Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 21 2

தினமும்  இருவரும் வேறு, வேறு இடத்துக்கு சென்றனர்.. அடுத்தது மிரிஸ்ஸா கடற்கரைக்கு  சென்று கடல் வாழ் உயிரினங்களை  போட்டில்  சென்ற படியே பார்க்கலாம், இருவரும் போட்டில் அமர்ந்து பார்க்க நீல திமிங்கலங்கள் , டால்பின்கள் இவர்களுக்கு முன் குதித்து, குதித்து போகும் காட்சி மிக அழகாய் இருக்க,, அன்பு அதை வீடியோ எடுத்தவன்.. “ரொம்ப அழகாய் இருக்கு பார்கவி,, இவ்வளவு  இடம் இலங்கையில் இருக்குமுன்னு நான் நினைக்கல”..

“இன்னும் இருக்கு குட்டா”  என்றவள்.. மறுநாள் கண்டி அழைத்து வந்தாள், கண்டி பசுமையான  மலைகள், மத்தியில் அமைந்து இருக்க. புத்த மத கோவிலுக்கு  வந்திருந்தனர் இருவரும்  மிக அமைதியான இடம் என்றே தோன்றியது.. புத்தரை வணங்கி விட்டு வந்தனர்..



Advertisement

பார்கவி “எப்படி  இருக்கு இலங்கை?”. என்றாள்..

Advertisement

“உன்ன போலவே பார்க்க, பார்க்க புதுசா, அழகா, பிரம்மிப்பா  இருக்கு, வெரி குட் பிலேசஸ் டா. நான் நல்லா  என்சாய் பண்ணேன். அழகான பொண்டாட்டி, இயற்கையான இடம்”  என்று அவளின் கைகோர்த்தான் கள்ள சிரிப்போடு..

Advertisement

“இங்க என்ன சொல்லவர்ரீங்கன்னு புரியுது”..

Advertisement

“புரிஞ்சு  என்ன பிரயோசனம், கட்டி மட்டும் புடிக்குற, உன் பக்கத்துல வந்தா முறைக்குற”..

“நான் எப்போ முறைச்சேன்,, என் பார்வையே அப்படி தான்”..

“வெளியே  வந்த என் கை புடிச்சுக்கிட்டே  கொஞ்சி  பேசுற, ரூம்புக்கு  போனா குப்பற படுத்து  தூங்கிடுற,  என்னை பார்த்த உனக்கு பாவமா இல்லையா”  என்றவனை..

 அவனை பார்த்து சிரித்தவன், “சாரி குட்டா,, வெளியே சுத்துறதுனால  கழைப்பா இருக்கு, அதான் தூங்கிட்டேன்”..

“சரி, சரி வா சும்மா உன்னை கழச்சேன், வேறதும் இல்ல, வா போலாம்”  என்றான்..

கடைசியாக சிகிரியா, லயன்ராக் கோட்டைக்கு  அழைத்து வந்திருந்தாள்,, இருவரும்  கைகோர்த்துகொண்டே   லவ்வர்ஸ் போல  இணைந்து நடந்துக்கொண்டே  கோட்டை ஏறினர்.. பசுமையான இடம், இயற்கை காற்று,  இருவரும் அனுபவித்து கொண்டே  கோட்டை ஏறி,, கோட்டையின் உச்சியில்  இருந்து வீவ் பார்க்க, மொத்த  இலங்கையை  பார்த்த பீல்,  ரொம்ப  அழகாய் இருக்க.. இருவரும் இணைந்து  நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்..

நாளை மறுநாள்  ஊருக்கு கிளம்ப வேண்டும், என்று முடிவு செய்திருந்தனர்..

இருவரும் கோட்டையில் இருந்து கீழே இருக்க.  அவர்கள் கூடவே நிறைய  கல்லூரி மாணவர்கள்  இறங்கினார்கள்..

மாணவர்கள் அனைவரும் கேலி, கிண்டல் பண்ணிக்கொண்டே கீழே இறங்க..

அன்புவுக்கும், பார்கவிக்கு  அவர்கள் காலேஜ் படிக்கும் போது சுற்றுலா போனது ஞாபகம் வர, இருவரும்   “காலேஜ்  லைப் எவ்வளவு சந்தோஷமான நேரம் இல்ல”  என்று   பேசிக்கொண்டே கீழே  வந்தனர்,..

அன்புவும், பார்கவியும் ரூம் நோக்கி  கார் பயணம் செய்ய.. இவர்கள் முன்னாடி கல்லூரி மாணவர்களின் பஸ் சென்று கொண்டிருந்தது,, பஸ்சில் பாடல் ஒலிக்க மாணவர் நடனம் ஆடிக்கொண்டே வந்தனர்.. பஸ் ஒரு பாலத்தின் மீது  சென்றுகொண்டிருக்க,,.. ஒரு நாய் பஸ் குறுக்கே வர..

 டிரைவர்  பஸ்சை பிரேக் போட்டு திருப்ப,, பஸ் பிரேக் போட்டும் நிற்க்கும் முன் வண்டியை திருப்ப, திருப்ப முடியாமல் பஸ் பாலத்தில் மோதி, தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு ஆற்றில் வில…

பின்னாடி  வந்த அன்பின் கார் இதை பார்த்து நிலை தடுமாறி நின்றது.

சந்தோசமான மன நிலை போயி பேர்ரதிச்சி ஆகிவிட்டது,, அன்பு வேகமாக காரில் இருந்து இறங்கியவன்..

 பார்கவிடம் தன் போனை குடுத்து விட்டு, ஆம்புலன்ஸ்  போன் பண்ணு, பயர் மேனுக்கு தகவல் சொல்லு என்று   ஆற்றில் குதித்திருந்தான்..

அன்பு குதித்தவுடன் அங்கே பார்த்துக்கொண்டு  இருந்தவர்களும் அனைவரும்   குதிக்க..  அன்பு முதலில்  பஸ் டோரை திறந்து விட்டு ஒருவர், ஒருவராக இலுத்து வெளியே விட.. நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி மேலே வர, நீச்சல் தெரியாவர்களை மேலே இலுத்து வந்து விட்டு மறுபடியும் உள்ளே சென்று மாணவர்களை அனைவரும் காப்பாற்ற,  5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்,, தண்ணீரில் விலுந்தவர்களை   காப்பாற்ற வென ஆட்கள் வந்து விட..

அன்பு சிலரை காப்பாற்றி  மேலே வந்தவன், மூச்சு விட முடியாமல் ஆற்றின்  கறையோரம்  அமர்ந்து, மூச்சை நன்றாக இலுத்துவிட்டு மீண்டும் ஆற்றில் குதித்து இன்னும் சிலரை தூக்கி வந்தவன். இதற்கு மேல் தன்னால் முடியாது என்று ஆற்றின் ஒரத்திலே படுத்து விட்டான்..

பார்கவி அன்புவை பார்த்து ஓடிவந்தவள்  அவனை தன் மடிமீது வைத்து கொண்டு   அவன் தலையை துடைத்து விட.. அன்புவுக்கு  சோர்வாக இருக்க , பார்கவியின் மடிமீது தலை வைத்து படுத்துவிட்டவன். மூச்சை இலுத்து  விட்டவன் இரும்ப,,  “ஒன்னுமில்லை  எல்லாரும் மேல   வந்துட்டாங்க” என்றாள்..

ஒரு டாக்டர் வந்து அன்புவை  பார்த்து  முதல் உதவி பண்ணிக்கொள்ள அழைக்க..

“வேண்டாம் டாக்டர் ஐ யம் ஓகே” என்றான்..

  பார்கவி “வாங்க அன்பு மூச்சு அதிகமா விடுறீங்க, வாங்க ஆம்புலன்ஸ் போகலாம்”  என்று அழைக்க..

“எனக்கு ஒன்னும் இல்ல இட்லி”  என்றான்..

பார்கவி அவளின் துப்பட்டாவை  வைத்து அன்புவின் தலையை துவட்டி விட..

அங்கே அனைவரும் காப்பாற்றி இருக்க இன்னும் இரண்டு பேர் மட்டும் இல்லை, மிஸ்சிங்  என்று சில நண்பர்கள்  ஆற்றின் ஓரம் நின்று வரதா இரண்டு பேரின் பேரை  சொல்லி கத்தி அழ..

சிலர் அந்த இரண்டு பேரை காப்பாற்ற மீண்டும் ஆற்றில் குதிக்க,, பார்கவியின்  மடியில் இருந்து அன்பு வேகமாக எழுந்து ஆற்றை  நோக்கி போக..

“அன்பு வேண்டாம்  அன்பு”  என்றவளின் சொல்லை காதில் வாங்காமல்  ஆற்றில் குதித்தான்..

பார்கவிக்கு  அன்பு நல்லபடியாக திரும்ப வரவேண்டும்  என்று பிராத்தனை பண்ணிக்கொண்டு ஆற்றின்  ஓரத்தில்  நின்று அவன் வருவான் எதிர் பார்த்திருக்க..

ஒருவர் ஒரு பெண்ணை தூக்கி கொண்டு வந்தார்.. இன்னும்  ஒரே ஒரு பையன் மட்டும் தான் வரவேண்டும் அனைவரையும் காப்பாற்றி  தூக்கி வந்து விட்டிருந்தனர்..

அன்பு சென்று பத்து நிமிடம் ஆகியது, பார்கவி பயம் வர ஆற்றை பார்த்துக்கோண்டே  “அன்பு, வாங்க  அன்பு, போதும் வாங்க அன்பு” என்ற அழ..

இவளை பார்த்திருந்த  ஒரு டாக்டர் என்னாசும்மா என்று கேட்க..

“என் ஹஸ்பண்ட் காப்பாத்த தண்ணில போனாரு காணும்” என்று அழ..

“அவருக்கு ஒன்னும் ஆகாது”  என்ற டாக்டர்..

தண்ணீரில் குதித்தான்..

அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த மருந்துவன்  அன்புவை தூக்கி கொண்டு வந்தவன்.. கூடவே இன்னொரு  பையனையும் இலுத்துக்கொண்டு வந்தான்..

அன்பு  மயங்கும் முன் ஒரு பையனை காப்பாற்றி இலுத்து வரும் போது மயங்கி இருந்தான்.. தன் கையால்  அவனை  பிடித்திருந்தான்..

மயங்கி இருந்த இருவரையும்  ஆம்புலன்ஸ் அழைத்து சென்று முதல் உதவி செய்ய..

அன்பு இரும்பிக்கொண்டே கண்விழித்தான்.. பார்கவி “அன்பு அன்பு” என்று அழுதுகொண்டே அன்புவின் அருகில் இருக்க..

அவன் கண்விழித்தது அழுகையை நிறுத்தியவள்,, அன்புவை அடி, அடி என்று அடிக்க..

அன்புக்கு  யாரோ, தன்னை அடிப்பது போல் உணர..

நன்றாக  கண்திறந்து பார்கவியை பார்த்தான் , அவளோ  “இடியட், இடியட்” என்று அவனை அடித்துக்கொண்டே அழ…

“ஏய் இட்லி வலிக்குதுடி” என்றான்..

“நல்லா வலிக்கட்டு, என்றவள் மீண்டும் ஒரு அடி வைத்து,, “என் உயிரே போயிருச்சு குட்டா ஏன்டா இப்படி பண்ண” என்று மீண்டும் அழ..

அவளை பார்த்து சிரித்தவனை..

“சிரிக்காதடா  கொன்னுருவேன் உன்னை”..என்றவன் அவனை அணைத்து கொண்டு “ஏன்டா இப்படி பண்ண என்னால முடியல”… என்று தேம்பியவளை…

தன் முகத்தை பார்க்க வைத்தவன்.. “நான் உன்னை விட்டு எங்கடி  போவேன்”.. என்று அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி சிரிக்க..

அன்புவை காப்பாற்றிய டாக்டர் இவர்கள் இருவரை பார்த்து நின்று  சிரிக்க..  பார்கவி  அன்புவை காப்பாற்றியவனை பார்த்து “நன்றி டாக்டர்”  என்றவள்..

அன்புவிடம் இவர் தான் உங்களை மேல தூக்கிட்டு வந்தார் என்று சொல்ல..

அன்பு அவரை பார்த்து “நன்றி டாக்டர்” என்றான்.

“நாங்களும்  எந்தே ஊரும் மக்களும்  தான் உங்கட்டே நன்றி சொல்லனும் சாரே,, எவ்வளவு பெரிய  விசயம், எந்தனை பேரை காப்பாற்றி இருக்கீங்கள், உங்க உயிரை  குடுத்து  இன்னொரு பையனை காப்பாற்றி கையை புடிச்சுட்டு  மயங்கி இருக்கேள், வாட்ய கிரேட் மேன் நீங்க, உங்கட்டே பேரு அன்பு,தானே”..

“ஆமாம்” என்று பார்கவி சொல்ல..

“தாங்யூ அன்பு”  என்ற மருத்துவன் அவனை அணைத்து நன்றி கூறியவன்..

பார்கவியிடம் “சாருக்கு காலில் அடிப்பட்டு இருக்கு,  ஹாஸ்பெட்டல் போலாம்”  என்று அவன் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு  அழைத்து  வந்திருந்தான்..

அன்புக்கு வேற உடை எடுத்து வந்து குடுத்தவன்,  அன்புவின் காலில் அடிபட்ட இடத்தை சுத்தம் பண்ணி மருந்திட்டவன். “இன்னைக்கு இந்த ரூம்புல இருந்துட்டு  நாளைக்கு போங்க”  என்றான்..

அன்புவும், பார்கவியும் நடந்த  விபத்தின் அதிர்ச்சியாகி, டாக்டர் முகத்தை சரியாக பார்த்து கவனிக்க வில்லை, இப்போது  அந்த டாக்டரின் முகத்தை  பார்க்க..

அந்த மருந்துவன்  பார்க்க அச்சு, அசல் ஸ்ரீஜெயம்   உருவ அமைப்பு மாதிரியே இருக்க.. அவன் சென்ற பிறகு தான் அன்பு பார்கவியிடம் சொன்னான்.. “நம்ம மாம்ஸ் ஸ்ரீஜெயம் மாதிரி இல்ல, இந்த டாக்டர்” கூற.

பார்கவி  “யாரு”?..என்றாள்..

“நீ எந்த உலகத்துல இருக்க  நீ”  என்றவன்,, “பயந்துட்டீயா” என்றான்..

அவளோ ஆமாம்  என்பது போல் தலையாட்டியவள்..

“உன்ன விட்டுட்டு  நான் எங்க  போவேன் இட்லி”  என்றவன்  அவளின்  கன்னத்தை பிடித்து முத்தம் வைக்க.

“ஒன்னும் வேண்டாம்”  என்றவளின் கண்ணீல் கண்ணீரை கண்டவன் “வா”  என்று  பார்கவி அருகில் அழைத்து  அணைத்துக்கொண்டவன், அவளின்  முதுகை வருடி விட..

இருவரின் போனும் ஒலித்தது, அன்புவின்  போனில் ஸ்ரீஜெயம்  அழைக்க, பார்கவியின்  போனில் ஆதிநாரயணன்  அழைத்துக்கொண்டு  இருந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!