Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு

Vaalibaththai Kolluthadi Vanna Nilavu 6

“வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு”

அத்தியாயம் -6

இல்லற வாழ்க்கையின் இன்பத்தை அனுபவித்தவளுக்கு இனி வர போகும் சவால்கள் எப்படியோ வாங்க பார்க்கலாம்.

தன்னுடைய மார்பினில் சிறுபிள்ளையாய் உறங்கும் பிரேமாவை பார்த்த அவனுடைய மனம் இன்று பகல் என்னுடன், இனிவரும் இரவு யாருடனோ என்று சிலாக்கித்தான்.



Advertisement

பிறகு, தன்னுடைய இருகைகளையும் நெட்டிமுறிக்க தூக்கிய சமயம் பிரேமா அசதி கலைந்து விழித்து கொண்டாள்.

சற்று முன்பு நடந்த நிகழ்வினால் கள்வனின் கூறிய பார்வையை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலைகுனிந்து கொண்டாள்.

என்ன பிரேமா?

Advertisement

‘ப்ச்’ ஒன்னுமில்ல.

Advertisement

நிஜமாவா?

நிஜம்தான் கணேஷ்.

எல்லாத்தையும் வச்சிட்டு இப்படி பொய் சொல்றியே பிரேமா.

Advertisement

அவனுடைய வார்த்தையின் நுனுக்கங்களை புரிந்து கொண்டவள், “ச்சி” போடா பேட் பாய்.

“ம்ம்ம்ம்… நானா என்றவன்”, அவளின் மனதில் உள்ளதை அறியும் பொருட்டு,

இனிமேல் நம்பள யாராலயும் பிரிக்க முடியாதில்லையா? என்றான்.

ஆமா கணேஷ், அதான் நம்ப ஒன்னு சேந்துட்டோமே இதுக்கு அப்புறம் அந்த கடவுளாலயே நம்பள பிரிக்க முடியாதுடா.

“ம்ம்ம்ம்….அவ்ளோ நம்பிக்கையா உனக்கு?”

ஆமா நம்ப காதல் மேல நெறய நம்பிக்கை இருக்கு.

ம்ம்ம்…. அப்டியா? இப்ப ஒரு பேச்சிக்காக உன்ன எனக்கு புடிக்கல உங்கப்பா பிரச்சனை பண்ணுவாங்க நம்ப பிரிஞ்சிடலாம்னு சொன்னா என்ன செய்வ?

“சும்மா எதாவது உலராதடா பைத்தியம் என்றாள்”

சொல்லு பிரேமா? என்றவன்
மீண்டும் மீண்டும் கேட்க, ஆத்திரம் கொண்டவலாக முகத்தை வைத்துக்கொண்டு, ஏமாத்திட்டு மட்டும் போகணும்னு நெனச்ச அவ்ளோதான் உன்னய கொன்னுட்டு ஜெயிலுக்கு போககூட தயங்க மாட்டேன் என்றாள் கனத்த குரலில்.

அவளின் வார்த்தையில் நிலைகுலைந்துவிட்டான் கணேசன். ஒன்னும் அறியாத சாது என்றென்னிருந்தவனுக்கு இடி விழாத குறை தான் அவளின் பேச்சில்,

உடனே சுதாரித்துகொண்டவன், ஏய் பிரேமா செல்லம் விளையாட்டுக்கு தானே கேட்டேன். அதுக்கே இவ்ளோ கோவப்படுவியா?

“நோ வே” கணேஷ். இனி இதுமாதிரி பேசவே கூடாது. ஏன் நெனக்ககூட கூடாது.

எனக்கிருக்கற ஆஸ்திக்கும் அந்தஸ்துக்கும் எப்படியெல்லாமோ வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் உன்னய காதலிச்சதுகான காரணம் உன்னோட அன்புக்கும் அரவணைப்புக்கும் மட்டும் தான்.

எங்க வீட்ல எல்லாமே இருந்தது. எல்லாரும் இருந்தாங்க. ஆன நானொறுத்தி இருக்கேன்ற நெனப்பு யாருக்குமே இருக்காது. வீட்ல இருக்கற பொருலா மட்டும் தான் என்னய பாத்தாங்க என்றவளுக்கு வீட்டின் நினைவுகள் அவஸ்தையை கொடுத்தது.

அதனை மறக்க நினைத்தவள், சரி அதெல்லாம் போகட்டும் அவங்ககிட்ட கிடைக்காத அந்த அன்பு மட்டுமே என்னை உன்னிடம் சேர்த்துச்சி அத மனசுல வச்சின்னு நல்லபடியா வாழற வழிய பாக்கணும் புரிஞ்சுதா? கணேஷ் என்றாள்.

ஒன்றுமே பேசாமல் பிரேமாவின் பேச்சை உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்தவனுக்கு இவளை ஒழித்துகட்டுவதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும்போலயே என்றென்னினான்.

என்ன யோசனையா இருக்க? கணேஷ்

அதுவா பிரேமா சேர்ந்து வாழணும்னு முடிவு பண்ணிட்டோம். இந்த ஊர்ல இருந்தா நம்ப ரெண்டு பேரையும் நிம்மதியா வாழவிடமாட்டாங்க அதபத்தி தான் யோசிக்கிற.

“ப்ச் ” நீ லூசுன்னு அடிக்கடி நிருபிக்கிற என்றாள் சிரித்த முகத்துடன்,

“ஆனால், அவளுக்கு தெரியாதே இது தான் அவளின் கடைசி சிரிப்பென்று”

இருவரின் பேச்சினை திசைதிருப்புவதற்காகவே கணேசனின் செல்போன் அழைத்தது.

திரையில் ராஜசேகர் பெயர் தெரிந்தது. அதனை வேகமாக கையில் எடுத்தவன் பெங்களூருல வேலைக்காக கேட்டிருந்த அவங்கதான் கூப்பிடறாங்க பேசிட்டு வந்துற்றேன் என்றான்.

அவனின் கலவர முகபாவனையை பார்த்து ஏய் நில்லு என்றாள்.

“என்ன பிரேமா? “

பொய் சொல்றியா கணேஷ் என்றாள்.

மனசுல இருக்கறத கரெக்டா கேக்கறாளே, கொஞ்சம் சமாளிப்போம் என்றவன்,

பிரேமா என்மேல நம்பிக்கை இல்லையா? இதுவரைக்கும் உன்கிட்ட பொய் சொல்லிருக்கேனா?

இல்லதான் ஆனா உனக்கு ஏன் கை, கால் ரெண்டுமே நடுங்குது.

அதுவா உங்க வீட்ல இருக்கறவங்க கண்டுபுடிக்கிறதுக்குள்ள நாம இங்கிருந்து கெளம்பிடணும் அந்த டென்ஷன் மத்தபடி ஒன்னுமில்ல “ஐ ஆம் நார்மல்டா செல்லம் “

“சரி ஓகே ” என்றவள் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.

வெளியே சென்றவன் தலையில் கையை வைத்துக்கொண்டு இவளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் போலிருக்கு என்றென்னினான்.

பிறகு அழைப்பினை ஏற்றுக் காதில் வைத்தவனுக்கு அவர்கள் சொன்ன தகவல் பேரதிர்ச்சியை கொடுத்தது.

“என்னவாக இருக்கும்? “

************

அங்கே மண்டபத்தில்,

வயசுல பெரியவங்கன்னு பாக்கறேன் எதாவது சொல்லிடபோறேன் ஓரம்போயா,

அனைத்தையும் பார்த்து பெண்ணின் வாழ்க்கைக்காக அமைதிகாத்த ஜோதிலிங்கம் மண்டபமே அதிருமலவுக்கு போதும் நிறுத்துடா என்றார் சிவந்த கண்களுடன்,

இவரின் வார்த்தைக்காக காத்திருந்த சொந்தப்பந்தங்களும் நாங்களும் உனக்காக மட்டும்தா ஜோதி பொறுத்திருக்கோம் ரொம்ப திமிரால்ல பேசறான்.

ஆமாமா இதுலாம் குடும்பத்துக்கு ஆகாது பழனி என்றார் இனொருவர்,

பெரிப்பா சும்மா விடுவிங்கலா, எங்கூட்டுகார் ஒன்னும் தப்பா பேசலியே சரியாதானே கேக்கறாரு,

அப்படி சொல்லுடி எம்பொண்டாட்டி, உன்னய கட்டினதுக்கு இன்னிக்கிதான் உருப்படியான வேல பாத்திருக்கடி தங்கமலை,

நீங்க சும்மாருங்க இவங்ககிட்ட நான் பேசிக்கிற என்றாள்.

இவர்களின் சத்தத்தை கலைக்கும் விதமாக இருந்தது வல்லரசுவின் சின்னப்பா குரல்.

டேய், முருகா முதல்ல தங்கம்மாவ ஆசுபத்திரிக்கி கூட்டிட்டு போடா இந்த அக்காள நான் கவனிச்சிக்கிற,

இவங்ககிட்டயா பண பிசாசுங்ககிட்ட பாசத்த பத்தி பேசமுடியாது. மாமா கிளம்புங்க என்றவன் கோகிலாவிடம் கண் ஜாடையாலே மன்னிப்பு கேட்டு அக்காவை தூக்கி சென்றான். அவளும் எந்த மறுப்புமிலாமல் தலையசைத்தாள்.

முருகா புள்ளைங்கள கூட்டிட்டு வர முன்னாடி போப்பா என்றார் வல்லரசு.

சரிங்க மாமா சீக்கிரம் வாங்க என்றவன் மாமியார் வீட்டில் சீதனமாக கொடுத்த காரில் கிளம்பிவிட்டான்.

வல்லரசு குழந்தைகளை அழைத்து சென்ற நேரம் ஜோதிலிங்கம் மாப்ள மதிம்மாவ இங்கயே விட்ருங்க புள்ள அங்கன வந்தா பயந்துடும்.

மதியை பார்த்தவர் தாத்தாட்ட போறயா மதி?

போமாத்தேன் (போகமாட்டேன்) தாதி (டாடி).

அங்கன வந்து தொந்தரவு பண்ணக்கூடாது.

அங்கன்னா எங்க தாதி (டாடி) போறோம்.

அம்மாக்கு ஊசி போடணும்டா மதி.

அச்சோ, நா வதல (வரமாட்டேன் ) போங்க என்றவள் வல்லரசுவின் கைகளில் இருந்து நழுவிசென்று ஜோதியின் தோலில் ஏறிகொண்டாள்.

மருமகனின் தவிப்பை அறிந்தவர், போனவுடனே தகவல் குடுங்க மாப்ள நான் மருமகபொண்ண வீட்ல விட்டுட்டு வரேன்.

ஒன்னும் சிரமமில்ல,இங்க இருக்கற வேலைய கவனிங்க. நான் எல்லாத்தையும் சமாளிசிக்கிறேன் மாமா என்றவர் நொடிநேரத்தில் அங்கிருந்து புறப்பட்டர்.

மனம் தாங்காதவன், ஓஹோ அதானே பாத்தேன் “நீர் அடிச்சா நீர் வெலகவாபோகுது”

போதும் நிறுத்துங்க மாப்ள உங்களோட இந்த குணத்தால உங்க குடும்ப மானமே ஊர் சிரிக்குது.

அது தெரியாம அடுத்தவங்களை குறை சொல்றதையே பொழப்பா வச்சிருக்கீங்க. நானும் நல்லது நடக்கற சமயத்துல இத பேசக்கூடாது வீட்ல பேசிக்கலாம்னு பாத்தா என் சின்ன மகள அழிச்சிடுவிங்கலாட்டும் இருக்கே.

“ம்ஹும்” அங்க சுத்தி இங்க சுத்தி என்குடும்பத்தையே தப்பா பேசறீங்களா? “

இப்பவே இந்த நிமிஷமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.

டேய் கூறுகெட்டவனே இப்பவும் என்ன பிரச்னைன்னு கேக்காம உறவ பிரிக்கணும்னு பேசறான் பாரு ஜோதி, இவன் திருந்தமாட்டான் முட்டாள் என்றார் வல்லரசு சித்தப்பா.

“யோவ், உனக்கு இதுக்கு மேல மரியாதை கிடையாது என்றான் முகம் சிவக்க,”

மாப்ள……………. என்று கர்ஜித்தவர், உங்க பொண்ணு ராத்திரியோட ராத்திரியா ஓடிப்போய் கல்யாணம் பன்னிட்டா அது தெரியுமா? உங்களுக்கு,

ஹாஹாஹா……என்று நக்கலாக சிரித்தவன், என் பொண்ணு ஓடி போய்டாளா? எவன்டா கெலப்புனது. என் வளர்ப்பு என்னிக்குமே தப்பு பண்ணாது தெரிஞ்சிக்கோங்க.

ம்ம்ம்ம்…உன்னோட கர்வதுக்கும் நம்பிக்கைக்கும் உன்னோட பொண்ணு தகுதியானவ இல்ல தெரியுமா? பழனி என்றார் சொந்தத்தில் ஒருவர்.

இன்னொருமுறை அவளை தப்பா பேசனீங்க ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன்.

ஹாஹாஹா…….. என்று எதிர்புறம் நக்கலாக சிரித்தார் வல்லரசு சின்னப்பா.

என்னையா லந்து பண்றியா?

இல்லல்ல, நாங்கதான் பொய் சொல்றோம் சரி விடுடா டேய் கிறுக்குப்பயலே. உன் ஆசை பொண்ணகூட்டிட்டு வாயேன் பாக்கலாம் இப்ப இங்கன.

அதுக்கென்ன பெருசு, இதோ வரச்சொல்றேன். ஏண்டி தங்கமலை பொண்ண கூட்டிட்டு வாடி.

அவ எங்கங்க இங்கிருக்கா.

எங்கடி போனா?

புதுதுணி வாங்க வல்லரசு மாமான்கூட போனதா தங்கம்மா சொன்னா இப்பவரைக்கும் வரவே இல்ல நானும் கவனிக்கலை.

பொண்ண பெத்தவமாதிரியாடி பேசற என்றவன் அவளின் கண்ணத்தில் “பளார் பளார்” என்று அறைந்தார்.

மூன்றாவது அடிவிழுவதற்குள் அமராவதி தடுத்துவிட்டார்.

“ஊரு பாக்குது சொந்தபந்தம் பாக்குதுங்கற என்னமில்லாமா எம்பொண்ண இந்த அடி அடிக்கிறீங்களே நியாயமா? மாப்ள”

உங்க மவளை அடிச்சதுக்கு இவ்ளோ கோவபட்றீங்களே, எம்பொண்ண, என் செல்ல குட்டி நடத்தய பத்தி தப்பா பேசறாங்களே எனக்கு கோவம் வராதா? என் ரத்தம் கொதிக்காதா?

போதும் நிறுத்துடா ரத்தம் கொதிக்கறது குழம்பு கொதிக்கறதுல்லாம் அப்புறம் இருக்கட்டும் அங்க பாரு உங்க மாமனார் வந்திருக்காங்க.

உன் வீரத்தையும் திமிருதனத்தையும் அவங்ககிட்ட காட்டுடா பாக்கலாம் என்றார் தெனாவட்டாக வல்லரசு சித்தப்பா.

இனி என்னாகும் தொடரும் அத்தியாயம் – 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!