Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 2.1

 

உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு



Advertisement

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்

Advertisement

உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே”

Advertisement

 

தன்னை துரதியவர்ககளிடம் இருந்து தப்பித்தோம் என்ற மன நிம்மதி சிறிது நேரமே நீடிக்க… அவள் நினைத்தது தவறு என்று நிரூபித்தது காலம்…. 

 

Advertisement

சீட்டின் பின்னால் தலை செய்தவள் எதோ திடீர் சலசலப்பு சத்தமும்….. எதோ வினோதமான இரைச்சல் சத்தமும் வர….அது அவளுள் ஒரு பயத்தையே ஏற்படுத்தியது… 

 

அவளின் இந்த பயத்தை புரிந்தவன்… அவ்வழி வந்த உணவு விற்பவரை அழைத்து… என்ன சத்தம் என்று விசாரிக்க 

 

“லடிக்கி கோ டூன்ரஹே ஹை சாப்”கோயி குண்டே ஹே “

(எதோ பெண்ணை தேடுகிறார்கள்… ரௌடிகள் போல் தெரிகிறார்கள்) 

 

என்ற தகவலை அவனிடம் கூறி விட்டு தான் வழி சென்று விட்டான்… 

 

சிறிது யோசித்தவன்… அது ஒரு வேலை அவளை துரத்திய ஆட்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழ…அவளை பார்த்தவன்… 

 

அவளும் “ஆம்” என்பது போல் தலை அசைக்க… 

 

தான் எதோ சிறிய பிரச்சனை என்று நினைத்து பிறகு கேட்டு கொள்ளலாம் என்று இருக்க… இவர்களோ இவளை கொள்ளும் நோக்கில் அலைவது அவனுக்கு புரிந்தது…. 

 

உடனே இருக்கையை விட்டு எழுந்தவள்… செய்வதறியாது பயத்தில் நிற்க… அந்த ரௌடிகளின் சத்தமோ பக்கத்தில் கேட்க துவங்க…. அதில் இன்னும் பதறியவள்…. உடல் நடுங்க நின்றிருக்க…. 

 

“இப்போ என்ன பண்ண போறீங்க?”அவளின் பதற்றம் இவனையும் தொற்றிக்கொள்ள அவளை கேட்டவன்… அவளோ தெரியவில்லை என்று உதட்டை பிதுக்க… பின் எதோ தெளிவு பெற்றவளாய் 

 

“எனக்கு ஒரு உதவி மட்டும் பண்றீங்களா”? 

 

என்ன என்பதை போல் அவன் பார்க்க… “இந்த குழந்தையை மட்டும் நீங்க வெச்சிக்கோங்க”

 

 

நான் எப்படி என்று குழப்பமாய் பார்த்தவனை 

 

 

 

 

 

“அவுங்க கிட்ட என்னோட போட்டோ மட்டும் தான் இருக்கு… குழந்தையை அடையாளம் தெரியாது”… 

 

“ஒரு வேலை நான் அவர்களிடம் சிக்கும் நிலை வந்தாள்… தானே தற்கொலை செய்து கொள்வேன்… அப்டி ஏதும் நடந்தால் குழந்தையை ஒரு ஆஸ்ரமத்தில் மட்டும் சேர்த்து விடுங்கள்”

 

சில வினாடிகளில் துல்லியமாய் திட்டம் தீட்டினாள்…. 

 

என்ன பதில் கூறுவது என்று வியப்பாய் பார்த்தவனை யோசிக்கவும் விடாமல்… குழந்தையின் உச்சியில் இழல் பதித்தவள்…. அதை அவன் கையில் திணிக்க ..  

 

அதற்குள் ரௌடிகள் தாங்கள் இருக்கும் பக்கத்து பெட்டியை நெருங்கியதை உணர்ந்தவள்… 

 

வானம் பார்த்து… கண்ணை இருக்க மூடியவள் பொங்கிய கண்ணீரை மொத்தத்தையும் வெளியேற்றி… பேரு மூச்சுடன் கண் திறந்தவள்… 

 

இப்போதய ஒரு முடிவுடனே அங்கு இருந்து நகர முடிவெடுத்தாள்…

 

அங்கு இருந்து இருந்து நகர்ந்தவள் ஓடும் ரயிலின் வேகத்தில், அவளும் வேகமாக வாசலை நெருங்கியவள்…. 

 

தான் கழுத்தில் இருந்த செயின்னை இறுதியாய் முத்தமிட்டவள்… 

 

நொடியும் யோசிக்காமல்… கண்களை இருக்க மூடி கொண்டவள்… நுழைவில் இருந்து கீழே குதித்தாள்…… 

 

                 மாயம் தொடரும்…….. 

 

(Valium)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!