கட்டும். ஆளை விடு தாயே !

 

விடாம ?! அவள் நாணத்துடன் கேட்க ….

 

விடாம பிடிச்சு வச்சுக்கோடி …..கொஞ்சினான் ! 

 

அவளுக்கு பேச்சு வரவில்லை ….மூச்சு சீரானால் தானே பேச்சு வரும் ?

 

என்ன பண்ற ?

 

நலங்கு வச்சாங்க ! இப்போ தான் எண்ணெய் குளியல் போட்டுட்டு வரேன் 

 

அஸ்வின் என்ன பன்றார் ? கல்யாண வேலையில் பிசியா இருக்காரா ?

 

நீங்க வேற ….அவர் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு நகருவேனான்னு குட்டிபோட்ட பூனை மாதிரி சுத்திக்கிட்டே இருக்காரு !  அவ்வளவு சிரிப்பு அவளுக்கு .

 

சூப்பர் ! கேட்கவே சந்தோஷமா இருக்கு! மனதார மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் சரவணன் .

 

எனக்கும் ஆசையா இருக்குங்க …..

 

எது ரெண்டு குழந்தை பெத்துக்கணும்னா ? அடக்கப்பட்ட சிரிப்பு அவனிடத்தில் .

 

உங்க மூஞ்சு ! அண்ணா அண்ணி மாதிரி உண்மையான  அன்போடு ஒருத்தரை ஒருத்தர் வீட்டுக் கொடுக்காம வாழணும் !

 

அதுக்கு நீ உங்க அண்ணி அவங்க புருஷன் மேல பக்தியா இருக்கிற மாதிரி இருக்கணும் !

 

ஹலோ ….எங்க அண்ணன் மாதிரி நீங்க பொண்டாட்டி  பிள்ளைங்க  தான் உலகம்னு இருக்கணும் !

 

அதுதானே ….என் பேச்சை என்னைக்கு தான் கேட்டிருக்க ?

 

அது தான் உங்களுக்கே தெரியுதே ….அப்பறம் என்ன ?

 

அம்மா தாயே ….உங்க அண்ணன்கிட்ட டியூஷன் போறேன் போதுமா ?

 

தட்ஸ் குட் ப்ருஷ் ! அவள் பொங்கி சிரித்தாள் .

 

என்னடி அது ப்ருஷ் ,பிரஷ்னு  ?

 

அது அப்படி தான் செல்லமா கூப்பிட்றது …. சிணுங்கினாள் .

 

சரவணனுக்கு உள்ளுக்குள் குளிர்ச்சியாய் ஒரு உணர்வு !

 

நிஷா பிரகாஷ் வந்திருக்காங்களா ?

 

இல்ல அக்கா மட்டும் தான் வந்திருக்காங்க . மாமா கல்யாண மண்டபத்துக்கு வருவாராம் .பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டாள் அக்ஷ்யா .

 

  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!