Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

நீங்காத நினைவு நீ 16 1

நீங்காத  நினைவு  நீ

   அத்தியாயம் -16



Advertisement

Advertisement

  ஆண்டவர்கனி  எப்படியாவது  திவ்யாவை  தன்னோடு  இயல்பாக   பேச  வைக்க வேண்டும்  என்று  அவளிடம்  பேச்சுக்கொடுத்தான்..

Advertisement

அவளின்  கோபம்  அவனுக்கு  புரிந்தது. அவளின்  இந்த  ஒட்டாத  பேச்சும், கோபமும்  அவனுக்கும் புரிய,  அவளை மாற்றவென   பேச்சு  கொடுத்தான்.

Advertisement

பொங்கி  விட்டாள் திவ்யா. தலையனையை  தூக்கி எறிந்து இருக்க. மறுபடியும் “திவி”   என்றிருந்தான்.

திவ்யாவுக்கு  கோபம் வர  எழுந்தவள். “என்ன   திவி, இப்போ  தான்    உங்களுக்கு  என்னை தெரியுதா” என்றவள்..

“உங்களை”  என்றவள், அவனை  அடிக்க  பொருள் தேடினாள். ஒன்றும்  கிடைக்காமல் போக.

நேராக  அவன்  அருகில் வந்து, அவனின் மேல் ஏறி  அவன் வயிற்றில்  அமர்ந்தவள், அவனை  கண்ட படி  அடிக்க.

ஆண்டவர் கனி அமைதியாக திவ்யா கொடுக்கும் அடிகளை வாங்கியவன்.

இன்னும் அடி  என்பது போல்  அமைதியாக  இருந்தான்.

ஆண்டவர்கனியின்  தோளிலும், கன்னத்திலும்  அடித்தவள். “எங்கே போனீங்க, ஏன் என்னை  கூப்பிட வரல. நீங்க எல்லாம்  ஒரு மனுஷனா, உங்களுக்கு எதுக்கு  பொண்டாட்டி, பிள்ளை”  என்று அவனை கை வலிக்க அடித்தவள். அவனின் மார்பின் மீது சாய்ந்து அழ..

அவளை  தன் இரு கைகளாலும்  அணைத்து  கொண்டு அமைதியாக  இருந்தான்.

அவளின்  அழுகை  கூடுவதை  உணர்ந்தவன். “நாச்சி  போதும், அழத , பிள்ளை இருக்கு”.. என்றான்..

வெடுக்கென்று அவனிடமிருந்து  பிரிந்தவள்,  “ஆமாம்  பிள்ளை, இருக்கு, இவருக்கு  எல்லாம்  தெரியும், யார் சொன்னா, உங்களுக்கு”  என்றாள்..

“உன் பிரண்ட் தான்  சொன்னாங்க”.

“ஆமாம் நான்  என் வாயால  சொல்லாமுன்னு ,  எத்தனை  நான் காத்திருந்தேன், பிரண்ட்  சொன்னாங்களாம் பிரண்டு”  என்று  அவனிடம் இருந்து   எழுந்து கொள்ள பார்க்க.

அவளை எழ வீடாது  தன்னிடம் இறுக்கி மடியில்   வைத்துக்கொண்டான்.

“இப்படியே  இருந்துட்டு சண்டை போடு”  என்றான்..

“காலில்  அடிப்பட்டு இருக்குன்னு  பார்க்கிறேன், இல்லண்ணா, உங்கள பார்த்தவுடனே  கழுத்தை  பிடிச்சு  நெருச்சி  இருப்பேன்”. என்று  செய்து  காண்பிக்க..

“சாரிடா,  சாரிடா”. என்றவன், அவளின்  கன்னத்தில் முத்தம் வைத்தான்.

அவன்  முத்தம்  வைத்த கன்னத்தை  வேகமாக  துடைத்தவள், “ஒன்னும்  வேண்டாம் விடுங்க  என்னை, இடுப்பு, கால் வலிக்குது ” என்றவளை..

மெல்ல தன்  கையை  விலக்கி கொள்ள.

அவனிடமிருந்து இறங்கியவள் கட்டிலில்  சாயந்து அமர..

திவ்யாவிடம்  தண்ணீர்  பாட்டிலை  நீட்டி இருந்தான் கனி..

அதை வாங்கி குடித்தவள்.. பாட்டிலை அவனிடம் தர, அவனும் தண்ணீர்  குடித்து விட்டு “நான்  என்ன  செய்யனும் சொல்லு  செய்றேன்”  என்றான்.

திவ்யா அமைதியாக இருக்க.

“நான்  பண்ணது தப்பு  தான்,  என்  சூழ்நிலை அப்படி, அதுக்காக  நான்  செஞ்சது   சரியின்னு  சொல்ல  மாட்டேன். நான் ஒரு நல்ல அண்ணணா, மகனா  எங்க  வீட்டு  ஆளுக்கலுக்காக இருந்து  இருக்கேன். ஆனா   உனக்கு  ஓரு  நல்ல  ஹஸ்பண்டா  நடந்துக்க  முடியல சாரி, சாரிடா  இத  தவிற  என்கிட்ட  சொல்ல  வேற  எதுவும் இல்ல, இனிமே  இப்படி  நடக்காம  உன்ன  என்னோடு  வச்சு  பாத்துக்கிறேன்”  என்று  பேசிவிட்டு அவள்  முகத்தை  பார்த்து  இருந்தான்..

அவளோ  அமைதியாக    “எத்தனை வாட்டி  உங்களுக்கு போன்  பண்ணுறது, ஏன் என் போனை  எடுக்கல”  என்றாள்..

“என்ன  போன்  பண்ணியா”?…

“ஆமாம்”  என்று  தலையாட்ட..

“சாரிடா, நான் ஹாஸ்பெட்டல  பெரியசாமி  கூட ரொம்ப  நாள்  இருந்தேன், தேவையில்லாத  நிறைய  கால் வரும். ஹாஸ்பெட்டலுல இருந்து  என்னால  பேச முடியாது. அதனால  சேவ்  பண்ணாத  கால்  வந்த  எடுக்க  மாட்டேன். நீ எனக்கு கால் மீ திவ்யா என்று மெஜேஸ்  போட  வேண்டியது  தானே”..

“ஆமாம்  உங்களுக்கு போன்  போடுறதே  பெருசு, இதுல  மெஜேஸ் வேற போடனுமா” என்றவள்.கண் மூடி இருந்தாள்

திவ்யா  கண் மூடி  இருந்ததை   பார்த்து, இவளை  எப்படி கூல் பண்ணுறது  தெரியலையே  என்று யோசித்தவன்..

அவளையே பார்த்திருந்தான்,, “எத்தனை  மாசம்  நாச்சியா  நம்ம பிள்ளைக்கு”  என்றான்..

கண் திறந்து பார்த்தவள்,  “கால்  கட்டு போட்டு இருக்கீங்கன்னு பாக்குறேன், இல்லன்னா என்னை தேடி வரத காலை  நானே ஒடச்சிருப்பேன்”.

அவள்  கோபத்தில்  பேசிகிறாள்  என்றவன்,,  நீ  சொல்லாத நானே  கண்டு  பிடிச்சு  சொல்லுறேன்” என்றவன்.

 திவ்யாவின்   மடியில்  படுத்து, அவளின் டாப்பை மெல்ல நீக்கி, அவளின்  வெற்று வயிற்றில்  முகத்தை  புதைத்தான்.

அவளோ “வேண்டாம்  தள்ளி போங்க”  என்று  அவனிடம் இருந்து விலக.

அவள் விலகாத  படி,  அவனின் கையை வைத்து இடுப்பை சுத்தி பிடித்து  கொண்டவன் “கொஞ்சம்   நேரம் டீ “.. என்றான்..

திவ்யாவுக்கு  அவன் செய்வது  பிடித்து  இருந்தாலும், அவனின் மேல்  உள்ள கோபத்தில் விலக முயல..

அவனோ அவளை அசையாத  வாரு  கையால் இடுப்பை சுத்தி அனை கட்டி இருக்க. என்னவோ செய்து  கொள்  என்றிருந்தாள்.

சிறிது நேரம் திவ்யா அமைதியாக இருக்க.  அவளின்  வயிற்றில் முகம் புதைத்தவன் “நாலு மாசம் முடிஞ்சு, ஐஞ்சாவது மாதம் சரியா”  என்றான்.

அதானே பார்த்தேன்,  இவனுக்கா ஒன்னும்  தெரியாது, எப்படி கணக்கு  சொல்லுறான்  பாரு என்று  மனதில் நினைத்தவள், அமைதியாகி  இருக்க.

“சாரி குட்டிமா”  என்று வயிற்றில் உள்ள குழந்தைக்கு முத்தமிட, திவ்யாவுக்கு  உடல் கூசியது.

“போதும்” மேல  வாங்க என்று அழைக்க.

“நான் உன்கிட்ட பேசல, என் பிள்ளைகிட்ட  பேசுறேன், அப்பாவை  மன்னிச்சிருங்க, உங்களை  இவ்வளவு  நாள்  பாக்காம இருந்ததுக்கு, சாரிடா நீங்க அம்மா  வைத்துல  வந்ததே  எனக்கு  தெரியாதுடா  குட்டி, தெரிஞ்சுருந்தா  அப்பா  உடனே  எல்லா  வேலையையும்  விட்டுட்டு உங்களை  பார்க்க  ஓடி வந்து இருப்பேன்”  என்று அவளின் வயிற்றில் முத்தம் வைத்தவன்.

சிறிது நேரம் அமைதியாகி இருக்க. அவளின் வயிற்றில் ஈரத்தை  உணர்ந்தவள்.

“கனி” என்றாள்.

“கொஞ்சம்  நேரம் சும்மா  இரு”  என்றவன் அவளின் வயிற்றில் இன்னும்  முகத்தை  புதைத்திருக்க.

“எனக்கு  இடுப்பு வலிக்குது”… என்றவளை.

“ஓ….  சாரிடா, சாரி”…  என்று எழுந்து  அமர.

“சரி  தூங்குங்க காலையில்  பேசலாம்”  என்று  படுத்து கொண்டவளிடம்.

“நீ  தூங்கு, எனக்கு தூங்கம் வரல”  என்று அமர்ந்து இருந்தான்..

“மாத்திரை போட்டு  இருக்கீங்க  தூங்குங்க”   என்றாள்.

“நான்  தூங்கி  நாலு மாதம்  ஆச்சு நாச்சியா, நீ  இல்லாம  என்னால தூங்க கூட முடியல, என்ன  தூங்க வையேன்”  என்று கேட்டவனை..

முதலில்  முறைத்தவள் பின்பு அவன் சொல்வது உண்மை போல என்றே தோன்றியது, அவன்  கண்களை  சுத்தி இருந்த  கருவளையத்தை   பார்த்து.

“படுங்க”  என்றவள், அவளின்  கையை அவனுக்கு  கொடுக்க.

நீட்டிய  கையில்  முத்தம் வைத்தவன், அவளின்  கையை தன்  கன்னங்களில் வைத்து கொண்டு  தூங்கி விட்டான்.

********

இங்கு  மும்பை  அன்பு  வீட்டில்  கணபதி  ஹோமம்  முடிந்தவுடன். ஸ்ரீஜெயம், நளினி, தமிழ் அரசு  அனைவரும் விருதுநகர்  கிளம்ப.

பார்கவியின்  முகம் வாடியிருப்பதை  பார்த்த  ஸ்ரீஜெயம் “அக்கா நான் ஒரு நாலு நாள் கழிச்சி வாரேன்,  நீயும்  மச்சானும்  ஊருக்கு போங்க”..  என்றார்.

“ஏன்டா  அங்கே  உனக்கு  எவ்வளவு  வேலையிருக்கு, இப்படி சொல்லுற”  என்று நளினி கேட்க.

“அக்கா”  என்றவர்  பார்கவியை  காண்பிக்க. அவளின்  முகத்தை  பார்த்தவருக்கே மனம் இழகியது.

“பார்கவி”  என்று மருமகளை அழைக்க.

“சொல்லுங்க  அத்தை”  என்றவள்  நளினியின்  அருகில் அமர..

“நீ எல்லாத்தையும் தனியா  சமாளிச்சுருவ  தானே”..

“உம்  பாத்துக்குவேன்  அத்தை  நீங்க  பயப் படாம  போங்க அத்தை.ஸ்ரீப்பா  இங்கே  இருக்குறேன்னு  சொல்லிட்டாரு”  என்று கூற.

நளினி  ஸ்ரீஜெயத்தை   பார்த்து  காலா,  காலத்துல   கல்யாணமாகி இருந்தா, இப்போ பார்கவி  வயசுல  ஒரு பொண்ணு  இருந்துருக்கும், நானும்  என் மகனுக்கே  அந்த பிள்ளையை கட்டி வச்சுயிருப்பேன்  என்று  மனதில் நளினி  நினைத்தவர்.

“அத்தை கிட்ட எதுவுண்ணாலும்  கூப்பிடு, நாங்க  போயிட்டு  வர்ரோம்”  என்று கிளம்பி விட.

ஸ்ரீஜெயம்  மும்பையில்   இன்னும் இரண்டு  நாள்  இருந்து பார்கவிக்கு  ஒரு  கார், டூவிலர் என்று  வாங்கி  தர..

அன்புக்கு  ஏதோ  மனதில்    ஸ்ரீஜெயம்  பார்கவிக்கு  அதிகமாக செய்வது போல் தெரிய, ” என்ன மாம்ஸ்,  என் பொண்டாட்டி  மேல  பாசம் ஓவரா போகுது”  என்று கிண்டல்  பண்ண.

“டேய்  பார்கவி அப்பா என்ன  சொல்லிட்டு  போனார்,  தெரியுமுல  அதான்”  என்று ஸ்ரீஜெயம்  பேச.

“இல்ல  மாம்ஸ், நீ  எல்லாத்துக்கும் செய்வ   நான்  இல்லண்ணு  சொல்ல மாட்டேன், ஆனா நீ பாருக்கு செய்யுறது  கொஞ்சம்  அதிகமா தெரியுது”..

“டேய்  உனக்கு என்ன வேணுமோ கேளு, வாங்கி தரேன் அத விட்டுட்டு. என்  பொண்ணுக்கு  செய்யுறத  கண்  வைக்காத, அவ யாருடா  என்  அன்புவோட மனைவி,  என் பிரண்டோட  பொண்ணு, என் பொண்ணு மாதிரி”  என்று  சொல்ல..

வானதில்  உலா போகும்  தேவதைகள். ஸ்ரீஜெயம்  என் பொண்ணு  மாதிரி இல்ல என் பொண்ணே தான்,   என்று சொல்லிய  போது, “ததாஸ்து, ததாஸ்து அப்படியே  ஆகட்டும்” என்று  கூறி சென்றார்கள்.

“ஆமா  உன்  பொண்ணு மேல  கண்  வைக்குறாங்க, நீங்க எனக்கு  செஞ்சா என்ன, அவளுக்கு  செஞ்சா  என்ன  எல்லாம்  ஒன்னு  தானே  மாம்ஸ்”..

“சரிடா  நீ  பாருகிட்ட  பேசுறீயா,  அவ  உன்கிட்ட  பேசுனாளா”  என்றார்..

“எங்க மாம்ஸ்  நான் பேசுனாளே முறைக்குற, எதாவது  சொன்னா  அத செஞ்சுட்டு  காது  கேட்காத  மாதிரி  போறா, நான்  என்ன பண்ண. அட்லிஸ்ட்  என்  முகத்தை கூட பாக்க  மாட்டேங்குறா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு”  என்றான்.

“எல்லாம்  சரியாகும்  அன்பு  நான் பாருக்கிட்ட  பேசுறேன்”..

“வேண்டாம்  மாம்ஸ், அவளே  எப்போ  என்  கிட்ட பேசனுமுன்னு  தோணுதோ  அப்போ  பேசட்டும்”…  என்றான்..

“சரிடா அன்பு, பாருவை பாத்துக்கோ” என்றவர்  பாருவை அணைத்து தோளில் தட்டி கொடுத்து  “அப்பா  இருக்கேன்டா  பாத்துக்கோ”  என்று விருதுநகர் கிளம்பினார்.

பார்கவி இரண்டு மூன்று நாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். பின்பு  அவர்களுக்கும்   தனி, தனி வேலை இருக்குமுல்ல என்று நினைத்து அவளே, அவளை தேற்றிக்கொண்டாள்.

ஸ்ரீஜெயம்  விருதுநகர் வந்து  மூன்று  மாதத்திற்க்கு  மேல்  ஆகி  இருந்தது.

தினமும் ஸ்ரீ ஜெயம்   அன்பிடமும், பார்கவியிடமும்  பேசி விடுவார்..

 பார்கவி  தினமும் இரவு வந்து நளினியிடமும்,  அவளின் ஸ்ரீப்பாவிடமும்  பேசிவிடுவாள்..

நாட்கள்  மாதங்களாக  செல்ல.. பாரு  காலையில்  எழுந்து யோகா, தியானம், அவளின் ஹாஸ்பெட்டல்  வேலைகள் என்று காலை 9  மணிக்கு செல்பவள், இரவு வர 7, இல்ல 8  மணிக்கு வந்து விடுவாள்.

அன்பு தினமும் காலை பத்து மணிக்கு  ஆபிஸ் சொல்பவன். இரவு 10 மணிக்கு  தான் வருவான். அதற்குள் பார்கவி    தூங்கிவிட.. இருவரும்  வீட்டில்  இருப்பது  சன்டே மட்டும்  தான். அது  அவர்களுக்கு என்று தனிப்பட்ட  வேலைகள், பொருட்கள் வாங்க என  சென்று விடும்.

அன்புவுக்கு   பார்கவியிடம்  பேச  ஆசை  தான்,  ஆனால்  பார்கவி  அன்பு  முகத்தை பார்த்தால்  தானே, அவன்  அவளிடம்  பேச ஆசைபடுவது தெரியும்,  அவளோ  அவன் இருக்கும் பக்கம் கூட திரும்பி பார்க்கதவளை   மனதில் போடி   நானும் உன்னை பார்க்க மாட்டேன்  என்று  நினைத்து. அவர், அவர் வேலைகளில்  மூழ்கி இருந்தனர்..

வேலை கார பெண் காலை  வந்து சமையல் செய்து வைத்து விட்டு சென்று  விட. இருவரும்  காலை உணவை  உண்டு விட்டு, மதியம் உணவை  எடுத்து கொண்டு வேலைக்கு சென்று விடுவார்கள்.

இரவு  சில  முறை  வேலை செய்யும்  பெண் வராமல்  இருந்தால். பார்கவியே  சமைத்து  வைத்து  விடுவாள்.

அன்பு பார்கவி சமைத்த   உணவை  சாப்பிடும்  போதே, அதன் சுவையில்  கண்டு  பிடித்து  விடுவான்,  ஓ.. இன்னைக்கு  டாக்டர்  மேடம்  சமைத்து  இருக்காங்க  போல  என்று நன்றாக சாப்பிடுவான். பார்கவி  நன்றாக  சமைப்பாள். ஆனால்  சமைக்க  மாட்டாள். தேவைப்படும் போது செய்வாள். பார்கவிக்கு  அடுத்தவர்  சமைத்து கொடுத்து  உண்பது தான் மிகவும் பிடிக்கும்..

ஒரு  நாள்  தீடிர்  என்று  பார்கவி  ஹாஸ்பெட்டலில்  இருந்து மதியம்  போல்  வீட்டிற்கு வர..

வேலைகார  பெண்  வீட்டை சுத்தம்  பண்ணிக்கொண்டு  இருந்தார்.

பார்கவி  வேலைகார  பொண்ணை  கவனிக்காமல்  கண்ணீரோடு  சோபாவில்  அமர்ந்து  இருக்க.

அப்பெண்  பார்கவி  அழுவதை பார்த்து , அன்புவுக்கு  போன் போட..

பத்து நிமிடத்தில்  வந்து  விட்டான் அன்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!