Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 21 1

நீங்காத நினைவு  நீ

  அத்தியாயம்-21



Advertisement

Advertisement

  பெரியசாமியின்  மொத்த  குடும்பமும்  கமலியின் வீட்டில் இருந்தது..

Advertisement

இன்று பெரியசாமிக்கும், கமலிக்கு   நிச்சயதார்த்தம்  என்று முடிவு  பண்ணி  நெறுக்கிய  உறவு மட்டும்  சொல்லி, கமலின் வீட்டில் நிச்சயம் வைத்தனர்.

Advertisement

நேற்று  கமலியின் தலை கட்டு பிரிக்கப்பட்டு , ஒரு பேன்டேஜ் மட்டும் போட்டு  இருந்தாள்..

கமலியிடம் தினமும் இரவில் போன் பேசுவதை  வழக்கமாக வைத்திருந்தான் பெரியசாமி..

பொண்ண  கூட்டிட்டு வாங்க, என்று உறவுகாரர் ஒருவர் சொல்ல..

பெரியசாமி  தேர்வு  செய்ய பட்ட கரும் நீல கலர் பட்டில் பொம்மை  போல்  வந்த நின்ற கமலியை பார்த்த பெரியசாமிக்கு  கண்ணை அவளிடமிருந்து எடுக்க முடியவில்லை அவன்  பார்த்தது, பார்த்த படி அப்படி நிற்க.. அவ்வளவு அழகாய் இருந்தாள் கமலி…

அந்த புடவையினால் அவள் அழகா.. அவள் அழகாள்  அந்த புடவை அழகா என்று  தெரியவில்லை  அவ்வளவு பொருந்தமாக இருந்தது அந்த புடவை கமலிக்கு, அது இல்லாமல் அவள் வெள்ளை கற்கள் பதித்த நகைகளை  அணிந்து இருக்க, இன்னும் பேரழகியாய் தெரிந்தாள் பெண்..

அனைவரும் கமலியின் புடவையை பார்த்து  ரொம்ப நல்லா  இருக்கு எங்கே எடுத்தீங்க என்று கேட்க..

“காஞ்சிபுரம் என் மகன் பெரியசாமியே  போய் என் மருமகளுக்கு  எடுத்துட்டு வந்தான், புடவை விலை ஒரு லட்சத்துக்கு மேல”  என்றார்  யோகா மகனை பார்த்து ..

என்ன? ஒரு லட்சத்துக்கு மேல வா?.. என்று  சொன்ன அனைவரும். அப்போ கல்யாணத்துக்கு என்ன விலை எடுத்து கொடுப்பா பெரியசாமி என்று கேலி பேசி சிரிக்க.. அவனோ அவர்கள் பேசியதை காதில் வாங்காமல் கமலியை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க..

அவளும் அவ்வப்போது நிமிர்ந்து பெரியசாமியை பார்க்க.. பெரியசாமி மனதில் பேசாம இப்பவே தாலி கட்டி தூக்கிட்டு போயிடலாமா என்று நினைத்திருந்தான் தன் பேரழகியை பார்த்து..

யோகாவிற்கு பயமாக இருந்தது.

இருவரின் ஜோடி பொறுத்தம், எங்கே கண்ணுபட்டு  விடுமோ என்று.. இருவரின் பார்வை சொல்லியது அவர்களுக்கு தன் துணையை எவ்வளவு பிடிக்குது என்று..

பெரியசாமி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, சந்தோஷம் கமலியை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான்..

யோகா கமலியை பார்க்க. அவள் முகத்திலும் அத்தனை சந்தோஷம், மகிழ்ச்சி ஏதோ பிறவி பலனை அடைந்தது  போல அவளின்  மொத்த  மகிழ்ச்சியை முகத்தில் காட்ட..

யோகா கடவுளை வேண்டிக்கொண்டார்… இருவரும் இன்று போல் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என்று..

நிச்சயதார்த்தம் நல்ல  படியாக நடந்து கொண்டு  இருக்க, ஆண்டவர் கனி  தன் மனைவியை முறைத்துக்  கொண்டிருந்தான்..

என்ன முறைப்பு என்பது போல் கணவனை பார்த்துவிட்டு  கமலியின் அருகில் சென்று நின்று  அவள் வேலையை அவள்   செய்து கொண்டிருக்க..

“வாடி, வந்து  உட்காருடி”  என்று மனைவியை  அழைத்துக்கொண்டிருந்தான் கனி.. எப்படி நடந்துட்டே இருக்க பாறு என்று திவ்யாவை திட்டிக்கொண்டேன் இருந்தான்..

நீங்க சொன்னா நான் கேட்பேனா போயா, இது எங்க வீட்டு விஷேசம். நான் தான் எல்லாத்தையும்  பாக்கனும்  என்று அனைவரிடமும் பேசிகொண்டு  நடந்தவளை, பார்த்து கனி கோபமாக முறைக்க..

லட்சுமி மகனை பார்த்து விட்டு “திவ்யா வாம்மா”  என்று  தன்னோடு  அமர வைக்க..

“அத்தை”  என்றவள் லட்சுமியுடன்  ஐந்து நிமிடம் உட்கார்ந்து இருந்தவள்.. பின்பு  யோகாவின் அருகில் சென்று நின்று அவருக்கு  உதவ..

கனி  தன் தலையில் அடித்துக்கொண்டான்.. இது தேறாத கேசு,, நைட்டு வந்து கால் வலி, இடுப்பு வலியின்னு சொல்லட்டும்  இருக்கு உனக்கு என்று அவளை மனதில் திட்டிக்கொண்டிருந்தான்…

 நிச்சயம் எல்லாம் நல்ல படியா முடிய.. ஒரு மாதம் கழித்து கல்யாணம் வைத்துக்கொள்ளலாம்  என்று முடிவு   ஆனது..

அன்புவும், பார்கவியும் இலங்கை  வந்திருந்தனர்,, முதலில் ஆதிநாராயணன் வீட்டிற்கு சென்று ஒரு நாள் இருந்து விட்டு..

மறுநாள் தோழி  திருமணத்திற்கு  அன்பும், பார்கவியும் வந்திருந்தனர்..  பார்கவி  அன்புவை தன் நண்பர்களோடு அறிமுகம் படுத்தி வைத்தாள்..

அன்பு தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டு  அனைவரிடமும்  நன்றாக  பேச.. பார்கவியின்  ஆண் நண்பர்கள் அன்புவை  தனியே அழைத்து சென்றிருந்தனர்.. இருவரும் அவர்களிடம் பேசிக்கொண்டாலும்.

அவ்வப்போது தன் துணையை எங்கே இருக்கீறார்கள்  என்று பார்த்துக்கொண்டே இருக்க..

பார்கவியின் தோழிகள்  அன்புவை பார்த்து நல்லே குணம் உன்டே ஹஸ்பன்ட் எல்லாறாண்டையும்  நல்லா கதைக்குரார்,,   என்று பேச..

“ஆமாம், அவரெண்டே குணம்  நல்ல மாதிரி எல்லாறாண்டையும்  நல்லா கதைப்பார்,  நல்லா குணம்  அவருடையனது… என்றவள்.. அன்புவை பார்க்க.. ஒரு கையில் சூஸை குடித்துக்கொண்டே,  மறு கை பேன்ட் பாக்கெட்டில்   வைத்திருந்தவன்,   அழகாய் தெரிந்தான், பெண் அவளை கண்னெடுக்காமல்  பார்த்திருக்க..

திவ்யாவின் தோழி, “அவ புருஷனை, அவளே  சைட்டடிக்குறா” என்று பேச, “போக்கடி” என்றாள்..

“சும்மா சொல்ல கூடாது பார்கவி உன்  ஹஸ்பண்ட் நல்ல வடிவமா  உண்டு அல்லே”.. என்று கூற..

பார்கவியின்  பெண் தோழி ரீனா  லேட்டாக வந்தவள், அனைவரிடம் பேசிக்கொண்டே இருந்தவள்.

ஆண் நண்பர்கள்  பக்கம் பார்த்தவள், “அது யார் அந்தே ஆளு” என்றாள்.. அனைவரும் யாரை சொல்கிறாள் என்று பார்க்க. ரீனா அன்புவை காட்டி “ஹீரோ போலே வடிவமா  இருக்கார், யாரு” என்று கேட்க,, அனைவரும் தெரியாது என்று கூற.. பார்கவி ஏதோ சொல்ல வர, அவளை அவள் தோழிகள் சொல்ல விடமால் பிடித்து வைத்துக்கொள்ள..

“நான் போய் கதைச்சுட்டு வாறேன்”  என்றவள். அன்புவின் அருகில் சென்று  “ஹாய்”  என்று கைகொடுக்க..

அன்புவும் “ஹாய்”  என்று கை குலுக்கினான்.. அவளை ரீனா என்று அறிமுகம்  படுத்திக்கொண்டவள்.. அவனை பற்றி கேட்க..

அவன் பார்கவியை திரும்பி பார்த்தான். அவள் தோழிகள் அவளை கேலி பண்ணிக்கொண்டிருப்பதை  பார்த்தான்..

“பாரு, கம்” என்று அருகில் அழைக்க..

தோழிகளை தள்ளி விட்டு “போக்கடி”  என்று கூறிவிட்டு அன்புவின் அருகில் வர.. பார்கவியின் தோழிகள் செய்வதை பார்த்து சிரித்தவள்..

பார்கவி அருகில் வந்ததும். அவளின் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து கொண்டவன் “மை ஸ்விட் டார்லிங்  மை வைப் பாரு”  என்றான் காதலாய்..

ரீனாவின் முகம் போன போக்கில்  அவள் தோழிகள்  அனைவரும்  அவள் அருகில் வந்து.. “அடியே அவர் பாருவோட ஹஸ்பண்ட்” என்று கூறி சிரிக்க…

எல்லாரும் சாப்பிட வாங்க என்று கல்யாணம் வீட்டுகாரர் ஒருவர் வந்து அனைவரையும் அழைக்க..

அனைவரும் சாப்பிட சொல்ல..

“பாரு வா”  என்ற தோழிகளிடம் “நீங்க போங்கோ நான் வாறேன்”  என்றாள்.. அனைவரும் உணவு உண்ண  செல்ல..

“வா பாரு சாப்பிட போலாம்” என்று   அன்பு அழைக்க..

அவனின் கை பிடித்து நிறுத்தியவள்.. “குட்டா” என்றாள்.

“சொல்லு இட்லி, நாம சாப்பிட போலாமா”..

“எனக்கு ரூம்  போகனும்” என்றாள்..

“ஏன்டா? சாப்டு கொஞ்ச நேரம் உன் பிரெண்ட் கூட இருந்துட்டு  போகலாம்” என்றான்..

“இல்ல எனக்கு இப்பவே  ரூம் போகனும்”  என்றவளை,, ரூம்பிற்கு அழைத்து வந்திருந்தான் அன்பு..

“உடம்பு சரியில்லையாடா  பாரு, இல்ல மந்திலி பெய்னா என்று கேட்டுக்கொண்டே  ரூம்கதவை  லாக் பண்ணி விட்டு திரும்ப..

அவனை பின்னிருந்து அணைந்திருந்தாள்  பார்கவி..

அதுவும் மிக நெருக்கமாக, உன்னை யாருக்கும் தரமாட்டேன் என்பது போல…

“பாரு என்னாச்சுடா”.. என்றான்..

அவளை தன் முன்னே கொண்டு  வந்தவன்..

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க”.

“அன்பு, அன்பு” என்றவளின் கண்கலங்க..

“என்னம்மா, ஏன்டா அழுற”.. என்றவனை அணைத்துக்கொண்டு அழுதவளை..

“சொல்லிட்டு அழு”..

“தெரியலயா?.. என்றவள்..

அவனின் கழுத்தில்  முகத்தை புதைத்து கொண்டவள், “நீங்க ஏன் ரீனா கிட்ட பேசுனீங்க”..

அவனுக்கு புரிந்து போனது இவளுக்கு  தன் மேல்  காதல் வந்துவிட்டது  அதை சொல்ல தெரியவில்லை. இப்படி  அழுது கோபம் கொள்கீறாள் என்றவன்..

அவளை  ஒரு  கையாள் பிடித்துக்கொண்டவன்,, இன்னொரு கையால் அவளின் தலை கோதியவன்..”பிரெண்டுங்க கேலி பண்ணுறது சகஜம் தானே, இதுக்கு போய்  யாராவது வருத்த படுவாங்களா  டா,, என் பொண்டாட்டி  நீ,, இப்படி அழு மூஞ்சி பொண்டாட்டியா இருப்பேன்னு எனக்கு தெரியல”..

என்றான்..

“நீங்க ஏன் இவ்வளவு அழகாய் இன்றைக்கு இருக்கேள்” என்றாள்..

“இது என்ன கொடுமையா இருக்கு” என்று  சிரித்தான் அன்பு…

“வந்தே  என் தோழி முழுக்க, உங்களையே  பார்க்குறாங்க, கதைக்குறாங்க எனக்கு கோபம் வருது, அதில்  ஒருத்தி  உங்களுக்கு கை கொடுக்குறா” என்று புலம்பியவளை  தோளோடு அணைத்தவன்..

“இந்த அன்பு  எப்போதும்  இந்த பார்கவியோட  பிராப்பட்டி  போதுமா,,  யாரு பேசுனா என்ன?. நான் உன் புருஷன் தான் போதுமா” என்று அவளை அணைத்து  ஆருதல் படுத்தி,, அவளை உணவு உண்ண  மண்டபம் அழைத்து வந்திருந்தான்..

இரண்டு நாள் திருமணம் கொண்டாட்டம் முடியா,, இருவரும் இலங்கையை சுற்றி வந்தனர்..

பார்கவி  அன்புவின் தோளை பிடித்தபடியே சுற்றி வந்தாள், அன்புவின் கைகளை விடவே இல்லை மிக நெருக்கமாக தான் அவனை தன்னுடன் வைத்திருந்தாள்.. இது என்னோடது  யாருக்கும் தரமாட்டேன்  என்பது போல்..

முதலில்  பென்டோட்டா கடற்கறை  வந்திருந்தனர்,, இயற்கை  சூழ்ந்த கடற்கரையொட்டி  உள்ள  ரெசார்டில் தங்கி இருந்தனர்.. அடுத்ததாக யாலா தேசிய பூங்காவிற்கு  சென்றனர்.. வன விலங்குகளை பார்வையிட்டு,, சப்பாரி  செய்தனர்,

அடுத்தது நுவாரலியா  என்று  இடத்தை   (லிட்டில் இங்கிலாந்து) என்று அழைப்பர்,,  நுவாரியாவின்  அழகை பார்க்க இரண்டு  கண்கள் போதாது,,  மலைகள், பசுமையான தேயிலை தோட்டங்களும்,, அழகிய நீர் வீழ்ச்சிகள்,, பார்கவி அன்புவின் கையை பிடித்துக்கொண்டே உலாவந்தாள்,, பிறகு படகு  சவாரி என்று இருவரும் சிறுபிள்ளை போல் சுற்றி திறிந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!