Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 2

 

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி

தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி

தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ



Advertisement

அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ

ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு

என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு

Advertisement

இது பூவோ பூந்தேனோ”  

Advertisement

 

மனதின் வலி முகத்தில் தெரியாமல். தன் ஊர் நோக்கி பயணித்து கொண்டு இருந்தான் அன்புக்கினியான்…. 

 

Advertisement

ரயில் வாசலில் நின்றவனுக்கு ரயில் புறப்படும் முன் யாரோ தன்னை அழைப்பதை போல் உணர்ந்தவன்… திரும்பி பார்க்க… 

 

ஒரு பெண் ஒருத்தி தன் கையில் குழந்தை ஒன்றை ஏந்தி கொண்டு ரயிலை பிடிக்க ஓடி வருவது தெரிய… 

 

அவளின் சற்றே பின்னே நான்கு பேர் அவளை துரத்தி ஓடி வருவதையும் கண்டவன்… அதிர்ந்து பின் குழம்பியும் போனான்…. 

 

“ரயிலை பிடிக்க இவங்க எல்லாரும் ஓடி வாரங்களா… இல்லை அந்த பெண்ணை துரத்திக்கிட்டு வாரங்களா “? 

 

குழப்பத்துடன் பார்த்து கொண்டவன் பின்னால் வரும் நால்வரின் முகபாவமும்… அந்த பெண்ணின் பயந்த முகமும் அவனின் சந்தேகத்தை தீர்த்தது… என்ன செய்வது என்று புரியாமல் யோசித்தவன்… 

 

“கை குடுங்க” என்ற அவளின் குரலில் அவனையும் அறியாமல் அவன் கரம் நீட்ட… 

 

அதை பற்ற தடுமாறியவளின் நிலையை பார்த்தவன்… 

 

“முதல்ல குழந்தையை குடுங்க… அதுக்கு அப்றம் நீங்க ஏறுவீங்க “

 

அதற்கும் ரயில் நடைபாதையின் இறுதியை நெருங்கி இருக்க… அவன் சொன்னது போல் குழந்தையை முதலில் தந்தவள்… பின் அவளும் ரயிலில் ஏறினாள்…. 

 

ரயிலில் எறியவள் வாசலின் தடுமாற… அப்படியே அன்பின் மேல் சாய…ஒரு கையில் அந்த குழந்தையையும் மறு கையால் அவளின் இடைவளைத்து அவளை தன்னுடன் இருக்கி பிடித்தான்…. 

 

தடுமாற்றத்தில் இருந்து சுதாரித்த அவள்… தன்னை நிலை படுத்தி கொண்டு… ரயிலின் உட்புறத்தில் சென்று நின்று குழந்தையை வாங்கி “தேங்க்ஸ்” என்றாள்… 

 

“ஒரு குழந்தையை வெச்சிக்கிட்டு இருக்கீங்க… கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ஸ்டேஷனுக்கு வரணும்னு தெரியாதா…. கடைசி நேரத்தில் இப்டி ரிஸ்க் எடுத்து தான் ஏறணுமா “

 

எதிரில் நிற்பவளை பேசவும் விடாமல் எகிறினான்… 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

ஓடி வந்து ரயில் ஏறிய களைப்பும்… வாழ்க்கை அவளை படுத்தும் துயரமும் சேர்ந்து உடலையும் மனதையும் சோர்வைக்க… இதில் இவனின் அதட்டவும், 

 

இதோ வந்து விட்டேன் பார் என்பது போல கண்ணீர் பெறுக ஆரம்பித்தது… 

 

அதை கண்டவன்.. சிறிது பதறி… ஆனால் பதற்றத்தை வெளியே காட்டாமல் 

 

“என்னங்க உங்க நல்லதுக்கு கேட்ட அழுகுறீங்க… யாராவது பார்த்தால் தப்பா நெனைக்க போறாங்க….உள்ள வாங்க “

 

என்று அழைத்து சென்றவன்… அவனின் எதிர் இருக்கை காலியா இருக்க அவளை அமர சொன்னவன்… குடிக்க நீரும் கொடுத்தான்…. 

 

பின் நிதானமாக அவளை ஆராய துவங்கியவன்…. 

 

மெலிந்த உடல் வாகு…..எதோ திருமணத்தில் உடுத்தும் பட்டு போன்ற மேல்ரக சேலை… கலைந்த கேசம்…. தலையில் சூடி இருந்த மல்லிகை பூ சரடு பாதி உதிர்த்து பாதி வாடியும் போய் இருக்க…. அழுது அழுதே வீங்கி போய் சிவந்து இருக்கும் கண்கள்… 

 

என்ன இவள் எதோ பிரயாணத்துக்கு வந்த மாதிரியே தெரியலையே… கையில பைகளும் இல்லை… தோளில் ஒரு ஹாண்ட்பாக் மட்டுமே இருந்தது… 

 

அப்போதுதான் அவள் பின்னே துரத்திய ஆட்கள் நினைவிற்கு வர….. இவள் எதில் இருந்தோ தப்பிக்க தான் ரயிலில் ஏறினாள் என்பது உறுதியாக… அவளை ஆராய்ந்த வண்ணம் அமைதி காத்தான்…. 

 

மறு புறம் அவளோ… குழந்தையை தட்டி தூங்க வைத்த படியே… அன்றைய நாளின் நிகழ்ச்சிகளை அசை  போட்டவள்… நல்ல வேலை தன்னை துரத்தியவர்களிடம் இருந்து தப்பித்தோம் என்ற நிம்மதி கிடைக்க அவளும் சிறிது கண் அயர்ந்தாள்…. 

 

அவளையும் அவளின் கண் கூறும் துயரையும் கண்டவன் காலையில் இருந்த மன மனக்காயம் மாற … அவளின் மன காயத்தை ஆராய ஆரம்பித்தான்…. 

 

 

            மாயம் தொடரும் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!