Skip to content
Post Views: 3,971
உனக்கென இருப்பேன் -28
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு …….
தியானேஷ் பிறந்தநாளை எளிமையாக கொண்டாட முடிவு செய்தனர் . யாருக்கும் சொல்லவில்லை .
பாடலீஸ்வரர் கோயிலுக்குச்சென்று குழந்தை பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிவிட்டு வீட்டிற்கு வந்தனர் .
Advertisement
வீட்டில் கிருஷ்ணசாமி காத்திருந்தார் .
அப்பா வாங்க ! ஓடிப்போய் காலில் விழுந்து ஆசி பெற்றாள் கீர்த்தி .
நல்லா இரும்மா ! மனமார ஆசிர்வதித்தவர் வெகு ஆசையுடன் பேரனை தூக்க கையை நீட்டினார்.
Advertisement
வாங்க சித்தப்பா ….குழந்தையை அவர் காலில் கிடத்தி தானும் விழுந்து வணங்கினான் .
Advertisement
குழந்தை குடும்பமா சந்தோஷமா நீண்ட ஆயுளோட வாழனும் சாமி …இறுக்கி அனைத்துக் கொண்டார் பெறாத அண்ணன் மகனை .
தாத்தா வந்திருக்காங்க பாரு! போங்க தாத்தா கூட விளையாடுங்க ! குழந்தையை அவர் மடியில் வைத்தான் . அவருக்கு கண்ணீர் பெருகியது . என் மகன் விட்டுச்சென்ற அவன் பிரதி பிம்பம் ! இதயம் நடுங்க அணைத்து முத்தமிட்டார். அவர் உடல் சிலிர்த்தது . அவர் ரத்தம் ….அவர் பேரன் அல்லவா ?
குட்டி இங்கே பாருங்க தாத்தா மோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன் ….ஆசையாய் தான் வாங்கி வந்திருந்த மோதிரத்தை போட்டுவிட்டவர் அந்த பிஞ்சு விரல் பற்றி முத்தமிட்டார் . புதுச்சட்டை போடுவீங்களாம் என்று கொஞ்சிக் கொண்டே தான் வாங்கி வந்த நாலு சட்டையில் ஒன்றை போட்டுவிட்டார் .
Advertisement
அஸ்வின் அமைதியாய் வேடிக்கை பார்த்திருக்க ….அவர் ஆசை ,தவிப்பு, ஏக்கம் எல்லாமே அவனுக்கு புரிந்தது .
நீங்க பேசிட்டு இருங்க என்று கீர்த்தி சமையலறைக்கு சென்றுவிட்டாள் .
நினைப்பு எல்லாமே அவனுக்கு புரிந்தது .
சித்தப்பாவுடன் அவன் பேசிக் கொண்டிருக்க ….கீர்த்தி சமையலில் மும்மரமாய் இருந்தாள்
அழைப்பு மணி ஒலித்தது ! அஸ்வின் எழுந்து போய் கதவை திறந்தான் .
பொன்னுசாமி கை நிறைய பைகளுடன் வாயிலில் நின்றார் .
நம்ப இயலாதவனாய் அப்பா என்றான் பிரம்மிப்பாய் .
என்னடா அப்படி பார்க்கிற ? நான் வரக்கூடாதா ? அவருக்கும் கொஞ்சம் கூச்சமாக தான் இருந்தது அது தான் இந்த சமாளிப்பு .
உள்ளே வாங்கப்பா ! மகிழ்வுடன் கரம் பற்றிக் கொண்டான் .
ஹாலில் கிருஷ்ணன் அமர்ந்திருக்க …தம்பியை கண்ட பொன்னர் தயங்கி நிற்க ……..
கீர்த்தி அப்பா வந்திருக்காங்க பாரு ! உள்ளே எட்டி குரல் கொடுத்தான் .
யார் என்று எட்டி பார்த்தவள் ஓடிவந்து வாங்கப்பா என்றாள் .
வாங்க உட்காருங்க என்று கிருஷ்ணருக்கு எதிர் இருக்கையை காட்டினான் அஸ்வின் .
கீர்த்தி கொண்டுவந்து இருவருக்குமாய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் .
குழந்தை பர்த்டே ….போயே தீரணும்னு அச்சு படுத்தி எடுத்துட்டா ….அவ்விடம் ஒன்றமுடியாமல் தடுமாறினார் .
இதோ உங்க பேரன் அவர் மடியில் குழந்தையை அமர்த்தி இருவரும் ஆசிபெற்றனர் .
நடுங்கும் கரத்துடன் குழந்தையை கையில் ஏந்தினார் . குழந்தை உதடு பிதுக்கி அழ தயாராக…..தியானு குட்டி தாத்தாம்மா …தாத்தா ….நம்ம தாத்தா நெகிழ்வுடன் கிருஷ்ணர் சொல்ல ….உள்ளுக்குள் என்னவோ பிசைந்தது பொன்னருக்கு . தன் அண்ணன் மடியில் தன் பேரன் ! காண காண சிலிர்ப்பு அவருக்கு .
தம்பியின் நெகிழ்ந்த குரலும் வாடிய முகமும் கண்ட பொன்னருக்கு மனம் விண்டு போனது . புத்திர சோகம் எவ்வளவு கொடியது !
வினோத் குழ்நதை ….அவர் கரங்கள் நடுங்கியது ! தம்பி மகன் நினைவு அவரை கலங்க செய்தது . இன்று தான் தொட்டு தூக்குகிறார் .
செல்லக்குட்டி உன் அத்தை உனக்கு என்னவெல்லாம் வாங்கி அனுப்பியிருக்கா பாரு சாமி….வா இதை எல்லாம் போட்டு பார்ப்போம் …குழந்தையாய் மாறி கொஞ்சினார் தன் பேரனாய் வளரும் தம்பி பேரனை .
குழந்தைக்கு பிரேஸ்லெட் போட்டுவிட்டு ரசித்தார் . இந்த டிரஸ் இந்த பொம்மை எல்லாமே தியானுக்குட்டிக்கு தானாம் …. முத்தமிட்டு கொஞ்சினார் பொன்னர்.
இதுல நெய்,உளுந்து , ராகி மாவு என்னென்னவோ வச்சிருக்கா உன் மாமியார் என்று கட்டை பையை காட்டினார் மருமகளிடம் .
அஸ்வின் நெகிழ்ந்து அமர்ந்திருந்தான், உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் வந்துவிட்டது கீர்த்திக்கு .
அஸ்வின் அவன் ஏன் நிற்கிறான் ? உட்கார சொல்லு என்றார் அதட்டலுடன் .
அண்ணன் சொல்லவே அமைதியாய் உட்கார்ந்து கொண்டார் கிருஷ்ணர் .
அண்ணன் தம்பி இருவரும் பேசிக் கொள்ளவில்லை ஆனால் ஜாடையாய் பார்த்துக் கொண்டனர் .
வடை பாயசத்துடன் விருந்து தயார் செய்திருந்தாள் கீர்த்தி . இரு மாமனார்களையும் ஒன்றாய் அமர்த்தி பரிமாறினாள்.
“……………………………..”
மஞ்சுளாவை அறிமுகம் செய்து வைத்த அஸ்வின் அப்பா சொன்னேனே….சரவணனோட அம்மா என்றான் .
மஞ்சுமா அப்பா,சித்தப்பா என்று அறிமுகம் செய்தான் .
வணக்கம்மா என்றவர் அவர்களோடு பேசத் தொடங்கிவிட்டார் . மூவருமாய் பேசிக்கொண்டிருந்தனர் .
கொஞ்ச நேரத்தில் சரவணன் கேக் புத்தாடைகளோடு சைக்கிளும் வாங்கி வந்திருந்தான்
சரவணன் இது அப்பா ,சித்தப்பா .
வணக்கம் அங்கிள் என்று பவ்யமாய் கை கூப்பினான் !
அப்பா இல்லாத பிள்ளையை பொறுப்பா வளர்த்திருக்கீங்க ! மனமார வாழ்த்தினார் பொன்னர் .
சரவணன் நல்ல பையன் , எந்த கேட்டபழக்கமும் இல்லை . BTECH முடிச்சிருக்கார் . என்னோட ஆபிசில் தான் வேலை பார்க்கிறார் . அஸ்வின் எடுத்து கூறினான் .
பொன்னருக்கு பையனை பார்த்தவுடனே பிடித்துவிட்டது . எந்த குறையும் சொல்வதற்கில்லை படிப்பு வேலை அழகு எல்லாமே இருக்கிறதே …
உங்க சித்தப்பா என்ன சொல்றாரு? ஜாடையாய் தம்பியை பார்த்தபடி மீசையை நீவிக் கொண்டார் பொன்னர் .
நம்ம அஸ்வின் ஒருவிஷயம் முடிவு பன்ணணியிருக்கான்னா அதில் விசாரிக்க என்ன இருக்கு ? எனக்கு சம்மதம் ! மகிழ்வுடன் ஒப்புதல் கொடுத்தார் கிருஷ்ணர் .
பாப்பாக்கு படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு . படிப்பு முடியட்டும் பார்க்கலாம் என்றார் .
சரவணனுக்கு சந்தோஷத்தில் பறக்கிறோமா ,மிதக்கிறோமா என்று இருந்தது .
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிவிட்டு இரு தாத்தாக்களும் மகிழ்வுடன் புறப்பட்டிருந்தனர்.
“……………………………….”
ஹலோ ….அதிகாரமாய் குரல் வந்தது.
நெடு நாட்களுக்கு பிறகு அந்த குரலை கேட்கிறான் அல்லவா ? என்னவோ உயிருக்குள் ஒரு அதிர்வு .
ஹலோ ….மீண்டும் தோரணையான பேச்சு .
அக்ஷ்யா ….மெல்ல அழைத்தான் .
ம்ம்ம்ம்ம் என்றாள் .
பேச மாட்டியா ?
என்ன பேசணும் ? நான் தான் அனாவசியமா கால் பண்ண வேண்டாம்னு சொல்லி இருந்தேனே ….தொண்டையை அடைத்தது அவளுக்கு . காதல் திருமணத்தில் முடிந்தால் பரவாயில்லை கண்ணீரில் முடிந்துவிட்டால் ? பேசிப்பழக்கவே அவ்வளவு பயம் அவளுக்கு .
என் பொண்டாட்டிக்கூட காரணம் இல்லாம கூட இனி பேசுவேன் என்றான் மகிழ்வில் விளைந்த கண்ணீருடன் .
என்ன பேச்சு ஒரு தினுசா இருக்கு ? கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் .
என் மாமனார் அனுமதி கொடுத்தாச்சு ஏற்கனவே மச்சான் சார் ஓகே சொல்லிட்டறாரு !
என்ன சொல்றீங்க ?
நடந்ததை சொன்னான் .
ஹலோ உடனே ரொமான்டிக் மோடுக்கு போயிடாதீங்க !
என்ன சொல்ற ? பதறிவிட்டான் .
“……………………………….”
என்னால நம்பவே முடியலைங்க ! இன்னும் வியப்பில் இருந்தாள் கீர்த்தி .
கட்டி அணைத்து அழுத்தமாய் முத்தமிட்டான் .
என்ன பார்க்கிற ? நடந்தது நிஜம் தான் ….! கண்சிமிட்டி சிரித்தான் .
ச்சே …..சிணுங்கலுடன் உள்ளே ஓடிப்போனாள் .
ஏய் கீர்த்தி பதிலுக்கு கொடுத்துட்டு போகலாமில்ல ….இன்னும் அவளை சிலிர்க்க வைத்தான் .
“……………………….”
நீ என்ன சொன்னாலும் உன் படிப்பு முடிந்த்ததும் டும் டும் தான் !
இப்போ என்ன அவசரம் உங்களுக்கு ?
எது அவசரமா ? அடியேய் மனுஷன் பீலிங்ஸ் புரியாம சீன போட்டுக்கிட்டு …..அவனவன் காலேஜ் பர்ஸ்டட் இயரிலே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து நிற்கிறான். இருபத்தியேழு முடியப்போகுது எனக்கு ! அழாத குறை தான் அவனுக்கு .
ஜடமா இருக்கியே உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணி ….என்னத்த ரொமான்ஸ் பண்ணி ….அவன் தலையில் வைத்துக் கொண்டான் .
நாட்கள் அழகாய் உருண்டோடிக் கொண்டிருந்தது .
“…………………………………………..”
கீர்த்தியும் அஸ்வினும் இன்னும் கூடி வாழவில்லை , அற்புதமான புரிதல் , மிகுந்த காதல் அவ்வப்போது சில முத்தம் ,மெல்லிய அணைப்பு என்று அழகியலாய் சென்று கொண்டிருந்தது அவர்களின் நாட்கள்.
அஸ்வின் வர வியாழக்கிழமை நம்ம வினோத்துக்கு தலை திவசம் வருது ! குழந்தையை கூட்டிட்டு வந்துடுப்பா என்றார் துக்கம் தொண்டையை அடைக்க …
சரிங்க சித்தப்பா என்றவனுக்கும் நெஞ்சம் எல்லாம் வலி தான்.
குழந்தை கையால் பிண்டம் வைக்கட்டும் என்றவரின் வேதனை அவனுக்கு புரியாமல் இல்லை .
ஊருக்குப் போக சங்கோஜப் பட்டாலும் வினோத்திற்கு மகனாக தியானேஷ் செய்ய வேண்டிய சடங்கை செய்வது தான் முறை . குழந்தை பிறந்த போது தகப்பனாக எவ்வளவு மகிழ்ந்திருப்பான் ! இறக்கும் தருவாயில் குழந்தையை எண்ணி அவன் உயிர் எவ்வளவு தவித்து துடித்திருக்கும் . எண்ணமே தொண்டையை கவ்வி பிடித்தது .
கீர்த்தி சித்தப்பா போன் பண்ணாங்க , அவள் விரலை நீவியபடி பக்குவமாய் பேசினான் .
என்ன என்பது போல் பார்த்தாள் .
வியாழக் கிழமை வினோத் நினைவு நாளாம் .
அவள் முகம் இருந்து நீர் துளிகள் உருண்டு விழுந்தது .
கீர்த்தி நாம ஊருக்கு போகணும் !
அவள் பதில் பேசவில்லை …..அமைதியாக குனிந்திருந்தாள் .
அவள் நிலை புரியாமல் இல்லை . கீர்த்தி நாம வினோத் ஆத்மாவிற்கு செய்ய வேண்டிய கடமை இது ! அங்கே யார் என்ன பேசினாலும் மனசுல ஏத்திக்காதே…. நான் உன் கூடவே இருப்பேன் ! உன் கண்ணில் ஒரு சொட்டு தண்ணீர் வரக்கூடாது சொல்லிட்டேன் .உறுதிபட கூறிவிட்டான் .
அமைதியாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .
“……………………………….”
நேரே சித்தப்பா வீட்டிற்கு தான் சென்றான் .
காத்திருந்து கார் கதவை திறந்தது வரவேற்றது கிருஷ்ணன் மட்டுமே . கண்ணீர் மல்க பேரனை அள்ளி அணைத்துக் கொண்டவர் நொறுங்கிவிட்டார் . ….வரவேற்பை எதிர்பார்த்து விருந்திற்கா வந்திருக்கிறார்கள்.
எல்லாரின் பார்வையும் இவர்கள் மீதே ….நெருப்பில் நிற்பதாய் தவித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி . அந்த வீட்டில் வினோத்துடன் வாழ்ந்த நாட்கள் இதயத்தை கீறிவிட்டது .
ஐயர் வந்து ஹோமம் வளர்த்து மற்ற நடைமுறைகளை தொடங்கினார் . கிருஷ்ணன் பேரனின் சட்டையை கழட்டிவிட்டு தன மடியில் அமர்த்திக் கொண்டு ஹோமத்தில் அமர்ந்தார் . பத்மினி பெருங்குரலெடுத்து அழுது விட்டார் .
ஐயர் சொல்வதை எல்லாம் குழநத்தையின் கரம் பிடித்து கிருஷ்ணன் செய்தார். அப்பா தாத்தா பாட்டன் முப்பாட்டன் பெயர் சொல்லி ஒவ்வொரு பிண்டமா வையுங்கோ என்று அய்யர் சொல்ல …..உயிர் கரைந்து வெதும்ப குழந்தையின் சின்னஞ்சிறு கரம் பற்றி அவர் பிண்டம் வைத்தார் .
வாழ்வில் மிக மோசமான தருணம் இது தகப்பன் பிள்ளைக்கு பிண்டம் வைப்பது. உயிர் வதை இது ! ஒரு வயது குழந்தை தகப்பனுக்கு திவசம் கொடுப்பது . எல்லாரின் மனதிலும் பாரம் .
அங்கு ஹோமத்தின் புகையோடு மௌனமும் சூழ்ந்து கொண்டது .
கடைசியாக குழந்தை கையில் எள்ளும் தண்ணீரும் கொடுத்து பிண்டத்தில் விடும்போது மொத்த குடும்பமும் அழுதது .அஸ்வின் அவ்வளவு வேதனையுடன் கண்மூடினான் .மாலையுடன் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் வினோத்தை காண முடியாமல் நடுங்கி அமர்ந்திருந்தாள் கீர்த்தி . ஓசையின்றி அவள் குகுலுங்கி அழுவது கண்டு அஸ்வின் மிகுந்த துயர் கொண்டான் .
அருகில் அமர்ந்திருந்தவன் யாரின் கருத்தையும் கவராத வண்ணம் அவள் கரம் ஆறுதலாய் அழுத்தினான் .
திவஷம் முடிந்து ஐயர் சென்ற பிறகு பத்மினி பேரனை தூக்கி முத்த மழை பொழிந்தார் . அவர் மகநின் ரத்தம் அல்லவா ? நிஷாவும் கண்ணீருடன் குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டாள் .
அஸ்வின் சூழ்நிலையின் கணம் தாளாது கிருஷ்ணனை பார்த்தான் . கிளம்புகிறேன் என்ற குறிப்பு அந்த பார்வையில் இருந்தது .
இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு ரெடியாகிடும் . விரதம் முடிச்சுட்டு கிளம்புங்க என்றார் .
கீர்த்தியிடம் யாரும் பேசவில்லை , குழந்தையை அவளிடம் கொடுக்கவும் இல்லை .
படையல் போட்டு தீபம் ஏற்றி எல்லோரும் கும்பிட்டனர் . விழுந்து வணங்கி விபூதி த்தை கொண்டாள் கீர்த்தி ,குழந்தைக்கும் வைத்துவிட்டாள்.
கீர்த்தி இந்த சாதத்தை காக்காக்கு வச்சிட்டு வாம்மா என்றார் கிருஷ்ணன் .
சரிங்கப்பா என்றவள் இலையுடன் தோட்டத்தில் உள்ள கிணற்றடிக்கு சென்றாள்.
வாங்க மகாராணி ….இந்த உலகத்தில் முதல் புருஷன் திவஷத்துக்கு ரெண்டாவது புருஷன் கூட வந்த பொம்பள நீ ஒருத்தியா தான் இருப்ப…அவ்வளவு வன்மமாய் சிரித்தான் பிரகாஷ் .
அவனை பொருட்படுத்தாமல் கிணற்று கட்டையில் இலையை வைத்துவிட்டு அவள் நகர….
என்னடி பத்தினி தெய்வமா நீ ? இவ்வளவு கர்வம் எங்கிருந்து வந்தது உனக்கு ? அவள் கரம் பற்றினான்.
பின்னிருந்து அவன் சட்டை காலரை பற்றி இழுத்து ஓங்கி அறைந்தான் அஸ்வின்.
பொறம்போக்கு நாயே ….கையை வெட்டிடுவேன் .உனக்கு அவ தங்கச்சி முறைடா தெருபொறுக்கி நாயே ….மீண்டும் ஒரு அரை கொடுத்தான் . என்றோ கொடுக்க நினைத்தது இன்று வசமாய் சிக்கிக் கொண்டானே ….விட்டுவிடுவானா ?
உன்கூட பிறந்த தங்கச்சி ரெண்டு பேரு இருக்காங்களே ….அடக்க முடியலைன்னா அங்கே ….. காரி துப்பினான் .
அவளை தப்பா பார்த்த அன்னைக்கே உன் கண்ணுல ஆசிட் ஊத்தியிருக்கணும்!
நிஷாக்காக பார்க்கிறேன் …என் தங்கச்சி புருஷனா போயிட்டியே இல்லைனா பொளந்துடுவேன் .
உன்கிட்ட இருந்து பாதுகாக்க தான் இவள் கழுத்தில் அவசரமா தாலி கட்ட வேண்டியதா போச்சு ! இல்லைனா வினோத் திவஷம் முடிந்து பெரியவங்க சம்மதத்தோட முறையா கல்யாணம் பண்ணியிருப்பேன் . இன்னும் ஆவேசம் தனியாமல் மீண்டும் ஒரு குத்து விட்டான் .
அண்ணா இந்த அறை பத்தாது ! என் புருஷன்னு பார்க்க வேண்டாம் . அவன் கையை வெட்டுங்க ! நிஷா கதறி அழுதாள்
error: Content is protected !!