Skip to content
Post Views: 2,894
இது கலியுகம்!
அவரவர் செய்யும் தவறுகளுக்கு அப்போதைக்கு அப்போதே தண்டனை கிடைக்கும் காலம்!
செய்யும் தவறு, சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும்!
அந்த வகையில் ரித்து செய்ததும் தவறு தானே!
Advertisement
காரணம் எதுவாக இருந்த போதும்!
ஆசை, பாசமாய் வளர்த்த பெற்றோர் அறியாமல் திருமணம் செய்து கொண்டதும், அதோடு கூட அவர்கள் அறியாமல் தங்கள் குடும்ப வாழ்க்கையும் தொடங்கி விட்டதும்!
அதனால் தான் அவனின் உயிரான குட்டிமாவை பிரிய நேர்ந்ததோ?
Advertisement
ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய இன்னொரு ஜீவனும் உண்டு!
Advertisement
எந்த தப்பும் செய்யாமலேயே கஷ்டம் அனுபவிக்க நேர்ந்த பாமா!
மானுவின் அம்மா!
அவரது கணவரால், ஒரு குழந்தையைப் போல பார்த்துக் கொள்ளப்பட்டவர், அவரது அண்ணன் குடும்பத்தால் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது!
Advertisement
கெட்டதிலும் நல்லதாக, தான் இப்படி கீழாக நடத்தப்படுவதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை! அது வரையில் கொஞ்சம் நிம்மதி தான்!
ஆனால் அதைப் புரிந்து கொண்ட மானு தான் , மிகப்பெரிய மன உளைச்சல் கொண்டாள்!
விருந்தாளியாக நினைக்காதே, வேலைக்காரியாக நினைத்துக் கொள் என்ற அவள் தாயாரின் துர்போதனைகளின் விளைவாக, மானுவையும் அவளது அம்மாவையும் வீட்டிற்குள் அனுமதித்தாள் மானுவின் அத்தை அமிர்தா!
இருவரும் விட்டிற்கு வந்த பின், அவளது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாள்!
ஆனால் எதுவுமே மானுவின் மாமா அறியாமல் பார்த்துக் கொண்டது தாய் மற்றும் மகளின் சாமர்த்தியம்!
மானுவும் தன்னால் மாமாவின் குடும்பத்தில் பிரச்சினை வேண்டாம் என்றே நினைத்து மவுனமாக இருந்து விட்டது அவர்களுக்கு காலில் சலங்கைக் கட்டி விட்டது போல் ஆகிற்று!
அவள் முதலில் செய்த காரியம், அதுவரை வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை வேலையை விட்டு நிறுத்தியது தான்!
“ஏன் அம்மு?” என்று சிவா கேட்டதற்கு,
“அவங்களா தான் நின்னுட்டாங்க. அவங்க பெண் வீட்டோட போறாங்களாம். வேற ஆள் பார்த்துகிட்டு தான் இருக்கேன்! சரியா அமைய மாட்டேங்கிறாங்க! நாலு இடத்துல சொல்லி வச்சுருக்கேன். அதுவரை பாமா அண்ணி, நானே பார்த்துக்கிறேன்ன்னு சொல்லிட்டாங்க!” என்று அள்ளி விட்டாள்!
வீட்டு பிரச்னைகளில் ரொம்பவும் தலையைக் கொடுத்து புண்ணாக வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அவரும் அதற்கும் மேல் ஒன்றும் கேட்க வில்லை!
மிகவும் வசதியாகிப் போனது அமிர்தாவுக்கு!
அதிகாலையில் எழுந்து வாசல் தெளிப்பதில் ஆரம்பிக்கும் பாமாவின் நாள்!
பின் அனைவருக்கும் தனித் தனியாக டீ, காபி, சத்து மாவு கஞ்சி வித விதமாய்!
பின் தினமும் இரண்டு டிபன்கள், காலை உணவாக!
அதன் பின் மீண்டும் ஒரு காபி கடை!
பின், அம்மியில் அரைத்த மசாலாக்கள் கொண்டு மதிய உணவு!
பெரும்பாலும் அசைவம்!
இட்லிப் பொடி கூட உரலில் இடித்து தான் தர வேண்டும்!
அடைக்கு, வடைக்கு எல்லாம் மிக்சியில் அரைத்தால் அம்முவின் அம்மாவிற்கு பிடிக்காதாம்!
அதனால் அது எல்லாம் ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டும்!
அது தான் இளிச்சவாயாக ஒரு பாமா இருக்கிறாளே!
அது இல்லாமல், வகை வகையான ஊறுகாய்கள் வேறு மாற்றி மாற்றி போட வேண்டியிருந்தது!
“உன் கைக்கு தான் ஊறுகாய் கெட்டுப் போகாமல் நல்லா வருது!” என்று சொல்லி சொல்லியே போட வைத்து விடுவார்கள் அன்னையும் மகளும்!
அவர்கள் வீட்டிற்கு மட்டுமில்லாமல் அம்முவின் தோழிகள் வீட்டிற்கும் கூட!
ஒரு நாள் எல்லாம் பாமாவுக்கு கை விரல்களே வீங்கிப் போய் விட்டன, அவர்கள் கிலோ கணக்கில் வாங்கிப்போட்டு ஊறுகாய் போட சொல்லி கொடுத்த மா இஞ்சியின் தோல்களை சீவி சீவி!
கூட இருந்து ஒரு உதவிக் கூட செய்ய மாட்டார்கள் இருவரும்.
அதே போல் தான் பலகாரம் நொறுக்குத்தீனி செய்வதும்.
நினைத்துக் கொண்டு விட்டால் போதும், “தேன்குழல் முறுக்கு செய், தட்டை செய்” என்று சொல்லி விடுவார்கள்! அதுவும் அரிசியை கல்லுரலில் இடித்து தான் செய்ய வேண்டுமாம்!
பாமாவிற்கும் மானு பிறந்தது சிசேரியன் மூலம் தான்!
அது நன்றாக தெரிந்திருந்தும் கூட, அத்தனை வேலை வாங்கினார்கள்!
எல்லாவற்றிகும் மேலாக மானுவை அதிகம் வருத்தம் கொள்ள வைத்தது, அவள் அம்மாவை அவர்கள் ஒரு “ஓடும்பிள்ளை” ஆக்கியது தான்!
அதாவது, எடுபிடி ஆள் போல நடத்தியது.
அத்தையின் அம்மா, இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, “அதை எடுத்து வா இதை எடுத்து வா” என்று ஏதாவது வேலை சொல்லி விரட்டிக் கொண்டிருப்பாள்.
ஏன் என்று பொறுக்க முடியாமல் ஒரு நாள் மானு கேட்டு விட்டதற்கு, பேயாட்டம் ஆடி விட்டார்கள் அம்மாவும் மகளும்!
“எங்க அம்மா வயசானவங்க, எழுந்து போக முடியாம, ஏதாச்சும் வேலை சொன்னா கூட செய்யக் கூடாதா?” என்று!
“அவங்க தான் வயசானவங்க, நீங்க எங்கம்மாவோட வயசு தானே, நீங்க உட்கார்ந்து பேன் போடக் கூட உள்ளே இருக்கிற எங்கம்மாவை வர சொல்லி போட சொல்றீங்க” என்று எதிர்த்து கேட்க வாய் வரை வார்த்தை வந்தது தான்!
அவள் மாமாவை நினைத்து அடக்கிக் கொண்டாள் மானு.
ஆனால் தினமும் இரவில் கை கால் மற்றும் இடுப்பு வலி என்று பாமா அவதிப் படுவதை அவளால் சகித்துக் கொண்டிருக்க முடியாமல், ஒரு நாள் அவள் தோழியான மாலுவிடம் புலம்பிய நாள் தான் கடவுளின் அருட்பார்வை அவர்கள் பக்கம் திரும்பிய நாள் போல!
மனீஷ் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவுக் காலம் ஏற்பட்டு, அங்கிருந்து கிளம்ப செய்தது காலம்!
மேலும் செய்த தவறிற்கு ரித்து, அவன் குட்டிமாவைத் தேடி ஊர் ஊராக அலைந்து அடிப்பட்டு நொந்து போனதும்,
போதும் என்றே நினைத்தது அந்த காலமோ அல்லது கடவுளோ!
அவன் மானு வேலை செய்யும் மருத்துவமனை அருகில் போய் கீழே விழுந்து விபத்தில் மாட்ட, அவர்கள் சந்திப்பும் நிகழ்ந்தே விட்டது!
——-
அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, தனது பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டான் ரித்து.
“யாரு?”
“ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் சார்”
“வாங்க” என்று அவன் அனுமதித்தும், உள்ளே வந்து அறையை சுத்தம் செய்து விட்டுப் போனான் ஒரு இளைஞன்.
கொஞ்ச நேரம் சென்று மீண்டும் கதவைத் தட்டி விட்டு வேறு ஒரு பெண் வந்தாள்.
வந்தவள், அவனிடம் “லேப்ல இருந்து சார், உங்க ப்ளட் சாம்பிள் எடுத்துக்கிறேன்” என்று சொல்லி எடுத்துப் போனாள்.
“ச்சே.. யார் யாரோ வர்றாங்க, இந்த குட்டிமாவை இன்னும் காணோம்!” என்று எரிச்சல் அடைந்த போது, உள்ளே வந்தாள் மானு.
“குட்மார்னிங் ரித்து” என்றபடி உள்ளே வந்தாள் மானு.
“ம்ம். குட்மார்னிங்” சலிப்பாக கோபமாக சொன்னான் ரித்து.
“ஏன் இப்படி காலையிலேயே கோபம்?”
“பின்ன.. நீ எப்ப வருவ. எப்ப வருவன்னு வாசலையே பார்த்துகிட்டு இருந்தா, நீ ஆடி அசைஞ்சு மெதுவா வர, உனக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்ல?” செல்லம் கொஞ்சினான் ரித்து.
“அய்யோ.. என் லூஸு ரித்து. நான் இங்க டுயுட்டியில இருக்கேன். உன்னை மட்டும் பார்த்துக்க முடியாது இல்ல?
அதான் மத்தவங்கள எல்லாம் முதலில் போய் பார்த்துட்டு, வந்துட்டா, ஒரு வேலை முடிஞ்ச மாதிரி.
அப்புறம் உன் கூட நிறைய நேரம் இருக்கலாம்னு நினைச்சேன்.
இங்க வந்ததுக்கு அப்புறம் நீ போக விட மாட்டே அதான்!”
ரித்துவிற்காக, அவள் நர்ஸ்கள் அமர வேண்டிய இடத்தில் உட்காராமல், அவன் ரூமில் தான் பெரும்பாலும் இருந்தாள்.
“வா, ரெப்ரெஷ் ஆகு” என்று அவனுக்கு உதவினாள்.
அருகே நெருக்கமாக வந்து அவனின் முகம் துடைத்து விட்டு, தலையை சீவி விட்டவள், “டேய். ரித்து. அப்படி பார்க்காதே, உன் பார்வை காலையிலேயே ராங்கா இருக்கு!” என்று சிரித்தாள்.
ரொம்ப நாட்கள் கழித்து அந்த கன்னக்குழி சிரிப்பைக் கண்டவன் நிலை! சொல்லிக் கொள்ளும்படி இல்லை!
“குட்டிம்மா..”
“ம்ம். எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். கூட்டிக்கிட்டுப் போ”.
“ம்ம் அது தான் உன் கால் இப்போ கொஞ்சம் ஸ்டேபிள் ஆயிடுச்சு ரித்து.
நீயா ட்ரை பண்ணு. மெதுவா காலை ஊனி வச்சு நடக்க ட்ரை பண்ணு ரித்து. உன்னால முடியும்!”
“அந்த டேஸ் எல்லாம் எனக்கும் தெரியும்டி. நீ இப்ப என்னை கூட்டிட்டு போகப் போறியா இல்லையா?’ அவன் கோபத்தில் பல்லைக் கடிக்க,
“சரி. வா.. அதுக்கு என் இப்படி கோபப்படுற?” என்றவாறு அவனின் தோளைப் பிடித்து அழைத்துப் போனாள் மானு.
வாசல் அருகே போய், வெளியே நின்று கொண்டவளை சட்டென்று உள்ளே ஒரு கையால் இழுத்துக் கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
“ஏய். என்ன ரித்து?”, என்று அவள் கேட்கும்முன், அவள் இதழ்களை சிறைப்படுத்தி விட்டான்.
பின், விட்டவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, முகம் கழுத்து என்று முத்த மழையில் நனைய வைத்து விட்டே விட்டான்.
ஏன் இப்படி என்பதாக பார்த்தாள் மானு.
“ம்ம். எல்லாம் என் தலையெழுத்து தான்! கட்டுன பொண்டாட்டியை கக்கூசில் வைத்து தான் கிஸ் பண்ண வேண்டியிருக்கு!” என்று சலித்துக் கொண்டான்.
சிரிப்பு வந்தது மானுவிற்கு!
“சிரிக்காதடி.. ரொம்ப காண்டாகுது!” என்று சொல்லி அவள் கன்னத்தை ஒரு கடி கடித்து விட்டே, வெளியே வந்தான் அவன்!
அதன் பின் அவனுக்கு அடிக்கடி பாத்ரூம் வந்தது! அவள் அவன் அருகில் இருக்கும் போதெல்லாம்!
இந்த பாத்ரூம் முத்தங்கள் தொடந்தன!
ஆனால் அதற்கும் ஒரு நாள் வழியில்லாமல் போன போது ரித்து இன்னமும் கோபமானான்.
அன்று மானுவிற்கு வார விடுமுறை.
ஆனால் அதைப் பற்றி அவனிடம் சொல்ல மறந்தே விட்டாள் மானு.
வழக்கம் போல அவளை எதிர்பார்த்து காத்திருந்தவன், அவள் வழக்கமான நேரம் தாண்டியும் வராததை உணர்ந்து, அவளுக்கு பதில் அன்று பணிக்கு வந்திருந்த நர்சிடம் விசாரித்தான்.
“எம்.எம்க்கு இன்னைக்கு வீக் ஆப் சார்” என்றாள் அவள்.
இதைக் கேட்டவுடன் கடுங்கோபம் கொண்டான் ரித்து.
வீக் ஆப் என்றால் சொல்ல வேண்டியது தானே, இப்படி அவன் அவளை எதிர்பார்த்து ஏமாற மாட்டான் இல்லையா?
அன்றும் இப்படி தான் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனாள்.
இன்றும் இப்படி அவளுக்கு வார விடுமுறை என்பதை சொல்லாமல் சென்றிருக்கிறாள்!
அவனுக்கு கோபமும் ஆற்றாமையும் பொங்கிக் கொண்டு வந்தது.
கண்ணில் கொஞ்சம் கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.
இந்த குட்டிமாவிற்கு நான் முக்கியமாக படவே இல்லையா? ரொம்ப தான் மாறிப் போய் விட்டாள் என்று மனம் நொந்தான் ரித்து.
அந்த நர்ஸ் சென்ற பின், மானுவிற்கு போன் செய்தான்.
அவன் அங்கு அவளைக் கண்டு பேசிய முதல் நாள் அன்றே அவளின் போனைப் பிடுங்கி, தன் போனிற்கு ஒரு அழைப்பு செய்து அவள் எண்ணை தன் போனில் ஏற்றியிருந்தான்.
அவன் அழைப்பை ஏற்றவள், “சொல்லு ரித்து” என்றாள்.
“என்னத்த சொல்றது? சுரைக்காய்க்கு உப்பு இல்லன்னா?
ஏண்டி உனக்கு இன்னிக்கு வீக் ஆப்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?
நான் ஒருத்தன் இங்க பைத்தியக்காரன் மாதிரி நீ வருவ.. வருவன்னு காத்திட்டு இருக்க மாட்டேன்ல!
அன்னிக்கும் அப்படி தான் ரிஜிஸ்தர் ஆபிஸ்ல என்னைக் காக்க வச்சுட்டு காணாம போன!
இன்னிக்கும் என்னைக் காக்க வச்சுட்டு , ஜம்பமா வீட்டுல உக்காந்துகிட்டு சொல்லு ரித்துன்ற சாகவாசமா?
ஏய்.. நிஜமா தான் கேக்குறேன்! உன் மனசுல அப்படி என்ன தாண்டி வச்சுட்டு இருக்க? எப்ப தான் என்கிட்ட பிராங்கா பேசப் போறே?
இல்ல, கடைசி வரைக்குமே, இப்படி தான் என்னை தவிக்க விடப் போறியா?”
“என்ன ரித்து இப்படில்லாம் பேசுற! நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமே இல்லை!
நேத்து சொல்ல மறந்துட்டேன்.
சொல்லாம வந்துட்டேன்றது இன்னிக்கு காலையில தான் ஞாபகம் வந்துச்சு.
உடனே போன் பண்ணி தூங்கிட்டு இருக்கிற உன்னை எழுப்ப வேணாம், கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணலாம்னு இருந்தேன்.
இங்க அதுக்குள்ள, ரித்துக் குட்டி ஸ்கூல்ல இருந்து போன்.
அவளுக்கு ஒரே வாமிட்டிங்க்னு. அதான் போய் அழைச்சுட்டு வந்து மருந்து கொடுத்து தூங்க வச்சுருக்கேன். அதான் போன் பண்ண முடியல. சாரி ரித்து”.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்க இருக்கணும்! இல்லைன்னா, நான் இங்க எல்லாத்தையும் பிச்சுப் போட்டுட்டு எங்கியாச்சும் கிளம்பி போயிட்டே இருப்பேன்.
உனக்கு தான் என்னைப் பத்தி கவலையே இல்லையே!
நான் எக்கேடு கெட்டா என்னான்னு விட்டுட்டுப் போனவ தானே நீ!
என்ன மம்மி தான் பாவம்!
என்னை தான் அவங்க உலகம்னு நினைச்சுட்டு இருக்கிற அவங்கள தான் மேலே மேலே நான் கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்!
இருக்கிற பாவத்தோட அந்த பாவமும் ஒண்ணா சேர்ந்துக்கட்டும்!” காச் மூச் என்று கத்த தொடங்கி விட்டான் ரித்து!
“சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு ரித்து! நீ நல்லா இருக்கணும்னு தான் ரித்து நான் அன்னிக்கும் நினைச்சேன், இன்னிக்கும் நினைக்கிறேன். என்னைக்கும் நினைப்பேன்.
டுயுட்டில இல்லாத நான் எப்படி இன்னிக்கு அங்க வந்து உன்னைப் பார்த்துக்க முடியும்? ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. இன்னிக்கு இதோ பாதி நாள் போய்டுச்சு.
இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்கோ ரித்து!
நாளைக்கு நான் கட்டாயம் வந்துடுவேன்! ரித்துக் குட்டி கண் முழிச்சா அழுவா! நாளைக்கு அவ அம்மா வீக் ஆப்ல வந்து பார்த்துக்குவா. ப்ளீஸ் இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்கோயேன்!” பொறுமையாகவே அவனுக்கு சமாதானம் சொன்னாள் மானு.
ரித்துக் குட்டி என்றவுடன் கொஞ்சம் சமாதானம் ஆனான் ரித்து.
ஆனால் இது வேலைக்கு ஆகாது, இதுக்கு ஒரு ஏற்பாடு பண்றேன் முதல்ல என்று நினைத்தவன், அடுத்த அடுத்த வேலைகளில் ஈடுப்பட்டான்!
அடுத்த இரண்டு நாளில் அவன் நினைத்த படியே நாள் முழுவதுமே அவன் கூடவே மானு இருக்கும்படி ஆனது!
error: Content is protected !!