Skip to content
Post Views: 9,502
உனக்கென இருப்பேன்-29
ஒன்னும் இல்லை நிஷா அமைதியா இரு ! சித்திக்கு தெரிந்தா ரொம்ப வேதனை படுவாங்க. அவள் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டான் .
ஏதோ ஒரு சபலத்தில் இப்படி நடந்துக்கிட்டாரு . விட்டு தள்ளுமா….
நிஷா பதில் கூறாது அஸ்வினோடு உள்ளே சென்றுவிட்டாள். பிரகாஷ் அவமானத்தில் குறுகி நின்றுவிட்டான்.
Advertisement
“………………….”
சித்தப்பா நான் உங்க சொத்து கிடைக்கும்னு கீர்த்தியை கல்யாணம் செய்த்துக்கலை. நான் கை நிறைய சம்பாதிக்கிறேன். தியானு என் பிள்ளை அவனை வளர்க்க எனக்கு தெரியும் !
உங்க சொத்துக்களை ரெண்டு தங்கச்சிகளுக்கும் பிரித்து எழுதிடுங்க!
Advertisement
அது எப்படி அஸ்வின் ! தியானேஷ் எங்க வாரிசு ! அவனுக்கு போக அதான் பொண்ணுங்களுக்கு …..பத்மினி முதல் முறையாக நல்ல வரத்தை பேசினார் .
Advertisement
சித்தி இவன் உங்க பேரன் தான் இல்லைனு சொல்லலை . உங்க அன்பு போதும் அவனுக்கு .
நாங்க கிளம்புறோம் சித்தப்பா ….குழந்தையை இறுக்கி அணைத்திருந்தவரிடம் இருந்து வாங்கி கொண்டவன் சித்தப்பா நான் உங்க பிள்ளை இவன் உங்க பேரன் என்றான் அழுத்தமாய் .
கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்தார் .
Advertisement
“………………………….”
என்னங்க இவ்வளவு தூரம் வந்திருக்கோம் அம்மா அப்பாவை பார்க்கலைனா எப்படி ?
வேண்டாம் கீர்த்தி . நாம கிளம்புவோம் ! திட்டவட்டமாய் மறுத்தான் .
எனக்கு அச்சுவை பார்க்கணும் !
ப்ளீஸ் போகலாமே …கெஞ்சினாள் .
புரியாம பேசாதேடி … பல்லை கடித்தான் .
யார் என்ன சொன்னாலும் நான் கண் கலங்க மாட்டேன் போதுமா ?
பிடிவாதம் கூடி போச்சுடி உனக்கு ! கடுப்புடன் காரை திருப்பினான் தன் வீட்டை நோக்கி .
கார் சத்தம் கேட்ட உடனே ஒடி வந்தாள் அக்ஷயா . அவளுக்கு நம்பிக்கை இருந்தது அண்ணன் வருவான் என்று ….
குழந்தையை வாங்கி முத்தமிட்டு தட்டா மாலை சுற்றினாள் . பட்டுக்குட்டி அத்தையை பார்க்க வந்தீங்களா ? செல்லம் இது உன் வீடு தெரியுமா ? அவளுக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி.
அச்சுவை அடையாளம் வைத்து தியானு துள்ளி சிரித்தான் .
நடுக்கத்துடன் உள்ளே சென்றாள் கீர்த்தி . அமைதியாய் உள்ளே சென்று அப்பாவிற்கு அருகில் அமர்ந்து கொண்டான் அஸ்வின் .
வெதும்பி அமர்ந்திருந்த சரோஜினி மடியில் குழந்தையை கொண்டு போய் வைத்தாள் கீர்த்தி .
எதுவும் பேசாத சரோஜினி குழந்தையை அணைத்துக் கொண்டார் சரோஜினி .
வினோத் முகம் கண்முன் நிழலாட …குழந்தையை இறுக்கி உச்சி முகர்ந்தார் . இன்று வினோத் நினைவு நாள் அல்லவா…. ஏற்கனவே வேதனையில் இருந்தவர் குழந்தையின் பால்முகம் கண்டு உடைந்துவிட்டார் .
அச்சு அண்ணிக்கு காபி போட்டு கொடு என்றார் .
பாருடா இந்த சரோஜினியை பேரனை கொஞ்சுது ,மருமகளை கண்டுக்குது பெத்த பிள்ளையை கண்டுக்கல ….மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின் .
அம்மா என்று அவரிடம் மண்டியிட்டவள் அவர் தோளில் சாய்ந்தாள் . என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை அப்படி கதறி அழுதாள்.
அழாதே என்று தோள் சாய்ந்தவளை அணைவாய் பிடித்துக் கொண்டார் . அவருக்கும் கண்ணீர் சுரந்தது.
அம்மா என்னை ஏத்துக்கோங்க….உங்க மகளா ….கையெடுத்து கும்பிட்டாள் . அஸ்வின் கண்ணீருடன் பார்த்திருந்தான் .
அவள் தாயை எவ்வளவு தேடுகிறாள் என்று புரிந்தது .
மருமகளை அணைத்துக் கொண்டவர் கண்ணிலும் அவ்வளவு கண்ணீர் வெள்ளம் . அக்ஷயா கண்ணீரும் புன்னகையுமாய் இந்த நெகிழ்வான காட்சியை பார்த்திருந்தாள் .
தாயின் மடியில் இருந்த குழந்தையை எடுத்து அச்சு கையில் கொடுத்தவன் தான் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் .
அவர் எதுவும் பேசவில்லை ,அவனும் தான் ….இருவரின் கண்ணீரும் நிற்கவில்லை .
பொன்னுசாமி நிம்மதியாய் பார்திருந்தவர் பேரனை தூக்கிக் கொண்டு தெரு பக்கமாய் போய்விட்டார் .
மகிழ்ச்சியுடன் உணவளித்து மகன் மருமகளை மனமே இல்லாமல் அனுப்பி வைத்தார் சரோஜினி .
“………………………….”
கீர்த்தி ….கீர்த்தி ….அவளை சுரண்டினான் .
தியானேஷ் குழந்தையா ? நீங்க குழந்தையா ? ரொம்ப படுத்தி எடுக்கறீங்க …சுகமாய் சலித்துக் கொண்டாள் . எதற்கெடுத்தாலும் கீர்த்தி கீர்த்தி என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறானே
அம்மா இப்போ தான் கொஞ்சமே கொஞ்சம் சமாதானமாகி இருக்காங்க ! அவங்களுக்கு ஒரு பேத்தியை பெத்துக் கொடுத்துட்டா முழுசா சமாதானம் ஆகிடுவாங்க ! அவள் புடவை முந்தானையை பிடித்து திருகிக் கொண்டிருந்தான்
நானா மாட்டேன்னு சொன்னேன் …அவன் காதுக்குள் ரகசியம் பேசி சிவந்துவிட்டாள் .
அடியே ….உன்னை….. கன்னத்தில் வலிக்க கிள்ளினான் .
ஸ் ஆ…….சிணுங்கினாள் .
தவிக்க விடறடி …..அவள் கன்னத்தில் கோடிழுத்தான் .
நீங்க தவிச்சு கிடந்தா நானா பொறுப்பு ….எழுந்து அறைக்குள் ஓடிவிட்டாள்.
இன்னும் உறங்காமல் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தான் தியானு .
மகனே நீ பொம்மையோடு விளையாடிகிட்டு இருந்தா தங்கச்சி பாப்பா கூட எப்படி விளையாட முடியும் ? குழந்தையிடம் அவன் புலம்ப கிளுக்கி சிரித்தாள் கீர்த்தி .
தாபத்துடன் அவளை பார்த்திருந்தவன் பார்வையில் அவ்வளவு காதல் நிரம்பி வழிந்தது.
ஒருவழியாக தியானு உறங்கிவிட காத்திருந்தவன் கட்டிக் கொண்டான் தன் கண்ணான கண்ணாட்டியை …..வருடங்களாய் காத்திருந்த காதல் கணவனின் அணைப்பில் கட்டுண்டு முத்தமிட்டாள் அவன் உயிரில் நிறைந்திருந்த தேவதை .
முத்தமிட்டது மட்டுமே அவள் . யானை பசிக்கு சோளப்பொரியா ? வாரி சுருட்டிக் கொண்டான். உயிர் சிலிர்த்து ரசித்து சுகித்தான் தன் மகாராணியை.
அவனின் அணுகல் கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும் நிதர்சனம் உணர்ந்தவள் அவனோடு உடன்பட்டு அவனை கணவனாய் ஏற்றுக் கொண்டாள்.
அது உணர்வின் தேடலாய் இல்லாமல் உயிரின் தேடலாய் இருந்தது . அவளுள் நிறைந்த உடன் ஏதோ ஜென்ம சாபல்யம் தீர்ந்துவிட்டதாய் ஒரு நினைப்பு அவனுக்கு.
அவளுக்காக ஏங்கியதும் ,புலம்பியதும், கலங்கியதும் அவன் மட்டுமே அறிவான் .
இதோ இந்த நொடி அவளோடு சங்கமித்துவிட்ட இந்த நொடி அவனை பரிபூரணமாய் உணர வைத்தது.
அவளை தேடி அவளோடு கூடி இன்பத்தின் உச்சம் பெற்று விலகி படுத்தவன் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான் அவள் பிறை நெற்றியில்.
அந்த அழுத்தம் கொடுத்த இன்பம் சற்றுமுன் சுகித்த கலவியில் சிற்றின்பத்தை விட பேரின்பமாக இருந்தது.
அந்த இரவு அவளை மீண்டும் மீண்டும் நாடவில்லை . ஒரு கூடல் கொடுத்த நிறைவை ஒவ்வொரு செல்லிலும் உட்புகுத்தி ரசித்து திளைத்து அவளை அணைத்துக் கொண்டே படுத்திருந்தான் .
சமூக வளைதளம் எவ்வளவு புரட்சி செய்தாலும் இன்றும் கைம்பெண்ணுக்கு வாழ்வு கிடைப்பது குதிரைக்கொம்பு தான், அதுவும் கையில் குழந்தையோடு இருக்கும் பெண்ணுக்கு ?l
தனக்கு கிடைத்திருக்கும் வாழ்வை எண்ணி பூரித்து போனாள் கீர்த்தி . அஸ்வின் என்று ஒருவன் இல்லை என்றால் தானும் தன் குழந்தையும் என்னவாகி இருப்போம் ? என்று எண்ணி பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது.
உள்ளம் வெதும்பி நன்றி நவிலும் பொருட்டு அவன் கன்னம்பற்றி மென்மையாய் முத்தமிட்டாள்.
நான் தியானு இல்லை அவனோட அப்பன் என்றவன் இறுக்கி அணைத்து அதரத்தோடு அதரம் பதித்து அழுத்தமாய் முத்தம் வைத்து இப்படி கொடுக்கணும் ! எங்கே நீ ட்ரை பண்ணு பார்க்கலாம் என்றான்.
ச்சீ என்ற அவளின் வெட்கத்தின் கானம் அவன் இதுவரை கேட்டிராதது, அந்த வெட்க சிவப்பு அவன் இதுவரை பார்த்திராதது .
“…………………….”
ஒவ்வொரு நாளும் அவளை புதிதாய் உணரவைத்தான் . நடந்தது அனைத்தும் கெட்ட கனவோ என்று அவளை நினைக்க வைத்தான். வாழ்க்கை என்பது வெறும் கண்ணீர் பக்கங்கள் மட்டுமே அல்ல….அதில் மகிழ்வு,நெகிழ்வு எல்லாம் உண்டு என்ற தத்துவத்தை அவள் உணர்ந்து கொண்டாள்.
சீரும் சிறப்புமாய் அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது….அவர்கள் எதிர்பார்த்தது ஈடேற மூன்.று மாதம் காத்திருக்க வேண்டி இருந்தது.
ஆம் கீர்த்தி கருவுற்றுறிருந்தாள். கர்ப்பத்தை பரிசோதித்த பட்டையை அவன் முன் நீட்டினாள்.
கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டவன் டெஸ்ட் பண்ணி பார்க்க அவ்வளவு பயந்தியே …? கடின உழைப்புக்கு கை மேல் பலன் உண்டு என்று உணர்ச்சி பெருக்குடன் முத்தமழை பொழிந்தான்.
ச்சீ என்ற அவளின் வெட்கத்தின் கானம் இன்று அவனை மெய்மறக்க வைத்திருந்தது.
சரோஜினி மருமகளை காண மாதம் மூன்று முறையாவது வந்துவிடுகிறார்.
அஸ்வின் அவளை பூ போல் தாங்கினான்.
அச்சு MSC முடித்து விட சரவணன் கல்யாண பேச்சை தொடங்கினான்
பெரியவர்கள் ஜாதகம் பொருந்தினால் பார்க்கலாம் என்றனர் .
சரவணன் பயந்து விட்டான். ஆனால் அச்சு நம்பிக்கையோடு தான் இருந்தாள் . உண்மை காதல் எனில் நிச்சயம் கைகூடும் என்ற நம்பிக்கை அவளுக்கு .அஸ்வின் காதலை கண்டவள் அல்லவா ?
ஜாதகம் அம்சமாக பொருந்தி இருக்கிறது என்று பெரியவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
இப்போ திருமணம் வேண்டாம் ஒரு வருடம் போகட்டும் என்று பொக்ரான் அணுகுண்டை சரவணன் தலையில் இறக்கினாள்.
என்ன சொல்ற ? கடும் அதிருப்தி அவனுக்கு .
அண்ணிக்கு குழந்தை பிறக்கட்டும் பிறகு வைக்கலாம் என்றாள்.
அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் ? அப்பட்டமாய் எரிச்சலை காட்டினான் சரவணன்.
எனக்கு இருக்கிறது ஒரே அண்ணி என் கல்யாணத்துக்கு அவங்க ஓடியாடி வேலை செய்ய வேண்டாமா ?
ஏன் உங்க அண்ணி தான் வேலை செய்யணுமா ? மற்றவங்க எடுத்து செய்தால் ஆகாதா ?
ஆகாது ….! அவங்கவங்க இடம் அவங்கவங்களுக்கு தான் .
ரொம்ப சீன் போட்டா வேற மாப்பிள்ளை பார்க்க சொல்லிடுவேன் ! செல்லமாய் மிரட்டினாள் .
சொல்லி தான் பாரேன் என்றான் .
அச்சுவின் பேச்சுக்கு மறு பேச்சா ? அப்படியே ஆகட்டும் என்றனர் அவள் வீட்டினர்.
“……………………….”
சூல் கொண்டிருக்கும் கீர்த்தியை பார்க்க பத்மினி மகள்களுடன் வந்து நின்றார்.
நம்ப முடியாத மகிழ்ச்சி கீர்த்திக்கு . முதல் குழந்தையை சுமக்கும் போது வெறுப்பை கொட்டிய மனிதர்கள் இன்று இவ்வளவு அன்பை பொழிந்தாள்!
வீட்டில் சும்மா இருக்க போரடிக்குது என்ற அச்சு Mphil சேர்ந்துவிட்டாள்.
கீர்த்திக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குடும்பமே குட்டி தேவதையை கொண்டாடி மகிழ்ந்தது.
அண்ணனாகி விட்ட தியானுவை கையால் பிடிக்க முடியவில்லை .பாப்பு பாப்பு என்று சுத்தி சுத்தி வந்து முத்தமிட்டு கொஞ்சினான்.
அஸ்வின் அவ்வளவு ஆனந்தமாய் இருந்தான். தனக்கு பிறந்த மகள் வந்த பிறகு மகனை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் யாருக்கும் வராதபடிக்கு இன்னும் நெருக்கமாகிவிட்டான் மகனோடு .
தியானுவை மகளோடு ஒன்ற வைத்து அத்தனை இன்பம் கொண்டான்.
அவன் எண்ணம் புரிந்த கீர்த்தி இன்னும் ரசித்தாள் அவனது உயர்ந்த குணத்தை .
“………………………..”
சரவணன் மீண்டும் திருமண பேச்சை தொடங்க ……ஆரம்பித்த படிப்பை முடித்து விட்டு தான் கல்யாணம் என்றாள் அச்சு.
ஏய் உண்மையிலே என்னை உனக்கு உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா ? ஏன்டி சுத்தலில் விடற ? நொந்து போனான்.
பிடிச்சதினால் தான் சுத்தலில் விடறேன். காதலில் பொறுமை முக்கியம் அன்பரே ….அவள் போதிக்கலானாள் .
இருடி உனக்கு இருக்கு ! கடுகடுத்தான் காதலுடன்.
ஒருவழியாய் Mphil முடித்த பிறகே ஓகே சொன்னாள் அச்சு .
“……………………..”
இதோ அவர்கள் எதிர்பார்த்த அந்த பொன்னான நாள் வந்துவிட்டது.
வீட்டு மருமகளாய் ஒரு குறையும் தன் நாத்தனாருக்கு வந்து விடக்கூடாது என்று பார்த்து பார்த்து நகையும் ,பாத்திர பண்டமும் வாங்கி குவித்தாள் கீர்த்தி .
பொன்னுசாமி நெகிழ்ந்து போனார் . அவரை எதிர்பார்த்து செலவு செய்யவில்லை அஸ்வின். அதற்கு ஒருபடி மேல் கீர்த்தி. தாய் கூட ஒவ்வொன்றையும் இப்படி யோசித்து செய்ய மாட்டார். அவ்வளவு அன்பும் அக்கறையுமாய் கல்யாண வேலைகளில் பொறுப்பெடுத்துக் கொண்டாள் .
பொன்னர்,கிருஷ்ணர்.முத்துசாமி மூவரும் பட்டுவேட்டியில் வளம் வந்தனர் .
ஓரகத்திகள் மூவரும் கல்யாண வேளையில் பிஸியோ பிஸி .
சரவணன் ,அக்ஷயா திருமணம் வெகு சிறப்பாய் நடந்தேறியது.
தங்கைக்கு சிறந்த மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து விட்ட திருப்தி அஸ்வினுக்கு.
இரண்டாண்டுகள் காக்க வைத்த காதல் மனைவியிடம் வட்டிக்கு வட்டிப்போட்டு வசூல் வேட்டை நடத்தினான் சரவணன்.
“………………….”
ஹலோ பாஸ் புதுசா கல்யாணம் ஆனவங்க அவங்களா ? நாமளா? கொஞ்சிக் கொண்டிருந்த கணவனிடம் சிணுங்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.
ஏய் ரொமான்ஸ் பண்ண புதுமண தம்பதிகளா தான் இருக்கணுமா? நமக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கும் போது அன்னைக்கு நைட்டும் இதே ரொமான்ஸோடு இருப்பேன் தெரியுமா ?
ம்க்கும் ….முறுக்கிக் கொண்டவளை அள்ளி அணைத்துக் கொண்டவன் என் பொண்டாட்டி என் கண்ணுக்கு எப்போதும் புதுசு தான் என்றான்.
சார் மைத்தி பாப்பாக்கு ஒரு தம்பி பாப்பா ரெடி பண்ணிடுவீங்க போல….நாணமுடன் அவன் மீசையை பிடித்து இழுத்தாள் .
அடியே என் ஆசை பொண்டாட்டி உனக்கு இப்படி வேற ஒரு நினைப்பு இருக்கா ?
சான்ஸே இல்லை …ஆஸ்திக்கு ஒன்னு ,ஆசைக்கு ஒன்னு! இதுவே போதும். மகிழ்வா நிறைவா இருக்கு என்றான்.
இதுகளை வளர்த்துக்கிட்டே ரொமான்ஸ் பண்ணுவோம் ஓகேவா ?
அவள் இதழில் கவிதை எழுதினான். ஹைக்கூவோ குறுங்கவிதையோ இல்லை …..நெடுங்கவிதை எழுதினான்.
அவர்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க மனதார வாழ்த்தி விடை பெறுவோம் .
……………சுபம் ……….
இந்த கதையை காத்திருந்து படித்த அனைவருக்கும் நன்றி ! இந்த தளத்தில் எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. பொதுவாக எனக்கு எழுத்துலகில் அவ்வளவு பரிச்சயமான நண்பர்கள் யாரும் இல்லை. ஏனோ இந்த தளத்தில் ஒரு அறிமுகம் வேண்டும் என்ற ஆசையுடன் எழுதினேன்.
என்னால் தொடர்ந்து எழுத முடியாது. நேரம் கிடைக்கும் போது எழுதும் சூழல் தான் எனக்கு. அதனால் தான் நான் போட்டி கதைகளில் பங்கு பெறுவதில்லை.
என்னை ஊக்கப்படுத்திய தோழமைகளுக்கு மீண்டும் நன்றியும் வணக்கமும்.
அடுத்த கதையில் சந்திப்போம்
error: Content is protected !!